சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி 2022-ல் ஆடவர் 5000 மீட்டர் டி11 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற அங்கூர் தாமாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"ஆடவர் 5000 மீட்டர் டி 11-ல் மதிப்புவாய்ந்த தங்கப் பதக்கம் வென்ற அங்கூர் தாமாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அவரது குறிப்பிடத்தக்க செயல்திறன் பிரமிப்பூட்டும் மற்றும் நம் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது. அவர் தொடர்ந்து புதிய எல்லைகளைத் அடையட்டும்!"
Heartiest congratulations to @AnkurAthlete on the exceptional Gold Medal win in Men's 5000m T11. His remarkable performance was awe-inspiring and has made our nation proud. May he continue to chase new horizons! pic.twitter.com/HSEgjVXito
— Narendra Modi (@narendramodi) October 23, 2023


