சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆடவர் குண்டு எறிதல் எஃப் 11 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மோனு கங்காஸுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"ஆடவர் குண்டு எறிதல் எஃப் 11 போட்டியில் மோனு கங்காஸின் சிறப்புமிக்க வெண்கலம். அவரது சாதனை உண்மையிலேயே உத்வேகம் அளிக்கிறது. கடின உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் பலன் கிடைத்துள்ளது. இந்தியா உண்மையிலேயே மகிழ்ச்சி அடைந்துள்ளது.
Incredible Bronze by @GhangasMonu in Men's Shot put F11 event. His achievement is truly inspiring. All the hard work and dedication has paid off. India is truly elated. pic.twitter.com/VZN3L9mqZc
— Narendra Modi (@narendramodi) October 23, 2023


