என் சக இந்தியன்,

வணக்கம்!

நவம்பர் 26, ஒவ்வொரு இந்தியருக்கும் மகத்தான பெருமிதத்தை அளிக்கும் நாளாகும். நாட்டின் முன்னேற்றத்தை தெளிவாகவும், உறுதியாகவும் தொடர்ந்து வழிநடத்தும் புனித ஆவணமான இந்திய அரசியல் சாசனத்தை அரசியல் நிர்ணய சபை கடந்த 1949-ம் ஆண்டில் இதே நாளில்தான் ஏற்றுக்கொண்டது. அதனால்தான் நவம்பர் 26-ம் தேதியை அரசியல் சாசன தினமாகக் கொண்டாட 10 ஆண்டுகளுக்கு முன்பு, 2015-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முடிவு செய்தது.

மிகவும் எளிய, பொருளாதார ரீதியில் நலிவடைந்த குடும்பத்தைச் சேர்ந்த என்னைப்போன்ற ஒரு நபர், சுமார் 24 ஆண்டுகள் அரசின் தலைமைப் பதவியில் சேவையாற்ற அரசியல் சாசனத்தின் வலிமைதான் வழிவகை செய்தது. 2014-ம் ஆண்டு, முதல்முறையாக நாடாளுமன்றத்திற்கு நான் வந்த போது, ஜனநாயகத்தின் தலைசிறந்த ஆலயத்தின் படிகளைத் தொட்டு வணங்கிய தருணத்தை இன்றும் நினைவில் கொண்டிருக்கிறேன். அதேபோல 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, அரசியல் நிர்ணய சபையின் மைய அரங்கிற்கு சென்று அரசியல் சாசனத்தை எனது நெற்றியில் வைத்து வணங்கி, மரியாதை செலுத்தினேன். இந்த அரசியல் சாசனம், என்னைப் போன்று ஏராளமானவர்களுக்கு கனவு காண்பதற்கும், அதை நோக்கி பயணிப்பதற்குமான வலிமையையும் வழங்கியிருக்கிறது.

அரசியல் சாசன தினத்தன்று, அதன் உருவாக்கத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையிலான அரசியல் நிர்ணய சபையின் எழுச்சியூட்டும் உறுப்பினர்களை நாம் நினைவு கூர்கிறோம். போற்றத்தக்க தொலைநோக்குப் பார்வையுடன், அரசியல் சாசன வரைவுக் குழுவிற்கு தலைமைப் பொறுப்பேற்ற டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் முயற்சிகளை நாம் நினைத்துப் பார்க்கிறோம். அரசியல் நிர்ணய சபையின் பல குறிப்பிடத்தக்க பெண் உறுப்பினர்கள், தங்களது ஆலோசனைகளாலும், தொலைநோக்குப் பார்வை கொண்ட கண்ணோட்டத்தின் வாயிலாகவும் இந்திய அரசியல் சாசனத்தை மேலும் மெருகூட்டினர்.

என் நினைவுகள், 2010-ம் ஆண்டிற்கு பின்னோக்கிச் செல்கின்றன. அந்த ஆண்டில்தான் இந்திய அரசியல் சாசனம் 60 ஆண்டுகளை நிறைவு செய்திருந்தது. எனினும் இந்த குறிப்பிடத்தக்க நிகழ்விற்கு கிடைத்திருக்க வேண்டிய தேசிய முக்கியத்துவம் வழங்கப்படாதது, வேதனை அளித்தது. இருந்த போதும், அரசியல் சாசனத்திற்கு ஒன்றுபட்ட நமது நன்றியையும் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்துவதற்காக, குஜராத்தில் ‘அரசியல் சாசன கௌரவ அணிவகுப்பை’ நாங்கள் நடத்தினோம். நமது அரசியல் சாசனம் ஒரு யானையின் மீது வைக்கப்பட்டிருந்தது. பலதரப்பட்ட மக்களுடன் சேர்ந்து நானும் அந்த அணிவகுப்பில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றிருந்தேன்.

அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் 75-வது ஆண்டில் போது, இந்திய மக்களுக்கு இது ஒரு சிறப்பு வாய்ந்த மைல்கல்லாக இருக்கும் என்று நாங்கள் முடிவு செய்தோம். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் கொண்டாடும் வகையில் சிறப்பு நாடாளுமன்ற அமர்வுக்கு ஏற்பாடு செய்து, தேசிய அளவிலான நிகழ்ச்சிகளைத் தொடங்கும் நல்வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்திருந்தது. இந்த நிகழ்ச்சிகளில் சாதனை அளவிலான பொதுமக்கள் பங்கேற்றனர்.
இந்த ஆண்டின் அரசியல் சாசன தினம், பல்வேறு காரணங்களுக்காக சிறப்பைப் பெறுகிறது.

சர்தார் வல்லபாய் படேல் மற்றும் பகவான் பிர்சா முண்டா ஆகிய இரண்டு தலைசிறந்த ஆளுமைகளின் 150-வது பிறந்தநாளை இது குறிக்கிறது. இருவருமே நமது தேசத்திற்கு மகத்தான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். தொலைநோக்குப் பார்வை கொண்ட சர்தார் படேலின் தலைமை, இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பை உறுதி செய்தது. அவரது எழுச்சியும் துணிச்சலும்தான் பிரிவு 370 மற்றும் 35 (ஏ)க்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள எங்களுக்கு வழிகாட்டியது. ஜம்மு காஷ்மீரில் தற்போது இந்திய அரசியல் சட்டம் முழுதும் நடைமுறையில் உள்ளது. இதன் மூலம் பெண்கள் மற்றும் நலிவடைந்த சமூகங்கள் உள்ளிட்ட மக்களின் அரசியல் சட்ட உரிமைகள் உறுதி செய்யப்படுகின்றன. நமது பழங்குடி சமூக மக்களுக்கு நீதி, கண்ணியம் மற்றும் அதிகாரமளிக்க வேண்டும் என்ற இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு பகவான் பிர்சா முண்டாவின் வாழ்க்கை தொடர்ந்து நமக்கு ஊக்கம் அளிக்கிறது.

காலங்கள் கடந்தும் இந்தியர்களின் கூட்டு உறுதிப்பாட்டை எதிரொலிக்கும் ‘வந்தே மாதரம்’ பாடலின் 150-வது ஆண்டையும் இந்த ஆண்டு நாம் கொண்டாடுகிறோம். அதே வேளையில் ஸ்ரீ குரு தேக் பகதூர் அவர்களின் 350-வது தியாக தினத்தையும் நாம் அனுசரிக்கிறோம். அவரது வாழ்க்கையும், தியாகமும், நம்மை துணிச்சல், இரக்கம் மற்றும் வலிமையுடன் தொடர்ந்து வழிநடத்துகின்றன.

இது போன்ற ஆளுமைகளின் பங்களிப்பு மற்றும் முக்கிய மைல்கல் தருணங்கள், நமது அடிப்படை கடமைகளை நமக்கு நினைவூட்டுகின்றன. பிரிவு 51 ஏ-ல் உள்ள அடிப்படைக் கடமைகள் என்ற பிரத்தியேக அத்தியாயத்தில் இந்திய அரசியல் சாசனமும் இதையே வலியுறுத்துகிறது. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு, சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை எவ்வாறு அடைவது என்பதை இந்தக் கடமைகள் நமக்கு உணர்த்துகின்றன. குடிமக்களின் கடமைகளை மகாத்மா காந்தி எப்போதுமே வலியுறுத்தி வந்தார். ஒரு கடமையை சரியாகச் செய்யும்போது அதற்கு இணையான உரிமை உருவாவதுடன், கடமையை நிறைவேற்றுவதன் பலனாகக் கிடைப்பதுவே உண்மையான உரிமைகள், என்பதில் அவர் நம்பிக்கை கொண்டிருந்தார்.

இந்த நூற்றாண்டு தொடங்கி அதற்குள் 25 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆங்கிலேய ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றதன் நூற்றாண்டை இன்னும் இரண்டு தசாப்தங்களில் நாம் கொண்டாடுவோம். 2049-ம் ஆண்டில், அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதன் நூற்றாண்டு கொண்டாடப்படும் வேளையில் தற்போது நாம் கட்டமைக்கும் கொள்கைகள், நாம் எடுக்கும் முடிவுகள் மற்றும் நமது கூட்டு செயல்பாடுகள் முதலியவை, வருங்கால தலைமுறையின் வாழ்க்கையை வடிவமைக்கும்.

இதன்மூலம் எழுச்சி பெற்று, வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கும் கனவை நோக்கி நாம் முன்னேறும் போது, நாட்டிற்கான நமது கடமைகளை ஆற்ற நாம் எப்போதும் முன்னுரிமை வழங்க வேண்டும்.

நமது நாடு நமக்கு நிறைய செய்திருக்கிறது, அதனால் நம்மிடையே நாட்டிற்கான நன்றி உணர்வும் பெருகுகிறது. நாம் நமது கடமைகளை நிறைவேற்ற இயற்கையாகவே இந்த மனநிலை நம்முள் எழுகிறது. நமது கடமையை செய்வதற்கு முழு திறனையும் அர்ப்பணிப்பையும் ஒவ்வொரு பணியிலும் நாம் செலுத்துவது இன்றியமையாததாகிறது. நம் ஒவ்வொரு செயல்பாடும், அரசியல் சாசனத்தை வலுப்படுத்துவதுடன், தேசிய நலன்கள் மற்றும் இலக்குகளை மேம்படுத்த வேண்டும். நம் அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்களின் கனவை நிறைவேற்றுவது நமது கடமை. அவ்வாறு கடமை உணர்வுடன் பணியாற்றும்போது, நம் நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி பன்மடங்கு அதிகரிக்கும்.

வாக்களிக்கும் உரிமையை நமது அரசியல் சாசனம் நமக்கு வழங்கி இருக்கிறது. தேசிய, மாநில மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் நாம் தவறாமல் வாக்களிப்பது நமது கடமை. பிறரையும் ஊக்குவிப்பதற்காக, 18 வயதைப் பூர்த்தி செய்யும் இளைஞர்களைக் கொண்டாடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ம் தேதி, பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துவது பற்றி நாம் சிந்திக்கலாம். இதன் மூலம், தாங்கள் மாணவர்கள் என்பதைக் கடந்து, தேச கட்டமைப்பிலும் ஆக்கப்பூர்வமான பங்கேற்பாளர்களாக திகழ்வதை முதல் முறை வாக்களிப்பவர்கள் உணர்வார்கள்.

நமது இளைஞர்களை பொறுப்பு மற்றும் பெருமித உணர்வுடன் நாம் எழுச்சியூட்டும் போது, அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஜனநாயக மாண்புகளுக்கு மதிப்பளிப்பார்கள். இத்தகைய உறுதிப்பாட்டுக்கான உணர்வு தான், ஒரு வலிமையான தேசத்தின் அடித்தளம்.

அரசியல் சாசன தினத்தன்று, இந்த மாபெரும் தேசத்தின் குடிமக்களாக நமது கடமையை நிறைவேற்றும் உறுதிமொழியை நாம் மீண்டும் வலியுறுத்துவோம். இவ்வாறு செய்வதன் மூலம் வளர்ச்சியடைந்த மற்றும் அதிகாரம் பெற்ற நாட்டைக் கட்டமைப்பதில் நாம் அனைவரும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்கலாம்.

உங்கள்,

நரேந்திர மோடி

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India attracts $70 billion investment in AI infra, AI Mission 2.0 in 5-6 months: Ashwini Vaishnaw

Media Coverage

India attracts $70 billion investment in AI infra, AI Mission 2.0 in 5-6 months: Ashwini Vaishnaw
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
காசி-தமிழ் சங்கமம் மற்றும் 'ஏக் பாரத், ஸ்ரேஷ்ட பாரத்'-திற்கு (ஒரு பாரதம், வலுவான பாரதம்) அஞ்சலி
January 15, 2026

1026-ம் ஆண்டு நடத்தப்பட்ட சோம்நாத் மீதான முதல் தாக்குதலின் ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் சில நாட்களுக்கு முன் நடைபெற்ற சோம்நாத் சுயமரியாதை விழாவில் பங்கேற்க நான் புனித பூமியான சோம்நாத் சென்றிருந்தேன். வரலாறு, கலாச்சாரம், இந்திய மக்களின் நீடித்த மனவுணர்வு ஆகியவற்றின் மீது பகிரப்பட்ட மரியாதையால் ஒன்றுகூடிய இந்த நினைவு நிகழ்வில் இந்தியா முழுவதிலுமிருந்து மக்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது, சௌராஷ்டிரா-தமிழ் சங்கமத்தின் போது சோம்நாத்துக்கு வந்திருந்த சிலரையும், காசி-தமிழ் சங்கமத்தின் போது காசிக்கு வந்திருந்த சிலரையும் நான் சந்தித்தேன். இதுபோன்ற நிகழ்வுகளுக்கு அவர்கள் அளித்த பாராட்டு வார்த்தைகள் என்னை நெகிழச்செய்தன. எனவே, இந்த விஷயத்தில் சில எண்ணங்களை நான் பகிர்ந்து கொள்ள நினைத்தேன்.

தமிழ் கற்காமல் இருப்பது என் வாழ்க்கையின் மிகப்பெரிய வருத்தம் என்று மனதின் குரல் நிகழ்ச்சியின் போது நான் கூறியிருந்தேன். அதிர்ஷ்டவசமாக, கடந்த சில ஆண்டுகளில், இந்தியா முழுவதும் தமிழ்க் கலாச்சாரத்தை மேலும் பிரபலப்படுத்தவும், 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற உணர்வை ஆழப்படுத்தவும் எங்கள் அரசுக்கு பல வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அத்தகைய முயற்சிக்கு ஒரு சிறந்த உதாரணம் காசி-தமிழ் சங்கமம். நமது பண்பாட்டில், சங்கம் அல்லது சங்கமம் ஒரு சிறப்பிடத்தைப் பெற்றுள்ளது. இந்த வெளிச்சத்தில் பார்க்கும்போது, காசி-தமிழ் சங்கமம் உண்மையில் தனித்துவ முயற்சியாக விளங்குகிறது. இது இந்தியாவின் பல மரபுகளில் வாழும் ஒற்றுமையைக் கொண்டாடுகிறது. அதே நேரத்தில் அவற்றின் தனித்துவ அடையாளங்களை மதிக்கிறது.

அத்தகைய சங்கமத்தை நடத்துவதற்குக் காசியை விட சிறந்த இடம் எதுவாக இருக்க முடியும்? பழங்காலத்திலிருந்தே நாகரிகத்தின் நங்கூரமாகத் திகழ்ந்து வரும் அதே காசிக்கு... ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, எல்லா இடங்களிலிருந்தும் மக்கள் அறிவையும், வாழ்க்கை அனுபவத்தையும், மோட்சத்தையும் தேடி வந்துள்ளனர்.

தமிழ் மக்களுடனும் கலாச்சாரத்துடனும் காசியின் தொடர்பு மிகவும் ஆழமானது. காசியில் உறைந்துள்ள பகவான் விஸ்வநாதர் தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் உறைகிறார். தமிழ்நாட்டில் உள்ள தென்காசி, தெற்கின் காசி அல்லது தட்சிண காசி என்று அழைக்கப்படுகிறது. துறவி குமரகுருபர சுவாமிகள் தனது ஆன்மீகம், புலமை மற்றும் நிறுவனக் கட்டுமானம் மூலம் காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே நீடித்த தொடர்பை உருவாக்கினார். தமிழ்நாட்டின் மிகச்சிறந்த புதல்வர்களில் ஒருவரான மகாகவி சுப்பிரமணிய பாரதி, காசியில் அறிவுசார் வளர்ச்சி மற்றும் ஆன்மீக விழிப்புணர்வுக்கான இடத்தைக் கண்டார். அவரது தேசியவாதம் ஆழமாகி, அவரது கவிதை கூர்மையானது. சுதந்திரமான, ஒன்றுபட்ட இந்தியா பற்றிய அவரது பார்வை தெளிவான வடிவம் பெற்றது இங்குதான். காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் நெருக்கமான பிணைப்பை எடுத்துக்காட்டும் இதுபோன்ற பல நிகழ்வுகள் உள்ளன.

காசி-தமிழ் சங்கமத்தின் முதல் நிகழ்வு 2022-ல் நடைபெற்றது. தொடக்க விழாவில் கலந்து கொண்டதை நான் நினைத்துப்பார்க்கிறேன். தமிழ்நாட்டிலிருந்து அறிஞர்கள், கைவினைஞர்கள், மாணவர்கள், விவசாயிகள், எழுத்தாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பலர் காசி, பிரயாக்ராஜ் மற்றும் அயோத்திக்கு பயணம் செய்தனர்.

அடுத்தடுத்த நிகழ்வுகள் இந்த முயற்சியின் அளவையும் ஆழத்தையும் விரிவுபடுத்தின. புதிய கருப்பொருள்கள், புதுமையான வடிவங்கள் மற்றும் ஆழமான ஈடுபாட்டை அறிமுகம் செய்வதே இதன் நோக்கமாக இருந்தது. சங்கமம், அதன் முக்கிய உணர்வில் வேரூன்றி தொடர்ந்து மேம்படுவதை இது உறுதி செய்தது. 2023-ம் ஆண்டின் இரண்டாவது நிகழ்வில், மக்களுக்கு மொழி ஒரு தடையாக மாறாமல் இருப்பதை உறுதி செய்ய தொழில்நுட்பம் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டது. மூன்றாவது நிகழ்வில், இந்திய அறிவுமுறைகள் மீது கவனம் செலுத்தப்பட்டது. அதே நேரத்தில், கல்வி சார்ந்த விவாதங்கள், கலாச்சார நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் மற்றும் கலந்துரையாடல்கள் அதிக அளவிலான பங்கேற்புக்கு எடுத்துக்காட்டாக விளங்கின. ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

காசி தமிழ் சங்கமத்தின் நான்காவது ஆண்டு நிகழ்வுகள் 2025 டிசம்பர் 2 அன்று தொடங்கியது. இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட கருப்பொருள் மிகவும் சுவாரஸ்யமானது. தமிழ் கற்கலாம் என்ற அந்த கருப்பொருள் காசியிலும் அருகில் உள்ள பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு அழகான தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கியது. தமிழ்நாட்டிலிருந்து ஆசிரியர்கள் காசிக்கு வந்தனர். காசியைச் சேர்ந்த மாணவர்கள் மிகவும் மறக்கமுடியாத அனுபவத்தைப் பெற்றனர்! இந்த முறை பல சிறப்பு நிகழ்வுகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

தொல்காப்பியம், 4 இந்திய மொழிகளிலும் 6 வெளிநாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது.

தென்காசியில் இருந்து காசிக்கு ஒரு தனித்துவமான நிகழ்வாக அகத்திய முனிவர் வாகனப் பேரணி மேற்கொள்ளப்பட்டது. வழியில், கண் மருத்துவ முகாம்கள், சுகாதார விழிப்புணர்வு முகாம்கள், டிஜிட்டல் எழுத்தறிவு முகாம்கள் போன்ற பல்வேறு இயக்கங்கள் நடத்தப்பட்டன. கலாச்சார ஒற்றுமையின் செய்தியைப் பரப்பிய பாண்டிய மன்னர் அதி வீர பராக்கிரம பாண்டியனுக்கு இந்தப் பேரணி அஞ்சலி செலுத்தியது. நமோ படித்துறையில் கண்காட்சிகள், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் கல்வி அமர்வுகள், கலாச்சார நிகழ்ச்சிகள் போன்றவையும் நடைபெற்றன.

காசி தமிழ் சங்கமத்தில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தரும் விஷயங்களில் ஒன்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்பதாகும். நமது வேர்களுடன் தங்கள் தொடர்பை ஆழப்படுத்த வேண்டும் என்ற நமது இளைஞர் சக்தியின் ஆர்வத்தை இது எடுத்துக்காட்டுகிறது. இதில் நடைபெற்ற பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளின் போது தங்கள் திறமையையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்த இது ஒரு சிறந்த தளமாகவும் அமைந்தது.

காசி தமிழ் சங்கமத்தின்போது மேற்கொண்ட காசி பயணத்தை மறக்கமுடியாத சிறப்பான பயணமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலிருந்து உத்தரபிரதேசத்திற்கு மக்களை அழைத்துச் செல்ல இந்திய ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கியது. பல ரயில் நிலையங்களில், குறிப்பாக தமிழ்நாட்டில், அவர்கள் உற்சாகப்படுத்தப்பட்டனர். ரயில் பயணத்தில் மெல்லிசைப் பாடல்கள் ஒலிக்கச் செய்ததுடன், உரையாடல்களும் நடைபெற்றன.

காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்றவர்களுக்குக் காட்டப்பட்ட அரவணைப்புக்காகவும் சிறந்த விருந்தோம்பலுக்காகவும் காசியையும் உத்தரபிரதேசத்தையும் சேர்ந்த எனது சகோதர, சகோதரிகளைப் நான் பாராட்ட விரும்புகிறேன். தமிழ்நாட்டிலிருந்து வந்த விருந்தினர்களுக்காக பலர் தங்கள் வீடுகளின் கதவுகளைத் திறந்து வரவேற்றனர். விருந்தினர்கள் தடையற்ற சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய உள்ளூர் நிர்வாகம் 24 மணி நேரமும் உழைத்தது. வாரணாசி மக்களவைத் தொகுதியின் உறுப்பினரான நான் இதில் பெருமைப்படாமல் இருக்க முடியாது!

இந்த முறை, காசி-தமிழ் சங்கமத்தின் நிறைவு விழா ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. அதில் குடியரசுத் துணைத்தலைவரும் தமிழ்நாட்டின் பெருமைமிகு மைந்தருமான திரு சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். இந்தியாவின் ஆன்மீக மகத்துவத்தையும், தேசிய ஒருங்கிணைப்பையும் இத்தகைய தளங்கள் எவ்வாறு ஆழப்படுத்துகின்றன என்பதை எடுத்துரைத்து, மிகவும் ஊக்கமளிக்கும் உரையை அவர் நிகழ்த்தினார்.

காசி - தமிழ் சங்கமம் கலாச்சார புரிதலை வலுப்படுத்தி, மக்களிடையே பரிமாற்றங்களை வளர்க்கிறது. அத்துடன் நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடையே நிலையான பிணைப்புகளை உருவாக்கி ஆரோக்கியமான விளைவுகளை இது ஏற்படுத்துகிறது. வரும் காலங்களில், இதை இன்னும் துடிப்பானதாக மாற்ற விரும்புகிறோம். மிக முக்கியமாக, இது 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற உணர்வை வலுவாக வளர்த்துள்ளது. இந்த உணர்வு பல நூற்றாண்டுகளாக நமது பண்டிகைகள், இலக்கியம், இசை, கலை, உணவு வகைகள், கட்டடக்கலை, அறிவுசார் அமைப்புகள் என பலவற்றின் மூலம் செழித்து வளர்ந்துள்ளது.

இந்த ஆண்டு இந்தக் காலகட்டம் இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு மிகவும் புனிதமான பண்டிகைக் காலமாகும். சூரியன், இயற்கை, விவசாயம் ஆகியவற்றுடன் தொடர்புடைய சங்கராந்தி, உத்தராயண், பொங்கல், மஹா பிஹு போன்ற பல்வேறு பண்டிகைகளை மக்கள் உற்சாகமாகக் கொண்டாடுகின்றனர். இந்தப் பண்டிகைகள் மக்களை ஒருங்கிணைத்து, நமது சமூகத்தில் நல்லிணக்க உணர்வை வலுப்படுத்துகின்றன. இந்தப் பண்டிகைகளையொட்டி மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற பண்டிகைகள், நமது பகிரப்பட்ட பாரம்பரியத்தையும், கூட்டுப் பங்கேற்பையும், தேசிய ஒற்றுமையையும் வலுப்படுத்தி, தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.