”வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் இந்திய சுதந்திர போராட்டத்தின் முக்கிய மைல் கல் ஆகும். இந்த இயக்கம் தான், பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுபட வேண்டும் என்று நாடு முழுவதையும் உறுதியாக நினைக்க வைத்தது. இந்த நேரத்தில் தான் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள அனைத்து இந்திய மக்களும், தோளோடு தோளாக ஒன்றாக இணைந்து “வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பங்கேற்றனர்.’
-2017 ஜூலை மாதம் 30ஆம் தேதி ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் நரேந்திர மோடி
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற அனைத்து தலைவர்களையும் பிரதமர் நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார். வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கி 5 வருடங்களில் இந்தியா சுதந்திரம் பெற்று விட்டது. இன்னும் 5 வருடங்களில் இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடையும். இன்று, நாம் நாட்டிலிருந்து ஊழல், அழுக்கு, இனவாதம், வகுப்புவாதம் ஆகியவற்றை ஒழிக்க உறூது எடுத்துக் கொள்வோம். கடந்த கால வரலாற்றை பின்பற்றினால் மட்டுமே நாம் ஒளி மயமான எதிர்காலத்தை உருவாக்க முடியும்.
தங்களது வரலாற்றை தெரிந்து கொள்ளாத, கடைபிடிக்காத சமூகங்கள் ஒரு போதும் வளர்ச்சி அடைய முடியாது என பிரதமர் மோடி கூறுகிறார். வெள்ளையனே வெளியேறு இயங்கம் தொடங்கி 75 ஆண்டு கால நிறைவை குறிக்கும் வகையில் இந்த ஆண்டு நடத்தப்படும் வினா விடை நிகழ்ச்சி, நாம் சுதந்திர காற்றை சுவாசிக்க காரணமாக இருந்த 1942-ஆம் ஆண்டின் நாயகர்களிடம் உங்களை கூட்டிச் செல்லும்.
இந்த வினா விடை நிகழ்ச்சியில் பங்கேற்று உங்கள் வரலாற்று அறிவை புதுப்பித்துக் கொண்டு வருங்காலத்தை பற்றி சிந்தியுங்கள். மேலும் நீங்கள் கவர்ச்சியான பரிசுகளையும் வெல்லலாம்!!! அன்றைய தினத்தில் வெற்றி பெறும் முதல் பத்து பேர்களுக்கு சிறப்பு சான்றிதழ் வழங்கப்படும். வெற்றி பெறும் முதல் இருபது பேர்கள் பிரதமருடன் கலந்துரையாடலில் பங்கேற்பார்கள்.
2017 ஆகஸ்ட் 8ம் தேதி வினா விடை நிகழ்ச்சி தொடங்கும்.


