எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இது 2023ஆம் ஆண்டின் முதல் மனதின் குரல், மேலும் மனதின் குரல் நிகழ்ச்சியின் 97ஆவது பகுதியும் இதுவாகும். உங்களனைவரோடும் மீண்டும் ஒருமுறை உரையாடுவதில் எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஒவ்வொர் ஆண்டும் ஜனவரி மாதத்தில் கணிசமான நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இந்த மாதம் சுமார் 14ஆம் தேதி வாக்கில், வடக்கு முதல் தெற்கு வரையும், கிழக்குத் தொடங்கி மேற்கு வரையும், நாடெங்கிலும் பண்டிகைகளின் ஒளி பளிச்சிட்டு வந்தது. இதன் பிறகு தேசம் தனது குடியரசுத் திருநாள் கொண்டாட்டங்களில் திளைத்தது. இந்த முறையும் கூட, குடியரசுத் திருநாள் கொண்டாட்டத்தின் பல பரிமாணங்களுக்குப் பல பாராட்டுக்களும் கிடைத்து வருகின்றன. ஜைஸால்மேரிலிருந்து புல்கித் என்பவர் எழுதியிருக்கிறார், ஜனவரி 26ஆம் தேதியன்று நடந்த அணிவகுப்பின் போது, கர்த்தவ்ய பத்தினை ஏற்படுத்திய தொழிலாளர்களைக் காண்பது தனக்கு மிகவும் பிடித்திருந்ததாக எழுதியிருக்கிறார். அணிவகுப்பில் இடம் பெற்ற காட்சிகளில் பாரதநாட்டுக் கலாச்சாரத்தின் பல்வேறு பரிமாணங்களைப் பார்த்து ஆனந்தப்பட்டதாக கான்பூரைச் சேர்ந்த ஜயா அவர்கள் எழுதியிருக்கிறார். இதே அணிவகுப்பில், முதன்முறையாகக் கலந்து கொண்ட ஒட்டகச்சவாரி செய்யும் வீராங்கனைகள் பிரிவும், மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினரின் பெண்கள் பிரிவும் நிறைய பாராட்டுக்களைப் பெற்றன.
நண்பர்களே, தெஹ்ராதூனைச் சேர்ந்த வத்சல் அவர்கள், ஜனவரி 25ஆம் தேதிக்காகத் தான் எப்போதுமே காத்திருப்பதாக எழுதியிருக்கிறார். ஏனென்றால் அந்த நாளன்று தான் பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவதாகவும், அதே போல, ஜனவரி 25ஆம் தேதி மாலையே கூட, ஜனவரி 26ஆம் தேதிக்கான உற்சாகத்தை அதிகரித்து விடுவதாகவும் எழுதியிருக்கிறார். கள அளவில் தங்களுடைய அர்ப்பணிப்பு மற்றும் சேவை உணர்வால் சாதனைகளைப் புரிவோருக்கு மக்களின் பத்ம விருதுகள் தொடர்பாக பலர் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். இந்த முறை பத்ம விருதால் கௌரவிக்கப்படுவோரில், பழங்குடியினத்தவர்களும், பழங்குடியினத்தவர் வாழ்க்கையோடு தொடர்புடைய நபர்களுக்குமான நல்ல சிறப்பான பிரதிநிதித்துவம் இருக்கிறது. பழங்குடியினத்தோரின் வாழ்க்கை, நகரங்களின் வாழ்க்கையோட்டத்திலிருந்து வேறுபட்டது, அதற்கென சவால்கள் பிரத்யேகமாக இருக்கின்றன. இவற்றைத் தாண்டியும், பழங்குடியினங்கள், தங்கள் பாரம்பரியங்களைப் பாதுகாப்பதில் எப்போதுமே முனைப்பாக இருக்கின்றார்கள். பழங்குடி சமூகங்களோடு இணைந்த விஷயங்களைப் பாதுகாக்கவும், அவற்றின் மீது ஆய்வுகள் மேற்கொள்ளவும் முயற்சிகள மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதைப் போலவே T டோடோ, ஹோ, குயி, குவி, மாண்டா போன்ற பழங்குடி மொழிகளின் மீதான பணிகளில் ஈடுபட்டு வரும் பல பெரியோருக்கு பத்ம விருதுகள் கிடைத்திருக்கின்றன. இது நம்மனைவருக்குமே பெருமையளிக்கும் விஷயம். தானீராம் T டோடோ, ஜானும் சிங் சோய், பீ. ராமகிருஷ்ண ரெட்டி அவர்களின் பெயர், இப்போது நாடு முழுவதும் அறியப்படும் பெயர்களாக கௌரவிக்கப்படும். சித்தி, ஜார்வா, ஓங்கே போன்ற பழங்குடியினத்தவரோடு இணைந்து பணியாற்றியவர்களும் இந்த முறை கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, ஹீராபாயி லோபீ, ரத்தன் சந்த்ர கார், ஈஸ்வர் சந்திர வர்மா அவர்களைப் போல. பழங்குடியினச் சமூகங்கள் நம்முடைய பூமி, நமது மரபுகள் ஆகியவற்றின் பிரிக்கமுடியா அங்கங்களாக இருந்து வந்துள்ளார்கள். தேசம் மற்றும் சமூகத்தின் முன்னேற்றத்தில் அவர்களின் பங்களிப்பு மிகவும் மகத்துவம் வாய்ந்தது. அவர்களுக்காக செயலாற்றுவோருக்கு மரியாதை, புதிய தலைமுறைகளை உத்வேகப்படுத்தும். நக்சல்வாதம் பாதித்திருக்கும் பகுதிகளிலும் கூட, இந்த ஆண்டு பத்ம விருதுகளின் எதிரொலி ஓங்கி ஒலிக்கின்றது. தனது முயற்சிகள் வாயிலாக, நக்சல்வாதம் பாதித்த பகுதிகளில் வழிதவறிப் போன இளைஞர்களுக்கு சரியான பாதையைக் காட்டியுதவியவர்களுக்கு பத்ம விருதுகள் அளித்து கௌரவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக காங்கேரில் மரத்தில் வேலைப்பாடு செய்யும் அஜய் குமார் மண்டாவீ, கட்சிரௌலீயின் பிரசித்தமான ஜாடீபட்டீ ரங்கபூமியோடு தொடர்புடைய பரசுராம் கோமாஜீ குணே ஆகியோருக்கும் இந்த கௌரவம் கிடைத்திருக்கிறது. இதைப் போலவே வட கிழக்கில் தங்களுடைய கலாச்சாரத்தைப் பாதுகாப்பதில் இணைந்திருக்கும் ராமகுயிவாங்கபே நிஉமே, விக்ரம் பஹாதுர் ஜமாதியா, கர்மா வாங்சூ ஆகியோரும் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
நண்பர்களே, இந்த முறை பத்ம விருதுகளால் கௌரவிக்கப்படுவோரில் பலர் இடம் பெற்றிருக்கிறார்கள்,; இவர்கள் இசையுலகை நிறைவடையச் செய்திருக்கிறார்கள். யாருக்குத் தான் இசை பிடிக்காது!! அனைவருக்கும் பிடித்தமான இசை வேறுவேறாக இருக்கலாம், ஆனால், சங்கீதம் என்பது அனைவரின் வாழ்க்கையின் அங்கமாகவே இருக்கிறது. இந்த முறை பத்ம விருதுகளைப் பெறுவோரில், சந்தூர், பம்ஹும், த்விதாரா போன்ற நமது பாரம்பரியமான வாத்தியக் கருவிகளின் இசையைப் பொழிவதில் பாண்டித்தியம் பெற்றோரும் உண்டு. குலாம் மொஹம்மத் ஜாஸ், மோஆ சு-போங்க், ரீ-சிம்ஹபோர் குர்கா-லாங்க், முனி-வேங்கடப்பா, மங்கல் K காந்தி ராய் போன்ற பல நபர்களின் பெயர்கள், நாலாபுறங்களிலும் பேசப்பட்டு வருகின்றன.
நண்பர்களே, பத்ம விருதுகளைப் பெறும் அநேகம் நபர்கள், நமக்கு மத்தியிலிருந்து வரும் இந்த நண்பர்கள், எப்போதும் தேசத்தை அனைத்திற்கும் மேலாகக் கருதியவர்கள், தேசமே முதன்மை என்ற கோட்பாட்டிற்காகத் தங்கள் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணம் செய்தவர்கள். அவர்கள் சேவையுணர்வால் தங்கள் பணிகளில் ஈடுபட்டு வந்தார்கள், இதற்காக அவர்கள் என்றுமே விருதுகளை வேண்டவுமில்லை, விரும்பவுமில்லை. யாருக்காக அவர்கள் தங்கள் பணிகளை ஆற்றுகின்றார்களோ, அவர்களின் முகங்களில் இருக்கும் சந்தோஷம் மட்டுமே இவர்களுக்கு மிகப்பெரிய விருதுகள். இப்படிப்பட்ட அர்ப்பணிப்பு கொண்டவர்களை கௌரவப்படுத்துவதில், நாம் நாட்டுமக்களின் கௌரவத்தை அதிகப்படுத்துகிறோம். பத்ம விருதுகளின் வெற்றியாளர்கள் அனைவரின் பெயர்களையும் என்னால் இந்த சந்தர்ப்பத்தில் கூற முடியாமல் இருக்கலாம்; ஆனால் உங்களனைவரிடத்திலும் கேட்டுக் கொள்கிறேன், நீங்கள் பத்ம விருதுகளைப் பெற்ற பெரியோரின் கருத்தூக்கமளிக்கும் வாழ்க்கை தொடர்பான விஷயங்களைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ளுங்கள், மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள்.
நண்பர்களே, இன்று நாம் சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவில் குடியரசுத் திருநாள் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் வேளையில், நான் ஒரு சுவாரசியமான புத்தகம் குறித்தும் பேச விரும்புகிறேன். சில வாரங்கள் முன்பாகத் தான் இந்தப் புத்தகம் எனக்குக் கிடைத்தது, இதில் மிகவும் சுவாரசியமான விஷயம் குறித்துப் பேசப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்தின் பெயர் India – The Mother of Democracy, இதில் பல சிறப்பான கட்டுரைகள் இருக்கின்றன. பாரதம் உலகின் மிகப்பெரிய ஜனநாயகம், பாரத நாட்டவர்களான நாம் அனைவரும் நமது தேசம் ஜனநாயகத்தின் தாய் என்ற இந்த விஷயம் குறித்து மிகவும் பெருமிதமும் கொள்கிறோம். ஜனநாயகம் என்பது நமது நாடிநரம்புகளில் இருக்கிறது, நமது கலாச்சாரத்தில் இருக்கிறது. பல நூற்றாண்டுகளாக இது நமது செயல்பாட்டின் ஒரு பிரிக்கமுடியாத அங்கமாகவே விளங்கி வருகிறது. இயல்பாகவே நாம் ஒரு ஜனநாயக சமூகம் தான். டாக்டர். அம்பேட்கர் அவர்கள் பௌத்த பிக்ஷு சங்கத்தை, பாரதநாட்டுப் பாராளுமன்றத்தோடு ஒப்பிட்டார்கள். கோரிக்கைகள், தீர்மானங்கள், கோரம் என்ற குறைவெண் வரம்பு, வாக்களித்தல், மேலும் வாக்களிக்கப்பட்ட வாக்குகளை எண்ணுதல் தொடர்பாக பல விதிமுறைகள் அதில் இருக்கின்றன. பகவான் புத்தருக்கு இதற்கான கருத்தூக்கம், அவர் காலத்திய அரசியல் முறைகளிலிருந்து கிடைத்திருக்க வேண்டும் என்று பாபாசாஹேப் கருதினார்.
தமிழ்நாட்டின் ஒரு சிறிய, ஆனால் மிகவும் விவாதிக்கப்படும் கிராமம் உண்டு, உத்திரமேரூர். இங்கே 1100-1200 ஆண்டுகள் பழமையான ஒரு கல்வெட்டு, உலகத்தை மலைக்க வைக்கிறது. இந்தக் கல்வெட்டு ஒரு சிறிய அரசியலமைப்புச் சட்டம் போன்றது. கிராமசபையானது எவ்வாறு அமைக்கப்பட வேண்டும், அதன் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறை என்ன என்பன போன்று. நமது தேசத்தின் வரலாற்றில், ஜனநாயக விழுமியங்களின் மேலும் ஒரு எடுத்துக்காட்டு, 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பஸவேஷ்வரரின் அனுபவ மண்டபம். இங்கே சுதந்திரமான விவாதங்கள், கலந்துரையாடல்கள் ஆகியவற்றுக்கு ஊக்கமளிக்கப்பட்டது. இது மேக்னா கார்ட்டாவை விடவும் பழமையானது என்பதையறிந்து உங்களுக்கு ஆச்சரியம் மேலிடும். வாரங்கல்லைச் சேர்ந்த காகதீய வம்சத்து அரசர்களின் ஜனநாயகப் பாரம்பரியங்கள் மிகவும் பிரசித்தமானவை. பக்தி இயக்கமானது, மேற்கு பாரதத்திலே, ஜனநாயகக் கலாச்சாரத்தை முன்னெடுத்துச் சென்றது. இந்தப் புத்தகத்திலே, சீக்கிய சமயத்தின் ஜனநாயக உணர்வு பற்றியும் ஒரு கட்டுரை இடம் பெற்றிருக்கிறது. குரு நானக் தேவ் ஜி, அனைவரின் சம்மதத்தோடு மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பற்றி நமக்குத் தெரிவிக்கப்படுகிறது. மத்திய பாரதத்தின் உராவ், முண்டா பழங்குடியினத்தவர்களின் சமூகத்தால் இயக்கப்படும், ஒருமித்த கருத்தால் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் பற்றியும் இந்தப் புத்தகத்தில் நல்லபல தகவல்கள் இருக்கின்றன. நீங்கள் இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு, எப்படி நமது தேசத்தின் ஒவ்வொரு பாகத்திலும், பல நூற்றாண்டுகளாக மக்களாட்சியின் உணர்வுகள், ஒரு பிரவாகம் போல பெருக்கெடுத்து ஓடி வந்திருக்கின்றன என்பதை நன்கு உணர்வீர்கள். ஜனநாயகத்தின் தாய் என்ற முறையிலே, நாம், தொடர்ந்து இந்த விஷயத்தைப் பற்றி ஆழமாகச் சிந்திக்க வேண்டும், விவாதிக்க வேண்டும், உலகத்தின் முன்பாக எடுத்துரைக்க வேண்டும். இதனால் தேசத்தின் ஜனநாயக உணர்வு மேலும் ஆழப்படும்.
எனக்குப் பிடித்தமான நாட்டுமக்களே, யோகக்கலை தினத்திற்கும், நம்முடைய பலவகையான சிறுதானியங்களுக்கும் இடையே பொதுவான விஷயம் என்னவென்று நான் உங்களிடம் கேட்டால், இவற்றுக்கிடையே என்ன ஒப்புமை காண முடியும் என்று நீங்கள் நினைக்கலாம்? இரண்டுக்கும் இடையே கணிசமான பொதுவான கூறுகள் உண்டு என்று நான் கூறுவேன் என்றால் நீங்கள் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். உள்ளபடியே ஐக்கிய நாடுகள் சபையானது சர்வதேச யோகக்கலை தினத்தையும், சர்வதேச சிறுதானிய ஆண்டினையும் பற்றிய தீர்மானத்தை, பாரதம் முன்மொழிந்ததை ஒட்டியே மேற்கொண்டது. இரண்டாவதாக, யோகக்கலையும் உடல்நலத்தோடு தொடர்புடையது, சிறுதானியங்களும் உடல்நலத்துக்கு மகத்துவமான பங்களிப்பை அளிப்பது. மூன்றாவதாக, மகத்துவம் வாய்ந்த விஷயம் – இரண்டுமே மக்கள் இயக்கங்களாக மாறி, மக்கள் பங்கெடுப்பின் காரணமாக புரட்சிகரமான முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. எந்த வகையில் மக்கள் பரவலான முறையில் ஆக்கப்பூர்வமாக பங்கெடுத்து, யோகம் மற்றும் உடலுறுதியைத் தங்களுடைய வாழ்க்கையின் அங்கமாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்களோ, இதைப் போலவே சிறுதானியங்களையும் கூட மக்கள் பெரிய அளவில் ஏற்றுக் கொண்டு வருகிறார்கள். மக்கள் இப்போது சிறுதானியங்களைத் தங்களுடைய உணவுகளில் அங்கமாக ஆக்கிக் கொண்டு வருகின்றார்கள். இந்த மாற்றத்தின் மிகப்பெரிய தாக்கத்தையும் நம்மால் காண முடிகிறது. இதனால் பாரம்பரியமாகவே சிறுதானியங்களை உற்பத்தி செய்து வந்த சிறு விவசாயிகள் மிகவும் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள். உலகம் இப்போது சிறுதானியங்களின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ளத் தொடங்கி இருக்கிறது என்பதில் அவர்களுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. வேறொரு புறத்தில் விவசாயிகள்-உற்பத்தியாளர்கள் சங்கங்களான FPOக்களும், தொழில் முனைவோரும் இப்போது சிறுதானியங்களைச் சந்தைப்படுத்துவது, மக்களுக்குக் கிடைக்கச் செய்வது போன்ற முயற்சிகளைச் செய்யத் தொடங்கி விட்டார்கள்.
ஆந்திரப் பிரதேசத்தின் நாந்தயால் மாவட்டத்தில் வசிக்கும் கே.வி. ராமா சுப்பா ரெட்டி அவர்கள், சிறுதானியங்களை விளைவிக்கும் பொருட்டு, தனது நல்ல சம்பளம் தரும் வேலையைத் துறந்தார். தாயாரின் கையால் உருவாக்கப்பட்ட சிறுதானியத் தின்பண்டங்களின் சுவை அவர் நினைவுகளில் எந்த அளவுக்கு ஊறியிருந்தது என்றால், இவர் தனது கிராமத்தில் கம்பு தானியத்தைப் பதனிடும் அலகைத் தொடங்கினார். சுப்பா ரெட்டி அவர்கள், மக்களுக்குக் கம்பு தானியத்தின் ஆதாயங்களையும் எடுத்துக் கூறுகிறார், இதை எளிதாகக் கிடைக்குமாறும் செய்கிறார். மஹாராஷ்டிரத்தின் அலீபாகுக்கு அருகே கேநாட் கிராமத்தில் வசிக்கும் ஷர்மிளா ஓஸ்வால் அவர்கள் கடந்த 20 ஆண்டுகளாக சிறுதானிய விளைச்சலில், தனித்தன்மை வாய்ந்த முறையில் பங்களிப்பு அளித்து வருகிறார். இவர் விவசாயிகளுக்கு ஸ்மார்ட் – திறம்பட்ட விவசாயம் பற்றிய பயிற்சியை அளிக்கிறார். இவருடைய முயற்சிகளின் பலனாக சிறுதானியங்களின் விளைச்சல் மட்டும் அதிகரிக்கவில்லை, மாறாக, விவசாயிகளின் வருவாயும் அதிகரித்திருக்கின்றது.
சத்திஸ்கட்டின் ராய்கட் செல்லக்கூடிய வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தால், இங்கே இருக்கும் சிறுதானிய கஃபேயுக்குக் கண்டிப்பாகச் சென்று பாருங்கள். சில மாதங்கள் முன்பாகத் தான் தொடங்கப்பட்ட இந்த சிறுதானிய சிற்றுண்டியகத்தில் அப்பங்கள், தோசை, மோமோஸ், பீட்ஸாக்கள், மஞ்சூரியன் போன்ற தின்பண்டங்கள் மிகவும் பிரபலமாகி வருகின்றன.
நான் உங்களிடம் மேலும் ஒரு விஷயம் பற்றிச் சொல்லவா? நீங்கள் entrepreneur என்ற சொல் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள், அதாவது தொழில்முனைவோர். ஆனால் நீங்கள் Milletpreneurs பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? ஒடிஷாவில் Milletpreneurகள் எனப்படும் சிறுதானியத் தொழில்முனைவோர் இப்போதெல்லாம் செய்திகளில் அதிகமாகக் காணப்படுகிறார்கள். பழங்குடியினத்தவர் மாவட்டமான சுந்தர்கட்டுக்கு அருகே, 1,500 பெண்களின் சுயவுதவிக் குழுவானது, ஓடிஷா சிறுதானியங்கள் இயக்கத்தோடு இணைந்திருக்கிறது. இங்கே இருக்கும் பெண்கள், சிறுதானியங்களில் குக்கீஸ் தின்பண்டம், ரஸ்குல்லா, குலாப் ஜாமுன், கேக்குகள் போன்றவற்றைத் தயார் செய்கிறார்கள். சந்தையில் இவற்றுக்கான தேவை அதிக அளவில் இருக்கும் காரணத்தால், வருவாயும் அதிகரித்து வருகிறது.
கர்நாடகத்தின் கல்புர்கியில் ஆலந்த் புதாயி சிறுதானிய குடியானவர்கள் உற்பத்தியாளர் கம்பெனியானது கடந்த ஆண்டு சிறுதானிய ஆய்வுக்கான இந்தியக் கழகத்தின் மேற்பார்வையில் தனது பணியைத் தொடக்கியது. இங்கே தயாரிக்கப்படும், காக்ரா, பிஸ்கட்டுகள், லட்டு போன்றவை மக்களின் விருப்பத்தைப் பெற்று வருகின்றன. கர்நாடகத்தின் பீதர் மாவட்டத்தில், ஹுல்சூர் சிறுதானிய உற்பத்தியாளர் கம்பெனியோடு தொடர்புடைய பெண்கள், சிறுதானியங்களைப் பயிர் செய்வதோடு கூடவே, அவற்றை மாவாக அரைத்தும் தயார் செய்து கொடுக்கிறார்கள். இதனால் இவர்களின் வருவாயில் கணிசமான அதிகரிப்பும் இருக்கிறது. இயற்கை விவசாயத்தோடு தொடர்புடைய சத்திஸ்கட்டின் சந்தீப் ஷர்மா அவர்களின் விவசாயிகள் உற்பத்தியாளர் சங்கம் இன்று, 12 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளோடு தொடர்புடையதாக இருக்கிறது. பிலாஸ்புரைச் சேர்ந்த இந்த விவசாயிகள் உற்பத்தியாளர் சங்கம், எட்டு வகையான சிறுதானியங்களின் மாவையும், சுவையான தின்பண்டங்களையும் தயார் செய்து வருகிறது.
நண்பர்களே, இன்று இந்தியாவின் அனைத்து இடங்களிலும் ஜி-20 மாநாடுகள் தொடர்ந்து நடந்தேறி வருகின்றன, தேசத்தின் ஒவ்வொர் இடத்திலும், எங்கெல்லாம் ஜி-20 மாநாடு நடந்து வருகிறதோ, அங்கெல்லாம் சிறுதானியங்களில் தயார் செய்யப்பட்ட ஊட்டச்சத்துமிக்க, சுவையான தின்பண்டங்கள் இடம் பெறுவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இங்கே கம்பினால் தயாரிக்கப்பட்ட கிச்சடி, அவல் தின்பண்டம், பாயசம், ரொட்டியோடு கூடவே ராகியால் தயாரிக்கப்பட்ட பாயசம், பூரி, தோசை போன்ற தின்பண்டங்களும் பரிமாறப்படுகின்றன. ஜி-20க்கான அனைத்து இடங்களிலும் சிறுதானியங்களின் கண்காட்சிகளில், சிறுதானியங்களில் தயாரிக்கப்பட்ட ஆரோக்கிய பானங்கள், கூளவகைகள், நூடுல்ஸ் ஆகியவை காட்சிப்படுத்தப்படும். உலகெங்கும் இருக்கும் இந்திய த்தூதரகங்களிலும் கூட இவற்றின் வெகுஜனவிருப்பத்தை அதிகரிக்க, முழுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேசத்தின் இந்த முயற்சியும், உலகிலே அதிகரித்துவரும் சிறுதானியங்களின் தேவையும், நமது சிறுவிவசாயிகளுக்கு எத்தனை பலத்தை அளிக்கவல்லது என்பதை கற்பனை செய்து பாருங்கள். இன்று எத்தனை வகையான புதியபுதிய பொருட்ள்கள், சிறுதானியங்களைக் கொண்டு தயார் செய்யப்படுகின்றனவோ, அவையனைத்தும் இளைய தலைமுறையினருக்கு மிகவும் பிடித்திருக்கின்றன என்பதைக் காணும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டின் இப்படிப்பட்ட அருமையான தொடக்கத்திற்காகவும், இதைத் தொடர்ந்து மேற்கொண்டு சென்றமைக்கும், மனதின் குரலின் நேயர்களுக்கும் நான் என் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, யாராவது உங்களிடத்திலே டூரிஸ்ட் ஹப், அதாவது சுற்றுலாப்பயணிகள் மையமான கோவா பற்றிப் பேசினால், உங்கள் உள்ளத்தில் என்ன எழும்? இயல்பாக, கோவாவின் பெயரைக் கேட்டவுடனேயே, முதன்மையாக அங்கே இருக்கும் அழகான கரையோரங்கள், பீச்சுகள், விருப்பமான உணவுகள் மீதே உங்கள் சிந்தனை ஓடும் இல்லையா! ஆனால் கோவாவில் இந்த மாதம் நடந்த விஷயம், செய்திகளில் அதிகம் காணப்பட்டது. இன்று மனதின் குரலில், நான் இதை, உங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கோவாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் பெயர் பர்ப்பில் ஃபெஸ்ட். இந்த ஃபெஸ்டானது, ஜனவரி 6 தொடங்கி 8 வரை பணஜியில் நடந்தது. மாற்றுத் திறனாளிகளின் நலனை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த விழா உள்ளபடியே ஒரு அருமையான முயல்வு. 50,000த்திற்கும் மேற்பட்ட நமது சகோதர சகோதரிகள் இதில் பங்கெடுத்துக் கொண்டார்கள் என்பதிலிருந்து, பர்ப்பிள் ஃபெஸ்ட் எத்தனை பெரிய சந்தர்ப்பம் என்பது பற்றிய கற்பனையை இதன் மூலம் நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளலாம். இப்போது மீராமார் பீச்சிலே ஆனந்தமாகச் சுற்றித் திரிய முடிந்தது குறித்து, இங்கே வந்திருந்தவர்கள் புளகாங்கிதம் அடைந்தார்கள். உண்மையில், மீராமார் பீச் என்பது, நமது மாற்றுத் திறன் படைத்த சகோதர சகோதரிகளுக்காக, அணுகல்தன்மை கொண்ட கோவாவின் பீச்சுகளில் ஒன்றாக ஆகியிருக்கிறது. இங்கே கிரிக்கெட் போட்டிகள், டேபிள் டென்னிஸ் போட்டிகள், மாரத்தான் போட்டிகளோடு கூடவே, Deaf Blind Convention 2023 க்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இங்கே, வித்தியாசமான பறவைகளை கவனிக்கும் நிகழ்ச்சியைத் தவிர, ஒரு திரைப்படமும் திரையிடப்பட்டது. நமது மாற்றுத் திறனாளி சகோதர சகோதரிகளும் குழந்தைகளும் இதனை முழுமையாகக் கண்டுகளிக்கும் வகையில், சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பர்ப்பிள் ஃபெஸ்டின் மேலும் ஒரு சிறப்பான விஷயம், இதிலே தேசத்தின் தனியார் துறையும் பங்கெடுத்து வருவது தான். அவர்களின் தரப்பிலிருந்து எப்படிப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன என்றால், அவை மாற்றுத் திறனாளிகளுக்கு நேசமானவையாக இருந்தன. இந்த விழாவில் மாற்றுத் திறனாளிகளின் நலன்களின் பொருட்டு விழிப்புணர்வை அதிகரிக்க நிறைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. பர்ப்பில் ஃபெஸ்டை வெற்றிவிழாவாக ஆக்கியமைக்கும், இதோடு தொடர்புடைய அனைவருக்கும் என் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன். இதோடு கூடவே, இந்த விழாவை ஏற்பாடு செய்து உதவும் வகையிலே பணியாற்றிய அனைத்துத் தன்னார்வத் தொண்டர்களுக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். Accessible India, அதாவது அணுகல்தன்மை கொண்ட இந்தியா பற்றிய நமது பார்வையை மெய்யாக்க, இந்த வகையான இயக்கங்கள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
என் மனம் நிறை நாடுமக்களே, இப்போது மனதின் குரலில், நான் மேலும் ஒரு விஷயம் குறித்துப் பேசுகிறேன், இது உங்களுக்கு ஆனந்தத்தை அளிக்கும், பெருமிதம் பொங்கும், மனம் சந்தோஷப்படும் – பலே பலே, மனசு நிறைஞ்சு போச்சு!! என்று குதூகலிக்கும். தேசத்தின் மிகப் பழைமையான அறிவியல் நிறுவனங்களில் ஒன்று, பெங்களூரூவைச் சேர்ந்த Indian Institute of Science, IISc, அதாவது இந்திய அறிவியல் நிறுவனம்; இது அருமையான ஒரு விஷயத்தை நமக்கு அளிக்கிறது. அதாவது இந்த நிறுவனம் நிறுவப்பட்டதன் பின்னணியில், பாரதத்தின் இரண்டு மகத்துவம் பொருந்திய ஆளுமைகளான ஜம்ஷேத்ஜி டாடாவும், ஸ்வாமி விவேகானந்தரும் உத்வேகக் காரணிகளாக இருந்தார்கள் என்று மனதின் குரலில் நான் முன்பேயே கூட பேசியிருந்தேன். உங்களுக்கும் எனக்கும் ஆனந்தமும், பெருமிதமும் ஏற்படுத்தக்கூடிய விஷயம் என்னவென்றால், 2022ஆம் ஆண்டிலே இந்த நிறுவனத்தின் பெயரில் மொத்தமாக 145 காப்புரிமைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதே ஆகும். அதாவது, 5 நாட்களுக்கு ஒருமுறை இரண்டு உரிமைக்காப்புகள். இந்தச் சாதனை உள்ளபடியே அற்புதமானது. இந்த வெற்றிக்காக நான் IISc யின் குழுவினருக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நண்பர்களே, இன்று உரிமைக்காப்புப் பதிவிலே பாரதத்தின் தரவரிசை, 7ஆம் இடத்திலேயும், வர்த்தகச் சின்னங்களைப் பொறுத்த மட்டிலே 5ஆவது இடத்திலும் இருக்கின்றது. உரிமைக்காப்புகள் விஷயத்தில் மட்டுமே, கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 50 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டிருக்கிறது. உலகளாவிய கண்டுபிடிப்புக்கள் குறியீட்டிலும் கூட பாரதத்தின் தரவரிசையில், தீவிரமான மேம்பாடு காணப்பட்டிருக்கிறது, இப்போது அது 40ஆம் இடத்திற்கு வந்து விட்டது; ஆனால் 2015ஆம் ஆண்டிலே உலகக் கண்டுபிடிப்புகள் குறியீட்டில் பாரதம் 80ஆம் இடத்தில் இருந்தது. மேலும் ஒரு சுவாரசியமான விஷயத்தைச் சொல்கிறேன் கேளுங்கள். பாரதம் கடந்த 11 ஆண்டுகளில் முதன்முறையாக உள்நாட்டு உரிமைக்காப்புப் பதிவின் எண்ணிக்கை, அயல்நாட்டுப் பதிவை விட அதிகரித்திருக்கிறது. இது பாரதத்தின் அதிகரித்து வரும் விஞ்ஞானத் திறமையையும் காட்டுகிறது.
நண்பர்களே, 21ஆம் நூற்றாண்டின் பொருளாதாரத்தில் அறிவு மிகவும் தலையாயது என்பதை நாமனைவரும் நன்கறிவோம். நமது கண்டுபிடிப்பாளர்களும், அவர்களுடைய காப்புரிமைகளும் பாரதத்தின் டெக்கேட் பற்றிய கனவை கண்டிப்பாக முன்னெடுத்துச் செல்லும், நிறைவேற்றி வைக்கும் என்பது என் நம்பிக்கை. இதன் வாயிலாக நாமனைவரும், நமது நாட்டிலேயே தயார் செய்யப்பட்ட உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தையும் பொருட்களையும் முழுமையாகப் பயன்படுத்தி இலாபமடையலாம்.
எனதருமை நாட்டுமக்களே, நமோ செயலியில், தெலங்கானாவைச் சேர்ந்த ஒரு பொறியாளரான விஜய் அவர்கள் ஒரு பதிவினைத் தரவேற்றி இருந்தார். இதிலே, மின்பொருள்கழிவு பற்றி அவர் குறிப்பிட்டிருந்தார். விஜய் அவர்களின் வேண்டுகோள் என்னவென்றால், மனதின் குரலில், இது பற்றி நான் விவாதிக்க வேண்டும் என்பது தான். இந்த நிகழ்ச்சியில் முந்தைய பகுதிகளிலேயே கூட நாம் கழிவிலிருந்து செல்வம் பற்றி பேசியிருக்கிறோம்; ஆனால் வாருங்கள், இன்றும் இதோடு தொடர்புடைய மின்பொருள் கழிவு பற்றிப் பேசுவோம்.
நண்பர்களே, இன்று அனைத்து இல்லங்களிலும் செல்பேசி, லேப்டாப், டேப்லட் போன்ற கருவிகள் சாதாரணமானவையாகி விட்டன. நாடெங்கிலும் இவற்றின் எண்ணிக்கை பில்லியன்கணக்கில் இருக்கின்றன. இன்றைய அண்மையான கருவிகள், எதிர்காலத்தின் மின்பொருள் கழிவாகும். எந்தவொரு புதிய கருவியை வாங்கினாலும், பழைய கருவியை மாற்றினாலும், பழைய பொருளை சரியான முறைப்படி கைவிட வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். மின்பொருள் கழிவு சரியான வகையிலே கைவிடப்படவில்லை என்று சொன்னால், நமது சுற்றுச்சூழலுக்கும் இதனால் தீங்கு ஏற்படும். ஆனால் எச்சரிக்கையோடு இது செய்யப்படும் போது, இது மறுசுழற்சி, மீள்பயன்பாடு என்ற வகையில், Circular Economy எனப்படும் சுற்றுப்பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பலத்தை அளிக்கிறது. ஐக்கிய நாடுகளின் ஓர் அறிக்கையில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்றால், ஒவ்வோர் ஆண்டும் 50 மில்லியன் டன் அளவு மின்பொருள் கழிவு தூக்கிப் போடப்படுகிறது என்கிறது. இது என்ன அளவு என்பதை உங்களால் கணிக்க முடிகிறதா? மனித வரலாற்றிலே எத்தனை வர்த்தகரீதியான விமானங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றனவோ, அவை அனைத்தின் எடையையும் ஒன்று கூட்டினாலும் கூட, வெளியேற்றப்படும் மின்பொருள் கழிவுகளுக்கு நிகராகவே ஆக முடியாது. இது எப்படி இருக்கிறது என்றால், ஒவ்வொரு நொடியும் 800 லேப்டாப்புகள் வீசியெறியப்படுவது போன்று உள்ளது. பல்வேறு செயல்முறைகள் வாயிலாக இந்த மின்கழிவுப் பொருட்களிலிருந்து 17 வகையான விலைமதிப்பற்ற உலோகங்கள் வெளியெடுக்கப்பட முடியும் என்பது உங்களுக்கு மலைப்பை ஏற்படுத்தலாம். இதிலே தங்கம், வெள்ளி, செம்பு, நிக்கல் ஆகியன அடங்கும். ஆகையால் மின்பொருள் கழிவினை நல்லவகையில் பயன்படுத்துவது என்பது, குப்பையிலிருந்து கோமேதகம் உருவாக்குதற்கு எந்த வகையிலும் குறைவல்ல. இன்று, இந்தத் திசையில் நூதனமான பணிகளை மேற்கொண்டு வரும் ஸ்டார்ட் அப்புகளுக்குக் எந்தக் குறைவும் இல்லை. இன்று சுமார் 500 மின் பொருள் கழிவு மறுசுழற்சியாளர்கள் இந்தத் துறையோடு இணைந்திருக்கிறார்கள், பல புதிய தொழில்முனைவோரும் இதில் தங்களை இணைத்துக் கொண்டு வருகிறார்கள். இந்தத் துறையில் ஆயிரக்கணக்கானவர்கள், நேரடியாக வேலைவாய்ப்பையும் அளித்திருக்கிறார்கள். பெங்களூரூவின் ஈ-பரிசாரா, இப்படிப்பட்ட ஒரு முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. இது அச்சிடப்பட்ட சர்க்கியூட் பலகைகளில் உள்ள விலைமதிபற்ற உலோகங்களைப் பிரித்தெடுக்க, சுதேசித் தொழில்நுட்பத்தை மேம்படுத்தியிருக்கிறது. இதைப் போலவே மும்பையில் பணியாற்றிவரும் ஈகோரெகோவும் கூட மொபைல் செயலி வாயிலாக மின்பொருள் கழிவை சேகரிக்கும் முறையை ஏற்படுத்தி இருக்கிறார்கள். உத்தராகண்டின் ருட்கீயின் ஏடேரோ மறுசுழற்சியானது இந்தத் துறையில் உலகெங்கிலும் பல காப்புரிமைகளைப் பெற்றிருக்கிறது. இதுவும் கூட மின்பொருள் கழிவுத் தொழில்நுட்பத்தைத் தயாரித்து, கணிசமாகப் பெயர் ஈட்டியிருக்கிறது. போபாலில், மொபைல் செயலி மற்றும் இணையதளத்தில் கபாடீவாலா வாயிலாக டன் கணக்கான மின்பொருள் கழிவு ஒன்று திரட்டப்பட்டு வருகிறது. இதைப் போலவே, பல எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. இவையனைத்தும் பாரதத்தை உலக அளவிலான மறுசுழற்சி மையமாக மாற்ற உதவிகரமாக இருக்கின்றன என்றாலும், இப்படிப்பட்ட முன்னெடுப்புக்களின் வெற்றிக்கான முக்கியமான நிபந்தனை – மின் பொருள் கழிவுகளைச் சரியான முறையிலே சமாளிப்பதன் மூலம், பாதுகாப்பான வழிமுறைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வர வேண்டும் என்பது தான். தற்போது ஒவ்வொர் ஆண்டும் 15 முதல் 17 சதவீதம் வரையிலான மின்பொருள் கழிவுகளை மட்டுமே நம்மால் மறுசுழற்சி செய்ய முடிவதாக, மின்பொருள் கழிவுத் துறையில் ஈடுபட்டு வருவோர் தெரிவிக்கின்றார்கள்.
என் அன்பான நாட்டுமக்களே, இன்று உலகெங்கும் சூழல் மாற்றம் மற்றும் உயிரினப் பன்முகத்தன்மையின் பாதுகாப்பு குறித்து அதிகம் பேசப்படுகிறது. இந்தத் திசையில் பாரதத்தின் சிறப்பான முயற்சிகள் குறித்து நாம் தொடர்ந்து பேசி வருகிறோம். பாரதம் தனது சதுப்பு நிலங்களின் பொருட்டு ஆற்றியிருக்கும் பணிகளை நீங்கள் தெரிந்து கொள்ளுதல் நலமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். ஈரநிலங்கள், சதுப்புநிலங்கள் என்றால் என்ன என்று சிலல நேயர்கள் நினைக்கலாம். ஈரநிலப் பகுதிகள், அதாவது எங்கே சகதியைப் போன்ற நிலம் இருக்கிறதோ, எங்கே ஆண்டுமுழுக்க நீர் நிரம்பி இருக்கிறதோ, அது தான் ஈரநிலமாகும். சில தினங்கள் கழித்து, ஃபெப்ருவரி மாதம் 2ஆம் தேதியன்று உலக சதுப்புநில நாள் வரவிருக்கிறது. நமது பூமியின் இருப்பிற்காக சதுப்புநிலங்கள் மிகவும் அவசியமானவை, ஏனென்றால், இவற்றைச் சார்ந்த பல பறவைகளும், உயிரினங்களும் இருக்கின்றன. இவை உயிரினப் பன்முகத்தன்மையை நிறைவு செய்வதோடு, வெள்ளக் கட்டுப்படுத்தலையும், நிலத்தடி நீரை மீள்நிரப்புவதையும் உறுதி செய்கின்றன. Ramsar Sites, ராம்சர் இடங்கள் போன்ற சதுப்புநிலப் பகுதிகள், சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கலாம். ஈரநிலங்கள் அல்லது சதுப்புநிலங்கள், எந்தவொரு தேசத்திலும் இருக்கலாம் ஆனால், இவை பல அளவீடுகளை எல்லாம் கடந்த பிறகு தான், Ramsar Sites என்று அறிவிக்கப்படுகின்றன. அங்கே 20,000 அல்லது அதைவிடவும் அதிகமான நீர்ப் பறவைகள் இருக்க வேண்டும். வட்டார மீன் இனங்கள் பெரிய எண்ணிக்கையில் அங்கே இருத்தல் அவசியம். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கழித்து, அமுதப் பெருவிழாவின் போது ராம்சர் அங்கீகாரம் பெற்ற இடங்களோடு தொடர்புடைய மேலும் ஒரு நல்ல தகவலை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நமது தேசத்தில் இப்போது ராம்ஸர் இடங்களின் மொத்த எண்ணிக்கை 75 ஆகியிருக்கிறது, ஆனால் 2014ற்கு முன்பாக தேசத்தில் வெறும் 26 ராம்ஸர் இடங்கள் மட்டுமே இருந்தன. இதற்காக வட்டார சமுதாயங்கள் பாராட்டுக்கு உரியவர்கள்; இவர்கள் தாம் இந்த உயிரினப் பன்முகத்தன்மையைப் பாதுகாத்தளித்திருக்கிறார்கள். இது இயற்கையோடு கூட நல்லிணக்கத்தோடு வாழும் நமது பலநூற்றாண்டுக்கால பழைமையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துக்குக் கிடைத்த ஒரு மரியாதை ஆகும். பாரதத்தின் இந்த சதுப்பு நிலங்கள் நமது இயற்கைத் திறன்களுக்கான எடுத்துக்காட்டுகள். ஓடிஷாவின் சில்கா ஏரி, 40க்கும் அதிகமான நீர்ப் பறவை இனங்களுக்கு புகலிடமாக விளங்குகிறது. கயிபுல்-லம்ஜாஊ, கோக்டாக்கை, சதுப்புநில மானின் ஒரே இயற்கை வாழ்விடமாகக் கருதப்படுகிறது. தமிழ்நாட்டின் வேடந்தாங்கல், 2022ஆம் ஆண்டிலே ராம்ஸர் சைட் என்று அறிவிக்கப்பட்டது. இங்கே பறவைகளின் எண்ணிக்கையைப் பாதுகாக்கும் மொத்தப் பாராட்டும் அக்கம்பக்கத்தில் இருக்கும் விவசாயிகளையே சாரும். கஷ்மீரத்தில் பஞ்ஜாத் நாக் சமுதாயத்தினரின் வருடாந்திர fruit blossom எனப்படும் பழங்களின் மலர்ச்சித் திருவிழாவில், விசேஷமான வகையிலே கிராமத்தின் நீர்நிலைகளின் தூய்மைப்படுத்தலுக்காக ஒரு நாளை ஒதுக்குகிறார்கள். உலகின் ராம்ஸர் இடங்களிலே அதிகபட்ச தனித்தன்மை வாய்ந்த கலாச்சார மரபும் இருக்கிறது. மணிப்பூரின் லோக்டாக் மற்றும் புனிதமான நீர்நிலையான ரேணுகாவோடு, அந்தப் பகுதியின் கலாச்ச்சாரத்தின் ஆழமான பந்தம் உள்ளது. இதைப் போலவே சாம்பரின் தொடர்பு அன்னை துர்க்கா தேவியின் அவதாரமான சாகம்பரி தேவியோடும் இருக்கிறது. பாரதத்திலே ஈரநிலங்களின் இந்த பரவலாக்கம், ராம்ஸர் பகுதிகளுக்கு அருகிலே வசிப்போரின் காரணமாகவும் அமைந்திருக்கிறது. நான் இந்த மக்கள் அனைவருக்கும் பலப்பல பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன், மனதின் குரல் நேயர்களின் தரப்பிலிருந்து உங்களுக்கு நல்வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, இந்த முறை நமது தேசத்தில், குறிப்பாக வட பாரதத்தில், தீவிரமான குளிர் பரவியிருக்கிறது. இந்தக் குளிர்காலத்தில் மக்கள் மலைகளில் பனிப்பொழிவின் ஆனந்தத்தையும் நன்கு அனுபவித்தார்கள். ஜம்மு கஷ்மீரத்திலிருந்து வந்திருக்கும் சில காட்சிகள், மனதைக் கொள்ளை கொண்டு விட்டன. சமூக ஊடகத்தில் கேட்கவே வேண்டாம், உலகம் முழுவதும் அதிகம் விரும்பப்படுபவையாக இந்தப் படங்கள் ஆகி இருக்கின்றன. பனிப்பொழிவு காரணமாக நமது கஷ்மீரப் பள்ளத்தாக்கு ஒவ்வொர் ஆண்டினைப் போலவும் இந்த முறையும் மிக ரம்மியமானதாக ஆகி விட்டிருந்தது. பனிஹால் முதல் பட்காம் வரை செல்லும் ரயிலின் வீடியோவையும் கூட மக்கள் குறிப்பாக விரும்பியிருக்கிறார்கள். அழகான பனிப்பொழிவு, நாலாபுறங்களிலும் வெள்ளைப் போர்வையாகப் பனி, ஆஹா. இந்தக் காட்சி, தேவதைகளின் கதைகளில் வருவதைப் போல இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள். பலர் மேலும் என்ன கூறுகிறார்கள் என்றால், இது ஏதோ ஒரு அயல்நாட்டின் படமல்ல, நமது நாட்டின் கஷ்மீர் பற்றிய படங்கள் என்கிறார்கள்.
ஒரு சமூகவலைத்தள பயன்பாட்டாளர் எழுதுகிறார் – இதைவிட அதிக அழகாகவா சுவர்க்கம் இருக்கும்? இது மிகவும் சரி தான். அதனால் தானே கஷ்மீரத்தை, பூமியின் சுவர்க்கம் என்கிறார்கள். நீங்களும் இந்தப் படங்களைக் கண்டு கஷ்மீரத்திற்குச் சுற்றுலா மேற்கொள்ள நினைப்பீர்கள் என்று நான் நன்கறிவேன். நீங்களும் செல்லுங்கள், உங்கள் நண்பர்களையும் இட்டுச் செல்லுங்கள் என்று நான் கூறுவேன். கஷ்மீரத்தில் பனிமூடிய மலைகள், இயற்கை அழகு இவற்றோடு கூடவே, மேலும் அதிகமாகக் காண வேண்டியவை, தெரிந்து கொள்ள வேண்டியவை பற்பல இருக்கின்றன. கஷ்மீரின் சையதாபாதில் பனிக்கால விளையாட்டுக்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த விளையாட்டுக்களின் கருப்பொருள் – ஸ்நோ கிரிக்கெட். என்ன, பனி கிரிக்கெட் அத்தனை சுவாரசியமாகவா இருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். கஷ்மீரத்து இளைஞர்கள் பனியிலே கிரிக்கெட்டை மேலும் அற்புதமானதாக மாற்றியிருக்கிறார்கள். இதன் வாயிலாக, வருங்காலத்தில் இந்திய அணியில் விளையாடக்கூடிய வகையில் கஷ்மீரத்தில் இளைய விளையாட்டு வீரர்களின் தேடல் நடைபெறுகிறது. இதுவும் ஒரு வகையான விளையாடு இந்தியா இயக்கத்தின் விரிவாக்கம் தான். கஷ்மீரத்தில், இளைஞர்களில், விளையாட்டுக்கள் தொடர்பாக உற்சாகம் அதிக அளவில் பெருகி வருகிறது. இனிவரும் காலத்தில் இவர்களில் பலர், தேசத்திற்காக பதக்கங்களை வென்றெடுப்பார்கள், மூவண்ணத்தைப் பறக்க விடுவார்கள். உங்களிடத்தில் என்னுடைய ஆலோசனை என்னவென்றால், நீங்கள் கண்டிப்பாக கஷ்மீருக்கு ஒரு பயணத்தைத் திட்டமிடுங்கள், இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளைக் காணவும் சற்று நேரம் ஒதுக்குங்கள். இந்த அனுபவம் உங்களுடைய பயணத்தை மேலும் நினைவில் கொள்ளத்தக்கதாக ஆக்கும்.
எனதருமை நாட்டுமக்களே, குடியரசினை மேலும் பலமுடையதாக ஆக்கும் முயற்சிகளில் தொடர்ந்து நாம் ஈடுபட்டுவர வேண்டும். மக்களின் பங்களிப்பால், அனைவரின் முயற்சியால், தேசத்தின் பொருட்டு அவரவர் தங்களுடைய கடமைகளை செவ்வனே ஆற்றும் போது மட்டுமே குடியரசு பலமாக இருக்க முடியும். நமது மனதின் குரல் இப்படிப்பட்ட கடமையுணர்வு மிக்க போராளிகளின் பலமான பெருங்குரல் என்பது, எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. அடுத்த முறை மீண்டும் சந்திப்போம், கடமையுணர்வு கொண்டவர்களின் சுவாரசியமான, உத்வேகம் அளிக்கும் கதைகளோடு. பலப்பல நன்றிகள்.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இது 2023ஆம் ஆண்டின் முதல் மனதின் குரல், மேலும் மனதின் குரல் நிகழ்ச்சியின் 97ஆவது பகுதியும் இதுவாகும். உங்களனைவரோடும் மீண்டும் ஒருமுறை உரையாடுவதில் எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஒவ்வொர் ஆண்டும் ஜனவரி மாதத்தில் கணிசமான நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இந்த மாதம் சுமார் 14ஆம் தேதி வாக்கில், வடக்கு முதல் தெற்கு வரையும், கிழக்குத் தொடங்கி மேற்கு வரையும், நாடெங்கிலும் பண்டிகைகளின் ஒளி பளிச்சிட்டு வந்தது. இதன் பிறகு தேசம் தனது குடியரசுத் திருநாள் கொண்டாட்டங்களில் திளைத்தது. இந்த முறையும் கூட, குடியரசுத் திருநாள் கொண்டாட்டத்தின் பல பரிமாணங்களுக்குப் பல பாராட்டுக்களும் கிடைத்து வருகின்றன. ஜைஸால்மேரிலிருந்து புல்கித் என்பவர் எழுதியிருக்கிறார், ஜனவரி 26ஆம் தேதியன்று நடந்த அணிவகுப்பின் போது, கர்த்தவ்ய பத்தினை ஏற்படுத்திய தொழிலாளர்களைக் காண்பது தனக்கு மிகவும் பிடித்திருந்ததாக எழுதியிருக்கிறார். அணிவகுப்பில் இடம் பெற்ற காட்சிகளில் பாரதநாட்டுக் கலாச்சாரத்தின் பல்வேறு பரிமாணங்களைப் பார்த்து ஆனந்தப்பட்டதாக கான்பூரைச் சேர்ந்த ஜயா அவர்கள் எழுதியிருக்கிறார். இதே அணிவகுப்பில், முதன்முறையாகக் கலந்து கொண்ட ஒட்டகச்சவாரி செய்யும் வீராங்கனைகள் பிரிவும், மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினரின் பெண்கள் பிரிவும் நிறைய பாராட்டுக்களைப் பெற்றன.
நண்பர்களே, தெஹ்ராதூனைச் சேர்ந்த வத்சல் அவர்கள், ஜனவரி 25ஆம் தேதிக்காகத் தான் எப்போதுமே காத்திருப்பதாக எழுதியிருக்கிறார். ஏனென்றால் அந்த நாளன்று தான் பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவதாகவும், அதே போல, ஜனவரி 25ஆம் தேதி மாலையே கூட, ஜனவரி 26ஆம் தேதிக்கான உற்சாகத்தை அதிகரித்து விடுவதாகவும் எழுதியிருக்கிறார். கள அளவில் தங்களுடைய அர்ப்பணிப்பு மற்றும் சேவை உணர்வால் சாதனைகளைப் புரிவோருக்கு மக்களின் பத்ம விருதுகள் தொடர்பாக பலர் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். இந்த முறை பத்ம விருதால் கௌரவிக்கப்படுவோரில், பழங்குடியினத்தவர்களும், பழங்குடியினத்தவர் வாழ்க்கையோடு தொடர்புடைய நபர்களுக்குமான நல்ல சிறப்பான பிரதிநிதித்துவம் இருக்கிறது. பழங்குடியினத்தோரின் வாழ்க்கை, நகரங்களின் வாழ்க்கையோட்டத்திலிருந்து வேறுபட்டது, அதற்கென சவால்கள் பிரத்யேகமாக இருக்கின்றன. இவற்றைத் தாண்டியும், பழங்குடியினங்கள், தங்கள் பாரம்பரியங்களைப் பாதுகாப்பதில் எப்போதுமே முனைப்பாக இருக்கின்றார்கள். பழங்குடி சமூகங்களோடு இணைந்த விஷயங்களைப் பாதுகாக்கவும், அவற்றின் மீது ஆய்வுகள் மேற்கொள்ளவும் முயற்சிகள மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதைப் போலவே T டோடோ, ஹோ, குயி, குவி, மாண்டா போன்ற பழங்குடி மொழிகளின் மீதான பணிகளில் ஈடுபட்டு வரும் பல பெரியோருக்கு பத்ம விருதுகள் கிடைத்திருக்கின்றன. இது நம்மனைவருக்குமே பெருமையளிக்கும் விஷயம். தானீராம் T டோடோ, ஜானும் சிங் சோய், பீ. ராமகிருஷ்ண ரெட்டி அவர்களின் பெயர், இப்போது நாடு முழுவதும் அறியப்படும் பெயர்களாக கௌரவிக்கப்படும். சித்தி, ஜார்வா, ஓங்கே போன்ற பழங்குடியினத்தவரோடு இணைந்து பணியாற்றியவர்களும் இந்த முறை கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, ஹீராபாயி லோபீ, ரத்தன் சந்த்ர கார், ஈஸ்வர் சந்திர வர்மா அவர்களைப் போல. பழங்குடியினச் சமூகங்கள் நம்முடைய பூமி, நமது மரபுகள் ஆகியவற்றின் பிரிக்கமுடியா அங்கங்களாக இருந்து வந்துள்ளார்கள். தேசம் மற்றும் சமூகத்தின் முன்னேற்றத்தில் அவர்களின் பங்களிப்பு மிகவும் மகத்துவம் வாய்ந்தது. அவர்களுக்காக செயலாற்றுவோருக்கு மரியாதை, புதிய தலைமுறைகளை உத்வேகப்படுத்தும். நக்சல்வாதம் பாதித்திருக்கும் பகுதிகளிலும் கூட, இந்த ஆண்டு பத்ம விருதுகளின் எதிரொலி ஓங்கி ஒலிக்கின்றது. தனது முயற்சிகள் வாயிலாக, நக்சல்வாதம் பாதித்த பகுதிகளில் வழிதவறிப் போன இளைஞர்களுக்கு சரியான பாதையைக் காட்டியுதவியவர்களுக்கு பத்ம விருதுகள் அளித்து கௌரவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக காங்கேரில் மரத்தில் வேலைப்பாடு செய்யும் அஜய் குமார் மண்டாவீ, கட்சிரௌலீயின் பிரசித்தமான ஜாடீபட்டீ ரங்கபூமியோடு தொடர்புடைய பரசுராம் கோமாஜீ குணே ஆகியோருக்கும் இந்த கௌரவம் கிடைத்திருக்கிறது. இதைப் போலவே வட கிழக்கில் தங்களுடைய கலாச்சாரத்தைப் பாதுகாப்பதில் இணைந்திருக்கும் ராமகுயிவாங்கபே நிஉமே, விக்ரம் பஹாதுர் ஜமாதியா, கர்மா வாங்சூ ஆகியோரும் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
நண்பர்களே, இந்த முறை பத்ம விருதுகளால் கௌரவிக்கப்படுவோரில் பலர் இடம் பெற்றிருக்கிறார்கள்,; இவர்கள் இசையுலகை நிறைவடையச் செய்திருக்கிறார்கள். யாருக்குத் தான் இசை பிடிக்காது!! அனைவருக்கும் பிடித்தமான இசை வேறுவேறாக இருக்கலாம், ஆனால், சங்கீதம் என்பது அனைவரின் வாழ்க்கையின் அங்கமாகவே இருக்கிறது. இந்த முறை பத்ம விருதுகளைப் பெறுவோரில், சந்தூர், பம்ஹும், த்விதாரா போன்ற நமது பாரம்பரியமான வாத்தியக் கருவிகளின் இசையைப் பொழிவதில் பாண்டித்தியம் பெற்றோரும் உண்டு. குலாம் மொஹம்மத் ஜாஸ், மோஆ சு-போங்க், ரீ-சிம்ஹபோர் குர்கா-லாங்க், முனி-வேங்கடப்பா, மங்கல் K காந்தி ராய் போன்ற பல நபர்களின் பெயர்கள், நாலாபுறங்களிலும் பேசப்பட்டு வருகின்றன.
நண்பர்களே, பத்ம விருதுகளைப் பெறும் அநேகம் நபர்கள், நமக்கு மத்தியிலிருந்து வரும் இந்த நண்பர்கள், எப்போதும் தேசத்தை அனைத்திற்கும் மேலாகக் கருதியவர்கள், தேசமே முதன்மை என்ற கோட்பாட்டிற்காகத் தங்கள் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணம் செய்தவர்கள். அவர்கள் சேவையுணர்வால் தங்கள் பணிகளில் ஈடுபட்டு வந்தார்கள், இதற்காக அவர்கள் என்றுமே விருதுகளை வேண்டவுமில்லை, விரும்பவுமில்லை. யாருக்காக அவர்கள் தங்கள் பணிகளை ஆற்றுகின்றார்களோ, அவர்களின் முகங்களில் இருக்கும் சந்தோஷம் மட்டுமே இவர்களுக்கு மிகப்பெரிய விருதுகள். இப்படிப்பட்ட அர்ப்பணிப்பு கொண்டவர்களை கௌரவப்படுத்துவதில், நாம் நாட்டுமக்களின் கௌரவத்தை அதிகப்படுத்துகிறோம். பத்ம விருதுகளின் வெற்றியாளர்கள் அனைவரின் பெயர்களையும் என்னால் இந்த சந்தர்ப்பத்தில் கூற முடியாமல் இருக்கலாம்; ஆனால் உங்களனைவரிடத்திலும் கேட்டுக் கொள்கிறேன், நீங்கள் பத்ம விருதுகளைப் பெற்ற பெரியோரின் கருத்தூக்கமளிக்கும் வாழ்க்கை தொடர்பான விஷயங்களைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ளுங்கள், மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள்.
நண்பர்களே, இன்று நாம் சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவில் குடியரசுத் திருநாள் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் வேளையில், நான் ஒரு சுவாரசியமான புத்தகம் குறித்தும் பேச விரும்புகிறேன். சில வாரங்கள் முன்பாகத் தான் இந்தப் புத்தகம் எனக்குக் கிடைத்தது, இதில் மிகவும் சுவாரசியமான விஷயம் குறித்துப் பேசப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்தின் பெயர் India – The Mother of Democracy, இதில் பல சிறப்பான கட்டுரைகள் இருக்கின்றன. பாரதம் உலகின் மிகப்பெரிய ஜனநாயகம், பாரத நாட்டவர்களான நாம் அனைவரும் நமது தேசம் ஜனநாயகத்தின் தாய் என்ற இந்த விஷயம் குறித்து மிகவும் பெருமிதமும் கொள்கிறோம். ஜனநாயகம் என்பது நமது நாடிநரம்புகளில் இருக்கிறது, நமது கலாச்சாரத்தில் இருக்கிறது. பல நூற்றாண்டுகளாக இது நமது செயல்பாட்டின் ஒரு பிரிக்கமுடியாத அங்கமாகவே விளங்கி வருகிறது. இயல்பாகவே நாம் ஒரு ஜனநாயக சமூகம் தான். டாக்டர். அம்பேட்கர் அவர்கள் பௌத்த பிக்ஷு சங்கத்தை, பாரதநாட்டுப் பாராளுமன்றத்தோடு ஒப்பிட்டார்கள். கோரிக்கைகள், தீர்மானங்கள், கோரம் என்ற குறைவெண் வரம்பு, வாக்களித்தல், மேலும் வாக்களிக்கப்பட்ட வாக்குகளை எண்ணுதல் தொடர்பாக பல விதிமுறைகள் அதில் இருக்கின்றன. பகவான் புத்தருக்கு இதற்கான கருத்தூக்கம், அவர் காலத்திய அரசியல் முறைகளிலிருந்து கிடைத்திருக்க வேண்டும் என்று பாபாசாஹேப் கருதினார்.
தமிழ்நாட்டின் ஒரு சிறிய, ஆனால் மிகவும் விவாதிக்கப்படும் கிராமம் உண்டு, உத்திரமேரூர். இங்கே 1100-1200 ஆண்டுகள் பழமையான ஒரு கல்வெட்டு, உலகத்தை மலைக்க வைக்கிறது. இந்தக் கல்வெட்டு ஒரு சிறிய அரசியலமைப்புச் சட்டம் போன்றது. கிராமசபையானது எவ்வாறு அமைக்கப்பட வேண்டும், அதன் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறை என்ன என்பன போன்று. நமது தேசத்தின் வரலாற்றில், ஜனநாயக விழுமியங்களின் மேலும் ஒரு எடுத்துக்காட்டு, 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பஸவேஷ்வரரின் அனுபவ மண்டபம். இங்கே சுதந்திரமான விவாதங்கள், கலந்துரையாடல்கள் ஆகியவற்றுக்கு ஊக்கமளிக்கப்பட்டது. இது மேக்னா கார்ட்டாவை விடவும் பழமையானது என்பதையறிந்து உங்களுக்கு ஆச்சரியம் மேலிடும். வாரங்கல்லைச் சேர்ந்த காகதீய வம்சத்து அரசர்களின் ஜனநாயகப் பாரம்பரியங்கள் மிகவும் பிரசித்தமானவை. பக்தி இயக்கமானது, மேற்கு பாரதத்திலே, ஜனநாயகக் கலாச்சாரத்தை முன்னெடுத்துச் சென்றது. இந்தப் புத்தகத்திலே, சீக்கிய சமயத்தின் ஜனநாயக உணர்வு பற்றியும் ஒரு கட்டுரை இடம் பெற்றிருக்கிறது. குரு நானக் தேவ் ஜி, அனைவரின் சம்மதத்தோடு மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பற்றி நமக்குத் தெரிவிக்கப்படுகிறது. மத்திய பாரதத்தின் உராவ், முண்டா பழங்குடியினத்தவர்களின் சமூகத்தால் இயக்கப்படும், ஒருமித்த கருத்தால் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் பற்றியும் இந்தப் புத்தகத்தில் நல்லபல தகவல்கள் இருக்கின்றன. நீங்கள் இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு, எப்படி நமது தேசத்தின் ஒவ்வொரு பாகத்திலும், பல நூற்றாண்டுகளாக மக்களாட்சியின் உணர்வுகள், ஒரு பிரவாகம் போல பெருக்கெடுத்து ஓடி வந்திருக்கின்றன என்பதை நன்கு உணர்வீர்கள். ஜனநாயகத்தின் தாய் என்ற முறையிலே, நாம், தொடர்ந்து இந்த விஷயத்தைப் பற்றி ஆழமாகச் சிந்திக்க வேண்டும், விவாதிக்க வேண்டும், உலகத்தின் முன்பாக எடுத்துரைக்க வேண்டும். இதனால் தேசத்தின் ஜனநாயக உணர்வு மேலும் ஆழப்படும்.
எனக்குப் பிடித்தமான நாட்டுமக்களே, யோகக்கலை தினத்திற்கும், நம்முடைய பலவகையான சிறுதானியங்களுக்கும் இடையே பொதுவான விஷயம் என்னவென்று நான் உங்களிடம் கேட்டால், இவற்றுக்கிடையே என்ன ஒப்புமை காண முடியும் என்று நீங்கள் நினைக்கலாம்? இரண்டுக்கும் இடையே கணிசமான பொதுவான கூறுகள் உண்டு என்று நான் கூறுவேன் என்றால் நீங்கள் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். உள்ளபடியே ஐக்கிய நாடுகள் சபையானது சர்வதேச யோகக்கலை தினத்தையும், சர்வதேச சிறுதானிய ஆண்டினையும் பற்றிய தீர்மானத்தை, பாரதம் முன்மொழிந்ததை ஒட்டியே மேற்கொண்டது. இரண்டாவதாக, யோகக்கலையும் உடல்நலத்தோடு தொடர்புடையது, சிறுதானியங்களும் உடல்நலத்துக்கு மகத்துவமான பங்களிப்பை அளிப்பது. மூன்றாவதாக, மகத்துவம் வாய்ந்த விஷயம் – இரண்டுமே மக்கள் இயக்கங்களாக மாறி, மக்கள் பங்கெடுப்பின் காரணமாக புரட்சிகரமான முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. எந்த வகையில் மக்கள் பரவலான முறையில் ஆக்கப்பூர்வமாக பங்கெடுத்து, யோகம் மற்றும் உடலுறுதியைத் தங்களுடைய வாழ்க்கையின் அங்கமாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்களோ, இதைப் போலவே சிறுதானியங்களையும் கூட மக்கள் பெரிய அளவில் ஏற்றுக் கொண்டு வருகிறார்கள். மக்கள் இப்போது சிறுதானியங்களைத் தங்களுடைய உணவுகளில் அங்கமாக ஆக்கிக் கொண்டு வருகின்றார்கள். இந்த மாற்றத்தின் மிகப்பெரிய தாக்கத்தையும் நம்மால் காண முடிகிறது. இதனால் பாரம்பரியமாகவே சிறுதானியங்களை உற்பத்தி செய்து வந்த சிறு விவசாயிகள் மிகவும் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள். உலகம் இப்போது சிறுதானியங்களின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ளத் தொடங்கி இருக்கிறது என்பதில் அவர்களுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. வேறொரு புறத்தில் விவசாயிகள்-உற்பத்தியாளர்கள் சங்கங்களான FPOக்களும், தொழில் முனைவோரும் இப்போது சிறுதானியங்களைச் சந்தைப்படுத்துவது, மக்களுக்குக் கிடைக்கச் செய்வது போன்ற முயற்சிகளைச் செய்யத் தொடங்கி விட்டார்கள்.
ஆந்திரப் பிரதேசத்தின் நாந்தயால் மாவட்டத்தில் வசிக்கும் கே.வி. ராமா சுப்பா ரெட்டி அவர்கள், சிறுதானியங்களை விளைவிக்கும் பொருட்டு, தனது நல்ல சம்பளம் தரும் வேலையைத் துறந்தார். தாயாரின் கையால் உருவாக்கப்பட்ட சிறுதானியத் தின்பண்டங்களின் சுவை அவர் நினைவுகளில் எந்த அளவுக்கு ஊறியிருந்தது என்றால், இவர் தனது கிராமத்தில் கம்பு தானியத்தைப் பதனிடும் அலகைத் தொடங்கினார். சுப்பா ரெட்டி அவர்கள், மக்களுக்குக் கம்பு தானியத்தின் ஆதாயங்களையும் எடுத்துக் கூறுகிறார், இதை எளிதாகக் கிடைக்குமாறும் செய்கிறார். மஹாராஷ்டிரத்தின் அலீபாகுக்கு அருகே கேநாட் கிராமத்தில் வசிக்கும் ஷர்மிளா ஓஸ்வால் அவர்கள் கடந்த 20 ஆண்டுகளாக சிறுதானிய விளைச்சலில், தனித்தன்மை வாய்ந்த முறையில் பங்களிப்பு அளித்து வருகிறார். இவர் விவசாயிகளுக்கு ஸ்மார்ட் – திறம்பட்ட விவசாயம் பற்றிய பயிற்சியை அளிக்கிறார். இவருடைய முயற்சிகளின் பலனாக சிறுதானியங்களின் விளைச்சல் மட்டும் அதிகரிக்கவில்லை, மாறாக, விவசாயிகளின் வருவாயும் அதிகரித்திருக்கின்றது.
சத்திஸ்கட்டின் ராய்கட் செல்லக்கூடிய வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தால், இங்கே இருக்கும் சிறுதானிய கஃபேயுக்குக் கண்டிப்பாகச் சென்று பாருங்கள். சில மாதங்கள் முன்பாகத் தான் தொடங்கப்பட்ட இந்த சிறுதானிய சிற்றுண்டியகத்தில் அப்பங்கள், தோசை, மோமோஸ், பீட்ஸாக்கள், மஞ்சூரியன் போன்ற தின்பண்டங்கள் மிகவும் பிரபலமாகி வருகின்றன.
நான் உங்களிடம் மேலும் ஒரு விஷயம் பற்றிச் சொல்லவா? நீங்கள் entrepreneur என்ற சொல் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள், அதாவது தொழில்முனைவோர். ஆனால் நீங்கள் Milletpreneurs பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? ஒடிஷாவில் Milletpreneurகள் எனப்படும் சிறுதானியத் தொழில்முனைவோர் இப்போதெல்லாம் செய்திகளில் அதிகமாகக் காணப்படுகிறார்கள். பழங்குடியினத்தவர் மாவட்டமான சுந்தர்கட்டுக்கு அருகே, 1,500 பெண்களின் சுயவுதவிக் குழுவானது, ஓடிஷா சிறுதானியங்கள் இயக்கத்தோடு இணைந்திருக்கிறது. இங்கே இருக்கும் பெண்கள், சிறுதானியங்களில் குக்கீஸ் தின்பண்டம், ரஸ்குல்லா, குலாப் ஜாமுன், கேக்குகள் போன்றவற்றைத் தயார் செய்கிறார்கள். சந்தையில் இவற்றுக்கான தேவை அதிக அளவில் இருக்கும் காரணத்தால், வருவாயும் அதிகரித்து வருகிறது.
கர்நாடகத்தின் கல்புர்கியில் ஆலந்த் புதாயி சிறுதானிய குடியானவர்கள் உற்பத்தியாளர் கம்பெனியானது கடந்த ஆண்டு சிறுதானிய ஆய்வுக்கான இந்தியக் கழகத்தின் மேற்பார்வையில் தனது பணியைத் தொடக்கியது. இங்கே தயாரிக்கப்படும், காக்ரா, பிஸ்கட்டுகள், லட்டு போன்றவை மக்களின் விருப்பத்தைப் பெற்று வருகின்றன. கர்நாடகத்தின் பீதர் மாவட்டத்தில், ஹுல்சூர் சிறுதானிய உற்பத்தியாளர் கம்பெனியோடு தொடர்புடைய பெண்கள், சிறுதானியங்களைப் பயிர் செய்வதோடு கூடவே, அவற்றை மாவாக அரைத்தும் தயார் செய்து கொடுக்கிறார்கள். இதனால் இவர்களின் வருவாயில் கணிசமான அதிகரிப்பும் இருக்கிறது. இயற்கை விவசாயத்தோடு தொடர்புடைய சத்திஸ்கட்டின் சந்தீப் ஷர்மா அவர்களின் விவசாயிகள் உற்பத்தியாளர் சங்கம் இன்று, 12 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளோடு தொடர்புடையதாக இருக்கிறது. பிலாஸ்புரைச் சேர்ந்த இந்த விவசாயிகள் உற்பத்தியாளர் சங்கம், எட்டு வகையான சிறுதானியங்களின் மாவையும், சுவையான தின்பண்டங்களையும் தயார் செய்து வருகிறது.
நண்பர்களே, இன்று இந்தியாவின் அனைத்து இடங்களிலும் ஜி-20 மாநாடுகள் தொடர்ந்து நடந்தேறி வருகின்றன, தேசத்தின் ஒவ்வொர் இடத்திலும், எங்கெல்லாம் ஜி-20 மாநாடு நடந்து வருகிறதோ, அங்கெல்லாம் சிறுதானியங்களில் தயார் செய்யப்பட்ட ஊட்டச்சத்துமிக்க, சுவையான தின்பண்டங்கள் இடம் பெறுவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இங்கே கம்பினால் தயாரிக்கப்பட்ட கிச்சடி, அவல் தின்பண்டம், பாயசம், ரொட்டியோடு கூடவே ராகியால் தயாரிக்கப்பட்ட பாயசம், பூரி, தோசை போன்ற தின்பண்டங்களும் பரிமாறப்படுகின்றன. ஜி-20க்கான அனைத்து இடங்களிலும் சிறுதானியங்களின் கண்காட்சிகளில், சிறுதானியங்களில் தயாரிக்கப்பட்ட ஆரோக்கிய பானங்கள், கூளவகைகள், நூடுல்ஸ் ஆகியவை காட்சிப்படுத்தப்படும். உலகெங்கும் இருக்கும் இந்திய த்தூதரகங்களிலும் கூட இவற்றின் வெகுஜனவிருப்பத்தை அதிகரிக்க, முழுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேசத்தின் இந்த முயற்சியும், உலகிலே அதிகரித்துவரும் சிறுதானியங்களின் தேவையும், நமது சிறுவிவசாயிகளுக்கு எத்தனை பலத்தை அளிக்கவல்லது என்பதை கற்பனை செய்து பாருங்கள். இன்று எத்தனை வகையான புதியபுதிய பொருட்ள்கள், சிறுதானியங்களைக் கொண்டு தயார் செய்யப்படுகின்றனவோ, அவையனைத்தும் இளைய தலைமுறையினருக்கு மிகவும் பிடித்திருக்கின்றன என்பதைக் காணும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டின் இப்படிப்பட்ட அருமையான தொடக்கத்திற்காகவும், இதைத் தொடர்ந்து மேற்கொண்டு சென்றமைக்கும், மனதின் குரலின் நேயர்களுக்கும் நான் என் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, யாராவது உங்களிடத்திலே டூரிஸ்ட் ஹப், அதாவது சுற்றுலாப்பயணிகள் மையமான கோவா பற்றிப் பேசினால், உங்கள் உள்ளத்தில் என்ன எழும்? இயல்பாக, கோவாவின் பெயரைக் கேட்டவுடனேயே, முதன்மையாக அங்கே இருக்கும் அழகான கரையோரங்கள், பீச்சுகள், விருப்பமான உணவுகள் மீதே உங்கள் சிந்தனை ஓடும் இல்லையா! ஆனால் கோவாவில் இந்த மாதம் நடந்த விஷயம், செய்திகளில் அதிகம் காணப்பட்டது. இன்று மனதின் குரலில், நான் இதை, உங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கோவாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் பெயர் பர்ப்பில் ஃபெஸ்ட். இந்த ஃபெஸ்டானது, ஜனவரி 6 தொடங்கி 8 வரை பணஜியில் நடந்தது. மாற்றுத் திறனாளிகளின் நலனை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த விழா உள்ளபடியே ஒரு அருமையான முயல்வு. 50,000த்திற்கும் மேற்பட்ட நமது சகோதர சகோதரிகள் இதில் பங்கெடுத்துக் கொண்டார்கள் என்பதிலிருந்து, பர்ப்பிள் ஃபெஸ்ட் எத்தனை பெரிய சந்தர்ப்பம் என்பது பற்றிய கற்பனையை இதன் மூலம் நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளலாம். இப்போது மீராமார் பீச்சிலே ஆனந்தமாகச் சுற்றித் திரிய முடிந்தது குறித்து, இங்கே வந்திருந்தவர்கள் புளகாங்கிதம் அடைந்தார்கள். உண்மையில், மீராமார் பீச் என்பது, நமது மாற்றுத் திறன் படைத்த சகோதர சகோதரிகளுக்காக, அணுகல்தன்மை கொண்ட கோவாவின் பீச்சுகளில் ஒன்றாக ஆகியிருக்கிறது. இங்கே கிரிக்கெட் போட்டிகள், டேபிள் டென்னிஸ் போட்டிகள், மாரத்தான் போட்டிகளோடு கூடவே, Deaf Blind Convention 2023 க்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இங்கே, வித்தியாசமான பறவைகளை கவனிக்கும் நிகழ்ச்சியைத் தவிர, ஒரு திரைப்படமும் திரையிடப்பட்டது. நமது மாற்றுத் திறனாளி சகோதர சகோதரிகளும் குழந்தைகளும் இதனை முழுமையாகக் கண்டுகளிக்கும் வகையில், சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பர்ப்பிள் ஃபெஸ்டின் மேலும் ஒரு சிறப்பான விஷயம், இதிலே தேசத்தின் தனியார் துறையும் பங்கெடுத்து வருவது தான். அவர்களின் தரப்பிலிருந்து எப்படிப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன என்றால், அவை மாற்றுத் திறனாளிகளுக்கு நேசமானவையாக இருந்தன. இந்த விழாவில் மாற்றுத் திறனாளிகளின் நலன்களின் பொருட்டு விழிப்புணர்வை அதிகரிக்க நிறைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. பர்ப்பில் ஃபெஸ்டை வெற்றிவிழாவாக ஆக்கியமைக்கும், இதோடு தொடர்புடைய அனைவருக்கும் என் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன். இதோடு கூடவே, இந்த விழாவை ஏற்பாடு செய்து உதவும் வகையிலே பணியாற்றிய அனைத்துத் தன்னார்வத் தொண்டர்களுக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். Accessible India, அதாவது அணுகல்தன்மை கொண்ட இந்தியா பற்றிய நமது பார்வையை மெய்யாக்க, இந்த வகையான இயக்கங்கள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
என் மனம் நிறை நாடுமக்களே, இப்போது மனதின் குரலில், நான் மேலும் ஒரு விஷயம் குறித்துப் பேசுகிறேன், இது உங்களுக்கு ஆனந்தத்தை அளிக்கும், பெருமிதம் பொங்கும், மனம் சந்தோஷப்படும் – பலே பலே, மனசு நிறைஞ்சு போச்சு!! என்று குதூகலிக்கும். தேசத்தின் மிகப் பழைமையான அறிவியல் நிறுவனங்களில் ஒன்று, பெங்களூரூவைச் சேர்ந்த Indian Institute of Science, IISc, அதாவது இந்திய அறிவியல் நிறுவனம்; இது அருமையான ஒரு விஷயத்தை நமக்கு அளிக்கிறது. அதாவது இந்த நிறுவனம் நிறுவப்பட்டதன் பின்னணியில், பாரதத்தின் இரண்டு மகத்துவம் பொருந்திய ஆளுமைகளான ஜம்ஷேத்ஜி டாடாவும், ஸ்வாமி விவேகானந்தரும் உத்வேகக் காரணிகளாக இருந்தார்கள் என்று மனதின் குரலில் நான் முன்பேயே கூட பேசியிருந்தேன். உங்களுக்கும் எனக்கும் ஆனந்தமும், பெருமிதமும் ஏற்படுத்தக்கூடிய விஷயம் என்னவென்றால், 2022ஆம் ஆண்டிலே இந்த நிறுவனத்தின் பெயரில் மொத்தமாக 145 காப்புரிமைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதே ஆகும். அதாவது, 5 நாட்களுக்கு ஒருமுறை இரண்டு உரிமைக்காப்புகள். இந்தச் சாதனை உள்ளபடியே அற்புதமானது. இந்த வெற்றிக்காக நான் IISc யின் குழுவினருக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நண்பர்களே, இன்று உரிமைக்காப்புப் பதிவிலே பாரதத்தின் தரவரிசை, 7ஆம் இடத்திலேயும், வர்த்தகச் சின்னங்களைப் பொறுத்த மட்டிலே 5ஆவது இடத்திலும் இருக்கின்றது. உரிமைக்காப்புகள் விஷயத்தில் மட்டுமே, கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 50 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டிருக்கிறது. உலகளாவிய கண்டுபிடிப்புக்கள் குறியீட்டிலும் கூட பாரதத்தின் தரவரிசையில், தீவிரமான மேம்பாடு காணப்பட்டிருக்கிறது, இப்போது அது 40ஆம் இடத்திற்கு வந்து விட்டது; ஆனால் 2015ஆம் ஆண்டிலே உலகக் கண்டுபிடிப்புகள் குறியீட்டில் பாரதம் 80ஆம் இடத்தில் இருந்தது. மேலும் ஒரு சுவாரசியமான விஷயத்தைச் சொல்கிறேன் கேளுங்கள். பாரதம் கடந்த 11 ஆண்டுகளில் முதன்முறையாக உள்நாட்டு உரிமைக்காப்புப் பதிவின் எண்ணிக்கை, அயல்நாட்டுப் பதிவை விட அதிகரித்திருக்கிறது. இது பாரதத்தின் அதிகரித்து வரும் விஞ்ஞானத் திறமையையும் காட்டுகிறது.
நண்பர்களே, 21ஆம் நூற்றாண்டின் பொருளாதாரத்தில் அறிவு மிகவும் தலையாயது என்பதை நாமனைவரும் நன்கறிவோம். நமது கண்டுபிடிப்பாளர்களும், அவர்களுடைய காப்புரிமைகளும் பாரதத்தின் டெக்கேட் பற்றிய கனவை கண்டிப்பாக முன்னெடுத்துச் செல்லும், நிறைவேற்றி வைக்கும் என்பது என் நம்பிக்கை. இதன் வாயிலாக நாமனைவரும், நமது நாட்டிலேயே தயார் செய்யப்பட்ட உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தையும் பொருட்களையும் முழுமையாகப் பயன்படுத்தி இலாபமடையலாம்.
எனதருமை நாட்டுமக்களே, நமோ செயலியில், தெலங்கானாவைச் சேர்ந்த ஒரு பொறியாளரான விஜய் அவர்கள் ஒரு பதிவினைத் தரவேற்றி இருந்தார். இதிலே, மின்பொருள்கழிவு பற்றி அவர் குறிப்பிட்டிருந்தார். விஜய் அவர்களின் வேண்டுகோள் என்னவென்றால், மனதின் குரலில், இது பற்றி நான் விவாதிக்க வேண்டும் என்பது தான். இந்த நிகழ்ச்சியில் முந்தைய பகுதிகளிலேயே கூட நாம் கழிவிலிருந்து செல்வம் பற்றி பேசியிருக்கிறோம்; ஆனால் வாருங்கள், இன்றும் இதோடு தொடர்புடைய மின்பொருள் கழிவு பற்றிப் பேசுவோம்.
நண்பர்களே, இன்று அனைத்து இல்லங்களிலும் செல்பேசி, லேப்டாப், டேப்லட் போன்ற கருவிகள் சாதாரணமானவையாகி விட்டன. நாடெங்கிலும் இவற்றின் எண்ணிக்கை பில்லியன்கணக்கில் இருக்கின்றன. இன்றைய அண்மையான கருவிகள், எதிர்காலத்தின் மின்பொருள் கழிவாகும். எந்தவொரு புதிய கருவியை வாங்கினாலும், பழைய கருவியை மாற்றினாலும், பழைய பொருளை சரியான முறைப்படி கைவிட வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். மின்பொருள் கழிவு சரியான வகையிலே கைவிடப்படவில்லை என்று சொன்னால், நமது சுற்றுச்சூழலுக்கும் இதனால் தீங்கு ஏற்படும். ஆனால் எச்சரிக்கையோடு இது செய்யப்படும் போது, இது மறுசுழற்சி, மீள்பயன்பாடு என்ற வகையில், Circular Economy எனப்படும் சுற்றுப்பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பலத்தை அளிக்கிறது. ஐக்கிய நாடுகளின் ஓர் அறிக்கையில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்றால், ஒவ்வோர் ஆண்டும் 50 மில்லியன் டன் அளவு மின்பொருள் கழிவு தூக்கிப் போடப்படுகிறது என்கிறது. இது என்ன அளவு என்பதை உங்களால் கணிக்க முடிகிறதா? மனித வரலாற்றிலே எத்தனை வர்த்தகரீதியான விமானங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றனவோ, அவை அனைத்தின் எடையையும் ஒன்று கூட்டினாலும் கூட, வெளியேற்றப்படும் மின்பொருள் கழிவுகளுக்கு நிகராகவே ஆக முடியாது. இது எப்படி இருக்கிறது என்றால், ஒவ்வொரு நொடியும் 800 லேப்டாப்புகள் வீசியெறியப்படுவது போன்று உள்ளது. பல்வேறு செயல்முறைகள் வாயிலாக இந்த மின்கழிவுப் பொருட்களிலிருந்து 17 வகையான விலைமதிப்பற்ற உலோகங்கள் வெளியெடுக்கப்பட முடியும் என்பது உங்களுக்கு மலைப்பை ஏற்படுத்தலாம். இதிலே தங்கம், வெள்ளி, செம்பு, நிக்கல் ஆகியன அடங்கும். ஆகையால் மின்பொருள் கழிவினை நல்லவகையில் பயன்படுத்துவது என்பது, குப்பையிலிருந்து கோமேதகம் உருவாக்குதற்கு எந்த வகையிலும் குறைவல்ல. இன்று, இந்தத் திசையில் நூதனமான பணிகளை மேற்கொண்டு வரும் ஸ்டார்ட் அப்புகளுக்குக் எந்தக் குறைவும் இல்லை. இன்று சுமார் 500 மின் பொருள் கழிவு மறுசுழற்சியாளர்கள் இந்தத் துறையோடு இணைந்திருக்கிறார்கள், பல புதிய தொழில்முனைவோரும் இதில் தங்களை இணைத்துக் கொண்டு வருகிறார்கள். இந்தத் துறையில் ஆயிரக்கணக்கானவர்கள், நேரடியாக வேலைவாய்ப்பையும் அளித்திருக்கிறார்கள். பெங்களூரூவின் ஈ-பரிசாரா, இப்படிப்பட்ட ஒரு முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. இது அச்சிடப்பட்ட சர்க்கியூட் பலகைகளில் உள்ள விலைமதிபற்ற உலோகங்களைப் பிரித்தெடுக்க, சுதேசித் தொழில்நுட்பத்தை மேம்படுத்தியிருக்கிறது. இதைப் போலவே மும்பையில் பணியாற்றிவரும் ஈகோரெகோவும் கூட மொபைல் செயலி வாயிலாக மின்பொருள் கழிவை சேகரிக்கும் முறையை ஏற்படுத்தி இருக்கிறார்கள். உத்தராகண்டின் ருட்கீயின் ஏடேரோ மறுசுழற்சியானது இந்தத் துறையில் உலகெங்கிலும் பல காப்புரிமைகளைப் பெற்றிருக்கிறது. இதுவும் கூட மின்பொருள் கழிவுத் தொழில்நுட்பத்தைத் தயாரித்து, கணிசமாகப் பெயர் ஈட்டியிருக்கிறது. போபாலில், மொபைல் செயலி மற்றும் இணையதளத்தில் கபாடீவாலா வாயிலாக டன் கணக்கான மின்பொருள் கழிவு ஒன்று திரட்டப்பட்டு வருகிறது. இதைப் போலவே, பல எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. இவையனைத்தும் பாரதத்தை உலக அளவிலான மறுசுழற்சி மையமாக மாற்ற உதவிகரமாக இருக்கின்றன என்றாலும், இப்படிப்பட்ட முன்னெடுப்புக்களின் வெற்றிக்கான முக்கியமான நிபந்தனை – மின் பொருள் கழிவுகளைச் சரியான முறையிலே சமாளிப்பதன் மூலம், பாதுகாப்பான வழிமுறைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வர வேண்டும் என்பது தான். தற்போது ஒவ்வொர் ஆண்டும் 15 முதல் 17 சதவீதம் வரையிலான மின்பொருள் கழிவுகளை மட்டுமே நம்மால் மறுசுழற்சி செய்ய முடிவதாக, மின்பொருள் கழிவுத் துறையில் ஈடுபட்டு வருவோர் தெரிவிக்கின்றார்கள்.
என் அன்பான நாட்டுமக்களே, இன்று உலகெங்கும் சூழல் மாற்றம் மற்றும் உயிரினப் பன்முகத்தன்மையின் பாதுகாப்பு குறித்து அதிகம் பேசப்படுகிறது. இந்தத் திசையில் பாரதத்தின் சிறப்பான முயற்சிகள் குறித்து நாம் தொடர்ந்து பேசி வருகிறோம். பாரதம் தனது சதுப்பு நிலங்களின் பொருட்டு ஆற்றியிருக்கும் பணிகளை நீங்கள் தெரிந்து கொள்ளுதல் நலமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். ஈரநிலங்கள், சதுப்புநிலங்கள் என்றால் என்ன என்று சிலல நேயர்கள் நினைக்கலாம். ஈரநிலப் பகுதிகள், அதாவது எங்கே சகதியைப் போன்ற நிலம் இருக்கிறதோ, எங்கே ஆண்டுமுழுக்க நீர் நிரம்பி இருக்கிறதோ, அது தான் ஈரநிலமாகும். சில தினங்கள் கழித்து, ஃபெப்ருவரி மாதம் 2ஆம் தேதியன்று உலக சதுப்புநில நாள் வரவிருக்கிறது. நமது பூமியின் இருப்பிற்காக சதுப்புநிலங்கள் மிகவும் அவசியமானவை, ஏனென்றால், இவற்றைச் சார்ந்த பல பறவைகளும், உயிரினங்களும் இருக்கின்றன. இவை உயிரினப் பன்முகத்தன்மையை நிறைவு செய்வதோடு, வெள்ளக் கட்டுப்படுத்தலையும், நிலத்தடி நீரை மீள்நிரப்புவதையும் உறுதி செய்கின்றன. Ramsar Sites, ராம்சர் இடங்கள் போன்ற சதுப்புநிலப் பகுதிகள், சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கலாம். ஈரநிலங்கள் அல்லது சதுப்புநிலங்கள், எந்தவொரு தேசத்திலும் இருக்கலாம் ஆனால், இவை பல அளவீடுகளை எல்லாம் கடந்த பிறகு தான், Ramsar Sites என்று அறிவிக்கப்படுகின்றன. அங்கே 20,000 அல்லது அதைவிடவும் அதிகமான நீர்ப் பறவைகள் இருக்க வேண்டும். வட்டார மீன் இனங்கள் பெரிய எண்ணிக்கையில் அங்கே இருத்தல் அவசியம். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கழித்து, அமுதப் பெருவிழாவின் போது ராம்சர் அங்கீகாரம் பெற்ற இடங்களோடு தொடர்புடைய மேலும் ஒரு நல்ல தகவலை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நமது தேசத்தில் இப்போது ராம்ஸர் இடங்களின் மொத்த எண்ணிக்கை 75 ஆகியிருக்கிறது, ஆனால் 2014ற்கு முன்பாக தேசத்தில் வெறும் 26 ராம்ஸர் இடங்கள் மட்டுமே இருந்தன. இதற்காக வட்டார சமுதாயங்கள் பாராட்டுக்கு உரியவர்கள்; இவர்கள் தாம் இந்த உயிரினப் பன்முகத்தன்மையைப் பாதுகாத்தளித்திருக்கிறார்கள். இது இயற்கையோடு கூட நல்லிணக்கத்தோடு வாழும் நமது பலநூற்றாண்டுக்கால பழைமையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துக்குக் கிடைத்த ஒரு மரியாதை ஆகும். பாரதத்தின் இந்த சதுப்பு நிலங்கள் நமது இயற்கைத் திறன்களுக்கான எடுத்துக்காட்டுகள். ஓடிஷாவின் சில்கா ஏரி, 40க்கும் அதிகமான நீர்ப் பறவை இனங்களுக்கு புகலிடமாக விளங்குகிறது. கயிபுல்-லம்ஜாஊ, கோக்டாக்கை, சதுப்புநில மானின் ஒரே இயற்கை வாழ்விடமாகக் கருதப்படுகிறது. தமிழ்நாட்டின் வேடந்தாங்கல், 2022ஆம் ஆண்டிலே ராம்ஸர் சைட் என்று அறிவிக்கப்பட்டது. இங்கே பறவைகளின் எண்ணிக்கையைப் பாதுகாக்கும் மொத்தப் பாராட்டும் அக்கம்பக்கத்தில் இருக்கும் விவசாயிகளையே சாரும். கஷ்மீரத்தில் பஞ்ஜாத் நாக் சமுதாயத்தினரின் வருடாந்திர fruit blossom எனப்படும் பழங்களின் மலர்ச்சித் திருவிழாவில், விசேஷமான வகையிலே கிராமத்தின் நீர்நிலைகளின் தூய்மைப்படுத்தலுக்காக ஒரு நாளை ஒதுக்குகிறார்கள். உலகின் ராம்ஸர் இடங்களிலே அதிகபட்ச தனித்தன்மை வாய்ந்த கலாச்சார மரபும் இருக்கிறது. மணிப்பூரின் லோக்டாக் மற்றும் புனிதமான நீர்நிலையான ரேணுகாவோடு, அந்தப் பகுதியின் கலாச்ச்சாரத்தின் ஆழமான பந்தம் உள்ளது. இதைப் போலவே சாம்பரின் தொடர்பு அன்னை துர்க்கா தேவியின் அவதாரமான சாகம்பரி தேவியோடும் இருக்கிறது. பாரதத்திலே ஈரநிலங்களின் இந்த பரவலாக்கம், ராம்ஸர் பகுதிகளுக்கு அருகிலே வசிப்போரின் காரணமாகவும் அமைந்திருக்கிறது. நான் இந்த மக்கள் அனைவருக்கும் பலப்பல பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன், மனதின் குரல் நேயர்களின் தரப்பிலிருந்து உங்களுக்கு நல்வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, இந்த முறை நமது தேசத்தில், குறிப்பாக வட பாரதத்தில், தீவிரமான குளிர் பரவியிருக்கிறது. இந்தக் குளிர்காலத்தில் மக்கள் மலைகளில் பனிப்பொழிவின் ஆனந்தத்தையும் நன்கு அனுபவித்தார்கள். ஜம்மு கஷ்மீரத்திலிருந்து வந்திருக்கும் சில காட்சிகள், மனதைக் கொள்ளை கொண்டு விட்டன. சமூக ஊடகத்தில் கேட்கவே வேண்டாம், உலகம் முழுவதும் அதிகம் விரும்பப்படுபவையாக இந்தப் படங்கள் ஆகி இருக்கின்றன. பனிப்பொழிவு காரணமாக நமது கஷ்மீரப் பள்ளத்தாக்கு ஒவ்வொர் ஆண்டினைப் போலவும் இந்த முறையும் மிக ரம்மியமானதாக ஆகி விட்டிருந்தது. பனிஹால் முதல் பட்காம் வரை செல்லும் ரயிலின் வீடியோவையும் கூட மக்கள் குறிப்பாக விரும்பியிருக்கிறார்கள். அழகான பனிப்பொழிவு, நாலாபுறங்களிலும் வெள்ளைப் போர்வையாகப் பனி, ஆஹா. இந்தக் காட்சி, தேவதைகளின் கதைகளில் வருவதைப் போல இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள். பலர் மேலும் என்ன கூறுகிறார்கள் என்றால், இது ஏதோ ஒரு அயல்நாட்டின் படமல்ல, நமது நாட்டின் கஷ்மீர் பற்றிய படங்கள் என்கிறார்கள்.
ஒரு சமூகவலைத்தள பயன்பாட்டாளர் எழுதுகிறார் – இதைவிட அதிக அழகாகவா சுவர்க்கம் இருக்கும்? இது மிகவும் சரி தான். அதனால் தானே கஷ்மீரத்தை, பூமியின் சுவர்க்கம் என்கிறார்கள். நீங்களும் இந்தப் படங்களைக் கண்டு கஷ்மீரத்திற்குச் சுற்றுலா மேற்கொள்ள நினைப்பீர்கள் என்று நான் நன்கறிவேன். நீங்களும் செல்லுங்கள், உங்கள் நண்பர்களையும் இட்டுச் செல்லுங்கள் என்று நான் கூறுவேன். கஷ்மீரத்தில் பனிமூடிய மலைகள், இயற்கை அழகு இவற்றோடு கூடவே, மேலும் அதிகமாகக் காண வேண்டியவை, தெரிந்து கொள்ள வேண்டியவை பற்பல இருக்கின்றன. கஷ்மீரின் சையதாபாதில் பனிக்கால விளையாட்டுக்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த விளையாட்டுக்களின் கருப்பொருள் – ஸ்நோ கிரிக்கெட். என்ன, பனி கிரிக்கெட் அத்தனை சுவாரசியமாகவா இருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். கஷ்மீரத்து இளைஞர்கள் பனியிலே கிரிக்கெட்டை மேலும் அற்புதமானதாக மாற்றியிருக்கிறார்கள். இதன் வாயிலாக, வருங்காலத்தில் இந்திய அணியில் விளையாடக்கூடிய வகையில் கஷ்மீரத்தில் இளைய விளையாட்டு வீரர்களின் தேடல் நடைபெறுகிறது. இதுவும் ஒரு வகையான விளையாடு இந்தியா இயக்கத்தின் விரிவாக்கம் தான். கஷ்மீரத்தில், இளைஞர்களில், விளையாட்டுக்கள் தொடர்பாக உற்சாகம் அதிக அளவில் பெருகி வருகிறது. இனிவரும் காலத்தில் இவர்களில் பலர், தேசத்திற்காக பதக்கங்களை வென்றெடுப்பார்கள், மூவண்ணத்தைப் பறக்க விடுவார்கள். உங்களிடத்தில் என்னுடைய ஆலோசனை என்னவென்றால், நீங்கள் கண்டிப்பாக கஷ்மீருக்கு ஒரு பயணத்தைத் திட்டமிடுங்கள், இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளைக் காணவும் சற்று நேரம் ஒதுக்குங்கள். இந்த அனுபவம் உங்களுடைய பயணத்தை மேலும் நினைவில் கொள்ளத்தக்கதாக ஆக்கும்.
எனதருமை நாட்டுமக்களே, குடியரசினை மேலும் பலமுடையதாக ஆக்கும் முயற்சிகளில் தொடர்ந்து நாம் ஈடுபட்டுவர வேண்டும். மக்களின் பங்களிப்பால், அனைவரின் முயற்சியால், தேசத்தின் பொருட்டு அவரவர் தங்களுடைய கடமைகளை செவ்வனே ஆற்றும் போது மட்டுமே குடியரசு பலமாக இருக்க முடியும். நமது மனதின் குரல் இப்படிப்பட்ட கடமையுணர்வு மிக்க போராளிகளின் பலமான பெருங்குரல் என்பது, எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. அடுத்த முறை மீண்டும் சந்திப்போம், கடமையுணர்வு கொண்டவர்களின் சுவாரசியமான, உத்வேகம் அளிக்கும் கதைகளோடு. பலப்பல நன்றிகள்.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்றைய மனதின் குரல் 96ஆவது பகுதியாகும். மனதின் குரலின் அடுத்த பகுதி 2023ஆம் ஆண்டின் முதல் பகுதியாக அமையும். கடக்கவிருக்கும் 2022ஆம் ஆண்டு குறித்துப் பேச உங்களில் பலர் வேண்டுகோள் விடுத்திருக்கிறீர்கள். கடந்தகாலம் பற்றிய மதிப்பீடுகளும் அலசல்களும், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் தொடர்பான தயாரிப்புக்களுக்கான உத்வேகத்தை அளிக்கின்றன. 2022ஆம் ஆண்டிலே, நாட்டுமக்களின் திறமைகள், அவர்களின் ஒத்துழைப்பு, அவர்களின் மனவுறுதி, அவர்களுடைய பரவலான வெற்றிகள் எந்த அளவுக்கு இருந்தன என்றால், இவற்றையெல்லாம் ஒரே மனதின் குரலில் தொகுத்தளிப்பது என்பது கடினமானதாக இருக்கும். 2022ஆம் ஆண்டு என்பது உண்மையிலேயே பல காரணங்களுக்காக மிகவும் கருத்தூக்கம் அளிப்பதாக அமைந்திருந்தது, அற்புதமானதாக இருந்தது. இந்த ஆண்டிலே, பாரதம் தான் சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடியது, அமுதகாலமும் தொடங்கியது. இந்த ஆண்டிலே தான் தேசத்தில் புதுவேகம் உருவானது, நாட்டுமக்கள் அனைவரும் ஒருவரையொருவர் விஞ்சும் அளவுக்குச் செயலாற்றினார்கள். 2022ஆம் ஆண்டின் பல்வேறு வெற்றிகளும், உலகம் முழுவதிலும் பாரதத்திற்கான ஒரு சிறப்பான இடத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன. 2022ஆம் ஆண்டிலே உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்கள் வரிசையில் பாரதம் ஐந்தாம் இடத்தைப் பிடித்தது. இதே 2022ஆம் ஆண்டிலே தான் பாரதம் 220 கோடி தடுப்பூசிகள் என்ற வியப்பையும் மலைப்பையும் ஒருசேர ஏற்படுத்தக்கூடிய இலக்கைத் தாண்டிச் சாதனை படைத்தது, இந்த 2022ஆம் ஆண்டிலே தான் 400 பில்லியன் டாலர்கள் என்ற மாயாஜால இலக்கை பாரதம் தாண்டி ஆச்சரியமான சாதனையைப் படைத்தது, இதே 2022ஆம் ஆண்டிலே தான் பாரதநாட்டவர் அனைவரும் தற்சார்பு பாரதம் என்ற மனவுறுதியை மேற்கொண்டார்கள், வாழ்ந்தும் காட்டி வருகிறார்கள், 2022 என்ற இந்த ஆண்டில் தான் பாரதத்தின் முதல் சுதேசி விமானம் தாங்கிப் போர்க்கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்த் படையில் இணைக்கப்பட்டது, இதே 2022இலே தான் விண்வெளித்துறை, ஆளில்லா வானூர்தி எனும் ட்ரோன்கள் மற்றும் பாதுகாப்புத் துறையில் பாரதம் தனது முத்திரையைப் பதித்தது, இந்த 2022ஆம் ஆண்டிலே தான் அனைத்துத் துறைகளிலும் பாரதம் தனது தாங்கும் உறுதியை வெளிப்படுத்தியது. விளையாட்டு மைதானத்திலும் கூட, அது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளாகட்டும், அல்லது நமது பெண்கள் ஹாக்கி அணியின் வெற்றியாகட்டும், நமது இளைஞர்கள் சிறப்பாக ஆடித் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.
நண்பர்களே, இவை அனைத்துடன் கூடவே 2022ஆம் ஆண்டு, மேலும் ஒரு காரணத்திற்காக நினைவில் கொள்ளத்தக்கதாக இருக்கும். அது என்னவென்றால், ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வின் விரிவாக்கம் தான் அது. நாட்டுமக்களின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் கொண்டாடும் விதமாக அற்புதமான பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. குஜராத்தின் மாதவ்புரின் திருவிழாவிலே ருக்மணி திருக்கல்யாணம், பகவான் கிருஷ்ணரின் வடகிழக்குடனான தொடர்புகள் ஆகியவை கொண்டாடப்படுகின்றன; அல்லது காசி-தமிழ் சங்கமம் ஆகட்டும், இந்தக் காலங்களில் ஒற்றுமையின் பல வண்ணங்கள் தென்பட்டன. 2022ஆம் ஆண்டிலே நாட்டுமக்கள் மேலும் ஒரு அமர இதிஹாசத்தை எழுதினார்கள். ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற வீடுதோறும் மூவண்ணம் இயக்கத்தை யாரால் மறந்து விட முடியும்!! அந்த ஒப்பற்ற கணங்களிலே நாட்டுமக்கள் ஒவ்வொருவரும் சிலிர்ப்பை உணர்ந்தார்கள். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கழிந்த நிலையில், இந்த இயக்கம் நாடு முழுவதையும் மூவண்ணத்தால் நிரப்பியது. 6 கோடிக்கும் அதிகமானோர் மூவண்ணக்கொடியோடு செல்ஃபி புகைப்படத்தை எடுத்து அனுப்பினார்கள். சுதந்திரத்தின் இந்த அமுதப் பெருவிழாவிலே அடுத்த ஆண்டும் இதே போலவே நடக்கும் – அமுதகாலத்தின் அடித்தளத்தை இது மேலும் பலமுடையதாக ஆக்கும்.
நண்பர்களே, இந்த ஆண்டு பாரதம், ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கிறது. கடந்த முறை இது குறித்து விரிவான வகையிலே பகிர்ந்திருந்தேன். 2023ஆம் ஆண்டிலே நாம் ஜி20 அளிக்கும் உற்சாகத்தைப் புதிய சிகரங்களுக்குக் கொண்டு செல்வோம், இந்த நிகழ்ச்சியை அனைவரையும் பங்கெடுக்கும் இயக்கமாக மாற்றுவோம்.
என் மனம் நிறை நாட்டுமக்களே, இன்று உலகெங்கிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. ஏசு கிறிஸ்துவின் வாழ்க்கை, அவரது கற்பித்தல்கள் ஆகியவற்றை நினைவில் கொள்ள வேண்டிய தினமாகும் இது. நான் உங்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே, இன்று, நம் அனைவரின் மதிப்பிற்குரிய அடல் பிஹாரி வாஜ்பேயி அவர்களின் பிறந்த தினமும் ஆகும். அவர் ஒரு மாபெரும் அரசியல் தலைவர், தேசத்திற்கு அசாதாரணமானதொரு தலைமையை அளித்தார். நாட்டுமக்கள் அனைவரின் இதயங்களிலும் அவருக்கென ஒரு தனிச்சிறப்பிடம் உண்டு. கோல்காத்தாவைச் சேர்ந்த ஆஸ்தா அவர்களிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறது. இந்தக் கடிதத்தில் அவர் தன்னுடைய அண்மைக்கால தில்லிப் பயணத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். அவர் தில்லியில் தங்கியிருந்த வேளையில் பிரதம மந்திரி அருங்காட்சியகத்தைக் காணச் சென்றிருந்த போது, அங்கே அடல் அவர்களின் காட்சியகம் தனக்கு மிகவும் பிடித்திருந்ததாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். அடல்ஜியோடு அங்கே அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் தன்னுடைய நினைவில் வைத்துப் போற்றத்தக்கதாய் இருந்தது என்று தெரிவித்திருக்கிறார். அடல்ஜியின் காட்சியகத்திலே, தேசத்திற்காக அவருடைய விலைமதிப்பற்ற பங்களிப்பின் காட்சிகளை நம்மால் காண முடியும். உள்கட்டமைப்பாகட்டும், கல்வி அல்லது அயலுறவுக் கொள்கையாகட்டும், அவர் பாரதத்தை அனைத்துத் துறைகளிலும் புதிய சிகரங்களுக்குக் கொண்டு செல்லும் பணியை ஆற்றினார். நான் மீண்டும் ஒருமுறை அடல்ஜிக்கு என் இதயபூர்வமான வணக்கங்களைக் காணிக்கையாக்குகிறேன்.
நண்பர்களே, நாளை டிசம்பர் 26ஆம் தேதியானது வீர பால தினம் ஆகும்; இந்த வேளையிலே தில்லி மாநகரிலே, இளவரசர் ஜோராவர் சிங்ஜி, இளவரசர் ஃபதேஹ் சிங்ஜி ஆகியோரின் உயிர்த்தியாகத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் பெரும்பேறு எனக்குக் கிடைக்கவிருக்கிறது. இளவரசர்கள், தாய் குஜ்ரீ ஆகியோரின் பிராணத்தியாகத்தை தேசம் என்றென்றும் நினைவில் கொள்ளும்.
என் கனிவான நாட்டுமக்களே, நமது நாட்டிலே ஒரு வழக்குண்டு.
சத்யம் கிம பிரமாணம், பிரத்யக்ஷம் கிம பிரமாணம்.
सत्यम किम प्रमाणम , प्रत्यक्षम किम प्रमाणम |
அதாவது சத்தியத்திற்கு எந்தச் சான்றும் தேவையிருப்பதில்லை, முதல் தோற்றத்திலேயே எது தெளிவாகத் தெரிகிறதோ, அதற்கும் எந்தச் சான்றும் தேவையிருப்பதில்லை. ஆனால் நவீன மருத்துவ அறிவியல் எனும் போது, அதிலே மிகவும் முக்கியமானது என்றால், அது சான்று எனும் ैEvidence. பல நூற்றாண்டுகளாக பாரத நாட்டவர்களின் வாழ்க்கையின் அங்கமாகத் திகழும் யோகக்கலை, ஆயுர்வேதம் போன்ற நமது சாத்திரங்களின் முன்பாக சான்றுகளை ஆதாரமாகக் கொண்ட ஆய்வின் குறைபாடு எப்போதுமே ஒரு சவாலாக விளங்கி வந்திருக்கிறது. பலன்கள் காணக் கிடைக்கின்றன என்றாலும், சான்றுகள் ஏதும் இல்லை. ஆனால் சான்றுகளை ஆதாரமாகக் கொண்ட மருத்துவ யுகத்திலே, இப்போது யோகமும் ஆயுர்வேதமும், நவீன யுகத்தின் ஆய்வு மற்றும் அளவுகோல்கள் தொடர்பாகவும் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. மும்பையின் டாடா மெமோரியல் சென்டர் பற்றி நீங்கள் கண்டிப்பாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆய்வு, கண்டுபிடிப்பு மற்றும் புற்றுநோய் சிகிச்சை ஆகியவற்றில் இந்த அமைப்பு பெரும் உதவிகரமாக விளங்கி வருகிறது. இந்த மையம் வாயிலாகப் புரியப்பட்ட ஒரு தீவிர ஆய்வின் முடிவுகள், மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யோகக்கலை மிகவும் பயனளிப்பதாக இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. டாடா மெமோரியல் சென்டரானது தனது ஆராய்ச்சியின் முடிவுகளை, அமெரிக்காவில் நடந்த மிகவும் பிரபலமான மார்பகப் புற்றுநோய் மாநாட்டிலே முன்வைத்தது. இந்த முடிவுகள், உலகின் பெரியபெரிய வல்லுநர்களின் கவனத்தைத் தன்பால் ஈர்த்தது. ஏனென்றால், நோயாளிகளுக்கு யோகக்கலையால் எப்படி பயன் உண்டானது என்பதை டாடா மெமோரியல் மையமானது சான்றுகளோடு விளக்கியது. இந்த மையத்தின் ஆய்வுகளின்படி, யோகக்கலையின் இடைவிடாத பயிற்சியால், மார்ப்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் நோய், மீண்டும் வளர்வதிலோ, மரண அபாயத்திலோ 15 சதவீதம் குறைவு ஏற்படுவதாகக் கண்டுபிடித்தது. பாரதநாட்டுப் பாரம்பரிய சிகிச்சையின் முதல் எடுத்துக்காட்டு இது; இதை மேற்கத்திய வழிமுறைகளைப் பின்பற்றுவோர், கடுமையான அளவுகோல்கள் கொண்டு இதை சோதனை செய்தார்கள். மார்ப்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்கைத்தரம், யோகக்கலையால் மேம்படுகிறது என்பதைத் தெரிவித்த முதல் ஆய்வும் இது தான். மேலும் இதன் நீண்டகால ஆதாயங்களும் வெளிவந்திருக்கின்றன. டாடா மெமோரியல் சென்டர் தனது ஆய்வு முடிவுகளை பாரீஸில் நடந்த மருத்துவப் புற்றுநோயியலுக்கான ஐரோப்பிய சங்கத்தின் மாநாட்டிலே முன்வைத்தது.
நண்பர்களே, இன்றைய யுகத்திலே, பாரதநாட்டு சிகிச்சை முறைகள் எத்தனை அதிகமாக சான்றுகளை ஆதாரமாகக் கொண்டிருக்கிறதோ, அந்த அளவுக்கு உலகிலே இதன் ஏற்புத்தன்மையும் அதிகரிக்கும். இந்த எண்ணத்தோடு, தில்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையும் கூட ஒரு முயல்வினை மேற்கொண்டு வருகிறது. இங்கே, நமது பாரம்பரிய சிகிச்சை முறைகளைச் சரிபார்க்க என்றே ஆறு ஆண்டுகளுக்கு முன்பாக, ஒருங்கிணைந்த மருத்துவம் மற்றும் ஆய்வு மையம் நிறுவப்பட்டது. இதிலே நவீன, புதுமையான உத்திகள் மற்றும் ஆய்வுமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மையம், முன்பேயே பிரபல சர்வதேச சஞ்சிகைகளில் 20 ஆய்வறிக்கைகளை வெளியிட்டு விட்டது. அமெரிக்க இதயவியல் கல்லூரியின் சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில் syncope என்ற உணர்விழப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, யோகக்கலையால் கிடைக்கக்கூடிய ஆதாயங்கள் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. இதைப் போலவே, நரம்பியல் சஞ்சிகையின் ஒரு ஆய்வறிக்கையில், ஒற்றைத்தலைவலிக்கு யோகக்கலையால் கிடைக்கக்கூடிய நிவாரணம் குறித்தும் பதிவிடப்பட்டிருக்கிறது. இவற்றைத் தவிர, மேலும் பல நோய்கள் தொடர்பாகவும் யோகக்கலை அளிக்கவல்ல ஆதாயங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எடுத்துக்காட்டாக இருதய நோய், மன அழுத்தம், உறக்கமின்மை, மகப்பேறுக் காலங்களில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
நண்பர்களே, சில நாட்கள் முன்பாக, உலக ஆயுர்வேத மாநாட்டிற்காக நான் கோவா சென்றிருந்தேன். இதிலே 40க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் பங்கெடுத்தார்கள், 550க்கும் மேற்பட்ட அறிவியல் ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. பாரதம் உட்பட, உலகெங்கிலுமிருந்து சுமார் 215 நிறுவனங்கள் இங்கே தங்கள் பொருட்களைக் காட்சிப்படுத்தியிருந்தார்கள். நான்கு நாட்கள் வரை நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள், ஆயுர்வேதத்தோடு தொடர்புடைய அனுபவங்களை ரசித்தார்கள். ஆயுர்வேத மாநாட்டிலும் உலகெங்கிலும் இருந்தும் வந்திருந்த ஆயுர்வேத வல்லுநர்கள் முன்பாக, சான்றுகளை ஆதாரமாகக் கொண்ட ஆய்வு தொடர்பான என்னுடைய வேண்டுகோளை நான் முன்வைத்தேன். எந்த வகையில் கொரோனா என்ற பெருந்தொற்றுக் காலத்தில் யோகம் மற்றும் ஆயுர்வேதத்தின் சக்தியை நாமனைவரும் கண்டு வருகிறோமோ, அதிலே இவற்றோடு தொடர்புடைய சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகள் மிகவும் மகத்துவம் நிறைந்தவையாக நிரூபிக்கப்படும். யோகம், ஆயுர்வேதம் போன்ற நம்முடைய பாரம்பரியமான சிகிச்சை முறைகளோடு தொடர்புடைய இத்தகைய முயற்சிகள் பற்றி உங்களிடம் தகவல்கள் ஏதேனும் இருந்தால், அவற்றை சமூக வலைத்தளங்களில் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று வேண்டுகிறேன்.
என் இதயம் நிறை நாட்டுமக்களே, கடந்த சில ஆண்டுகளில் நாம் உடல்நலத் துறையோடு தொடர்புடைய பல பெரிய சவால்களில் வெற்றிகளை அடைந்திருக்கிறோம். நமது மருத்துவ வல்லுநர்கள், அறிவியலார்கள், நாட்டுமக்களின் பேரார்வம் ஆகியவற்றுக்கே இதற்கான முழுப் பாராட்டும் சேரும். பாரதத்திலிருந்து நாம் சின்னம்மை, இளம்பிள்ளை வாதம் மற்றும் கினிப்புழு தொற்று போன்ற நோய்களுக்கு முடிவு கட்டியிருக்கிறோம்.
இன்று, மனதின் குரல் நேயர்களுக்கு நான் மேலும் ஒரு சவால் குறித்துத் தெரிவிக்க விரும்புகிறேன், இதுவும் முடிவு கட்டப்பட வேண்டிய கட்டத்தில் இருக்கிறது. இந்தச் சவால், இந்த நோய் தான் காலா அஜார் எனப்படும் கருங்காய்ச்சல். இந்த நோய்க்கான காரணியான ஒட்டுண்ணியான Sand Fly எனும் மணல் கொசுக்கள் கடிப்பதால் இது பரவுகிறது. யாருக்காவது இந்தக் கருங்காய்ச்சல் பீடித்து விட்டால், அவருக்கு மாதக்கணக்கில் காய்ச்சல் இருக்கிறது, குருதிச்சோகை ஏற்பட்டு, உடல் பலவீனப்பட்டு, உடலின் எடையும் வீழ்ச்சி அடைகிறது. இந்த நோய், குழந்தைகள் தொடங்கி பெரியோர் வரை அனைவரையும் பீடிக்கக்கூடியது. ஆனால், அனைவரின் முயற்சியாலும், காலா அஜார் என்ற கருங்காய்ச்சல் நோய், இப்போது வேகமாக ஒழிக்கப்பட்டு வருகிறது. சில காலம் முன்பு வரை, இந்தக் கருங்காய்ச்சல் 4 மாநிலங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பரவியிருந்தது. ஆனால் இப்போது இந்த நோய், பிஹார், ஜார்க்கண்ட் மாநிலங்களின் 4 மாவட்டங்கள் வரை மட்டுமே குறைக்கப்பட்டு விட்டது. பிஹார்-ஜார்க்கண்ட் மாநில மக்களின் வல்லமையால், அவர்களின் விழிப்புணர்வு காரணமாக, இந்த நான்கு மாவட்டங்களிலிருந்தும் கூட, கருங்காய்ச்சலை அரசின் முயற்சிகளால் முடிவுக்குக் கொண்டு வர முடியும். கருங்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இடங்களைச் சேர்ந்த மக்களிடமும் நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், அவர்கள் இரண்டு விஷயங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்பதே. ஒன்று, மணல் கொசுக்களைக் கட்டுப்படுத்தல், இரண்டாவது, மிக விரைவாக இந்த நோயை அடையாளம் கண்டு, முழுமையான சிகிச்சை மேற்கொள்ளல். கருங்காய்ச்சலுக்கான சிகிச்சை எளிதானது, இதற்காகப் பயன்படும் மருந்துகளும் மிகவும் பயனளிப்பவையாக இருக்கின்றன. நீங்கள் விழிப்போடு இருந்தால் மட்டும் போதுமானது. காய்ச்சல் வந்தால், கவனக்குறைவாக இருக்க வேண்டாம். மணல் கொசுக்களுக்கு முடிவு கட்டக்கூடிய மருந்துகளைத் தெளித்து வாருங்கள். சற்றே சிந்தியுங்கள், நமது தேசம், கருங்காய்ச்சலிலிருந்து விடுபடும் போது, நம்மனைவருக்கும் இது எத்தனை சந்தோஷம் அளிக்கும் வேளையாக இருக்கும்!! அனைவரின் முயற்சிகள் என்ற இதே உணர்வோடு நாம், பாரதத்தை 2025க்குள்ளாக காசநோயிலிருந்து விடுபடச் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். காசநோயிலிருந்து விடுபட்ட பாரதம் என்ற இயக்கத்தினை கடந்த நாட்களில் நாம் தொடங்கிய போது, ஆயிரக்கணக்கானோர், காசநோயால் பீடிக்கப்பட்டவர்களின் உதவிக்காக முன்வந்தார்கள் என்பதை நீங்களே கண்கூடாகப் பார்த்தீர்கள். இவர்கள் காசநோய்க்கு எதிரான தொண்டர்களாக, காசநோயால் பாதிக்கப்பட்டவர்களைப் பராமரித்து வருகிறார்கள், அவர்களுக்கான பொருளாதார உதவிகளை நல்கி வருகிறார்கள். மக்கள் சேவை, மக்கள் பங்களிப்பு ஆகியவற்றின் சக்தி, அனைத்துக் கடினமான இலக்குகளையும் அடைந்தே தீருகிறது.
என் அன்புநிறை நாட்டுமக்களே, நமது பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றுக்கு அன்னை கங்கையோடு இணைபிரியா பந்தம் இருக்கிறது. கங்கை ஜலம் என்பது நமது வாழ்க்கையோட்டத்தின் பிரிக்கமுடியாத அங்கமாக இருந்து வந்திருக்கிறது, நமது சாஸ்திரங்களிலும் என்ன கூறப்பட்டிருக்கிறது என்றால் -
नमामि गंगे तव पाद पंकजं,
सुर असुरै: वन्दित दिव्य रूपम् |
भुक्तिम् च मुक्तिम् च ददासि नित्यम्,
भाव अनुसारेण सदा नराणाम् ||
நமாமி கங்கே தவ பாத பங்கஜம்,
சுர அசுரை: வந்தித திவ்ய ரூபம்.
புக்திம் ச முக்திம் ச ததாசி நித்யம்,
பாவ அனுசாரேண சதா நராணாம்.
அதாவது, ஹே அன்னை கங்கையே!! நீங்கள், உங்களுடைய பக்தர்களுக்கு, அவர்களுடைய உணர்வினுக்கு ஏற்ப இகலோக சுகங்கள், ஆனந்தம் மற்றும் வீடுபேற்றினை அளிக்கிறீர்கள். அனைவரும் உங்களுடைய பவித்திரமான திருவடிகளில் வணங்குகிறார்கள். நானும் உங்களின் புனிதமான திருவடிகளில் என்னுடைய வணக்கங்களை அர்ப்பணம் செய்கிறேன். இவ்வாறாக, பல நூற்றாண்டுகளாகக் கலகலவெனப் பெருகியோடும் கங்கை அன்னையைத் தூய்மையாக வைத்திருப்பது என்பது நம்மனைவரின் மிகப்பெரிய பொறுப்பாகும். இந்த நோக்கத்தோடு தான், எட்டாண்டுகள் முன்பாக நாம், நமாமி கங்கே இயக்கத்தைத் தொடங்கினோம். பாரதத்தின் இந்த முன்னெடுப்பு இன்று உலகெங்கும் போற்றப்படுகிறது என்பது நம்மனைவருக்கும் பெருமிதம் அளிக்கும் விஷயம். ஐக்கிய நாடுகள் அமைப்பு நமாமி கங்கே இயக்கத்தை, சுற்றுச்சூழலை மீட்டெடுக்கும் உலகின் தலைசிறந்த பத்து முன்னெடுப்புக்களில் ஒன்றாக அறிவித்திருக்கிறது. உலகத்தின் 160 இப்படிப்பட்ட முன்னெடுப்புக்களில் நமாமி கங்கே இயக்கத்திற்கு இந்த கௌரவம் கிடைத்திருப்பது என்பது மேலும் மகிழ்ச்சியை அளிக்கும் விஷயம்.
நண்பர்களே, நமாமி கங்கே இயக்கத்திற்கான மிகப்பெரிய ஆற்றல், மக்களின் இடைவிடாத பங்கெடுப்பு மட்டுமே. நமாமி கங்கே இயக்கத்தில், கங்கைக் காவலாளிகள், கங்கைத் தூதர்கள் ஆகியோருக்கும் பெரிய பங்கு உண்டு. இவர்கள் மரம் நடுதல், ஆற்றுத் துறைகளைத் தூய்மைப்படுத்தல், கங்கை ஆரத்தி, தெருமுனை நாடகங்கள், ஓவியங்கள் மற்றும் கவிதைகள் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த இயக்கத்தில் உயிரி பன்முகத்தன்மையிலும் கூட பெருமளவு மேம்பாடு காணப்பட்டு வருகிறது. ஹில்ஸா மீன், கங்கைப்புற டால்ஃபின்கள், பலவகையான முதலைகளின் எண்ணிக்கையிலும் கணிசமான அதிகரிப்பு காணப்படுகிறது. கங்கையின் சூழலமைப்பு சுத்தமாவதால், வாழ்வாதாரத்திற்கான வேறுபல வாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன. இந்த இடத்திலே நான் ஜலஜ் ஆஜீவிகா மாடல், அதாவது ஜலஜ் வாழ்வாதார மாதிரி பற்றியும் தெரிவிக்க விரும்புகிறேன், இது உயிரிப் பன்முகத்தன்மையை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த சுற்றுலாவை ஆதாரமாகக் கொண்ட படகுப் பயணங்கள் 26 இடங்களில் ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றன. நமாமி கங்கே இயக்கத்தின் விரிவாக்கம், அதன் வீச்சு, நதியின் தூய்மைப்படுத்தலைத் தாண்டியும் தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது என்பது தெரிய வருகிறது. எங்கே நமது பேரார்வமும், இடைவிடா முயற்சிகளும் கண்கூடான சான்றுகளாக இருக்கும் வேளையில், அங்கே சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திசையில் உலகினுக்கே ஒரு புதிய பாதையைக் காட்டவல்லதாகவும் இது இருக்கிறது.
எனதருமை நாட்டுமக்களே, நமது மனவுறுதி திடப்படும் போது, பெரியபெரிய சவால்களையும் நம்மால் எளிதாக எதிர்கொள்ள முடியும். சிக்கிமின் தேகூ கிராமத்தின் சங்கே ஷெர்பா அவர்கள் இதற்கான எடுத்துக்காட்டாக விளங்குகிறார். இவர் கடந்த 14 ஆண்டுகளாக 12,000 அடிக்கும் அதிக உயரத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வேலையில் ஈடுபட்டு வருகிறார். சங்கே அவர்கள், கலாச்சார மற்றும் புராண மகத்துவம் வாய்ந்த சோமகோ ஏரியைச் சுத்தம் செய்யும் சவாலை ஏற்றுக் கொண்டார். தனது அயராத முயற்சியால் இவர் இந்த பனிப்பாறை ஏரியின் தோற்றத்தையே மாற்றி விட்டார். 2008ஆம் ஆண்டிலே, சங்கே ஷெர்பா அவர்கள் தூய்மைக்கான இந்த இயக்கத்தைத் தொடங்கிய போது, பல இடர்களை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் குறைவான காலத்திலேயே இவருடைய சீரிய செயல்களோடு, இளைஞர்களும், கிராமவாசிகளும் தங்களை இணைத்துக் கொண்டார்கள், பஞ்சாயத்தும் முழுமையான ஒத்துழைப்பை அளித்தது. இன்று சோமகோ ஏரியை நீங்கள் காணச் சென்றால், அங்கே நாலாபுறங்களிலும் குப்பைத் தொட்டிகளைக் காணலாம். அங்கே சேரும் குப்பைக் கூளங்கள் மறுசுழற்சி செய்ய அனுப்பப்படுகிறது. இங்கே வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு, அவர்கள் தங்கள் குப்பைகளைப் போடுவதற்கு வசதியாக, துணியால் ஆன குப்பைப் பைகள் அளிக்கப்படுகின்றன. இப்போது மிகத் தூய்மையாக ஆகியிருக்கும் இந்த ஏரியைக் காண ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஐந்து இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றார்கள். சோமகோ ஏரியின் பராமரிப்பு என்ற இந்த அற்புதமான முயற்சிக்காக, சங்கே ஷெர்பா அவர்களை பல அமைப்புகள் கௌரவப்படுத்தி இருக்கின்றன. இப்படிப்பட்ட முயற்சிகள் காரணமாக இன்று சிக்கிம், பாரதத்தின் மிகத் தூய்மையான மாநிலமாக அறியப்படுகிறது. சங்கே ஷெர்பா அவர்களுக்கும், அவருடைய நண்பர்களுக்கும், தேசத்தில் இருக்கும் இன்னும் பிற சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்களின் நேரிய முயற்சிகளோடு தொடர்புடைய அனைவருக்கும் என் இதயபூர்வமான பாராட்டுக்களை உரித்தாக்குகிறேன்.
நண்பர்களே, தூய்மை பாரதம் இயக்கம் என்பது இன்று அனைத்து இந்தியர்களின் மனங்களிலும் கலந்து விட்ட ஒன்றாகி இருக்கிறது என்பது எனக்கு உவகை அளிக்கிறது. 2014ஆம் ஆண்டிலே இந்த மக்கள் இயக்கத்தினைத் தொடங்கிய வேளையில், இதைப் புதிய சிகரங்களுக்குக் கொண்டு செல்ல, பல அருமையான முயற்சிகளை மக்கள் மேற்கொண்டார்கள், இந்த முயற்சிகள், சமூகத்தின் உள்ளே மட்டுமல்ல, அரசாங்கத்துக்கு உள்ளேயும் அரங்கேறி வருகின்றது. தொடர்ந்து இந்த முயற்சிகளின் விளைவாக, குப்பைக்கூளங்களை அகற்றியதால், தேவையற்ற பொருட்களை விலக்கியதால், அலுவலகங்களில் கணிசமான இடவசதி ஏற்படுத்தப்பட்டிருப்பதோடு, புதிய இடமும் கிடைத்திருக்கிறது. முன்பு, இடப் பற்றாக்குறை காரணமாக அதிக வாடகை கொடுத்து, அலுவலகங்களைப் பராமரிக்க வேண்டியிருந்தது. இப்போதெல்லாம் இந்த தூய்மைப்படுத்தல் காரணமாக, எந்த அளவுக்கு இடம் கிடைத்திருக்கிறது என்றால், இப்போது ஒரே இடத்தில் அனைத்து அலுவலகங்களும் இடம் பெற்று வருகின்றன. கடந்த நாட்களில், தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் கூட மும்பையில், அஹமதாபாதில், கோல்காத்தாவில், ஷில்லாங்கில் என பல நகரங்களிலும் தனது அலுவலகங்களில் முழுமையான முயற்சி மேற்கொண்டதன் காரணமாக, இன்று அவர்களுக்கு இரண்டு அடுக்குகள், மூன்று அடுக்குகள் என முழுமையாக, புதிய வகையில் இடவசதி செயல்படுத்தக் கிடைத்திருக்கின்றன. தூய்மை காரணமாக, நமது ஆதாரங்களின் உகந்த பயன்பாட்டிற்கான சிறப்பான அனுபவங்களாக இவை திகழ்கின்றன. சமூகத்திலும் கூட, கிராமந்தோறும், நகரம்தோறும், இந்த இயக்கம் தேசத்திற்காக அனைத்து வகைகளிலும் பயனுடையதாக அமைந்து வருகிறது.
எனதருமை நாட்டுமக்களே, நமது நாட்டிலே நமது கலை-கலச்சாரம் தொடர்பான ஒரு புதிய விழிப்புணர்வு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது, ஒரு புதிய விழிப்பு பிறப்பெடுக்கிறது. மனதின் குரலில், நானும், நீங்களும், பல முறை இப்படிப்பட்ட உதாரணங்கள் பற்றி விவாதித்திருக்கிறோம். எப்படி கலை, இலக்கியம், கலாச்சாரம் ஆகியன சமூகத்தின் பொதுவான முதலீடுகளாக இருக்கின்றனவோ, அதே போல இவற்றை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பும் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு வெற்றிகரமான முயற்சி லக்ஷத்தீவுகளில் நடந்து வருகிறது. இங்கே கல்பேனீ தீவிலே ஒரு கிளப் இருக்கிறது, இதன் பெயர் கூமேல் பிரதர்ஸ் சேலஞ்ஜர்ஸ் கிளப். இந்த கிளப்பானது வட்டார கலாச்சாரம் மற்றும் பாரம்பரியக் கலைகளின் பாதுகாப்புக் குறித்து இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது. இங்கே இளைஞர்களுக்கு உள்ளூர் கலையான கோல்களி, பரசைகளி, கிளிப்பாட்டு மற்றும் பாரம்பரிய பாடல்களில் பயிற்சியளிக்கப்படுகிறது. அதாவது பண்டைய மரபு, புதிய தலைமுறையினரின் கைகளில் பாதுகாக்கப்படுகிறது, முன்னேறுகிறது; மேலும் நண்பர்களே, இவை போன்ற முயற்சிகள் தேசத்தில் மட்டுமல்ல, அயல்நாடுகளிலும் நடந்தேறி வருகிறது என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. தற்போது தான் துபாயிலிருந்து ஒரு செய்தி வந்தது, அங்கே களறி கிளப்பானது கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் பதிவேற்படுத்தியிருக்கிறது. துபாயிலே ஒரு கிளப் ஒரு பதிவை ஏற்படுத்துகிறது, இதிலே பாரத நாட்டிற்கு என்ன தொடர்பு இருக்க முடியும் என்று எண்ணமிடுவது இயல்பு தான். உள்ளபடியே, இந்தப் பதிவு, பாரதத்தின் பண்டைய போர்க்கலையான களறிப்பாயட்டோடு தொடர்புடையது. ஒரே நேரத்தில் மிக அதிக அளவில் மக்கள் களறியில் ஈடுபடுவது தான் இந்தப் பதிவு. களறி கிளப்பானது துபாய் காவல்துறையோடு இணைந்து திட்டமிட்டு, ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் தேசிய நாளன்று இதைக் காட்சிப்படுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் நான்கே வயதான சிறுவர்கள் முதல் 60 வயதானவர்கள் வரை, பங்கெடுத்தவர்கள் களறியில் தங்களுடைய திறமையை, மிகச் சிறப்பாகக் காட்சிப்படுத்தினார்கள். பல்வேறு தலைமுறையினர் எப்படி ஒரு பண்டைய பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்கிறார்கள், முழுமையான மனோயோகத்தோடு செயல்படுத்துகிறார்கள் என்பதற்கான அற்புதமான எடுத்துக்காட்டு இது.
நண்பர்களே, மனதின் குரல் நேயர்களுக்கு, கர்நாடகத்தின் கடக் மாவட்டத்தில் வசிக்கும் க்வேம்ஸ்ரீ பற்றித் தெரிவிக்க விரும்புகிறேன். க்வேம்ஸ்ரீ என்பது, தெற்கிலே கர்நாடகத்தின் கலை-கலாச்சாரத்தை மீளுயிர்ப்பிக்கும் குறிக்கோளோடு கடந்த 25 ஆண்டுகளாக இடைவிடாத முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அவர்களுடைய தவமுயற்சி எத்தனை மகத்தானது என்பதை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள்!! முன்பு அவர்கள் ஹோட்டல் நிர்வாகத் தொழிலில் இணைந்திருந்தார்கள். ஆனால் தங்களுடைய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் மீதான அவர்களின் பற்று எத்தனை ஆழமாக இருந்தது என்றால், அவர்கள் இதைத் தங்களுடைய பெருங்குறிக்கோளாக ஆக்கிக் கொண்டார்கள். அவர்கள் கலா சேதனா என்ற பெயருடைய ஒரு அமைப்பை ஏற்படுத்தினார்கள். இந்த அமைப்பு, இன்று கர்நாடகத்தின் மற்றும் உள்நாட்டு-அயல்நாட்டுக் கலைஞர்களின் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்கிறது. இதிலே உள்ளூர் கலை மற்றும் கலாச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் பல நூதனமான செயல்பாடுகளும் இடம் பெறும்.
நண்பர்களே, தங்களுடைய கலை-கலாச்சாரம் தொடர்பாக நாட்டுமக்களின் இந்த உற்சாகம், தங்களுடைய மரபின் மீதான பெருமித உணர்வின் வெளிப்பாடு தான். நமது தேசத்தின் ஒவ்வொரு மூலையிலும் இப்படி எத்தனையோ வண்ணங்கள் நிரம்ப இருக்கின்றன. நாமும் அவற்றை அழகுபடுத்தி-மெருகேற்றிப் பாதுகாக்கும் பணிகளில் இடைவிடாது பணியாற்ற வேண்டும்.
என் உளம்நிறை நாட்டுமக்களே, தேசத்தின் பல இடங்களில் மூங்கிலால் பல அழகான, பயனுள்ள பொருட்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக பழங்குடிகள் பகுதிகளில் மூங்கில் தொடர்பான நேர்த்தியான கைவினை வல்லுநர்களும், திறமையான கலைஞர்களும் இருக்கின்றார்கள். மூங்கிலோடு தொடர்புடைய, ஆங்கிலேயர்கள் காலத்துச் சட்டங்களை தேசம் மாற்றியதிலிருந்து, இதற்கென ஒரு பெரிய சந்தை தயாராகி விட்டது. மஹாராஷ்டிரத்தின் பால்கர் போன்ற பகுதிகளிலும் கூட பழங்குடி சமூகத்தவர்கள் மூங்கிலால் பல அழகான பொருட்களைத் தயாரிக்கிறார்கள். மூங்கிலால் ஆன பெட்டிகள், நாற்காலிகள், தேநீர் மேஜைகள், தட்டுகள், கூடைகள் போன்ற பொருட்கள் மிகவும் பிரபலமாகி வருகின்றன. இது மட்டுமல்ல, இவர்கள் மூங்கில் புல்லால் அழகான ஆடைகள், அழகுபடுத்தும் பொருட்கள் ஆகியவற்றையும் தயாரிக்கிறார்கள். இதனால் பழங்குடியினப் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது, அவர்களின் திறன்களுக்கும் அங்கீகாரம் கிடைத்து வருகிறது.
நண்பர்களே, கர்நாடகத்தின் ஒரு தம்பதி, பாக்குமர நார்களால் உருவாக்கப்பட்ட தனித்தன்மை வாய்ந்த பொருட்களை சர்வதேச சந்தை வரை கொண்டு சேர்த்து வருகிறார்கள். கர்நாடகத்தின் ஷிவமோகாவைச் சேர்ந்த இந்த தம்பதியான சுரேஷ் அவர்களும் அவருடைய மனைவி மைதிலி அவர்களும், பாக்குமர நார் வாயிலாகத் தாம்பாளங்கள், தட்டுகள், கைப்பைகள் தொடங்கி, அழகுப் பொருட்கள் உட்பட, பல பொருட்களைத் தயாரித்து வருகிறார்கள். இந்த நாரினால் தயாரிக்கப்படும் காலணிகள் இன்று அதிக அளவில் விரும்பப்படுவதாக இருக்கிறது. இவர்களுடைய பொருட்கள் இன்று லண்டன் மற்றும் ஐரோப்பாவின் பிற சந்தைகள் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இது தான் நமது இயற்கை ஆதாரங்கள் மற்றும் பாரம்பரிய திறன்களின் அழகு, இவை தான் அனைவரையும் கொள்ளை கொண்டு வருகின்றன. பாரதத்தின் இந்தப் பாரம்பரியமான ஞானத்தில், நீடித்த எதிர்காலத்திற்கான பாதையை உலகம் கண்டு வருகிறது. நாமும் கூட, இந்தப் போக்கில் அதிகப்படியான விழிப்புணர்வோடு இருப்பது அவசியம். மேலும் இத்தகைய சுதேசி மற்றும் உள்ளூர் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும், பிறருக்கும் இவற்றைப் பரிசாக அளிக்க வேண்டும். இதனால் நமது அடையாளமும் பலப்படுவதோடு, உள்ளூர்ப் பொருளாதார அமைப்பும் பலப்படும், பெரிய அளவில் மக்களின் எதிர்காலம் ஒளிமயமானதாகும்.
எனதருமை நாட்டுமக்களே, இப்போது நாம் மெல்லமெல்ல மனதின் குரலின் 100ஆவது பகுதி என்ற இதுவரை காணாத படிநிலையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறோம். நாட்டுமக்களின் பல கடிதங்கள் எனக்குக் கிடைக்கின்றன, இவற்றில் அவர்கள் 100ஆவது பகுதியைப் பற்றி பெரிய எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். 100ஆவது பகுதியில் நாம் என்ன பேசலாம், அதை எப்படி சிறப்பானதாக ஆக்கலாம் என்பது தொடர்பாக நீங்கள் உங்களுடைய ஆலோசனைகளை அனுப்பினால் மிகவும் நன்றாக இருக்கும். அடுத்த முறை நாம் 2023ஆம் ஆண்டிலே சந்திப்போம். உங்கள் அனைவருக்கும் 2023ஆம் ஆண்டிற்கான நல்வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டும், தேசத்தின் பொருட்டு சிறப்பாக அமைய வேண்டும், தேசம் புதிய சிகரங்களைத் தொடர்ந்து தொட்டு வர வேண்டும், நாமனைவரும் இணைந்து உறுதிப்பாடு மேற்கொள்வோம், அதை சாதித்தும் காட்டுவோம். இந்த சமயம், பலரும் விடுமுறை மனோநிலையில் இருப்பார்கள். நீங்கள் திருநாட்களை, இந்தச் சந்தர்ப்பங்களை ஆனந்தமாக செலவிடுங்கள், ஆனால் சற்று எச்சரிக்கையோடும் இருங்கள். உலகின் பல நாடுகளில் கொரோனா பெருகி வருவதை நீங்களும் கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆகையால் நாம் முககவசம் அணிதல், கைகளைக் கழுவி வருதல் போன்ற முன்னெச்சரிக்கைகளின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். நாம் எச்சரிக்கையாக இருந்தால், பாதுகாப்பாக இருந்தால், நமது கொண்டாட்டத்தில் எந்தத் தடையும் ஏற்படாது. உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை பலப்பல நல்வாழ்த்துக்கள். பலப்பல நன்றிகள். வணக்கம்.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலுக்கு மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த நிகழ்ச்சி 95ஆவது பகுதி, நாம் மிக விரைவாக மனதின் குரலின் சதம் நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறோம். இந்த நிகழ்ச்சி என்னைப் பொறுத்த மட்டில் 130 கோடி நாட்டுமக்களையும் இணைக்கின்ற, மேலும் ஒரு கருவியாகும். ஒவ்வொரு பகுதிக்கு முன்பாகவும், கிராமங்கள்-நகரங்களிலிருந்து வந்திருக்கும் ஏராளமான கடிதங்களையும் படிப்பது, சிறுவர்கள் முதல் பெரியோர் வரையிலானவர்களிடமிருந்து வந்திருக்கும் ஒலிவழிச் செய்திகளைக் கேட்பது என்பது ஒரு ஆன்மீக அனுபவமாகவே எனக்கு இருக்கிறது.
நண்பர்களே, இன்றைய நிகழ்ச்சியை ஒரு அருமையான பரிசோடு நான் தொடங்க விரும்புகிறேன். தெலங்கானாவின் ராஜன்னா சிர்சில்லா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நெசவாளிச் சகோதரர் தாம் எல்தீ ஹரிபிரசாத் காரு. இவர் ஜி-20 மாநாட்டிற்கான சின்னத்தைத் தனது கைகளாலேயே நெய்து எனக்கு அனுப்பியிருந்தார். இந்த அருமையான பரிசைக் கண்டவுடன் நான் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனேன். ஹரிபிரசாத் அவர்கள் தனது கலையில் எந்த அளவுக்கு நிபுணத்துவம் பெற்றிருக்கிறார் என்றால், அவரால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட முடிகிறது. ஹரிபிரசாத் அவர்களின் கைகளால் நெய்யப்பட்ட ஜி-20இன் இந்தச் சின்னத்தோடு எனக்கு ஒரு கடிதத்தையும் அனுப்பியிருந்தார். அடுத்த ஆண்டு ஜி-20 உச்சி மாநாட்டிற்குத் தலைமையேற்று நம் நாட்டிலே அதை அரங்கேற்றுவது என்பது நமக்கு மிகவும் பெருமிதம் வாய்ந்த ஒன்று. தேசத்தின் இந்தச் சாதனை தொடர்பான மகிழ்ச்சியில் ஜி-20க்கான இந்தச் சின்னத்தைத் தனது கரங்களாலேயே தயார் செய்திருக்கிறார். அற்புதமான இந்த நெசவுக் கலை இவரது தந்தையாரிடமிருந்து பாரம்பரியமாகக் கிடைத்திருக்கிறது, இன்று முழு ஆர்வத்தோடு இதில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார் இவர்.
நண்பர்களே, சில நாட்கள் முன்பாக ஜி-20ற்கான சின்னம், பாரதத்தின் தலைமை ஆகியவை தொடர்பான இணையத்தளத்தைத் தொடங்கி வைக்கும் பேறு எனக்குக் கிடைத்தது. பொதுப் போட்டி வாயிலாக இந்தச் சின்னம் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஹரிபிரசாத் காரு அனுப்பிய பரிசு எனக்குக் கிடைத்த போது, என் மனதில் ஒரு எண்ணம் உதித்தது. தெலங்கானாவின் ஏதோ ஒரு மாவட்டத்தில் இருக்கும் ஒரு நபரும் கூட, ஜி-20 உச்சி மாநாட்டோடு எந்த அளவுக்குத் தான் தொடர்பு கொண்டிருப்பதாக உணர்கிறார் என்பதைப் பார்க்கும் போது என் மனது இனித்தது. இன்று, இத்தனை பெரிய மாநாட்டிற்குத் தலைமையேற்று நம் நாட்டில் அதை நடத்துவது என்பதை நினைக்கும் போது, தங்கள் நெஞ்சங்கள் பெருமிதத்தால் நிமிர்கின்றன என்று ஹரிபிரசாத் காருவைப் போன்ற பலர் எழுதியிருக்கிறார்கள். புணேயில் வசிக்கும் சுப்பா ராவ் சில்லாரா அவர்கள், கோல்கத்தாவைச் சேர்ந்த துஷார் ஜக்மோஹன் அவர்கள் அனுப்பியிருக்கும் செய்திகளை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். இவர்கள் ஜி-20 மாநாடு தொடர்பான பாரதத்தின் செயலூக்கம் மிக்க முயற்சிகளைப் பாராட்டியிருக்கிறார்கள்.
நண்பர்களே, ஜி-20 மாநாட்டில் பங்கெடுக்கும் நாடுகளின் மக்கட்தொகை உலக மக்கட்தொகையின் மூன்றில் இரண்டு பங்கு, உலக வர்த்தகத்தில் நான்கில் மூன்று பங்கு, உலகின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவீதம் உடையவை. நீங்களே கற்பனை செய்து பாருங்கள் – பாரதம் இப்போதிலிருந்து 3 நாட்கள் கழித்து, அதாவது டிசம்பர் மாதம் 1ஆம் தேதி தொடங்கி, இத்தனை பெரிய நாடுகள் குழுவிற்கு, இத்தனை வல்லமை வாய்ந்த குழுவிற்குத் தலைமை தாங்க இருக்கிறது. பாரதத்திற்கும், பாரதவாசிகள் ஒவ்வொருவருக்கும் இது எத்தனை பெரிய வாய்ப்பு!! இது மேலும் ஏன் விசேஷமானது என்றால், இந்தப் பொறுப்பு, பாரத நாட்டு சுதந்திரத்தின் அமுதகாலத்தில் கிடைத்திருப்பது தான்.
நண்பர்களே, ஜி-20இன் தலைமை நமக்கெல்லாம் ஒரு பெரிய சந்தர்ப்பமாக அமைந்திருக்கிறது. நாம் இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தி, உலக நன்மை மீது முழுகவனத்தையும் செலுத்த வேண்டும். அது உலக நன்மையாகட்டும் அல்லது ஒற்றுமையாகட்டும், சுற்றுச்சூழல் தொடர்பான புரிந்துணர்வாகட்டும் அல்லது நீடித்த வளர்ச்சியாகட்டும், பாரதத்திடம் இவற்றோடு தொடர்புடைய அனைத்துப் பிரச்சனைகளுக்குமான தீர்வு இருக்கிறது. ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்று கொடுக்கப்பட்டிருக்கும் கருப்பொருளிலிருந்து, வசுதைவ குடும்பகம் என்பதன் மீதான நம்முடைய அர்ப்பணிப்பு வெளிப்படுகிறது. நாம் எப்போதுமே கூறிவந்திருப்பது என்னவென்றால்,
ॐ सर्वेषां स्वस्तिर्भवतु ।
सर्वेषां शान्तिर्भवतु ।
सर्वेषां पुर्णंभवतु ।
सर्वेषां मङ्गलंभवतु ।
ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥
ஓம் சர்வேஷாம் ஸ்வஸ்திர் பவது,
சர்வேஷாம் சாந்திர் பவது,
சர்வேஷாம் பூர்ணம் பவது,
சர்வேஷாம் மங்களம் பவது,
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:.
அதாவது, அனைவரும் நன்றாக இருக்கட்டும், அனைவருக்கும் அமைதி கிடைக்கட்டும், அனைவரும் முழுமையடையட்டும், அனைவருக்கும் நலன்கள் பயக்கட்டும். இனிவரும் நாட்களில், தேசத்தின் பல்வேறு பாகங்களில், ஜி-20 மாநாடு தொடர்பான பல நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட இருக்கின்றன. இதன்படி, உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் மக்கள் உங்கள் மாநிலங்களுக்கு வரும் சந்தர்ப்பம் ஏற்படும். நீங்கள் உங்கள் பகுதியின் கலாச்சாரத்தின் பல்வகையான, தனித்துவமான வண்ணங்களை உலகின் பார்வைக்கு எடுத்துக் காட்டுவீர்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. அதே வேளையில், ஜி-20 மாநாட்டிற்கு வருவோர், இன்று என்னவோ ஒரு பிரதிநிதியாக வரலாம் ஆனால், எதிர்காலத்தில் அவரே ஒரு சுற்றுலாப் பயணியாகவும் வரும் வாய்ப்பு இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள். உங்களிடம் நான் மேலும் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். குறிப்பாக என்னுடைய இளைய நண்பர்களிடத்தில்; அது என்னவென்றால், ஹரிபிரசாத் காருவைப் போலவே நீங்களும், ஏதோ ஒரு வகையிலே ஜி-20 மாநாட்டோடு கண்டிப்பாக உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். துணியில் ஜி-20யின் பாரதநாட்டுச் சின்னத்தை மிகவும் நேர்த்தியாக, அழகாக உருவாக்கலாம், அச்சிடலாம். உங்கள் இடங்களில் ஜி-20யோடு தொடர்புடைய விவாதங்கள், உரைகள், போட்டிகள் போன்றவற்றை அரங்கேற்றும் சந்தர்ப்பங்களை அமைத்துக் கொடுங்கள் என்று பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிடம் நான் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் G20.in என்ற இணைத்தளத்தில் நுழைந்தால், உங்கள் விருப்பத்திற்கேற்ப அங்கே பல விஷயங்கள் கிடைக்கும்.
எனதருமை நாட்டுமக்களே, நவம்பர் மாதம் 18ஆம் தேதி ஒட்டுமொத்த உலகின் விண்வெளித்துறை ஒரு புதிய வரலாறு படைக்கப்பட்டதைக் கண்டது. இந்த நாளன்று தான் பாரதம் முதன்முதலாக எப்படிப்பட்ட ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது என்றால், இதன் வடிவமைப்பை பாரதத்தின் தனியார் துறையானது உருவாக்கியிருந்தது. இந்த ராக்கெட்டின் பெயர் விக்ரம்-எஸ். ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து ஏவப்பட்ட உள்நாட்டு விண்வெளி ஸ்டார்ட் அப்பின் இந்த முதல் ராக்கெட், தனது வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை மேற்கொண்ட போது, பாரதநாட்டவர் ஒவ்வொருவரின் சிரமும் பெருமையில் நிமிர்ந்தது.
நண்பர்களே, விக்ரம்-எஸ் ராக்கெட்டின் பல சிறப்பம்சங்கள் உண்டு. பிற ராக்கெட்டுக்களோடு ஒப்பிடுகையில் இது மிகவும் லகுவானது, விலை குறைவானதும் கூட. இதனை மேம்படுத்துவதற்கான செலவு, விண்வெளிச் செயல்பாட்டோடு தொடர்புடைய பிற நாடுகளுக்கு ஆகும் செலவினத்தை விட மிகவும் குறைவானது தான். குறைந்தபட்ச செலவினம்- உலகத்தரம் வாய்ந்த விண்வெளித் தொழில்நுட்பம் என்பது பாரதத்தின் அடையாளமாக ஆகி விட்டது. இந்த ராக்கெட்டைத் தயாரிக்க, மேலும் ஒரு நவீன தொழில்நுட்பம் பயனாகி இருக்கிறது. இந்த ராக்கெட்டின் சில முக்கியமான பாகங்கள் 3டி பிரிண்டிங், அதாவது முப்பரிமாண அச்சிடுதல் வாயிலாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம். உண்மையில், விக்ரம்-எஸ் உடைய ஏவுதல் இலக்கிற்கு கொடுக்கப்பட்டிருக்கும் தொடக்கப் பெயர் மிகவும் பொருத்தமாக அமைந்திருக்கிறது. இது பாரதத்தில் தனியார் துறை விண்வெளிச் செயல்பாடுகளுக்கான ஒரு புதிய யுக உதயத்தின் அடையாளம். இது தேசத்தின் தன்னம்பிக்கை நிறைந்த ஒரு யுகத்தின் தொடக்கம். எந்தக் குழந்தைகள் ஒரு காலத்தில் தங்கள் கைகளால் காகிதத்தால் ஆன விமானங்களை உருவாக்கிப் பறக்க விட்டுக் கொண்டிருந்தார்களோ, இப்போது பாரதத்திலேயே விமானங்களை உருவாக்கும் சந்தர்ப்பம் அவர்களுக்கு வாய்த்திருக்கிறது என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா!! எந்தக் குழந்தைகள் ஒருகாலத்தில் நிலவையும் விண்மீன்களையும் பார்த்து, வானத்தின் உருவங்களை வரைந்து கொண்டிருந்தார்களோ, இப்போது பாரதத்திலேயே ராக்கெட்டை உருவாக்கும் சந்தர்ப்பம் அவர்களுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா!! விண்வெளியை தனியார் துறைக்காகத் திறந்து விட்ட பிறகு, இளைஞர்களின் இந்தக் கனவும் மெய்ப்படத் தொடங்கி இருக்கிறது. ராக்கெட்டை உருவாக்கி வரும் இந்த இளைஞர்கள் என்ன கூறுகிறார்கள் – வானம் எல்லையல்ல, Sky is not the limit!!
நண்பர்களே, பாரதம் விண்வெளித்துறையில் தனது வெற்றியை, தனது அண்டை நாடுகளோடும் பகிர்ந்து கொண்டு வருகிறது. நேற்றுத் தான் பாரதம் ஒரு செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது, இதை பாரதமும் பூட்டான் தேசமும் இணைந்து உருவாக்கியிருக்கின்றன. இந்த செயற்கைக்கோள் மிகவும் சிறப்பான resolution, பிரிதிறன் மிக்க, துல்லியமான படங்களை அனுப்பும்; இது தன்னுடைய இயற்கை ஆதாரங்களை சிறப்பாக நிர்வகிக்க பூட்டான் நாட்டிற்கு உதவிகரமாக இருக்கும். இந்தச் செயற்கைக்கோளின் ஏவுதல், பாரத-பூட்டான் நாடுகளுக்கு இடையேயான பலமான உறவுகளை பிரதிபலிக்கிறது.
நண்பர்களே, கடந்த சில மனதின் குரல் பகுதிகளில் நாம் விண்வெளி, தொழில்நுட்பம், கண்டுபிடிப்புகள் ஆகியன தொடர்பாக அதிகமாக உரையாடி வருகிறோம் என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு; நமது இளைஞர்கள் இந்தத் துறையில் மிகச் சிறப்பாகச் செயலாற்றி வருகிறார்கள் என்பது ஒன்று. அவர்கள் பெரிதாகச் சிந்தித்து, பெரிதாகச் சாதிக்கிறார்கள். இப்போதெல்லாம் சின்னச்சின்ன சாதனைகளால் அவர்கள் நிறைவெய்துவதில்லை. நூதனக் கண்டுபிடிப்பு மற்றும் மதிப்புருவாக்கலின் இந்த சிலிர்க்கவைக்கும் பயணத்தில் அவர்கள் தங்களுடைய பிற இளைய நண்பர்களையும், ஸ்டார்ட் அப்புகளையும் கூட ஊக்கப்படுத்தி வருகிறார்கள் என்பது இரண்டாவது விஷயம்.
நண்பர்களே, நாம் தொழில்நுட்பம் தொடர்பான நூதனக் கண்டுபிடிப்புகள் பற்றிப் பேசும் போது, ட்ரோன்களை நம்மால் எவ்வாறு மறக்க இயலும்? இந்தத் தானியங்கி ஆளில்லாமல் பறக்கும் கருவிகள் துறையிலும் கூட பாரதம் விரைவாக முன்னேறி வருகிறது. சில நாட்கள் முன்பாக, எப்படி ஹிமாச்சல் பிரதேசத்தின் கின்னோரில் இந்த ட்ரோன்கள் வாயிலாக ஆப்பிள்கள் கொண்டு செல்லப்பட்டன என்பதை நாம் பார்த்தோம். கின்னோர் என்பது ஹிமாச்சல் பிரதேசத்தின் மிகத் தொலைவான மாவட்டம், மேலும் இங்கே பருவநிலையும் தீவிரமான பனிப்பொழிவு உடையது. இத்தனை பனிப்பொழிவிலும், கின்னோரின் பகுதிகள், மாநிலத்தின் பிற பாகங்களோடு தொடர்பு கொள்வது கடினமாகி விடுகிறது. இந்த நிலையில் அங்கிருந்து ஆப்பிள் பழத்தைக் கொண்டு வருவது என்பது அதே அளவு கடினங்கள் நிறைந்தது. இப்போது ட்ரோன் தொழில்நுட்பத்தால் ஹிமாச்சலுடைய சுவையான கின்னோரி ஆப்பிள்கள் மக்களைச் சென்றடையத் தொடங்கி விட்டன. இதனால் நமது விவசாய சகோதர சகோதரிகளின் செலவு குறைகிறது, ஆப்பிள்களும் சரியான நேரத்தில் சந்தைகளைச் சென்றடைய முடிகிறது, ஆப்பிள்கள் பாழாவதும் குறைந்திருக்கிறது.
நண்பர்களே, இன்று நமது நாட்டுமக்கள் தங்களுடைய நூதனக் கண்டுபிடிப்புகள் வாயிலாக, முன்பெல்லாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாதனவற்றை எல்லாம் சாத்தியமாக்கி வருகிறார்கள். இதைக் காணும் வேளையில் யாருக்குத் தான் சந்தோஷம் ஏற்படாது? தற்போதைய ஆண்டுகளில் நமது தேசம் சாதனைகளுக்கான நீண்டதொரு பயணத்தை முடிவு செய்தது. பாரத நாட்டுமக்களான நாமனைவரும், குறிப்பாக நமது இளைய தலைமுறையினர் இப்போது தடைப்படுவதாக இல்லை என்பதில் எனக்குப் பூரண நம்பிக்கை இருக்கிறது.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, நான் உங்களிடத்திலே ஒரு சின்ன ஒலிக்குறிப்பை ஒலிக்க இருக்கிறேன்…….
பாடல், வைஷ்ணவ ஜனதோ
நீங்கள் அனைவரும் இந்தப் பாடலை ஏதோ ஒரு சமயத்தில் கண்டிப்பாகக் கேட்டிருப்பீர்கள். இது அண்ணலுக்கு மிகவும் பிடித்தமான பாடல் ஆனால், இதற்கு மெட்டமைத்தவர் கிரேக்க நாட்டவர் என்று நான் சொன்னால் நீங்கள் ஆச்சரியத்தில் அமிழ்ந்து போவீர்கள். இந்தப் பாடலைப் பாடுபவர் கிரேக்க நாட்டுப் பாடகரான கான்ஸ்டாண்டினோஸ் கலாயிட்ஸிஸ், (Konstantinos Kalaitzis). காந்தியடிகளின் 150ஆவது பிறந்த நாள் விழாவின் போது இதை இவர் பாடினார். ஆனால் இன்று நான் இதைப் பற்றிப் பேசுவதற்கு ஒரு காரணம் உண்டு. அவருடைய மனதிலே இந்தியா மற்றும் இந்திய இசை தொடர்பாக விசித்திரமான ஒரு ஆர்வம் உண்டு. பாரதத்திடம் அவருக்கு எந்த அளவுக்கு ஈர்ப்பு இருந்தது என்றால், கடந்த 42 ஆண்டுகளில், இவர் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் பாரதம் வந்திருக்கிறார். இவர் பாரதநாட்டு சங்கீதத்தின் தோற்றம், பல்வேறு இந்திய இசையமைப்புகள், பலவகையான ராகங்கள், தாளங்கள், பாவங்களோடு கூடவே, பல்வேறு பாணிகளைப் பற்றியும் ஆய்வு செய்திருக்கிறார். இவர் பாரதநாட்டு சங்கீதத்தின் பல ஆகச்சிறந்த ஆளுமைகளின் பங்களிப்புகளைப் பற்றியும் ஆய்வு செய்திருக்கிறார், பாரத நாட்டின் பாரம்பரியமான நடனங்களின் பல்வேறு பரிமாணங்களையும் இவர் நெருக்கமாகப் புரிந்து கொண்டிருக்கிறார். பாரதத்தோடு தொடர்புடைய தனது இந்த அனைத்து அனுபவங்களையும் இவர் ஒரு புத்தக வடிவிலே மிக அழகாகக் கோர்த்தளித்திருக்கிறார். இந்திய இசை, Indian Music என்ற பெயர் கொண்ட இந்தப் புத்தகத்தில் கிட்டத்தட்ட 760 படங்கள் இருக்கின்றன. இவற்றிலிருக்கும் பெரும்பாலான படங்களை இவரே படம் பிடித்திருக்கிறார். பிற நாடுகளில் பாரத நாட்டுக் கலாச்சாரம் தொடர்பான இத்தனை உற்சாகமும், ஈர்ப்பும் உள்ளபடியே ஆனந்தத்தை அளிப்பதாக இருக்கிறது.
நண்பர்களே, சில வாரங்கள் முன்பாக மேலும் ஒரு செய்தி காதில் வந்து விழுந்தது, இது நமக்கு பெருமிதம் அளிப்பது. கடந்த 8 ஆண்டுகளாக பாரதத்திலிருந்து இசைக்கருவிகளின் ஏற்றுமதி, மூணரை மடங்கு அதிகரித்திருக்கிறது என்பது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கலாம். மின்னிசைக்கருவிகள் பற்றிப் பேசும் போது இவற்றின் ஏற்றுமதி 60 மடங்கு அதிகரித்திருக்கிறது. பாரதநாட்டுக் கலாச்சாரம் மற்றும் சங்கீதம் மீதான பேரார்வம் உலகெங்கும் அதிகரித்து வருகிறது என்பதையே இது நமக்கு எடுத்துக் காட்டுகிறது. இந்திய இசைக்கருவிகளின் மிகப்பெரிய வாடிக்கையாளர்கள், அமெரிக்கா, ஜெர்மனி, ஃப்ரான்ஸ், ஜப்பான் மற்றும் இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகள் தாம். நமது தேசத்தில் இசை, நடனம் மற்றும் கலைகளில் மிகச் செரிவான மரபு இருக்கிறது என்பது நம்மனைவருக்கும் பெரும் பேறு அளிக்கும் விஷயம்.
நண்பர்களே, மகத்தான ஆளுமையான கவி பர்த்ருஹரியை நாம் அவர் இயற்றிய நீதி சதகம் நூலிலிருந்து நன்கறிவோம். ஒரு சுலோகத்திலே அவர், இசை, இலக்கியம் ஆகியவற்றில் நமக்கு இருக்கும் பிடிப்புத் தான் மனித சமூகத்தின் மெய்யான அடையாளம் என்கிறார். உண்மையில், நமது கலாச்சாரம் இதை மனித நேயத்தை விடவும் உயர்வாக இறையுணர்விடமே இட்டுச் செல்கிறது. வேதங்களில் சாமவேதமே நமது பல்வேறு இசை வடிவங்களின் ஊற்றுக்கண் என்று கூறப்படுகிறது. அன்னை சரஸ்வதியின் வீணையாகட்டும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் குழலாகட்டும், போலேநாத்தின் டமருகமாகட்டும், நமது தேவதேவியரும் கூட இசையிலிருந்து வேறுபட்டவர்கள் அல்ல என்பதையே நமக்குத் தெரிவிக்கிறது. பாரத நாட்டவரான நாம், ஒவ்வொரு விஷயத்திலும் இசைத் தேடலில் ஈடுபடுகிறோம். அது நதியின் கலகல ஒலியாகட்டும், மழையின் நீர்த்துளிகளாகட்டும், புள்ளினங்களின் கீச்சொலியாகட்டும், தென்றலின் மென்னொலியாகட்டும், நமது நாகரீகத்தில் இசையானது அனைத்து இடங்களிலும் பரவி விரவி இருக்கிறது. இந்த இசை உடலுக்கு மட்டும் ஓய்வளிப்பதில்லை, மனதையும் உல்லாசத்தில் ஆழ்த்துகிறது. இசையானது நமது சமூகத்தை இணைக்கிறது. பாங்க்டாவிலும், லாவணியிலும் ஆனந்தமும், உற்சாகமும் கொப்பளித்தால், ரவீந்திர சங்கீதத்தில், நமது ஆன்மா கரைந்து போகிறது. நாடெங்கிலும் இருக்கும் பழங்குடியினத்தவரிடம் பல்வேறு இசைப்பாரம்பரியங்கள் உண்டு. இவை நம்மை ஒருங்கிணைப்பதோடு, இயற்கையோடு இசைவான வாழ்வை வாழ உத்வேகம் அளிக்கின்றன.
நண்பர்களே, இசையின் நமது வகைகள், நமது கலாச்சாரத்தை மட்டும் வளப்படுத்தவில்லை, உலகெங்கிலும் இருக்கும் இசையிலும் கூட தங்களுடைய அழிக்கமுடியா முத்திரையை விட்டுச் சென்றிருக்கின்றன. பாரதநாட்டு இசையின் புகழானது, உலகின் மூலை முடுக்கெங்கும் பரவியிருக்கிறது. நான் உங்களுக்கு ஒரு ஒலிக்குறிப்பை இசைக்கிறேன்.
கயானா நாட்டுப் பாடல்
வீட்டுக்கருகிலே ஏதோ ஒரு கோயிலில் நடக்கும் பஜனை-கீர்த்தனை என்று நீங்கள் இதைக் கருதலாம். ஆனால் இந்தக் குரல் கூட, பாரதத்திலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருக்கும் தென்னமரிக்க நாடான கயானாவிலிருந்து வந்திருக்கிறது. 19ஆம் மற்றும் 20ஆம் நூற்றாண்டில் அதிக எண்ணிக்கையில் நம் நாட்டிலிருந்து மக்கள் கயானாவில் குடியேறினார்கள். அவர்கள் இங்கே பாரதத்தின் பல்வேறு பாரம்பரியங்களையும் தங்களோடு கூடவே கொண்டு வந்தார்கள். எடுத்துக்காட்டாக, நாம் பாரதத்தில் எவ்வாறு ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடுகிறோமோ, கயானாவிலும் கூட ஹோலிப் பண்டிகை வண்ணங்களைக் கொட்டி முழக்குகிறது. எங்கே ஹோலியின் வண்ணங்கள் உள்ளனவோ, அங்கே பக்வா, அதாவது ஃபகுவாவின் இசையும் உண்டு தானே!! கயானாவின் பக்வாவில், பகவான் இராமபிரான், பகவான் கிருஷ்ணனோடு தொடர்புடைய திருமணப் பாடல்களைப் பாடும் ஒரு விசேஷமான பாரம்பரியம் உள்ளது. இந்தப் பாடல்களை சௌதால் என்று அழைக்கிறார்கள். எப்படி நம் நாட்டில் உள்ளதோ அதைப் போன்றே, இவை இந்த மெட்டில், இத்தனை உச்சஸ்தாயியில் பாடப்படுகின்றன. இது மட்டுமல்ல, கயானாவில் சௌதால் போட்டிகளும் உண்டு. இதைப் போலவே பல பாரத நாட்டவர், குறிப்பாக கிழக்கு உத்திர பிரதேசம் மற்றும் பிஹார் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஃபிஜிக்கும் சென்றார்கள். இவர்கள் பாரம்பரியமான பஜனைகள்-கீர்த்தனைகளைப் பாடினார்கள், இவற்றில் முக்கியமான ராமசரிதமானஸின் தோஹாக்கள் இடம் பெற்றிருந்தன. இவர்கள் ஃபிஜியிலும் கூட பஜனைகள்-கீர்த்தனைகளோடு இணைந்த பல மண்டலிகளை உருவாக்கினார்கள். ஃபிஜியில் இராமாயண மண்டலியின் பெயரில் இன்றும் கூட, 2000த்திற்கும் மேற்பட்ட பஜனை-கீர்த்தனை மண்டலிகள் இருக்கின்றன. இவற்றை இன்று ஒவ்வொரு கிராமம்-பகுதிகளிலும் நம்மால் காண முடியும். நான் இங்கே சில எடுத்துக்காட்டுக்களை மட்டுமே உங்களுக்கு அளித்திருக்கிறேன். நீங்கள் உலகெங்கும் பார்த்தால், பாரதநாட்டின் இசைப் பிரியர்களின் இந்தப் பட்டியல் மிகவும் நீண்டது.
என் மனம்நிறை நாட்டுமக்களே, நாமனைவரும், எப்போதும் பெருமிதப்படும் ஒரு விஷயம் என்றால், நமது தேசம் உலகின் மிகத் தொன்மையான பாரம்பரியங்களின் இல்லம் என்பதே ஆகும். ஆகையால், நாம் நமது பாரம்பரியங்களையும், நமது பாரம்பரியமான ஞானத்தையும் பாதுகாத்தளிக்க வேண்டும், அவற்றைப் போற்ற வேண்டும், இயன்றவரை அவற்றை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பது நம்மனைவரின் பொறுப்பாகும். இந்த வகையிலே பாராட்டுதலுக்குரிய ஒரு முன்னெடுப்பினை வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தின் சில நண்பர்கள் செய்து வருகின்றார்கள். இந்த முயற்சி எனக்கு மிகவும் பிடித்திருந்தது, மனதின் குரல் நேயர்களோடு இதைப் பகிர வேண்டும் என்று என் மனம் அவாவியது.
நண்பர்களே, நாகாலாந்தின் நாகா சமூகத்தவரின் வாழ்க்கைமுறை, அவர்களின் கலை-கலாச்சாரம் மற்றும் இசை ஆகியன அனைவர் மனங்களையும் கொள்ளை கொள்ளக்கூடியவை. இவை நமது தேசத்தின் பெருமிதமான பாரம்பரியத்தின் முக்கியமான அங்கமாகும். நாகாலாந்தின் மக்களின் வாழ்க்கையும் அவர்களுடைய திறன்கள்-நீடித்த வாழ்க்கைமுறை ஆகியவற்றிற்காக பெயர் போனவை. இந்தப் பாரம்பரியங்கள் மற்றும் திறன்களைப் பாதுகாத்து, அடுத்த தலைமுறையினர் வரை கொண்டு சேர்க்க, அங்கிருப்போர் ஒரு அமைப்பை உருவாக்கியிருக்கின்றார்கள், இதன் பெயர் லிடி-க்ரோ-யூ ஆகும். கலாச்சாரத்தின் பரிமாணங்களை நாகாக்கள் இழந்துவரும் கட்டத்தில், இவற்றை மீண்டும் உயிர்ப்பிக்கும் பணியை இந்த லிடி-க்ரோ-யூ அமைப்பு செய்து வருகிறது. எடுத்துக்காட்டாக, நாகாக்களின் நாட்டுப்புற இசையானது உள்ளபடியே மிகவும் நிறைவான பாரம்பரியம் கொண்டது. இந்த அமைப்பானது, நாகா மக்களின் இசையினை, தொகுப்புக்களாக்கி வெளியிடத் தொடங்கியது. இதுவரை இப்படிப்பட்ட மூன்று இசைத் தொகுப்புகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இவர்கள் நாட்டுப்புற இசை, நாட்டுப்புற நடனம் ஆகியவற்றோடு தொடர்புடைய கருத்துப் பட்டறைகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இளைஞர்களுக்கும் இவற்றில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இது மட்டுமல்ல, நாகாலாந்தின் பாரம்பரியமான பாணியில் ஆடைகளை உருவாக்கல், தைத்தல்-நெசவு செய்தல் போன்ற பணிகளில் இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. வடகிழக்கில் மூங்கிலிலும் கூட பலவகையான பொருட்கள் வடிவமைக்கப்படுகின்றன. புதிய தலைமுறை இளைஞர்களுக்கு மூங்கில் பொருட்களை உருவாக்குதல் கற்பிக்கப்படுகிறது. இதனால் இந்த இளைஞர்களுக்குத் தங்களுடைய கலாச்சாரத்தில் பிடிப்பு ஏற்படுவதோடு, வேலைவாய்பிற்கான புதிய சந்தர்ப்பங்கள் பிறக்கின்றன. நாகா மக்களின் கலாச்சாரம் குறித்து, அதிக அளவில் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும், இதன் பொருட்டு லிடி-க்ரோ-யூ அமைப்பைச் சார்ந்தவர்கள் முயற்சி செய்து வருகிறார்கள்.
நண்பர்களே, உங்கள் பகுதியிலும் கூட இப்படிப்பட்ட கலாச்சார மரபுகளும், பாரம்பரியங்களும் இருக்கலாம். நீங்களுமே கூட, உங்களுடைய பகுதிகளில் இதைப் போன்ற முயற்சியில் ஈடுபடலாம். இப்படிப்பட்டதொரு அருமையான முயற்சி உங்கள் பகுதியில் நடைபெறுகிறது என்ற செய்தி உங்கள் கவனத்திற்கு வந்தால், அதைப் பற்றிய தகவலைக் கண்டிப்பாக என்னோடு பகிர்ந்து கொள்ளத் தவறாதீர்கள்.
என் மனம் நிறை நாட்டுமக்களே, நம் நாட்டிலே ஒன்று கூறப்படுவதுண்டு - வித்யாதனம் சர்வதனப்பிரதானம். அதாவது, யாரேனும் ஒருவர் கட்டணமில்லாக் கல்வியை அளிக்கிறார் என்றால், அவரே சமூகத்தின் நலனுக்காக மிகப்பெரிய பணியைச் செய்கிறார் என்று பொருள். கல்வித் துறையில் ஏற்றப்படும் ஒரு சிறிய விளக்கால், சமூகத்திற்கே ஒளிகூட்ட முடியும். இன்று நாடெங்கிலும் இப்படிப்பட்ட முயற்சிகள் பல நடந்தேறி வருகின்றன என்பதைக் காணும் போது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. யூபியின் தலைநகரான லக்னௌவிலிருந்து 70-80 கிலோமீட்டர் தொலைவில் ஹர்தோயியைச் சேர்ந்த பான்ஸா என்ற பெயருடைய ஒரு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த ஜதின் லலித் சிங் அவர்களைப் பற்றிய தகவல் எனக்குக் கிடைத்தது. இவர் கல்வியின் ஒளியை ஏற்றி வைப்பதில் ஈடுபட்டு வருகிறார். ஜதின் அவர்கள் ஈராண்டுகள் முன்பாக Community Library and Resource Centre, அதாவது சமூக நூலகம் மற்றும் ஆதாரங்கள் மையம் ஒன்றினைத் தொடங்கினார். அவருடைய இந்த மையத்தில் ஹிந்தி மற்றும் ஆங்கில இலக்கியங்கள், கணிப்பொறி, சட்டம் மற்றும் பல அரசுத் தேர்வுகளுக்கான தயாரிப்புகளோடு தொடர்புடைய 3000த்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. இந்த நூலகத்தில் குழந்தைகளுக்குப் பிடித்தமான விஷயங்களும் முழுமையாக கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கின்றன. இங்கே இருக்கும் சிறுவர்களுக்கான வேடிக்கைப் புத்தகங்களான காமிக்ஸ் புத்தகங்களாகட்டும், கல்விசார் விளையாட்டுப் பொருட்களாகட்டும், குழந்தைகளிடம் பெரும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. குழந்தைகள் விளையாட்டுப் போக்கிலே இங்கே புதியபுதிய விஷயங்களைக் கற்க வருகின்றார்கள். படிப்பு இணையவழியாகவோ, இணையவழி சாராததாகவோ இருந்தாலும், சுமார் 40 தன்னார்வலர்கள் இந்த மையத்தில் மாணவர்களுக்கு வழிகாட்டுவதில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நாள் காலையிலும் கிராமத்தின் சுமார் 80 மாணவர்கள் இந்த நூலகத்தில் படிக்க வருகின்றார்கள்.
நண்பர்களே, ஜார்க்கண்டின் சஞ்ஜய கஷ்யப் அவர்களும் கூட ஏழைக் குழந்தைகளின் கனவுக்குக்குப் புதிய இறக்கைகளை அளித்து வருகிறார். தனது பள்ளிப் பருவத்தில் சஞ்ஜய் அவர்களால் நல்ல புத்தகங்களைப் படிக்க முடியாத நிலையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இந்த நிலையில், புத்தகங்களின் குறைபாடு தனது பகுதியைச் சார்ந்த குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாழாக்கக் கூடாது என்று தீர்மானித்துக் கொண்டார். தனது இந்தக் குறிக்கோளின் காரணமாக, இன்று இவர் ஜார்க்கண்டின் பல மாவட்டங்களின் குழந்தைகளுக்காக நூலக மனிதன், Library Man ஆகியிருக்கிறார். சஞ்ஜய் அவர்கள் தனது வேலைத் தொடங்கிய வேளையில், தனது முதல் நூலகத்தை தனது பிறந்த இடத்தில் ஏற்படுத்தினார். பணிக்கிடையில், எங்கெல்லாம் அவருக்கு இடமாற்றம் ஏற்பட்டதோ, அங்கெல்லாம் ஏழை மற்றும் பழங்குடியினக் குழந்தைகளின் படிப்பிற்காக நூலகத்தைத் திறக்கும் தனது இலக்கில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இப்படிச் செய்து, இவர் ஜார்க்கண்டின் பல மாவட்டங்களின் குழந்தைகளுக்காக நூலகத்தைத் திறந்து விட்டார். நூலகத்தைத் திறப்பதற்கான அவருடைய இலக்கு இன்று ஒரு சமூக இயக்கமாக உருமாறி இருக்கிறது. சஞ்ஜய் அவர்களாகட்டும், ஜதின் அவர்களாகட்டும், இப்படிப்பட்ட பல முயற்சிகளுக்காக சிறப்பான பாராட்டுக்களுக்குச் சொந்தக்காரர்கள்.
எனக்குப் பிடித்தமான நாட்டுமக்களே, மருத்துவ அறிவியல் உலகில், ஆய்வுகளும், நூதனமான கண்டுப்பிடிப்புக்களோடு கூடவே, மிக நவீனமான தொழில்நுட்பமும், கருவிகளின் துணையும் மிகவும் முன்னேறியிருக்கிறது என்றாலும், சில நோய்கள், இன்றுவரை மிகப்பெரிய சவாலாகவே விளங்கி வருகின்றன. இப்படிப்பட்ட ஒரு நோய் தான் muscular dystrophy, தசைநார் தேய்வு. இது முக்கியமாக ஒரு மரபுவழி பரம்பரை நோய், இது எந்த வயதிலும் தாக்கலாம், இதனால் உடலின் தசைகள் பலவீனப்படத் தொடங்குகின்றன. நோயாளியால் தனது சின்னச்சின்ன அன்றாடச் செயல்களைச் செய்வது கூட சிரமமானதாகிறது. இப்படிப்பட்ட நோயாளிகளின் சிகிச்சையும், பராமரிப்பும் செய்ய, பெரிய சேவை உணர்வு அவசியமாகிறது. நம் நாட்டிலே ஹிமாச்சல் பிரதேசத்தின் சோலன் பகுதியில் இப்படிப்பட்ட ஒரு மையம் உள்ளது, இது தசைநார் தேய்மானம் உள்ள நோயாளிகளின் வாழ்வில் ஒரு புதிய ஒளிக்கிரணமாக விளங்குகிறது. இந்த மையத்தின் பெயர் மானவ் மந்திர். இதனை Indian Association of Muscular Dystrophy, அதாவது தசைநார் தேய்வுக்கான இந்தியச் சங்கம் நிர்வகித்து வருகிறது. மானவ் மந்திர், தனது பெயருக்கேற்பவே, மனித சேவையின் ஒரு அற்புதமான எடுத்துக்காட்டு. இங்கே நோயாளிகளுக்காக புறநோயாளி மற்றும் சேர்க்கை தொடர்பான சேவைகள் 3-4 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டுவிட்டன. மானவ் மந்திரில் சுமார் 50 நோயாளிகளுக்குத் தேவையான படுக்கை வசதிகள் உண்டு. இயன்முறைமருத்துவம், மின்முறைமருத்துவம், நீர்முறைசிகிச்சை ஆகியவற்றோடு கூடவே, யோகம்-பிராணாயாமத்தின் துணையோடும் இங்கே நோய்க்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நண்பர்களே, அனைத்துவிதமான உயர்தொழில்நுட்ப வசதிகள் வாயிலாக இந்த மையத்தில் நோயாளிகளின் வாழ்க்கையில் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. தசைநார் தேய்வோடு தொடர்புடைய சவால்கள் பற்றிய விழிப்புணர்வும் போதுமானதாக இல்லை. ஆகையால், இந்த மையமானது, ஹிமாச்சல் பிரதேசத்தில் மட்டுமல்ல, நாடெங்கிலும் நோயாளிகளுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலே முகாம்களுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. மிக முக்கியமான நம்பிக்கை அளிக்கும் விஷயம் என்னவென்றால், இந்த அமைப்பை, இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களே நிர்வாகம் செய்கிறார்கள்; எடுத்துக்காட்டாக சமூக சேவகர், ஊர்மிளா பால்தீ அவர்கள், தசைநார் தேய்விற்கான இந்தியச் சங்கத்தின் தலைவர், சகோதரி சஞ்ஜனா கோயல் அவர்கள், மேலும் இந்தச் சங்கத்தைத் தோற்றுவிப்பதில் முக்கிய பங்காற்றிய விபுல் கோயல் அவர்கள் இந்த அமைப்பில் முக்கிய பங்காற்றி வருகின்றார்கள். மானவ் மந்திரை மருத்துவமனை மற்றும் ஆய்வு மையம் என்ற வகையில் மேம்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் இங்கிருக்கும் நோயாளிகளுக்கு மேலும் சிறப்பான சிகிச்சை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இந்தத் திசையில் முயற்சிகளை மேற்கொண்டுவரும் அனைவருக்கும் என் இதயபூர்வமான பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்; கூடவே தசைநார் தேய்மானத்தை எதிர்கொண்டு வரும் அனைவருக்கும் விரைவில் நலன்கள் ஏற்பட என் நல்விருப்பங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனதருமை நாட்டுமக்களே, இன்று மனதின் குரலில் நாட்டுமக்களின் ஆக்கப்பூர்வமான, சமூகப் பணிகளைப் பற்றி உரையாடினோம், இவை தேசத்தின் ஆற்றல் மற்றும் உற்சாகத்தின் உதாரணங்கள். நாட்டுமக்கள் ஒவ்வொருவரும் இன்று ஏதோ ஒரு துறையில், ஒவ்வொரு நிலையிலும், தேசத்திற்காக வித்தியாசமான ஏதோ ஒரு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இன்றைய உரையாடலில் நாம் என்ன பார்த்தோம்…….. ஜி-20 போன்ற சர்வதேச நிகழ்ச்சியில் நமது ஒரு நெசவாளி நண்பர், எப்படி தனது பொறுப்பினை நிறைவேற்றினார், இதைப் புரிய முன்வந்தார். இதைப் போலவே ஒருவர் சுற்றுச்சூழலுக்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார், ஒருவர் நீருக்கான பணியில் ஈடுபட்டு வருகிறார், பலர் கல்வித் துறையில், சிகிச்சை மற்றும் அறிவியல் தொழில்நுட்பம் தொடங்கி, கலாச்சாரம்-பாரம்பரியங்கள் வரை, அசாதாரணமான செயல்களில் ஈடுபட்டு வருவதைக் கண்டோம். இது ஏன் இவ்வாறு என்றால், நமது குடிமக்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய கடமைகளைப் புரிந்து கொண்டுள்ளார்கள், இப்படிப்பட்ட கடமையுணர்வு எந்த ஒரு தேசத்தின் குடிமக்களிடமும் வந்து விட்டது என்று சொன்னால், அந்த தேசத்தின் பொன்னான எதிர்காலம் தீர்மானிக்கப்பட்டு விடும், தேசத்தின் பொன்னான எதிர்காலம் என்றால் அது நம்மனைவரின் பொன்னான எதிர்காலம் தானே!!
நான், மீண்டும் ஒருமுறை நாட்டுமக்களுக்கும், அவர்களின் முயல்வுகளுக்கும் தலைவணங்குகிறேன். அடுத்த மாதம் நாம் மீண்டும் சந்திப்போம், இப்படிப்பட்ட பல, உற்சாகமளிக்கும் விஷயங்கள் குறித்து கண்டிப்பாக உரையாடுவோம். உங்களுடைய ஆலோசனைகள், கருத்துக்களைக் கண்டிப்பாக அனுப்பி வாருங்கள். உங்கள் அனைவருக்கும் பலப்பல நன்றிகள்.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று தேசத்தின் பல பாகங்களில் சூரிய உபாசனைத் திருநாளான சட் கொண்டாடப்பட்டு வருகின்றது. சட் திருநாளில் பங்கெடுத்துக் கொள்ள இலட்சக்கணக்கான பக்தர்கள் தங்களுடைய கிராமங்கள், தங்கள் இல்லங்கள், தங்களுடைய குடும்பத்தாரிடம் வந்திருக்கின்றார்கள். சட் அன்னை அனைவரின் வளம், அனைவரின் நலம் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பதே என்னுடைய பிரார்த்தனையாகும்.
நண்பர்களே, மாதம் முழுவதும் மின்சாரத்தைப் பயன்படுத்திய பிறகு உங்களுக்கு மின்சார ரசீது வருவதற்கு பதிலாக, மின்சாரத்திற்காக உங்களுக்குப் பணம் வரும் என்ற வகையில் நீங்கள் எப்போதாவது கற்பனை செய்து பார்த்ததுண்டா? சூரியசக்தியானது இதையும் செய்து காட்டியிருக்கிறது. சில நாட்கள் முன்பாக, தேசத்தின் முதல் சூரிய கிராமமான, குஜராத்தைச் சேர்ந்த மோடேரா பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்பீர்கள். மோடேரா சூரிய கிராமத்தின் பெரும்பான்மையான வீடுகள், சூரியசக்தியை உற்பத்தி செய்யத் தொடங்கி விட்டன. இப்போது அங்கே பல வீடுகளில், மாதத்தின் இறுதியில் மின்சாரத்திற்கான ரசீது வருவதில்லை, மாறாக, மின்சாரம் ஏற்படுத்திக் கொடுத்த வருமானத்திற்கான காசோலை தான் வருகின்றது. இதைப் பார்த்த பிறகு, இப்போது தேசத்தின் பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தங்கள் கிராமத்தையும் சூரியசக்தி கிராமமாக மாற்றித் தர வேண்டும் என்று கடிதங்கள் எழுதுகிறார்கள். அதாவது, பாரதத்திலே சூரியசக்தி கிராமங்களின் நிறுவல் என்பது ஒரு மிகப்பெரிய மக்கள் இயக்கமாக மாறக்கூடிய நாள் வெகுதொலைவில் இல்லை, இதனை மோடேரா கிராமவாசிகள் தொடங்கி வைத்திருக்கிறார்கள்.
வாருங்கள், மனதின் குரலின் நேயர்களை, மோடேரா மக்களோடு இணைக்கலாம். நம்மோடு இப்போது தொலைபேசியில் இணைந்திருப்பவர், விபின்பாய் படேல் அவர்கள்.
பிரதமர்: விபின்பாய் வணக்கம்! இப்போது மோடேரா கிராமத்தைப் பற்றி தேசம் முழுவதும், ஒரு மாதிரி என்ற வகையிலே பேசி வருகிறது. ஆனால் உங்களுடைய உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் கேட்கும் போது, நீங்கள் அவர்களுக்கு என்ன கூறுகிறீர்கள், என்ன ஆதாயம் அடைஞ்சீங்க?
விபின் ஜி: சார், ஆளுங்க என்கிட்ட கேட்கும் போது நான் சொல்லுவேன், முதல்ல எல்லா சின்ன அளவுல தான் பில் வரத் தொடங்கிச்சு, பிறகு இப்ப சுத்தமா பூஜ்யம் தான் பில் வருது, சில சமயம் 70 ரூபாய் வரும், ஆனா எங்க கிராமம் முழுசுலயும் பொருளாதார நிலை மேம்பாடு அடைஞ்சிட்டு வருது.
பிரதமர்: அதாவது ஒரு வகையில, முன்ன மின்சார பில் பத்தி இருந்த கவலை இப்ப இல்லை, இல்லையா?
விபின் ஜி: ஆமாம் சார். இது என்னவோ உண்மைங்க. இப்ப எல்லாம் கிராமம் மொத்தத்துக்குமே எந்த டென்ஷனும் கிடையாது. சார் செஞ்சது ரொம்பவே நல்லதுன்னு எல்லாருமே இப்ப சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. ரொம்ப சந்தோசமா இருக்குங்க. எல்லாருக்குமே ரொம்ப பிடிச்சிருக்கு.
பிரதமர்: இப்ப உங்க வீட்டிலேயே மின்சாரத் தொழிற்சாலைக்கு முதலாளி ஆயிட்டீங்க. உங்க வீட்டுக் கூரையிலேயே மின்சாரம் உற்பத்தி ஆயிட்டு இருக்கு,
விபின் ஜி: ஆமாங்கய்யா, சரியாச் சொன்னீங்க.
பிரதமர்: சரி, இந்த மாற்றம் உங்க கிராமத்து மக்கள் கிட்ட என்ன தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கு?
விபின் ஜி: ஐயா, ஒட்டுமொத்த கிராமவாசிகளும் விவசாயம் செய்யறாங்க. முன்ன மின்சாரம் ஒரு சிக்கலா இருந்திச்சு, இப்ப அதிலேர்ந்து விடுதலை கிடைச்சுப் போச்சு. மின்சாரத்துக்கான பில்லையும் கட்ட வேண்டாம், கவலையே இல்லாம இருக்கலாம்யா.
பிரதமர்: அப்படீன்னா, மின்சாரத்துக்கான பில்லும் இல்லை, வசதிகளும் அதிகமாயிருச்சு, சரியா?
விபின் ஜி: ஐயா, சிக்கல் போச்சுங்கறது ஒரு பக்கம்; நீங்க இங்க வந்த போது 3டி காட்சியை தொடங்கி வச்சதுக்குப் பிறகு மோடேரா கிராமமே வேற லெவலுக்கு போயிருச்சுங்கய்யா. பிறகு ஒரு செயலர்னு யாரோ ஒருத்தர் வந்தாருய்யா….
பிரதமர்: சரி, சரி.
விபின் ஜி: அப்புறமா எங்க கிராமமே பிரபலமாயிருச்சுய்யா.
பிரதமர்: ஆமா, ஆமா, ஐ.நா.வோட செக்ரட்டரி ஜெனரல், அவரே இங்க வர விருப்பம் தெரிவிச்சாரு. இத்தனை பெரிய வேலை செஞ்சிருக்கீங்க, நானே அங்க போயி பார்க்க விரும்பறேன்னாரு. சரி விபின் பாய், உங்களுக்கும், உங்க கிராமத்து மக்களுக்கும், என் தரப்பிலிருந்து பலப்பல நல்வாழ்த்துக்கள், உலகம் முழுவதும் உங்க கிட்டேர்ந்து உத்வேகம் அடையுது, இந்த சூரியசக்தி இயக்கம் வீடுதோறும் செயல்படணும்.
விபின் ஜி: ரொம்ப நல்லது ஐயா, இதை எல்லாத்துக்கிட்டயும் சொல்றோங்கய்யா, எல்லாரும் சூரியசக்தியைப் பயன்படுத்துங்க, உங்களுக்குப் பணம் மிச்சமாகும்ன்னு சொல்றோங்கய்யா.
பிரதமர்: ஆமா, மக்களுக்குப் புரிய வையுங்க. உங்களுக்கு பலப்பல நல்வாழ்த்துக்கள், நன்றி சகோதரா.
விபின் ஜி: நன்றிங்கய்யா, உங்களோட பேசினதே எனக்குப் பெரிய வரப்பிரசாதம்யா.
விபின் பாயிக்கு பலப்பல நன்றிகள்.
வாருங்கள், இப்போது மோடேரா கிராமத்தின் வர்ஷா பேனிடம் பேசிப் பார்க்கலாம்.
வர்ஷாபேன்: ஹெலோ வணக்கம் ஐயா!
பிரதமர்: வணக்கம் வர்ஷா பேன். எப்படி இருக்கீங்க?
வர்ஷாபேன்: ரொம்ப நல்லா இருக்கேங்க. நீங்க எப்படி இருக்கீங்க?
பிரதமர்: நான் நல்லா இருக்கேம்மா.
வர்ஷா பேன்: உங்க கூட பேசறது பெரிய பேறுங்கய்யா.
பிரதமர்: நல்லது வர்ஷாபேன்.
வர்ஷாபேன்: சொல்லுங்கய்யா.
பிரதமர்: நீங்க மோடேராவில இருக்கீங்க, ஒரு முன்னாள் இராணுவ வீரரோட குடும்பத்தைச் சேர்ந்தவங்க, சரியா?
வர்ஷாபேன்: நான் இராணுவக் குடும்பத்தைச் சேர்ந்தவ. என் கணவர் முன்னாள் இராணுவ வீரர் ஐயா.
பிரதமர்: முன்ன இந்தியாவுல எந்த இடங்களுக்கு எல்லாம் போயிருக்கீங்க?
வர்ஷாபேன்: முதல்ல இராஜஸ்தான் போயிருக்கேன், பிறகு காந்திநகர், பிறகு கச்ரா கஞ்ஜோர் ஜம்முவுக்கு போயிருக்கேன், அங்க அவர்கூட இருந்தும் இருக்கேன். அங்க ரொம்ப வசதியா இருந்திருக்குங்கய்யா.
பிரதமர்: சரி, இராணுவத் தொடர்புல இருந்ததால ஹிந்தியும் நல்லாவே பேசறீங்களோ?
வர்ஷாபேன்: ஆமா ஆமா. நான் கத்துக்கிட்டேன்யா.
பிரதமர்: சரி, மோடேராவுல இத்தனை பெரிய மாற்றம் வந்திருக்கு, இங்க சூரியசக்திக் கருவிகள் கூரைப்பகுதியில பொருத்தப்பட்டிருக்கு. மொதல்ல மக்கள் பேசிக்கிட்டு இருந்ததைக் கேட்ட போது உங்க மனசுல என்ன தோணிச்சு, என்ன பெரிய மின்சாரம் வந்துடப் போகுது, இது தேவையில்லாத வேலைன்னு பட்டுதா? இப்ப உங்க அனுபவம் என்னவா இருக்கு? இதனால ஆதாயம் ஏற்பட்டிருக்கா?
வர்ஷாபேன்: ரொம்ப ரொம்ப ஆதாயம் ஏற்பட்டிருக்குய்யா. ஐயா, எங்க கிராமத்தில தினம்தினம் உங்களால நாங்க தீபாவளி கொண்டாடிக்கிட்டு இருக்கோம். 24 மணிநேரமும் எங்களுக்கு மின்சாரத்துக்குக் குறைவே இல்லை, மின்சாரப் பயன்பாட்டுக்கான ரசீது சுத்தமா வர்றதே கிடையாது. எங்க வீட்டுல நாங்க எல்லா பொருட்களையும் மின்பொருட்களாத் தான் வச்சிருக்கோம், எல்லாத்தையும் பயன்படுத்திட்டு இருக்கோம்னா அதுக்கு நீங்க தான் காரணம். சுத்தமா பில்லே வராது, எந்தக் கவலையும் இல்லாம பயன்படுத்திக்கலாம்.
பிரதமர்: இதெல்லாம் சரி, நீங்க அதிகமா மின்சாரத்தைப் பயன்படுத்திக்கணும்ங்கற முடிவுல இருக்கீங்க இல்லையா!
வர்ஷாபேன்: ஆமாங்கய்யா. இப்ப எங்களுக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை, நாங்க எந்தக் கவலையும் இல்லாம பயன்படுத்திக்கலாம், வாஷிங் மெஷினாகட்டும், ஏசியாகட்டும், எல்லாத்தையும் பயன்படுத்திக்கலாம்.
பிரதமர்: சரி, கிராமத்தைச் சேர்ந்த மத்தவங்கல்லாம் இதனால சந்தோஷமா இருக்காங்களா?
வர்ஷாபேன்: ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுறாங்கய்யா.
பிரதமர்: ஆமா, உங்க கணவர் அங்க இருக்கற சூரியனார் கோயில்ல வேலை பார்க்கறாரில்லையா? அங்க நடைபெற்ற லைட் ஷோ, இத்தனை பெரிய நிகழ்ச்சிக்குப் பிறகு உலகம் முழுக்கவிருந்தும் விருந்தாளிங்க வர்றாங்க இல்லையா?
வர்ஷாபேன்: உலகம் முழுக்கலேர்ந்தும் அயல்நாட்டுக்காரங்க எப்படி வராம இருப்பாங்க? நீங்க தான் எங்க கிராமத்தை உலகப் பிரசித்தி உடையதா ஆக்கிட்டீங்க இல்ல?
பிரதமர்: அப்படீன்னா உங்க கணவருக்கும் வேலை அதிகமாயிருக்கும், விருந்தாளிங்க அங்க கோயிலைப் பார்க்கவும் வருவாங்க.
வர்ஷாபேன்: அட! வேலை எத்தனை அதிகமானாலும் கவலை இல்லைங்க, இது எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் கிடையாது. நாங்க விரும்பறது எல்லாம் தொடர்ந்து எங்க கிராமத்தை நீங்க முன்னேத்திக்கிட்டே போகணுங்கறது தான்.
பிரதமர்: இப்ப கிராமத்தோட முன்னேற்றத்தை நாம இணைஞ்சு செய்யணும்.
வர்ஷாபேன்: ஆமா ஆமா. ஐயா, நாங்க உங்களுக்குத் துணை நிக்கறோம்.
பிரதமர்: நான் மோடேராவாசிகளை பாராட்டறேன், ஏன்னு சொன்னா, கிராமம் முழுக்க இதை ஏத்துக்கிட்டாங்க, அவங்க வீடுகள்ல மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியுங்கறது மேல அவங்க நம்பிக்கை வச்சாங்க.
வர்ஷாபேன்: 24 மணிநேரம்யா. எங்க வீட்டில 24 மணிநேரம் மின்சாரம் கிடைக்குது, ரொம்ப சந்தோஷமா இருக்கு.
பிரதமர்: சரிம்மா. உங்களுக்கு பலப்பல நல்வாழ்த்துக்கள். மிச்சப்படுற பணத்தை வச்சு பிள்ளைங்க நலனுக்குப் பயனாகற வகையில செலவு செய்யுங்க. அந்தப் பணம் நல்லவிதமா செலவாகணும், அதனால உங்க வாழ்க்கை மேம்படணும். உங்களுக்குப் பலப்பல நல்வாழ்த்துக்கள். மேலும் அனைத்து மோடேராவாசிகளுக்கும் என்னுடைய வணக்கங்கள்!!
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, இதுவரை நான் உங்களிடம் சூரியனைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். இப்போது எனது கவனம் விண்வெளியின்பால் செல்கிறது. ஏனென்றால், நம்முடைய தேசம் சூரியசக்தித் துறையோடு கூடவே, விண்வெளித்துறையிலும் அற்புதங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் இன்று, பாரதத்தின் சாதனைகளைப் பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கியிருக்கிறது. ஆகையால் நான் நினைத்தேன், மனதின் குரலின் நேயர்களிடம் இதைச் சொன்னால் அவர்களுக்கும் சந்தோஷம் ஏற்படுமே என்று இதனைப் பகிர்கிறேன்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, மாணவர்கள் பற்றிய பேச்சு வரும் போது, இளைஞர்கள் பற்றிப் பேசும் போது, தலைமைப்பண்பு பற்றிய பேச்சு எழும் போது, நமது மனதில் ஊறியிருக்கும், பழைய, பல கருத்துக்களும், எண்ணங்களும் இடம் பெற்றிருக்கின்றன. மாணவர்கள் சக்தி என்று பேசும் போது, இதை மாணவர் சங்கத் தேர்தல்களோடு மட்டுமே குறுக்குவதை நாம் பல முறை பார்க்கிறோம். ஆனால் மாணவர் சக்தி என்பதன் வீச்சு மிகப்பெரியது, மிகவும் பரந்துபட்டது. மாணவர்சக்தி என்பது பாரதத்தை சக்தி படைத்ததாக ஆக்கும் ஆதாரம். இன்றைய இளைஞர்கள் தாம், பாரதத்தை 2047ஆம் ஆண்டுக்கு இட்டுச் செல்லக்கூடியவர்கள். சுதந்திர பாரதம் தனது நூற்றாண்டைக் கொண்டாடும் போது, இளைஞர்களின் இந்தச் சக்தி, அவர்களின் உழைப்பு, அவர்களின் வியர்வை, அவர்களின் திறமைகள், பாரதத்தை எந்த உயரத்திற்குக் கொண்டு சேர்க்குமோ, அந்த உறுதிப்பாட்டைத் தான் தேசம் இன்று எடுத்துக் கொண்டு வருகிறது. நமது இன்றைய இளைஞர்கள், எந்த வகையில் செயலாற்றி வருகிறார்களோ, தேசத்தைக் கட்டமைப்பதில் இணைந்திருக்கின்றார்களோ, இதைக் காணும் போது என் மனதில் மிகுந்த நம்பிக்கை பிறக்கிறது. எந்த வகையில் நமது இளைஞர்கள் ஹேக்கத்தான்களில், அதாவது கணினி நிரலாக்கங்களைக் கூட்டாகச் செயல்பட்டுச் சிக்கல்களைத் தீர்க்கிறார்களோ, இரவுமுழுக்க கண்விழித்து, மணிக்கணக்காகப் பணியாற்றுகிறார்களோ, இதையெல்லாம் காணும் போது மிகுந்த உத்வேகம் உதிக்கிறது. கடந்த ஆண்டுகளில் நடந்த கணினி நிரலாக்கங்களைக் கூட்டாகச் செய்வதில் தேசத்தின் இலட்சக்கணக்கான இளைஞர்கள் இணைந்து, பலப்பல சவால்களைத் தீர்த்திருக்கிறார்கள், தேசத்திற்குப் புதிய தீர்வுகளை அளித்திருக்கின்றார்கள்.
நண்பர்களே, நான் செங்கோட்டையிலிருந்து ஜய் அனுசந்தான், அதாவது ஜய் ஆராய்ச்சிகள் என்ற அறைகூவலை விடுத்திருந்தேன் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். இந்த தசாப்தத்தை பாரதத்தின் தசாப்தமாக ஆக்கும் விஷயம் குறித்துப் பேசியிருந்தேன். இதற்கான பொறுப்பை நமது தொழில்நுட்பக் கழகங்கள், ஐ.ஐ.டிக்களின் மாணவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாதம் அக்டோபர் 14-15இலே, அனைத்து 23 இந்திய தொழில்நுட்பக் கழகங்களும் தங்களுடைய கண்டுப்பிடிப்புகள் மற்றும் ஆய்வுச் செயல்திட்டங்களைக் காட்சிப்படுத்த, முதன்முறையாக ஒரு மேடையில் குழுமினார்கள். இந்தக் கூட்டத்தில் நாடெங்கிலுமிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களும், ஆய்வாளர்களும் 75க்கும் மேற்பட்ட மிகச் சிறப்பான செயல்திட்டங்களைக் காட்சிப்படுத்தினார்கள். ஆரோக்கியப் பராமரிப்பு, விவசாயம், ரோபாட்டிக்குகள், குறைக்கடத்திகள், 5ஜி, அதாவது ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை தகவல்தொடர்புகள், இப்படி ஏராளமான ஆய்வுப் பொருள்களில் இந்தச் செயல்திட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்தச் செயல்திட்டங்கள் அனைத்தும் ஒன்றை விட மற்றது சிறப்பானவையாக இருந்தாலும், நான் சில செயல்திட்டங்களை மட்டும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். எடுத்துக்காட்டாக, ஐ.ஐ.டி புவனேஸ்வரின் ஒரு குழு, எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய வெண்டிலேட்டரை பிறந்த சிசுவிற்காக மேம்படுத்தியிருக்கிறார்கள். இது பேட்டரியில் இயங்குகிறது, தொலைவான இடங்களில் கூட இதனைப் பயன்படுத்த இயலும். குறித்த காலத்திற்கு முன்பே பிறந்துவிடும் அந்த சிசுக்களின் உயிரைக் காக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மின்சார வாகனங்களாகட்டும், ஆளில்லாமல் வானில் பறக்கும் கருவிகளின் தொழில்நுட்பமாகட்டும், ஐந்தாம் தலைமுறை அலகற்றையாகட்டும், நமது பல மாணவர்கள், இவற்றோடு தொடர்புடைய புதிய தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வருவதில் ஈடுபட்டு வருகிறார்கள். பல இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் இணைந்து ஒரு பன்மொழி செயல்திட்டத்தின் மீது பணியாற்றி வருகின்றார்கள், இது மாநில மொழிகளைக் கற்கும் வழிமுறையை எளிமைப்படுத்தி வருகின்றது. இந்தச் செயல்திட்டம் புதிய தேசியக் கல்விக் கொள்கை, அதன் இலக்குகளை எட்டவும் மிகவும் பயனுடையதாக இருக்கும். ஐஐடி மதராஸும், ஐஐடி கான்பூரும் இணைந்து பாரதத்தின் சுதேசி ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை சோதனைக் களத்தைத் தயார் செய்திருப்பதில் முதன்மை பங்களிப்பை ஆற்றியிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு மிகுந்த மகிழ்வை அளிக்கலாம். கண்டிப்பாக இது ஒரு பிரமாதமான தொடக்கம் என்பதில் ஐயமில்லை. இனிவரும் காலத்தில் இதைப் போன்ற, மேலும் பல முயற்சிகள் கண்டிப்பாகக் காணக் கிடைக்கும். அதே போல ஐஐடிக்களின் கருத்தூக்கத்தாலே உந்தப்பட்டு, பிற நிறுவனங்களும் ஆய்வு மற்றும் மேம்பாட்டோடு தொடர்புடைய தங்களின் செயல்பாடுகளில் வேகத்தைக் கூட்டுவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
கர்நாடகத்தின் பெங்களூரூவில் வசிக்கும் சுரேஷ் குமாரிடத்திலும் கூட நாம் பல விஷயங்களைக் கற்க முடியும்; இவரிடம் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொடர்பாக மிகப்பெரும் வேகம் இருக்கிறது. 20 ஆண்டுகள் முன்பாக, இவர் நகரத்தின் சஹகார்நகரான புறநகர்ப்பகுதியின் ஒரு காட்டினை மீண்டும் பசுமை நிறைந்த ஒன்றாக ஆக்குவேன் என்ற உறுதியை மேற்கொண்டார். இந்தப் பணி சிரமங்கள் நிறைந்தது தான் என்றாலும், 20 ஆண்டுகள் முன்பே நடப்பட்ட செடிகள் இன்று 40 அடி உயரம் வளர்ந்து விசாலமானவையாக ஆகி விட்டிருக்கின்றன. இப்போது இதன் அழகு அனைவரின் உள்ளங்களையும் கொள்ளை கொள்கிறது. சுரேஷ் குமார் அவர்கள், மேலும் ஒரு அற்புதமான பணியையும் செய்கிறார். இவர் கன்னட மொழி மற்றும் சம்ஸ்கிருதத்திற்கு ஊக்கமளிக்கும் வகையிலே சஹகார்நகரில் ஒரு பேருந்து நிறுத்துமிடத்தை உருவாக்கி இருக்கிறார். இவர் பல்லாயிரம் மக்களுக்குக் கன்னடத்தில் எழுதப்பட்டிருக்கும் செப்புத் தகடுகளையும் பரிசளித்திருக்கிறார். சூழலியல், கலாச்சாரம் – இரண்டும் ஒன்றாக வளர வேண்டும், மலர வேண்டும். இதுவே அவர் எண்ணம்….. எத்தனை அருமையான விஷயம் பார்த்தீர்களா!!
நண்பர்களே, இன்று சூழலுக்கு நேசமான வாழ்கை மற்றும் சூழலுக்கு இணக்கமான பொருள்கள் தொடர்பாக மக்களிடம், முன்பை விட அதிக அளவில் விழிப்புணர்வு தென்படுகிறது. தமிழ்நாட்டின் இப்படிப்பட்ட ஒரு சுவாரசியமான முயல்வு பற்றித் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்த அருமையான முயற்சி, கோயம்புத்தூரின் ஆனைக்கட்டியில் இருக்கும் பழங்குடியினப் பெண்களின் ஒரு குழுவினுடையது. ஏற்றுமதி செய்யப்பட, சூழலுக்கு இணக்கமான மண்ணால் ஆன பத்தாயிரம் தேநீர் கோப்பைகளை இந்தப் பெண்கள் உருவாக்கினார்கள். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த மண்ணாலான தேநீர்க் கோப்பைகளைத் தயாரிக்கும் பொறுப்பினை, இந்தப் பெண்கள் தாங்களே ஏற்படுத்திக் கொண்டார்கள். களிமண் கலவை தொடங்கி, இறுதிக்கட்ட பேக்கேஜிங் வரை அனைத்து வேலைகளையும் இவர்களே செய்தார்கள். இதற்காக இவர்கள் பயிற்சியும் பெற்றார்கள். இந்த அற்புதமான முயற்சியை எத்தனை பாராட்டினாலும் தகும்.
நண்பர்களே, நாளை, அக்டோபர் 31ஆம் தேதி, தேசிய ஒருமைப்பாட்டு தினம், சர்தார் வல்லப்பாய் படேல் அவர்களின் பிறந்த நாள். இந்த நாளன்று தேசத்தின் பல்வேறு இடங்களிலும் ஒற்றுமைக்கான ஓட்டம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஓட்டம், தேசத்தில் ஒற்றுமை இழையைப் பலப்படுத்துகிறது, நமது இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது. சில நாட்கள் முன்னர், இதே போன்ற உணர்வு, நமது தேசிய விளையாட்டுக்களில் காணக் கிடைத்தது. இணையும் இந்தியா, வெல்லும் இந்தியா என்ற கருத்தோடு, தேசிய விளையாட்டுக்கள் ஒற்றுமை தொடர்பான பலமான செய்தியை அளித்த வேளையில், பாரதத்தின் விளையாட்டுக் கலாச்சாரத்திற்கு ஊக்கமளிக்கும் பணியையும் செய்தது. பாரதத்தின் தேசிய விளையாட்டுக்களில் இதுவரையிலான மிகப்பெரிய ஏற்பாடாக இது அமைந்திருந்தது. இதிலே 36 விளையாட்டுக்கள் இடம் பெற்றிருந்தன, இவற்றிலே, 7 புதிய மற்றும் 2 சுதேசிப் போட்டிகளான யோகாசனம் மற்றும் மல்லகம்பமும் இடம் பிடித்தன. தங்கப் பதக்கங்களை வெல்வதில், முதன்மையாக மூன்று அணிகள் இருந்தன – முப்படையினர் அணி, மஹாராஷ்டிரம், ஹரியாணா அணிகள். இந்த விளையாட்டுக்களில் ஆறு தேசிய சாதனைகளும், கிட்டத்தட்ட 60 தேசிய விளையாட்டுக்களின் பதிவுகளும் உருவாக்கப்பட்டன. பதக்கங்களை வென்றவர்கள், புதிய சாதனைகளைப் படைத்தவர்கள், இந்தப் போட்டிகளில் பங்கெடுத்துக் கொண்டவர்கள் என அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் பலப்பல பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன். நான் இந்த விளையாட்டு வீரர்களின் பொன்னான எதிர்காலத்திற்காகவும் என் நல்விருப்பங்களைத் தெரிவிக்கிறேன்.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். கடந்த நாட்களில், நம்மனைவரின் கவனங்களையும் கவர்ந்த ஒன்று என்றால் அது வேங்கை தான். வேங்கைகள் குறித்து உரையாட ஏராளமான செய்திகள் வந்திருக்கின்றன, அது உத்தரப் பிரதேசத்தின் அருண் குமார் குப்தா அவர்களாகட்டும் அல்லது தெலங்கானாவின் என். ராமச்சந்திரன் ரகுராம் அவர்களாகட்டும், குஜராத்தின் ராஜன் அவர்களாகட்டும், அல்லது தில்லியைச் சேர்ந்த சுப்ரத் அவர்களாகட்டும். தேசத்தின் அனைத்து இடங்களிலிருந்தும் மக்கள் பாரதத்தில் வேங்கைகள் திரும்ப வந்தமைக்குத் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். 130 கோடி பாரதநாட்டவர்கள் சந்தோஷப்படுகிறார்கள், பெருமிதம் கொள்கிறார்கள் – இது தான் பாரதம் இயற்கை மீது கொண்டிருக்கும் காதல். இந்த விஷயம் குறித்து அனைவரிடமும் உள்ள ஒரு பொதுவான வினா என்னவென்றால், மோதி அவர்களே, வேங்கையைக் காணும் சந்தர்ப்பம் எங்களுக்கு எப்போது கிடைக்கும் என்பது தான்.
நண்பர்களே, பணிக்குழு ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. இங்கிருக்கும் சூழலுக்கேற்ப, இந்த வேங்கைகள் தங்களை எப்படி தகவமைத்துக் கொள்கின்றன என்பதை இந்தப் பணிக்குழு கண்காணிக்கும். இதனடிப்படையில் சில மாதங்கள் கழித்து ஒரு முடிவு எடுக்கப்படும், அப்போது நீங்கள் வேங்கைகளைப் பார்க்கலாம். ஆனால் அதுவரை உங்கள் அனைவருக்கும் நான் ஒரு பணியை அளிக்கிறேன், இதன் பொருட்டு மைகவ் தளத்திலே, ஒரு போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது, இதிலே மக்கள் சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். வேங்கைகள் தொடர்பாக நடக்கும் இந்த இயக்கத்தின் பெயர் என்னவாக இருக்க வேண்டும்! இந்த வேங்கைகளுக்குப் பெயர் சூட்டுவது குறித்து ஆலோசனைகளை அளிக்கலாம்! இந்தப் பெயர்களும் பாரம்பரியமானவையாக இருந்தால் நன்றாக இருக்கும்; ஏனென்றால், நம்முடைய சமூகம், நமது கலாச்சாரம்-பாரம்பரியம்-மரபோடு தொடர்புடைய எந்த ஒரு விஷயமும், இயல்பாகவே அவற்றை நோக்கி நம்மைக் கவர்கின்றன. இது மட்டுமல்ல, நீங்கள் மேலும் ஒன்றைக் கூற வேண்டும்! நமது அடிப்படைக் கடமைகளிலும் கூட விலங்குகளுக்கு மதிப்பு என்பது குறித்து அழுத்தம் அளிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் இந்தப் போட்டியில் கண்டிப்பாகப் பங்கெடுங்கள் – உங்கள் வெற்றியின் பரிசாக வேங்கையைக் காணக்கூடிய முதல் சந்தர்ப்பம் உங்களுக்கே கூட அமையலாம், யாரறிவார்கள்?! இதுவே நான் உங்களிடம் வைக்கும் விண்ணப்பம்.
எனதருமை நாட்டுமக்களே, இன்று செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி தீவிர மனிதநேயவாதியும், சிந்தனையாளரும், மகத்தான தவப்புதல்வருமான தீன்தயாள் உபாத்யாயா அவர்களின் பிறந்த நாளாகும். எந்த ஒரு நாட்டின் இளைஞரும் தங்களுடைய அடையாளம்-கௌரவம் மீது பெருமிதம் கொள்ளும் போது, அவருக்குத் தங்களுடைய அடிப்படை சித்தாந்தம்-சிந்தனை ஆகியவை மீது ஈர்ப்பு ஏற்படும். தீன்தயாள் அவர்களின் சிந்தனைகளின் மிகப்பெரிய அழகு என்னவென்றால், அவர் தன்னுடைய வாழ்க்கையில், உலகின் மிகப்பெரிய கொந்தளிப்புக்களைச் சந்தித்தவர் என்பது தான். அவர் கருத்தோட்டங்களின் மோதல்களின் சாட்சியாக விளங்கினார். ஆகையால், அவர் ஏகாத்ம மானவ்தர்சனம், அந்த்யோதய் ஆகிய எண்ணங்களை தேசத்தின் முன்பாக வைத்தார், இவை முழுமையாக பாரத நாட்டுத் தன்மை வாய்ந்தவை, பாரத நாட்டுக்குரியவை. தீன்தயாள் அவர்களின் ஏகாத்ம மானவ்தர்சனம் என்பது எப்படிப்பட்ட சிந்தனை என்றால், சித்தாந்தத்தின் அடிப்படையிலான மோதல்கள், தப்பான எண்ணங்கள் ஆகியவற்றிலிருந்து அது விடுதலை அளிக்கிறது. மனிதனை சமமாகக் கருதும் பாரதநாட்டு சித்தாந்தத்தை மீண்டும் உலகின் முன்பாக அவர் இருத்தினார். ஆத்மவத் சர்வபூதேஷு என்று நமது சாஸ்திரங்களிலே கூறப்பட்டிருக்கிறது. அதாவது நாம் அனைத்து உயிர்களையும் ஒன்று போலவே பாவிக்க வேண்டும், நம்மிடம் நடந்து கொள்வது போலவே நடந்து கொள்ள வேண்டும். நவீன, சமூக, அரசியல் பின்னணியிலும் கூட, பாரத நாட்டு சித்தாந்தமானது எப்படி உலகிற்கு வழிகாட்ட முடியும் என்பதை தீன்தயாள் அவர்கள் நமக்குக் கற்பித்தார். ஒரு புறத்தில், சுதந்திரத்திற்குப் பிறகு தேசத்தில் நலிவுற்ற நிலை நிலவிய வேளையில், அதிலிருந்து விடுவித்து, நம்மிடத்திலே விழிப்புணர்வை அவர் தட்டி எழுப்பினார். “நமது கலாச்சாரம் மற்றும் அடையாளம் எப்போது வெளிப்படுகிறதோ, அப்போது தான் நமது சுதந்திரம் பொருள் படைத்த ஒன்றாக ஆகும்” என்று அவர் கூறுவதும் உண்டு. இந்தக் கருத்தின் அடிப்படையிலே தான் அவர் தேசத்தின் வளர்ச்சிக்கான தொலைநோக்கைத் தீர்மானம் செய்தார். தேசம் அடையும் முன்னேற்றத்தின் தாக்கம், கடைசிப் படிநிலையில் இருக்கும் மனிதன் வரை சென்றடைய வேண்டும் என்று, தீன்தயாள் உபாத்யாயா அவர்கள் கூறுவார். சுதந்திரத்தின் அமுதகாலத்தில் தீன்தயாள் அவர்களைப் பற்றி நாம் எந்த அளவுக்கு அறிந்து கொள்கிறோமோ, எந்த அளவுக்கு அவரிடமிருந்து கற்கிறோமோ, அந்த அளவுக்கு தேசத்தை முன்னேற்றிச் செல்ல நம்மனைவருக்கும் உத்வேகம் கிடைக்கும்.
எனதருமை நாட்டுமக்களே, இன்றிலிருந்து மூன்று நாட்களுக்குப் பிறகு, அதாவது செப்டம்பர் மாதம் 28ஆம் தேதியன்று அமுதப் பெருவிழாவின் ஒரு விசேஷமான நாள் வரவிருக்கிறது. இந்த நாளன்று தான் நாம் பாரத அன்னையின் வீரம்நிறைந்த சத்புத்திரனான பகத் சிங்குடைய பிறந்த நாளைக் கொண்டாடுவோம். பகத் சிங் அவர்களின் பிறந்த நாளுக்கு சற்று முன்பாக, அவருக்கு சிரத்தாஞ்ஜலிகளை அர்ப்பணிக்கும் பொருட்டு ஒரு மகத்துவம் வாய்ந்த முடிவு எடுக்கப்பட்டது. சண்டீகட்டின் விமான நிலையத்திற்கு இனி உயிர்த்தியாகி பகத் சிங் அவர்களின் பெயர் சூட்டப்படும். இது மிக நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்திருந்த ஒன்று. சண்டீகட், பஞ்ஜாப், ஹரியாணா, இன்னும் தேசத்தின் அனைத்து மக்களுக்கும் இந்தத் தீர்மானத்தின் பொருட்டு பலப்பல வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.
நண்பர்களே, நாம் நமது சுதந்திரப் போராட்ட வீரர்களிடமிருந்து கருத்தூக்கம் பெற வேண்டும், அவர்களின் இலட்சியங்களைப் பின்பற்றி நடந்து, அவர்கள் கண்ட கனவு பாரதத்தை உருவாக்க வேண்டும், இதுவே, அவர்களுக்கு நாம் செலுத்தும் நினைவாஞ்சலிகளாகும். உயிர்த்தியாகிகளின் நினைவிடங்கள், அவர்களின் பெயரில் இருக்கும் இடங்கள், அமைப்புக்களின் பெயர்கள் ஆகியன, நமது கடமைகள் குறித்து நமக்கு உத்வேகம் அளிக்கின்றன. சில நாட்கள் முன்பாகத் தான் தேசம், கர்த்தவ்ய பத்தில் நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் அவர்களுடைய உருவச்சிலையை நிறுவியதன் வாயிலாகவும் கூட, இதே போன்றதொரு முயற்சியைச் செய்தது; இப்போது உயிர்த்தியாகி பகத் சிங்கின் பெயரை சண்டீகட் விமானநிலையத்திற்குச் சூட்டியதும் கூட இதே திசையில் வைக்கப்பட்ட மேலும் ஒரு முன்னேற்றப்படி. நாம் எந்த வகையில் அமுதப் பெருவிழாவில் சுதந்திரப் போராட்ட வீரர்களோடு தொடர்புடைய சிறப்பான சந்தர்ப்பங்களைக் கொண்டாடி வருகிறோமோ, அதைப் போலவே செப்டம்பர் மாதம் 28ஆம் தேதியின் போதும், ஒவ்வொரு இளைஞரும் புதிய ஒரு முயற்சியில் கண்டிப்பாக ஈடுபட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
மேலும் எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, நீங்கள் அனைவரும் செப்டம்பர் மாதம் 28ஆம் தேதியைக் கொண்டாட வேறு ஒரு காரணமும் உண்டு. அது என்னவென்று தெரியுமா! நான் இரு சொற்களை மட்டுமே கூறுவேன், ஆனால் உங்களுடைய உற்சாகம் நான்கு மடங்கு அதிகரிக்கும் என்பதை நானறிவேன். அந்த இரண்டு சொற்கள் – சர்ஜிகல் ஸ்ட்ரைக், துல்லியத் தாக்குதல். உற்சாகம் அதிகரித்து விட்டது இல்லையா!! நமது தேசத்தின் அமுதப் பெருவிழா என்ற இயக்கம் நடைபெற்று வரும் வேளையிலே, அதை நாம் முழுமையான ஈடுபாட்டோடு கொண்டாடுவோம், நமது சந்தோஷங்களை அனைவரோடும் பகிர்ந்து கொள்வோம்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, வாழ்க்கை என்ற போராட்டங்களின் நெருப்பிலே புடம் போட்ட ஒரு மனிதன் முன்பாக எந்தத் தடையும் ஒரு தடையல்ல என்பார்கள் இல்லையா!! நமது அன்றாட வாழ்க்கையில், நாம் இப்படிப்பட்ட சில நண்பர்களைச் சந்திக்கிறோம், இவர்கள் ஏதோ வகையான ஒரு உடல்ரீதியான சவாலை எதிர்கொண்டு வருகிறார்கள். சிலரால் கேட்க முடியாது என்றால் சிலராலோ வாய்மொழி மூலம் தங்களை வெளிப்படுத்த இயலாது. இப்படிப்பட்ட நண்பர்களுக்கெல்லாம் மிகப்பெரிய துணையாக இருக்கிறது, Sign Language, சைகை மொழி. ஆனால் பாரதநாட்டிலே, பல்லாண்டுகளாக ஒரு பெரிய கடினம் என்னவென்றால், இந்தச் சைகை மொழிக்கான எந்தவொரு தெளிவான சைகைகளும் தீர்மானிக்கப்பட்டதில்லை, தரநிலைகள் இருக்கவில்லை. இந்த இடர்களைக் களையவே 2015ஆம் ஆண்டில், Indian Sign Language Research and Training Center, இந்திய சைகைமொழி ஆய்வு மற்றும் பயிற்சி மையம் நிறுவப்பட்டது. இந்த அமைப்பு இதுவரை, 10,000 சொற்களையும், சைகைகளையும் அடங்கிய ஒரு அகராதியை தயார் செய்திருக்கிறது என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இரண்டு நாட்கள் முன்பாக, அதாவது செப்டம்பர் மாதம் 23ஆம் தேதியன்று சைகை மொழி நாளன்று, பல பள்ளிகளின் பாடத்திட்டங்களிலும் கூட சைகை மொழி ஆரம்பிக்கப்பட்டாகி விட்டது. சைகைமொழியின் தீர்மானிக்கப்பட்ட தரநிலையை நிலைநிறுத்த, தேசியக் கல்விக்கொள்கையிலும் கூட கணிசமான அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. சைகைமொழியின் அகராதி மீதான காணொளியைத் தயாரித்தும் கூட இது தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. யூ ட்யூபிலே பலர், பல அமைப்புகள், இந்திய சைகைமொழியில் தங்களுடைய சேனல்களைத் தொடங்கி இருக்கிறார்கள், அதாவது 7-8 ஆண்டுகள் முன்பாக சைகைமொழி தொடர்பாக தேசத்தில் தொடங்கப்பட்ட இயக்கம், இப்போது இதனால் ஆதாயம் இலட்சக்கணக்கான என்னுடைய மாற்றுத் திறனாளி சகோதர சகோதரிகளுக்கும் கிடைக்கவிருக்கிறது. ஹரியாணாவில் வசிக்கும் பூஜா அவர்கள் இந்திய சைகைமொழியால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருக்கிறார். முன்பெல்லாம் இவர் தனது மகனோடு உரையாட முடியாமல் இருந்தார், ஆனால் 2018இல் சைகைமொழியில் பயிற்சி பெற்ற பிறகு, தாய்-மகன் இருவரின் வாழ்க்கை எளிதாகி விட்டிருக்கிறது. பூஜா அவர்களின் மகனும் கூட சைகைமொழியைக் கற்றுக் கொண்டு தனது பள்ளியில் இவர் கதைகூறும் போட்டியில் பரிசுகளை வென்றிருக்கிறார். இதைப் போலவே டிங்காஜி தனது ஆறு வயது நிரம்பிய மகளுக்கு சைகைமொழிப் படிப்புக்கு ஏற்பாடு செய்தார்; ஆனால் அவருக்கு சைகைமொழி விளங்கவில்லை என்பதால் தனது மகளோடு தகவல் பரிமாறிக் கொள்ள இயலாமல் இருந்தார். இப்போது டிங்காஜியும் கூட சைகை மொழியில் பயிற்சி பெற்று விட்டார், தாய்-மகள் இருவரும் இப்போது பரஸ்பரம் நன்றாகக் கருத்துப் பரிமாற்றங்களைச் செய்து வருகிறார்கள். இந்த முயற்சிகளால் மிகப்பெரிய ஆதாயம் கேரளத்தின் மஞ்சு அவர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது. மஞ்சு அவர்கள், பிறப்பிலிருந்தே கேட்புத் திறன் குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளி என்பதோடு, இவருடைய பெற்றோரின் வாழ்க்கையிலும் இதே நிலைமை நிலவி வந்தது. இந்த நிலையில் சைகைமொழி மட்டுமே குடும்பமனைத்துக்கும் உரையாடலுக்கான ஊடகமாக இருக்கிறது. இப்போது மஞ்சு அவர்கள், சைகைமொழியின் ஆசிரியையாக தானே ஆகும் தீர்மானத்தை மேற்கொண்டிருக்கிறார்.
நண்பர்களே, இதைப் பற்றி நான் மனதின் குரலில் ஏன் உரையாட விரும்புகிறேன் என்றால், இந்திய சைகைமொழி குறித்த விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும் என்பதற்காகத் தான். இதனால் நாம் நமது மாற்றுத் திறனாளி நண்பர்களுக்கு மேலும் அதிக அளவில் உதவிகரமாக இருக்க முடியும். சகோதர சகோதரிகளே, சில நாட்கள் முன்பாக, ப்ரைல் மொழியில் எழுதப்பட்ட ஹேமகோசத்தின் ஒரு பிரதி எனக்குக் கிடைத்தது. ஹேமகோசம் என்பது அசாமிய மொழியின் மிகப் பழமையான அகராதிகளில் ஒன்று. இது 19ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. மொழி வல்லுநரான ஹேமசந்திர பருவா அவர்கள் இதனைத் தொகுத்திருக்கிறார். ஹேமகோசத்தின் ப்ரைல் பதிப்பு, சுமார் 10000 பக்கங்கள் கொண்டதாகும், இது 15 தொகுதிகளுக்கும் அதிகமாக அச்சிடப்பட இருக்கிறது. இதிலே ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சொற்கள் மொழியாக்கம் செய்யப்படவிருக்கின்றன. புரிந்துணர்வுடன் கூடிய இந்த முயற்சியை நான் மிகவும் பாராட்டுகிறேன். இதைப் போன்ற அனைத்து முயற்சிகளும், மாற்றுத் திறனாளி நண்பர்களின் திறன்கள்-திறமைகளை மேம்படுத்துவதில் உதவி புரிகின்றன. இன்று பாரதம் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளிலும் கூட வெற்றிக் கொடியை நாட்டி வருகிறது. நாமனைவரும் பல பந்தயங்களில் இதன் சாட்சிகளாக இருக்கின்றோம். மாற்றுத் திறனாளிகளின் மத்தியில் உடலுறுதி கலாச்சாரத்தை அடிமட்ட அளவில் ஊக்குவிப்பதில் இன்று பலர் ஈடுபட்டிருக்கின்றார்கள். இதனால் மாற்றுத் திறனாளிகளின் தன்னம்பிக்கைக்கு மிகப்பெரிய பலம் கிடைக்கிறது.
என் கனிவான நாட்டுமக்களே, சில நாட்கள் முன்பாக சூரத்தில், அன்வீ என்ற சிறுமியைச் சந்தித்தேன். அன்வீயுடனும், அன்வீயின் யோகக்கலையுடனும் நிகழ்ந்த என்னுடைய சந்திப்பு, எந்த அளவுக்கு மறக்க முடியததாக இருக்கிறது என்றால், இதைப் பற்றி நான் மனதின் குரலின் அனைத்து நேயர்களோடும் பகிர விரும்புகிறேன். நண்பர்களே, அன்வீ, Down Syndrome, மரபணுக் கோளாறால் பிறப்பிலிருந்தே ஏற்படும் மூளை வளர்ச்சிக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர், சிறு பிராயத்திலிருந்தே தீவிரமான இருதய நோயால் இவர் அவதிப்பட்டு வந்திருக்கிறார். வெறும் மூன்று மாதங்கள் நிரம்பிய போதே, இவருக்கு இருதய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. இந்த இடர்ப்பாடுகள் அனைத்தையும் தாண்டி, அன்வீயும் சரி, இவருடைய தாய் தந்தையரும் சரி சற்றும் துவளவில்லை. அன்வீயின் பெற்றோர் இந்த Down Syndrome பற்றிய அனைத்துத் தகவல்களையும் திரட்டினார்கள், எப்படி அன்வீ மற்றவர்களைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறைக்கலாம் என்பதை முடிவு செய்தார்கள். எப்படி குடிநீர்க் குவளையை மேலே உயர்த்திப் பிடிப்பது, காலணிகளின் லேஸ்களை எப்படிக் கட்டுவது, உடைகளின் பொத்தான்களை எப்படிப் பொருத்துவது போன்ற சின்னச்சின்ன விஷயங்களைக் கற்பிக்கத் தொடங்கினார்கள் அன்வீயின் பெற்றோர். எந்தப் பொருளின் இடம் எது, எவை நல்ல பழக்கவழக்கங்கள், இவற்றையெல்லாம் மிகவும் பொறுமையோடு அன்வீக்குக் கற்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். இவற்றைக் கற்றுக் கொள்ள எவ்வாறெல்லாம் குழந்தை அன்வீ ஆர்வம் காட்டினாளோ, தனது திறமையை வெளிப்படுத்தினாளோ, இதனால் அவளின் பெற்றோருக்கும் பெரும் நம்பிக்கை பிறந்தது. அவர்கள் அன்வீயை யோகக்கலையைக் கற்றுக் கொள்ள ஊக்கப்படுத்தினார்கள். எந்த அளவுக்கு அதிக சிரமங்கள் இருந்தன என்றால், அன்வீயால் தனது இரு கால்களிலும் எழுந்து நிற்க முடியாத நிலை; இந்தச் சூழ்நிலையில் யோகக்கலையைக் கற்றுக் கொள்ள அன்வீக்கு ஊக்கமளித்தார்கள் அவளுடைய பெற்றோர். முதன்முறையாக யோகக்கலை கற்பிக்கும் பயிற்றுநரிடம் அன்வீ சென்ற போது, இந்தச் சிறுமியால் எப்படி யோகம் பயில முடியும் என்று அந்தப் பயிற்றுநரும் குழம்பிப் போனார். ஆனால் அன்வீயின் திறமை என்ன என்பதைப் பயிற்றுநரும் அறிந்திருக்கவில்லை. அன்வீ தனது பெற்றோருடன் சேர்ந்து பயிற்சி பெறத் தொடங்கி, இப்போது இவர் யோகக்கலை வல்லுநராகி விட்டார். அன்வீ இன்று நாடெங்கிலும் போட்டிகளில் பங்கெடுத்து வருகிறார், பதக்கங்களைக் குவித்து வருகிறார். யோகக்கலையானது, சிறுமி அன்வீக்கு ஒரு புதிய வாழ்வை அளித்திருக்கிறது. யோகம் பயில்வதன் வாயிலாக சிறுமி அன்வீயின் வாழ்க்கையில் அற்புதமான மாற்றத்தைக் காண முடிந்தது, அவளுக்குத் தன்னம்பிக்கை வியக்கத்தக்க அளவுக்கு அதிகரித்திருக்கிறது என்று அன்வீயின் பெற்றோர் என்னிடத்திலே தெரிவித்தார்கள். யோகக்கலை மூலமாக அன்வீயின் உடல் ஆரோக்கியமும் மேம்பாடு அடைந்திருக்கிறது, மருந்துகளின் தேவையும் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. உள்நாட்டிலும், அயல்நாடுகளிலும் இருக்கும் மனதின் குரலின் நேயர்களால், யோகக்கலையால் அன்வீக்குக் கிடைத்த ஆதாயங்களை அறிவியல்பூவமாக ஆய்வு செய்ய முடிந்தால், அன்வீ ஒரு அருமையான விஷய ஆய்வாக இருப்பார் என்றே எனக்குத் தோன்றுகிறது. யாரெல்லாம் யோகக்கலையின் வல்லமை குறித்து ஆய்வுகள்-சோதனைகளில் ஈடுபட விருப்பம் உள்ளவர்களோ, அப்படிப்பட்ட ஆய்வாளர்கள் முன்வந்து, அன்வீயின் இந்த வெற்றி குறித்து ஆராயட்டும், யோகக்கலையின் வல்லமையை உலகோருக்கு அடையாளம் காட்ட வேண்டும். உலகெங்கிலும் இருக்கும் Down Syndrome கோளாறால் பீடிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட எந்த ஒரு ஆய்வும் மிகவும் உதவிகரமாக இருக்கும். உடல்ரீதியான, மனரீதியான ஆரோக்கியம் விஷயத்தில் யோகக்கலை அதிக உதவிகரமாக இருக்கிறது என்பதை உலகம் இப்போது ஏற்றுக் கொண்டு விட்டது. குறிப்பாக நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சனைகளில் யோகக்கலை மிகவும் உதவிகரமாக இருக்கிறது. யோகக்கலையின் சக்தியைக் கண்டு ஐக்கிய நாடுகள் சபையும் ஜூன் மாதம் 21ஆம் தேதியை சர்வதேச யோகக்கலை தினமாக அறிவித்திருக்கிறது. இப்போது ஐக்கிய நாடுகள் சபை, பாரதத்தின் மேலும் ஒரு முயல்விற்கு அங்கீகாரம் அளித்திருக்கிறது, அதற்கு கௌரவம் அளித்திருக்கிறது. இந்த முயல்வு தான், 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட “India Hypertension Control Initiative”, இந்தியா உயர் ரத்த அழுத்த கட்டுப்பாடு முயற்சி. இதன்படி, இரத்த அழுத்த பிரச்சனைகளில் அவதிப்பட்டு வரும் இலட்சக்கணக்கானோரின் சிகிச்சை, அரசின் சேவை மையங்களில் செய்யப்பட்டு வருகிறது. இந்த முன்முயற்சியானது சர்வதேச அமைப்புக்களின் கவனத்தை ஈர்த்திருப்பது, இதுவரை காணாத ஒன்று. இதில் நம்மனைவரின் உற்சாகத்தையும் அதிகரிக்கும் விஷயம், யாருக்கெல்லாம் இந்த சிகிச்சை அளிக்கப்பட்டதோ, அவர்களில் கிட்டத்தட்ட பாதியளவு பேர்களுடைய இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கிறது. நான் இந்த முனைப்பில் செயலாற்றி வரும் அனைவருக்கும் பலப்பல வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன், இவர்கள் தங்களுடைய கடுமையான முயற்சியால் இதை வெற்றியடையச் செய்திருக்கிறார்கள்.
நண்பர்களே, மனித வாழ்வின் வளர்ச்சிப் பயணம், நீடித்த வகையிலே நீரோடு தொடர்புடையது – அது கடலாகட்டும், நதியாகட்டும், அல்லது குளமாகட்டும். பாரதத்தின் பேறு என்னவென்றால், சுமார் 7500 கிலோமீட்டருக்கும் அதிகமான நீண்ட கடற்கரை காரணமாக, கடலோடு நம்முடைய தொடர்பு இணைபிரியாத ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. இந்தக் கரையோரப் பகுதிகள் பல மாநிலங்கள்-தீவுகளைக் கடந்து செல்கிறது. பாரதத்தின் பல்வேறு சமுதாயங்கள்-பன்முகத்தன்மைகள் நிறைந்த கலாச்சாரம் மலர்ந்து மணம் பரப்புவதை, நம்மால் இங்கே காண முடியும். இது மட்டுமல்ல, இந்தக் கரையோரப் பகுதிகளின் உணவு முறைகள் மக்களை நன்கு கவர்கின்றன. ஆனால் இந்த சுவாரசியமான விஷயங்களோடு கூடவே ஒரு வருத்தமளிக்கும் பக்கமும் உண்டு. நமது இந்த கரையோரப் பகுதிகளின் சுற்றுச்சூழலோடு தொடர்புடைய பல சவால்களை நாம் எதிர்கொண்டு வருகிறோம். சூழலியல் மாற்றம், கடல்சார் சூழலியல் அமைப்புகளுக்கு பெரிய அபாயமாக ஒரு புறம் ஆகி வருகிறது என்றால், நமது கடற்கரைகளில் பரவியிருக்கும் மாசு பிரச்சனையாகி இருக்கிறது. இந்தச் சவால்கள் குறித்துத் தீவிரமான, நிரந்தரமான முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என்பது நமது கடமையாகிறது. இந்த இடத்திலே, தேசத்தின் கரையோரப் பகுதிகளில் சுத்தம் செய்யும் ஒரு முயல்வான ஸ்வச்ச சாகர்-சுரக்ஷித் சாகர், அதாவது தூய்மையான கடல்கள்-பாதுகாப்பான கடல்கள் என்பது குறித்துத் தெரிவிக்க விரும்புகிறேன். ஜூலை 5ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த இயக்கம், கடந்த செப்டம்பர் 17ஆம் தேதியான விஸ்வகர்மா ஜயந்தி தினத்தன்று நிறைவடைந்தது. கரையோரப் பகுதிகளைச் சுத்தம் செய்யும் நாளும் இதே நாளன்று தான் கடைப்பிடிக்கப்படுகிறது. சுதந்திரத்தின் அமுதப்பெருவிழாக்காலத்தில் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், 75 நாட்களுக்கு நடைபெற்றது. தொடங்கிய சில காலத்திலேயே மக்களின் பங்களிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. இந்த முயற்சியின்படி, இரண்டரை மாதங்கள் வரை தூய்மை தொடர்பான பல செயல்திட்டங்களைக் காண முடிந்தது. கோவாவில் ஒரு நீண்ட மனிதச் சங்கிலி ஏற்படுத்தப்பட்டது. காகிநாடாவில் கணபதி திருவுருவங்களை நீரில் கரைக்கும் போது, நெகிழியால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களிடம் எடுத்துக் கூறப்பட்டது. தேசிய சேவைத் திட்டம், என் எஸ் எஸ்ஸின் சுமார் 5000 இளைய நண்பர்கள், 30 டன்களுக்கும் அதிகமான நெகிழிப் பொருட்களை ஒன்று திரட்டினார்கள். ஒடிஷாவில் மூன்று நாட்களுக்குள்ளாக 20,000த்திற்கும் அதிகமான பள்ளி மாணவமாணவியர், தாங்கள் மட்டுமல்ல, தங்களின் குடும்பத்தார் மற்றும் அக்கம்பக்கத்தில் இருப்போருக்கும், தூய்மையான கடல்கள் மற்றும் பாதுகாப்பான கடல்கள் குறித்த விழிப்புணர்வை அளிப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். யாரெல்லாம் இந்த இயக்கத்தில் பங்கெடுத்தார்களோ அவர்கள் அனைவருக்கும் நான் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள், குறிப்பாக நகரத் தலைவர்கள், கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்களோடு நான் உரையாடும் போதெல்லாம், தூய்மை போன்ற முயல்வுகளில் உள்ளூர் சமூகங்களையும், உள்ளூர் அமைப்புக்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும், நூதனமான வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்று கேட்டு வருகிறேன்.
Youth For Parivarthan, மாற்றத்திற்கான இளைஞர்கள் என்ற பெயரிலான பெங்களூரூவில் இருக்கும் ஒரு குழு, கடந்த எட்டு ஆண்டுகளாகவே தூய்மை, இன்னும் பிற சமூக விதிமுறைகள் தொடர்பான பணியில் ஈடுபட்டு வருகிறது. இவர்களின் குறிக்கோள் வாக்கியம் தெளிவானதாக இருக்கிறது - ‘Stop Complaining, Start Acting’, குற்றம் கூறுவதை விடுத்து, செயல்படத் தொடங்குங்கள் என்பதே ஆகும். இந்தக் குழுவானது இதுவரை, நகரெங்கும் 370க்கும் மேற்பட்ட இடங்களை அழகுபடுத்தி இருக்கிறது. ஒவ்வொரு இடத்திலும் மாற்றத்திற்கான இந்த இளைஞர்களுடைய இயக்கம், நூறிலிருந்து நூற்று ஐம்பது குடிமக்களை இணைத்துக் கொண்டது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையன்றும் இந்த நிகழ்ச்சி காலை தொடங்கி, நண்பகல் வரை நடைபெறுகிறது. இந்தச் செயல்பாட்டின் மூலம் குப்பைகள் அகற்றப்படுவதோடு, சுவர்களில் ஓவியங்களையும், வரிவடிவக் கலைப்படைப்புக்களையும் ஏற்படுத்துகிறார்கள். பல இடங்களில் பிரபலமான நபர்களின் வரிவடிவ ஓவியங்களையும் அவர்களின் கருத்தூக்கமளிக்கும் மேற்கோள்களையும் உங்களால் காண முடியும். பெங்களூரூவின் இந்த மாற்றத்திற்கான இளைஞர்களின் முயற்சிகளுக்கு அடுத்தபடியாக, மேரட்டின் கபாட் சே ஜுகாட், அதாவது குப்பையிலிருந்து கோமேதகம் என்ற பொருளிலான இயக்கம் குறித்தும் நான் தெரிவிக்க விரும்புகிறேன். இந்த இயக்கம், சுற்றுச்சூழலின் பாதுகாப்போடு கூடவே, நகரின் அழகுபடுத்தலோடும் தொடர்புடையது. இந்த இயக்கத்தின் சிறப்பான விஷயம் என்னவென்றால், இதிலே இரும்புக் குப்பை, நெகிழிக் கழிவுகள், பழைய டயர்கள், டிரம்கள் போன்ற பயனற்றதாகிவிட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. குறைந்த செலவில் பொதுவிடங்களை எவ்வாறு அழகுபடுத்தலாம் என்பதற்கும் இந்த இயக்கம் ஒரு எடுத்துக்காட்டு. இந்த இயக்கத்தோடு தொடர்புடைய அனைவருக்கும் நான் இதயபூர்வமான பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, இப்போது தேசத்தின் நாலாபுறங்களிலும் கொண்டாட்டங்களின் குதூகலம் நிரம்பியிருக்கிறது. நாளை நவராத்திரியின் முதலாம் நாள். இந்த நாளன்று நாம் தேவியின் முதல் சொரூபமான அன்னை சைலபுத்ரியின் உபாசனையில் ஈடுபடுவோம். அன்றிலிருந்து ஒன்பது நாட்கள் வரையான நியமங்கள்-கட்டுப்பாடுகள் மற்றும் விரதங்கள், பிறகு விஜயதசமி நன்னாள். அதாவது ஒருவகையிலே பார்த்தோமேயானால், நம்பிக்கையும், ஆன்மீகமும் ஊடும் பாவுமாகக் கலந்த எத்தனை ஆழமான செய்தி மறைந்திருக்கிறது என்பதை நமது புனித நாட்களில் நம்மால் காண முடியும். ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாடு வாயிலாக வெற்றி என்பதற்குப் பிறகு வெற்றிக்கான திருநாள், இது தானே வாழ்க்கையில் எந்த ஒரு இலக்கையும் அடையக்கூடியதான மார்க்கமாக இருக்கிறது. தசராவிற்குப் பிறகு தந்தேரஸும், தீபாவளி புனித நாட்களும் வரவிருக்கின்றன.
நண்பர்களே, கடந்த சில ஆண்டுகளாகவே, நமது பண்டிகைகளோடு கூடவே, தேசத்தின் ஒரு புதிய உறுதிப்பாடும் இணைந்திருக்கிறது. உங்களனைவருக்கும் தெரியும் அது என்ன உறுதிப்பாடு என்பது – அது தான் ‘Vocal for Local’ உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்பது. இப்போது நமது பண்டிகைகளின் மகிழ்ச்சியில் நமது உள்ளூர் கைவினைஞர்களுக்கும், கலைஞர்களுக்கும், வியாபாரிகளுக்கும் நாம் இடமளிக்க வேண்டும். வரவிருக்கும் அக்டோபர் மாதம் 2ஆம் தேதியான அண்ணலின் பிறந்த நாளின் போது, நாமனைவரும் இந்த இயக்கத்தை மேலும் வேகப்படுத்துவோம் என்ற உறுதிப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். காதி, கைத்தறி, கைவினைப்பொருள் போன்ற அனைத்துப் பொருட்களோடு கூடவே, உள்ளூர் பொருட்களைக் கண்டிப்பாக வாங்குவோம். நம் மக்கள் அனைவரும் இந்தப் பண்டிகைகளின் அங்கமாக ஆனால் தானே இந்தப் பண்டிகைகளின் மெய்யான ஆனந்தம் ஏற்படும். ஆகையினாலே, உள்ளூர் பொருட்களோடு தொடர்புடையவர்களுக்கு நாம் ஆதரவளிக்கவும் வேண்டும். இதற்கான ஒரு நல்ல வழிமுறை என்றால், பண்டிகைக்காலத்தில், நாம் அளிக்கும் பரிசுப் பொருட்களில் இவை போன்ற பொருட்களை நாம் இடம் பெறச் செய்ய வேண்டும்.
இப்போது இந்த இயக்கம் ஏன் மேலும் சிறப்பான ஒன்று என்றால், சுதந்திரத்தின் அமுதப் பெருவிழா வேளையிலே, நாம் தற்சார்பு பாரதம் என்ற இலக்கை நோக்கிப் பயணிக்கிறோம். இதன் மூலமாகத் தான் சுதந்திர தாகம் படைத்த போராட்ட வீரர்களுக்கு நாம் மெய்யான நினைவாஞ்சலிகளைச் செலுத்த முடியும். ஆகையால் இந்த முறை காதி, கைத்தறி அல்லது கைவினைப்பொருள் போன்ற இந்த வகைப் பொருட்களை வாங்குவதில் நீங்கள் புதிய சாதனை படைக்க வேண்டும் என்று உங்களிடம் விண்ணப்பித்துக் கொள்கிறேன். பண்டிகைகளின் போது பேக்கிங் மற்றும் பேக்கேஜிங் செய்யப் பயன்படுத்தப்படும் நெகிழிப் பைகளின் பயன்பாடு மிகவும் குறைந்து வருவதையும் நம்மால் காண முடிகிறது. புனிதக்காலங்களில் நெகிழிப் பொருட்களால் ஏற்படும் பிரச்சனைக்குக் காரணமான குப்பையும் கூட, நமது திருவிழா உணர்வுக்கு எதிரானது. ஆகையால் நாம் வட்டார அளவிலே உருவாக்கப்படும் நெகிழியல்லாத பைகளையே பயன்படுத்துவோம். நம் பகுதிகளிலே சணல், பருத்தி, வாழை போன்றவற்றால் ஆன எத்தனையோ வகையான பாரம்பரியப் பைகளின் புழக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. நமது திருவிழாக்காலங்களில் இவற்றுக்கு ஊக்கமளிக்க வேண்டும், தூய்மையோடு கூடவே நமது மற்றும் நமது சுழலின் நலன் குறித்தும் கவனம் செலுத்த வேண்டுவது நமது பொறுப்பல்லவா?
எனதருமை நாட்டுமக்களே, நமது சாஸ்திரங்களில் என்ன கூறப்பட்டிருக்கிறதென்றால் – பரஹித் சரிஸ் தரம் நஹீன் பாயி, அதாவது பிறருடைய நலனுக்கு இணையான, பிறருக்கு சேவை புரிதல், உதவி செய்வதற்கு இணையான அறம் பிறிதொன்று இல்லை. கடந்த நாட்களில், தேசத்திலே, சமூக சேவை என்ற இந்த உணர்வின் மேலும் ஒரு காட்சியைக் காண முடிந்தது. காசநோய் பீடித்த ஏதோ ஒரு நோயாளிக்குப் பொறுப்பேற்று, அவர்களுக்கு ஊட்டச்சத்து நிரம்பிய உணவை அளிக்கும் சவாலை நாட்டில் சிலர் மேற்கொண்டு வருவதை நீங்களே கூட கவனித்திருக்கலாம். உள்ளபடியே, இது காசநோயிலிருந்து விடுவிக்கப்பட்ட பாரதம் இயக்கத்தின் ஒரு அங்கமாகும்; இதனடிப்படையில் இருப்பது மக்களின் பங்களிப்பு மற்றும் கடமையுணர்வு. சரியான ஊட்டச்சத்து மூலமாக, சரியான நேரத்தில் கிடைக்கப் பெறும் மருந்துகளால், காசநோய்க்கான சிகிச்சை சாத்தியப்படும். மக்களின் பங்களிப்பு வாயிலாக, இந்த ஆற்றல் துணையோடு, 2025ஆம் ஆண்டுக்குள்ளாக பாரதம் கண்டிப்பாக காசநோயிலிருந்து விடுதலை அடைந்து விடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
நண்பர்களே, மத்திய அரசின் ஆளுகைக்குட்பட்ட தாத்ரா-நகர் ஹவேலி மற்றும் தமன்-தீவோடு தொடர்புடைய ஒரு எடுத்துக்காட்டு என் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது, இது மனதைத் தொடும் வகையில் அமைந்திருக்கிறது. இந்தப் பகுதியைச் சேர்ந்த பழங்குடியினப் பகுதியில் வசிக்கும் ஜினு ராவதீயா அவர்கள் எழுதியிருக்கிறார், இங்கே நடைபெறும் கிராமங்களைத் தத்து எடுக்கும் திட்டத்தின்படி, மருத்துவக் கல்லூரியின் மாணவர்கள் 50 கிராமங்களைத் தத்தெடுத்திருக்கின்றார்கள். இதிலே ஜினு அவர்களின் கிராமமும் அடங்கும். மருத்துவப்படிப்பு மாணவர்கள், நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள கிராமத்தவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கிறார்கள், நோய்வாய்ப்படும் போது உதவுகிறார்கள், மேலும், அரசு நலத்திட்டங்கள் குறித்தும் தகவல்களை அளிக்கின்றார்கள். பரோபகார உணர்வானது, கிராமங்களில் வசிப்போரின் வாழ்க்கையில் புதிய சந்தோஷங்களைக் கொண்டு வந்திருக்கிறது. இதன் பொருட்டு, மருத்துவக் கல்லூரியின் அனைத்து மாணவர்களுக்கும் நான் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன்.
நண்பர்களே, மனதின் குரலில் புதியபுதிய விஷயங்கள் பற்றிய பரிமாற்றம் நடந்து வருகிறது. பலமுறை இந்த நிகழ்ச்சி வாயிலாக சில பழைமையான விஷயங்களின் ஆழங்களைக் காணும் வாய்ப்பும் நமக்குக் கிட்டியிருக்கிறது. கடந்த மாதம் மனதின் குரலில் சிறுதானியங்கள், 2023ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாகக் கொண்டாடுவதோடு தொடர்புடைய விஷயங்கள் குறித்துப் பேசியிருந்தோம். இந்த விஷயம் தொடர்பாக மக்களிடம் பெரும் உற்சாகம் காணப்படுகிறது. எப்படி சிறுதானியங்களைத் தங்கள் அன்றாட உணவின் அங்கமாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தொடர்பாக எனக்கு ஏராளமான கடிதங்கள் வந்திருக்கின்றன. சிலர் சிறுதானியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பாரம்பரியமான உணவுகளைப் பற்றியும் கூறியிருக்கிறார்கள். இது பெரிய ஒரு மாற்றத்திற்கான அறிகுறி. மக்களின் இந்த உற்சாகத்தைக் காணும் போது, நாம் இணைந்து சிறுதானியங்கள் தொடர்பான ஒரு மின்னணுப் புத்தகத்தினைத் தயாரிக்க வேண்டும், அதிலே சிறுதானியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தங்கள் குறித்தும், தங்களுடைய அனுபவங்களையும் அதிலே மக்கள் பகிர்வார்கள், இதன் மூலம் சர்வதேச சிறுதானிய ஆண்டு தொடங்கும் முன்பாகவே நம்மிடத்திலே சிறுதானியங்கள் குறித்த ஒரு பொதுக் களஞ்சியமும் தயாராகி விடும், இதைப் பிறகு மைகவ் தளத்திலே வெளியிடலாம் என்ற எண்ணம் எனக்கு ஏற்படுகிறது.
நண்பர்களே, மனதின் குரலில் இந்த முறை இவ்வளவே என்றாலும், விடைபெறும் முன்பாக, தேசிய விளையாட்டுப் போட்டிகள் குறித்தும் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். செப்டம்பர் 29ஆம் தேதியன்று குஜராத்திலே தேசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இது பெரிய, சிறப்பான சந்தர்ப்பம்; ஏனென்றால், தேசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் பல ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிறது. கோவிட் பெருந்தொற்று காரணமாக கடந்த முறையின் ஏற்பாடுகளை ரத்து செய்ய வேண்டியிருந்தது. இந்த விளையாட்டுப் போட்டியில் பங்கெடுக்கும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் என்னுடைய பலப்பல நல்வாழ்த்துக்கள். இந்த நாளன்று விளையாட்டு வீரர்களின் உற்சாகத்தை அதிகரிக்கும் விதமாக, நான் அவர்கள் மத்தியில் இருப்பேன். நீங்கள் அனைவரும் கூட தேசிய விளையாட்டுப் போட்டிகளைக் கண்டிப்பாக கவனியுங்கள், உங்கள் விளையாட்டு வீரர்களுக்கு நம்பிக்கையூட்டுங்கள். இப்போது நான் உங்களிடமிருந்து விடை பெறுகிறேன். அடுத்த மாதம் மனதின் குரலில் புதிய விஷயங்களோடு உங்களை மீண்டும் வந்து சந்திக்கிறேன். நன்றிகள், வணக்கம்.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். ஆகஸ்ட் மாதமான இந்த மாதத்தில், உங்கள் அனைவருடைய கடிதங்கள், செய்திகள், தபால் அட்டைகள் ஆகியன என்னுடைய அலுவலகத்தை மூவண்ணமயமாக்கி விட்டன. மூவண்ணம் இல்லாத அல்லது மூவண்ணமும் சுதந்திரமும் இடம்பெறாத ஒரு கடிதமே வரவில்லை என்று கூட சொல்லலாம். பிள்ளைகள், இளைஞர்கள் என அனைவரும் அமுதப் பெருவிழா பற்றிய அழகான ஓவியங்கள், கைவினைத்திறன் பயன்படுத்தி அனுப்பியிருக்கிறார்கள். சுதந்திரத்தின் இந்த மாதங்களில் நமது தேசமெங்கும், ஒவ்வொரு நகரிலும், ஒவ்வொரு கிராமத்திலும், அமுத காலத்தின் அமுதப்பெருக்கு பெருக்கெடுத்துக் கொண்டிருக்கிறது. அமுதப் பெருவிழா மற்றும் சுதந்திரத் திருநாள் என்ற சிறப்பான சந்தர்ப்பத்தில் நாம் தேசத்தின் சமூக சக்தியை தரிசனம் செய்தோம். ஒரு விழிப்பு நிலையை அனுபவிக்க முடிந்தது. இத்தனை பெரிய தேசம், இத்தனை பன்முகத்தன்மை; ஆனால் மூவண்ணக் கொடியைப் பறக்க விடுதல் எனும் போது, ஒவ்வொருவரும் ஒரே உணர்வோடு அதைப் பறக்க விடுவதைப் பார்க்க முடிந்தது. முவண்ணத்தின் பெருமையின் முதல் காவலாளியாக ஆகி, மக்கள் தாங்களே முன்வந்தார்கள். அதே போல தூய்மை இயக்கத்தின் போதும், தடுப்பூசி இயக்கத்தின் போதும் தேசத்தின் உணர்வையும் ஊக்கத்தையும் நம்மால் காண முடிந்தது. அமுதப் பெருவிழாவிலே மீண்டும் தேசபக்தியின் அதே போன்ற உணர்வை நம்மால் காண முடிகிறது. நமது இராணுவ வீரர்கள், உயரமான சிகரங்களிலே, தேசத்தின் எல்லைகளிலே, கடல்களுக்கு நடுவினிலே மூவண்ணக் கொடியைப் பறக்க விட்டார்கள். மூவண்ண இயக்கத்தின் பொருட்டு, பல்வேறு நூதனமான கருத்துக்களும் வெளியிடப்பட்டன. எடுத்துக்காட்டாக இளைஞரான கிருஷ்னீல் அனில் அவர்கள். அனில் அவர்கள் ஒரு புதிர் விளையாட்டுக் கலைஞர், இவர் சாதனை சமயத்தில் அழகான மூவண்ண மொசைக் கலையை வடிவமைத்தார். கர்நாடகத்தின் கோலாரிலே, மக்கள் 630 அடி உயரமும், 205 அடி அகலமும் கொண்ட மூவண்ணக் கொடியைப் பறக்கவிட்டு, பிரத்யேகமான காட்சியை அளித்தார்கள். அஸாமில் அரசு அலுவலர்கள் திகாலிபுகுரீ போர் நினைவுச் சின்னத்தில் மூவண்ணக் கொடியைப் பறக்க விட, தங்களுடைய கரங்களாலேயே 20 அடி மூவண்ணக் கொடியை உருவாக்கினார்கள். இதைப் போலவே மனிதச் சங்கிலி வாயிலாக இந்தியாவின் வரைபடத்தை இந்தோரில் மக்கள் ஏற்படுத்தினார்கள். சண்டீகரில், இளைஞர்கள், மனிதர்களால் ஆன விசாலமான ஒரு மூவண்ணக் கொடியை ஏற்படுத்தினார்கள். இந்த இரண்டு முயற்சிகளும், கின்னஸ் பதிவுகளில் இடம் பிடித்தன. இவற்றுக்கு இடையிலே, ஹிமாச்சல் பிரதேசத்தின் கங்கோட் பஞ்சாயத்திலிருந்து ஒரு மிகப்பெரிய ஊக்கமளிக்கும் எடுத்துக்காட்டையும் நம்மால் பார்க்க முடிந்தது. இங்கே பஞ்சாயத்திலே சுதந்திரத் திருநாள் நிகழ்ச்சியிலே, புலம்பெயர்ந்த தொழிலாளிகளின் குழந்தைகள் முக்கிய விருந்தினர்களாக ஆக்கப்பட்டார்கள்.
நண்பர்களே, அமுதப் பெருவிழாவின் இந்த வண்ணம், பாரதத்திலே மட்டுமல்ல, உலகின் பிற நாடுகளிலும் காணக் கிடைத்தது. போத்ஸ்வானாவில் வசிக்கும் அந்த நாட்டைச் சேர்ந்த பாடகர்கள், பாரத சுதந்திரத்தின் 75 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில் 75 தேசபக்தி கீதங்களைப் பாடினார்கள். இதிலே மேலும் சிறப்பான விஷயம் என்னவென்றால் இந்த 75 பாடல்கள், ஹிந்தி, பஞ்சாபி, குஜராத்தி, பாங்க்லா, அசமியா, தமிழ், தெலுகு, கன்னடம், சம்ஸ்கிருதம் போன்ற மொழிகளில் பாடப்பட்டன. இதைப் போலவே, நமீபியாவிலும் பாரதம்-நமீபியா ஆகிய நாடுகளின் கலாச்சார பாரம்பரியமான தொடர்புகள் பற்றிய விசேஷமான தபால்தலை வெளியிடப்பட்டது.
நண்பர்களே, நான் மேலும் ஒரு சந்தோஷமான விஷயத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன். சில நாட்கள் முன்பாகத் தான், இந்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் நிகழ்ச்சி ஒன்றிலே பங்கெடுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அங்கே அவர்கள் ஸ்வராஜ் என்ற ஒரு தொலைக்காட்சித் தொடரைக் காட்சிப்படுத்தினார்கள். அதன் முதல்காட்சியைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த, இதுவரை கேள்விப்படாத நாயகர்கள்-நாயகிகளின் முயற்சிகளை, தேசத்தின் இளைய தலைமுறையினருக்கு அடையாளம் காட்டும் ஒரு மிகச் சிறப்பான முயற்சியாகும் இது. தூர்தர்ஷன் தொலைக்காட்சியில், ஞாயிற்றுக்கிழமை தோறும், இரவு 9 மணிக்கு இது ஒளிபரப்பு செய்யப்படும். இது 75 வாரங்கள் வரை ஒளிபரப்பப்படும் என்று என்னிடத்திலே கூறப்பட்டிருக்கிறது. நீங்கள் அனைவரும் சற்று நேரம் ஒதுக்கி, இதைக் காணுங்கள், உங்கள் வீட்டில் உள்ள குழைந்தைகளும் கண்டிப்பாக இதைக் காண ஊக்கப்படுத்துங்கள். பள்ளிகள்-கல்லூரிகளின் நிர்வாகம் இதன் ஒளிப்பதிவினை, திங்கட்கிழமையன்று பள்ளிகள்-கல்லூரிகள் திறக்கும் போது சிறப்பான நிகழ்ச்சி என்ற வகையிலே காட்சிப்படுத்தலாம். சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த இந்த மாமனிதர்களிடத்திலே, நமது தேசத்தில் இதன் மூலம் ஒரு புதிய விழிப்புணர்வு ஏற்படும். இதை நான் உங்களிடத்திலே வேண்டுகோளாக வைக்கிறேன். சுதந்திரத்தின் அமுதப்பெருவிழா அடுத்த ஆண்டு, அதாவது ஆகஸ்ட் 2023 வரை நடைபெறும். தேசத்திற்காக, சுதந்திரப் போராட்ட வீரர்களுக்காக, கட்டுரைகளுக்கான ஏற்பாடுகள் போன்றவை செய்யப்பட்டிருந்ததை நாம் மேலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
எனதருமை நாட்டுமக்களே, நமது முன்னோர்களின் ஞானம், தீர்க்க தரிசனம், அவர்களின் ஏகாக்ரசித்தம் ஆகியன இன்றும் கூட மிகவும் மகத்துவமானவை. இவற்றின் ஆழங்களிலே நாம் மூழ்கிப் பார்த்தால், நமக்குள்ளே ஆச்சரியம் ஏற்படுகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமையான நம்முடைய ரிக்வேதம் என்ன கூறுகிறது!!
ஓமான் – மாபோ மானுஷீ: அம்ருதக்தம் தாத் தோகாய தனயாய ஷம் யோ:.
யூயம் ஹிஷ்டா பிஷஜோ மாத்ருதமா விஷ்வஸ்ய ஸ்தாது: ஜகதோ ஜனித்ரீ:
ओमान-मापो मानुषी: अमृक्तम् धात तोकाय तनयाय शं यो: |
यूयं हिष्ठा भिषजो मातृतमा विश्वस्य स्थातु: जगतो जनित्री: ||
அதாவது, ஏ ஜலமே, நீங்கள் மனித சமூகத்தின் அணுக்கமான நண்பர் ஆவீர். நீங்கள் உயிர் அளிப்பவர், உங்களிடமிருந்து தான் உணவு உற்பத்தி செய்யப்படுகிறது, மேலும் உங்களிடமிருந்தே எங்களுடைய மக்கட்செல்வங்களின் நலன்களும் ஏற்படுகின்றன. நீங்கள் எங்களுக்குப் பாதுகாப்பு அளிப்பவர், அனைத்துத் தீமைகளையும் தூரப் போக்குபவர். நீங்கள், மிகவும் உத்தமமான மருந்தாவீர், மேலும் நீங்களே இந்த பிரும்மாண்டத்தைப் பேணிக்காப்பவர்.
சற்றே சிந்தியுங்கள், நமது சம்ஸ்கிருதத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முன்பாக நீர் மற்றும் நீர் பாதுகாப்பின் மகத்துவம் விளங்க வைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஞானத்தை, நாம் இன்றைய காலகட்டத்திலே பார்த்தோமேயானால், நமக்கு சிலிர்ப்பு ஏற்படுகிறது. ஆனால் இந்த ஞானத்தை தேசமானது, தனது வல்லமை என்ற வகையிலே ஏற்றுக் கொள்ளும் போது, அதன் சக்தி பலமடங்கு அதிகரிக்கின்றது. உங்களுக்கெல்லாம் நினைவிருக்கலாம், மனதின் குரலிலே, நான்கு மாதங்கள் முன்பாக நான் அமிர்த சரோவர், அதாவது அமிர்த நீர்நிலை என்று கூறியிருந்தேன், அல்லவா? அதன் பிறகு பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் வட்டார நிர்வாகத்தினர், தன்னார்வ அமைப்புகள், அந்தந்தப் பகுதி மக்கள் என இணைந்தார்கள், பார்த்துக் கொண்டிருக்கும் காலத்திலேயே அமிர்த நீர்நிலை உருவாக்கப்பட்டு இது ஒரு மக்கள் இயக்கமாகப் பரிமளித்தது. தேசத்திற்காக சாதிக்க வேண்டும் என்ற உணர்வு இருந்தால், நமது கடமைகள் பற்றிய விழிப்பு இருந்தால், வரவிருக்கும் தலைமுறையினர் பற்றிய நினைப்பிருந்தால், வல்லமை பிறக்கிறது, மனவுறுதி நேரிய கோட்டிலே பயணிக்கிறது. தெலங்கானாவின் வாரங்கல்லின் ஒரு அருமையான முயற்சி பற்றிய தகவல் கிடைத்தது. இங்கே ஒரு புதிய கிராமப் பஞ்சாயத்து கூட்டப்பட்டது, இதன் பெயர் மாங்க்யா வாள்ள தாண்டா. இந்த கிராமம் வனப்பகுதிக்கு அருகிலே அமைந்திருக்கிறது. இங்கே கிராமத்திற்கருகிலே இருக்கும் ஒரு இடத்திலே, பருவமழைக்காலத்தில் கணிசமான நீர் நிறைந்து விடுகிறது. கிராமவாசிகளின் முயல்வுகள் காரணமாக, இந்த இடம் அமிர்த நீர்நிலை இயக்கத்தின்படி மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முறை பருவமழை பெய்த போது, நீர்நிலையில் நீர் நிரம்பி விட்டது.
மத்திய பிரதேசத்தின் மண்டலாவிலிருக்கும் மோசா கிராமப் பஞ்சாயத்திலே உருவாகியிருக்கும் அமிர்த நீர்நிலை பற்றியும் நான் உங்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன். இந்த அமிர்த நீர்நிலையானது கான்ஹா தேசிய பூங்காவிற்கருகிலே அமைந்திருக்கிறது. இதன் வாயிலாக, இந்தப் பகுதியின் அழகு கூடியிருக்கிறது. உத்தர பிரதேசத்தின் லலித்பூரிலே, உயிர்த்தியாகி பகத் சிங் பெயரிலான புத்தம்புதிய அமிர்த நீர்நிலை மக்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. இங்கே நிவாரி கிராமப் பஞ்சாயத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த நீர்நிலை 4 ஏக்கர் நிலப்பரப்பு அளவுக்குப் பரந்திருக்கிறது. நீர்நிலையின் கரையோரங்களில் மரங்கள் நடப்பட்டு, இதன் அழகுக்கு அழகு சேர்க்கின்றன. நீர்நிலைக்கருகிலே நடப்பட்டிருக்கும் 35 அடி உயரமுள்ள மூவண்ணத்தைப் பார்க்கவும் கூட தொலைவான இடங்களிலிருந்து எல்லாம் மக்கள் வருகின்றார்கள். அமிர்த நீர்நிலையின் இந்த இயக்கம், கர்நாடகத்திலும் கூட தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இங்கே இருக்கும் பாகல்கோட் மாவட்டத்தின் பில்கேரூர் கிராமத்தின் மக்கள் மிகவும் அழகானதொரு நீர்நிலையினை உருவாக்கி இருக்கின்றார்கள். உள்ளபடியே இந்தப் பகுதியில், மலையிலிருந்து வெளியேறும் நீர் காரணமாக, மக்களுக்கு நிறைய சிரமங்கள் ஏற்பட்டன, விவசாயிகளுக்கும் அவர்களின் விளைச்சலுக்கும் கூட பாதிப்பு ஏற்பட்டது. அமிர்த நீர்நிலை உருவாக்கப்பட்ட பிறகு கிராமத்தவர்கள், நீர் அனைத்தையும் வழிப்படுத்தி ஒரு புறமாகச் செலுத்தினார்கள். இதனால் இந்தப் பகுதியில் வெள்ளப்பெருக்கு பிரச்சினையும் இல்லாமல் போனது. அமிர்த நீர்நிலை இயக்கமானது, நமது இன்றைய அநேகப் பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்குகிறது, நமது வரவிருக்கும் தலைமுறையினருக்கும் இது மிகவும் அவசியமானதும் கூட. இந்த இயக்கத்திற்குட்பட்டு, பல இடங்களிலே, பழைமையான நீர்நிலைகளும் கூட உயிர்ப்படைந்து வருகின்றன. அமிர்த நீர்நிலைகளால் விலங்குகளின் தாகம் தணிக்கப்படுவதோடு, விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் பயனளிப்பதாக இருக்கிறது. இந்த நீர்நிலைகள் காரணமாக அருகிலே இருக்கும் பகுதிகளின் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கிறது. அதே போல இவற்றின் நாலாபுறங்களிலும் பசுமையும் அதிகரித்திருக்கிறது. இது மட்டுமல்ல, பல இடங்களில் அமிர்த நீர்நிலைகளில் மக்கள் மீன்வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றார்கள். உங்களிடத்திலே, அதுவும் குறிப்பாக என்னுடைய இளைய நண்பர்களிடத்திலே சிறப்பான வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் அமிர்த நீர்நிலை இயக்கத்திலே பெரிய அளவிலே பங்கெடுங்கள், நீர் சேமிப்பு, நீர்ப் பாதுகாப்புக்கான இந்த முயற்சிகளிலே முழுவீச்சோடு உங்கள் பங்களிப்பை அளியுங்கள், அதை முன்னெடுத்துச் செல்லுங்கள் என்பது தான்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, அஸாமிலே போங்காயி கிராமத்திலே ஒரு சுவாரசியமான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது, இது ப்ராஜெக்ட் சம்பூர்ணம். இந்தத் திட்டத்தின் பொருள் என்னவென்றால் ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு எதிரான போராட்டம் மற்றும் இந்தப் போராட்டத்தின் வழிமுறையுமே மிகவும் தனித்தன்மை வாய்ந்தவை. இதன்படி, ஒரு ஆங்கன்வாடி மையத்தில் ஒரு ஆரோக்கியமான குழந்தையின் தாய், ஊட்டச்சத்துக் குறைவான குழந்தையின் தாய் ஒருவரை, ஒவ்வொரு வாரமும் சந்தித்து, ஊட்டச்சத்துக் குறைபாடு தொடர்பான அனைத்துத் தகவல்களைப் பற்றியும் விவாதிக்கிறார்கள். அதாவது ஒரு தாய், பிறிதொரு தாயின் நண்பராகி, அவருக்கு உதவுகிறார், கற்பிக்கிறார். இந்தத் திட்டத்தின் உதவியால், இந்தப் பகுதியில் ஓராண்டிலே, 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாடு தொலைந்து விட்டது. ஊட்டச்சத்துக் குறைபாட்டினைப் போக்க பாடல்கள்-இசை, பஜனைப்பாடல்கள் கூட பயனாகும் என்பதை நீங்கள் எப்போதாவது கற்பனை செய்து பார்த்ததுண்டா? மத்திய பிரதேசத்தின் ததியா மாவட்டத்திலே என்னுடைய குழந்தை இயக்கம். இந்த என்னுடைய குழந்தை இயக்கத்திலே இது வெற்றிகரமாகப் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. இதன்படி, மாவட்டத்திலே பஜனைப் பாடல்கள்-கீர்த்தனைகள் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, இதிலே ஊட்டச்சத்து குரு என்று அழைக்கப்படும் ஆசிரியர்கள் அழைக்கப்பட்டார்கள். மட்கா நிகழ்ச்சி ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு, இதிலே பெண்கள், ஆங்கன்வாடி மையத்திற்காக கை நிறைய தானியங்களைக் கொண்டு வருவார்கள், இந்த தானியத்தால் சனிக்கிழமைகளில் பால்போஜுக்கு, அதாவது குழந்தைகளுக்கான உணவுக்கு ஏற்பாடு செய்வார்கள். இதனால் ஆங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் அதிகரிப்பதோடு, ஊட்டச்சத்துக் குறைபாடும் குறைந்திருக்கிறது. ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு ஏற்பட வேண்டி, ஒரு பிரத்யேகமான இயக்கம் ஜார்க்கண்டிலே செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஜார்க்கண்டின் கிரிடீஹிலே பாம்பும் ஏணியும் என்ற வித்தியாசமான பரமபத விளையாட்டு உருவாக்கப்பட்டது. இந்த விளையாட்டின் வாயிலாகப் பிள்ளைகள், நல்ல மற்றும் தீய பழக்கங்களைப் பற்றிக் கற்றுக் கொள்கிறார்கள்.
நண்பர்களே, ஊட்டச்சத்துக் குறைபாட்டோடு தொடர்புடைய இத்தனை புதிய முயற்சிகள் குறித்து நான் ஏன் உங்களிடம் தெரிவிக்கிறேன் என்றால், நாமனைவருமே கூட வரவிருக்கும் மாதங்களில் இந்த இயக்கத்தோடு இணைய வேண்டும். செப்டம்பர் மாதமானது பண்டிகைகளோடு கூடவே ஊட்டச்சத்தோடு தொடர்புடைய இயக்கங்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்டது. நாம் ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் 30ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தை ஊட்டச்சத்து மாதமாகக் கடைப்பிடிக்கிறோம். ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு எதிராக தேசத்தின் பல படைப்பாற்றலுடன், பன்முகமான முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. தொழில்நுட்பத்தின் சிறப்பான பயன்பாடு, மக்கள் பங்களிப்பு ஆகியன ஊட்டச்சத்து இயக்கத்தின் மகத்துவமான பகுதியாக ஆகியிருக்கிறது. தேசத்தின் இலட்சக்கணக்கான ஆங்கன்வாடிப் பணியாளர்களுக்கு மொபைல் கருவிகள் அளிப்பது தொடங்கி ஆங்கன்வாடி சேவைகள் சென்று சேர்வதை கண்காணிப்பதற்காக Poshan Tracker என்ற ஊட்டச்சத்து கண்காணிப்பாளர் செயலியும் உருவாக்கப்பட்டிருக்கிறது. முன்னேற விரும்பும் அனைத்து மாவட்டங்களிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் 14 முதல் 18 வயதுடைய பெண் குழந்தைகளும் ஊட்டச்சத்து இயக்கத்திலே இணைக்கப்பட்டிருக்கிறார்கள். ஊட்டச்சத்துக் குறைபாட்டுப் பிரச்சினையைக் களையெடுப்பது இந்த முயற்சிகளோடு நின்று போகவில்லை. இந்தப் போராட்டத்திலே மற்ற பிற முயற்சிகளுக்கும் முக்கியமான பங்கிருக்கிறது. எடுத்துக்காட்டாக, ஜல்ஜீவன் இயக்கத்தையே எடுத்துக் கொள்வோமே! பாரதத்தை ஊட்டச்சத்துக் குறைபாட்டிலிருந்து விடுவிக்க இந்த இயக்கம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவிருக்கிறது. ஊட்டச்சத்துக் குறைபாட்டுச் சவால்களை எதிர்கொள்ள, சமூக விழிப்புணர்வோடு இணைந்த முயற்சிகள் மகத்துவமான பங்களிப்பை ஆற்றுகின்றன. நீங்கள் அனைவரும் வரவிருக்கும் ஊட்டசத்து மாதங்களில், ஊட்டசத்துக் குறைபாட்டைக் களையும் முயற்சிகளில் கண்டிப்பாகப் பங்காற்றுங்கள் என்று நான் உங்களனைவரிடத்திலும் விண்ணப்பித்துக் கொள்கிறேன்.
என் கனிவு நிறை நாட்டுமக்களே, சென்னையிலிருந்து ஸ்ரீதேவி வரதராஜன் அவர்கள் எனக்கு ஒரு நினைவூட்டல் செய்தியை அனுப்பி இருக்கிறார். மைகவ் தளத்திலே தனது கருத்தை எப்படி எழுதியிருக்கிறார் பாருங்கள்! “புத்தாண்டு பிறக்க இன்னும் 5 மாதங்களுக்கும் குறைவான காலமே எஞ்சி இருக்கிறது; வரவிருக்கும் புத்தாண்டு International Year of Millets, அதாவது சர்வதேச சிறுதானிய ஆண்டு என்ற வகையிலே நாம் கொண்டாட இருக்கிறோம்” என்று தெரிவித்து, தேசத்தின் சிறுதானிய வரைபடம் ஒன்றை எனக்கு அனுப்பி இருக்கிறார். இது கூடவே, நீங்கள் மனதின் குரலின் வரவிருக்கும் பகுதியில், இது பற்றிப் பேசுவீர்களா என்றும் வினா எழுப்பியிருக்கிறார். நாட்டுமக்களின் இத்தகைய ஆர்வங்களைப் பார்க்கும் போது எனக்கு மிகுந்த ஆனந்தம் ஏற்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையானது, 2023ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்து, ஒரு முன்மொழிவை நிறைவேற்றியது உங்கள் அனைவருக்கும் நினைவிருக்கலாம். பாரதத்தின் இந்த முன்மொழிவிற்கு 70ற்கும் மேற்பட்ட நாடுகளின் ஆதரவு கிடைத்தது. இன்று உலகெங்கிலும் இதே சிறுதானியங்களின் மீதான பேரார்வம் அதிகரித்து வருகிறது. நண்பர்களே, நாம் சிறுதானியங்கள் பற்றிப் பேசும் போது, எனது ஒரு முயற்சியையும் கூட இன்று உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கடந்த சில காலமாகவே நாட்டிற்கு எந்த ஒரு அயல்நாட்டு விருந்தினர் வந்தாலும், குடியரசுத்தலைவர் வந்தாலும், உணவிலே இந்தியாவின் சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட பதார்த்தங்களை அவர்களுக்கு உண்ண அளிக்க முயற்சிக்கிறேன்; இதிலே என்னுடைய அனுபவம் என்னவாக இருக்கிறது என்றால், இந்த முக்கியஸ்தர்களுக்கு இந்தப் பதார்த்தங்கள் மிகவும் பிடித்துப் போய் விடுகின்றன, நமது சிறுதானியங்கள் பற்றிய பல தகவல்களைத் திரட்டவும் அவர்கள் முயற்சி செய்கிறார்கள். சிறுதானியங்கள் என்பவை பண்டைய காலம் தொட்டே நமது விவசாயம், கலாச்சாரம், நாகரிகம் ஆகியவற்றின் அங்கமாக இருந்து வருகின்றன. நமது வேதங்களிலே சிறுதானியங்கள் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. இதைப் போலவே புறநானூறு மற்றும் தொல்காப்பியத்திலும் கூட, இவற்றைப் பற்றி கூறப்பட்டிருக்கிறது. நீங்கள் தேசத்தின் எந்த ஒரு பாகத்திற்குச் சென்றாலும், அங்கே இருக்கும் மக்களின் உணவு முறைகளில், பல்வேறு வகையான சிறுதானிய வகைகள் இடம் பெற்றிருப்பதை உங்களால் காண முடியும். நமது கலாச்சாரத்தைப் போலவே, சிறுதானியங்களிலும் கூட பலவகைகள் காணக் கிடைக்கின்றன. வரகு, சோளம், சாமை, ராகி, கம்பு, தினை, குதிரைவாலி போன்றவை சிறுதானியங்கள் இல்லையா! பாரதம் உலகிலேயே சிறுதானியங்களின் பெரிய ஏற்றுமதியாளர்; ஆகையால் இந்த முயற்சியை வெற்றி பெறச் செய்ய பெரும் பொறுப்பு பாரத நாட்டவரான நம் அனைவரின் தோள்களிலும் இருக்கிறது. நாம் அனைவரும் இணைந்து இதை ஒரு மக்கள் இயக்கமாக ஆக்க வேண்டும், நாட்டு மக்களிடம் சிறுதானியங்கள் தொடர்பான விழிப்புணர்வையும் அதிகரிக்க வேண்டும். மேலும் நண்பர்களே, சிறுதானியங்கள் என்பன விவசாயிகளுக்கும் அதிக இலாபகரமானது, அதுவும் சிறப்பாக சிறிய விவசாயிகளுக்கு என்பதை நீங்கள் அனைவரும் நன்கறிவீர்கள். உள்ளபடியே மிகக் குறைந்த நேரத்தில் அறுவடைக்கு இவை தயாராகி விடும், அதுவும் இதற்கு நீருக்கான தேவையும் அதிகம் இருக்காது. நமது சிறிய விவசாயிகளுக்கு, சிறுதானியங்கள் குறிப்பாக ஆதாயமளிப்பவை. சிறுதானியங்களின் காய்ந்த தழைகள் மிகச் சிறப்பான தீவனமாகவும் கருதப்படுகிறது. இன்றைய இளைய தலைமுறையினர் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் உணவுமுறை தொடர்பாக மிகவும் கவனமாக இருக்கிறார்கள். இந்தக் கோணத்தில் பார்த்தால், சிறுதானியங்களில் புரதச்சத்து, நார்ச்சத்து, கனிமச்சத்து ஆகியன நிறைவான அளவில் இருக்கின்றன. பலர் இதை சூப்பர் உணவு என்றும் கூறுகிறார்கள். சிறுதானியங்களில் ஒன்றல்ல, பல ஆதாயங்கள் இருக்கின்றன. உடல் பருமனைக் குறைப்பதாகட்டும், நீரிழிவாகட்டும், உயர் இரத்த அழுத்தமோ, இருதயம் தொடர்பான நோய்கள் அபாயமாகட்டும், இவற்றைக் குறைக்கிறது. இதோடு கூடவே, வயிறு மற்றும் கல்லீரல் தொடர்பான நோய்களிலிருந்து காப்பாற்ற உதவுகிறது. சற்று முன்பு தான் நாம் ஊட்டச்சத்துக் குறைவு பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். ஊட்டச்சத்துக் குறைபாட்டோடு போராடவும் சிறுதானியங்கள் கணிசமான உதவி புரிகின்றன, ஏனென்றால், இவை புரதங்களோடு கூடவே உடலுக்கு சக்தியையும் அளிக்கின்றன. தேசத்திலே இன்று சிறுதானியங்களுக்கு ஊக்கம் அளிக்க, நிறைய விஷயங்கள் செய்யப்படுகின்றன. இவற்றோடு தொடர்புடைய ஆய்வுகள், கண்டுபிடிப்புகள் மீது கவனம் செலுத்தப்படுவதோடு, விவசாயிகள்-உற்பத்தியாளர் சங்கங்களுக்கு ஊக்கமளிக்கப்பட்டு வருகிறது; இதன் வாயிலாக விளைச்சலை அதிகரிக்க முடியும். என்னுடைய விவசாய சகோதர சகோரிகளிடம் என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால், சிறுதானியங்களை நீங்கள் அதிக அளவு பயிர் செய்ய வேண்டும், இதனால் ஆதாயம் பெற வேண்டும் என்பது தான். இன்று பல ஸ்டார்ட் அப்புகளும் கூட, சிறுதானியங்கள் துறையில் பணி புரிவதைக் காணும் போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இவற்றிலே சிலர் சிறுதானிய குக்கீஸ், சிறுதானிய பேன் கேக்குகள், சிறுதானிய தோசை கூடத் தயாரிக்கிறார்கள். அதே போல, சிறுதானிய சக்தி வில்லைகளும், சிறுதானிய காலை உணவும் தயார் செய்யப்பட்டு வருகின்றது. இந்தத் துறையில் பணிபுரியும் அனைவருக்கும் நான் பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பண்டிகைகளுக்கான இந்த வேளையில் நாம் நமது பல தின்பண்டங்களிலும் சிறுதானிய வகைகளைப் பயன்படுத்துகிறோம். உங்கள் வீடுகளில் தயாரிக்கப்படும் தின்பண்டங்களின் படங்களை சமூக ஊடகங்களில் நீங்கள் கண்டிப்பாகப் பகிருங்கள்; மக்கள் மத்தியில் சிறுதானியங்கள் தொடர்பான விழிப்புணர்வு அதிகரிக்க இது உதவியாக இருக்கும்.
என் அன்பு நிறை நாட்டுமக்களே, சில நாட்கள் முன்பாக, நான் அருணாச்சல் பிரதேசத்தின் சியாங்க் மாவட்டத்தின் ஜோர்சிங்க் கிராமம் பற்றிய ஒரு செய்தியைக் காண நேர்ந்தது. இந்தச் செய்தி, ஒரு மாற்றம் பற்றியது, இதற்காக இந்த கிராமவாசிகள் பல ஆண்டுகளாகவே காத்திருந்தார்கள். உள்ளபடியே ஜோர்சிங்க் கிராமத்திலே இந்த மாதம், சுதந்திரத் திருநாளின் போது 4ஜி இணையச் சேவைகள் தொடங்கப்பட்டு விட்டன. முன்னர் கிராமத்தில் மின்சாரம் கொண்டு சேர்க்கப்பட்டதற்காக மக்கள் மகிழ்ந்தார்கள், இப்போது, புதிய பாரதம், 4ஜி கொண்டு சேர்க்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறது. அருணாச்சல் மற்றும் வடகிழக்கின் தொலைவான பகுதிகளில் 4ஜி என்ற வகையில் நாம் புதிய விடியலைக் காண்கிறோம். இணைய இணைப்பு ஒரு புதிய உதயத்தைக் கொண்டு சேர்த்திருக்கிறது. எந்த வசதிகள், ஒரு காலத்தில் நகரங்களில் மட்டுமே இருந்தனவோ, அவை எல்லாம் டிஜிட்டல் இந்தியா மூலமாக கிராமந்தோறும் கொண்டு சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதன் காரணமாக தேசத்திலே டிஜிட்டல் தொழில்முனைவோர் உருவாகி வருகின்றார்கள். ராஜஸ்தானத்தின் அஜ்மேர் மாவட்டத்தில் சேடா சிங் ராவத் அவர்கள், இணையவழித் தையலகம் ஒன்றை நடத்தி வருகின்றார். இதில் என்ன செய்ய முடியும் என்று நீங்கள் யோசிக்கலாம். உள்ளபடியே, சேடா சிங் ராவத் கோவிட்டுக்கு முன்பாக தையல் வேலையைச் செய்து வந்தார். கோவிட் வந்தது, ராவத் அவர்கள் இந்தச் சவாலை ஒரு சிரமமாகக் கருதவில்லை, அதைச் சந்தர்ப்பமாக மாற்றினார். இவர் பொதுச் சேவை மைய இணையவழிக் கடையிலே சேர்ந்தார், இணையவழியில் பணிகளை ஆரம்பித்தார். முகக்கவசங்கள் ஏராளமான எண்ணிக்கையில் வேண்டும் என்று நுகர்வோர் விரும்பும் போது, இவர் சில பெண்களைப் பணிக்கமர்த்தி, முகக்கவசங்களைத் தயாரிக்கத் தொடங்கினார். இதன் பிறகு, இவர் தர்ஜீ ஆன்லைன் என்ற பெயரில் தன்னுடைய இணையவழித் தையலகத்தைத் திறந்தார், இதிலே மேலும் பலவகையான ஆடைகளையும் தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கினார். இன்று டிஜிட்டல் இந்தியாவின் சக்தியால் சேடா சிங் அவர்களின் பணி எந்த அளவுக்கு அதிகரித்து விட்டது என்றால், இப்போது இவருக்கு நாடெங்கிலும் இருந்து ஆர்டர்கள் வந்து குவிகின்றன. நூற்றுக்கணக்கான பெண்களுக்கு இவர் வேலைவாய்ப்பினை அளித்து வருகின்றார். டிஜிட்டல் இந்தியா, உத்தர பிரதேசத்தின் உன்னாவிலே வசிக்கும் ஓம் பிரகாஷ் சிங் அவர்களையும் கூட டிஜிட்டல் தொழில்முனைவோராக மாற்றி விட்டது. இவர் தனது கிராமத்தில் ஓராயிரத்துக்கும் மேற்பட்ட Broadband connection, அகண்ட அலைவரிசை இணைப்புக்களை நிறுவியிருக்கிறார். ஒம் பிரகாஷ் அவர்கள் தன்னுடைய பொதுச் சேவை மையத்திற்கு அருகிலே இலவசமாக வைஃபை பகுதியையும் நிறுவி இருக்கிறார், இதனால், தேவையிருக்கும் நபர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது. ஓம் பிரகாஷ் அவர்களின் பணி, இப்போது எந்த அளவுக்குப் பெருகி விட்டது என்றால், இவர் 20க்கும் மேற்பட்ட நபர்களைப் பணிக்கமர்த்தி இருக்கிறார். கிராமப் பள்ளிகள், மருத்துவமனைகள், மாவட்ட அலுவலகங்கள், ஆங்கன்வாடி மையங்கள் வரை அகண்ட அலைவரிசை இணைப்புக்களை இவர்கள் கொண்டு சேர்த்து வருகிறார்கள், இதனால் வேலைவாய்ப்பும் ஏற்படுத்தப்படுகிறது. பொதுச் சேவை மையத்தைப் போலவே அரசு இணையவழிச் சந்தை அதாவது ஜெம் தளத்திலும் கூட, இப்படிப்பட்ட எத்தனையோ வெற்றிக் கதைகளை நம்மால் காண முடியும்.
நண்பர்களே, கிராமங்களிலிருந்து எனக்கு நிறைய செய்திகள் கிடைக்கின்றன, இணையம் காரணமாக ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை எனக்கு இவை தெரிவிக்கின்றன. இணையத்தால் நமது இளைய நண்பர்களின் படிப்பு, கற்றல் முறைகளிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. எடுத்துக்காட்டக, உபியில் உன்னாவின் அமோயியா கிராமத்தில் வசிக்கும் குடியா சிங் தனது புகுந்த வீடு சென்ற போது, அவருக்குத் தன்னுடைய படிப்பு பற்றிய கவலை இருந்தது. ஆனால், பாரத்நெட் அவருடைய இந்தக் கவலையைப் போக்கியது. குடியா, தனது படிப்பை இணையம் வாயிலாகத் தொடர்ந்தார், பட்டப்படிப்பு வரை முழுமை செய்தார். கிராமந்தோறும் இப்படி பலரது வாழ்க்கை, டிஜிட்டல் இந்தியா இயக்கத்தினால் புதிய சக்தியை அடைந்து வருகிறது. நீங்களும், கிராமங்களில் இருக்கும் டிஜிட்டல் தொழில்முனைவோர் பற்றி எனக்கு அதிக அளவில் எழுதுங்கள், அவர்களின் வெற்றிக் கதைகளை சமூக ஊடகங்களில் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, சில காலம் முன்பாக, ஹிமாச்சல் பிரதேசத்தில், மனதின் குரலின் நேயர் ஒருவரான ரமேஷ் அவர்கள் எழுதிய ஒரு கடிதம் எனக்குக் கிடைத்தது. ரமேஷ் அவர்கள் தனது கடிதத்தில், மலைகளின் பல அழகுகள் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். மலைகளில் வீடுகள் தொலைதூர இடைவெளிகளில் இருந்தாலும், மக்களின் மனம் ஒருவருக்கு ஒருவர் நெருக்கமாக இருப்பதாக அவர் எழுதியிருந்தார். உண்மையிலேயே, மலைகளில் வசிப்போரின் வாழ்க்கையிலிருந்து நாம் பல கற்றல்களைப் பெற முடியும். மலைகளின் வாழ்க்கைமுறையிடமிருந்தும், கலாச்சாரத்திலிருந்தும் நாம் பெறும் முதல் படிப்பினை, சூழல்களின் அழுத்தத்தில் அழுந்திப் போகாமல், எளிதாக அவற்றை வெற்றி கொள்ள முடியும் என்பது தான். இரண்டாவதாக, எப்படி நாம் அந்தந்தப் பகுதியில் கிடைக்கும் ஆதாரங்களைக் கொண்டு தற்சார்பு நிலையை எட்ட முடியும் என்பது. நான் கூறிய முதல் படிப்பினை பற்றிய அழகான வெளிப்பாட்டை, இப்போது ஸ்பீதீ பகுதியில் காண முடிகிறது. ஸ்பீதி என்பது பழங்குடியினத்தவர் வசிக்கும் ஒரு பகுதி. இங்கே இப்போதெல்லாம் பட்டாணியைப் பிரித்தெடுக்கும் பணி புரியப்பட்டு வருகிறது. மலைப்பகுதி வயல்களில் இது உழைப்பும் சிரமமும் நிறைந்த வேலையாகும். ஆனால் இங்கே, கிராமப்புறப் பெண்கள் ஒன்றிணைந்து, பரஸ்பரம் ஒருவர் மற்றவருடைய நிலங்களில் பட்டாணியைப் பிரிக்கிறார்கள். இந்தப் பணியோடு கூடவே பெண்கள் அந்தப் பகுதிப் பாடலான சப்ரா மாஜீ சப்ராவையும் பாடுகிறார்கள். அதாவது இங்கே பரஸ்பர உதவியோடு கூடவே நாட்டுப்புறப் பாரம்பரியமும் ஓர் அங்கமாகிறது. ஸ்பீதியின் அந்தப் பகுதி ஆதாரங்களின் நற்பயன்பாட்டின் இதுவும் ஒரு மிகச் சிறப்பான எடுத்துக்காட்டாகும். ஸ்பீதியின் பசுபராமரிக்கும் விவசாயிகள், அவற்றின் பசுஞ்சாணத்தை உலர வைத்து, சாக்கு மூட்டைகளில் கட்டி வைக்கிறார்கள். பனிக்காலங்களில் இந்த மூட்டைகளை, பசுக்கள் கட்டி வைக்கப்பட்டிருக்கும் பகுதிகள், இவற்றை கூட் என்கிறார்கள், அங்கே பரப்பி விடுகிறார்கள். பனிபொழிவிற்கு இடையே, இந்த மூட்டைகள், பசுக்களுக்கு குளிரிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. குளிர்காலம் கடந்த பிறகு, இதே பசுஞ்சாணம், வயல்களுக்கு உரமாகிறது. அதாவது பசுக்களின் கழிவுப்பொருளிலிருந்து அவற்றுக்கும் பாதுகாப்பு, வயல்களுக்கும் உரப்பொருள். விவசாயத்திற்கான குறைவான முதலீடு, வயல்களின் விளைச்சலும் அதிகம். ஆகையாலே தான் இந்தப் பகுதி இப்போதெல்லாம், இயற்கை விவசாயத்திற்கான கருத்தூக்கமாக ஆகி வருகிறது.
நண்பர்களே, இதைப் போன்றே பாராட்டத்தக்க முயற்சி, நமது மேலும் ஒரு மலைப்பகுதி மாநிலமான உத்தராக்கண்டிலே காணக் கிடைக்கிறது. உத்தராக்கண்டிலே பல வகையான மூலிகைகளும், வேர்களும் கிடைக்கின்றன. இவை நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனளிப்பவை. இவற்றிலே ஒரு பழத்தின் பெயர் பேடூ. இதை, himalayan fig, இமயமலைப்பகுதி அத்தி என்ற பெயராலும் அழைக்கிறார்கள். இந்தப் பழத்திலே தாது உப்புக்களும், விட்டமின்களும் செறிவாக இருக்கின்றன. மக்கள் இதைப் பழமாகவும் உண்கிறார்கள், கூடவே பல நோய்களுக்கான சிகிச்சைக்காகவும் இதைப் பயன்படுத்துகிறார்கள். இந்தப் பழத்தின் சிறப்புக்களைப் பார்க்கும் போது, இப்போது பேடூவின் பழச்சாறு, இதனால் தயாரிக்கப்பட்ட பழ ஊறலான ஜாம், சட்டினி, ஊறுகாய், இதை உலர்த்தித் தயார் செய்யப்படும் உலர் பழங்கள் ஆகியவற்றைச் சந்தைப்படுத்தி இருக்கிறார்கள். பித்தௌராகட் நிர்வாகத்தினரின் முயற்சி மற்றும் அந்தப் பகுதி மக்களின் ஒத்துழைப்பு காரணமாக பேடூவை சந்தைக்குப் பல வடிவங்களில் கொண்டு செல்லும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. பேடூவை மலைப்புற அத்தி என்ற பெயரிட்டு ப்ராண்டிங்க் செய்து, இணையவழிச் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் விவசாயிகளின் வருவாயில் புதிய வழிவகை செய்யப்பட்டிருப்பதோடு கூடவே, பேடூவின் மருத்துவ குணங்களினால் நன்மையும் தொலைவான தூரங்கள் வரை கொண்டு சேர்க்கப்பட்டிருக்கிறது.
எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலின் இன்றைய தொடக்கத்தை நாம் சுதந்திரத்தின் அமுதப் பெருவிழா பற்றிய விஷயத்தோடு செய்திருந்தோம். சுதந்திரத் திருநாளின் மகத்தான தினத்தோடு கூடவே, வரவிருக்கும் காலத்தில் மேலும் பல முக்கியமான தினங்கள் வரவிருக்கின்றன. இன்னும் சில நாட்கள் கழித்து பிள்ளையார் சதுர்த்தி ஆராதனையும் வரவிருக்கிறது. பிள்ளையார் சதுர்த்தி என்பது கணபதி பப்பாவின் ஆசிகளுக்கான தினம். பிள்ளையார் சதுர்த்திக்கு முன்னதாக ஓணம் பண்டிகையும் தொடங்க இருக்கிறது. விசேஷமாக, கேரளத்தில் ஓணம் என்பது அமைதி-வளம் ஆகிய உணர்வுகளோடு கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி என்பது ஹர்தாலிகா தீஜும் கூட. ஓடிஷாவிலே செப்டம்பர் மாதம் 1ஆம் தேதியன்று நுஆகாயி பண்டிகையும் கொண்டாடப்படும். நுஆகாயி என்றால், புதிய உணவு, அதாவது, இதுவும் கூட, மற்ற பிற பண்டிகைகளைப் போலவே, நமது விவசாயப் பாரம்பரியத்தோடு தொடர்புடைய பண்டிகை. இதற்கிடையே, ஜைன சமூகத்தின் சம்வத்சரி மகத்துவம் வாய்ந்த திருநாளும் வருகிறது. நமது இந்த அனைத்துத் திருநாட்களும், நமது கலாச்சார வளத்தையும், உயிர்ப்புத் தன்மையையும் அடையாளப்படுத்துகின்றன. உங்களனைவருக்கும், இந்தப் பண்டிகைகளுக்கும், சிறப்பான நாட்களுக்காகவும் என்னுடைய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திருநாட்களோடு கூடவே, மேஜர் தியான்சந்த் அவர்களின் பிறந்த நாளான, ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதியான நாளைய தினத்தை தேசிய விளையாட்டு தினமாக நாம் கொண்டாடுவோம். நமது இளைய விளையாட்டு வீரர்கள், சர்வதேசக் களங்களில் நமது மூவண்ணத்தின் பெருமையைப் பரப்பி வருகின்றார்கள், இதுவே நமது தியான்சந்த் அவர்களுக்கு நாம் செலுத்தக்கூடிய சிரத்தாஞ்சலிகளாக இருக்க முடியும். தேசத்தின் பொருட்டு நாமனைவரும் இணைந்து புரியும் செயல்கள், தேசத்திற்குப் பெருமை சேர்த்து வரட்டும் என்ற இந்த நல்விருப்பத்தோடு நான் நிறைவு செய்கிறேன். அடுத்த மாதம், மீண்டும் ஒருமுறை உங்களோடு மனதின் குரல் அரங்கேறும். பலப்பல நன்றிகள்.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலின் 91ஆவது பகுதி இது. இதுவரை நாம் ஏராளமான விஷயங்கள் குறித்துப் பேசியிருக்கிறோம், பல்வேறு விஷயங்கள் குறித்து நமது கருத்துக்களைப் பகிர்ந்திருக்கிறோம் என்றாலும், இந்த முறை மனதின் குரல் மிகவும் சிறப்பானது. காரணம் என்னவென்றால், இந்த முறை சுதந்திரத் திருநாள், தான் சுதந்திரம் அடைந்த 75ஆம் ஆண்டினை பாரதம் நிறைவு செய்யவிருக்கிறது. நாம் அற்புதமான-சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்டத்தின் சான்றுகளாக ஆக இருக்கிறோம். இறைவன் நமக்கெல்லாம் ஒரு மிகப்பெரிய பேற்றினை அளித்திருக்கிறார். நீங்களே சற்று சிந்தித்துப் பாருங்கள், நாம் அடிமை வாழ்வின் காலகட்டத்தில் பிறந்திருந்தோம் என்று சொன்னால், இந்த நாள் பற்றிய நமது கற்பனை எவ்வாறு இருந்திருக்கும்? அடிமைத்தளையிலிருந்து விடுதலை அடைந்திடத் துடிக்கும் தவிப்பு, விடுதலைச் சிறகுகளை அணிந்து பறக்க விழையும் பேரார்வம் – எத்தனை பெரியதாக இருந்திருக்கும். அதே நிலையில் நாம் இருந்திருந்தோம் என்றால், ஒவ்வொரு நாளும், இலட்சக்கணக்கான நாட்டுமக்கள் விடுதலை வேண்டிப் போராடுவதையும், துன்பம் சகிப்பதையும், உயிர்த்தியாகங்கள் புரிவதையும் பார்த்திருப்போம். ஒவ்வொரு நாள் காலையும், எப்போது எனது பாரதம் விடுதலை அடையும் என்ற கனவோடு நாம் விழித்தெழுந்திருப்போம், வந்தே மாதரம், பாரத் மாதா கீ ஜெய் என்ற கோஷங்களை உதடுகளில் உச்சரித்த வண்ணம் நமது நாட்கள் கழிந்திருக்கும், வருங்கால சந்ததிகளின் பொருட்டு நாமும் நமது வாழ்க்கையை அர்ப்பணித்திருப்போம், நமது இளமையைத் துறந்திருப்போம்.
நண்பர்களே, ஜூலை மாதம் 31ஆம் நாள், அதாவது இன்றைய தினத்தன்று தான், நாட்டுமக்களான நாமனைவரும் தியாகி ஊதம் சிங் அவர்களின் உயிர்த்தியாகத்திற்குத் சிரம் தாழ்த்துகிறோம். தேசத்தின் பொருட்டு தங்களுடைய அனைத்தையும் அர்ப்பணித்த அனைத்து மாபெரும் புரட்சியாளர்களுக்கும் நான் என்னுடைய பணிவான சிரத்தாஞ்சலிகளைக் காணிக்கையாக்குகிறேன்.
நண்பர்களே, சுதந்திரத்தின் அமுதப் பெருவிழா என்பது ஒரு மக்கள் பேரியக்கமாக வடிவடுத்திருப்பதைப் பார்க்கும் போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. அனைத்துத் துறைகள், சமூகத்தின் அனைத்து மட்டங்களைச் சேர்ந்த மக்கள் இதோடு தொடர்புடைய பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொண்டு வருகிறார்கள். இது போன்றதொரு நிகழ்ச்சி, இந்த மாதம் மேகாலயாவில் தொடங்கப்பட்டது. மேகாலயாவின் வீரம்நிறைந்த போராளி, யூ. டிரோத் சிங் அவர்கள் காலமான நாளன்று, மக்கள் அவரை நினைவு கூர்ந்தார்கள். காஸி மலைகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு, அங்கே வாழ்ந்த மக்களின் கலாச்சாரத்தின் மீது தாக்குதல் தொடுக்கும் ஆங்கிலேயர்களின் சூழ்ச்சியை டிரோத் சிங் அவர்கள் வலுவாக எதிர்த்தார். இந்த நிகழ்ச்சியில் பல கலைஞர்கள் அழகான படைப்புக்களை அளித்தார்கள். வரலாற்றிற்கு உயிர் கொடுத்தார்கள். ஒரு கொண்டாட்டத்திற்கும் ஏற்பாடு செய்திருந்தார்கள்; இதிலே, மேகாலயாவின் மகத்தான கலாச்சாரத்தை நேர்த்தியான முறையிலே காட்சிப்படுத்தினார்கள். சில வாரங்கள் முன்னதாக, கர்நாடகத்தில், அம்ருதா பாரதீ கன்னடார்த்தீ என்ற பெயர் கொண்ட வித்தியாசமான இயக்கம் செயல்படுத்தப்பட்டது. இதிலே மாநிலத்தின் 75 இடங்களில் சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவோடு இணைந்த பிரும்மாண்டமான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவற்றில் கர்நாடகத்தின் மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவில் கொள்ளுவதோடு, வட்டார இலக்கிய சாதனைகளையும் முன்னிறுத்தும் முயல்வு மேற்கொள்ளப்பட்டது.
நண்பர்களே, இதே ஜூலை மாதத்தில் ஒரு மிகவும் சுவாரசியமான முயற்சி மேற்கொள்ளப்பட்டது, இதன் பெயர் – சுதந்திரத்தின் ரயிலும் ரயில் நிலையமும். இந்த முயற்சியின் நோக்கம் என்னவென்றால், மக்கள் சுதந்திரப் போராட்டத்தில் இந்திய ரயில்வே துறையின் பங்களிப்பைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே. தேசத்தில் பல ரயில் நிலையங்களோடு சுதந்திரப் போராட்ட வரலாறு பின்னிப் பிணைந்திருக்கிறது. நீங்களும் கூட, இந்த ரயில் நிலையங்கள் பற்றித் தெரிந்து கொண்டு ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். ஜார்க்கண்டின் கோமோ ரயில் சந்திப்பு, இப்போது அதிகாரப்பூர்வமாக, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ரயில் சந்திப்பு கோமோ என்ற பெயரால் அறியப்படுகிறது. ஏன் தெரியுமா? அதாவது இந்த ரயில் நிலையத்தில் தான், கால்கா மெயிலில் பயணித்து நேதாஜி சுபாஷ், பிரிட்டிஷ் அதிகாரிகளுக்குத் தந்திரமாகப் போக்குக் காட்டுவதில் வெற்றி பெற்றார். நீங்கள் அனைவரும் லக்னௌவுக்கு அருகிலே காகோடீ ரயில் நிலையத்தின் பெயரைக் கண்டிப்பாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த நிலையத்தோடு ராம் பிரசாத் பிஸ்மில், அஷ்ஃபாகுல்லா கான் போன்ற தீரர்களின் பெயர் இணைந்திருக்கிறது. இங்கே ரயிலில் எடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்த ஆங்கிலேயர்களின் கஜானாவைக் கொள்ளையடித்த வீரமான புரட்சியாளர்கள் ஆங்கிலேயர்களுக்குத் தங்களுடைய பலம் என்ன என்பதைக் காட்டினார்கள். நீங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களோடு பேச நேர்ந்தால், நீங்கள் தூத்துக்குடி மாவட்டத்தின் வாஞ்சி மணியாச்சி ரயில் சந்திப்புப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். தமிழரான, சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் பெயரை இந்த நிலையம் தாங்கி இருக்கிறது. இந்த இடத்தில் தான் 25 வயதே நிரம்பிய இளைஞனான வாஞ்சி, பிரிட்டிஷ் ஆட்சியர் செய்த தவறுக்குத் தண்டனை வழங்கினான்.
நண்பர்களே, பட்டியல் மிகவும் நீளமானது. நாடெங்கிலும் 24 மாநிலங்களில் பரந்து விருந்திருக்கும் 75 ரயில் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. இந்த 75 நிலையங்கள் மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் பலவகையான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. நீங்களும் கூட, கொஞ்சம் நேரம் ஒதுக்கி, உங்கள் அருகிலே இருக்கும் ஏதாவது ரயில் நிலையத்திற்குச் சென்று வாருங்கள். சுதந்திரப் போராட்டம் பற்றி, உங்களுக்கும் தெரியாத தகவல்கள் உடைய, இப்படிப்பட்ட சரித்திரம் பற்றி விரிவாகத் தெரியவரும். அக்கம்பக்கத்தில் இருக்கும் பள்ளி மாணவர்களிடத்திலே நான் கேட்டுக் கொள்வதெல்லாம், ஆசிரியர்களிடம் வேண்டிக் கொள்வதெல்லாம், நீங்கள் உங்கள் பள்ளியைச் சேர்ந்த சின்னச்சின்ன பிள்ளைகளை அழைத்துக் கொண்டு, ரயில் நிலையம் செல்லுங்கள், மொத்த சம்பவத்தையும் அந்தப் பிள்ளைகளுக்குச் சொல்லுங்கள், புரிய வையுங்கள்!!
என் மனம்நிறை நாட்டுமக்களே, சுதந்திரத்தின் அமுதப்பெருவிழாவின்படி, ஆகஸ்ட் மாதம் 13 முதல் 15 வரை, இல்லந்தோறும் மூவண்ணக்கொடி என்ற ஒரு சிறப்பு இயக்கத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டு, ஆகஸ்ட் மாதம் 13 முதல் 15 வரை, நீங்களும் உங்கள் இல்லங்களில் மூவண்ணக் கொடியைப் பறக்க விடுங்கள், அல்லது அதை உங்கள் வீட்டில் ஏற்றுங்கள். மூவண்ணக் கொடி நம்மை இணைக்கிறது, நாம் தேசத்தின் பொருட்டு பங்களிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை அளிக்கிறது. உங்களிடத்திலே எனக்கு மேலும் ஒரு ஆலோசனையும் உண்டு; அதாவது ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வரை, நீங்கள் அனைவரும் உங்களுடைய சமூக ஊடக சுயவிவரப் புகைப்படங்களில், மூவண்ணத்தைப் பதிவிடலாம். உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதிக்கு, நமது மூவண்ணக் கொடியோடு ஒரு தொடர்பு இருக்கிறது. இந்த நாளன்று தான் பிங்கலீ வெங்கையா அவர்கள் பிறந்தார், இவர் தான் நமது தேசியக் கொடியை வடிவமைத்தார். நான் அவருக்கு என்னுடைய மரியாதை கலந்த நினைவாஞ்சலிகளை அர்ப்பணம் செய்கிறேன். நமது தேசியக் கொடி பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் வேளையில், மகத்தான புரட்சியாளர் மேடம் காமாவையும் கூட நாம் நினைவுகூருவோம். மூவண்ணக் கொடிக்கு வடிவம் கொடுப்பதில் அவருடைய பங்களிப்பு மிகவும் மகத்துவம் வாய்ந்தது.
நண்பர்களே, சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவில் நடந்தேறி வரும் இந்த ஏற்பாடுகள் அனைத்தும் அளிக்கும் மிகப்பெரிய செய்தி என்னவென்றால், நாட்டுமக்களாகிய நாமனைவரும் நமது கடமைகளை முழுமுனைப்போடு செயல்படுத்த வேண்டும் என்பது தான். அப்போது தான் எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நம்மால் நிறைவேற்ற இயலும். அவர்கள் கண்ட கனவு பாரதத்தை உருவாக்க முடியும். ஆகையால் நமது அடுத்த 25 ஆண்டுகளின் இந்த அமிர்தகாலம், ஒவ்வொரு குடிமகனுக்கும் கடமைக்காலம் போன்றதாகும். தேசத்திற்கு விடுதலை பெற்றுத்தந்த, நமது சாகஸமான வீரர்கள், நமக்கெல்லாம் ஒரு பொறுப்பை விட்டுச் சென்றிருக்கிறார்கள். நாம் அதனை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, கொரோனாவிற்கு எதிராக நாட்டுமக்களாகிய நம்முடைய போராட்டம் இப்போதும் தொடர்கிறது. உலகம் முழுமையும் கூட இதைச் சந்தித்து வருகிறது. முழுமையான உடல் பராமரிப்பின் மீது அதிகரித்துவரும் மக்களின் ஆர்வம் தான் இந்த கட்டத்தில் அனைவருக்கும் மிகவும் உதவிகரமாக இருந்திருக்கிறது. பாரதநாட்டுப் பாரம்பரியமான வழிமுறைகள் எந்த அளவுக்கு இதிலே உதவிகரமாக இருக்கிறது என்பதை நாமனைவரும் நன்கறிவோம். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திலே, ஆயுஷ் அமைச்சகம், உலகளாவிய அளவில், முக்கியமான பங்களிப்பைப் புரிந்திருக்கிறது. உலகெங்கிலும் ஆயுர்வேதம் மற்றும் பாரதநாட்டு மருந்துகள் மீது ஈர்ப்பு அதிகரித்து வருகிறது. ஆயுஷ் ஏற்றுமதிகளில் சாதனை படைக்கும் வேகம் வந்திருப்பதற்கு இது ஒரு மிகப்பெரிய காரணம்; மேலும் ஒரு மிக சந்தோஷமான விஷயம் என்னவென்றால், இந்தத் துறையில் பல புதிய ஸ்டார்ட் அப்புகளும் வரத் தொடங்கியிருக்கின்றன. தற்போது தான் ஒரு உலக அளவிலான ஆயுஷ் முதலீடு மற்றும் கண்டுபிடிப்பு உச்சிமாநாடு நடந்தேறியது. இதிலே கிட்டத்தட்ட 10,000 கோடி ரூபாய்க்கான முதலீட்டு முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ளன என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். நடந்த மேலும் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், கொரோனா காலகட்டத்தில் மருத்துவ மூலிகைகள் மீதான ஆய்வுகளிலும் அதிக முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது தான். இது தொடர்பாக பல ஆய்வுகளும் பதிப்பிடப்பட்டு வருகின்றன. கண்டிப்பாக இது ஒரு நல்ல தொடக்கம் தான்.
நண்பர்களே, தேசத்தில் பலவகையான மருத்துவத் தாவரங்கள், மூலிகைகள் தொடர்பான ஒரு அற்புதமான முயல்வு நடந்திருக்கிறது. சில நாள் முன்பாகத் தான் ஜூலை மாதத்தில் Indian Virtual Herbarium – இந்திய மெய்நிகர் மூலிகைத் தொகுப்பு தொடங்கப்பட்டது. டிஜிட்டல் உலகினைப் பயன்படுத்தி, நமது வேர்களோடு நாம் எப்படி இணைய முடியும் என்பதற்கான உதாரணமும் கூட இது. இந்திய மெய்நிகர் மூலிகைத் தொகுப்பு, பாதுகாக்கப்பட்ட தாவரங்கள் அல்லது செடி பாகங்களின் டிஜிட்டல் படங்களின் சுவாரசியமான தொகுப்பு, இது இணையத்தளத்தில் எளிதாகக் காணக் கிடைக்கிறது. இந்த மெய்நிகர் மூலிகைத் தொகுப்பிலே இப்போது இலட்சத்திற்கும் மேற்பட்ட வகைமாதிரிகளும், இவற்றோடு தொடர்புடைய அறிவியல் தகவல்களும் கிடைக்கிறது. மெய்நிகர் மூலிகைத் தொகுப்பில், பாரதத்தின் தாவரவியல் பன்முகத்தன்மையின் நிறைவான காட்சியும் காணக் கிடைக்கிறது. இந்திய மெய்நிகர் தாவரத் தொகுப்பு, பாரத நாட்டுத் தாவரங்கள் மீதான ஆய்வுகள் பற்றிய ஒரு முக்கியமான ஆதாரமாக விளங்கும் என்பது என் நம்பிக்கை.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, மனதின் குரலில் நாம் ஒவ்வொரு முறையும் நாட்டுமக்களின் பலவகைப்பட்ட வெற்றிகள் பற்றி விவாதிக்கிறோம், இவை நம் இதழ்களில் இனிமையான புன்னகையை மலரச் செய்கிறது. ஒரு வெற்றிக்கதை, இனிமையான புன்னகையைத் ஏற்படுத்துகிறது, நாவில் இனிய சுவையை நிரப்புகிறது என்று சொன்னால், இதை நாம் சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பொழிந்தாற்போல் என்போம் அல்லவா!! நமது விவசாயிகள் இப்போதெல்லாம் தேன் உற்பத்தியில் என்னவெல்லாம் அற்புதங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா? தேனின் சுவை நமது விவசாயிகளின் வாழ்வையே மாற்றியமைத்து, அவர்களின் வருவாயை அதிகரித்தும் வருகிறது. ஹரியாணாவிலே, யமுனாநகரிலே, ஒரு தேனீ வளர்ப்பாளர் இருக்கிறார் – சுபாஷ் கம்போஜ் அவர்கள். சுபாஷ் அவர்கள் விஞ்ஞான முறைப்படி தேனீ வளர்ப்பிற்கான பயிற்ச்சியைப் பெற்றார். ஆறு பெட்டிகளோடு தன் பணியைத் தொடங்கினார். இன்று இவர் கிட்டத்தட்ட 2,000 பெட்டிகளோடு தேனீக்களை வளர்த்து வருகிறார். இவருடைய தேன் பல மாநிலங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஜம்முவின் பல்லீ கிராமத்தைச் சேர்ந்த விநோத் குமார் அவர்களும் 1500க்கும் மேற்பட்ட காலனிகளில் தேனீக்களைப் பராமரித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு, இராணித் தேனீ வளர்ப்பில் பயிற்சி பெற்றார். இந்தப் பணி வாயிலாக இவர் ஆண்டுதோறும் 15 முதல் 20 இலட்சம் ரூபாய் வருமானம் ஈட்டி வருகிறார். கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி, மதுகேஷ்வர் ஹெக்டே அவர்கள் பாரத அரசிடமிருந்து 50 தேனீ காலனிகளுக்கான உதவித்தொகை பெற்றார். இவர் வசம் 800க்கும் அதிகமான காலனிகள் உள்ளன, இவர் பல டன்கள் தேனை விற்பனை செய்கிறார். இவர் தனது வேலையில் புதுமையைப் புகுத்தியிருக்கிறார், மேலும் நாவல் தேன், துளசி தேன், நெல்லித் தேன் போன்ற தாவரத் தேன்களையும் ஏற்படுத்தி வருகிறார். மதுகேஷ்வர் அவர்களே, தேன் உற்பத்தியில் உங்களின் நூதனக் கண்டுபிடிப்புகளும் வெற்றியும், உங்களுடைய பெயருக்குப் பொருள் சேர்க்கிறது.
நண்பர்களே, நம்முடைய பண்டைய மருத்துவ முறைகளில் தேனுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதை நீங்கள் அனைவரும் நன்கறிவீர்கள். ஆயுர்வேத நூல்களில் தேனை அமுதம் என்றே அழைத்திருக்கிறார்கள். தேன் என்பது, நமக்கு சுவையை மட்டும் அளிப்பதில்லை, உடல் ஆரோக்கியத்தையும் அளிக்கிறது. தேன் உற்பத்தியில் இன்று இந்த அளவுக்கு சாத்தியக்கூறுகள் என்பதால், தொழில்ரீதியான படிப்புகளை மேற்கொள்ளும் இளைஞர்களும் கூட இதன் மூலமாக சுயவேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட ஓர் இளைஞர் தான் உத்தர பிரதேசத்தின் கோரக்பூரைச் சேர்ந்த நிமித் சிங்க். நிமித் சிங் அவர்கள் தொழில்நுட்பத்தில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்கிறார். இவருடைய தந்தையார் மருத்துவர் என்றாலும், படித்த பிறகு நிமித் சிங் அவர்கள் சுயவேலைவாய்ப்புப் பாதையைத் தேர்ந்தெடுத்தார். இவர் தேன் உற்பத்தி செய்யும் வேலையைத் தொடங்கினார். தரக் கட்டுப்பாட்டிற்காக லக்னௌவில் தனக்கென ஒரு பரிசோதனைக் கூடத்தையும் உருவாக்கி இருக்கிறார். நிமித் அவர்கள் இப்போது தேன் மற்றும் தேன் மெழுகு வாயிலாக நன்கு வருவாய் ஈட்டி வருகிறார். மேலும் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று விவசாயிகளுக்குப் பயிற்சியும் அளித்து வருகிறார். இப்படிப்பட்ட இளைஞர்களின் கடும் உழைப்பின் காரணமாகவே இன்று தேசம் இத்தனை பெரிய தேன் உற்பத்தியாளராக ஆகி வருகிறது. தேசத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தேனின் அளவு அதிகரித்திருப்பது உங்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தும். தேசிய தேனீவளர்ப்பு மற்றும் தேன் இயக்கம் போன்ற இயக்கங்களை நாடு முடுக்கி விட்டதாலும், விவசாயிகளின் முழுமையான உழைப்பினாலும், நமது தேனின் சுவை, உலகெங்கிலும் சுவை கூட்டி வருகிறது. இதுமட்டுமல்ல, இந்தத் துறையில் மேலும் பல சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. நமது இளைஞர்கள் இந்த சந்தர்ப்பங்களோடு தங்களை இணைத்துக் கொண்டு, இவற்றால் ஆதாயமடைந்து, புதிய சாத்தியக்கூறுகளை சாத்தியமாக்குவார்கள் என்று நான் நம்புகிறேன்.
எனதருமை நாட்டுமக்களே, ஹிமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த மனதின் குரலின் நேயர் ஒருவரான ஆஷீஷ் பஹல் அவர்கள் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அவர் தனது கடிதத்தில் சம்பாவின் மிஞ்ஜர் மேலே என்பது பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். அதாவது மக்காச்சோளத்தின் மலர்களையே மிஞ்ஜர் என்று அழைக்கிறார்கள். மக்காச்சோளத்தில் மிஞ்ஜர் அதாவது அதன் மலர்கள் தோன்றும் போது, மிஞ்ஜர் விழாவும் கொண்டாடப்படுகிறது. மேலும் இந்தக் கொண்டாட்டத்தில், நாடெங்கிலுமிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். தற்போது இந்த மிஞ்ஜர் கொண்டாட்டம் நடைபெற்று வருவது ஒரு தற்செயல் நிகழ்வு. ஒருவேளை நீங்கள் ஹிமாச்சலுக்குச் சுற்றுலா சென்றிருக்கிறீர்கள் என்றால், இந்தக் கொண்டாட்டத்தைக் காண சம்பா செல்லலாம். சம்பா மிகவும் அழகான இடம், இங்கே நாட்டுப்பாடல்களில் மீண்டும்மீண்டும் என்ன கூறப்படுகிறது என்றால் – சம்பே இக் தின் ஓணா கனே மஹீனா ரைணா. அதாவது, ஒரு நாள் மட்டும் யாரெல்லாம் சம்பாவுக்கு வருகிறார்களோ, அவர்கள் இதன் அழகைக் கண்டு மயங்கி ஒரு மாதம் வரை தங்கி விடுவார்கள்.
நண்பர்களே, நமது தேசத்தில் கொண்டாட்டங்களுக்கென பெரிய கலாச்சார மகத்துவம் இருந்து வந்துள்ளது. விழாக்கள், மக்களையும் மனங்களையும் இணைக்கின்றன. ஹிமாச்சலில் ஏற்பட்ட மழைக்குப் பிறகு, முன்பட்டப் பயிர்கள் முதிர்ச்சி பெறத் தொடங்குகின்றன, அப்போது செப்டம்பரில், ஷிம்லா, மண்டி, குல்லு, சோலன் ஆகிய இடங்களில் சைரீ அல்லது சைர் கொண்டாடப்படுகிறது. செப்டம்பரில் ஜாக்ரா வரவிருக்கிறது. ஜாக்ராவின் கொண்டாட்டங்களில் மஹாசூ தேவதையை அழைத்து, பீஸூ கீதங்கள் பாடப்படுகின்றன. மஹாசூ தேவதையின் இந்தப் போற்றுதல், ஹிமாச்சலில் ஷிம்லா, கின்னௌர், சிர்மௌர் தவிர, உத்தராக்கண்டிலும் நடக்கிறது.
நண்பர்களே, நமது தேசத்தில் பல்வேறு மாநிலங்களில் பழங்குடியினங்களின் பல பாரம்பரியமான விழாக்கள் நடைபெறுகின்றன. இவற்றில் சில விழாக்கள் பழங்குடியினக் கலாச்சாரத்தோடு தொடர்புடையன, சில விழாக்கள், பழங்குடியின வரலாறு மற்றும் மரபோடு இணைந்தவை, எடுத்துக்காட்டாக, உங்களுக்கு ஒருவேளை வாய்ப்பு கிடைத்தால், தெலங்கானாவின் மேடாரமின், 4 நாட்கள் நடக்கக்கூடிய சமக்கா-சரலம்மா ஜாத்ரா விழாவைக் காணக் கண்டிப்பாகச் செல்லுங்கள். இந்த விழாவை தெலங்கானாவின் மஹாகும்பமேளா என்று அழைப்பார்கள். சரலம்மா ஜாத்ரா விழா, இரண்டு பழங்குடியினப் பெண் தலைவிகளான சமக்கா, சரலம்மா ஆகியோருக்கு மரியாதை செலுத்தும் வகையில் கொண்டாடப்படுகிறது. இது தெலங்கானாவில் மட்டும் இல்லை, மாறாக சத்தீஸ்கட், மஹாராஷ்ட்ரம், ஆந்திரப் பிரதேசத்தின் கோயா பழங்குடியினத்தவர்களின் நம்பிக்கைகளின் மையக்களம். ஆந்திரப் பிரதேசத்தின் மாரீதம்மா விழாவும் கூட, பழங்குடியினச் சமூகத்தின் நம்பிக்கைகளோடு இணைந்த ஒரு விழா. ஆனி அமாவாசை தொடங்கி ஆடி அமாவாசை வரை நடைபெறும் இந்த மாரீதம்மா விழாவில், இங்கிருக்கும் பழங்குடியினச் சமூகம், இதை சக்தி உபாசனையோடு இணைக்கிறது. கிழக்கு கோதாவரியின் பெத்தாபுரத்தில் கோயிலும் இருக்கிறது. இதைப் போலவே, ராஜஸ்தானத்தின் கராசியா பழங்குடியினத்தவர் சித்திரையின் வளர்பிறை சதுர்தசியை, சியாவாத் திருவிழா அல்லது மன்கான் ரோ திருவிழா என்று பெயரிட்டுக் கொண்டாடுகிறார்கள்.
சத்தீஸ்கட்டின் பஸ்தரைச் சேர்ந்த நாராயண்புரில் மாவ்லீ விழாவும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அருகே இருக்கும் மத்திய பிரதேசத்திலே, பகோரியா விழா மிகவும் பிரசித்தமானது. பகோரியா விழாவின் தொடக்கம், போஜ ராஜா காலத்தில் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அப்போது பீல் ராஜாவான காஸூமராவும் பாலூனும், அவரவர் தலைநகரங்களில் முதன்முறையாக இந்தக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்கள். அப்போது முதல் இன்று வரை, இந்த விழாவானது, அதே அளவு உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டு வருகின்றது. இதைப் போலவே, குஜராத்தின் தர்ணேதர், மாதோபூர் போன்ற பல விழாக்கள் மிகவும் பிரசித்தமானவை. திருவிழாக்கள் என்பன இயல்பாகவே நமது சமூகத்தில், வாழ்க்கையில் ஆற்றலுக்கான ஊற்றுக்களாக விளங்குகின்றன. உங்களுக்கு அருகிலே இப்படிப்பட்ட பல திருவிழாக்கள் நடந்து வரலாம். நவீனகாலத்தில், சமூகத்தின் தொன்மையான தொடர்புகள், ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வினை பலப்படுத்த மிகவும் அவசியமானது. நமது இளைஞர்களை இதோடு நாம் இணைக்க வேண்டும், நீங்கள் எப்போதெல்லாம் இத்தகைய திருவிழக்களுக்குச் சென்றாலும், அங்கே காணப்படும் காட்சிகளைப் படம்பிடித்து சமூக ஊடகங்களில் பகிருங்கள். நீங்கள் விரும்பினால், ஒரு சிறப்பான ஹேஷ்டேகைக் கூட பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலமாக அந்தத் திருவிழாக்கள் பற்றி மற்றவர்களும் தெரிந்து கொள்வார்கள். நீங்கள் கலாச்சார அமைச்சகத்தின் இணையத்தளத்திலும் நீங்கள் எடுத்த படங்களைத் தரவேற்றம் செய்யலாம். அடுத்த சில தினங்களில் கலாச்சார அமைச்சகம் ஒரு போட்டியைத் தொடங்க இருக்கிறது, அதிலே திருவிழாக்கள் தொடர்பான மிகவும் அருமையான படங்களை அனுப்புவோருக்குப் பரிசுகள் வழங்கப்படும். சரி, இனியும் ஏன் தாமதிக்கிறீர்கள்? உடனே விழாக்களைச் சுற்றிப் பாருங்கள், அவற்றின் படங்களைப் பகிருங்கள், உங்களுக்குப் பரிசு கிடைக்கலாம், இல்லையா!!
என் கனிவுநிறை நாட்டுமக்களே, உங்களுக்கு நினைவிருக்கலாம், மனதின் குரலின் ஒரு பகுதியில், பொம்மைகள் ஏற்றுமதியில் முதலிடம் பெறும் ஆற்றல் பாரதத்திடம் இருப்பதாக நான் கூறியிருந்தேன், அல்லவா? விளையாட்டுக்களில் பாரத நாட்டின் நிறைவான பாரம்பரியம் பற்றிக் குறிப்பாக நான் விவாதித்திருந்தேன். பாரத நாட்டின் வட்டார பொம்மைகள் – பாரம்பரியம், இயற்கை என இரண்டுக்கும் இசைவானதாக இருக்கின்றது, அதாவது சூழலுக்கு இசைவானவையாக இருக்கின்றன. நான் இன்று உங்களோடு பாரத நாட்டுப் பொம்மைகளின் வெற்றியைப் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். நம்முடைய இளைஞர்கள், ஸ்டார்ட் அப்புகள், தொழில் முனைவோர் காரணமாக நமது பொம்மைத் தொழில் சாதித்திருக்கும் சாதனைகளும், பெற்றிருக்கும் வெற்றிகளும் உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்டவை. இன்று பாரதநாட்டு விளையாட்டுப் பொருட்கள் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கையில், உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்பதன் எதிரொலி அனைத்து இடங்களிலிருந்தும் எதிரொலிக்கிறது. பாரதத்தில் இப்போது, அயல்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விளையாட்டுப் பொருட்களின் எண்ணிக்கை, தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. முன்பெல்லாம் இங்கே 3000 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட விளையாட்டுப் பொருட்கள் வெளியிலிருந்து வந்தன, அதுவே இப்போது 70 சதவீதம் குறைந்திருப்பது சந்தோஷம் அளிப்பதாகும்; அதே வேளையில் பாரதம், 2600 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான விளையாட்டுப் பொருட்களை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறது. முன்பெல்லாம் 300-400 கோடி ரூபாய் பெறுமானமுள்ள விளையாட்டுப் பொருட்கள் தாம் பாரதத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இந்தச் சாதனைகள் அனைத்தும் கொரோனா காலகட்டத்தில் நடந்துள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். பாரதத்தின் விளையாட்டுப் பொருட்கள் துறையானது இந்த மாற்றத்தை ஏற்படுத்திக் காட்டியிருக்கிறது. இந்தியத் தயாரிப்பாளர்கள் இப்போது, இந்தியப் புராணங்கள், வரலாறு மற்றும் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட விளையாட்டுப் பொருட்களைத் தயாரித்து வருகின்றார்கள். தேசத்தின் பல இடங்களில் விளையாட்டுப் பொருட்களின் தொகுதிகள், விளையாட்டுப் பொருட்களைத் தயாரிக்கும் சின்னச்சின்ன தொழில்முனைவோர், இவர்கள் இதனால் பயனடைந்து வருகிறார்கள். இந்தச் சிறிய தொழில்முனைவோர் தயாரிக்கும் விளையாட்டுப் பொருட்கள் இப்போது உலகெங்கும் பயணிக்கிறது. பாரதத்தின் விளையாட்டுப் பொருள் தயாரிப்பாளர்கள், உலகின் முக்கியமான உலக அளவிலான விளையாட்டுப் பொருட்கள் ப்ராண்டுகளோடு இணைந்தும் பணிபுரிந்து வருகிறார்கள். நம்முடைய ஸ்டார்ட் அப் துறையும் கூட, விளையாட்டுப் பொருட்களின் உலகின் மீது முழுக்கவனத்தையும் செலுத்தி வருகிறது. அவர்கள் இந்தத் துறையில் பல சுவாரசியமான விஷயங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். பெங்களூரூவில், ஷூமி பொம்மைகள் என்ற பெயர் கொண்ட ஒரு ஸ்டார்ட் அப், சூழலுக்கு ஏற்புடைய பொம்மைகளின் மீது கவனம் செலுத்தி வருகிறது. குஜராத்தின் Arkidzoo-ஆர்க்கிட்ஜூ என்ற நிறுவனம், மெய்நிகர் தொழில்நுட்பத்தின் முன்னேறிய வடிவமான Augmented realityயை ஆதாரமாகக் கொண்ட மின்னட்டைகள், அதனை ஆதாரமாகக் கொண்ட கதைப் புத்தகங்கள் ஆகியவற்றைத் தயாரித்து வருகிறது. புணேயின் நிறுவனமான ஃபன்வென்ஷன் லேர்னிங், விளையாட்டுப் பொருட்கள் மற்றும் செயல்பாட்டுப் புதிர்கள் வாயிலாக அறிவியல், தொழில்நுட்பம், கணிதம் ஆகியவற்றின் மீது பிள்ளைகளுக்கு ஆர்வத்தை அதிகரிப்பதில் ஈடுபட்டு வருகிறது. விளையாட்டுப் பொருட்கள் உலகத்தில் இத்தகைய அருமையான செயல்களைப் புரிந்து வரும் அனைத்துத் தயாரிப்பாளர்களுக்கும், ஸ்டார்ட் அப்புகளுக்கும் நான் பலப்பல பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாருங்கள், நாமனைவருமாக இணைந்து, பாரதநாட்டு விளையாட்டுப் பொருட்களை உலகெங்கிலும், மேலும் விரும்பத்தக்கவையாக ஆக்குவோம். இதோடு கூடவே, நான் காப்பாளர்களிடம் விடுக்கும் வேண்டுகோள், நீங்களும் இயன்றவரை அதிக அளவில் இந்திய விளையாட்டுப் பொருட்கள், புதிர்கள், பொம்மைகளை வாங்குங்கள் என்பது தான்.
நண்பர்களே, வகுப்பறையாகட்டும், விளையாட்டு மைதானமாகட்டும், இன்று நமது இளைஞர்கள், அனைத்துத் துறைகளிலும் தேசத்திற்குப் பெருமை சேர்த்து வருகின்றார்கள். இந்த மாதம், பி.வி. சிந்து சிங்கப்பூர் ஓப்பன் போட்டியில் முதன்முறையாக வெற்றி பெற்றிருக்கிறார். நீரஜ் சோப்ராவும் தனது மிகச் சிறப்பான வெளிப்பாட்டால், உலக தடகளப் போட்டிகளில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் பெற்றுத் தந்திருக்கிறார். அயர்லாந்தின் பேரா பேட்மிண்டன் இண்டர்நேஷனல் - மாற்றுத் திறனாளிகளுக்கான பூப்பந்தாட்டப் போட்டியிலும் கூட, நமது விளையாட்டு வீரர்கள் 11 பதக்கங்களை வென்று தேசத்திற்குப் பெருமிதம் சேர்த்திருக்கிறார்கள். ரோம் நகரில் நடைபெற்ற உலக கேடட் மல்யுத்தப் போட்டியிலும் பாரத நாட்டு விளையாட்டு வீரர்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார்கள். நமது தடகளச் சாதனையாளர்கள், இந்த கிரேக்க ரோமானியப் போட்டியில் அபாரமாகச் செயல்பட்டிருக்கிறார்கள். அவர்கள் 32 ஆண்டுகள் என்ற நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் போட்டியில் மல்யுத்தத்தில் தங்கப்பதக்கத்தை வென்றிருக்கிறார்கள். விளையாட்டு வீரர்களைப் பொறுத்த மட்டிலே, இந்த மாதம் முழுவதுமே செயல்பாடுகள் நிறைந்த சுறுசுறுப்பான மாதமாக இருந்திருக்கிறது. சென்னையில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் புரவலர்களாக இருப்பது கூட, பாரத நாட்டிற்கு மிகப்பெரிய கௌரவம் அளிக்கக்கூடிய விஷயம். ஜூலை மாதம் 28ஆம் தேதியன்று இந்தப் போட்டி தொடங்கியது, இதன் தொடக்க நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் நல்வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இதே நாளன்று, இங்கிலாந்தில் காமன்வெல்த் விளையாட்டுக்களும் தொடங்கின. உற்சாகம் கொப்பளிக்கும் இந்திய இளைஞர் அணி, தேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. நான் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும், தடகள வீரர்களுக்கும் நாட்டுமக்கள் தரப்பில் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஃபீஃபா 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியையும் பாரதம் நடத்த இருக்கிறது என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்தப் போட்டி அக்டோபர் மாத வாக்கில் நடைபெறும், இது விளையாட்டுக்கள் மீது பெண் குழந்தைகளின் உற்சாகத்தை அதிகரிக்கும்.
நண்பர்களே, சில நாட்கள் முன்பாக நாடெங்கிலும் 10ஆவது, 12ஆவது வகுப்புத் தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. கடினமாக உழைத்து, ஈடுபாட்டோடு வெற்றியை அடைந்திருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் நான் என் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன். பெருந்தொற்றுக் காலமான, கடந்த ஈராண்டுகள், மிகவும் சவால் நிறைந்தவையாக இருந்தன. இந்தச் சூழ்நிலைகளிலும் நமது இளைஞர்கள் மிகுந்த நெஞ்சுரத்தையும், சுயகட்டுப்பாட்டையும் வெளிப்படுத்தியிருப்பது மிகவும் பாராட்டுதல்களுக்கு உரியது. அனைவரின் பொன்னான எதிர்காலத்திற்கான என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனதருமை நாட்டுமக்களே, இன்று நாம் சுதந்திரத்தின் 75 ஆண்டுகள் தொடர்பாக, தேசத்தின் பயணத்தோடு நமது விவாதத்தைத் தொடங்கினோம். அடுத்த முறை நாம் சந்திக்கும் போது, நமது அடுத்த 25 ஆண்டுகளின் பயணம் தொடங்கியிருக்கும். நமது இல்லம், நம்மைச் சேர்ந்தோர் இல்லங்களில், நமக்கு மிகவும் பிரியமான மூவண்ணக் கொடி பறக்கட்டும், இதன் பொருட்டு நாமனைவரும் ஒன்றிணைய வேண்டும். நீங்கள் அனைவரும் இந்த முறை, சுதந்திரத் திருநாளை எப்படிக் கொண்டாடினீர்கள், சிறப்பாக என்னவெல்லாம் செய்தீர்கள் என்பதை எல்லாம் கண்டிப்பாக என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். அடுத்த முறை நாம் நமது இந்த அமுதகாலத்தின் பல்வேறு வண்ணங்கள் பற்றி மீண்டும் உரையாடி மகிழ்வோம், விடை தாருங்கள் நண்பர்களே, பலப்பல நன்றிகள்.
என் மனம் நிறை நாட்டுமக்களே, வாழ்க்கையில் வானத்தோடு தொடர்புடைய கற்பனைகளில் திளைக்காதவர்கள் என்று நம்மில் யாருமே இருக்க மாட்டார்கள், இல்லையா!! சிறுவயதில் அனைவரையுமே நிலவு-நட்சத்திரங்கள் பற்றிய கதைகள் என்றுமே கவர்ந்து வந்திருக்கின்றன. இளைஞர்களைப் பொறுத்த மட்டிலே வானைத் தொடுவது, கனவுகளை மெய்ப்படுவதற்கு இணையானதாக இருக்கிறது. இன்று நமது பாரதம், இத்தனைத் துறைகளில் வெற்றிகள் என்ற வானைத் தொடும் வேளையில், வானம் அல்லது விண் என்பது எப்படி விலகி இருக்க முடியும்! கடந்த சில காலமாகவே நமது தேசத்தில் விண்வெளித் துறையோடு இணைந்த பல பெரிய பணிகள் நடந்திருக்கின்றன. தேசத்தின் இந்தச் சாதனைகளில் ஒன்று தான் In-Space என்ற நிறுவனம் நிறுவப்பட்டது. இது எப்படிப்பட்ட நிறுவனம் என்றால், பாரதத்திலே, விண்வெளித்துறையிலே, பாரதத்தின் தனியார் துறைக்கு சந்தர்ப்பங்களை ஊக்குவிக்கிறது. இந்தத் தொடக்கமானது, நமது தேசத்தின் இளைஞர்களைக் குறிப்பாக கவர்ந்திருக்கிறது. இதோடு தொடர்புடைய பல செய்திகள், பல இளைஞர்களிடமிருந்து எனக்கு வந்திருக்கிறது. சில நாட்கள் முன்பாக In-Spaceஇன் தலைமையகத்தைத் திறந்து வைக்கச் சென்றிருந்த போது, அங்கே பல இளைஞர்களின் ஸ்டார்ட் அப்புகளின் புதிய எண்ணங்களையும், உற்சாகத்தையும் என்னால் பார்க்க முடிந்தது. கணிசமான நேரம் வரை நான் அவர்களோடு உரையாடிக் கொண்டிருந்தேன். அவர்களைப் பற்றி நீங்களும் தெரிந்து கொண்டீர்களானால், நீங்களும் ஆச்சரியத்தில் திக்குமுக்காடிப் போவீர்கள். எடுத்துக்காட்டாக விண்வெளி தொடர்பான ஸ்டார்ட் அப்புகளின் எண்ணிக்கையையும், வேகத்தையுமே எடுத்துக் கொள்ளலாமே!! இன்றிலிருந்து சில ஆண்டுகள் முன்புவரை நமது தேசத்திலே, விண்வெளித்துறையில், ஸ்டார்ட் அப்புகள் என்பது குறித்து யாருமே யோசித்திருக்கவே மாட்டார்கள். இன்று இவற்றின் எண்ணிக்கை நூறையும் தாண்டி விட்டது. இந்த ஸ்டார்ட் அப்புகள் செயல்பட்டு வரும் கருத்து பற்றி ஒன்று முன்பு யாரும் சிந்தித்துக் கூட பார்க்கவில்லை, அல்லது இது தனியார் துறையால் செய்ய சாத்தியமில்லாததாகக் கருதப்பட்டது. எடுத்துக்காட்டாக, சென்னை மற்றும் ஹைதராபாதைச் சேர்ந்த இரண்டு ஸ்டார்ட் அப்புகளான அக்னிகுல் மற்றும் ஸ்கைரூட். இந்த ஸ்டார்ட் அப்புகள் மேம்படுத்தி வரும் ஏவு வாகனங்களால் விண்வெளியில் சிறிய payloadகளை, அதாவது சுமைகளையும் கொண்டு செல்ல முடியும். இதனால் விண்ணில் ஏவுவதற்கான செலவு மிகவும் குறையும் என்று அனுமானிக்கப்படுகிறது. இதைப் போல ஹைதராபாதின் மேலும் ஒரு ஸ்டார்ட் அப்பான துருவா ஸ்பேஸானது, சேடிலைட் ட்ப்ளாயர், அதாவது, விண்கல வரிசைப்படுத்தி மற்றும் விண்கலங்களுக்காக உயர் தொழில்நுட்ப சூரியத்தகடுகள் பற்றி பணியாற்றி வருகிறது. நான் மேலும் ஒரு விண்வெளி ஸார்ட் அப்பான திகந்தராவின் தன்வீர் அஹ்மதையும் சந்தித்தேன், இவர் விண்வெளியில் இருக்கும் குப்பைக் கூளங்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். விண்வெளியில் குப்பைகளை அகற்றக்கூடிய வகையிலான ஒரு தொழில்நுட்பத்தை அவர் வடிவமைக்க வேண்டும் என்ற சவாலையும் நான் அவருக்கு விடுத்து வந்திருக்கிறேன். திகந்தராவாகட்டும், துருவா ஸ்பேஸ் ஆகட்டும், இரண்டுமே ஜூன் 30 அன்று இஸ்ரோவின் ஏவு வாகனத்திலிருந்து தங்களுடைய முதல் ஏவுதலை மேற்கொள்ள இருக்கின்றன. இதைப் போலவே, பெங்களூருவின் ஒரு விண்வெளி ஸ்டார்ட் அப்பான Astromeஇன் நிறுவனரான நேஹாவும் கூட ஒரு அருமையான விஷயம் தொடர்பாகப் பணியாற்றி வருகிறார். இந்த ஸ்டார்ட் அப் உருவாக்கி வரும் ஆண்டெனாக்கள், சிறியவையாக மட்டும் இருக்காது, இவை விலை மலிவானவையாகவும் இருக்கும். இந்தத் தொழில்நுட்பத்திற்கான தேவை உலகம் முழுவதிலும் ஏற்படும்.
நண்பர்களே, In-Spaceஇன் செயல்திட்டத்திலே, மெஹசாணாவைச் சேர்ந்த ஒரு பள்ளி மாணவியான தன்வீ படேலையும் நான் சந்தித்தேன். இவர் ஒரு மிகச் சிறிய செயற்கைக்கோள் மீது பணியாற்றி வருகிறார், இது அடுத்த சில மாதங்களிலே விண்வெளியிலே ஏவப்பட இருக்கிறது. தன்னுடைய செயல்பாடு குறித்து மிகச் சரளமாக தன்வீ என்னிடம் குஜராத்தியிலே விளக்கினார். தன்வியைப் போலவே தேசத்தில் கிட்டத்தட்ட 750 பள்ளி மாணவர்கள், அமிர்தப் பெருவிழாவில் 75 செயற்கைக்கோள்கள் தொடர்பாகப் பணியாற்றி வருகிறார்கள், இதில் மேலும் சந்தோஷமளிக்கும் விஷயம் என்னவென்றால், இதில் அதிகப்பட்ச மாணவர்கள் தேசத்தின் சிறிய நகரங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தான்.
நண்பர்களே, இந்த இளைஞர்களின் மனதிலே தான், இன்றிலிருந்து சில ஆண்டுகள் முன்பாக விண்வெளித்துறை பற்றிய ஒரு பிம்பமானது, ஏதோ ஒரு ரகசியத் திட்டம் போல இருந்தது; ஆனால் தேசத்தில் அரங்கேற்றப்பட்ட விண்வெளிச் சீர்திருத்தங்கள் காரணமாக, இதே இளைஞர்கள் இப்போது தங்களுடைய செயற்கைக்கோள்களையே ஏவுகிறார்கள். தேசத்தின் இளைஞர்கள் விண்ணைத் தொட ஆர்வமாக இருக்கும் போது, எப்படி நமது தேசம் பின் தங்கியிருக்க முடியும் சொல்லுங்கள் ?
என் மனம்நிறை நாட்டுமக்களே, மனதின் குரலில் நாம் கலந்துரையாட இருக்கும் ஒரு விஷயம் குறித்து நீங்கள் கேட்டீர்கள் என்றால், உங்கள் மனம் குதூகலத்தில் கூத்தாடும், உங்களுக்கும் கருத்தூக்கம் பிறக்கும். கடந்த நாட்களில், ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நமது வெற்றியாளரான நீரஜ் சோப்டா மீண்டும் செய்திகளில் நிறைந்திருக்கிறார். ஒலிம்பிக்கிற்குப் பிறகு இவர், ஒன்றன் பின் ஒன்றாக புதியபுதிய வெற்றிகளை நிறுவிக் கொண்டிருக்கிறார். ஃபின்லாந்தில் பாவோ நூர்மி விளையாட்டுக்களில் நீரஜ் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருக்கிறார். இதுமட்டுமல்ல, ஈட்டி எறிதலில் இவர் தான் ஏற்படுத்திய பதிவினைத் தானே தகர்த்திருக்கிறார். Kuortane விளையாட்டுக்களில் நீரஜ், மீண்டும் ஒரு முறை தங்கம் வென்று தேசத்திற்குப் பெருமை சேர்த்திருக்கிறார். அதுவும் அங்கே வானிலை மிக மோசமாக இருந்த சூழ்நிலையிலும் கூட இவர் தங்கம் வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தன்னம்பிக்கை தான் இன்றைய இளைஞர்களின் அடையாளம். ஸ்டார்ட் அப்புகள் தொடங்கி விளையாட்டுக்களின் உலகம் வரை, பாரதத்தின் இளைஞர்கள் புதியபுதிய சாதனைகளைப் படைத்து வருகிறார்கள். இப்போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கேலோ இந்தியா இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளிலும் நமது விளையாட்டு வீரர்கள் பல புதிய பதிவுகளை ஏற்படுத்தி இருக்கின்றார்கள். இந்த விளையாட்டுக்களில் மொத்தம் 12 பதிவுகள் தகர்க்கப்பட்டன என்பதும், 11 பதிவுகள் வீராங்கனைகளால் செய்யப்பட்டன என்பதும் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கலாம். மணிப்பூரின் எம். மார்ட்டினா தேவி, பளுதூக்கல் போட்டியில் எட்டு புதிய பதிவுகளை ஏற்படுத்தி இருக்கிறார்.
இதைப் போலவே, சஞ்ஜனா, சோனாக்ஷீ, பாவ்னா ஆகியோரும் கூட தனித்தனியே சாதனைகளைப் படைத்திருக்கிறார்கள். இனிவரவிருக்கும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில், பாரதம் எத்தனை வலுவானதாக இருக்கும் என்பதைத் தங்களுடைய கடும் உழைப்பு வாயிலாக இந்த வீராங்கனைகள் அறிவித்துவிட்டார்கள். நான் இந்த அனைத்து வீரர் வீராங்கனைகளுக்கும் என் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன், வருங்காலத்திற்கான நல்வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன்.
நண்பர்களே, கேலோ இந்தியா இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் மேலும் ஒரு சுவாரசியமான விஷயம் உண்டு. இந்த முறையும், பல புதிய திறமைகள் வெளிப்பட்டன, இவற்றுக்குச் சொந்தக்காரர்கள் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இந்த விளையாட்டு வீரர்கள் தங்கள் வாழ்க்கையில் நிறைய போராடியிருக்கிறார்கள், இன்று வெற்றி என்ற இலக்கை அடைந்திருக்கிறார்கள். இவர்களுடைய வெற்றியில், இவர்களுடைய குடும்பத்தார், தாய் தந்தையருக்கும் மிகப்பெரிய பங்களிப்பு இருக்கிறது.
70 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டுவதில் தங்கம் வென்ற ஸ்ரீநகரைச் சேர்ந்த ஆதில் அல்தாஃபின் தந்தை தையல்காரர் என்றாலும் இவர் தனது மகனின் கனவுகளை நிறைவேற்ற, எந்த ஒரு முயற்சியையும் விட்டு வைக்கவில்லை. இன்று ஆதில் தனது தந்தைக்கும், ஜம்மு கஷ்மீர் முழுவதற்கும் பெருமிதம் சேர்த்திருக்கிறார். பளு தூக்குதலில் தங்கம் வென்ற சென்னையைச் சேர்ந்த எல். தனுஷின் தந்தையுமே கூட ஒரு எளிய மரத்தச்சர் தான். சாங்க்லியைச் சேர்ந்த பெண்ணான காஜோல் சர்காரின் தந்தை ஒரு தேநீர் விற்பனையாளர்; காஜோல் தனது தந்தையாரின் வேலையில் உதவி செய்து கொண்டே, கூடவே பளு தூக்குதல் பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தார். இவருடைய, குடும்பத்தாருடைய உழைப்பு மணம் சேர்த்திருக்கிறது, பளு தூக்குதல் போட்டியில் காஜோல் பல பாராட்டுக்களைப் பெற்றிருக்கிறார். இதைப் போன்றதொரு அற்புதத்தை நிகழ்த்திக் காட்டியிருப்பவர் தான் ரோஹ்தக்கைச் சேர்ந்த தனுவும். தனுவின் தந்தை ராஜ்பீர் சிங், ரோஹ்தக்கின் ஒரு பள்ளியில் பேருந்து ஓட்டுநர். மல்யுத்தப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தனு, தானும், தனது குடும்பத்தாரும், தனது தந்தையும் கண்ட கனவை மெய்ப்பித்திருக்கிறார்.
நண்பர்களே, விளையாட்டு உலகிலே, இப்போது பாரதநாட்டு விளையாட்டு வீரர்களின் தாக்கம் அதிகரித்து வருகிறது, கூடவே, பாரதநாட்டு விளையாட்டுக்களும் தங்களுக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி வருகின்றன. எடுத்துக்காட்டாக, இந்த முறை கேலோ இந்தியா இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில், ஒலிம்பிக்ஸிலே இடம்பெறும் போட்டிகளைத் தவிர, ஐந்து சுதேசி விளையாட்டுக்களும் இடம் பெற்றிருந்தன. இந்த ஐந்து விளையாட்டுக்கள், கதகா, தாங்க் தா, யோகாஸனம், களறிப்பாயட்டு, மல்லகம்ப் ஆகியன.
நண்பர்களே, பாரதத்திலே ஒரு விளையாட்டிற்கான சர்வதேசப் போட்டி நடைபெற இருக்கிறது; இந்த விளையாட்டு பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக இந்தியாவிலே பிறந்தது. இந்தப் போட்டி ஜூலை மாதம் 28ஆம் நாள் தொடங்க இருக்கிறது, அது தான் சதுரங்க ஒலிம்பியாட். இந்த முறை, சதுரங்க ஒலிம்பியாடில், 180க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்க இருக்கின்றன. விளையாட்டு மற்றும் உடலுறுதி தொடர்பான நமது இன்றைய விவாதப் பொருள், மேலும் ஒரு பெயர் இல்லாமல் போனால் நிறைவானதாக இருக்காது. அந்தப் பெயர் தான் தெலங்கானாவைச் சேர்ந்த மலையேறும் வல்லுநரான பூர்ணா மாலாவத். பூர்ணா செவன் சம்மிட் சேலஞ்ஜ் என்ற ஏழு சிகரச் சவாலை வென்று, மேலும் ஒரு சாதனையைப் புரிந்திருக்கிறார். உலகின் ஏழு மிகக் கடினமான, உயரமான மலைகளின் மீது ஏறும் சவால். பூர்ணா தனது அசகாய நம்பிக்கையின் துணையோடு, வடக்கு அமெரிக்காவின் மிக உயரமான சிகரமான மவுண்ட் தேனாலீ மீது ஏறி, தேசத்திற்குப் பெருமை சேர்த்தார். பூர்ணா என்ற இந்தப் பெண் யார் தெரியுமா? வெறும் 13 வயதிலேயே, எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறி, அற்புதமான சாதனையைப் படைத்த வீராங்கனை தான் இந்த பூர்ணா.
நண்பர்களே, விளையாட்டுக்கள் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கும் வேளையில், இன்று பாரதத்தின் அதிகத் திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்களில் ஒருவரான மிதாலீ ராஜ் பற்றிப் பேச நான் விரும்புகிறேன். இவர், இந்த மாதம் கிரிக்கெட் போட்டியிலிருந்து நிரந்தரமாக ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார், இது பல விளையாட்டுப் பிரியர்களை உணர்ச்சிவயப்படச் செய்திருக்கிறது. மிதாலி ஒரு அசாதாரணமான விளையாட்டு வீரர் மட்டுமல்ல, பல விளையாட்டு வீரர்களுக்கு இவர் ஒரு உத்வேக காரணியாகவும் இருந்திருக்கிறார். நான் மிதாலிக்கு, அவரது வருங்காலத்திற்கான ஏராளமான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனதருமை நாட்டுமக்களே, குப்பையிலிருந்து செல்வம் என்ற கருத்தோடு தொடர்புடைய பல முயற்சிகள் பற்றி நாம் மனதின் குரலில் விவாதித்து வருகிறோம். இதனையொட்டிய ஒரு எடுத்துக்காட்டு, மிசோரமின் தலைநகரான ஐஜ்வாலில் நடந்திருக்கிறது. ஐஜ்வாலின் ஒரு அழகான ஆறு, சிடே லுயி. காலப்போக்கிலே இது, குப்பையும் மாசும் நிறைந்த ஒன்றாக மாறிப் போனது. கடந்த சில ஆண்டுகளில் இந்த நதியைக் காப்பாற்ற முயற்சிகள் தொடங்கப்பட்டன. இதற்காக வட்டார நிறுவனங்கள், சுயவுதவி அமைப்புகள், வட்டார மக்கள் ஆகிய அனைவருமாக இணைந்து, சிடே லுயியைக் காப்பாற்றுவோம் என்பது தொடர்பான செயல் திட்டம் ஒன்றையும் செயல்படுத்தி வருகிறார்கள். நதியைத் தூய்மைப்படுத்தும் இந்த இயக்கம், குப்பையிலிருந்து செல்வத்தை உருவாக்கும் சந்தர்ப்பத்தையும் உருவாக்கியளித்திருக்கிறது. உள்ளபடியே இந்த நதியிலும், இதன் கரையோரங்களிலும் பெரிய அளவில் நெகிழிப் பொருட்களின் குப்பை நிறைந்திருந்தது. நதியைக் காப்பாற்ற வேண்டி பணியாற்றி வரும் அமைப்பினர், இந்த நெகிழிப் பொருட்களிலிருந்து, சாலையை உருவாக்கத் தீர்மானம் செய்தார்கள். அதாவது நதியிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட நெகிழிப் பொருட்களைக் கொண்டு, மிஸோரமின் ஒரு கிராமத்திலே, மாநிலத்திலேயே முதன்முறையாக ஒரு சாலை போடப்பட்டது, அதாவது தூய்மையோடு கூடவே வளர்ச்சி.
நண்பர்களே, இப்படிப்பட்ட ஒரு முயற்சியைத் தான் புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர்கள் தங்களுடைய சுயவுதவி அமைப்புகள் வாயிலாகத் தொடங்கி இருக்கிறார்கள். புதுச்சேரி கடலோரப் பகுதி. அங்கிருக்கும் கடற்கரைகளையும், கடலையும் கண்டுகளிக்க மிக அதிகமான எண்ணிக்கையில் மக்கள் வருகிறார்கள். ஆனால் புதுச்சேரியின் கடற்கரையிலும் நெகிழிப் பொருட்களால் ஏற்படும் மாசு அதிகரித்துக் கொண்டிருந்தது. தங்களுடைய கடல் பகுதியில், கடல் கரைகளில், சுற்றுச்சூழலைப் பராமரிக்க, இந்தப் பகுதி மக்கள் ‘Recycling for Life’ வாழ்க்கைக்கான மறுசுழற்சி என்ற இயக்கத்தைத் தொடக்கினார்கள். இன்று புதுச்சேரியின் காரைக்கால் பகுதியில், ஆயிரக்கணக்கான கிலோ குப்பைகள் ஒவ்வொரு நாளும் சேகரிக்கப்பட்டு, பகுக்கப்படுகிறது. இவற்றில் மக்கும் குப்பைகள் மூலம் உரம் தயாரிக்கப்படுகிறது, பிற பொருட்கள் பிரிக்கப்பட்டு மறுசுழற்சிக்கு ஈடுபடுத்தப்படுகிறது. இதைப் போன்ற முயற்சிகள் உத்வேகம் அளிப்பவையாக இருப்பதோடு, ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழிகளுக்கு எதிராக பாரதம் செயல்படுத்தி வரும் இயக்கத்திற்கு விரைவும் கூட்டுகின்றது.
நண்பர்களே, நான் உங்களோடு உரையாடிக் கொண்டிருக்கும் வேளையில், ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஒரு விசித்திரமான சைக்கிள் பேரணி நடைபெற்று வருகிறது. நான் இதைப் பற்றியும் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். தூய்மை பற்றிய செய்தியைத் தாங்கிச் செல்லும் இந்த சைக்கிள் ஓட்டுபவர்களின் ஒரு குழு, சிம்லா தொடங்கி மண்டி வரை செல்கிறது. மலைப் பிரதேசத்தில் கிட்டத்தட்ட 175 கிலோமீட்டர்கள் தொலைவினை இந்தக் குழுவினர், சைக்கிள் மூலமாக நிறைவு செய்வார்கள். இந்தக் குழுவில் பெரியோரும் இருக்கிறார்கள், சிறுவர்களும் இருக்கிறார்கள். நமது சுற்றுச்சூழல் தூய்மையாக இருக்க வேண்டும், நமது மலைகளும் நதிகளும், கடல்களும் தூய்மையாக இருந்தால், நமது ஆரோக்கியமும் அதே அளவு சிறப்பானதாக இருக்கும். நீங்கள் இது போன்ற முயற்சிகளைப் பற்றிக் கண்டிப்பாக எனக்கு எழுதி வாருங்கள்.
என் இனிய நாட்டுமக்களே, நமது தேசத்திலே பருவமழை தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. பல மாநிலங்களில் மழை அதிகரித்து வருகிறது. நீர் மற்றும் நீர் பராமரிப்புத் திசையில் சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய தருணம் இது. பல நூற்றாண்டுகளாகவே இந்தப் பொறுப்பினை நமது நாட்டிலே, சமுதாயமானது இணைந்து ஏற்றுக் கொண்டு வந்திருக்கிறது. மனதின் குரலில் நாம் ஒரு முறை step wells, படிக்கிணறுகள் பாரம்பரியம் பற்றிப் பேசியிருக்கிறோம் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். படிகளில் இறங்கி எந்தப் பெரிய குளங்களை நாம் எட்டுகிறோமோ அவற்றைத் தான் நாம் படிக்கிணறுகள் என்று அழைக்கிறோம், இவற்றை வடநாட்டிலே பாவ்டீ என்கிறார்கள். ராஜஸ்தானின் உதய்பூரில் இப்படிப்பட்ட, பல்லாண்டுகள் பழமை வாய்ந்த ஒரு படிக்கிணறு இருக்கிறது – சுல்தான் கீ பாவ்டீ. இதனை ராவ் சுல்தான் சிங் தான் உருவாக்கினார் என்றாலும், புறக்கணிக்கப்பட்ட காரணத்தால் மெல்லமெல்ல இந்த இடம் வறண்டு போகத் தொடங்கி, இங்கே குப்பைக்கூளங்கள் நிறைந்த ஒன்றாக மாறிப் போனது. ஒரு நாள், சுற்றிப் பார்க்க வந்த சில இளைஞர்கள், இதைப் பார்த்து மிகவும் வருத்தப்பட்டார்கள். இந்த சுல்தான் கீ பாவ்டீ படிக்கிணற்றின் நிலையை மாற்றியமைக்க வேண்டும் என்று அப்போதே இந்த இளைஞர்கள் உறுதி பூண்டார்கள். இவர்கள் தங்களுடைய இந்த உறுதிப்பாட்டிற்கு வைத்த பெயர் சுல்தானிலிருந்து சுர் தான். இது என்னது, சுர் தான் என்று நீங்கள் யோசிக்கலாம்!! உள்ளபடியே, தங்களுடைய முயற்சிகளால் இந்த இளைஞர்கள், இந்தப் படிக்கிணற்றுக்கு உயிரூட்டியது மட்டுமல்ல, இதனை இசையின் ராகம் தானத்தோடும் இணைத்து விட்டார்கள். சுல்தான் கீ பாவ்டீ படிக்கிணற்றின் தூய்மைக்குப் பிறகு, இதை அழகுபடுத்திய பிறகு, அங்கே இசை நிகழ்ச்சிகள் அரங்கேறுகின்றன. இது எந்த அளவுக்கு விவாதப் பொருளாக ஆகி இருக்கிறது என்றால், அயல்நாடுகளிலிருந்தும் பலர் இதைப் பார்ப்பதற்காகவே வரத் தொடங்கி இருக்கிறார்கள். இந்த வெற்றிகரமான முயற்சியில் மிக விசேஷமான விஷயம் என்னவென்றால், இந்த இயக்கத்தைத் தொடங்கிய இளைஞர்கள் பட்டயக் கணக்காயர்கள் தாம். யதேச்சையாக, இப்போதிலிருந்து சில நாட்கள் கழித்து, ஜூலை மாதம் முதல் தேதியன்று பட்டயக் கணக்காளர்கள் தினம் வருகிறது. நான் தேசத்தின் அனைத்துப் பட்டயக் கணக்காளர்களுக்கும் முதற்கண் என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் நமது நீர் நிலைகளை, இசை, இன்னும் பிற சமூக நிகழ்ச்சிகளோடு இணைத்து, இவை பற்றி இப்படிப்பட்ட விழிப்புணர்வினை ஏற்படுத்தலாமே. நீர் பராமரிப்பு என்பது உண்மையில் உயிர்ப் பாதுகாப்பு. நீங்களே கவனித்திருக்கலாம், இப்போதெல்லாம் நிறைய நதி உற்சவங்கள் நடைபெறத் தொடங்கி விட்டன. உங்கள் நகரங்களிலும் கூட இதைப் போன்ற நீர்நிலை இருந்தால், அங்கே ஏதோ ஒரு வகையில் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்.
எனதருமை நாட்டுமக்களே, நமது உபநிஷதங்களில் ஒரு உயிர் மந்திரம் உண்டு – சரைவேதி சரைவேதி சரைவேதி – நீங்கள் கண்டிப்பாக இந்த மந்திரத்தைக் கேட்டிருக்கலாம். இதன் பொருள் – சென்று கொண்டே இரு, சென்று கொண்டே இரு என்பது தான். இந்த மந்திரம் நமது தேசத்திலே ஏன் மிகவும் விரும்பப்படும் ஒன்றாக இருக்கிறது என்றால், தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருத்தல், இயங்கிக் கொண்டு இருத்தல் என்பது தான் நமது இயல்புநிலை. ஒரு நாடு என்ற முறையிலே, நாம், ஆயிரக்கணக்கான வளர்ச்சிப் பயணத்தை மேற்கொண்டு தான் இங்கே வந்து சேர்ந்திருக்கிறோம். ஒரு சமுதாயம் என்ற வகையிலே, நாம் எப்போதும், புதிய எண்ணங்கள், புதிய மாற்றங்களை ஏற்றுக் கொண்டு முன்னேறிச் சென்றிருக்கிறோம். இதன் பின்னே, நமது கலாச்சார வேகத் தன்மை, பயணங்கள் ஆகியவற்றின் மிகப்பெரிய பங்களிப்பு இருக்கிறது. ஆகையினால் தான் நமது ரிஷிகளும் முனிவர்களும், தீர்த்தயாத்திரை போன்ற தார்மீகக் கடமைகளை நமக்கு அளித்திருக்கிறார்கள். பல்வேறு தீர்த்த யாத்திரைகளை நாம் அனைவரும் மேற்கொள்கிறோம். இந்த முறை சார்தாம் யாத்திரையில் எந்த அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் பக்தர்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள், என்பதை நீங்களே கூட கவனித்திருக்கலாம். நமது தேசத்திலே பல்வேறு சமயங்களில் பல்வேறு தேவ யாத்திரைகள் நடைபெறுகின்றன. தேவ யாத்திரைகள், அதாவது, இதில் பக்தர்கள் மட்டுமல்ல, நமது பகவானே கூட யாத்திரை மேற்கொள்கிறார். சில நாட்கள் கழித்து, ஜூலை மாதம் 1ஆம் தேதியன்று பகவான் ஜகன்னாதரின் புகழ்மிக்க யாத்திரை தொடங்க இருக்கிறது. ஒடிஷாவின், புரியின் யாத்திரை பற்றி நாட்டுமக்கள் அனைவருக்கும் தெரியும். பகவான் ஜகன்னாதரின் யாத்திரை ஆஷாட மாத துவிதியையில் தொடங்குகிறது. ஆஷாடஸ்ய துவிதீயதிவசே… ரதயாத்திரை, என்று நமது புனித நூல்களில், சம்ஸ்கிருத சுலோகங்கள் வாயிலாக வர்ணிக்கப்பட்டிருக்கிறது. குஜராத்தின் அஹ்மதாபாதிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆஷாட மாத துவிதியையில் ரதயாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. நான் குஜராத்தில் இருந்தேன், அப்போது ஒவ்வொரு ஆண்டும் இந்த யாத்திரையில் சேவை செய்யும் பாக்கியம் கிடைத்து வந்தது. ஆஷாட துவிதீயை, இதை ஆஷாடீ பீஜம் என்றும் அழைப்பார்கள்; இந்த தினத்திலிருந்து தான் கட்ச் பகுதியின் புத்தாண்டும் தொடங்குகிறது. கட்ச் பகுதியைச் சேர்ந்த எனது அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இது எனக்கு மேலும் ஒரு காரணத்தின் பொருட்டு விசேஷமானது – ஆஷாட துவிதீயாவிலிருந்து ஒரு நாள் முன்பாக, அதாவது ஆஷாட மாதத்தின் முதல் திதியன்று நாங்கள் குஜராத்தில் ஒரு சம்ஸ்கிருதக் கொண்டாட்டத்தைத் தொடக்கினோம், இதில் சம்ஸ்கிருத மொழியில் பாடல்கள்-இசை, கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இந்த நிகழ்ச்சிக்குப் பெயர் ஆஷாடஸ்ய பிரதம திவஸே, அதாவது ஆஷாட மாதத்தின் முதல் தினம் என்பதே இதன் பொருள். கொண்டாட்டத்திற்கு இந்த சிறப்பான பெயரைக் கொடுப்பதன் பின்னணியில் ஒரு காரணம் உண்டு. உண்மையில், சம்ஸ்கிருதத்தின் மாபெரும் கவியான காளிதாஸன், ஆஷாட மாதத்திலிருந்து மழையின் வருகையைக் கொண்டு மேகதூதம் காவியத்தை எழுதினான். மேகதூதத்திலே ஒரு ஸ்லோகம் உண்டு – आषाढस्य प्रथम दिवसे मेघम् आश्लिष्ट सानुम् ஆஷாடஸ்ய பிரதம திவஸே மேகம் ஆஸ்லிஷ்ட சானும், அதாவது, ஆஷாட மாதத்தின் முதல் தினத்தன்று மலைச் சிகரங்களைத் தழுவியிருக்கும் மேகங்கள் என்ற இந்த ஸ்லோகம் தான், இந்த நிகழ்ச்சிக்கான ஆதாரமாக அமைந்தது.
நண்பர்களே, அஹ்மதாபாதாகட்டும், புரியாகட்டும், பகவான் ஜகன்னாதர் தனது இந்த யாத்திரை வாயிலாக நமக்குப் பல ஆழமான மனிதநேயம் மிக்க செய்திகளை அளிக்கிறார். பகவான் ஜகன்னாதர் உலகிற்கே ஸ்வாமியாக இருக்கிறார் என்பது மறுப்பதற்கில்லை; ஆனால் அவரது இந்த யாத்திரையில் ஏழைகள், வஞ்சிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான பங்களிப்பு இருக்கிறது. பகவானும் கூட சமூகத்தின் ஒவ்வொரு பிரிவு, நபருடன் இணைந்து பயணிக்கிறார். அந்த வகையில் நமது யாத்திரைகள் அனைத்திலும், ஏழை-செல்வந்தர், உயர்தோர்-தாழ்ந்தோர் என எந்த வேறுபாடும் காணக் கிடைக்காது. அனைத்து வேறுபாடுகளையும் தாண்டி, யாத்திரை தான் தலையாயதாக விளங்குகிறது. உதாரணமாக, மஹாராஷ்டிரத்தின் பண்டர்பூரின் யாத்திரை பற்றி நீங்கள் கண்டிப்பாகக் கேள்விப்பட்டிருக்கலாம். பண்டர்பூரின் யாத்திரையில், யாரும் பெரியவரும் இல்லை, யாரும் சிறியவரும் இல்லை. அனைவருமே வார்கரிகள் தாம், பகவான் விட்டலனின் சேவகர்கள் தாம். இன்னும் 4 நாட்கள் கழித்து ஜூன் மாதம் 30ஆம் தேதியன்று அமர்நாத் யாத்திரையும் தொடங்க இருக்கிறது. நாடெங்கிலும் இருந்து பக்தர்கள் அமர்நாத் யாத்திரையில் பங்கெடுக்க ஜம்மு கஷ்மீரம் வருகிறார்கள். ஜம்மு கஷ்மீரத்தின் வட்டார மக்களும், அதே அளவு சிரத்தையோடு இந்த யாத்திரையின் பொறுப்புக்களை மேற்கொண்டு, தீர்த்த யத்திரிகர்களுக்கு உதவிகரமாக இருக்கின்றார்கள்.
நண்பர்களே, தெற்கிலும் இப்படிப்பட்ட மகத்துவமான சபரிமலை யாத்திரை இருக்கிறது. சபரிமலையின் மீது குடிகொண்டிருக்கும் பகவான் ஐயப்பனை தரிசிக்க மேற்கொள்ளப்படும் இந்த யாத்திரை, பயணிக்கும் பாதை முழுமையாகக் காடுகள் நிரம்பியதாக இருந்த காலத்திலிருந்தே நடந்து வருகிறது. இன்றும் கூட மக்கள் இத்தகைய யாத்திரைகளை மேற்கொள்ளும் போது, சமயச் சடங்குகள் தொடங்கி, தங்கும் வசதிகள், ஏழைகளுக்கு இதனால் ஏற்படும் வாய்ப்புகள், அதாவது இந்த யாத்திரைகள் இயல்பிலேயே ஏழைகளுக்குச் சேவை செய்ய ஒரு சந்தர்ப்பமாக அமைகிறது, இது அந்த ஏழைகளுக்கு மிகுந்த ஆதாயமாக இருக்கிறது என்பது தான். ஆகையால், தேசமும் கூட இப்போதெல்லாம் ஆன்மீக யாத்திரைகளின் பொருட்டு, பக்தர்களின் வசதிகளை அதிகரிக்க பல முயல்வுகளை மேற்கொள்கின்றது. நீங்களும் ஒரு யாத்திரையை மேற்கொண்டால், உங்களுக்கு ஆன்மீகத்தோடு கூடவே, ஒரே பாரதம் உன்னத பாரதத்தையும் தரிசிக்க முடியும்.
எனதருமை நாட்டுமக்களே, எப்போதும் போலவே இந்த முறையும் மனதின் குரல் வாயிலாக, உங்களனைவரோடும் இணையக்கூடிய இந்த அனுபவம் மிகவும் சுகமளிப்பதாக இருந்தது. நாம் நாட்டுமக்களின் வெற்றிகள், சாதனைகள் பற்றி ஆலோசித்தோம். இவற்றுக்கு இடையே, நாம் கொரோனாவுக்கு எதிரான முன்னெச்சரிக்கைகளின் மீதும் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் ஆறுதல் அளிக்கும் விஷயம் என்னவென்றால், இன்று தேசத்திடம் தடுப்பூசி என்ற வலுவான பாதுகாப்புக் கவசம் இருக்கிறது. நாம் 200 கோடி தடுப்பூசித் தவணைகள் என்ற இலக்கை எட்டிக் கொண்டிருக்கிறோம். தேசத்தில் விரைவாக முன்னெச்சரிக்கைத் தவணையும் போடப்பட்டு வருகிறது. இரண்டாவது தவணைக்குப் பிறகு முன்னெச்சரிக்கைத் தவணை போட்டுக் கொள்ள வேண்டிய சமயம் வந்து விட்டது என்றால், நீங்கள் அந்த 3ஆவது தவணையை உடனடியாகப் போட்டுக் கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தாருக்கு, குறிப்பாக மூத்தோருக்கும் முன்னெச்சரிக்கைத் தவணையைப் போடுங்கள். நாம் கைகளைச் சுத்தம் செய்தல், முகக்கவசம் அணிதல் போன்ற அவசியமான முன்னெச்சரிக்கைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். மழைக்காலத்தில் நம்மருகிலே இருக்கும் மாசினால் மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய நோய்களிடமிருந்தும் விழிப்போடு இருக்க வேண்டும். நீங்கள் அனைவரும் கவனமாக இருங்கள், ஆரோக்கியமாக இருங்கள், மேலும் சக்தியோடு முன்னேறிச் செல்லுங்கள். அடுத்த மாதம், நாம் மீண்டும் ஒருமுறை சந்திக்கலாம், அதுவரை பலப்பல நன்றிகள், வணக்கம்.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று மீண்டுமொரு முறை மனதின் குரல் வாயிலாக எனது கோடானுகோடிச் சொந்தங்களான உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மனதின் குரலுக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். சில நாட்களுக்கு முன்பாகத் தான் தேசம் ஒரு சாதனையைப் படைத்திருக்கிறது, இது நம்மனைவருக்கும் உத்வேகம் அளிக்கவல்லது. பாரதத்தின் திறமைகள் மீதான ஒரு புதிய நம்பிக்கை பிறக்கிறது. கிரிக்கெட் மைதானத்தில் டீம் இண்டியாவைச் சேர்ந்த மட்டையாட்டக்காரர் யாராவது சதம் அடித்தார்கள் என்றால் சந்தோஷப்படுவீர்கள் தானே! ஆனால் பாரதம் வேறு ஒரு மைதானத்தில் சதம் அடித்திருக்கிறது, அதிலும் அது மிகவும் விசேஷமானது. இந்த மாதம் 5ஆம் தேதியன்று தேசத்தின் யூனிகார்ன்களின் எண்ணிக்கை 100 என்ற எண்ணிக்கையை எட்டி விட்டது. ஒரு யூனிகார்ன் என்பது குறைந்தபட்சம் 7500 கோடி ரூபாய் மதிப்பிலான ஸ்டார்ட் அப் ஆகும் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இந்த யூனிகார்ன்களின் மொத்த மதிப்பு 330 பில்லியன் டாலர்கள் ஆகும், அதாவது 25 இலட்சம் கோடி ரூபாய்களுக்கும் அதிகமானது. இந்த விஷயம் ஒவ்வொரு இந்தியருக்கும் கண்டிப்பாகப் பெருமிதம் அளிக்கவல்லது. நம்மிடத்திலே மொத்தம் 44 யூனிகார்ன்கள் கடந்த ஆண்டு உருவானது என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். இது மட்டுமல்ல, இந்த ஆண்டில் 3-4 மாதங்களிலே, மேலும் 14 புதிய யூனிகார்ன்கள் உருவாயின. இதன் பொருள் என்னவென்றால் உலகளாவிய பெருந்தொற்று என்ற இந்த காலகட்டத்திலும் கூட, நமது ஸ்டார்ட் அப்புகள், செல்வத்தையும், மதிப்பையும் உருவாக்கிக் கொண்டே வந்திருக்கின்றன. இந்திய யூனிகார்ன்களின் சராசரி வருடாந்தர வீதம், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பிற நாடுகளை விடவும் அதிகமானது. இனிவரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்பு இருக்கும் என்பது ஆய்வாளர்களின் முடிவு. மேலும் ஒரு சிறப்பான விஷயம் என்னவென்றால் நமது யூனிகார்ன்கள் பல்வகைப்படுத்தி வருகின்றன. இவை e-commerce மின்னணு வர்த்தகம், Fin-Tech நிதிசார் தொழில்நுட்பம், Ed-Tech கல்விசார் தொழில்நுட்பம், Bio-Tech உயிரி தொழில்நுட்பம் போன்ற பல துறைகளிலும் பணியாற்றி வருகின்றன. மேலும் ஒரு விஷயம், இதை நான் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகிறேன். அது என்னவென்றால், ஸ்டார்ட் அப்புகள் உலகம், புதிய இந்தியாவின் உணர்வைப் பிரதிபலிப்பதாகவும் இருக்கின்றது.
இன்று பாரதத்தின் ஸ்டார்ட் அப் சூழலமைப்பு பெருநகரங்களோடு மட்டுமே நின்று விடவில்லை. சின்னச்சின்ன நகரங்கள், பகுதிகளிலிருந்தும் கூட தொழில்முனைவோர் முன்வருகிறார்கள். பாரதத்திலே புதுமையான எண்ணம் இருக்கிறது, அதனால் செல்வத்தை உருவாக்க முடியும் என்பதையே இது காட்டுகிறது.
நண்பர்களே, தேசத்தின் இந்த வெற்றிக்குப் பின்னாலே, தேசத்தின் இளையோர் சக்தி, தேசத்தின் திறன்கள், அரசு ஆகிய அனைத்தும் இணைந்து முயற்சிக்கிறார்கள், அனைவரின் பங்களிப்பும் இருக்கிறது ஆனால், இதிலே மேலும் ஒரு மகத்துவம் வாய்ந்த விஷயமும் இருக்கிறது. அது என்னவென்றால் ஸ்டார்ட் அப் உலகிலே சரியான மெண்டரிங் என்று சொல்லப்படும் வழிகாட்டி உருவாக்குதல் மிக முக்கியமானது. ஒரு நல்ல வழிகாட்டியானவர், எந்த ஒரு ஸ்டார்ட் அப்பையும் புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்வார். நிறுவனர்கள் சரியான முடிவு எடுக்க உதவி செய்து, அனைத்து விதங்களிலும் இவர்கள் வழிகாட்டுகிறார்கள். ஸ்டார்ட் அப்புகளை முன்னே கொண்டு செல்லும் பொருட்டு, தங்களையே அர்ப்பணித்திருக்கும் பல வழிகாட்டிகள் பாரதத்திலே இருக்கிறார்கள் என்பது எனக்கு பெருமிதம் தரும் விஷயம்.
ஸ்ரீதர் வேம்பு அவர்களுக்கு இப்போது தான் பத்ம விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது. அவர் ஒரு வெற்றிகரமான தொழில் முனைவோர் தான் என்றாலும், தற்போது, மேலும் பல தொழில் முனைவோர்களை உருவாக்குவது என்ற சவாலை அவர் மேற்கொண்டிருக்கிறார். ஸ்ரீதர் அவர்கள் தனது பணியை ஊரகப் பகுதியிலே தொடங்கியிருக்கிறார். அவர் கிராமங்களிலேயே வசித்திருந்து, ஊரகப் பகுதி இளைஞர்களை, இந்தப் பகுதியில் பங்களிப்பு அளிக்கும் வகையில் உற்சாகப்படுத்தி வருகிறார். நமது நாட்டிலே மதன் படாகீ போன்றவர்களும் கூட, ஊரகப்பகுதி தொழில் முனைவோருக்கு ஊக்கம் அளிக்கும் பொருட்டு 2014இலே One Bridge என்ற பெயருடைய தளத்தை உருவாக்கினார். இன்று இந்த அமைப்பு, தெற்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் 75ற்கும் மேற்பட்ட மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது. இதோடு தொடர்புடைய 9000த்திற்கும் மேற்பட்ட ஊரகப்பகுதி தொழில்முனைவோர், கிராமப்புற நுகர்வோருக்குத் தங்களுடைய சேவைகளை அளித்து வருகிறார்கள். மீரா ஷெனாய் அவர்களும் கூட இப்படிப்பட்ட ஒரு எடுத்துக்காட்டுத் தான். அவர் ஊரக, பழங்குடியின இளைஞர்கள், மாற்றுத் திறனாளி இளைஞர்கள் ஆகியோருக்காக, சந்தையோடு தொடர்புடைய திறன்களுக்கான பயிற்சித் துறையில் குறிப்பிடத்தக்க செயல்களை ஆற்றி வருகிறார். நான் இங்கே சில பெயர்களை மட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன், ஆனால், இன்று நம்மிடையே வழிகாட்டிகளுக்குக் குறைவே கிடையாது. தேசம் முழுக்க முழு அளவிலான ஒரு ஆதரவு அமைப்பு தயாராகி வருகிறது என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் ஒரு விஷயம். இனிவருங்காலத்திலே, பாரதத்தின் ஸ்டார்ட் அப் உலக முன்னேற்றத்தின் புதிய முன்னோக்கிய பாய்ச்சலை நாம் காண்போம் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.
நண்பர்களே, சில நாட்கள் முன்பாக இதே போன்ற ஒரு சுவாரசியமான, கவர்ச்சிகரமான விஷயத்தைப் பார்க்க நேர்ந்தது, இதிலே நாட்டுமக்களின் படைப்புத் திறன், கலைத்திறன் ஆகியவை பளிச்சிட்டது. தமிழ்நாட்டின் தஞ்சாவூரைச் சேர்ந்த ஒரு சுயஉதவிக் குழுவானது எனக்கு ஒரு பரிசினை அனுப்பி இருக்கிறது. இந்தப் பரிசினிலே பாரத நாட்டின் மணம் வீசுகிறது, தாய்மை சக்தியின் ஆசிகள் நிரம்பியிருக்கின்றன. என் மீது அவர்கள் கொண்டிருக்கும் நேசமும் பாசமும் கனிவை ஏற்படுத்துகின்றன. அது ஒரு சிறப்பான தஞ்சாவூர் பொம்மை, இதற்கு புவிசார் குறியீடு கூட இதற்குக் கிடைத்திருக்கிறது. வட்டார கலாச்சார மணம் வீசும் பரிசினை எனக்கு அனுப்பியமைக்கு, நான் தஞ்சாவூர் சுயஉதவிக் குழுவிற்கு என் சிறப்பு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தஞ்சாவூர் பொம்மை எத்தனை அழகானதாக இருக்கிறதோ, அத்தனை அழகானது, பெண்களின் அதிகாரப் பங்களிப்பின் புதிய காதை. தஞ்சாவூர்ப் பெண்களுடைய சுயஉதவிக் குழுக்கள் ஒரு அங்காடியையும், ஒரு சிறுகடையையும் திறந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட சிறுகடை, அங்காடி வாயிலாக, தங்கள் பொருட்களை வாடிக்கையாளர்களிடம் இந்தப் பெண்களால் நேரடியாகக் கொண்டு சேர்க்க முடிகிறது. இந்த முயல்விற்கு, தாரகைகள் கைவினைப்பொருட்கள் விற்பனை அங்காடி என்று பெயரிட்டிருக்கிறார்கள். இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால் இந்த முயற்சியோடு 22 சுயஉதவிக் குழுக்கள் இணைந்திருக்கின்றன என்பது தான். இந்த மகளிர் சுயவுதவிக் குழுக்கள், பெண்களின் சுயசேவை சமூகமே நடத்தும் இந்த அங்காடியை, தஞ்சாவூரின் பிரதானமான இடத்திலே திறந்திருக்கின்றார்கள். இதன் பராமரிப்புப் பொறுப்பு முழுவதையுமே கூட இந்தப் பெண்களே ஏற்றிருக்கின்றார்கள். இந்தப் பெண்கள் சுயஉதவிக் குழு, தஞ்சாவூர் பொம்மை, வெண்கல விளக்கு போன்ற புவிசார் குறியீட்டுப் பொருட்களைத் தவிர, பிற பொம்மைகள், தரை விரிப்புகள், செயற்கை நகைகள் ஆகியவற்றையும் கூட தயாரிக்கிறார்கள். ஒரு கடையின் மூலமாக புவிசார் குறியீட்டோடு, கைவினைப் பொருட்களின் விற்பனையில் கணிசமான முன்னேற்றம் காணக் கிடைக்கிறது. இந்த முயல்வு காரணமாக, கைவினைஞர்களுக்கு மட்டுமல்லாமல், பெண்களின் வருவாயும் அதிகரிப்பதால் அவர்களின் அதிகாரப் பங்களிப்பும் ஏற்படுகிறது. மனதின் குரல் நேயர்களே, உங்கள் பகுதியில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் யாராவது பணியாற்றி வருகிறார்களா என்று நீங்களும் ஆராய்ந்து பாருங்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். அவர்களின் விற்பனைப் பொருட்கள் பற்றிய தகவல்களைச் சேகரியுங்கள், இப்படிப்பட்ட பொருட்களின் பயன்பாட்டை அதிகப்படுத்துங்கள். இப்படிச் செய்வதால், நீங்கள் சுயஉதவிக் குழுக்களுடைய வருமானத்தை அதிகரிக்க உதவுவதோடு, தற்சார்பு பாரத இயக்கத்திற்கும் வேகமளிப்பீர்கள்.
நண்பர்களே, நமது தேசத்திலே பல்வேறு மொழிகள், எழுத்து வடிவங்கள், வழக்கு மொழிகள் என, இது ஒரு நிறைவான பொக்கிஷம். பல்வேறு பகுதிகளில் பல்வேறு ஆடைகள், உணவுமுறைகள், கலாச்சாரம்….. இவையே நமது அடையாளம். இந்தப் பன்முகத்தன்மை, இந்த வேற்றுமை, ஒரு தேசம் என்ற வகையிலே, நம்மை மேலும் ஆற்றல் படைத்தவர்களாக ஆக்குவதோடு, இணைத்தும் வைக்கின்றது. இதோடு தொடர்புடைய மிகவும் கருத்தூக்கம் அளிக்கும் எடுத்துக்காட்டு, ஒரு சிறுமி கல்பனாவினுடையது, இதை உங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இவருடைய பெயர் கல்பனா ஆனால், இவருடைய முயற்சியில், ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற மெய்யான உணர்வு நிரம்பி இருக்கிறது. உள்ளபடியே, கல்பனா இப்போது தான் கர்நாடகத்திலே 10ஆம் வகுப்பிலே தேர்ச்சி பெற்றிருக்கிறார் என்றாலும், இவருடைய வெற்றியின் சிறப்பான விஷயம் என்னவென்றால், கல்பனாவுக்கு சில நாட்கள் முன்பு வரை கன்னட மொழியே சரியாகத் தெரியாது. இவர், மூன்றே மாதங்களில் கன்னட மொழியைக் கற்றுக் கொண்டதோடு இல்லாமல், இவர் கன்னட மொழிக்கான தேர்விலே 92 மதிப்பெண்களையும் பெற்றுக் காட்டினார். இது உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம், ஆனால் இது உண்மை. இவரைப் பற்றிய மேலும் பல விஷயங்கள் உங்களுக்கு ஆச்சரியத்தை மட்டுமல்லாமல், உத்வேகத்தையும் அளிக்க வல்லவை. கல்பனா, அடிப்படையிலே உத்தராகண்டின் ஜோஷீமட்டிலே வசிப்பவர். இவர் முன்பு காசநோயால் பீடிக்கப்பட்டிருந்தார், பிறகு இவர் 3ஆவது வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, இவருடைய கண்களிலே பார்வை இழப்பு ஏற்பட்டது. ஆனால் மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பார்கள் இல்லையா?! பின்னர் கல்பனா மைசூரூவில் வசிக்கும் பேராசிரியர் தாராமூர்த்தியின் தொடர்பிலே வந்தார்; இந்தப் பேராசிரியர், கல்பனாவுக்கு ஊக்கம் மட்டும் அளிக்கவில்லை, இவருக்கு உதவிகரமாகவும் இருந்தார். இன்று இவர் தனது உழைப்பின் காரணமாக நம்மனைவருக்கும் எடுத்துக்காட்டாய் மிளிர்கிறார். கல்பனாவின் அனைத்து முயற்சிகளுக்கும் நான் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதைப் போலவே நமது தேசத்தில் பலரும் கூட, தேசத்தின் மொழிப் பன்முகத்தன்மையை பலப்படுத்தும் பணியைப் புரிந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட ஒரு நண்பர் தான் மேற்கு வங்கத்தின் புரூலியாவைச் சேர்ந்த ஸ்ரீபதி டூடூ அவர்கள். டூடூ அவர்கள், புருலியாவின் சித்தோ கானோ பிர்ஸா பல்கலைக்கழகத்தில் சந்தாலி மொழியின் பேராசிரியர். இவர் சந்தாலி சமூகத்திற்காக, அவர்களுடைய ஓல் சிகீ எழுத்து வடிவத்தில், தேசத்தின் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரதியை உருவாக்கி இருக்கிறார். நம்முடைய அரசியல் அமைப்புச் சட்டம், நமது தேசத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவனுடைய அதிகாரங்கள்-கடமைகள் குறித்த அறிவை அளிக்கிறது என்று ஸ்ரீபதி டூடூ அவர்கள் கூறுகிறார். ஆகையால் அனைத்துக் குடிமக்களும் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இவர் சந்தாலி சமூகத்திற்காக, அவர்களுடைய எழுத்து வடிவத்திலேயே அரசியலமைப்புச் சட்டத்தைத் தயாரித்து, இதை ஒரு அன்பளிப்பாக அவர்களுக்கு அளித்திருக்கிறார். ஸ்ரீபதி அவர்களின் எண்ணத்திற்கும் அவரது முயற்சிகளுக்கும் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பதன் உணர்விற்கான உயிர்ப்புநிறைந்த ஒரு எடுத்துக்காட்டு. இந்த உணர்வினை முன்னெடுத்துச் செல்லக்கூடிய இப்படிப்பட்ட பல முயற்சிகள் பற்றி ஒரே பாரதம் உன்னத பாரதத்தின் இணையத்தளத்திலும் கூட பல தகவல்கள் கிடைக்கும். இங்கே உங்களுக்கு உணவுமுறை, கலை, கலாச்சாரம், சுற்றுலா உட்பட இப்படிப்பட்ட பல விஷயங்கள் தொடர்பான செயல்பாடுகளைப் பற்றித் தெரிந்து கொள்ள இயலும். நீங்கள் இந்தச் செயல்பாடுகளில் பங்கெடுத்துக் கொள்ளலாம், இதனால் உங்களுக்கு, நமது தேசம் பற்றிய தகவல்களும் கிடைக்கும், மேலும் நீங்களும் தேசத்தின் பன்முகத்தன்மையை உணர ஒரு வாய்ப்பு கிடைக்கும்.
எனதருமை நாட்டுமக்களே, இந்த சமயத்தில், நமது தேசத்தில் உத்தராகண்டின் சார்தாம் புனித யாத்திரை நடைபெற்று வருகிறது. சார்தாம், அதுவும் குறிப்பாக கேதார்நாத்திலே ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் பக்தர்கள் அங்கே குழுமிய வண்ணம் இருக்கிறார்கள். மக்கள் தங்களுடைய சார்தாம் யாத்திரை பற்றிய சுகமான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டும் வருகிறார்கள். ஆனால் சில பயணிகள் ஏற்படுத்தும் மாசு காரணமாக, பக்தர்களுக்கு வருத்தமும் ஏற்படுகிறது என்பதையும் என்னால் காண முடிகிறது. சமூக ஊடகத்திலும் கூட பலர் தங்களுடைய கருத்தைக் கூறியிருக்கிறார்கள். நாம் புனித யாத்திரையை மேற்கொள்ளும் போது, அங்கே குப்பைக்கூளமாக இருந்தால், அது சரியல்ல. ஆனால் நண்பர்களே, இந்தப் புகார்களுக்கு இடையே பல நல்ல காட்சிகளையும் காண முடிந்தது. எங்கே சிரத்தை உள்ளதோ, அங்கே படைப்புத் திறனும், ஆக்கப்பூர்வமான நிலையும் இருக்கும். பல பக்தர்களும், பாபா கேதாரை தரிசித்துப் பூஜிப்பதைத் தவிர, தூய்மை வழிபாட்டையும் மேற்கொண்டு வருகிறார்கள். சிலர் தாங்கள் தங்கியிருக்கும் இடத்துக்கருகே தூய்மைப் பணியை மேற்கொள்கிறார்கள் என்றால், சிலரோ பயணப்பாதையில் இருக்கும் குப்பைக்கூளங்களைத் துப்புரவு செய்கிறார்கள். தூய்மை பாரத இயக்கத்தின் குழுவோடு இணைந்து பல அமைப்புக்களும், சுயசேவை அமைப்புக்களும் கூட பணியாற்றி வருகின்றன. நண்பர்களே, எப்படி நம் நாட்டிலே புனித யாத்திரைக்கு என மகத்துவம் இருக்கிறதோ, அதே போல, புனிதத்தலச் சேவைக்கும் மகத்துவம் இருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது, நான் மேலும் என்ன கூறுவேன் என்றால், தல சேவையில்லாமல், தலயாத்திரை என்பதே கூட முழுமை அடையாது. தேவபூமியான உத்தராகண்டில் எத்தனையோ நபர்கள் தூய்மை மற்றும் சேவை என்ற வழிபாட்டைப் புரிந்து வருகிறார்கள். ருத்ர பிரயாகையில் வசிக்கும் மனோஜ் பேன்ஜ்வால் அவர்களிடமிருந்து கூட உங்களுக்கு நிறைய உத்வேகம் பிறக்கும். மனோஜ் அவர்கள் கடந்த 25 ஆண்டுகளாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற சவாலை எதிர்கொண்டிருக்கிறார். இவர் தூய்மை இயக்கத்தைச் செயல்படுத்துவதோடு கூடவே, புனிதத் தலங்களை, நெகிழிப் பொருட்களிலிருந்து விடுவிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். அதே போல குப்தகாசியில் வசிக்கும் சுரேந்திர பக்வாடி அவர்களும் தூய்மையைத் தனது வாழ்க்கை மந்திரமாகவே மாற்றிக் கொண்டிருக்கிறார். இவர் குப்தகாசியில், செம்மையான வகையிலே தூய்மைத் திட்டத்தைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். மேலும் இந்த இயக்கத்தின் பெயரைக் கூட மன் கீ பாத் என்றே வைத்திருக்கிறார் என்பது எனக்குத் தெரிய வந்தது. இவரைப் போலவே தேவர் கிராமத்திலே சம்பாதேவி அவர்கள் மூன்று ஆண்டுகளாகத் தன் கிராமத்தைச் சேர்ந்த பெண்களுக்கு, கழிவுப் பொருள் மேலாண்மையைக் கற்பித்து வருகிறார். சம்பா அவர்கள், பலநூறு மரங்களையும் நட்டிருக்கிறார், இவர் தனது உழைப்பின் காரணமாக ஒரு பசுமையான வனத்தையே உருவாக்கியிருக்கிறார். நண்பர்களே, இப்படிப்பட்ட மனிதர்களின் முயற்சிகள் காரணமாகவே தேவபூமி மற்றும் புனிதத்தலங்களில் தெய்வீக உணர்வு தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது. இந்த அனுபவத்தைப் பெறத் தானே நாம் அங்கே செல்கின்றோம்! அப்படியென்றால், இந்த தெய்வீகத்தையும், ஆன்மீகத்தையும் தொடர்ந்து காத்தளிப்பது என்பது நம்மனைவரின் கடமையாகும். இல்லையா? இப்போது நமது தேசத்திலே சார்தாம் யாத்திரையோடு கூடவே, அமர்நாத் யாத்திரை, பண்டர்புர் யாத்திரை, ஜகன்னாதர் யாத்திரை போன்ற பல யாத்திரைகள் வரவிருக்கின்றன. மழைக்கால மாதங்களில், ஒவ்வொரு கிராமத்திலும் ஏதோ ஒரு திருவிழா நடந்து கொண்டிருக்கும்.
நண்பர்களே, நாம் எங்கே சென்றாலும், இந்தப் புனிதத் தலங்களின் மாட்சிமையை நாம் பாதுகாக்க வேண்டும். தூய்மை, சுத்தம், ஒரு புனிதமான சூழலை பராமரிப்பதை நாம் என்றுமே மறந்து விடக் கூடாது, இதைக் கட்டிக் காக்க வேண்டும், தூய்மை பற்றிய நமது உறுதிப்பாட்டையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். சில நாட்கள் கழித்து ஜூன் மாதம் 5ஆம் தேதியன்று உலக சுற்றுச் சூழல் நாளை நாம் கொண்டாடவிருக்கிறோம். சுற்றுச்சூழல் தொடர்பாக நாம் நமது அக்கம்பக்கத்திலே ஆக்கப்பூர்வமான இயக்கத்தைச் செயல்படுத்த வேண்டும், இது தொடர்ந்து நாம் செய்யக்கூடிய பணி. நீங்கள், இந்த முறை அனைவரோடும் இணைந்து தூய்மைக்காகவும், மரம்நடுதலுக்காகவும், சில முயல்வுகளைக் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும். நீங்களே கூட மரங்களை நடுங்கள், மற்றவர்களையும் நடவு செய்ய ஊக்கப்படுத்துங்கள்.
எனதருமை நாட்டுமக்களே, அடுத்த மாதம், அதாவது ஜூன் மாதம் 21ஆம் தேதியன்று நாம் 8ஆவது சர்வதேச யோகக்கலை தினத்தைக் கொண்டாடவிருக்கிறோம். இந்த முறை யோகக்கலை தினத்தின் மையக்கரு, மனித சமூகத்துக்காக யோகக்கலை என்பதே. யோகக்கலை தினத்தை மிகுந்த உற்சாகத்தோடு நீங்கள் கொண்டாடுங்கள் என்று உங்கள் அனைவரிடமும் நான் வேண்டிக் கொள்கிறேன். ஆம், கொரோனாவோடு இணைந்த முன்னெச்சரிக்கைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடியுங்கள்; உலகம் முழுவதிலும் கொரோனா தொடர்பான நிலை, முன்பிருந்ததை விட மேம்பட்டிருக்கிறது, அதிக அளவிலான தடுப்பூசி போடப்படுவதன் காரணமாக இப்போது மக்கள் முன்பை விட அதிகமாக வெளியே வரத் தொடங்கி இருக்கிறார்கள். ஆகையால் உலகம் முழுவதிலும் யோகக்கலை தினம் தொடர்பாக பல தயாரிப்பு முஸ்தீபுகளை நம்மால் காண முடிகிறது. நமது வாழ்க்கையிலே, ஆரோக்கியம் என்பது எத்தனை மகத்துவம் வாய்ந்தது, இதிலே யோகக்கலை நம் உடல் நலத்தைப் பாதுகாக்க எத்தனை வலிமையான சாதனம் என்பதை, கொரோனா பெருந்தொற்று நம்மனைவருக்கும் புரிய வைத்திருக்கிறது. யோகக்கலையானது உடல்-ஆன்ம-அறிவுசார் நலன்களுக்கு எத்தனை ஊக்கமளிக்கிறது என்பதை மக்கள் இப்போது உணரத் தலைப்பட்டிருக்கின்றார்கள். உலகின் தலைசிறந்த வணிகர்கள் முதல் திரைப்பட-விளையாட்டுத் துறை ஆளுமைகள் வரை, மாணவர்கள் முதல் பொதுமக்கள் வரை, அனைவருமே யோகக்கலையைத் தங்களுடைய இணைபிரியா அங்கமாக ஆக்கிக் கொண்டு வருகிறார்கள். உலகெங்கிலும், யோகக்கலையின் பெருகி வரும் புகழைப் பார்க்கும் போது, உங்கள் அனைவருக்கும் கூட மகிழ்ச்சியாக இருக்கும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். நண்பர்களே, இந்த முறை நாட்டிலும் சரி, வெளிநாடுகளிலும் சரி, யோகக்கலை தினம் தொடர்பாக நடைபெற உள்ள சில சிறப்பான நூதன எடுத்துக்காட்டுகள் பற்றி எனக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இவற்றில் ஒன்று தான் guardian ring - ஒரு மிகப்பெரிய தனித்தன்மை வாய்ந்த நிகழ்ச்சி. இதிலே சூரியனின் இயக்கம் கொண்டாடப் படுகிறது, அதாவது சூரியன் எங்கெல்லாம் பயணிக்கிறதோ, உலகின் பல்வேறு பாகங்களில் நாம் யோகக்கலை வாயிலாக சூரியனுக்கு வரவேற்பளிப்போம். பல்வேறு நாடுகளில் இருக்கும் இந்தியத் தூதரகங்கள், அங்கே உள்ளூர் நேரத்திற்கேற்ப, சூரியோதய வேளையில் யோகக்கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொரு நாட்டிலும் நிகழ்ச்சிகள் தொடங்கும். கிழக்கு முதல் மேற்கு வரை பயணம் தொடர்ந்தபடி இருக்கும், பிறகு இதே போல சென்று கொண்டே இருக்கும். இந்த நிகழ்ச்சிகளின் நேரலையுமே கூட, இதே போல ஒன்றன்பின் ஒன்றாக ஒருங்கிணைக்கப்படும். அதாவது ஒரு வகையில், இது தொடர் யோகக்கலை நேரலை நிகழ்வாக இருக்கும். கண்டிப்பாக நீங்களும் இதைப் பாருங்கள்.
நண்பர்களே, நமது நாட்டிலே இந்த முறை அமுதப் பெருவிழாவைக் கருத்திலே கொண்டு, தேசத்தின் 75 முக்கியமான இடங்களிலும் கூட சர்வதேச யோகக்கலை தின ஏற்பாடுகள் நடைபெறும். இந்த சந்தர்ப்பத்தில் பல அமைப்புகளும் நாட்டுமக்களும், அவரவர் நிலைகளுக்கேற்ப, அவரவர் பகுதிகளின் சிறப்பான இடங்களில் ஏதோ ஒரு வகையில் புதுமையாகச் செய்யும் தயாரிப்புக்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த முறை யோகக்கலை தினத்தைக் கொண்டாட, நீங்கள், உங்களுடைய நகரத்தில், பகுதியில் அல்லது கிராமத்தில் ஏதோ ஒரு சிறப்பான இடத்தைத் தேர்வு செய்யுங்கள். இந்த இடம் ஒரு பழமையான ஆலயமாகவோ, சுற்றுலா மையமாகவோ இருக்கலாம், அல்லது ஒரு பிரசித்தமான நதி, நீர்வீழ்ச்சி அல்லது குளக்கரையாகவும் இருக்கலாம். இதனால் யோகக்கலையோடு கூடவே உங்கள் பகுதியின் அடையாளமும் மிகுந்து, சுற்றுலாவுக்கும் ஊக்கம் கிடைக்கும். இதுவே எனது வேண்டுகோள். இந்த வேளையில், யோகக்கலை தினம் தொடர்பாக 100 நாள் கவுண்ட் டவுன் ஏற்கனவே தொடங்கி இருக்கிறது, அல்லது தனிப்பட்ட மற்றும் சமூக முயல்வுகளோடு தொடர்புடைய நிகழ்ச்சிகள், 3 மாதங்களுக்கு முன்பே தொடங்கி விட்டன. அதாவது தில்லியில் 100ஆவது நாளன்றும், 75ஆவது நாளன்றும் கவுண்ட்டவுன் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதே போல அஸாமின் சிவசாகரில் 50ஆவது, ஹைதராபாதிலே 25ஆவது கவுண்ட் டவுன் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. நீங்களும் உங்கள் இடத்திலே, இப்போதிலிருந்தே யோகக்கலை தினத்திற்கான தயாரிப்புகளைத் தொடங்கி விடுங்கள். அதிக அளவிலான மக்களைச் சந்தியுங்கள், அனைவரையும் யோகக்கலை தினத்தோடு தொடர்புபடுத்திக் கொள்ள ஊக்கப்படுத்துங்கள், உத்வேகமளியுங்கள். நீங்கள் அனைவரும் யோகக்கலை தினத்தோடு மிகுந்த உற்சாகத்தோடு இணைந்து கொள்வீர்கள் என்பதும், கூடவே யோகக்கலையை உங்கள் அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிப்பீர்கள் என்ற முழு நம்பிக்கையும் எனக்கு உள்ளது.
நண்பர்களே, சில நாட்கள் முன்பாகத் தான் நான் ஜப்பான் நாட்டிற்குச் சென்றிருந்தேன். என்னுடைய பல நிகழ்ச்சிகளுக்கு இடையே, சில அற்புதமான மனிதர்களைச் சந்திக்கக்கூடிய சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. அவர்களைப் பற்றி மனதின் குரலில் உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். இவர்கள் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் என்றாலும், பாரத நாட்டிடம் இவர்களுக்கு அலாதியான ஒரு ஈடுபாடும், பாசமும் இருந்தன. இவர்களில் ஒருவர் தான் ஹிரோஷி கோயிகே அவர்கள், இவர் மிகப் பிரபலமான ஒரு கலை இயக்குநர். இவர் தான் மஹாபாரத நிகழ்ச்சியை இயக்கினார் என்பதை அறிந்தால் உங்களுக்கு சந்தோஷமாக இருக்கும். இந்தத் திட்டத்தின் தொடக்கம் கம்போடியா நாட்டில் நடந்தது; கடந்த 9 ஆண்டுகளாக இது தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஹிரோஷி கோயிகே அவர்கள் ஒவ்வொரு பணியையும் மிக வித்தியாசமான முறையிலே செய்கிறார். இவர், ஒவ்வொரு ஆண்டும், ஆசியாவின் ஏதோ ஒரு நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார், அங்கே இருக்கும் உள்ளூர் கலைஞர், இசைக்கலைஞர்களோடு இணைந்து மஹாபாரதத்தின் சில கூறுகளைத் தயாரிக்கிறார். இந்தத் திட்டத்தின் வாயிலாக இவர் இந்தியா, கம்போடியா, இந்தோனேசியா உட்பட, 9 நாடுகளில் தயாரிப்பு செய்திருக்கிறார், மேடை நிகழ்ச்சிகளையும் அளித்திருக்கிறார். பல்வேறுபட்ட பாரம்பரிய ஆசிய கலைவடிவங்களின் கலைஞர்களை ஹிரோஷி கோயிகே அவர்கள் ஒன்றாக அழைத்து வருகிறார். இதன் காரணமாக அவருடைய பணியில் பல்வேறு வண்ணங்கள் காணக் கிடைக்கின்றன. இந்தோனேசியா, தாய்லாந்து, மலேஷியா, ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள், ஜாவா நடனம், பாலீ நடனம், தாய்நாட்டு நடனம் ஆகியவற்றைக் கொண்டு மேலும் கவரக்கூடியதாக ஆக்குகிறார். சிறப்பான விஷயம் என்னவென்றால், இதில் இருக்கும் ஒவ்வொரு கலைஞரும் தனது தாய்மொழியிலேயே பேசுகிறார், நடன அமைப்பும் மிகவும் அழகாக இந்த பன்முகத்தன்மையை வெளிப்படுத்துகிறது, இசையின் பன்முகத்தன்மை இந்தத் தயாரிப்பை மேலும் உயிர்ப்புடையதாக ஆக்குகிறது. நமது சமூகத்தில் பன்முகத்தன்மையும், கூட்டாக வாழ்தலும் மிகவும் மகத்துவமானவை என்பதையும், அமைதியான வாழ்க்கைமுறை என்பது எப்படிப்பட்டது என்பதையும் முன்வைப்பதே தன் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார். இவற்றைத் தவிர, நான் ஜப்பானில் வேறு இருவரைச் சந்திக்க நேர்ந்தது, அவர்கள் ஆத்சுஷி மாத்சுவோ அவர்கள், பிறகு கேஞ்ஜி யோஷீ அவர்கள். இவர்கள் இருவரும் TEM தயாரிப்பு நிறுவனத்தோடு தொடர்புடையவர்கள். இந்த நிறுவனமானது 1983ஆம் ஆண்டு வெளிவந்த ராமாயணம் தொடர்பான ஜப்பானிய அனிமேஷன் – இயங்குபட ரகத் திரைப்படத்தோடு தொடர்புடையது. இந்தத் திட்டம் ஜப்பானின் மிகவும் பிரபலமான திரைப்பட இயக்குனர் யுகோ சாகோ அவர்களோடு தொடர்புடையதாக இருந்தது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் முன்பாக, 1983இலே, அவருக்கு இராமாயணம் பற்றி முதன்முறையாகத் தெரிய வந்தது. இராமாயணம் அவருடைய இதயத்தைத் தொட்டது, இதன் பிறகு அவர் இது பற்றி ஆழமான ஆய்வினைத் தொடங்கினார். இது மட்டுமல்ல, அவர் ஜப்பானிய மொழியில் இராமாயணத்தின் 10 விதமான பதிப்புகளைத் தேடிப் படித்ததோடு நிற்கவில்லை, இதை இயங்குபடமாக வடிவமைக்க விரும்பினார். இதிலே இந்திய இயங்குபட வல்லுநர்களின் கணிசமான உதவி இவருக்குக் கிடைத்தது. படத்தில் காட்டப்படும் இந்தியப் பழக்க வழக்கங்கள், பாரம்பரியங்கள் பற்றியெல்லாம் விளக்குவதிலும், தெரியச் செய்வதிலும் அவர்கள் துணையாக இருந்தார்கள். இந்தியாவிலே மக்கள் எப்படி வேட்டியைக் கட்டுவார்கள், புடவையை எப்படி உடுத்துவார்கள், முடியை எப்படித் திருத்துவார்கள் என்பதெல்லாம் புரிய வைக்கப்பட்டது. ஒரு குடும்பத்தில் பிள்ளைகள் ஒருவருக்கு ஒருவர் மரியாதை செலுத்துகிறார்கள், ஆசியளிப்பது என்ற பாரம்பரியம் இவை பற்றியெல்லாம் விளக்கப்பட்டது. காலையில் எழுந்து வீட்டில் இருக்கும் பெரியோரை வணங்குவது, அவர்களின் ஆசியைப் பெறுவது என இவை அனைத்தும் இப்போது 30 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த இயங்குபடம் வாயிலாக 4K யிலே, மீண்டும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தை விரைவாகவே நிறைவேற்றும் சாத்தியக்கூறும் இருக்கிறது. நம்மிடமிருந்து பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிலே இருக்கும் ஜப்பானியர்களுக்கு நமது மொழியும் புரியாது, நமது பாரம்பரியங்களைப் பற்றியும் அதிகம் தெரியாது. ஆனால் அவர்களுக்கு நமது கலாச்சாரத்தின் மீது இருக்கும் அர்ப்பணிப்பு, சிரத்தை, மரியாதை ஆகியன மிகவும் பாராட்டுதலுக்குரியவை. இதெல்லாம் எந்த இந்தியருக்குத் தான் பெருமிதத்தை அளிக்காது!
என் மனம் நிறை நாட்டுமக்களே, தான் என்ற நிலையிலிருந்து உயர்ந்து சமூகத்திற்கான சேவை எனும் மந்திரம், சமுதாயத்திற்காக நான் எனும் மந்திரம் ஆகியவை நமது நற்பண்புகளின் ஓர் அங்கம். நமது தேசத்திலே எண்ணிலடங்காதோர் இந்த மந்திரத்தைத் தங்களுடைய வாழ்க்கைக் குறிக்கோளாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆந்திரத்திலே இருக்கும் மர்க்காபுரத்தில் வசிக்கும் ஒரு நண்பரான ராம்பூபால் ரெட்டி அவர்கள் பற்றிய தகவல் எனக்குக் கிடைத்தது. ராம்பூபால் ரெட்டி அவர்கள் பணி ஓய்வு பெற்ற பிறகு தனக்குக் கிடைத்த அனைத்துப் பணத்தையும், பெண் குழந்தைகள் கல்விக்காக தானமளித்து விட்டார் என்ற தகவல் உங்களுக்கு ஆச்சரியமளிக்கலாம். அவர் கிட்டத்தட்ட 100 பெண் குழந்தைகளுக்காக சுகன்யா சம்ருத்தித் திட்டத்தின்படி வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து, அதிலே ரூ.25 இலட்சத்திற்கும் மேற்பட்ட தன்னுடைய தொகையைச் செலுத்தி இருக்கிறார். இதே போன்ற சேவைக்கான மேலும் ஒரு எடுத்துக்காட்டு உத்தரபிரதேசத்தின் ஆக்ராவின் கசோரா கிராமத்தில் நம்மால் காண முடியும். பல ஆண்டுகளாக இந்த கிராமத்திலே, சுவையான குடிநீர்க்குத் தட்டுப்பாடு இருந்து வந்தது. இதற்கிடையே, கிராமத்திலிருந்து 6 முதல் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனது வயலில், கிராமத்தின் ஒரு விவசாயியான குன்வர் சிங்கிற்கு சுவையான குடிநீர் கிடைத்தது. இது அவருக்கு பேருவகை தரும் விஷயம். இந்த நீரை நான் என் சக கிராமவாசிகளோடு பகிர்ந்து கொள்வேன் என்று அவர் நினைத்தார். ஆனால் வயலிலிருந்து கிராமத்திற்குக் குடிநீரைக் கொண்டு வர 30-32 இலட்சம் ரூபாய் செலவாகும். சில காலம் கழித்து குன்வர் சிங்கின் இளைய சகோதரன் ஷ்யாம் சிங், இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று கிராமம் திரும்பினார், இந்த விஷயம் அவருக்குத் தெரிய வந்தது. ஷ்யாம் சிங், அவர் ஓய்வு பெற்ற போது கிடைத்த பணம் அனைத்தையும் உடனடியாக இந்தப் பணிக்கு அளித்தார், கிராமம் வரையிலான குழாய் இணைப்பை ஏற்படுத்தி, கிராமத்து மக்களுக்கு சுவையான குடிநீர் கிடைக்கச் செய்தார். ஈடுபாடு இருந்தால், தனது கடமைகள் மீது அர்ப்பணிப்பு இருந்தால், ஒரு தனிமனிதனாலும் கூட, சமுதாயத்தின் எதிர்காலத்தை எப்படி மாற்ற முடியும் என்பதற்கு இந்த முயற்சி மிகப்பெரிய ஒரு கருத்தூக்கம். நாம் நமது கடமைப்பாதையில் ஏகிக் கொண்டே, சமுதாயத்தை பலப்படுத்த முடியும், தேசத்தை பலப்படுத்த இயலும். சுதந்திரத்தின் இந்த அமுத காலத்தில் இந்த மனவுறுதி ஏற்பட வேண்டும், இதுவே நமது வழிபாடாக இருக்க வேண்டும், இதற்கான ஒரே பாதை – கடமை, கடமை, கடமை மட்டுமே.
என் கனிவான நாட்டுமக்களே. இன்றைய மனதின் குரலில் நாம் சமூகத்தோடு தொடர்புடைய மகத்துவம் வாய்ந்த பல விஷயங்கள் பற்றி விவாதித்தோம். நீங்கள் அனைவரும், பல்வேறு விஷயங்களோடு தொடர்புடைய முக்கியமான ஆலோசனைகளை எனக்கு அனுப்பி வருகிறீர்கள், இவற்றையே ஆதாரமாகக் கொண்டு நமது ஆய்வு மேற்கொண்டு தொடர்கிறது. மனதின் குரலின் அடுத்த பதிப்பிற்கான உங்களுடைய அருமையான ஆலோசனைகளை அனுப்ப மறந்து விடாதீர்கள். இப்போது சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவோடு தொடர்புடைய நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளில் நீங்களும் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள், அவை பற்றியும் கூட நீங்கள் எனக்குத் தெரியப்படுத்துங்கள். நமோ செயலியிலும், மைகவ் செயலியிலும் நீங்கள் உங்கள் ஆலோசனைகளை அனுப்புங்கள், காத்துக் கொண்டிருப்பேன். அடுத்த முறை நாம் மீண்டும் சந்திப்போம், நாட்டுமக்களோடு இணைந்திருக்கும் இப்படிப்பட்ட விஷயங்கள் குறித்து நாம் மீண்டும் ஆய்வு செய்வோம். நீங்கள் உங்களை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள், உங்கள் அருகில் இருக்கும் அனைத்து ஜீவராசிகளையும் பராமரியுங்கள். கோடைக்காலமான இப்போது நீங்கள் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் உணவும் குடிநீரும் அளிப்பது என்பதை, மனித இனத்துக்கான பொறுப்பாக எண்ணிக் கடைப்பிடியுங்கள். இதை மறந்து விடாதீர்கள். அடுத்த முறை சந்திப்போம். பலப்பல நன்றிகள்.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். புதிய விஷயங்களுடன், புதிய கருத்தூக்கம் அளிக்கக்கூடிய எடுத்துக்காட்டுக்களுடன், புதிய புதிய செய்திகளைத் திரட்டி, மீண்டும் ஒருமுறை உங்களுடன் மனதின் குரல் நிகழ்ச்சியில இணைய நான் வந்திருக்கிறேன். இந்த முறை அதிகபட்ச கடிதங்களும், செய்திகளும் எனக்கு எந்த விஷயம் குறித்து வந்திருக்கின்றன தெரியுமா? இந்த விஷயம் கடந்தகாலம், தற்காலம், வருங்காலம் என மூன்றோடும் கலந்திருக்கின்ற ஒன்று. தேசத்திற்குக் கிடைத்திருக்கும் புதிய பிரதமமந்திரி அருங்காட்சியகம் குறித்து நான் பேசுகிறேன். இந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதியன்று பாபா சாஹேப் அம்பேட்கரின் பிறந்த நாளன்று பிரதம மந்திரி அருங்காட்சியகமானது நாட்டுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டது. இது, தேசத்தின் குடிமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து விடப்பட்டிருக்கிறது. சார்த்தக் என்ற ஒரு நேயர், குருகிராமில் வசித்து வருகிறார், முதல் வாய்ப்பு கிடைத்தவுடனேயே இவர் இந்த பிரதம மந்திரி அருங்காட்சியகத்தைப் பார்த்து விட்டு வந்திருக்கிறார். சார்த்தக் அவர்கள் நமோ செயலியில் அனுப்பி இருக்கும் செய்தியில், இது மிக சுவாரசியமாக இருப்பதாக எழுதி இருக்கிறார். பல ஆண்டுகளாக செய்தி மின்னூடகங்களைப் பார்த்து வருவதாகவும், செய்தித்தாள்களைப் படிப்பதாகவும், சமூக ஊடகங்களோடு தொடர்பு கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டு, இவை காரணமாக தன்னுடைய பொது அறிவு மிகவும் நன்றாக இருக்கும் என்று கருதியதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் பிரதம மந்திரி அருங்காட்சியகம் சென்ற போது அவர் திகைத்துப் போயிருக்கிறார், தனது நாடு, தனது நாட்டிற்குத் தலைமை தாங்குவோர் பற்றிய பல விஷயங்கள் தனக்குத் தெரியவில்லை என்பதையும் அவர் உணர்ந்திருக்கிறார். இவர். பிரதம மந்திரி அருங்காட்சியகத்தின் சில அம்சங்கள் குறித்தும் எழுதியிருக்கிறார். இவை இவருடைய ஆர்வத்தை மேலும் தூண்டி விட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். எடுத்துக்காட்டாக இவர் லால் பஹாதுர் சாஸ்திரி அவர்களின் மாமனார் வீட்டு சீதனமாக அளிக்கப்பட்ட ராட்டினத்தைப் பார்த்து மிகவும் மகிழ்ந்திருக்கிறார். அவர் சாஸ்திரி அவர்களின் வங்கிக் கணக்குப் புத்தகத்தையும் பார்த்திருக்கிறார், இதில் அவருடைய சேமிப்பு எத்தனை குறைவாக இருந்திருக்கிறது என்பதையும் பார்க்க முடிந்திருக்கிறது. சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெறும் முன்பாக மொரார்ஜி பாய் தேசாய் அவர்கள் குஜராத்தில் துணை ஆட்சியராக இருந்திருக்கிறார் என்பது அப்போது தான் சார்த்தக் அவர்களுக்குத் தெரிய வந்திருக்கிறது. ஆட்சிப் பணியில் அவருக்கு ஒரு நீண்ட பணி எதிர்காலம் இருந்தது. ஜமீன்தாரி ஒழிப்புத்துறையில் சௌத்ரி சரண் சிங் அவர்களின் பங்களிப்பு மிகப் பெரியதாக இருந்தது என்று சரண் சிங் அவர்களைப் பற்றி சார்த்தக் அவர்கள் எழுதுகிறார். இது மட்டுமல்ல, மேலும் அவர் குறிப்பிடுகையில், நிலச் சீர்திருத்தங்கள் விஷயத்தில், பி. வி. நரசிம்ம ராவ் அவர்கள் மிக ஆழமான ஆர்வம் உடையவராக இருந்தார் என்று தனக்குத் தெரிய வந்ததாக அவர் எழுதியிருக்கிறார். இந்த அருங்காட்சியகத்திற்கு வந்த பின்னர் தான், சந்திரசேகர் அவர்கள், 4000 கிலோமீட்டருக்கும் அதிகமாக நடைப்பயணம் செய்து, ஒரு வரலாற்று சாதனையாக பாரதப் பயணத்தை மேற்கொண்டார் என்பதும் தெரிய வந்திருக்கிறது. மேலும் அருங்காட்சியகத்தில் அடல் அவர்கள் பயன்படுத்திய பொருட்களைப் பார்த்திருக்கிறார், அவருடைய உரைகளைக் கேட்டிருக்கிறார், மிகவும் பெருமிதமாக உணர்ந்ததாக எழுதியிருக்கிறார். மேலும் சார்த்தக் அவர்கள் எழுதும் போது, இந்த அருங்காட்சியகத்திலே, அண்ணல் காந்தியடிகள், சர்தார் படேல், டாக்டர். அம்பேட்கர், ஜய் பிரகாஷ் நாராயண் இவர்களைத் தவிர நமது பிரதம மந்திரியாக இருந்த பண்டித ஜவஹர்லால் நேரு பற்றியும் பல சுவாரசியமான தகவல்கள் தமக்குக் கிடைத்ததாக எழுதியிருக்கிறார்.
நண்பர்களே, தேசத்தின் பிரதம மந்திரிகளின் பங்களிப்பை நினைவில் கொள்ளும் வகையிலே, சுதந்திரத்தின் அமிர்த மஹோத்ஸவத்தை விடச் சிறப்பான தருணம் வேறு என்னவாக இருக்க முடியும், சொல்லுங்கள்? சுதந்திரத்தின் அமிர்த மஹோத்ஸவமானது ஒரு மக்கள் இயக்கமாகப் பரிமளித்து வருகிறது என்பது தேசத்திற்குப் பெருமை சேர்க்கும் ஒன்று. வரலாறு தொடர்பாக மக்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது, இந்த நிலையில் பிரதம மந்திரி. அருங்காட்சியகமானது இளைஞர்களைக் கவரக்கூடிய ஒரு மையமாக மாறி வருகிறது, அவர்கள் தேசத்தின் விலைமதிப்பில்லாத மரபோடு தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றார்கள்.
மேலும் நண்பர்களே, அருங்காட்சியகம் பற்றிய இத்தனை விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் அதே வேளையில், உங்களிடம் சில வினாக்களை எழுப்ப வேண்டும் என்று என் மனம் கூறுகிறது. உங்களுடைய பொது அறிவு எப்படி இருக்கிறது, உங்களுக்கு எந்த அளவுக்குத் தகவல்கள் தெரிந்திருக்கின்றன என்று பார்க்கலாமா? என் இளைய நண்பர்களே, நீங்கள் தயாராக இருக்கிறீர்களா, பேனாவும், காகிதமும் தயாரா? இப்போது நான் எழுப்ப இருக்கும் வினாக்களுக்கான விடைகளை நீங்கள் நமோ செயலியிலோ, சமூக ஊடகத்திலோ, #MuseumQuiz என்பதிலோ பகிர்ந்து கொள்ளலாம், கண்டிப்பாகப் பகிருங்கள். நீங்கள் இந்த அனைத்து வினாக்களுக்குமான விடைகளைக் கண்டிப்பாக அளியுங்கள் என்று நான் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். இதனால் நாடெங்கிலும் இருப்போருக்கு அருங்காட்சியகம் மீதான ஆர்வம், சுவாரசியம் மேலும் அதிகரிக்கும். சரி, தேசத்தில் எந்த நகரத்திலே ஒரு பிரசித்தி பெற்ற ரயில் அருங்காட்சியகம் இருக்கிறது தெரியுமா? இங்கே கடந்த 45 ஆண்டுகளாக, இந்திய ரயிலின் பாரம்பரியம் பற்றித் தெரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைத்து வருகிறது. சரி நான் மேலும் ஒரு துப்பு அளிக்கிறேன். இங்கே நீங்கள் Fairy Queen, Saloon of Prince of Wales முதற்கொண்டு, Fireless Steam Locomotive, அதாவது நெருப்பில்லா நீராவி எஞ்ஜினையும் காண முடியும். அடுத்து, மும்பையின் எந்த அருங்காட்சியகத்தில், மிக சுவாரசியமான முறையில் பணத்தின் பரிணாம வளர்ச்சியைக் காண முடியும் தெரியுமா? இங்கே பொதுவாண்டிற்கு 600 ஆண்டுகளுக்கும் முன்பாக புழங்கிய நாணயங்கள் உள்ளன. அதே மறுபுறத்தில் e-Money என்ற மின்னணுப் பணமும் இருக்கிறது. மூன்றாவது கேள்வி, விராஸத் ஏ கால்ஸா இந்த அருங்காட்சியத்தோடு இணைந்திருக்கிறது. இந்த அருங்காட்சியகமானது, பஞ்சாபின் எந்த நகரத்தில் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? காற்றாடி விடுவதில் உங்களுக்கு எல்லாம் மிகுந்த ஆர்வமும் ஆனந்தமும் உண்டு தானே!! அடுத்த கேள்வி இதோடு தொடர்புடையது. தேசத்தின் ஒரே காற்றாடி அருங்காட்சியகம் எங்கே இருக்கிறது? சரி, நான் உங்களுக்கு ஒரு துப்பு கொடுக்கிறேன்; இங்கே காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் மிகப்பெரிய பட்டத்தின் அளவு 22 அடிக்குப் 16 அடி ஆகும். மேலும் ஒரு விஷயத்தைக் கூறுகிறேன். இது எந்த நகரத்தில் இருக்கிறதோ, அதற்கு அண்ணலோடு விசேஷமான தொடர்பு உண்டு. சிறுவயதில் தபால் தலைகள் சேமிப்பு மீதான ஆர்வம் யாருக்குத் தான் இருக்காது! ஆனால், தபால் தலைகளோடு தொடர்புடைய தேசிய அருங்காட்சியகம் எங்கே இருக்கிறது தெரியுமா? நான் உங்களிடத்திலே மேலும் ஒரு வினாவை எழுப்புகிறேன். குல்ஷன் மஹல் என்ற பெயர் கொண்ட கட்டிடத்தில் இருக்கும் அருங்காட்சியகம் என்ன? உங்களுக்கான துப்பு, இந்த அருங்காட்சியகத்தில் நீங்கள் திரைப்பட இயக்குநராகவும் ஆக முடியும், கேமரா, எடிட்டிங் ஆகியவற்றை நெருக்கமாகக் காண முடியும். சரி, பாரதத்தின் ஜவுளியோடு தொடர்புடைய பாரம்பரியத்தைக் கொண்டாடக்கூடிய அருங்காட்சியம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருகிறீர்களா? இந்த அருங்காட்சியகத்தில் சிறிய அளவிலான ஓவியங்கள், ஜைன சமய ஓலைச்சுவடிகள், சிற்பங்கள் என ஏராளமான விஷயங்கள் உள்ளன. இவை தனித்தன்மையான காட்சிப்படுத்தலுக்காகப் பெயர் போனவை.
நண்பர்களே, தொழில்நுட்பத்தின் இந்தக் காலகட்டத்தில் இவற்றுக்கான விடைகளைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிதானது. இந்தக் கேள்விகளை நான் ஏன் கேட்கிறேன் என்றால், நமது புதிய தலைமுறையினரின் ஆர்வம் இதனால் அதிகரிக்க வேண்டும், இவை பற்றி அவர்கள் படிக்க வேண்டும், இவற்றைக் காணப் பயணிக்க வேண்டும் என்பதற்காகத் தான். இப்போது அருங்காட்சியகங்களின் மகத்துவத்தை உணர்ந்து, பலர், தாங்களே முன்வந்து, அருங்காட்சியகங்களுக்காகக் கணிசமான அளவு நன்கொடை அளித்து வருகிறார்கள். பலர் தங்களிடம் இருக்கும் பழைமையான பொருட்களையும், சரித்திர முக்கியத்துவம் பெற்ற பொருட்களையும் கூட, அருங்காட்சியகங்களுக்குத் தானமாக அளித்து வருகிறார்கள். இவ்வாறு நீங்கள் செய்யும் போது, நீங்கள் ஒரு கலாச்சார மூலதனத்தை, ஒட்டுமொத்த சமூகத்தோடும் பகிர்ந்து கொள்கிறீர்கள் என்று பொருள். பாரதத்திலும் மக்கள் இப்போது இதன் பொருட்டு முன்வருகிறார்கள். இப்படிப்பட்ட தனிப்பட்ட முயல்வுகள் அனைத்தையும் நான் பாராட்டுகிறேன். இன்று, மாறிவரும் காலகட்டத்திலே, கோவிட் வழிகாட்டுதல் நெறிமுறைகள் காரணமாக அருங்காட்சியகங்களில் புதிய வழிமுறைகளைப் பின்பற்றுவது பற்றி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அருங்காட்சியகங்களில் டிஜிட்டல் மயமாக்கல் மீதும் கவனம் அதிகரித்திருக்கிறது. மே மாதம் 18ஆம் தேதியன்று உலகம் முழுவதிலும் சர்வதேச அருங்காட்சியக தினத்தைக் கொண்டாடவிருக்கிறது என்பதை நீங்கள் நன்கறிவீர்கள். இதை கவனத்தில் கொண்டு, நமது இளைய நண்பர்களுக்காக என்னிடத்திலே ஒரு எண்ணம் ஏற்படுகிறது. ஏன் வரவிருக்கும் விடுமுறை நாட்களில், நீங்களும் உங்களுடைய நண்பர்களும் இணைந்து, ஏதோ ஒரு அருங்காட்சியகத்தைப் பார்த்து விட்டு வரக்கூடாது! நீங்கள் உங்களுடைய அனுபவங்களை #MuseumMemories என்பதிலே பகிர்ந்து கொள்ளலாமே!! இப்படிச் செய்வதன் மூலம் மற்றவர்களின் மனதிலும் கூட அருங்காட்சியகங்கள் மீதான ஆர்வம் விழிப்படையும்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பல உறுதிப்பாடுகளை மேற்கொண்டிருக்கலாம், அவற்றை நிறைவேற்ற கடினமாக உழைத்திருக்கலாம். நண்பர்களே, ஆனால் தற்போது தான், எனக்கு இப்படிப்பட்ட ஒரு மனவுறுதிப்பாடு பற்றித் தெரிய வந்தது, இது உண்மையிலேயெ மிகவும் வித்தியாசமானது, மிகவும் அலாதியானது. ஆகையால், இதைப் பற்றி மனதில் குரல் நேயர்களோடு கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.
நண்பர்களே, ஒருவர் தனது வீட்டை விட்டுப் புறப்படும் போது, இன்று நான் நகரெங்கும் சுற்றுவேன், ஆனால் ஒருமுறை கூட ரொக்கப்பணப் பரிவர்த்தனையில் ஈடுபட மாட்டேன் என்ற ஒரு உறுதிப்பாட்டை மனதில் ஏற்றிக் கொண்டு செல்கிறார் – சுவாரசியமான உறுதிப்பாடு இல்லையா!! தில்லியில் இரு பெண்களான சாகரிகாவும், ப்ரேக்ஷாவும் இப்படிப்பட்ட ஒரு ரொக்கமில்லாப் பணப்பரிவர்த்தனை செய்யும் நாள், என்ற ஒரு பரிசோதனையை மேற்கொண்டார்கள். சாகரிகாவும், ப்ரேக்ஷாவும் தில்லியில் எங்கெல்லாம் சென்றார்களோ, அங்கெல்லாம் டிஜிட்டல் முறையிலான பரிவர்த்தனை செய்ய முடிந்தது. யூபிஐ க்யூ ஆர் குறியீடு காரணமாக அவர்களுக்கு ரொக்கப் பணத்தை எடுக்க வேண்டிய தேவையே இருக்கவில்லை. எந்த அளவுக்கு என்றால், தெருவோரக் கடைகள், தள்ளுவண்டிக் கடைகளிலும் கூட அவர்களுக்குப் பெரும்பாலும் நிகழ்நிலை பரிவர்த்தனை வசதி கிடைத்தது.
நண்பர்களே, இது தில்லி, மாநகர், இங்கே இவை எல்லாம் கிடைப்பது சுலபம் என்று நினைக்கலாம். ஆனால் இப்போது எல்லாம் யூ பி ஐயின் பரவலாக்கம், தில்லி போன்ற பெருநகரங்களில் மட்டும் இருக்கிறது என்பது கிடையாது. காஜியபாதிலிருந்து ஆனந்திதா திரிபாடீ அவர்கள் எனக்கு ஒரு தகவல் அனுப்பி இருக்கிறார். ஆனந்திதா அவர்கள் கடந்த வாரத்தில் தனது கணவரோடு வடகிழக்கு மாநிலப் பகுதியைச் சுற்றிப் பார்க்கச் சென்றிருக்கிறார். அவர் அஸாம் தொடங்கி மேகாலயா மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் தவாங்க் வரை தனது பயண அனுபவத்தை என்னோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதாவது, பல நாட்கள் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பயணத்தில், தொலைவான பகுதிகளிலும் அவர் ரொக்கத்தைத் தனது கணக்கிலிருந்து எடுக்கத் தேவையே இருக்கவில்லை என்பது உங்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளிக்கலாம். எந்த இடங்களில், சில ஆண்டுகள் முன்பு வரை, இணையச் சேவைகள் கூட சரிவர இருக்கவில்லையோ, அங்கெல்லாம் கூட இப்போது யூபிஐ வாயிலாகப் பணம் செலுத்தல் வசதிகள் இருக்கின்றன. சாகரிகா, பிரேக்ஷா, ஆனந்திதா ஆகியோரின் அனுபவங்களைக் காணும் போது, நான் உங்களிடத்திலும் வேண்டிக் கொள்வதெல்லாம், ரொக்கப் பணத்தைப் பயன்படுத்தாத நாள் என்ற பரிசோதனையை நீங்களும் செய்து பாருங்களேன்!!
நண்பர்களே, கடந்த சில ஆண்டுகளில் பீம் யூபிஐ, ஆகியவை விரைவாக நமது பொருளாதாரம் மற்றும் பழக்கங்களின் அங்கமாக மாறிவிட்டன. இப்போது சின்னச்சின்ன நகரங்களிலும், பெரும்பான்மையான கிராமங்களிலும் கூட, மக்கள் யூபிஐ வாயிலாக கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டு வருகிறார்கள். டிஜிட்டல் முறை பொருளாதாரம் மூலமாக தேசத்தில் ஒரு புதிய கலாச்சாரம் உருவாகி வருகிறது. சின்னச்சின்ன தெருக்கள்-சந்துகளில் இருக்கும் சிறிய கடைகளிலும் கூட டிஜிட்டல் முறை பணப்பரிவர்த்தனை செய்யப்படுவதால், அதிக அளவிலான வாடிக்கையாளர்களுக்குச் சேவை புரிவது எளிதாகி விட்டது. பணத்தைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்ல வேண்டிய சிரமமும் இப்போது இல்லை. நீங்களும் யூபிஐ வசதியை உங்கள் அன்றாட வாழ்க்கையில் அனுபவித்து வருகிறீர்கள் என்று நினைக்கிறேன். எங்கே சென்றாலும், ரொக்கத்தைக் கொண்டு செல்லுதல், வங்கிக்குச் செல்லுதல், ஏடிஎம்மைத் தேடுதல் போன்ற சங்கடங்களுக்கு முடிவு. மொபைல் வாயிலாகவே அனைத்துப் பணப் பரிவர்த்தனைகளும் முடிந்து விடுகின்றன, ஆனால் உங்களுடைய இந்தச் சின்னச்சின்ன நிகழ்நிலை பணம் செலுத்தல் காரணமாக தேசத்தில் எத்தனை பெரிய டிஜிட்டல் பொருளாதாரம் உருவாகி இருக்கிறது என்பதைப் பற்றி நீங்கள் சிந்தித்ததுண்டா? இந்த சமயத்தில் நமது தேசத்தில் கிட்டத்தட்ட 20,000 கோடி ரூபாய்க்கான பணப்பரிவர்த்தனைகள், நாளொன்றிற்கு நடைபெற்று வருகின்றன. கடந்த மார்ச் மாதத்தில், யூபிஐ பரிவர்த்தனை கிட்டத்தட்ட 10 இலட்சம் கோடி ரூபாயை எட்டி விட்டது. இதனால் தேசத்தில் வசதிகளும் அதிகரித்து வருகிறது, நாணயமான ஒரு சூழலும் உருவாகி வருகிறது. இப்போது தேசத்தில் நிதித்துறையில் தொழில்நுட்பத்தோடு இணைந்த பல புதிய ஸ்டார்ட் அப்புகளும் முன்னேற்றம் கண்டு வருகின்றன. உங்களிடத்திலும் டிஜிட்டல் வழி பணம் செலுத்தல் மற்றும் ஸ்டார்ட் அப் சூழல் அமைப்பின் இந்த சக்தியோடு தொடர்புடைய அனுபவம் இருந்தால், அவற்றை நீங்கள் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுடைய அனுபவம், நாட்டுமக்கள் பலருக்கும் உத்வேகம் அளிக்கக்கூடியதாக இருக்கலாம்.
என் மனம் நிறை நாட்டுமக்களே, நாம் நமது பார்வையை நம்மைச் சுற்றிச் செலுத்தும் போது, தொழில்நுட்பத்தின் சக்தி எப்படி சாதாரண மக்களின் வாழ்க்கையை மாற்றி விடுகிறது என்பது நமக்குத் தெரிய வருகிறது. தொழில்நுட்பமானது மேலும் ஒரு பெரிய பணியைச் செய்திருக்கிறது. மாற்றுத் திறனாளி நண்பர்களின் அசாதாரணமான திறமைகளின் ஆதாயம், தேசத்திற்கும் உலகிற்கும் கிடைக்க வேண்டும் என்பதே இந்தப் பணி. நமது மாற்றுத் திறனாளி சகோதர சகோதரிகளால் என்ன சாதிக்க முடியும் என்பதை நாம் டோக்கியோ பேராலிம்பிக்ஸிலே கண்டோம். விளையாட்டுக்களைப் போலவே, கலைகள், கல்வித்துறை என பல துறைகளிலும் மாற்றுத் திறனாளி நண்பர்கள் அருமையான செயல்பாடுகளைப் புரிந்திருக்கிறார்கள் என்றாலும், இந்த நண்பர்களுக்குத் தொழில்நுட்பத்தின் சக்தி கிடைக்கின்ற போது, இவர்கள், மேலும் பெரிய சாதனைகளைப் படைக்கின்றார்கள். ஆகையால், தேசம் இப்போது தொடர்ந்து ஆதாரங்களையும், கட்டமைப்பு வசதிகளையும் மாற்றுத் திறனாளிகளுக்கு எளிமையாக இருக்கும் வகையில் தொடர்ந்து ஏற்பாடு செய்ய முயற்சி செய்து வருகிறது. தேசத்தின் பல ஸ்டார்ட் அப் அமைப்புகளுமே கூட, இந்தத் திசையில், கருத்தூக்கம் அளிக்கும் பணிகளை ஆற்றி வருகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு அமைப்புத் தான் Voice of specially-abled people, இந்த அமைப்பு உதவும் தொழில்நுட்பத் துறையில் புதிய சந்தர்ப்பங்களுக்கு ஊக்கமளிக்கிறது. மாற்றுத் திறனாளிக் கலைஞர்களின் பணியை, உலகெங்கிலும் கொண்டு செல்ல, ஒரு நூதனமான தொடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. Voice of specially-abled people என்ற இந்த அமைப்பு, இந்தக் கலைஞர்களின் ஓவியங்கள் அடங்கிய டிஜிட்டல் கலைக்கூடத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறது. மாற்றுத் திறனாளி நண்பர்கள் எந்த வகையில் அசாதாரணமான திறமைகள் நிரம்பியவர்களாக இருக்கின்றார்கள், அவர்களிடத்திலே எத்தனை அபாரமான திறன்கள் ஒளிந்திருக்கின்றன என்பதற்கு இந்தக் கலைக்கூடமே ஒரு எடுத்துக்காட்டு. மாற்றுத் திறனாளி நண்பர்களின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட சவால்கள் இருக்கின்றன, இவற்றிலிருந்து வெளியேறி அவர்கள் எந்த இடத்தைச் சென்றடைய முடியும்!! இப்படி பல விஷயங்கள் குறித்து இந்த ஓவியங்களில் நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும். உங்களுக்கு யாராவது மாற்றுத் திறனாளி நண்பரைத் தெரியும், அவருடைய திறமையை நீங்கள் அறிவீர்கள் என்றால், டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் உதவியோடு அதை உலகத்தின் பார்வைக்குக் கொண்டு வாருங்கள். மாற்றுத் திறனாளி நண்பர்களும் கூட இப்படிப்பட்ட முயற்சிகளோடு உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்.
எனதருமை நாட்டுமக்களே, தேசத்தின் பல பாகங்களில் வெப்பம் அதிக தீவிரத்தோடு அதிகரித்து வருகிறது. அதிகரிக்கும் வெப்பத்தில், நீரை சேமிப்பது என்ற பொறுப்பும் கூட அதே அளவுக்கு அதிகரித்து வருகிறது. நீங்கள் எங்கே இருந்தாலும், அங்கே போதுமான அளவுக்கு நீர் ஒருவேளை இருக்கலாம். ஆனால், நீர்த்தட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழும் கோடிக்கணக்கான மனிதர்களை நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும், அவர்களுக்கு ஒவ்வொரு சொட்டு நீரும், அமிழ்துக்கு ஒப்பானதாகும்.
நண்பர்களே, இந்த சமயத்தில், சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டு, சுதந்திரத்தின் அமிர்த மஹோத்சவத்தின் போது, தேசம் எத்தகைய உறுதிப்பாடுகளைத் தாங்கி முன்னேறிக் கொண்டிருக்கிறதோ, அதிலே நீர் பராமரிப்பு என்பதும் ஒன்றாகும். அமிர்த மஹோத்சவமத்தின் போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 அமிர்த நீர்நிலைகளை நாம் உருவாக்குவோம். இது எத்தனை பெரிய இயக்கம் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா. உங்கள் அனைவரிடத்திலும், குறிப்பாக இளைஞர்களிடத்தில் கேட்டுக் கொள்வதெல்லாம், அவர்கள் இந்த இயக்கம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும், இதனைத் தங்களின் பொறுப்பாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பது தான். நீங்கள் உங்கள் பகுதியில் சுதந்திரப் போராட்டத்தோடு தொடர்புடைய வரலாறு ஏதேனும் இருந்தால், ஏதேனும் ஒரு போராட்ட வீரரின் நினைவுச் சின்னம் இருந்தால், அதையும் கூட நீங்கள் அமிர்த நீர்நிலையோடு இணைக்கலாம். அமிர்ந்த நீர்நிலை அமைப்பது பற்றிய உறுதிப்பாடு மேற்கொண்ட பிறகு பல இடங்களில் இது தொடர்பாகப் பணிகள் படுவிரைவாக நடந்தேறி வருவதாக எனக்குச் செய்திகள் வருகின்றன, இது மகிழ்ச்சியை அளிக்கிறது. யூபியின் ராம்புரின் கிராமப் பஞ்சாயத்து பட்வாயி பற்றி எனக்குத் தகவல் கிடைத்தது. அங்கே கிராம சபை நிலத்தில் ஒரு குளம் இருந்தது. ஆனால் அது மாசடைந்து, கழிவுகள்-குப்பைகளால் நிரம்பி இருந்தது. கடந்த சில வாரங்களில், தீவிர முயற்சிகளுக்குப் பிறகு, அந்தப் பகுதி மக்களின் உதவியோடு, வட்டார பள்ளிக் குழந்தைகளின் துணையோடு, இந்த மாசடைந்த குளத்திற்கு மீளுயிர் அளிக்கப்பட்டது. இப்போது இந்தக் குளத்தின் கரைகளில் தடுப்புச் சுவர்கள், சுற்றுச் சுவர்கள், உணவிடங்கள், நீரூற்றுக்கள், ஒளியமைப்புகள் என பலவகையான அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. ராம்புரின் பட்வாயி கிராமப் பஞ்சாயத்திற்கும், கிராமத்து மக்களுக்கும், அங்கிருக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கும், இந்த முயற்சிக்காக, பலப்பல வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே, நீரின் இருப்பு, நீரின் தட்டுப்பாடு என இவை, எந்த ஒரு தேசத்தின் முன்னேற்றத்தையும், வேகத்தையும் தீர்மானம் செய்பவை. மனதின் குரலில், தூய்மை போன்ற விஷயங்களோடு கூடவே நான் நீர் பராமரிப்பு பற்றி மீண்டும் மீண்டும் கூறிவருவதை நீங்கள் கவனித்திருக்கலாம். நமது புனித நூல்களில் தெளிவாக எழுதியிருக்கிறது –
பானியம் பரமம் லோகே, ஜீவானாம் ஜீவனம் சம்ருதம்.
पानियम् परमम् लोके, जीवानाम् जीवनम् समृतम् ||
அதாவது, உலகிலே, நீர் மட்டுமே, அனைத்து உயிர்களின், வாழ்வாதாரம் என்பதோடு, நீர் தான் மிகப்பெரிய ஆதாரம்; ஆகையால் தான் நமது முன்னோர்கள், நீர் பராமரிப்பிற்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் அளித்தார்கள். வேதங்கள் தொடங்கி, புராணங்கள் வரை, நீரை சேமிக்க குளங்கள், ஏரிகள் ஆகியவற்றை அனைத்து இடங்களிலும் ஏற்படுத்த வேண்டும் என்பதை மனிதர்களின் சமூக மற்றும் ஆன்மீகக் கடமை என்றே கூறப்பட்டிருக்கிறது. வால்மீகி இராமாயணத்தில் நீர் நிலைகளை இணைப்பதன் மீதும், நீர் பாதுகாப்பின் மீதும் சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதைப் போலவே, மாணவர்களும் நன்கறிவார்கள், சிந்து சரஸ்வதி மற்றும் ஹரப்பா நாகரிகங்களிலும் கூட, பாரதத்தில் நீர் தொடர்பாக எந்த அளவுக்கு மேம்பட்டதொரு பொறியியல் இருந்தது என்பது தெரிய வருகிறது. பண்டைய காலத்தில் பல நகரங்களின் நீர் நிலைகளில், ஒன்றோடு ஒன்று தொடர்புடைய அமைப்பு முறைகள் இருந்தன, அந்த காலத்தில் மக்கள்தொகை அந்த அளவுக்கு இருக்கவில்லை, இயற்கை வளங்களுக்கான தட்டுப்பாடும் அந்த அளவுக்கு இருக்கவில்லை, ஒரு வகையில் வளம் கொழித்தது எனலாம், இருந்தாலும், நீர் பராமரிப்பு தொடர்பாக அப்போது விழிப்புணர்வு அதிகமாக இருந்தது. ஆனால் இன்று நிலைமை தலைகீழாக இருக்கிறது. உங்கள் அனைவரிடத்திலும் என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் உங்களுடைய பகுதிகளில் இருக்கும் பழைய நீர்நிலைகள், ஏரிகள்-குளங்கள் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். அமிர்த சரோவர் இயக்கம் காரணமாக நீர்பராமரிப்போடு கூடவே இந்தப் பகுதியைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் முடியும். இதன் காரணமாக நகரங்களில், பகுதிகளில், வட்டார சுற்றுலாத் தலங்கள் மேம்பாடு அடையும், கண்டு களிக்க மக்களுக்கும் ஒரு இடம் கிடைக்கும்.
நண்பர்களே, நீரோடு தொடர்புடைய ஒவ்வொரு முயற்சியும் நமது எதிர்காலத்தோடு தொடர்புடையது. இதிலே முழுமையாக சமூகத்தின் கடமை இருக்கிறது. இதற்காக பல நூற்றாண்டுக்காலமாக பல்வேறு சமூகங்கள், பல்வேறு முயற்சிகளைத் தொடந்து செய்து வருகின்றார்கள். எடுத்துக்காட்டாக, கட்சின் ரணிலே இருக்கும் ஒரு பழங்குடியினமான மால்தாரீ, நீர் பராமரிப்பின் பொருட்டு, வ்ருதாஸ் என்ற பெயர் கொண்ட வழிமுறையைப் பயன்படுத்துகிறது. இதன்படி, சிறிய குளங்கள் ஏற்படுத்தப்பட்டு, இவற்றைப் பாதுகாக்க அருகிலே மரங்கள்-செடிகள் நடப்படும். இதைப் போன்றே மத்திய பிரதேசத்தின் பீல் பழங்குடியினர் தங்களுடைய பாரம்பரியமான ஹல்மா வாயிலாக நீர் பராமரிப்பைச் செய்து வருகின்றார்கள். இந்தப் பாரம்பரியப்படி, இந்தப் பழங்குடியினத்தவர், நீரோடு தொடர்புடைய பிரச்சனைகளுக்கான தீர்வுக்காக ஓரிடத்தில் ஒன்று கூடுகிறார்கள். ஹல்மா பாரம்பரியத்திலே கிடைத்த ஆலோசனைகள் காரணமாக இந்தப் பகுதியில் நீர்த் தட்டுப்பாடு குறைந்திருப்பதோடு, நிலத்தடி நீர் மட்டமும் உயர்திருக்கிறது.
நண்பர்களே, இப்படிப்பட்ட கடமையுணர்வு உங்கள் மனதிலும் வந்து விட்டால், நீர் பிரச்சனையோடு தொடர்புடைய எத்தனை பெரிய சவாலாக இருந்தாலும், அதற்குத் தீர்வைக் கண்டுவிட முடியும். சுதந்திரத்தின் அமிர்த மஹோத்சவக் காலத்தில், நாம் நீர் பராமரிப்பு, நீர் பாதுகாப்பு தொடர்பான உறுதிப்பாடுகளை மேற்கொள்வோம் வாருங்கள். ஒவ்வொரு சொட்டு நீரையும் நாம் பாதுகாப்போம், ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவோம்.
என் கனிவுநிறை நாட்டுமக்களே, சில நாட்கள் முன்பாக, மாணவ நண்பர்களோடு நான் தேர்வுகளை எதிர்கொள்வோம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். இந்த உரையாடலின் போது, சில மாணவர்கள், அவர்களுக்குக் கணிதப் பாடம் பயமுறுத்துவதாக இருக்கிறது என்று கூறியிருந்தார்கள். இதைப் போலவே, பல மாணவர்களும் செய்திகளாக எனக்கு அனுப்பி இருந்தார்கள். கணிதம் தொடர்பாக இந்த முறை மனதின் குரலில் உரையாட வேண்டும் என்று அப்போதே நான் தீர்மானித்தேன். நண்பர்களே, கணிதம் எப்படிப்பட்ட ஒரு விஷயம் என்றால், இது இந்தியர்கள் அனைவருக்கும் சுலபமானதாக இருக்க வேண்டும். உள்ளபடியே, கணிதம் தொடர்பாக மிக அதிகமாக ஆய்வுகளும், பங்களிப்புக்களும் அளித்தவர்கள் என்றால் நம் நாட்டவர் தாம். பூஜ்யம், அதாவது ஜீரோவை அளித்தது, அதன் மகத்துவம் பற்றி நீங்கள் தெளிவாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பூஜ்யம் என்பது கண்டுபிடிக்கப்படாதிருந்தால், உலகில் இத்தனை விஞ்ஞான முன்னேற்றங்கள் நிகழ்ந்திருக்காது என்று பல நேரங்களில் கூறப்படுவதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். Calculus எனப்படும் நுண்கணிதம் தொடங்கி கணிப்பொறி வரை, விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளான இவையனைத்தும், பூஜ்யத்தையே ஆதாரமாகக் கொண்டவை. பாரதத்தின் கணிதவியலாளர்களும் பண்டிதர்களும் எந்த அளவுக்கு எழுதியிருக்கிறார்கள் என்றால்,
யத் கிஞ்சித் வஸ்து தத் சர்வம், கணிதேன பினா நஹி!
यत किंचित वस्तु तत सर्वं, गणितेन बिना नहि !
அதாவது, இந்த பிரும்மாண்டத்தில் எதுவெல்லாம் இருக்கிறதோ, அவை அனைத்தும் கணிதத்தையே ஆதாரமாகக் கொண்டு இயங்குகின்றன. நீங்கள் விஞ்ஞானத்தில் படித்ததை நினைவு கூருங்கள், இதன் பொருள் உங்களுக்குப் புரிய வரும்!! விஞ்ஞானத்தின் அனைத்துக் கோட்பாடுகளும் ஒரு கணித சூத்திரத்தின் மூலமாகவே விளக்கப்படுகிறது. நியூட்டனின் விதிகளாகட்டும், ஐன்ஸ்டீனின் பிரபலமான கோட்பாடாகட்டும், பிரும்மாண்டத்தோடு தொடர்புடைய அனைத்து விஞ்ஞானமும் ஒரு கணிதத்தோடே தொடர்புடையனவாக உள்ளன. இப்போது விஞ்ஞானிகளும் Theory of Everything என்பது பற்றியும் விவாதித்து வருகிறார்கள், அதாவது ஒரே ஒரு சூத்திரமானது பிரும்மாண்டத்தின் அனைத்து விஷயங்களையும் விளக்குவது எப்படி என்பது தான் அது. கணிதம் வாயிலாக விஞ்ஞானம் பற்றிய புரிதல் மிகவுயரிய அளவுக்கு மேம்பட்டதாக நமது ரிஷிகள் எப்போதுமே செய்து காட்டியிருக்கிறார்கள். நாம் பூஜ்யத்தைக் கண்டுபிடித்தோம் என்றால், இதோடு கூடவே முடிவிலி அதாவது infiniteஐயுமே கூட வெளிப்படுத்தி இருக்கிறோம். பொதுவாகப் பேசும் போது நாம் எண்ணிக்கையை, மில்லியன், பில்லியன், டிரில்லியன் என்பது வரை பேசுவது வழக்கம், ஆனால் வேதங்களிலும், பாரதநாட்டு கணித முறையிலும் எண்ணிக்கை மிக மேம்பட்ட நிலையில் கூறப்படுகிறது. நம் முறையில் ஒரு தொன்மையான சுலோகம் உள்ளது.
एकं दशं शतं चैव, सहस्रम् अयुतं तथा |
लक्षं च नियुतं चैव, कोटि: अर्बुदम् एव च ||
वृन्दं खर्वो निखर्व: च, शंख: पद्म: च सागर: |
अन्त्यं मध्यं परार्ध: च, दश वृद्ध्या यथा क्रमम् ||
ஏகம் தசம் சதம் சைவ, சஹஸ்ரம் அயுதம் ததா.
லக்ஷம், ச நியுதம் சைவ, கோடி: அர்புதம் ஏக ச.
விருந்தம் கர்வோ நிகர்வ: ச, சங்க: பத்ம: ச சாகர:.
அந்த்ய ம் மத்யம் பரார்த: ச, தஸ விருத்யா யதா கிரமம்.
இந்த சுலோகத்தில் எண்ணிக்கையின் வரிசைக்கிரமம் உரைக்கப்பட்டிருக்கிறாது. அதாவது -
ஒன்று, பத்து, நூறு, ஆயிரம் மற்றும் பத்தாயிரம்.
இலட்சம், பத்து இலட்சம் மற்றும் கோடி.
இதைப் போன்றே, எண்ணிக்கை வருகிறது – சங்க, பத்ம மற்றும் சாகர் வரை. ஒரு சாகர் என்பதன் பொருள் பத்து என்ற எண்ணின் 57 அடுக்குகள். அதாவது ஒன்று என்ற எண்ணிற்குப் பிறகு 57 பூஜ்யங்கள். இது மட்டுமல்ல, இதனைத் தாண்டி, ஓக் மற்றும் மஹோக் போன்ற எண்ணிக்கைகள் இருக்கின்றன. ஒரு மஹோக் என்பது பத்து என்ற எண்ணின் 62 அடுக்குகள், அதாவது ஒன்று என்ற எண்ணிற்குப் பிறகு 62 பூஜ்யங்கள். நாம் இத்தனை பெரிய எண்ணிக்கையை நமது மூளையில் கற்பனை செய்யவே சிரமப்படுவோம், ஆனால் இந்திய கணிதத்தில் இதனை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்திருக்கின்றார்கள். சில நாட்கள் முன்பாகத் தான் இண்டெல் கம்பெனியின் தலைவர் என்னை சந்தித்தார். அவர் எனக்கு ஒரு ஓவியத்தையளித்தார்; அதிலே வாமன அவதாரம் வாயிலாக எண்ணிக்கை அளவிடப்பட்டு வரக்கூடிய பாரதிய வழிமுறை அதில் வடிக்கப்பட்டிருந்தது. இண்டெல் எனும் போதே, கணிப்பொறி உங்கள் மூளையில் பளிச்சிடும். கணிப்பொறிக்கான மொழியில், நீங்கள் பைனரி முறை பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம், ஆனால் நமது தேசத்திலே ஆச்சார்யர் பிங்களர் போன்ற ரிஷிகள் இருந்தார்கள், இவர்கள் பைனரி பற்றி சிந்தித்திருக்கிறார்கள். இதைப் போலவே ஆரியபட்டர் தொடங்கி ராமானுஜன் வரை, கணிதத்தின் பல கோட்பாடுகள், நம் நாட்டிலே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன.
நண்பர்களே, இந்தியர்களான நமக்கெல்லாம் கணிதம் எப்போதுமே சிக்கலான ஒன்றாக இருந்ததில்லை, இதற்கான ஒரு பெரிய காரணம் நமது வேதக்காலக் கணிதமும் கூட. நவீன காலத்தில் வேத கணிதத்தின் மாட்சியை வெளிப்படுத்திய பெருமை முழுக்க ஸ்ரீ பாரதீ கிருஷ்ண தீர்த்த ஜி மஹாராஜையே சாரும். அவர் தான் கணக்கீடுகளின் பண்டைய முறைக்கு மீளுயிர் அளித்து, இதற்கு வேத கணிதம் என்ற பெயரளித்தார். வைதிக கணிதத்தின் மிகச் சிறப்பான விஷயம் என்னவென்றால், இதன் மூலம் நீங்கள் மிகக்கடினமான கணக்கீடுகளை, கண்ணிமைக்கும் நேரத்தில் மனதிற்குள்ளேயே செய்து விட முடியும். இப்போதெல்லாம் சமூக ஊடங்களில் வேத கணிதத்தைக் கற்றுக் கொள்ளவும், கற்பிக்கவும் கூடிய பல காணொளிகளை நீங்கள் பார்த்திருக்கலாம்.
நண்பர்களே, இன்றைய மனதின் குரலில் வேத கணிதத்தைக் கற்பிக்கும் அப்படிப்பட்ட ஒரு நண்பர் நம்மோடு இணையவிருக்கிறார். இவர் கோல்காதாவின் கௌரவ் டேகரீவால் அவர்கள். இவர் கடந்த 20-25 ஆண்டுகளாக, வேத கணிதம் என்ற இந்த இயக்கத்திற்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்திருக்கிறார். வாருங்கள், அவரோடு கலந்து பேசுவோம்.
மோதி ஜி: கௌரவ் அவர்களே வணக்கம்.
கௌரவ்: வணக்கம் சார்.
மோதி ஜி: நீங்க வேத கணிதம் தொடர்பா அதிக ஆர்வத்தோட இருக்கீங்கன்னு நான் கேள்விப்பட்டேன். ஆகையால நான் உங்களைப் பத்தி முதல்ல தெரிஞ்சுக்க விரும்பறேன், அப்புறமா இந்த விஷயம் பத்தி உங்களுக்கு எப்படி இத்தனை நாட்டம் வந்திச்சுன்னு கொஞ்சம் சொல்லுங்க.
கௌரவ்: சார், நான் 20 ஆண்டுகள் முன்னால வணிகப்பள்ளிக்கு விண்ணப்பம் செஞ்சுக்கிட்டு இருந்தேன், அப்ப இதுக்கு நடத்தப்பட்ட போட்டித் தேர்வு பேரு CAT. அதில கணிதம் தொடர்பான ஏகப்பட்ட வினாக்கள் கேட்கப்பட்டிச்சு. ஆனா இவற்றுக்கு விடை அளிக்க நேரம் குறைவாவே இருக்கும். அப்பத்தான் எங்கம்மா எனக்கு ஒரு புத்தகம் வாங்கிக் கொடுத்தாங்க, அதோட பேரு வேத கணிதம். ஸ்வாமி ஸ்ரீ பாரதீகிருஷ்ண தீர்த்த ஜீ மஹராஜ் தான் அந்தப் புத்தகத்தை எழுதினவரு. அதில அவரு 16 சூத்திரங்களை கொடுத்திருந்தாரு. இதில கணிதம் ரொம்ப சுலபமா இருந்திச்சு, ரொம்ப வேகமா இதுக்கான தீர்வுகள் கிடைச்சுது. அதைப் படிச்ச பிறகு தான் எனக்கு உத்வேகமே பிறந்திச்சு, கணக்கு மேல எனக்குள்ள இருந்த ஆர்வம் விழிப்படைஞ்சுது. இந்தப் படிப்பு பாரதம் உலகுக்கு அளிச்ச கொடை, இது நம்ம மரபுச்சொத்து, இதை நாம உலகத்தின் மூலை முடுகெங்கும் கொண்டு சேர்க்க முடியும்னு நான் உணர்ந்தேன். வேத கணிதத்தை உலகெங்கும் கொண்டு சேர்க்கணுங்கறதை நான் என்னோட இலக்கா அப்போதிலிருந்து தீர்மானம் செஞ்சுக்கிட்டேன். ஏன்னா, கணிதம் பத்தின பயம் எல்லாரையும் வாட்டுச்சு. ஆனா வேத கணிதம் கணிதப் பாடத்தை மிகச் சுலபமானதா மாத்திக் கொடுக்குது.
மோதி ஜி: கௌரவ் அவர்களே, எத்தனை ஆண்டுகளா நீங்க இந்தப் பணியில ஈடுபட்டிருக்கீங்க?
கௌரவ்: இதோட சுமார் 20 ஆண்டுகளா இதில ஈடுபட்டிருக்கேன் சார். இதில முழு ஈடுபாட்டோட நான் செயல்படுறேன்.
மோதி ஜி: சரி விழிப்புணர்வை ஏற்படுத்த என்ன செய்யறீங்க, எப்படி செயல்படுத்தறீங்க, மக்கள் கிட்ட எப்படி எடுத்துக்கிட்டுப் போறீங்க?
கௌரவ்: நாங்க பள்ளிகளுக்குப் போறோம், நிகழ்நிலையில கற்பிக்கிறோம். எங்க அமைப்போட பேரு Vedic Maths Forum India. இந்த அமைப்பு வாயிலா நாங்க இணையம் மூலமா 24 மணிநேரமும் வேத கணிதத்தைக் கற்பிக்கறோம் சார்.
மோதி ஜி: கௌரவ் அவர்களே, தொடர்ந்து குழந்தைகளோட உரையாடறதை நான் ரொம்பவே விரும்பறது மட்டுமில்லாம இதுக்கான வாய்ப்பு இருக்கான்னு ஆராயவும் செய்வேன். தேர்வுகளை எதிர்கொள்வோம், அதாவது exam warrior நிகழ்ச்சி மூலமா இதை அமைப்பு ரீதியானதா ஆக்கியிருக்கோம். இதில என்னோட அனுபவம் என்னென்னா, பெரும்பாலான வேளைகள்ல நான் குழந்தைகளோட உரையாடும் போது, கணிதம்னு சொன்னவுடனேயே அவங்க அந்த இடத்தை விட்டு ஓடிப் போயிடறாங்க அப்படீங்கறது தான். ஆனா என்னோட முயற்சி என்னன்னா, காரணமே இல்லாம இப்படி ஒரு பீதி ஏற்பட்டிருக்கே, இதை எப்படியாவது வெளியேத்தணும், இந்த பயத்தைப் போக்கணும், மேலும், சின்னச்சின்ன உத்திகள் அப்படீங்கற பாரம்பர்யமான வழியில இதை செயல்படுத்தணும்னு நினைக்கறேன். உலகத்தில கணிதம் தொடர்பான பழைமையான பாரம்பரியங்கள்ல பாரதநாட்டுப் பாரம்பரியம் ஒண்ணா இருக்குங்கற நிலையில, இந்த தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்கள் மனசுல இருக்கற பயத்தைப் போக்க உங்க ஆலோசனைகளை சொல்ல முடியுமா?
கௌரவ்: சார், இது பிள்ளைங்களுக்கு ரொம்பவே பயனுள்ளதா இருக்கும், ஏன்னா, தேர்வு பத்தின அச்சம், ஒவ்வொரு வீட்டிலயும் ஒரு பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கு. தேர்வுகளுக்காக பிள்ளைங்க டியூஷன் வகுப்புகளுக்குப் போறாங்க, பெற்றோருக்கு ஒரே பதட்டமா இருக்கு. ஆசிரியர்களும் நெருக்கடியை உணர்றாங்க. ஆனா வேத கணிதத்தில இதெல்லாம் மாயமா மறைஞ்சு போயிடுது. இந்த சாதாரணமான கணிதத்தை விடவும், வேத கணிதம் 150 சதவீதம் அதிக வேகமானது, இதனால பிள்ளைங்களுக்கு அதிக தன்னம்பிக்கை ஏற்படுது, மூளை சுறுசுறுப்பா வேலை செய்யுது. இப்ப நாங்க வேத கணிதம் கூடவே யோகக் கலையையும் அறிமுகப்படுத்தியிருக்கோம். இதனால பிள்ளைங்க கண்ணை மூடிக்கிட்டு, வேத கணித வழிமுறைகள் வாயிலா கணக்கீடு செய்ய முடியும்.
மோதி ஜி: இப்ப தியானம் தொடர்பான பாரம்பரியத்திலயும் கூட, இந்த மாதிரியா கணிதச் செயல்பாடுகள்ல, அதிலயும் தியானத்தோட ஒரு அடிப்படை படிப்பாவும் இருக்கு.
கௌரவ்: ஆமாம் சார்.
மோதி ஜி: சரி கௌரவ் அவர்களே, நீங்க இதை ஒரு இலக்கா தீர்மானிச்சுப் பயணிக்கறீங்க அப்படீங்கறது ரொம்ப மகிழ்ச்சி அளிக்குது, அதுவும் குறிப்பா உங்க அம்மா ஒரு நல்ல குருவா இருந்து உங்களை சரியான வழிக்குக் கொண்டு வந்திருக்காங்க. இன்னைக்கு நீங்க இலட்சக்கணக்கான மாணவர்களையும் இந்தப் பாதையில கொண்டு வந்து பயணிக்கறீங்க. உங்களுக்கு பலப்பல நல்வாழ்த்துக்கள்.
கௌரவ்: ரொம்ப நன்றி சார். நான் உங்களுக்கு என்னோட நன்றிகளைத் தெரிவிக்கிறேன் சார். அதாவது வேத கணிதத்துக்கு நீங்க இத்தனை மதிப்பளிச்சு என் கருத்துக்களைக் கேட்டிருக்கீங்க. நாங்க எல்லாருமே உங்களுக்கு எங்க நன்றிகளைத் தெரிவிக்கறோம்.
மோதி ஜி: ரொம்ப ரொம்ப நன்றி, வணக்கம்.
கௌரவ்: வணக்கம் சார்.
நண்பர்களே, கௌரவ் அவர்கள் மிகச் சிறப்பான முறையிலே, வேத கணிதம் கணிதத்தின் சிரமத்தை சுவாரசியமானதாக எப்படி ஆக்குகிறது என்பதைத் தெரிவித்தார். அது மட்டுமல்ல, வைதிக கணிதம் வாயிலாக பெரியபெரிய அறிவியல் சிக்கல்களையும் தீர்க்க முடியும். பெற்றோர் அனைவரும் தங்கள் குழந்தைகளுக்குக் கண்டிப்பாக வேத கணிதத்தைக் கற்பியுங்கள் என்று நான் வேண்டிக் கொள்கிறேன். இதன் வாயிலாக அவர்களுடைய தன்னம்பிக்கை அதிகப்பட்டு, அவர்களுடைய மூளையின் பகுப்பாய்வுத் திறன்களும் அதிகரிக்கும். மேலும் கணிதம் தொடர்பாக குழந்தைகளிடத்திலே இருக்கும் அச்சமும் அகலும்.
எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலில் நாம் இன்று அருங்காட்சியகம் முதல், கணிதம் வரையிலான பல அறிவார்ந்த விஷயங்களைப் பற்றிப் பேசினோம். இந்த விஷயங்கள் அனைத்தும், உங்கள் ஆலோசனைகள் காரணமாகவே மனதின் குரலில் இடம் பிடித்திருக்கின்றன. நீங்கள் அனைவரும் இதைப் போலவே, வருங்காலத்திலும் உங்கள் ஆலோசனைகளை நமோ செயலியிலும், மைகவ் வாயிலாகவும் அனுப்பி வாருங்கள். வரும் நாட்களில் தேசத்தில் ஈத் பண்டிகை வரவிருக்கிறது. மே மாதம் 3ஆம் தேதி அட்சய திரிதியையும், பகவான் பரசுராமரின் ஜெயந்தியும் கொண்டாடப்பட இருக்கின்றன. சில நாட்கள் கழித்து பைசாக் புத்த பூர்ணிமை நாட்களும் வரவிருக்கின்றன. இந்தப் பண்டிகைகள் அனைத்தும், ஒழுங்குமுறை, புனிதத்தன்மை, கொடை மற்றும் சகோதரத்துவத்தை முன்னிறுத்துபவை. உங்கள் அனைவருக்கும் இந்தப் பண்டிகைகளுக்கான மிகப்பிரியமான நல்வாழ்த்துக்கள். இந்தத் திருநாட்களை உல்லாசமாகவும், சகோதரத்துவத்தோடும் நன்றாகக் கொண்டாடுங்கள். இவை அனைத்திற்கும் இடையே, கொரோனா தொடர்பாகவும் விழிப்போடு இருங்கள். முகக்கவசம் அணியுங்கள், தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடியுங்கள், கைகளைக் கழுவுவதை மறவாதீர்கள், நம்மை நாமே தற்காத்துக் கொள்ள இவை அவசியமான உபாயங்கள், நீங்கள் இவற்றைக் கடைப்பிடித்து வாருங்கள். அடுத்த முறை மனதின் குரலில் நாம் மீண்டும் சந்திப்போம், நீங்கள் அனுப்பும் மேலும் புதிய விஷயங்களைப் பற்றி விவாதிப்போம், விடை கொடுங்கள் நண்பர்களே. பலப்பல நன்றிகள்.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். கடந்த வாரத்தில் நாம் ஒரு சாதனையைப் படைத்திருக்கிறோம், இது நம்முள்ளே பெருமிதத்தை நிரப்பியிருக்கின்றது. பாரதம் கடந்த வாரத்தில் 400 பில்லியன் டாலர், அதாவது, 30 இலட்சம் கோடி ரூபாய் என்ற ஏற்றுமதி இலக்கை எட்டியிருக்கிறது. முதன்முறையாகக் கேள்விப்படும் போது இது ஏதோ பொருளாதாரம் தொடர்பான விஷயமாகப் பட்டாலும், பொருளாதாரத்தையும் தாண்டி, பாரதத்தின் வல்லமை, பாரதத்தின் ஆற்றல் ஆகியவற்றோடு தொடர்புடைய விஷயம் இது. ஒரு காலத்தில் பாரதத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டவை பற்றிய புள்ளிவிவரம் ஏதோ 100 பில்லியன், சில சமயம் 150 பில்லியன், சில வேளை 200 பில்லியன் டாலர்கள் என்பது வரை இருந்திருந்தது. ஆனால் இன்றோ, பாரதம் 400 பில்லியன் டாலர்களை எட்டிவிட்டது. இதன் பொருள் என்னவென்றால், பாரதத்தில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கான தேவை உலகெங்கிலும் அதிகரித்திருக்கிறது என்பது ஒன்று; மேலும் இரண்டாவதாக பாரதத்தின் விநியோகச் சங்கிலி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் பலமடைந்து வருகிறது என்ற மிகப்பெரிய செய்தியையும் இது நமக்களிக்கிறது. நாம் கனவு காண்பதற்கேற்ப மகத்தான உறுதிப்பாடுகளை நாம் ஏற்கும் போது, தேசம் விசாலமான நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது. மேற்கொள்ளப்பட்ட உறுதிப்பாடுகளுக்காக இரவுபகலாக நேர்மையாக முயற்சிகள் செய்யப்படும் போது, அந்த உறுதிப்பாடுகள் மெய்ப்படவும் செய்கின்றன, எந்த ஒரு நபரின் வாழ்க்கையிலும் கூட இவ்வாறே தான் நடக்கிறது என்பதை நீங்களும் கவனித்திருக்கலாம். ஒருவருடைய மனவுறுதிப்பாடு, அவருடைய முயல்வு, அவருடைய கனவுகளை விடவும் பெரியதாக இருக்கும் போது, வெற்றித்திருமகள் தானே அவரை நாடித் தேடி வருகிறாள்.
நண்பர்களே, தேசத்தின் அனைத்து மூலைகளிலிருந்தும் புதியபுதிய பொருட்கள் அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. அஸாமின் ஹைலாகாண்டியின் தோல் பொருட்களாகட்டும், உஸ்மானாபாதின் கைத்தறிப் பொருட்களாகட்டும், பீஜாபூரின் பழங்கள்-காய்கறிகளாகட்டும், சந்தௌலியின் கறுப்பு அரிசியாகட்டும், அனைத்து வகைப் பொருட்களின் ஏற்றுமதியும் அதிகரித்து வருகின்றது. நம்முடைய லத்தாக்கின் உலகப் பிரசித்தி பெற்ற ஆப்ரிகாட் பழங்கள் துபாயிலும் கிடைக்கின்றன, தமிழ்நாடு அனுப்பி வைத்த வாழைப்பழங்கள் அரேபியாவில் கிடைக்கிறது. இப்போது பெரிய விஷயம் என்னவென்றால், புதியபுதிய பொருட்கள், புதியபுதிய நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ஹிமாச்சல், உத்தராகண்டில் விளையும் சிறுதானிய அனுப்பீடுகள் டென்மார்க் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு விட்டன. ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மற்றும் சித்தூர் மாவட்டங்களில் விளையும் பங்கனபல்லி, சுவர்ணரேகா மாம்பழ ரகங்கள், தென் கொரியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு விட்டன. திரிபுராவில் விளையும் புத்தம்புதுப் பலாப்பழம், விமானம் வழியாக லண்டனுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. முதன்முறையாக நாகாலாந்தின் கிங் பெப்பர் என்ற மிளகு ரகம் லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டது. இதே போன்று பாலியா கோதுமையின் முதல் அனுப்பீடு, குஜராத்திலிருந்து கென்யாவுக்கும், இலங்கைக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன. அதாவது, இப்போது நீங்கள் பிற நாடுகளுக்குச் சென்றால், அங்கே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் முன்பை விட அதிகமாகக் காணக் கிடைக்கும்.
நண்பர்களே, இந்தப் பட்டியல் மிகவும் நீண்டது, எத்தனை நீளமாக இந்தப் பட்டியல் இருக்கிறதோ, அத்தனை பெரியதாக நமது சக்தி உள்ளது இந்தியாவில் தயாரிப்போம் என்பதன் சக்தி, அத்தனை விசாலமானதாக இருக்கிறது பாரதத்தின் திறமைகள். பாரதத்தின் வல்லமைக்கான ஆதாரம் – நமது விவசாயிகள், நமது கைவினைஞர்கள், நமது நெசவாளிகள், நமது பொறியாளர்கள், நமது சிறுதொழில் புரிவோர், நமது சிறு, குறு, நடுத்தரத் தொழில்துறை, மேலும் பல தொழில்களில் ஈடுபட்டிருக்கும் நபர்கள், இவர்கள் அனைவரும் தான் மெய்யான ஆற்றல். இவர்களின் உழைப்பாலேயே 400 பில்லியன் டாலர் ஏற்றுமதி என்ற இலக்கை எட்ட முடிந்திருக்கிறது, பாரத நாட்டவரின் இந்த வல்லமை, இப்போது உலகின் மூலை முடுக்கெங்கும் புதிய சந்தைகளைச் சென்றடைந்திருக்கிறது என்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. பாரதநாட்டவர் ஒவ்வொருவரும் உள்ளூர்ப் பொருட்களுக்குக் குரல் கொடுப்பவராக இருக்கும் போது, உள்ளூர்ப் பொருட்கள் உலகமயமானவையாக ஆவதற்கு அதிக காலம் பிடிக்காது. வாருங்கள், உள்ளூர் பொருட்களை உலகம் முழுவதும் கொண்டு செல்வோம், நமது உற்பத்திகளின் செல்வாக்கை மேலும் அதிகரிப்போம்.
நண்பர்களே, குடிசைத் தொழில் என்ற அளவிலும் கூட நமது சிறுதொழில்முனைவோரின் வெற்றி நமக்குள்ளே பெருமிதத்தை ஏற்படுத்துவதாக இருப்பதை மனதின் குரல் நேயர்கள் உண்ர்வார்கள். இன்று நமது சிறு தொழில்முனைவோர், கொள்முதலுக்கான அரசின் தளமான Government e-Market place அதாவது GeM வாயிலாக, பெரிய பங்காண்மை ஆற்றி வருகின்றார்கள். தொழில்நுட்பம் வாயிலாக பெரிய அளவிலான ஒளிவுமறைவற்ற அமைப்பு மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. கடந்த ஓராண்டில் ஜெம் வலைவாசல் வாயிலாக, அரசு ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பொருட்களை வாங்கியிருக்கிறது. தேசத்தின் அனைத்து மூலைகளிலிருந்தும் கிட்டத்தட்ட ஒண்ணேகால் இலட்சம் சிறு தொழில்முனைவோர், சிறிய வியாபாரிகள் ஆகியோர் தங்களுடைய பொருட்களை அரசுக்கு நேரடியாக விற்பனை செய்திருக்கின்றார்கள். ஒரு காலத்தில், பெரிய நிறுவனங்கள் மட்டுமே அரசுக்குப் பொருட்களை விற்க முடிந்தது. ஆனால் இப்போது தேசம் மாறி வருகிறது, பழைய வழிமுறைகளும் மாறி வருகின்றன. இப்போது சிறிய கடைக்காரர்களும் கூட ஜெம் வலைவாசலில் அரசுக்குத் தங்களுடைய பொருட்களை விற்க முடியும், இது தானே புதிய பாரதம்!! இவர்கள் பெரிய கனவுகளைக் காண்பதோடு, யாருமே இதுவரை எட்டாத, அந்த இலக்கை எட்டும் துணிவையும் வெளிப்படுத்துகிறார்கள். இந்தத் துணிவின் துணை கொண்டு பாரதநாட்டவர் நாமனைவருமாக இணைந்து, தற்சார்பு பாரதத்தின் கனவைக் கண்டிப்பாக மெய்யாக்குவோம்.
எனதருமை நாட்டுமக்களே, தற்போது நடைபெற்ற பத்ம விருதுகள் அளிக்கப்படும் நிகழ்ச்சியில் நீங்கள் பாபா சிவானந்த் அவர்களைக் கண்டிப்பாக கவனித்திருப்பீர்கள். 126 வயது நிரம்பிய பெரியவரின் சுறுசுறுப்பைப் பார்த்து, என்னைப் போலவே அனைவரும் ஆச்சரியத்திலே ஆழ்ந்து போயிருப்பார்கள். கண்ணிமைக்கும் நேரத்திற்கு உள்ளாக அவர் நந்தி முத்திரையில் வணக்கம் செய்யத் தொடங்கியதை கவனித்தேன். நானுமே கூட குனிந்து மீண்டும் மீண்டும் பாபா சிவானந்தருக்கு வணக்கம் தெரிவித்தேன். 126 வயது, பாபா சிவானந்தரின் உடலுறுதி, என இந்த இரண்டும் இன்று தேசத்தின் விவாதப் பொருளாகி இருக்கின்றன. சமூக வலைத்தளத்தில் பலரின் கருத்துக்களை நான் கவனித்தேன், அதாவது பாபா சிவானந்தர், தனது வயதை விட 4 மடங்கு குறைந்த வயதானவரை விடவும் அதிக உடலுறுதியோடு இருக்கிறார் என்பது போன்று. மெய்யாகவே, பாபா சிவானந்தரின் வாழ்க்கை நம்மனைவருக்கும் கருத்தூக்கம் அளிக்கவல்லது. அவருடைய நீண்ட ஆயுளுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். அவரிடத்திலே யோகக்கலை தொடர்பான ஒரு பேரார்வம் இருக்கிறது, மிக ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை அவர் வாழ்ந்து வருகிறார்.
ஜீவேம சரத: சதம்.
जीवेम शरदः शतम् |
நமது கலாச்சாரத்தில் அனைவருக்குமே 100 ஆண்டுக்காலம் வாழ நல்வாழ்த்துக்கள் அளிக்கப்படுகிறது. நாம் ஏப்ரல் 7 அன்று உலக ஆரோக்கிய தினத்தைக் கொண்டாடவிருக்கிறோம். இன்று உலகெங்கிலும் ஆரோக்கியம் தொடர்பாக பாரதநாட்டு எண்ணப்பாடு, அது யோகக்கலையாகட்டும், ஆயுர்வேதமாகட்டும், இவை தொடர்பாக ஆர்வம் அதிகரித்து வருகிறது. இப்போது கூட நீங்கள் கவனித்திருக்கலாம், கடந்த வாரத்தில் கத்தார் நாட்டில் ஒரு யோகக்கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதிலே 114 நாடுகளின் குடிமக்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள், இது ஒரு புதிய உலக சாதனையாக ஆனது. இதைப் போலவே, ஆயுஷ் தயாரிப்புத் துறையின் சந்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, ஆயுர்வேதத்தோடு தொடர்புடைய மருந்துகளுக்கான சந்தை 22,000 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தது. ஆனால் இன்றோ, ஆயுஷ் தயாரிப்புத் துறை, ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் கோடி ரூபாய் என்ற அளவை எட்டி வருகிறது. அதாவது இந்தத் துறையின் சாத்தியக்கூறுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஸ்டார்ட் அப் உலகிலும் கூட ஆயுஷ், ஈர்ப்பை ஏற்படுத்தும் விஷயமாக ஆகி வருகிறது.
நண்பர்களே, உடல்நலத் துறையின் பிற ஸ்டார்ட் அப்புகள் பற்றி நான் முன்பே கூட பலமுறை பேசியிருக்கிறேன்; ஆனால் இந்த முறை ஆயுஷ் ஸ்டார்ட் அப்புகள் பற்றி உங்களோடு சிறப்பான வகையில் உரையாட இருக்கிறேன். ஒரு ஸ்டார்ட் அப்பின் பெயர் கபிவா. இதன் பெயரில் தான் இதன் பொருள் மறைந்திருக்கிறது. இதில் இருக்கும் க என்பதன் பொருள் கபம், பி என்பதன் பொருள் பித்தம், வா என்பதன் பொருள் வாதம். இந்த ஸ்டார்ட் அப், நமது பாரம்பரியங்களின்படி ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை ஆதாரமாகக் கொண்டது. மேலும் ஒரு ஸ்டார்ட் அப்பான நிரோக்-ஸ்ட்ரீட் உள்ளது, அதே போல ஆயுர்வேத உடல்பராமரிப்புச் சூழலமைப்பில் ஒரு வித்தியாசமான கோட்பாடு உள்ளது. இதன் தொழில்நுட்பத்தால் இயங்கும் தளம், உலகெங்கிலும் இருக்கும் ஆயுர்வேத மருத்துவர்களை நேரடியாக மக்களோடு இணைத்து வைக்கிறது. 50000த்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இதோடு இணைந்திருக்கிறார்கள். இதைப் போன்றே, ஆத்ரேயா கண்டுப்பிடிப்புகள், ஒரு உடல்பராமரிப்புத் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் ஆகும்; இது முழுமையான நலன் என்ற துறையில் பணியாற்றி வருகிறது. இக்ஸோரியல் என்பது அஸ்வகந்தா பயன்பாடு தொடர்பான விழிப்புணர்வை அதிகப்படுத்தி இருப்பதோடு, தலைசிறந்த தரம் வாய்ந்த தயாரிப்புச் செயல்முறைகளிலும் பெரிய அளவில் முதலீடு செய்திருக்கிறது. க்யூர்வேதா, மூலிகைகளின் நவீன ஆய்வு, பாரம்பரிய ஞானம் ஆகியவற்றின் சங்கமம் வாயிலாக முழுமையான நல்வாழ்விற்குத் தேவையான துணை உணவை ஏற்படுத்தி இருக்கிறது.
நண்பர்களே, நான் இப்போது சில பெயர்களை மட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன். இந்தப் பட்டியல் மிக நீளமானது. இவை பாரதநாட்டின் இளம் தொழில்முனைவோர், பாரதத்தில் உருவாகி வரும் புதிய சாத்தியக்கூறுகள் ஆகியவற்றின் அடையாளம். உடல் பராமரிப்புத் துறையின் ஸ்டார்ட் அப்புகள், குறிப்பாக ஆயுஷ் ஸ்டார்ட் அப்புகளிடத்தில் நான் ஒரு வேண்டுகோள் விடுக்க விழைகிறேன். நீங்கள் நிகழ்நிலையில் ஏற்படுத்தும் வலைவாசலை, ஐக்கிய நாடுகள் வாயிலாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மொழிகளிலும் கூட உருவாக்க முயற்சிக்க வேண்டும் என்பது தான் அது. உலகின் பல நாடுகளில் ஆங்கிலம் அதிகம் பேசப்படுவதுமில்லை, புரிந்து கொள்ளப்படுவதும் இல்லை. இப்படிப்பட்ட நாடுகளையும் கூட கவனத்தில் கொண்டு, உங்கள் தகவல்களின் பரப்புரையைச் செய்ய வேண்டும். பாரதத்தின் ஆயுஷ் ஸ்டார்ட் அப்புகள், மிகச் சிறப்பான தரமுள்ள பொருட்களோடு கூட, விரைவாக, உலகில் அங்கிங்கெனாதபடி எங்கும் பரவியிருப்பார்கள் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
நண்பர்களே, ஆரோக்கியத்தோடு நேரடித் தொடர்பு உடையது தூய்மை. மனதின் குரலில் நாம் எப்போதுமே தூய்மை ஆர்வலர்களின் முயற்சிகளைக் கண்டிப்பாக வெளிப்படுத்தி வந்திருக்கிறோம். இப்படிப்பட்ட ஒரு தூய்மை ஆர்வலர் சந்திரகிஷோர் பாடில் அவர்கள். இவர் மஹாராஷ்டிரத்தின் நாசிக்கில் வசித்து வருகிறார். சந்திரகிஷோர் அவர்களுடைய தூய்மை தொடர்பான உளவுறுதி மிகவும் ஆழமானது. இவர் கோதாவரி நதிக்கருகே நின்று கொண்டு, நதியிலே குப்பைக் கூளங்களை வீசி எறியாதிருக்கும் வகையில் மக்களுக்கு உத்வேகம் அளித்து வருகிறார். யாராவது அப்படி வீசினால், உடனடியாக இவர் அவர்களைத் தடுக்கிறார். இந்தச் செயலில் கணிசமான நேரத்தை செலவிடுகிறார் சந்திரகிஷோர் அவர்கள். மாலை நேரத்திற்குள்ளாக, வழக்கமாக நதியிலே வீசியெறியப்பட்டிருக்கும் குப்பைக் கூளப் பொதி இவரிடத்தில் குவிந்து விடுகிறது. சந்திரகிஷோர் அவர்களின் இந்த முயல்வு, விழிப்புணர்வையும் அதிகரிக்கிறது, உத்வேகத்தையும் அளிக்கிறது. இதைப் போலவே மேலும் ஒரு தூய்மை ஆர்வலரான ஒடிஷாவின் புரியைச் சேர்ந்த ராஹுல் மஹாராணா. ராஹுல் ஞாயிற்றுக் கிழமை தோறும் காலை வேளையில் புரீயில் இருக்கும் தீர்த்தத் தலங்களுக்குச் சென்று, அங்கே இருக்கும் நெகிழிக் குப்பைகளை அகற்றுகிறார். இவர் இப்போது வரை ஆயிரக்கணக்கான கிலோ அளவுள்ள நெகிழிக் குப்பைகளையும் கூளங்களையும் அகற்றியிருக்கிறார். புரீயின் ராஹுலாகட்டும், நாசிக்கின் சந்திரகிஷோராகட்டும், இவர்கள் நம்மனைவருக்கும் மிகப்பெரிய கற்பித்தலை அளிக்கிறார்கள். குடிமக்கள் என்ற முறையில் நாம் நமது கடமைகளை ஆற்ற வேண்டும், அது தூய்மையாகட்டும், ஊட்டச்சத்தாகட்டும், அல்லது தடுப்பூசியாகட்டும், இந்த முயற்சிகள் அனைத்தும் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவிகரமாக இருக்கின்றன.
எனதருமை நாட்டுமக்களே, முப்பத்தடம் நாராயணன் அவர்களைப் பற்றிப் பேசலாம் வாருங்கள்!! இவர் ஒரு திட்டத்தைத் தொடங்கினார், இதன் பெயர் Pots for water of life, அதாவது வாழ்க்கை என்ற நீருக்கான பானைகள் என்பது இதன் பொருள். நீங்கள் இந்தத் திட்டம் பற்றித் தெரிந்து கொண்டால், எத்தனை அருமையான பெயர் இது என்று நினைப்பீர்கள்.
நண்பர்களே, முப்பத்தடம் நாராயணன் அவர்கள் கோடையில் பறவைகளும் விலங்குகளும் நீருக்காகத் தவிக்கக் கூடாது என்பதற்காக, மண் பாத்திரங்களை விநியோகம் செய்யும் இயக்கத்தை நடத்தி வருகிறார். கோடையில் பறவைகள்-விலங்குகளின் தாகத்தைப் பார்த்து இவரே கூட வேதனை அடைந்தார். ஏன் தானே மண்கலயங்களை விநியோகம் செய்யும் இயக்கத்தைத் தொடங்கக் கூடாது, இதனால் மற்றவர்கள் இதைப் பெற்றுக் கொண்டு இதில் நீர் நிரப்பும் பணியை மட்டுமே செய்யட்டுமே என்ற எண்ணம் இவருக்கு உண்டானது. தற்போது நாராயணன் அவர்கள் விநியோகம் செய்திருக்கும் மண்கலயங்களின் எண்ணிக்கை ஒரு இலட்சதைக் கடக்க இருக்கிறது என்பதை அறிந்து நீங்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போவீர்கள். தன்னுடைய இயக்கத்தில் இவர் ஒரு இலட்சமாவது மண் பாத்திரத்தை சாபர்மதியில் உள்ள காந்தியடிகளின் ஆசிரமத்திற்கு தானமளிப்பார். இன்று கோடைக்காலம் அடியெடுத்து வைக்கவிருக்கும் வேளையில், நாராயணன் அவர்களின் இந்தப் பணி நம்மனைவருக்கும் கருத்தூக்கம் அளிக்கிறது, நமது புள்ளின-விலங்கின நண்பர்களுக்கு நீருக்கான ஏற்பாடுகளை நாம் செய்வோம்.
நண்பர்களே, நாம் நமது உள உறுதிப்பாடுகளை மீண்டும் உரைப்போம் என்று நான் மனதின் குரல் நேயர்களிடத்திலும் வேண்டுகோள் விடுக்கிறேன். ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமிக்க நம்மால் ஆன அனைத்தையும் நாம் செய்ய வேண்டும். இதைத் தவிர நீரின் மறுசுழற்சி குறித்தும் நாம் அதே அளவு முக்கியத்துவத்தை அளிக்க வேண்டும். வீட்டில் பயன்படுத்தப்படும் நீர், பூத்தொட்டிகளுக்கும், தோட்டங்களுக்கும் மறுபயனாகும், இதை நாம் கண்டிப்பாக மீள்பயன்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டும். சற்றே முயன்றாலும் கூட, நமது வீடுகளில் இதற்குத் தோதான அமைப்பு முறைகளை ஏற்படுத்திவிட முடியும். ரஹீம்தாஸ் அவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக, சில காரணங்களுக்காகவே இப்படிக் கூறியிருக்கிறார், ரஹிமன் பானீ ராகியே, பின் பானி ஸப் சூன். அதாவது நீரைச் சேமியுங்கள், நீரில்லா உலகு பாழ் என்கிறான் ரஹீம் என்பதே இதன் பொருள். நீரைச் சேமிக்கும் பணியில் எனக்குக் குழந்தைகள் மீது மிகவும் நம்பிக்கை இருக்கிறது. தூய்மை விஷயத்தை எவ்வாறு நமது குழந்தைகள் ஒரு இயக்கமாக ஆக்கினார்களோ, அதே போலவே அவர்கள் Water Warriorsஆக, நீருக்கான போராளிகளாக மாறி, நீரைப் பராமரிப்பதில் துணைநிற்க வேண்டும்.
நண்பர்களே, நமது தேசத்தில் நீர்ப் பராமரிப்பு, நீராதாரங்களின் பாதுகாப்பு ஆகியன பல நூற்றாண்டுகளாகவே சமூகத்தின் இயல்பின் ஒரு அங்கமாகவே இருந்து வந்திருக்கிறது. நீர்ப்பராமரிப்பைத் தங்கள் வாழ்க்கையின் குறிக்கோளாகவே தேசத்தில் பலர் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அருண் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சென்னையைச் சேர்ந்த ஒரு நண்பர். அருண் அவர்கள் தனது பகுதியில் இருக்கும் குளங்களையும், ஏரிகளையும் தூய்மைப்படுத்தும் இயக்கத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் 150க்கும் மேற்பட்ட குளங்கள்-ஏரிகளில் மாசகற்றும் கடமையை மேற்கொண்டிருக்கிறார், இதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இதைப் போலவே, மஹாராஷ்டிரத்திலும் ரோஹன் காலே என்ற நண்பர் ஒருவர் இருக்கிறார். ரோஹன் ஒரு மனிதவள மேம்பாட்டு வல்லுநர். இவர் மஹாராஷ்டிரத்தின் ஆயிரக்கணக்கான படிக்கிணறுகளைப் பராமரிப்பது என்ற குறிக்கோளை மேற்கொண்டிருக்கிறார். இவற்றில் பல, பலநூறு ஆண்டுகள் பழைமையானவை, நமது மரபின் அங்கங்களாக விளங்குகின்றன. செகந்தராபாதின் பன்சீலால் பேட் கிணறு, இப்படிப்பட்ட ஒரு படிக்கிணறு தான். பல ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டதன் காரணமாக, அதில் மண்ணும் குப்பையும் நிரம்பி மூடியிருக்கிறது. ஆனால் இப்போது அங்கே இந்தப் படிக்கிணற்றினை மீளுயிர்ப்பிக்க மக்கள் பங்கெடுப்போடு ஒரு இயக்கம் தொடங்கப்பட்டிருக்கிறது.
நண்பர்களே, நான் எந்த மாநிலத்திலிருந்து வந்திருக்கின்றேனோ, அங்கே நீருக்கான தட்டுப்பாடு எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். குஜராத்திலே இந்த படிக்கிணறுகளை வாவ் என்று அழைப்போம். குஜராத் போன்ற மாநிலத்தில் வாவ் என்ற இந்த குளங்களின் மிகப்பெரிய பங்களிப்பு உள்ளது. இந்தக் கிணறுகள் அல்லது குளங்களின் பராமரிப்புக்காக ஜல் மந்திர் யோஜனா என்ற நீர்க்கோயில் திட்டம் மிகப்பெரிய பங்களிப்பை நல்கியிருக்கிறது. குஜராத் நெடுக பல குளங்களின் மீளுயிர்ப்பு புரியப்பட்டிருக்கிறது. இதனால் இந்தப் பகுதிகளில் நீர்மட்டம் அதிகரிக்க பேருதவியாக இருந்திருக்கிறது. இதே போன்ற இயக்கத்தை நீங்களும் வட்டார அளவில் செயல்படுத்த முடியும். தடுப்பணைகள் கட்டுவதாகட்டும், மழைநீர் சேகரிப்பாகட்டும், இதிலே தனிநபரின் முயற்சி முக்கியமானது, அதே போல கூட்டுமுயற்சிகளும் அவசியமானவை. சுதந்திரத்தின் அமிர்த மஹோத்ஸவத்தைக் கொண்டாடும் விதத்தில், நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் 75 அமிர்த ஏரிகளை உருவாக்க முடியும். சில பழைய ஏரிகளை மேம்படுத்தலாம், சில புதிய ஏரிகளை ஏற்படுத்தலாம். நீங்கள் இந்தத் திசையில் நல்ல முயற்சிகளைக் கண்டிப்பாகச் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
என் மனம் நிறை நாட்டுமக்களே, மனதின் குரலின் அழகே என்னவென்றால், இதில் உங்களிடமிருந்து செய்திகள்-தகவல்கள் பல மொழிகளில், பல வழக்கு மொழிகளில் கிடைப்பது தான். பலர் மைகவ் தளத்தில் ஒலித் தகவல்களையும் அனுப்புகிறார்கள். பாரதத்தின் கலாச்சாரம், நமது மொழிகள், நமது வழக்கு மொழிகள், நமது வாழ்க்கைமுறை, உணவு முறைகள் என இவையனைத்து பன்முகத்தன்மையும் தான் நமது மிகப்பெரிய வலிமை. கிழக்கு முதல் மேற்கு வரை, வடக்கு முதல் தெற்கு வரை பாரதத்தின் இந்தப் பன்முகத்தன்மை தான் நம்மை ஒருங்கிணைத்து வைக்கிறது, ஒரே பாரதம் உன்னத பாரதமாக ஆக்கி வைக்கிறது. இதிலும் கூட நமது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், புராணக் கதைகள், இரண்டிற்கும் மிகப்பெரிய பங்களிப்பு உள்ளது. இந்த விஷயம் குறித்து நான் ஏன் உங்களிடம் தெரிவித்துக் கொண்டிருக்கிறேன் என நீங்கள் நினைக்கலாம். காரணம் மாதவ்பூர் மேளா. இந்த மாதவ்பூர் மேளா என்பது எங்கே தொடங்கியது, ஏன் தொடங்கியது, எப்படி இது பாரதத்தின் பன்முகத்தன்மையோடு இணைந்தது என்பதை மனதின் குரலின் நேயர்களான நீங்கள் அறிந்து கொண்டால் சுவாரசியமாக இருக்கும் என்று கருதுகிறேன்.
நண்பர்களே, மாதவ்பூர் மேளா என்பது குஜராத்தின் போர்பந்தரின் கடலோர கிராமமான மாதவ்பூரிலே நடக்கிறது. ஆனால் இந்தியாவின் கிழக்கு எல்லையோரத்தோடும் இதற்குத் தொடர்பு உள்ளது. இது எப்படி சாத்தியமாகும் என்று நீங்கள் நினைக்கலாம்? இதற்கான விடையை ஒரு புராணக்கதை நமக்கு அளிக்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருமணம் வடகிழக்கின் அரசகுமாரி ருக்மணியோடு நடந்தது என்று கூறப்படுகிறது. இந்தத் திருமணம் போர்பந்தரின் மாதவ்பூரில் நடைபெற்றது, இந்தத் திருமணத்தின் அடையாளமாக இன்றும் கூட அங்கே மாதவ்பூரில் திருவிழா நடக்கிறது. கிழக்கும் மேற்கும் இணையும் அழகான, ஆழமான பந்தம், இதுவே நமது பாரம்பரியம். காலப்போக்கில் இப்போது மக்களின் முயற்சியால், மாதவ்பூரின் திருவிழாவோடு புதியபுதிய விஷயங்களும் இணைந்து விட்டன. எங்கள் பக்கங்களில் பெண்வீட்டாரை கராதீ என்பார்கள்; இந்தத் திருவிழாவில் இப்போது வடகிழக்கிலிருந்து ஏகப்பட்ட கராதீயினர் வரத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒரு வாரம் வரை நடைபெறும் இந்த மாதவ்பூர் திருவிழாவில் வடகிழக்கின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள் வருகிறார்கள், கைவினைஞர்கள் வருகிறார்கள், இந்தத் திருவிழாவின் பெருமைக்கு மேலும் மெருகூட்டுகிறார்கள். ஒரு வாரம் வரை பாரதத்தின் கிழக்கு மற்றும் மேற்கின் கலாச்சாரங்களின் இந்த இணைவு, மாதவ்பூரின் இந்தத் திருவிழாவானது, ஒரே பாரதம், உன்னத பாரதம் என்பதற்கான மிக அழகான எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது. நீங்களும் இந்தத் திருவிழா பற்றிப் படியுங்கள், தெரிந்து கொள்ளுங்கள் என்று உங்கள் அனைவரிடத்திலும் வேண்டுகோள் விடுக்கிறேன்.
எனதருமை நாட்டுமக்களே, தேசத்தில் சுதந்திரத்தின் அமிர்த மஹோத்சவம், இப்போது மக்களின் பங்கெடுப்புக்கான புதிய எடுத்துக்காட்டாக ஆகி வருகிறது. சில நாட்கள் முன்பாக மார்ச் மாதம் 23ஆம் தேதியன்று, தியாகிகள் தினத்தன்று தேசத்தின் பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகள் நடந்தன. தேசம் தனது சுதந்திரத்திற்காக உயிர்துறந்த நாயகர்கள் நாயகிகளை, மிகுந்த சிரத்தையோடு நினைவு கூர்ந்தது. இதே நாளன்று கோல்காத்தாவின் விக்டோரியா நினைவகத்தின் பிப்லோபீ பாரத் காட்சியகத்தை மக்களுக்கு அர்ப்பணிக்கும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. பாரதத்தின் வீரம்நிறைந்த புரட்சியாளர்களுக்கு நினைவாஞ்சலிகளை அளிக்க உருவாக்கப்பட்ட ஒரு அற்புதமான காட்சியகம் இது. சந்தர்ப்பம் கிடைத்தால் நீங்களும் இதைக் காணச் சென்று வாருங்கள். நண்பர்களே, ஏப்ரல் மாதத்தில் நாம் இரண்டு மாபெரும் ஆளுமைகளின் பிறந்த நாட்களைக் கொண்டாட இருக்கிறோம். இவர்கள் இருவருமே பாரத சமுதாயம் மீது தங்களுடைய ஆழமான தாக்கத்தை விட்டுச் சென்றிருக்கிறார்கள். இந்த மாபெரும் ஆளுமைகள் – மஹாத்மா புலேவும், பாபாசாஹேப் அம்பேட்கரும் தான். மஹாத்மா புலேயின் பிறந்த நாள் ஏப்ரல் மாதம் 11ஆம் தேதியன்று வருகிறது, பாபா சாஹேபின் பிறந்த நாளை நாம் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதியன்று கொண்டாடுவோம். இந்த இரு மாமனிதர்களும் வேற்றுமைகள், ஏற்றத்தாழ்வு ஆகியவற்றுக்கு எதிராகப் பெரும் போரைத் தொடுத்தார்கள். மஹாத்மா புலே அந்தக் காலகட்டத்தில் பெண்களுக்காக பள்ளிகளைத் திறந்தார், பெண் சிசுக் கொலைக்கு எதிராக ஓங்கிக் குரல் கொடுத்தார். நீர்த் தட்டுப்பாட்டிலிருந்து விடுதலை அடையவும் கூட மாபெரும் இயக்கத்தை அவர் நடத்தினார்.
நண்பர்களே, மஹாத்மா புலேயின் இந்தப் போராட்டத்தில் சாவித்ரீபாய் புலே அவர்களின் பங்களிப்பும் அதே அளவுக்கு மகத்துவம் நிறைந்தது. சாவித்ரிபாய் புலே பல சமூக அமைப்புக்களை நிறுவிப் பெரும்பங்காற்றினார். ஓர் ஆசிரியை, ஒரு சமூக சீர்திருத்தவாதி என்ற வகையில் அவர் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு, அதன் தன்னம்பிக்கையையும் அதிகரித்தார். இருவருமாக இணைந்து சத்யஷோதக் சமாஜ் என்ற அமைப்பை நிறுவினார்கள். அனைத்து மக்களின் அதிகாரப்பங்களிப்பு விஷயத்தில் முயற்சி மேற்கொண்டார்கள். பாபாசாஹேப் அம்பேட்கரின் செயல்களிலும் கூட மஹாத்மா புலேயின் தாக்கத்தை நம்மால் தெளிவாகக் காண முடியும். எந்த ஒரு சமூகத்தின் வளர்ச்சியையும் அளவிட வேண்டுமென்றால், அந்த சமூகத்தில் பெண்களின் நிலையைப் பார்த்துத் தான் செய்ய வேண்டும் என்று அவர் கூறுவதுண்டு. மஹாத்மா புலே, சாவித்ரிபாய் புலே, பாபாசாஹேப் அம்பேட்கர் ஆகியோரின் வாழ்க்கையிலிருந்து உத்வேகம் பெற்று, நான் அனைத்து தாய் தந்தையர், காப்பாளர்கள் ஆகியோரிடத்திலும் விடுக்கும் வேண்டுகோள்– கண்டிப்பாகப் பெண் பிள்ளைகளைப் படிக்க வையுங்கள் என்பது தான். பள்ளிகளில் பெண் பிள்ளைகளின் சேர்க்கையை அதிகரிக்க சில நாட்கள் முன்பாக பெண் குழந்தைகள் கல்விச் சேர்க்கை விழாவும் தொடங்கப்பட்டிருக்கிறது; எந்தப் பெண் குழந்தைகளின் படிப்பு ஏதோ காரணத்தால் விடுபட்டுப் போயிருக்கிறதோ, அப்படிப்பட்டவர்களை மீண்டும் பள்ளிகளுக்குக் கொண்டு வர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
நண்பர்களே, நம்மனைவருக்குமே பேற்றினை அளிக்கும் விஷயம் என்னவென்றால், பாபாசாஹேபோடு இணைந்த பஞ்ச தீர்த்தங்களுக்கான பணியில் ஈடுபடும் சந்தர்ப்பம் நமக்கு வாய்த்திருக்கிறது என்பது தான். அவருடைய பிறந்த இடமான மஹூவாகட்டும், மும்பையில் அவருடைய பூதவுடல் எரியூட்டப்பட்ட இடமான சைத்திய பூமியாகட்டும், லண்டனில் அவருடைய வீடாகட்டும், நாகபுரியில் தீக்ஷா பூமியாகட்டும், தில்லியில் பாபாசாஹேபின் மஹாபரிநிர்வாண, அதாவது மறைந்த இடமாகட்டும், இந்த அனைத்து இடங்களுக்கும், அனைத்துத் தீர்த்தங்களுக்கும் செல்லக்கூடிய பேறு எனக்குக் கிடைத்திருக்கிறது. மனதின் குரல் நேயர்களான உங்கள் அனைவரிடத்திலும், நான் விடுக்கும் வேண்டுகோள் – மஹாத்மா புலே, சாவித்ரிபாய் புலே, பாபாசாஹேப் அம்பேட்கரோடு தொடர்புடைய இடங்களைக் கண்டிப்பாகக் காணச் செல்லுங்கள். அது உங்களுக்கு ஒரு பெரிய கற்றல் அனுபவமாக இருக்கும்.
எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலில் இந்த முறை நாம் பல விஷயங்கள் குறித்துக் கலந்தோம். அடுத்த மாதம், பல பண்டிகைகள்-புனித நாட்கள் வரவிருக்கின்றன. சில நாட்கள் கழித்து நவராத்திரி வரவிருக்கிறது. நவராத்திரியில் நாம் விரதங்கள்-உபவாசங்கள் இருப்பதோடு, சக்தியைப் பூஜிக்கிறோம், சக்திசாதனை புரிகிறோம், அதாவது நமது பாரம்பரியங்கள் நமக்குக் கேளிக்கையையும் கற்பிக்கின்றன, கட்டுப்பாட்டையும் அறிவுறுத்துகின்றன. கட்டுப்பாடும் தவமும் கூட நமக்குப் புனிதமானவை, ஆகையால் நவராத்திரி என்பது எப்போதுமே நம்மனைவருக்கும் மிகவும் விசேஷமானது. நவராத்திரிக்கு முந்தைய நாளன்று குடீ பட்வா திருநாளும் வருகிறது. ஏப்ரல் மாதம் தான் ஈஸ்டரும் வருகிறது, ரமலான் புனித காலமும் தொடங்கவிருக்கிறது. நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து நமது பண்டிகைகளைக் கொண்டாடுவோம், பாரதத்தின் பன்முகத்தன்மையை மேலும் பலப்படுத்துவோம், அனைவரின் விருப்பமும் இது தான். இந்த முறை மனதின் குரலில் இவை மட்டுமே. அடுத்த மாதம் புதிய விஷயங்களோடு உங்களை சந்திக்கிறேன். பலப்பல நன்றிகள்.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலுக்கு மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இன்று மனதின் குரலின் தொடக்கத்தை நாம் பாரதத்தின் வெற்றியோடு செய்யலாம். இந்த மாதத் தொடக்கத்தில் மிகவும் விலைமதிப்புள்ள தனது மரபுச்சொத்தினை பாரதம் இத்தாலியிலிருந்து மீட்டெடுத்து வந்திருக்கிறது. அவலோகிதேஸ்வர் பத்மபாணியின் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழைமை வாய்ந்த திருவுருவச் சிலை தான் இந்த மரபுச் சொத்து. இந்தத் திருவுருவச் சிலையானது சில ஆண்டுகள் முன்பாக, பிஹாரின் கயா ஜீயின் தேவீஸ்தானம் குண்டல்புர் ஆலயத்திலிருந்து களவு போனது. ஆனால் பல முயற்சிகளின் பலனாக, இப்போது பாரதத்திற்கு இந்தத் திருவுருவச் சிலை திரும்பக் கிடைத்திருக்கிறது. இதே போன்று தான் சில ஆண்டுகள் முன்பாக தமிழ்நாட்டின் வேலூரிலிருந்து பகவான் ஆஞ்ஜநேயரின் திருவுருவச் சிலை களவு போனது. ஆஞ்ஜநேயரின் இந்தத் திருவுருவச் சிலையானது 600-700 ஆண்டுகள் பழைமையானது. இந்த மாதத் தொடக்கத்தில், ஆஸ்ட்ரேலியாவில் இது நமக்குக் கிடைத்தது, நமது நோக்கத்திற்குக் கிடைத்த வெற்றி இது.
நண்பர்களே, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமையான நமது சரித்திரத்தில், தேசத்தின் பல்வேறு மூலைகளிலும், ஒன்றை ஒன்று விஞ்சக்கூடிய வகையில் அற்புதமான திருவுருவச் சிலைகளும் கலைப்பொருட்களும் உருவாக்கப்பட்டு வந்தன, இதிலே அர்ப்பணிப்பும் இருந்தது, கைவண்ணமும் இருந்தது, திறமை இருந்தது, பன்முகத்தன்மையும் நிறைந்திருந்தது, மேலும் நமது அனைத்து திருவுருவச் சிலைகளிலும், அவை உருவாக்கப்பட்ட காலத்தின் தாக்கமும் காணக் கிடைத்தன. இது பாரதத்தின் சிற்பக்கலையின் அதிஅற்புதமான எடுத்துக்காட்டாக இருப்பதோடு கூடவே, நமது நம்பிக்கையோடு தொடர்புடைய ஒன்றும் கூட. ஆனால், கடந்த காலத்தில் நமது பல திருவுருவச் சிலைகள் களவாடப்பட்டு, பாரதத்தை விட்டுச் சென்று கொண்டிருந்தன. உலகின் ஏதோ ஒரு நாட்டிலே இவை விற்கப்பட்டு வந்தன, அவர்களைப் பொறுத்த மட்டிலே இவை வெறும் கலைப்படைப்புகள் மட்டுமே. இவற்றை வாங்குபவர்களுக்கு இவற்றின் வரலாற்றோடு எந்தப் பிடிப்போ, அர்ப்பணிப்போ கிடையாது. இந்தத் திருவுருவச் சிலைகளை மீட்டுக் கொண்டு வருவது என்பது பாரத அன்னையிடத்தில் நமக்கிருக்கும் கடமை. இந்த திருவுருவச் சிலைகளில் பாரதத்தின் ஆன்மாவின், நமது நம்பிக்கையின் அம்சம் உறைந்திருக்கிறது. மேலும் இவற்றில் ஒரு சரித்திர-கலாச்சார மகத்துவமும் அடங்கி இருக்கிறது. இந்தப் பொறுப்பினைப் புரிந்து கொண்டு பாரதம் தனது முயல்வுகளை அதிகரித்தது. இதன் காரணமாக என்ன ஆனது என்றால், களவு செய்தல் என்ற இயல்பிலும், ஒரு விதமான அச்சம் ஏற்பட்டது. இந்தத் திருவுருவச் சிலைகள் களவாடப்பட்டு எந்த நாடுகளுக்கு எல்லாம் கொண்டு செல்லப்பட்டனவோ, அந்த நாடுகளுக்கு, பாரதத்துடனான உறவுகளில், ராஜரீக வழிகள் என்ற வகையில் இதற்கு பெரிய மகத்துவம் இருக்கிறது என்பது அந்த நாடுகளுக்கும் புரியத் தொடங்கியது. ஏனென்றால் இதோடு பாரதத்தின் உணர்வுகள் இணைந்திருக்கின்றன, பாரதத்தின் அர்ப்பணிப்பு இணைந்திருக்கிறது, ஒரு வகையில் மக்களுக்கு இடையேயான பரஸ்பர உறவுகளின் மிகப்பெரிய பலத்தை இது ஏற்படுத்த வல்லது. சில நாட்கள் முன்பாக நீங்கள் கவனித்திருக்கலாம், காசியிலே களவு போன அன்னை அன்னபூரணி தேவியின் திருவுருவச் சிலை மீட்டுக் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இது பாரதம் தொடர்பாக மாறி வரும் உலக அளவிலான கண்ணோட்டத்தின் எடுத்துக்காட்டு. 2013ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 13 திருவுருவச் சிலைகள் பாரதம் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. ஆனால் கடந்த ஏழு ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட விலைமதிப்பற்ற திருவுருவச் சிலைகளை பாரதத்தால் வெற்றிகரமாக மீட்டுக் கொண்டு வர முடிந்திருக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன், ஹாலந்து, ஃப்ரான்ஸ், கனடா, ஜர்மனி, சிங்கப்பூர் என எத்தனையோ நாடுகள், இந்த உணர்வினைப் புரிந்து கொண்டார்கள், திருவுருவச் சிலைகளை மீட்டுக் கொண்டு வர நமக்கு உதவி புரிந்தார்கள். நான் கடந்த ஆண்டு செப்டம்பரில் அமெரிக்கா சென்ற போது, அங்கே மிகப் பழைமையான பல திருவுருவச் சிலைகளும், கலாச்சார மகத்துவம் வாய்ந்த பல பொருட்களும் கிடைத்தன. தேசத்தின் விலைமதிப்பற்ற மரபுச் சொத்து மீண்டும் கிடைக்கும் போது, வரலாற்றின் மீது அர்ப்பணிப்பு உடையோர், அகழ்வாராய்ச்சி மீது அர்ப்பணிப்புக் கொண்டோர், நம்பிக்கை மற்றும் கலச்சாரத்தோடு தொடர்புடையோர், மேலும் ஒரு இந்தியன் என்ற முறையில் நம்மனைவருக்கும் பேருவகை ஏற்படுவது என்பது இயல்பான விஷயம் தானே!!
நண்பர்களே, பாரத நாட்டுக் கலாச்சாரம்-பாரம்பரியம் பற்றிப் பேசும் போது, இன்று உங்களுக்கு மனதின் குரலில் இருவரை அறிமுகம் செய்ய விரும்புகிறேன். டான்ஸானியா நாட்டைச் சேர்ந்த உடன்பிறப்புகளான கிலி பால், இவருடைய சகோதரி நீமா என்ற இவர்கள் இருவரும் முகநூல், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமானவர்களாக இருக்கிறார்கள். இவர்களைப் பற்றி நீங்களும் கண்டிப்பாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று எனக்கு நிறைய நம்பிக்கை உண்டு. இவர்களுக்கு பாரதநாட்டு இசை மீது அளப்பரிய காதல் இருக்கிறது, ஆழமான பற்று இருக்கிறது. இதன் காரணமாக இவர்கள் மிகவும் பிரபலமாகி இருக்கிறார்கள். Lip Sync என்ற உதடுகளின் ஒத்திசைவு மூலம் இவர்கள் எத்தனை அதிகம் முயற்சி மேற்கொள்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. தற்போது, குடியரசுத் திருநாளை ஒட்டி, இவர்கள் நமது தேசிய கீதமான ஜன கண மனவை பாடியவாறு ஒரு அழகான காணொளியை தரவேற்றம் செய்திருந்தார்கள், இது அதிகமாகப் பகிரப்பட்டது. சில நாட்கள் முன்பாக இவர்கள் சகோதரி லதா அவர்களின் பாடலைப் பாடி, அவர்களுக்கு உணர்வுப்பூர்வமான சிரத்தாஞ்சலியை அர்ப்பணித்திருந்தார்கள். இவர்களின் அற்புதமான படைப்பாற்றலுக்காக, இந்த சகோதர சகோதரி இணையான கிலி-நீமாவுக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சில நாட்கள் முன்பாக டான்ஸானியாவின் இந்திய தூதரகத்தில் இவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். இந்திய சங்கீதத்தின் ஜாலமே அலாதியானது தான், இது அனைவரையும் மயக்கி விடுகிறது. எனக்கு நினைவிருக்கிறது, சில ஆண்டுகளுக்கு முன்பாக உலகின் 150க்கும் மேற்பட்ட நாடுகளின் பாடகர்கள்-இசைக்கலைஞர்கள் இணைந்து அவரவர் நாடுகளிலிருந்து, அவரவருடைய பாரம்பரிய உடைகளை அணிந்து கொண்டு, வணக்கத்துக்குரிய அண்ணலுக்குப் பிரியமான பஜனைப் பாடலான வைஷ்ணவ ஜன தோ பாடலை வெற்றிகரமாகப் பாடினார்கள்.
இன்று பாரதம் தனது 75ஆவது சுதந்திர ஆண்டு என்ற மகத்துவமான வேளையைக் கொண்டாடி வரும் போது, தேசபக்திப் பாடல்கள் வாயிலாகவும் இப்படிப்பட்ட ஒரு பிரயோகத்தைச் செய்யலாமே!! இதிலே அயல்நாட்டுக் குடிமக்களை, அங்கே இருக்கும் பிரபலமான பாடகர்களை, பாரத நாட்டு தேசபக்திப் பாடல்களைப் பாட அழைக்கலாம். இது மட்டுமல்ல, டான்ஸானியாவின் கிலி-நீமாவால் பாரத நாட்டுப் பாடல்களுக்கு உதடுகளின் ஒத்திசைவை ஏற்படுத்த முடிந்திருக்கிறது என்றால், நமது நாட்டின் பல மொழிகளின் பலவகையான பாடல்களை, குஜராத்திக் குழந்தைகள் தமிழ்ப் பாடலைப் பாடலாம், கேரளத்துக் குழந்தைகள் அஸாமியப் பாடலைப் பாடலாம், கன்னடக் குழந்தைகள் ஜம்மு கஷ்மீரப் பாடலைப் பாடலாம். ஒரே பாரதம் உன்னத பாரதம் எனும்படியான ஒரு சூழலை ஏற்படுத்தலாம், அதை அனுபவிக்கலாம். இது மட்டுமல்ல, நாம் சுதந்திரத்தின் அமிர்த காலக் கொண்டாட்டத்தை, ஒரு புதிய முறையில் கண்டிப்பாகக் கொண்டாட முடியும். நான் தேசத்தின் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன், வாருங்கள், இந்திய மொழிகளில் இருக்கும் பிரபலமான பாடல்களை, நீங்கள் உங்கள் எண்ணப்படி காணொளிப்படுத்துங்கள், நீங்கள் மிகவும் பிரபலமடைவீர்கள். மேலும் தேசத்தின் பன்முகத்தன்மை பற்றிய அறிமுகம் புதிய தலைமுறைக்குக் கிடைக்கும்.
எனதருமை நாட்டுமக்களே, சில நாட்கள் முன்பாகத் தான் நாம் தாய்மொழி தினத்தைக் கொண்டாடினோம். ஆன்றோர் சான்றோர்கள், தாய்மொழி என்ற சொல் எங்கிருந்து வந்தது, இது எப்படித் தோன்றியது என்பது பற்றியெல்லாம் நிறைய உள்ளீடுகளை அவர்கள் அளிக்கலாம். ஆனால் தாய்மொழி தொடர்பாக நான் கூறுவது என்னவென்றால், எப்படி நமது வாழ்க்கையை நமது தாயார் செதுக்கி உருவாக்குகிறாரோ, அதே போலத் தான், தாய்மொழியும் கூட, நமது வாழ்க்கையைச் செதுக்கி உருவாக்குகிறது. தாயும் தாய்மொழியும், இரண்டும் இணைந்து வாழ்க்கையின் அடித்தளத்தைப் பலப்படுத்துகின்றன, அமரத்துவமானதாக ஆக்குகின்றன. எப்படி நமது தாயாரை நம்மால் கைவிட முடியாதோ, அதே போல, நமது தாய்மொழியையும் நம்மால் விட்டு விட முடியாது. பல ஆண்டுகள் முன்பாக நடந்த ஒரு சம்பவம் எனக்கு நினைவிருக்கிறது. நான் அமெரிக்கா செல்ல வேண்டி வந்த போது, பல்வேறு குடும்பங்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இப்படித் தான் ஒரு முறை ஒரு தெலுகு குடும்பத்தினர் இல்லம் செல்லவேண்டி இருந்தது, அங்கே ஒரு மகிழ்ச்சியான காட்சியை என்னால் காண முடிந்தது. எத்தனை வேலை இருந்தாலும் சரி, நாங்கள் நகரத்திற்கு வெளியே இல்லை என்றால், முதலாவதாக குடும்பத்தினர் அனைவரும் இரவு உணவை ஒன்றாக அமர்ந்து உண்போம்; இரண்டாவதாக அப்படி உண்ணும் வேளையில் தாய்மொழியாம் தெலுகுவிலேயே பேசுவோம் என்று ஒரு விதியை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறினார்கள். அவர்கள் குடும்பத்தில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் இதே விதிமுறை தான். அவர்களின் தாய்மொழி மீது அவர்களுக்கு இருந்த பற்றைப் பார்த்து, நான் மிகவும் கவரப்பட்டேன்.
நண்பர்களே, சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு சிலர் மனப்போராட்டங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்; இதன் காரணமாக இவர்கள் தங்கள் மொழி, தங்கள் உடைகள், தங்கள் உணவு முறைகள் ஆகியவை தொடர்பாக கூச்சப்படுகிறார்கள், ஆனால் உலகில் எங்குமே இப்படிப்பட்டதொரு நிலை இல்லை. நமது தாய்மொழியிலே நாம் பெருமிதத்தோடு உரையாட வேண்டும். மேலும் நமது பாரதம் மொழிகள் விஷயத்தில் மிகவும் வளமானது, எந்த நாடும் இதற்கு ஈடு இணையே கிடையாது. நமது மொழிகளில் இருக்கும் மிகப்பெரிய அழகே என்னவென்றால், கஷ்மீரம் தொடங்கி கன்னியாகுமாரி வரை, கட்ச் தொடங்கி கோஹிமா வரை, நூற்றுக்கணக்கான மொழிகள், ஆயிரக்கணக்கான பேச்சு வழக்குகள், ஒன்றிலிருந்து மற்றொன்று மாறுபட்டதாக இருந்தாலும் கூட, ஒன்றோடு மற்றது பின்னிப் பிணைந்துள்ளன. பேசும் மொழிகள் பலவானாலும், உணர்வு ஒன்று தான். உலகிலேயே மிகத் தொன்மையான மொழி பாரதத்தின் தமிழ்மொழி, இதை ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் பொங்கக் கூற வேண்டும், இத்தகைய ஒரு பெருமரபு நம்மிடத்திலே இருக்கிறது. இதைப் போலவே, மிகத் தொன்மையான தர்மசாஸ்திர நூல்களும் கூட, நமது சம்ஸ்கிருத மொழியில் உள்ளன. பாரத நாட்டவர், கிட்டத்தட்ட, 121, அதாவது 121 வகையான தாய்மொழிகளோடு தொடர்புடையவர்கள் என்பதை நாம் பெருமையாகச் சொல்லிக் கொள்ளலாம். இவற்றிலே 14 மொழிகளை, ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையிலே பேசி வருகிறார்கள். அதாவது இந்த அளவுக்கு பல ஐரோப்பிய நாடுகளின் மொத்த மக்கட்தொகையே கூட கிடையாது, அதை விட அதிகம் பேர்கள் நமது பல்வேறுபட்ட 14 மொழிகளோடு இணைந்திருக்கிறார்கள். 2019ஆம் ஆண்டு, ஹிந்தி மொழி, உலகின் மிக அதிகமாகப் பேசப்படும் மொழிகளில் மூன்றாவது இடத்தில் இருந்தது. இந்த விஷயம் அனைத்து இந்தியர்களுக்கும் நெஞ்சை நிமிர்த்த வைக்கும் ஒன்றாகும். மொழி என்பது கருத்துக்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் ஒரு ஊடகம் மட்டும் அல்ல; மாறாக, மொழி என்பது சமூகத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் காக்கும் பணியையும் புரிகிறது. தங்களுடைய மொழியின் பாரம்பரியத்தைக் காக்கும் இப்படிப்பட்டதொரு பணியை சூரினாமைச் சேர்ந்த சுர்ஜன் பரோஹீ அவர்கள் செய்து வருகிறார்கள். இந்த மாதம் 2ஆம் தேதியன்று அவருக்கு 84 வயதானது. இவருடைய முன்னோர்களும், பல ஆண்டுகள் முன்பாக, ஆயிரக்கணக்கான தொழிலாளிகளோடு, தங்களுடைய வயிற்றுப் பிழைப்பிற்காக, சூரினாம் சென்றார்கள். சுர்ஜன் பரோஹீ அவர்கள் ஹிந்தி மொழியில் மிகச் சிறப்பாகக் கவிதைகள் வடிப்பவர், அங்கிருக்கும் தேசியக் கவிகளில் இவரும் இடம் பெறுகிறார். அதாவது, இன்றும் கூட இவருடைய இதயத்தில் இந்துஸ்தானம் பற்றிய துடிப்பு இருக்கிறது, இவருடைய செயல்களில் இந்தியாவின் மண்ணின் மணம் கமழ்கிறது. சூரினாம் நாட்டு மக்கள், சுர்ஜன் பரோஹீ அவர்களின் பெயரில் ஒரு அருங்காட்சியகத்தை உருவாக்கியிருக்கின்றார்கள். 2015ஆம் ஆண்டிலே, இவரை கௌரவப்படுத்தும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது என்பது எனக்கு ஒரு சுகமான அனுபவம்.
நண்பர்களே, இன்றைய நாள் அதாவது பெப்ருவரி 27 என்பது மராத்தி மொழியின் பெருமித நாளும் ஆகும்.
“सर्व मराठी बंधु भगिनिना मराठी भाषा दिनाच्या हार्दिक शुभेच्छा|”
அதாவது, அனைத்து மராட்டியர்களுக்கும், மராத்தி மொழி நாளை ஒட்டி என் மனம்நிறை நல்வாழ்த்துக்கள்.
இந்த நாளானது மராட்டி மொழிக் கவிஞர், விஷ்ணு பாமன் ஷிர்வாட்கர் அவர்கள், ஸ்ரீமான் குசுமாக்ரஜ் அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இன்று தான் குசுமாக்ரஜ் அவர்கள் பிறந்தார். குசுமாக்ரஜ் அவர்கள் மராட்டி மொழியில் கவிதைகள் எழுதினார், பல நாடகங்களை இயற்றினார், மராட்டி மொழி இலக்கியத்தைப் புதிய சிகரங்களுக்குக் கொண்டு சென்றார்.
நண்பர்களே, நமது நாட்டிலே மொழிகளுக்கு என பிரத்யேக அழகு உண்டு, தாய்மொழிக்கென ஒரு பிரத்யேக சூட்சுமம் உண்டு. இந்த சூட்சுமத்தைப் புரிந்து கொண்டு தான், தேசியக் கல்விக் கொள்கையில், பிராந்திய மொழிகளில், கல்வி கற்றல் தொடர்பாக அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நமது தொழில்சார் படிப்புகளை பிராந்திய மொழிகளில் கற்பிக்க வேண்டும் என்பது தொடர்பான முயல்வுகள் நடைபெற்று வருகின்றன. சுதந்திரத்தின் அமிர்த காலத்தில், இந்த முயற்சிகளுக்கு நாமனைவரும் இணைந்து விரைவு கூட்ட வேண்டும், இது சுயமரியாதை பற்றிய விஷயம். அவரவர் பேசும் தாய்மொழிகளின் aழகினைக் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ளுங்கள், அதிலே ஏதாவது எழுதுங்கள் என்பதே என் விருப்பம்.
நண்பர்களே, சில நாட்கள் முன்பாக, கென்யாவின் முன்னாள் பிரதமரும், எனது நண்பருமான ராய்லா ஓடிங்கா அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்தச் சந்திப்பு சுவாரசியமாக இருந்ததோடு, மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் இருந்தது. நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்திருக்கிறோம், திறந்த மனத்தோடு பேசுவது உண்டு. நாங்கள் இருவரும் உரையாடிக் கொண்டிருந்த போது, ஓடிங்கா அவர்கள் தன்னுடைய மகள் பற்றிக் குறிப்பிட்டார். அவருடைய மகள் ரோஸ்மேரிக்கு மூளையிலே கட்டி ஏற்பட்டு, இதன் காரணமாக மகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய நேரிட்டது. ஆனால் இதன் மோசமான விளைவாக என்ன ஆனது என்றால், ரோஸ்மேரியின் பார்வைத் திறன் மெல்ல மெல்ல பறிபோனது. அந்த மகளின் நிலையையும், தகப்பனின் நிலையையும் நீங்களே கற்பனை செய்து பாருங்கள், அவருடைய உணர்வுகள் எப்படி இருந்திருக்கும்!! அவர் உலகம் முழுக்க இருக்கும் மருத்துவமனைகளில் எல்லாம், உலகின் அத்தனை பெரியபெரிய நாடுகளில் எல்லாம் மகளின் சிகிச்சைக்காக முழுமையான முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் பலனேதும் கிடைக்கவில்லை, ஏமாற்றமே மிஞ்சியது. இந்த வேளையில் யாரோ ஒருவர், பாரதத்தில் ஆயுர்வேத சிகிச்சை எடுப்பது பற்றி ஆலோசனை சொல்லியிருக்கிறார். ஓடிங்கா அவர்கள் மிகவும் களைத்திருந்தார், சோர்ந்து போயிருந்தார்; இருந்தாலும் கூட, சரி ஒரு முறை முயற்சி தான் செய்து பார்த்து விடலாமே என்று தீர்மானித்து, கேரளத்தில் இருக்கும் ஒரு ஆயுர்வேத மருத்துவமனையில் தன் மகளின் சிகிச்சையை ஆரம்பித்தார். ஆயுர்வேத சிகிச்சையின் பலனாக ரோஸ்மேரியின் கண்களில் பார்வைத்திறன் கணிசமாக மீண்டது. புதியதொரு வாழ்க்கை கிடைத்தாற்போல, ரோஸ்மேரியின் வாழ்க்கையில் ஒளி துலங்கியது மட்டுமல்லாமல், குடும்பம் முழுவதிலும் புதிய ஒளி பாய்ந்தது, புதிய வாழ்க்கை பிறந்தது, ஓடிங்கா அவர்கள் எந்த அளவுக்கு உணர்ச்சி வெள்ளத்தில் திளைத்துப் போனார் என்றால், பாரதத்தின் ஆயுர்வேத ஞானம், விஞ்ஞானம் கென்யாவுக்குக் கிடைக்க வேண்டும் என்று என்னிடத்தில் தனது விருப்பத்தை வெளியிட்டார். எந்த மாதிரியான தாவரங்கள் இதற்கு உதவியாக இருக்கின்றனவோ, அந்தச் செடிகளை வளர்க்கலாம், இதனால் ஆதாயம் பலருக்குக் கிடைக்கும், இது தொடர்பாக முழு முயற்சிகளை மேற்கொள்வோம் என்றார்.
நமது மண்ணும், பாரம்பரியமும் ஒருவருடைய வாழ்க்கையின் இத்தனை பெரிய சங்கடத்தைத் துடைத்தெறிந்திருக்கின்றன என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும் விஷயம். இது உங்களுக்கும் சந்தோஷத்தை அளித்திருக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை. எந்த இந்தியருக்குத் தான் இதில் பெருமிதம் ஏற்படாது? ஓடிங்கா அவர்கள் மட்டுமல்ல உலகின் இலட்சக்கணக்கானோர் ஆயுர்வேதத்தால் ஆதாயம் அடைந்து வருகிறார்கள் என்பதை நாமனைவரும் நன்கறிவோம்.
பிரிட்டன் நாட்டின் இளவரசர் சார்ல்ஸ் அவர்களும் கூட ஆயுர்வேதத்தைப் பாராட்டுபவர்களில் ஒருவர். எப்போதெல்லாம் அவரை நான் சந்திக்க நேர்கிறதோ, அப்போதெல்லாம் ஆயுர்வேதம் பற்றிக் கண்டிப்பாகப் பேசுவார். அவருக்கு பாரதத்தின் பல ஆயுர்வேத அமைப்புகள் பற்றித் தெரியும்.
நண்பர்களே, கடந்த ஏழு ஆண்டுகளில் தேசத்தின் ஆயுர்வேதத்தின் பரவலாக்கம் பரப்புரை குறித்து அதிக கவனம் மேற்கொள்ளப்பட்டது. ஆயுஷ் அமைச்சகம் ஏற்படுத்தப்பட்ட பிறகு, சிகிச்சை மற்றும் உடல்நலத்தோடு தொடர்புடைய பாரம்பரியமான வழிமுறைகளைப் பிரபலப்படுத்தும் உறுதிப்பாட்டிற்கு மேலும் பலம் கிடைத்திருக்கிறது. கடந்த சில காலமாக ஆயுர்வேதத் துறையிலும் கூட பல புதிய ஸ்டார்ட் அப்புகள் வரத் தொடங்கி இருக்கிறது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த மாதத் தொடக்கத்தில் ஆயுஷ் ஸ்டார்ட் அப் சவால் தொடங்கப்பட்டது. இந்த சவாலின் இலக்கு, இந்தத் துறையில் பணிபுரியும் ஸ்டார்ட் அப்புகளை அடையாளம் கண்டு அவற்றுக்கு ஆதரவளிப்பது தான். இந்தத் துறையில் பணிபுரியும் இளைஞர்களிடம் என்னுடைய வேண்டுகோள், நீங்கள் அவசியம் இந்த சவாலில் பங்கெடுங்கள் என்பது தான்.
நண்பர்களே, ஒரு முறை அனைவரும் இணைந்து ஒ