QuoteThe human face of 'Khaki' uniform has been engraved in the public memory due to the good work done by police especially during this COVID-19 pandemic: PM
QuoteWomen officers can be more helpful in making the youth understand the outcome of joining the terror groups and stop them from doing so: PM
QuoteNever lose the respect for the 'Khaki' uniform: PM Modi to IPS Probationers

வணக்கம்!

என் சக அமைச்சர்கள் திரு. அமித் ஷா, திரு.ஜித்தேந்திர சிங், திரு.கிஷன் ரெட்டி மற்றும் திக்‌ஷந்த் அணிவகுப்பில் கலந்து கொண்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் காவல் அகாடமி அதிகாரிகள் மற்றும் இந்திய காவல் பணிக்கு ஆர்வத்துடன் தலைமை ஏற்கவுள்ள என் இளம் நண்பர்களே.

பொதுவாக, பயிற்சியை நிறைவு செய்யும் நண்பர்களை நான் தில்லியில் எனது இல்லத்தில் சந்தித்து பேசுவது வழக்கம். ஆனால், தற்போதைய கொரோனா சூழலால், நான் அந்த வாய்ப்பை இழந்துள்ளேன். ஆனால், எனது ஆட்சி காலத்தில், நான் உங்களை நிச்சயம் சந்திப்பேன்.

நண்பர்களே,

நீங்கள் பயிற்சி பெறுபவர்களாக  இருக்கும்வரை, நீங்கள் பாதுகாப்பான சூழலில்  பணியாற்றுகிறீர்கள். நீங்கள் தவறு செய்தால் கூட, அதை உங்கள் பயிற்சியாளர்கள் பார்த்துக் கொள்வார்கள். ஆனால், நிலைமை ஒரே நாள் இரவில் மாறிவிடும். நீங்கள் இந்த பயிற்சி மையத்தில் இருந்து வெளியேறவுடன், நீங்கள் பொறுப்புள்ள அதிகாரியாக செயல்பட வேண்டிய சூழல் உள்ளது. சாதாரண மனிதருக்கு, நீங்கள் பணிக்கு புதியவர், அனுபவம் அற்றவர் என்பது தெரியாது. அவரைப் பொருத்தவரை நீங்கள் சீருடையில் உள்ள ஒரு அதிகாரி. அவர் உங்களிடம் எதிர்பார்த்து வரும் பணி நடைபெறவில்லை என்றால், அவர் உங்களிடம் கேள்வி கேட்பார்.

நீங்கள் எவ்வாறு பணியாற்றுகிறீர்கள் என கண்காணிக்கப்படுவீர்கள்?

ஆதனால், ஆரம்ப நிலையில் நீங்கள் கவனமாகப் பணியாற்ற வேண்டும். ஏனென்றால், உங்களைப் பற்றி முதலில் ஏற்படும் அபிப்ராயம்தான், கடைசி வரை நீடிக்கும். நீங்கள் உயர் அதிகாரியாக பணியாற்றும் போது, உங்களைப் பற்றிய எண்ணம், நீங்கள் எங்கு இடமாற்றம் பெற்றுச் சென்றாலும், உடன் வரும். உங்களைப் பற்றி, நல்ல எண்ணம் உருவாக நீங்கள் மிக கவனமாக செயல்பட வேண்டும்.

இரண்டாவது, சமூகத்தில் ஒரு குறை உள்ளது. நாங்கள் தேர்தலில் வென்று தில்லிக்கு வந்தபோது, எங்களைச் சுற்றி எப்போதும் இரண்டு-மூன்று பேர் இருப்பர். அவர்கள் யார் என்று எங்களுக்கு தெரியாது. ஆனால், வெகு விரைவில், அவர்கள் சேவை செய்யத் தொடங்குவார்?  ஐயா, உங்களுக்கு கார் வேண்டுமா, தண்ணீர் வேண்டுமா? உங்களுக்கு ஏற்பாடு செய்து தருகிறேன். உங்களுக்குத் தேவையான உணவை சிறந்த ஓட்டலில் இருந்து வரவழைத்து தருவதாக கூறுவர். இதையெல்லாம் யார் செய்கிறார்கள் என்றே நமக்கு தெரியாது. நீங்கள் எங்கு சென்றாலும், இதுபோன்ற ஒரு கும்பல் உங்களைச் சுற்றி இருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். நீங்கள் புதிய இடத்துக்கு சென்றால், உங்களுக்கு பல தேவைகள் ஏற்படும். ஆனால், அவற்றுக்காக இந்த கும்பலிடம் நீங்கள் சிக்கினால், அதில் இருந்து மீள்வது சிரமம். புதிய இடத்தில் உங்களுக்கு சில சிரமங்கள் ஏற்படலாம். ஆனால், உங்கள் தேவைகளை நீங்களே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.

|

சிறந்த தலைமையாக நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்றால், நீங்கள் அனைத்து விஷயங்களிலும் கவனமாக செயல்பட வேண்டும். ஒரு புதிய இடத்துக்கு பணிக்கு செல்லும் போது, உங்களிடம் ஏராளமான பணிகள் வரும். நீங்கள் சக்தி வாய்ந்த நபராக இருந்தால், இன்னும் கூடுதல் பணிகள் வரும். அவற்றையெல்லாம், அதிர்ஷ்டமாக நினைத்து, சுத்தமான மனசாட்சியுடன் பணியாற்றினால் அது உங்களுக்கு பயனளிக்கும்.

இரண்டாவது விஷயம் காவல் நிலையம். மக்களின் நம்பிக்கை பெற்ற இடமாக காவல்நிலையங்களை மாற்றுவது எப்படி? சில காவல் நிலையங்கள் சுத்தமாக உள்ளன. சில காவல் நிலையங்கள் பழமையாகவும், மோசமான நிலையிலும் இருக்கும். அவற்றையும் சுத்தமாக வைத்திருப்பது சிரமம் அல்ல.

எனது கீழ் உள்ள காவல் நிலையங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும். ஒரு தனிநபரை மாற்றுவது சிரமம், ஆனால் ஒரு அமைப்பை, சூழலை நம்மால் மாற்ற முடியும்.   மக்கள் காவல் நிலையத்துக்கு வந்தால், அவர்கள் அமர இருக்கைகள் இருக்க வேண்டும், கோப்புகளை முறையாக பராமரிப்பது எப்படி? போன்ற சின்ன சின்ன விஷயங்களை நீங்களே முடிவு செய்து மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

சில போலீசார் பணியில் சேர்ந்தவுடன், தமது அதிகாரத்தை காட்ட வேண்டும், மக்களை பயமுறுத்த வேண்டும், தமது பெயரைக் கேட்டால் சமூக விரோதிகள் ஓட வேண்டும் என்ற எண்ணத்துடன் பணியாற்றுபவர். சிங்கம் போன்ற சினிமா படங்களை பார்த்து வளர்வதால், அதுபோன்ற சிந்தனைகள் ஏற்படும். உங்களுக்கு கீழ் பணியாற்றுபவர்களை வைத்து, சிறந்த அணியை உருவாக்க வேண்டும்.

மக்களிடையே பயத்தை ஏற்படுத்த வேண்டுமா அல்லது அன்பான இணைப்பை ஏற்படுத்த வேண்டுமா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். நீங்கள் அதிகாரத்துடன் செயல்பட முயன்றால், அது குறுகிய காலம்தான் நீடிக்கும். நீங்கள் மக்களுடன் அன்பான பிணைப்பை ஏற்படுத்தினால், உங்கள் ஓய்வுக்குப்பின்பும், மக்கள் உங்களை நினைவு கூறுவர்.

நான் முதல் முறை முதலமைச்சர் ஆனபோது, போலீசார் ஏற்பாடு செய்த விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றேன். வழக்கமாக, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதல்வர்கள், மேடையில் அமர்ந்து வாழ்த்து கூறிவிட்டு சென்று விடுவர். ஆனால், நான் அங்கு கூடியிருந்த காவலர்கள் உட்பட அனைவரிடமும் கை குலுக்கினேன். அப்போது, இது போல் செய்ய வேண்டாம் என ஒரு அதிகாரி தடுத்தார். இவ்வாறு செய்தால், எனது கையில் கொப்புளங்கள் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய சூழல் ஏற்படும் என்றார். இது போன்ற மனநிலையில் இருந்து நாம் மாற வேண்டும். காவல் துறையில் அதிகாரியாக பணியாற்றினால், கடுமையாக பேச வேண்டும் என நினைப்பது தவறு.

காவல்துறை பற்றிய செயற்கையான எண்ணம் உண்மை அல்ல. காவலர்கள் பற்றிய உண்மையான எண்ணம் கொரோனா நேரத்தில் தெரியவந்தது. மக்களின் நலனுக்காக அவர்கள் பணியாற்றினர். இது போன்ற எண்ணத்தை நாம் நமது செயல்களால் மேம்படுத்த வேண்டும்.

ஜனநாயக முறையில் நாம் ஒரு அங்கம் என்பதை காவல் அதிகாரிகள் மறந்துவிடக் கூடாது. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், மக்கள் பிரதிநிதியின் பங்கு முக்கியமானது. அரசியல் வாதியை மதிப்பது என்பது, ஜனநாயகத்தை மதிப்பது போன்றது.

 

தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி நமக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. முன்பெல்லாம் உளவு தகவல்கள் காவலர்கள் மூலம் சேகரிக்கப்பட்டன. தற்போது அந்த முறை குறைந்து விட்டது. இந்த விஷயத்தில் நீங்கள் சமரசம் செய்யக் கூடாது. காவலர்கள் அளவில் சேகரிக்கப்படும் உளவுத் தகவல்களும் மிக முக்கியமானது. அதையும் நீங்கள் ஊக்குவிக்க வேண்டும்.

குற்றங்களைக் கண்டுபிடிப்பதில் சிசிடிவி போன்ற தொழில்நுட்பங்கள் பெரிதும் உதவினாலும், போலீசாரை சிக்க வைப்பதிலும், தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. போலீசார் கோபமடைந்து அத்து மீறும்போது, அதை ஒருவர் அவருக்கு தெரியமலேயே படம்பிடித்து அதை ஊடகங்களில் வைரலாக பரவவிடும் சம்பவங்களும் நடக்கின்றன. அதனால் தொழில்நுட்பம் காவல்துறைக்கு நன்மை, தீமை இரண்டையும் ஏற்படுத்தி விடுகிறது. தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தி பயனடைவதை நீங்கள் வலியுறுத்த வேண்டும். இங்கு தொழில்நுட்ப படிப்புகளை முடித்த பலர் அதிகாரிகளாகியுள்ளனர். தற்போது செயற்கை நுண்ணறிவு, சமூக ஊடகங்கள் போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றையெல்லாம் நீங்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும்.

|

நான் முதல்வராக இருந்த போது, எனது பாதுகாப்பு பணியில் காவலர் ஒருவர் இருந்தார். அப்போது ஐ.மு.கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தது. எனது இ-மெயிலில் ஒரு சிறு பிரச்னை ஏற்பட்டது. அதை சரிசெய்ய முடியவில்லை. இது ஊடகங்களிலும் செய்தியாக வெளிவந்தது. ஆனால், எனது பாதுகாப்பு குழுவில் இருந்த 12ம் வகுப்பு படித்த காவலர், அந்த இ-மெயில் பிரச்னையை சரி செய்தது பலருக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவரை, அப்போதைய உள்துறை அமைச்சர் சிதம்பரமே பாராட்டினார். இது போன்ற நபர்களை கண்டறிந்து நாம் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

முன்பெல்லாம், இயற்கை பேரிடர் ஏற்பட்டால், அங்கு மீட்பு பணியில் ராணுவம் ஈடுபடும். ஆனால் தற்போது காவல் துறையில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்கள் மூலம் தேசிய மற்றும் மாநில பேரிடம் மீட்பு குழுவினர் அந்த பணியை சிறப்பாக செய்து வருகின்றனர். இது காவல்துறைக்கு புதிய கவுரவத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோல் காவல்துறையில் நீங்கள் பல திறமையான குழுக்களை உருவாக்க வேண்டும்.

உங்களுக்கு பயிற்சி அளிக்கும் அதுல் கர்வால், எனக்கு பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றியவர். தொழில்நுட்ப பின்னணி உள்ளவர். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய தைரியமான அதிகாரி. காவல் துறையில் அவர் எந்த பொறுப்பையும் ஏற்கும் திறமையான அதிகாரி. அவருக்கு எனது பாராட்டுக்கள்.

மத்திய அரசு கர்மயோகி என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தில் பயிற்சிக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் அளிக்க விரும்புகிறோம்.

நான் குஜராத் முதல்வராக இருந்தபோது அரசு அதிகாரிகளுக்கு 3 நாள் பயிற்சி முகாம் நடத்தினேன். அதன்பின் அவர்களது அனுபவத்தையும் நான் கேட்டறிந்ததேன். அப்போது காவலர் ஒருவர் கூறுகையில், இந்த பயிற்சிக்கு முன் நான் ஒரு காவலராக மட்டும் இருந்தேன். தற்போது மனிதனாக மாறியுள்ளேன் என்றார். மக்கள், அவரை ஒரு போதும் மனிதராக மதிக்கவில்லை என்றும் கூறினார். இந்த வார்த்தைகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. காவலர் என்பதோடு, தான் மனிதன் என்பதையும் இந்த 3 நாள் பயிற்சி அவருக்கு உணர்த்தியுள்ளது. இதுதான் பயிற்சியின் சக்தி. நாம் தொடர்ந்து பயிற்சி பெற வேண்டும். இந்த பயிற்சிக்குப் பின், நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தையும் கவனிக்க வேண்டும். உங்களுடன் பணியாற்றுபவர்களின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.

|

உங்களுக்கு பயிற்சி அளிக்கும் அதுல் கர்வால், எனக்கு பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றியவர். தொழில்நுட்ப பின்னணி உள்ளவர். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய தைரியமான அதிகாரி. காவல் துறையில் அவர் எந்த பொறுப்பையும் ஏற்கும் திறமையான அதிகாரி. அவருக்கு எனது பாராட்டுக்கள்.

மத்திய அரசு கர்மயோகி என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தில் பயிற்சிக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் அளிக்க விரும்புகிறோம்.

நான் குஜராத் முதல்வராக இருந்தபோது அரசு அதிகாரிகளுக்கு 3 நாள் பயிற்சி முகாம் நடத்தினேன். அதன்பின் அவர்களது அனுபவத்தையும் நான் கேட்டறிந்ததேன். அப்போது காவலர் ஒருவர் கூறுகையில், இந்த பயிற்சிக்கு முன் நான் ஒரு காவலராக மட்டும் இருந்தேன். தற்போது மனிதனாக மாறியுள்ளேன் என்றார். மக்கள், அவரை ஒரு போதும் மனிதராக மதிக்கவில்லை என்றும் கூறினார். இந்த வார்த்தைகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. காவலர் என்பதோடு, தான் மனிதன் என்பதையும் இந்த 3 நாள் பயிற்சி அவருக்கு உணர்த்தியுள்ளது. இதுதான் பயிற்சியின் சக்தி. நாம் தொடர்ந்து பயிற்சி பெற வேண்டும். இந்த பயிற்சிக்குப் பின், நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தையும் கவனிக்க வேண்டும். உங்களுடன் பணியாற்றுபவர்களின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.

நாம் நமது கடமையை முறையாக செய்தால், மக்கள் மீதான நமது நம்பிக்கையும் அதிகரிக்கும். உங்களுக்கு மீண்டும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி!

 
Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
Decline in NPAs has meant that credit is more readily available for industry

Media Coverage

Decline in NPAs has meant that credit is more readily available for industry
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM pays tribute to the great freedom fighter Mangal Pandey on his birth anniversary
July 19, 2025

The Prime Minister, Shri Narendra Modi today paid tribute to the great freedom fighter Mangal Pandey on his birth anniversary. Shri Modi lauded Shri Pandey as country's leading warrior who challenged the British rule.

In a post on X, he wrote:

“महान स्वतंत्रता सेनानी मंगल पांडे को उनकी जयंती पर आदरपूर्ण श्रद्धांजलि। वे ब्रिटिश हुकूमत को चुनौती देने वाले देश के अग्रणी योद्धा थे। उनके साहस और पराक्रम की कहानी देशवासियों के लिए प्रेरणास्रोत बनी रहेगी।”