கடந்த 2021 ஆண்டு சுதந்திரத்தின் 75-வது ஆண்டு பெருவிழா கொண்டாட்டங்களையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட ‘புதுமைத்துவத்தில் ஒற்றுமை’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும், கலந்து கொண்டவர்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்தப் போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். அதில் 272 பேர் வெற்றி பெற்றனர். அவர்களின் புதுமைத்துவத்தை பாராட்டும் விதத்தில் மத்திய கலாச்சார அமைச்சகம் பரிசுகளை வழங்கியிருக்கிறது. இதன் இறுதிப்போட்டி புதுதில்லியில் உள்ள நேரு பூங்காவில் நடத்தப்பட்டது.
75-வது ஆண்டு அமிர்த பெருவிழா கொண்டாட்டங்கள் தொடர்பாக பல டுவிட்கள் வந்திருந்ததையடுத்து, பிரதமர் தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“இந்த சிறப்பான புதுமைத்துவத்துடன் கூடிய நாட்டுப்பற்று உணர்வு #UnityInCreativity போட்டிக்கு ஒரு புதிய உதாரணத்தை தந்துள்ளது. இதில் மிகுந்த ஆர்வத்துடன் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டது ஒவ்வொருவருக்கும் உத்வேகத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும், கலந்துகொண்டவர்களுக்கும் மிகுந்த பாராட்டுதல்களை தெரிவிக்கின்றேன்.”
अद्भुत रचनात्मकता से भरी देशभक्ति की इस भावना ने #UnityInCreativity की एक नई मिसाल पेश की है। जिस प्रकार लाखों देशवासियों ने इसमें बढ़-चढ़कर भागीदारी की, वो हर किसी को प्रेरित करने वाला है। विजेताओं के साथ ही सभी प्रतिभागियों को बहुत-बहुत शुभकामनाएं। https://t.co/b25XwOsXJy
— Narendra Modi (@narendramodi) February 8, 2023


