இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி தேசத்தின் நீளம் அகலம் முழுவதும் முன்னிலையாக செயல்படுபவதுடன் மிகப் பெரிய அரசியல் கட்சியாகும். 2014 மக்களவை தேர்தலில் பாஜக மூன்று தசாப்தங்களில் தானாகவே பெரும்பான்மையை வெற்றி பெறுவதில் முதல் கட்சியாக மாறியது. மேலும் இது இந்த சாதனையை அடைவதில் முதல் காங்கிரஸ் அல்லாத கட்சியாகும்.
மே 26ம் தேதி 2014-ல் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்கள் இந்தியாவின் பிரதம மந்திரியாக பதவியேற்றார். அவருடைய தலைமையின் கீழ், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் விவசாயிகள், ஏழைகள், ஓரங்கட்டப்பட்டவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் புதிய-நடுத்தர வர்க்கத்தின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதுடன், உள்ளடங்கிய வளர்ச்சி-சார்ந்த ஆளுகையின் சகாப்தத்திற்கு வழிநடத்துகிறது.

ராஷ்டிரபதி பவனில் 2014-ல் பிரதம மந்திரியாக ஸ்ரீ நரேந்திர மோடி அவர்கள் பதவியேற்கிறார்
ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் தலைமையில் கட்சி தோன்றிய போது பாஜக-வின் வரலாறு 1980 ஆம் ஆண்டிற்கு பின்னோக்கி செல்கிறது. பாஜக-வின் முன்னோடி, பாரதிய ஜன சங்கம் 1950-கள், 60-கள் மற்றும் 70-கள் முழுவதும் இந்திய அரசியலில் தீவிரமாக இருந்தது மேலும் அதனுடைய தலைவர் ஸ்ரீ ஷ்யாமா பிரசாத் முகர்ஜி அவர்கள் சுதந்திரமான இந்தியாவின் முதல் அமைச்சரவையில் பணியாற்றினார். ஜன சங்கம் 1977 – 1979 வரையில் ஸ்ரீ மொரார்ஜி தேசாய் அவர்களின் கீழ் ஜனதா கட்சி அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது. இது இந்தியாவின் வரலாற்றில் முதலாவது காங்கிரஸ்-அல்லாத அரசாங்கமாக இருந்தது.

புதுதில்லியில் பாஜக கூட்டத்தில் ஸ்ரீ எல்கே அத்வானி, ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் ஸ்ரீ முரளி மனோகர் ஜோஷி
நம்முடைய பண்டைய கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளிலிருந்து உத்வேகத்தைப் பெறும் வலுவான, சுய-சார்பான, உள்ளடங்கிய வளமான இந்தியாவை உருவாக்குவதில் பாஜக தீர்மானமாக நிலையாக இருந்தது. கட்சி பண்டித் தீனதயாள் உபாத்யாயா அவர்களால் எடுத்துரைக்கப்பட்ட ‘ஒருங்கிணைந்த மனித நேயத்தின்’ தத்துவத்தின் மூலம் ஆழமாக ஈர்க்கப்பட்டு வருகிறது. பாஜக இந்திய சமூகத்தின் ஒவ்வொரு பிரிவிலிருந்தும், குறிப்பாக இந்தியாவின் இளைஞர்களிடமிருந்து தொடர்ந்து ஆதரவு பெற முயற்சிக்கிறது.
குறுகிய காலத்திலேயே பாஜக இந்திய அரசியல் அமைப்புடன் கணக்கிடுவதில் பெரும் சக்தியாக மாறுவதற்கு உயர்ந்தது. 1989-ல் (அதனுடைய தொடக்கத்திலிருந்து 9 ஆண்டுகள்), மக்களவையில் கட்சியின் எண்ணிக்கை 2-ல் இருந்து (1984-ல்) 86 இடங்களாக உயர்ந்தது மற்றும் பாஜக 1989-1990 வரையில் இந்தியாவை ஆண்ட, தேசிய முன்னணியின் உருவாக்கத்திற்கு வழிவகுத்த, காங்கிரஸ்யின் எதிரான இயக்கத்திற்கு மையாக இருந்தது. 1990-யின் சட்டசபை தேர்தல்களில் பல மாநிலங்களில் பாஜக அரசாங்கத்தை உருவாக்கியதால் உயர்வு 1990-கள் முழுவதும் தொடர்ந்தது. 1991-ல் மக்களவையில் இது முக்கியமான எதிர் கட்சியாக மாறியது, இளம் கட்சியின் மாறான குறிப்பிடத்தக்க சாதனை.

புதுதில்லியில் கட்சி கூட்டத்தில் பாஜக தலைவர்கள்
1996 ஆம் ஆண்டு கோடையில் ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் தேசத்தின் பிரதம மந்திரியாக பதிவியேற்றார், காங்கிரஸ் பின்னணி முற்றிலும் இல்லாத முதல் பிரதம மந்திரி. ஸ்ரீ வாஜ்பாய் அவர்களின் கீழ் 1998-2004 வரையில் ஆறு ஆண்டுகளுக்கு நாட்டை ஆளுவதற்கு, 1998 மற்றும் 1999 தேர்தல்களில் பாஜக-விற்கு மக்களின் தீர்ப்பு கிடைத்தது. ஸ்ரீ வாஜ்பாய் அவர்களின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் முன்னேற்றத்தின் புதிய உயரங்களுக்கு இந்தியாவை கொண்டு சென்ற அதனுடைய வளர்ச்சி முயற்சிகளுக்காக இன்னும் நினைவில் கொள்ளப்படுகிறது.

புதுதில்லியில் பிரதம மந்திரியாக ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் பதவியேற்கிறார்
ஸ்ரீ நரேந்திர மோடி அவர்கள் 1987-ல் முக்கிய அரசியலில் முனைப்புடன் பங்கேற்று ஒரு ஆண்டில் குஜராத் பாஜக-வின் பொதுச் செயலாளராக ஆனார். அவருடைய நிர்வாகத் திறன்கள் 1989-ல் லோகச் சக்தி யாத்திரை மற்றும் 1987-யின் நியாய யாத்திரைக்கு அடுத்தப்படியாக இருந்தது. இந்த முயற்சிகள் 1990-ல் குறுகிய காலத்திற்காக பின்னர் 1995 ஆம் ஆண்டு முதல் இன்று வரை குஜராத்தில் பாஜக முதலில் ஆட்சிக்கு வருவதில் முக்கிய பங்கு வகித்தது. 1995-ல் ஸ்ரீ மோடி அவர்கள் பாஜக-வின் தேசிய செயலாளராக (அமைப்பு) ஆனார் மற்றும் 1998-ல் கட்சி அமைப்பில் மிகவும் முக்கியமான பதவி, பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. 3 ஆண்டுகளுக்கு பின் 2001-ல் குஜராத்தின் முதல்வராக இருப்பதற்கான பொறுப்பை கட்சி அவரிடம் ஒப்படைந்தது. அவர் 2002, 2007 மற்றும் 2012-ல் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பாஜக பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும், கட்சியின் அதிகாரப்பூர்வமான இணையத்தளத்தைப் பார்க்கவும்
பாரதிய ஜனதா கட்சியின் டிவிட்டர் பக்கம்
ஸ்ரீ எல்கே அத்வானி அவர்களின் இணையத்தளம்
ஸ்ரீ ராஜ்நாத் சிங் அவர்களின் இணையத்தளம்
ராஜ்நாத் சிங் அவர்களின் டிவிட்டர் பக்கம்
ஸ்ரீ நிதின் கட்காரி அவர்களின் இணையத்தளம்
நிதின் கட்காரி அவர்களின் டிவிட்டர் பக்கம்
ஸ்ரீ அருண் ஜெட்லி அவர்களின் இணையத்தளம்
அருண் ஜெட்லி அவர்களின் டிவிட்டர் பக்கம்
ஸ்ரீமதி. சுஷ்மா சுவராஜ் அவர்களின் டிவிட்டர் பக்கம்
பாஜக தலைவர் ஸ்ரீ அமித் ஷா அவர்களின் டிவிட்டர் பக்கம்
பாஜக முதலமைச்சர்கள்
மகாராஷ்டிரா முதலமைச்சர், தேவேந்திர பட்னாவிஸ் அவர்களின் இணையத்தளம்
தேவேந்திர பட்னாவிஸ் அவர்களின் டிவிட்டர் பக்கம்
குஜராத் முதல்வர் பூபேந்திர படேலின் இணையதளம்
பூபேந்திர படேலின் ட்விட்டர் பக்கம்
ஹரியானா முதலமைச்சர், மனோகர் லால் கட்டர் அவர்களின் இணைய்யத்தளம்
மனோகர் லால் கட்டர் அவர்களின் டிவிட்டர் பக்கம்
ஜார்கண்ட் முதலமைச்சர், ரகுபர் தாஸ் அவர்களின் இணையத்தளம்
ரகுபர் தாஸ் அவர்களின் டிவிட்டர் பக்கம்
உத்தரப் பிரதேசம் முதலமைச்சர், யோகி ஆதித்யநாத் அவர்களின் டிவிட்டர் கணக்கு
உத்தரப் பிரதேசம் முதலமைச்சர், யோகி ஆதித்யநாத் அவர்களின் இணையத்தளம்
உத்தரகண்ட் முதலமைச்சர், ஸ்ரீ திரிவேந்திர சிங் ரவாத் அவர்களின் டிவிட்டர் கணக்கு
அசாம் முதலமைச்சர், ஸ்ரீ சர்பானந்த சோனாவால் அவர்களின் டிவிட்டர் கணக்கு