தமது மிக சமீபத்திய மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உறுதியளித்தவாறு, அவரது எக்ஸாம் வாரியர்ஸ் புத்தகத்தின் புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு வெளியாகியுள்ளது.
பல்வேறு தளங்களில் அதை முன்கூட்டியே பதிவு செய்யலாம். நீங்கள் அதை இங்கே (https://amzn.to/3eaYOHH) அல்லது இங்கே (https://bit.ly/3eeUVl8) முன்பதிவு செய்யலாம்.
2018-ம் ஆண்டு வெளியிடப்பட்ட இப்புத்தகத்தின் முதல் பதிப்பு, வாழ்க்கை, தேர்வுகள் உள்ளிட்ட பலவற்றை பற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஊக்கமளிக்கும் சிந்தனைகளின் தொகுப்பாக அமைந்தது.
கல்வியின் மையமாக மதிப்பெண் அட்டைகள் இல்லாமல், அறிவு மற்றும் கற்றலை கொண்டாடும் சூழலியலை உருவாக்குவதற்கான முயற்சியாக அது அமைந்தது.
பிரெயில் பதிப்பு உட்பட பல்வேறு மொழிகளில் இப்புத்தகம் வெளியிடப்பட்டது. மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட இப்புத்தகத்தின் முதல் பதிப்பு, அதிகம் விற்ற புத்தகங்களில் ஒன்றாக அமைந்தது.
கடந்த மூன்று வருடங்களில் கல்வித்துறை தொடர்புடைய பலருடன் பிரதமர் உரையாடி இருக்கிறார். பல்வேறு எண்ணங்கள், சிந்தனைகள் மற்றும் ஆலோசனைகளை அவர்கள் வழங்கியுள்ளனர்.
குறிப்பாக, கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, கல்வித்துறை உட்பட எல்லாத் துறைகளும் தொடர்ந்து இயங்குவதற்காக தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டியிருந்ததால், எக்ஸாம் வாரியர்சின் புதிய பதிப்பு எழுதப்பட வேண்டியதற்கான தேவையை பிரதமர் திரு நரேந்திரமோடி உணர்ந்தார்.
இப்புத்தகத்தின் புதிய பதிப்பும் மனநலம், இலக்குகளை நிர்ணயித்தல், வகுப்பறையை தாண்டி கற்றல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்களை தொடுகிறது.
குடும்பங்களுக்குள் தொழில்நுட்பத்தின் பங்கு, மாணவர்களின் மன நலனை உறுதி செய்தல் உள்ளிட்ட பலவற்றை குறித்து பெற்றோர்களுக்காக பிரதமர் திரு நரேந்திரமோடி எழுதியுள்ளார்.
எக்ஸாம் வாரியர்ஸ் புத்தகத்தின் முதல் பதிப்பின் ஒவ்வொரு தலைப்பிலும் இடம் பெற்றிருந்த சுவாரசியமான செயல்பாடுகள் அதிக பாராட்டுதல்களைப் பெற்றன.
இத்தகைய செயல்பாடுகள் இன்னும் அதிக அளவில் புதிய பதிப்பில் இடம் பெற்றுள்ளன. மேலும், திரு. நரேந்திர மோடி கைபேசி செயலியின் எக்ஸாம் வாரியர்ஸ் பகுதியுடன் இவை இணைக்கப்பட்டுள்ளன.
செயலியில் உள்ள எக்ஸாம் வாரியர்ஸ் பிரிவு, புத்தகத்தின் தொழில்நுட்ப சமூக பரிமாணத்தை வழங்குகிறது.
எக்ஸாம் வாரியர்ஸ் புத்தகத்தின் புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு பல்வேறு தளங்களில் கிடைக்கிறது. நீங்கள் அதை இங்கே (https://amzn.to/3eaYOHH) அல்லது இங்கே (https://bit.ly/3eeUVl8) முன்பதிவு செய்யலாம்.


