A very special day for Rajasthan, development initiatives across aviation, energy and connectivity will strengthen infrastructure, accelerate growth and improve ease of living: PM
Regardless of how massive and unforeseen a challenge may be, New India neither backs away from its resolves nor slows its momentum: PM
Today itself, the new airport terminal was inaugurated in Jodhpur; this will provide a new impetus to tourism, trade, and employment in the Marwar region: PM
The resolve and efforts of the 21st century's New India have triumphed over the greatest energy crisis of the 21st century: PM
India made the right decisions at every level, accurately assessed the crisis in a timely manner, formulated an effective strategy, and utilized India's resources in a balanced way; It positively leveraged India's diplomatic power, and that is how India managed to emerge from the crisis: PM
India made the right decisions at every level and managed to emerge from the energy crisis: PM
Today, I thank and express my gratitude to our 1.4 billion citizens for the resolute way they stood by the country during these difficult times: PM
It is on the strength of the trust of our 1.4 billion citizens that the nation has been able to move forward: PM
Now, the governments of Rajasthan and Haryana will collaborate to deliver water to Shekhawati, benefiting the people of the entire adjoining Shekhawati region: PM

பாரத மாதாவுக்கு ஜே!

பாரத மாதாவுக்கு ஜே!

ராஜஸ்தான் ஆளுநர் திரு. ஹரிபாபு பாக்டே அவர்களே, முதலமைச்சர் திரு. பஜன்லால் சர்மா அவர்களே, மத்திய அமைச்சர் திரு. ஹர்தீப் சிங் பூரி அவர்களே, துணை முதலமைச்சர்கள் தியா குமாரி அவர்களே, பிரேம்சந்த் பைர்வா அவர்களே, ராஜஸ்தான் மாநில அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களே, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களே, எனது அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே!

இன்று ராஜஸ்தான் முழுவதும் சுமார் 10 முதல் 12 ஆயிரம் இடங்களில் லட்சக்கணக்கான மக்கள் இந்த நிகழ்ச்சிக்காகக் கூடியிருப்பதாக என்னிடம் கூறினார்கள். தற்போது நான் திரைகளைப் பார்க்கும்போது, எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காட்சியளிக்கிறது. தொழில்நுட்பத்தின் வாயிலாக ராஜஸ்தானின் ஒவ்வொரு மூலை முடுக்கிலிருந்தும் எனது சகோதர சகோதரிகள் இன்று இணைந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் நான் வணங்குகிறேன். 

நண்பர்களே,

இந்தக் கடும் வெயிலிலும், இத்தனை இடங்களில் இவ்வளவு பிரம்மாண்டமான முறையில் நீங்கள் கூடியிருந்து எங்களுக்கு ஆசி வழங்குவது, பி.ஜே.பி. அரசாங்கத்தின் முயற்சிகளின் மீது நீங்கள் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை எடுத்துக் காட்டுகிறது. ராஜஸ்தான் மண்ணின் இந்த ஆதரவுக்கும், பாசத்திற்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்.

 

எனது அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே...

இந்த மண் எண்ணற்ற வீரர்களின் வீரத்திற்குச் சாட்சியாக இருந்துள்ளது. இந்தப் போர்க்களத்தின் ஒவ்வொரு துகளும், சுயமரியாதையை எல்லாவற்றிற்கும் மேலாக மதிக்க வேண்டும் என்று நமக்குக் கற்பித்துள்ளது. ஒரு தனிமனிதனோ அல்லது ஒரு தேசமோ எதுவாக இருந்தாலும், தற்சார்புடன் இருக்கும்போது, மற்றவர்களைச் சார்ந்திருப்பது முடிந்தவரை குறையும்போதுதான் அதன் சுயமரியாதை ஓங்கி நிற்கும். இன்று, ராஜஸ்தான் மண்ணிலிருந்து, இந்தியா வளர்ந்த மற்றும் தற்சார்பு கொண்ட நாடாக மாறுவதற்கான ஒரு முக்கிய அடியை எடுத்து வைத்துள்ளது. இன்று, இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலையம் இங்குள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும். இந்த சுத்திகரிப்பு நிலையத்திற்காக நான் குறிப்பாக ராஜஸ்தான் இளைஞர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

பி.ஜே.பி. அரசாங்கங்கள் அடிக்கல் நாட்டுவதோடு நின்றுவிடுவதில்லை; திட்டங்களை முடிப்பதற்காக நாங்கள் இரவும் பகலும் உழைக்கிறோம் என்பதை இன்றைய தினம் உறுதிப்படுத்துகிறது. வெறும் இரண்டு மாதங்களுக்கு முன்பு, இங்கே விபத்து நடந்த பிறகு, பணிகள் முடிக்கப்பட்ட வேகம், ஒரு அசாதாரண முயற்சியின் எடுத்துக்காட்டாகும். சவால்கள் எவ்வளவு பெரியதாக அல்லது எதிர்பாராததாக இருந்தாலும், 'புதிய இந்தியா' தனது உறுதியிலிருந்து பின்வாங்காது, தனது வேகத்தையும் குறைக்காது என்பதை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள்.

 

சகோதர சகோதரிகளே...

இன்று ராஜஸ்தானில் வளர்ச்சியின் பல மைல்கற்கள் எட்டப்படுகின்றன. இன்று ஜோத்பூரில் புதிய விமான நிலைய முனையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. புதிய முனையத்தின் கட்டமைப்பு மற்றும் உட்புற வடிவமைப்பு சமூக வலைதளங்களில் எங்கும் பிரபலமாக இருப்பதை நான் பார்த்தேன் – ராஜஸ்தானின் கலைத்திறன் எல்லா இடங்களிலும் தெரிகிறது.

நண்பர்களே,

இது மார்வார் பகுதியில் சுற்றுலா, வணிகம் மற்றும் வேலைவாய்ப்பிற்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும். ஜோத்பூருடன் தொடர்புடைய அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜோத்பூரிலிருந்தே இன்று 'உடான்'  திட்டத்தின் புதிய கட்டமும் தொடங்கியுள்ளது. இதன் மூலம், சிறிய நகரங்களும் தொலைதூரப் பகுதிகளும் விமானச் சேவை மூலம் இணைக்கப்படும். இதனுடன் சேர்த்து, ஜெய்ப்பூர் மெட்ரோவும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

 

சகோதர சகோதரிகளே,

ஷெகாவதி பிராந்தியத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டைத் தீர்க்க நீண்டகாலமாக இருந்த காத்திருப்பு முடிவுக்கு வருகிறது. இந்த அனைத்துத் திட்டங்களுக்காகவும் எனது ராஜஸ்தான் சகோதர சகோதரிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

இன்று ராஜஸ்தானில் சுமார் 54,000 இளைஞர்கள் அரசுப் பணிக்கான நியமன ஆணைகளைப் பெற்றுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் பிரகாசமான எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன். அவர்களின் இளமை ஆற்றல் ராஜஸ்தானின் ஒளிமயமான எதிர்காலத்தை மேலும் வலுப்படுத்தும்.

நண்பர்களே,

ராஜஸ்தான் மண்ணிலிருந்து நமது நாட்டின் மற்றொரு வலிமையைப் பற்றி நான் பேச விரும்புகிறேன். மேற்கு ஆசியாவில் நடைபெறும் போர் உலகம் முழுவதும் எவ்வாறு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஒவ்வொரு நாடும் மிகுந்த துயரத்தில் உள்ளது. இந்தப் போர், 21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய எரிசக்தி நெருக்கடியைத் தூண்டியுள்ளது. முன்னணி நாடுகள் அனைத்தும் எரிபொருள் தட்டுப்பாட்டினால் திணறி வருகின்றன.

ஆனால் நண்பர்களே,

21-ம் நூற்றாண்டின் இந்த மிகப்பெரிய எரிசக்தி நெருக்கடியை, இந்த நூற்றாண்டின் 'புதிய இந்தியாவின்' மனவுறுதியும் முயற்சிகளும் முறியடித்துள்ளன. இந்தியா ஒவ்வொரு நிலையிலும் சரியான முடிவுகளை எடுத்தது, நெருக்கடியை உரிய நேரத்தில் கணித்தது, பயனுள்ள உத்திகளை வகுத்தது, வளங்களைச் சமநிலையான முறையில் பயன்படுத்தியது, மற்றும் அதன் தூதரக அதிகாரத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தியது. இப்படித்தான் இந்தியா அந்த நெருக்கடியை வென்றது.

நண்பர்களே,

சில சக்திகள் பொதுவெளியில் வதந்திகளையும் அச்சத்தையும் பரப்புவதில் மும்முரமாக இருந்தபோது, திரைக்குப் பின்னால், இரவும் பகலும் பெரும் பணிகள் நடைபெற்று வந்தன. பொறுமை, விடாமுயற்சி, கொள்கை மற்றும் தூதரக ரீதியாக எடுக்கப்பட்ட நுணுக்கமான நடவடிக்கைகள் - இவை நிகரற்றவை என்று வரலாறு ஒருநாள் பதிவு செய்யும். இதற்கு ஓர் உதாரணத்தைச் சொல்கிறேன்: சமையல் எரிவாயு. நமது எரிவாயு தேவையில் சுமார் 60 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது என்பதையும், அதில் 90 சதவீதம் வளைகுடா நாடுகளிலிருந்து 'ஹார்முஸ் நீரிணை' வழியாக வருகிறது என்பதையும் நாம் அனைவரும் அறிவோம். திடீரென, போர்ச் சூழல் அந்த விநியோகத்தை ஏறக்குறைய நிறுத்தியது. நமது நாட்டில் எவ்வளவு பெரிய குழப்பம் ஏற்பட்டிருக்கும் என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்க்கலாம். ஆனால், சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்று ராஜஸ்தான் மண் நமக்குக் கற்றுக்கொடுத்துள்ளது. அதனால்தான், நெருக்கடி தொடங்கியவுடனேயே, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களின் திறனில் நாங்கள் கவனம் செலுத்தினோம். தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்தப்படும் எரிவாயு உற்பத்தி, சமையல் எரிவாயு உற்பத்திக்காக மாற்றப்பட்டது. வெறும் ஏழு நாட்களுக்குள், சமையல் எரிவாயு உற்பத்தி அதிகரித்தது. நெருக்கடிக்கு முன்பு 35,000 மெட்ரிக் டன்னாக இருந்த உற்பத்தி, நெருக்கடியின் போது 54,000 மெட்ரிக் டன்னாக உயர்ந்தது. முன்னெப்போதும் சமையல் எரிவாயுவை உற்பத்தி செய்யாத சுத்திகரிப்பு நிலையங்கள், அதற்காகத் தயார்படுத்தப்பட்டன.

 

நண்பர்களே,

முழுச் சுமையையும் சமையல் எரிவாயுவின் மீது மட்டும் விழவிடாமல் இருக்க, சமையலறைகளுக்கான குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்புகளையும் அரசு விரிவுபடுத்தியது. மிகக் குறுகிய காலத்தில், இந்தியா 11 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளுக்கு குழாய் வழி எரிவாயு இணைப்புகளை வழங்கியது.

சகோதர சகோதரிகளே,

ஒருபுறம், நாங்கள் விநியோகத்தை உறுதி செய்தோம். மறுபுறம், உள்நாட்டு நுகர்வோர் மீது அதிக சுமையை நாங்கள் சுமத்தவில்லை. அந்தச் சூழலில், ஒரு சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.2,000 வரை உயர்ந்திருக்கக்கூடும் - இதுவே பெரிய சந்தை நிபுணர்களின் மதிப்பீடாக இருந்தது. ஆனால், இப்போதும் கூட, உள்நாட்டு சமையல் எரிவாயு உருளைகள் ரூ.950-க்கும் குறைவான விலையிலேயே வழங்கப்படுகின்றன. ஏழை மக்களுக்கான விலையில்லா சமையல் எரிவாயு திட்டத்தின் கீழ், உருளைகள்  ரூ.650-க்கும் குறைவான விலையிலேயே கிடைக்கின்றன. இரண்டு நாட்களுக்கு முன்புதான், வணிக ரீதியான எரிவாயு விலையில் அரசு ஒரு பெரிய குறைப்பைச் செய்தது. நமது அரசு எவ்வளவு உணர்வுபூர்வமாகச் செயல்படுகிறது என்பதை இது காட்டுகிறது.

நண்பர்களே,

இந்தப் போர் டீசல் மற்றும் பெட்ரோலுக்கும் பெரும் நெருக்கடியை உருவாக்கியது. நமது நாட்டில் பெரிய எண்ணெய் கிணறுகள் இல்லை. நெருக்கடி தீவிரமடைந்தபோது, கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய்க்கு 70 டாலரிலிருந்து 120 டாலராக உயர்ந்தது. இறக்குமதி பாதைகள் அடைக்கப்பட்டன. பல நாடுகளில் டீசல் மற்றும் பெட்ரோல் விலை 40 முதல் 50 சதவீதம் வரை அதிகரித்தது. சில நாடுகளில் எரிபொருள் பங்கீடு கூட செய்யப்பட்டது. ஆனால் இந்தியாவில், அத்தகைய சூழல் ஒரு நாள் கூட ஏற்படவில்லை. வதந்திகள் பரப்பப்பட்டன, மக்கள் பயமுறுத்தப்பட்டனர், அரசியல் செய்யப்பட்டது, ஆனால் தவறான எண்ணம் கொண்டவர்கள் வெற்றி பெறவில்லை. தொலைதூரப் பகுதிகளில் கூட, சிறிய தடங்கல்களைத் தவிர, பெரிய விநியோகச் சவால்கள் எதுவும் ஏற்படவில்லை. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் மட்டும், டீசல் மற்றும் பெட்ரோல் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்கள் ரூ.75,000 கோடிக்கும் மேலாக நஷ்டத்தைச் சந்தித்தன. இது ஒரு புதிய சுத்திகரிப்பு நிலையத்தை உருவாக்குவதற்கான செலவுக்குச் சமமாகும். இந்தச் சுமையை அரசாங்கத்தின் கருவூலம் சுமந்தது. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.10 குறைத்ததன் மூலம், மக்கள் அதிக பாதிப்புக்குள்ளாகாமல் நாங்கள் உறுதி செய்தோம்.

 

நண்பர்களே,

போரின் இந்தக் காலத்தில், பிற நாடுகளுடனான இந்தியாவின் நட்புறவு விலைமதிப்பற்றதாக நிரூபணமானது. நெருக்கடிக்கு முன்பு, இந்தியா சுமார் 25 முதல் 26 நாடுகளிலிருந்து எரிபொருள் மற்றும் எரிசக்தியை இறக்குமதி செய்தது. ஆனால் நெருக்கடியின் போது, இந்தியாவின் ராஜதந்திரம் பிரகாசித்தது. பிற நாடுகளுடனான நமது வலுவான உறவுகள் எங்களுக்குப் பெரிதும் உதவின. இந்தியா 40க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்யத் தொடங்கியது. இந்தியா உலகிற்கு ஒரு தெளிவான செய்தியை அனுப்பியது: எங்களைப் பொறுத்தவரை, தேசிய நலனும் நமது குடிமக்களின் நலனுமே முதன்மையானது. குடிமக்களே தெய்வம் - இதுவே எங்கள் மந்திரம்.

நண்பர்களே,

நாடு இத்தகைய எதிர்பாராத சவாலை தற்செயலாக முறியடிக்கவில்லை. பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பின்பற்றப்பட்ட தொலைநோக்குப் பார்வை கொண்ட கொள்கைகளின் வெற்றியே இதற்குப் பின்னால் உள்ளது. இன்று, நாங்கள் ராஜஸ்தான் சுத்திகரிப்பு நிலையத்தைத் திறந்து வைக்கிறோம். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாங்கள் 2017ல் கையெழுத்திட்டோம். ஆனால் 2018 முதல் 2023 வரை, ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு இருந்தது. அவர்களின் ஒத்துழையாமையால், இங்கு பணிகள் ஏறக்குறைய முடங்கிக் கிடந்தன. ஆனால், மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே அரசு வந்தவுடன், பணிகள் வேகமாக முன்னேறின, இன்று அதை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறோம். எனது பணி முறையை நீங்கள் அறிவீர்கள் - நாங்கள் அடிக்கல் நாட்டும் திட்டங்களை, நாங்களே திறந்து வைப்போம். இந்த வகையில், இந்தியா தனது சுத்திகரிப்புத் திறனைத் தொடர்ந்து விரிவுபடுத்தியுள்ளது. அமெரிக்காவில் கடந்த 50 ஆண்டுகளில் ஒரு புதிய சுத்திகரிப்பு நிலையம் கூட கட்டப்படவில்லை. ஐரோப்பாவின் சுத்திகரிப்புத் திறன் சீராகக் குறைந்துள்ளது. இதற்கிடையில், இந்தியா உலகின் நான்காவது மிகப்பெரிய சுத்திகரிப்பு நாடாக மாறியுள்ளது. இதோடு நாங்கள் நின்றுவிடப் போவதில்லை, வரும் ஆண்டுகளில், இந்தத் திறன் மேலும் அதிகரிக்கும். இந்த முயற்சிகளே, நூற்றாண்டின் மிகப்பெரிய எரிசக்தி நெருக்கடியை எதிர்த்துப் போராடி, அதை வெல்ல இந்தியாவைச் சக்தியூட்டின.

நண்பர்களே,

உலகெங்கிலும் நிலவும் போர்களும் அமைதியின்மையும் நமது விவசாயிகளுக்கும் சவால்களை உருவாக்குகின்றன. தற்போதைய மேற்கு ஆசிய நெருக்கடி, வளைகுடா நெருக்கடி மற்றும் இதற்கு முன்னால் நடந்த உக்ரைன் போர் என அனைத்தும் உலகளவில் உரத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தின. உக்ரைன் போருக்குப் பிறகு, ஒரு மூட்டை யூரியாவின் விலை ரூ.3,000-க்கு மேல் உயர்ந்தது. ஆனால், நாங்கள் நமது விவசாயிகளுக்கு ஒரு மூட்டை யூரியாவை வெறும் ரூ.300க்கு மட்டுமே தொடர்ந்து வழங்கினோம். இதற்காக அரசு கருவூலத்திலிருந்து லட்சக்கணக்கான கோடிகளை மானியமாகச் செலவிட்டது. விநியோகச் சங்கிலிகள் பாதிக்கப்பட்டாலும், இந்தியா தீர்வுகளைக் கண்டது. அரசு மாற்றுப் பாதைகளைக் கண்டறிந்தது. உரம் வாங்குவதற்குப் பல நாடுகளில் உள்ள நமது தூதரகங்களுக்குச் சிறப்புப் பொறுப்புகள் வழங்கப்பட்டன. இறக்குமதியுடன் சேர்த்து, உள்நாட்டு உற்பத்தியையும் அதிகரித்தோம். இயற்கை விவசாயம் போன்ற மாற்று முறைகளையும் ஊக்குவித்தோம். மேலும், பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தைக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை எடுத்தோம்.

 

நண்பர்களே,

அதேபோல, நமது தொழில்களையும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களையும் நாங்கள் கவனித்துக் கொண்டோம். இந்த நிறுவனங்கள் செலவுகள் அதிகரிப்பால் நெருக்கடியைச் சந்தித்து வந்தன. எனவே, அவசரகால கடன் வரி உத்தரவாத புதிய கட்டத்தை அறிமுகப்படுத்தினோம். இந்தத் திட்டத்தின் கீழ், வங்கிகள் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 20 சதவீதம் வரை கூடுதல் கடன்களை வழங்கின. இந்தக் கடன்களுக்கு அரசு 100 சதவீதம் உத்தரவாதம் அளித்தது - இதுதான் மோடியின் உத்தரவாதம். இது சிறு தொழில்களுக்கும் குடிசைத் தொழில்களுக்கும் பெரும் பயனளித்தது. இத்தகைய முடிவுகளின் விளைவாக, இன்று நமது சிறு மற்றும் பெரிய தொழில்கள் பாதுகாப்பாக உணர்கின்றன.

நண்பர்களே,

இந்தியாவின் வலிமையின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருந்ததால், நமது அரசு தொடர்ந்து முடிவுகளை எடுத்துள்ளது. நமது குடிமக்களின் திறமைகள் மற்றும் ஞானத்தின் மீது நாங்கள் முழு நம்பிக்கை வைத்திருந்தோம். இன்று, 140 கோடி இந்தியர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடினமான காலங்களில் நாட்டின் பின்னால் உறுதியாக நின்றதற்காகவும், வதந்திகள், பயம் மற்றும் குழப்பங்களை எதிர்த்ததற்காகவும், உறுதியற்ற தன்மையைப் பரப்பும் சதித்திட்டங்களைத் தோற்கடித்ததற்காகவும் தேசத்தின் மக்களுக்கு நான் தலைவணங்குகிறேன். இந்த நம்பிக்கையே தேசத்தை முன்னோக்கி அழைத்துச் சென்றுள்ளது. இந்தியா தோல்வியடைவதைப் பார்க்க விரும்பியவர்களும், அது தோல்வியடையும் என்று கணிப்பு வெளியிட்டவர்களும் இன்று விரக்தியில் மூழ்கியிருப்பார்கள்.

நண்பர்களே,

வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தது மற்றும் அடிக்கல் நாட்டியதுடன், தாயின் நினைவாக ஒரு வன்னி மரக் கன்றை நடும் பாக்கியமும் எனக்குக் கிடைத்தது. ராஜஸ்தானில் கேஜ்ரி மரம் எவ்வளவு முக்கியமானது என்பதை நான் அறிவேன். பாலைவனம் பரவுவதைத் தடுப்பதில் இது மிக முக்கியப் பங்காற்றியுள்ளது. இந்த மரக்கன்று நடுதல் என்பது நமது பணி கலாச்சாரத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். நமது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் அதே வேளையில், நாம் முன்னேற்றத்தின் புதிய உயரங்களை எட்ட வேண்டும். இந்த தொலைநோக்குப் பார்வையுடன், நமது அரசு மாற்று எரிசக்தி ஆதாரங்களுக்காகப் பணியாற்றி வருகிறது. குறிப்பாக, சூரியக் கடவுளின் ஆசி பெற்ற ராஜஸ்தானில், உலகத்தரம் வாய்ந்த சூரிய மின்சக்தி பூங்காக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. 'பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டத்தின்' கீழ், ராஜஸ்தானில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் ஏற்கனவே சூரிய மின்சக்தியுடன் இணைக்கப்பட்டுள்ளன. பிரதமரின் விவசாயிகள் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு இயக்க திட்டத்தின் கீழ், ராஜஸ்தானில் உள்ள விவசாயிகளுக்கு 65,000க்கும் மேற்பட்ட சூரிய சக்தி பம்புகள் வழங்கப்பட்டுள்ளன.

 

நண்பர்களே,

எடுக்கப்படும் தீர்மானங்களுக்குப் பின்னால் உள்ள நோக்கம் தெளிவாக இருந்தால், மிகக் கடினமான இலக்குகளைக் கூட நிறைவேற்ற முடியும். இதுதான் பி.ஜே.பி  மற்றும் காங்கிரஸிற்கு இடையிலான மிகப்பெரிய வேறுபாடு.

நண்பர்களே,

ராஜஸ்தானின் தண்ணீர் பிரச்சினையைத் தீர்ப்பது இதற்கு மற்றொரு சிறந்த எடுத்துக்காட்டு. ராஜஸ்தானின் தண்ணீர் நெருக்கடியைத் தீர்க்க காங்கிரஸ் அரசாங்கங்கள் ஒருபோதும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், பி.ஜே.பி. பிளவுபடுத்தும் அரசியலைச் செய்வதில்லை. பி.ஜே.பி. 'தேசம் முதலில்' என்ற உணர்வுடன் செயல்படுகிறது. குஜராத்தில் நாங்கள் நீர் மேலாண்மைத் திட்டங்களில் பணியாற்றியபோது, ராஜஸ்தானுடன் தண்ணீரைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய கேள்வி எழுந்ததை நான் தெளிவாக நினைவுகூர்கிறேன். தண்ணீர் விவகாரத்திற்காக இந்தியாவின் பல மாநிலங்கள் தசாப்தங்களாகப் போராடி வருகின்றன. குஜராத் நர்மதை நீரைப் பகிர்ந்து கொள்ளுமா என்று ராஜஸ்தான் மக்கள் வியந்தனர். ஆனால், ராஜஸ்தானிலும் குஜராத்திலும் பி.ஜே.பி. அரசு இருந்தது எங்கள் பாக்கியம். அப்போது நான் குஜராத்தின் முதலமைச்சராக இருந்தேன், இங்கே சகோதரி வசுந்தரா அவர்கள் முதலமைச்சராக இருந்தார். நாங்கள் இருவரும் இணைந்து, மோதல்கள் இன்றி, சண்டைகள் இன்றி, போராட்டங்கள் இன்றி, நர்மதை நீரை ராஜஸ்தானுடன் பகிர்ந்து கொண்டோம். இன்று ராஜஸ்தானின் பல கிராமங்கள் அன்னை நர்மதையின் நீரைப் பெறுகின்றன. இந்தச் சாதனையைப் பற்றி சற்றுமுன்புதான் பஜன்லால் அவர்கள் நெகிழ்ச்சியுடன் பேசினார்.

 

சகோதர சகோதரிகளே,

இப்போது, ராஜஸ்தான் மற்றும் ஹரியானா ஆகிய இரு மாநிலங்களிலும் பி.ஜே.பி. அரசுகள் இருப்பதால், முதன்முறையாக பரஸ்பர உடன்பாட்டின் மூலம் தீர்வுகள் காணப்பட்டுள்ளன. ராஜஸ்தானும் ஹரியானாவும் இணைந்து ஷெகாவதி பகுதிக்குத் தண்ணீரைக்கொண்டு வரும். சமீபத்தில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் கீழ், ஹத்னிகுண்ட் அணையிலிருந்து நிலத்தடி குழாய்கள் வழியாக ராஜஸ்தானுக்குத் தண்ணீர் கொண்டு வரப்படும். இது சிகார், சுரு, ஜுன்ஜுனு மற்றும் ஒட்டுமொத்த ஷெகாவதி பிராந்தியத்திலும் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்குப் பயனளிக்கும். இந்தத் திட்டத்திற்காக சுமார் ரூ.34,000 கோடி செலவிடப்படும்.

நண்பர்களே,

எதிர்காலத்தில், மேல் யமுனை வடிநிலத்தில் ரேணுகா, லக்வார் மற்றும் கிஷாவ் அணைகள் கட்டி முடிக்கப்பட்டவுடன், ராஜஸ்தான் மாநிலம் இன்னும் கூடுதலாகப் பயனடையும். கிராமங்களுக்குக் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் பணிகளும் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. 'ராம்ஜல் சேது' திட்டம் இந்த தொலைநோக்குப் பார்வையின் ஒரு விளைவாகும். இதனுடன் சேர்த்து,  மக்கள் பங்கேற்புடன் தண்ணீர் சேமிப்பு இயக்கத்தில் ராஜஸ்தான் ஒரு முக்கியப் பங்காற்றி வருகிறது. இந்த இயக்கத்தின் கீழ், நாடு முழுவதும் சுமார் 25 லட்சம் உறிஞ்சும் குழிகள் கட்டப்பட்டுள்ளன. ராஜஸ்தானில் மட்டும் 1.25 லட்சத்திற்கும் அதிகமான உறிஞ்சும் குழிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை நீரைச் சேமிப்பதோடு, நிலத்தடி நீர் மட்டத்தையும் மேம்படுத்தி வருகின்றன. இந்த முயற்சிகளுக்காக மத்திய மற்றும் மாநில பி.ஜே.பி. அரசுகளும், ஷெகாவதி மக்களுக்கும் நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

இன்று, தேசம் எப்போது ஒரு தீர்மானத்தை எடுக்கும்போதும் அல்லது ஒரு இலக்கை நிர்ணயிக்கும்போதும், ராஜஸ்தான் அதன் மையத்தில்தான் இருக்கிறது. நவீன உள்கட்டமைப்புகள் இங்கே மிக வேகமாகக் கட்டப்பட்டு வருகின்றன. புதிய சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றன. இன்று, ஜெய்ப்பூர் மெட்ரோ இரண்டாம் கட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவும், ஜோத்பூர் விமான நிலையத்தின் புதிய முனையம் திறப்பு விழாவும் ராஜஸ்தானின் வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தி, அதற்குப் புதிய சிறகுகளை அளிக்கும். ஜெய்ப்பூர் மெட்ரோ இரண்டாம் கட்டம் கட்டி முடிக்கப்பட்டவுடன், ஜெய்ப்பூரின் மொத்த மெட்ரோ ரயில் பாதை நீளம் 50 கிலோமீட்டர்களைத் தாண்டும். கிழக்கு-மேற்கு மற்றும் வடக்கு-தெற்கு மெட்ரோ ரயில் பாதைகள் ஒன்றோடொன்று இணைக்கப்படும். இது உள்ளூர் மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவது மட்டுமின்றி, சுற்றுலாப் பயணிகளுக்கும் பெரும் வசதியை வழங்கும்.

நண்பர்களே,

வரும் காலங்களில், நாம் வளர்ச்சியின் புதிய பரிமாணங்களை எட்ட வேண்டும். 'இரட்டை இன்ஜின்' அரசாங்கத்திற்கு நீங்கள் தொடர்ந்து இதேபோல் ஆசி வழங்குவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இணைந்து, ராஜஸ்தானின் புதிய எதிர்காலத்தை நாம் கட்டமைப்போம். இந்த நம்பிக்கையுடன், இந்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பிற வளர்ச்சிப் பணிகளுக்காக ராஜஸ்தான் மக்களுக்கும், தேச மக்களுக்கும் மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடன் சேர்ந்து சொல்லுங்கள் -

பாரத மாதாவுக்கு ஜே!

ராஜஸ்தானின் வலிமையைக் காட்ட இரண்டு கைகளையும் உயர்த்தி முழக்கமிடுங்கள்!

 

பாரத மாதாவுக்கு ஜே!

பாரத மாதாவுக்கு ஜே!

பாரத மாதாவுக்கு ஜே!

மிக்க நன்றி.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
New Smart Drug RK-251 Developed as Replacement for Chemotherapy

Media Coverage

New Smart Drug RK-251 Developed as Replacement for Chemotherapy
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
The world is seeing India as a bright spot of growth and hope: PM Modi at Economic Times World Leaders Forum 2026
August 21, 2026
The world sees India as a bright spot for growth and hope: PM
Today, India is implementing next-generation reforms at the policy level and undertaking reforms at governance level: PM
Increasing production was met with punishment earlier but today, our government is providing incentives for boosting production
India has political stability and continuity in its policies: PM
Earlier, the approach of regulations was, 'prohibited unless permitted’; We are changing this approach and taking it towards 'permitted unless prohibited’: PM
The relationship between the government and citizens should be based on trust, not suspicion: PM
Today, we are shaping policies that are pro-people, pro-growth and pro-development: PM

World Leaders Forum का ये प्रतिष्ठित मंच, Business और Industry की दुनिया के सभी जाने माने दिग्गज, पॉलिसी मेकर्स, अन्य महानुभाव, देवियों और सज्जनों।

आप सबके बीच आकर के खुश होना बहुत स्वाभाविक भी है। इस साल समिट का फोकस Shared Future पर है। पिछले कुछ वर्षों में दुनिया ने अनेक उतार-चढ़ाव देखे हैं। और इन अनुभवों ने एक बात बहुत स्पष्ट कर दी है, कोई चाहे या ना चाहे, हर देश का भविष्य, उसका फ्यूचर, एक-दूसरे से जुड़ा हुआ ही है, Isolation में कुछ संभव नहीं है। इसीलिए Shared Futures की ये theme, आज और भी अधिक प्रासंगिक हो गई है। और भारत तो हमेशा से इसी भावना को लेकर चला है। जी-20 की अध्यक्षता में इसलिए ही भारत का मंत्र रहा, One Earth, One Family, One Future. Shared Future की ये भावना और इसके साथ जुड़ा दायित्वबोध, 21वीं सदी के इस विश्व की अनेक समस्याओं का समाधान देता है।

साथियों,

आज दुनिया में growth को लेकर के कई तरह की चिंताएं हैं। दुनिया ने बड़ा भयंकर एक रूप देखा है इन दिनों। Resources का वेपनाइजेशन हो रहा है। अविश्वास का वातावरण विश्व के लिए अनेक नई चुनौतियां लेकर के आ रहा है। लेकिन ऐसे समय में भी, दुनिया भारत को growth और hope के bright spot के रूप में देख रही है। भारत ने पिछले 10-12 साल में अपनी 25 करोड़ आबादी को गरीबी से बाहर निकाला है। इतना ही नहीं, अगर आने वाले दिनों की चर्चा करें, तो IMF का forecast है कि भारत दुनिया की fastest growing major economy बना रहेगा। और भारत निरंतर वो कदम उठा रहा है, जो उसके विकास को गति दे रहे हैं।

Friends,

अभी पिछले हफ्ते ही, 15 अगस्त को मैंने लाल किले से सप्त-धारा की सप्त-शक्तियों की बात की है। मैन्यूफैक्चरिंग, टेक्नोलॉजी और इनोवेशन, फूड प्रोसेसिंग, ग्रीन और ब्लू इकोनॉमी समेत, मैंने ऐसे सात सेक्टर्स की बात की है, जिन पर भारत का आज बहुत ज्यादा फोकस है। और इसलिए भारत आज, Policy level पर, नेक्स्ट जनरेशन reforms कर रहा है, ताकि हमारा future सुरक्षित हो। Governance पर reforms कर रहा है, Ease of Living के लिए reforms कर रहा है। पिछली बार जब मैं इसी मंच के माध्यम से आपसे जुड़ा था, तब भी मैंने कहा था, ये Reforms हमारे लिए Compulsion नहीं है। ये हमारा commitment है, ये हमारा conviction है।

साथियों,

2014 में, जब हमारी सरकार बनी, तो उसके बाद से ही रिफॉर्म्स ने कैसे देश की दिशा और दशा बदली है, मैं इसका एक बहुत दिलचस्प उदाहरण आपको देना चाहता हूं। यहां मौजूद शायद ही किसी को PLP के बारे में पता होगा, कोई है, जिसको PLP के बारे में पता है? अपना हाथ उठाएं। यहां इतने मीडिया के दिग्गज बैठे हैं, PLP आपको पता है? और आप सुनकर के हैरान हो जाएंगे। PLP यानी प्रोडक्शन लिंक्ड पनिशमेंट, इसके बारे में किसी को पता नहीं है। और एक दूसरा टर्म आपने जरूर सुना है PLI, ये ज्यादातर लोगों को पता होगा। PLI- यानी प्रोडक्शन लिंक्ड इंसेंटिव।

साथियों,

ये दोनों टर्म, भारत के दो अलग-अलग Time Period को डिफाइन करते हैं। आजकल Explainer का जमाना है, तो मैं आपको Explain करता हूं।

साथियों,

आज की युवा पीढ़ी को ये सुनकर हैरानी होगी, कि हमारे देश में एक समय ऐसा भी था, कि अगर कोई कंपनी तय लिमिट से ज्यादा प्रॉडक्शन कर दे, तो उसे पनिशमेंट दिया जाता था। ये पहले की लाइसेंस राज वाली सरकारों का, PLP यानी प्रोडक्शन लिंक्ड पनिशमेंट मॉडल था। ऐसे भी उदाहरण रहे हैं कि अगर किसी फैक्ट्री ने ज्यादा डिमांड देखते हुए ज्यादा प्रॉडक्शन कर दिया, तो उसे नोटिस भेज दिया जाता था। मजबूरी में वो कंपनी अपना प्रॉडक्ट मार्केट में बेचने के बजाय, उसे खुद ही नष्ट कर देती थी।

साथियों,

आज जो लोग Make In India और आत्मनिर्भर भारत अभियान का मजाक उड़ाते हैं, उनके पुरखों की सोच यही थी, PLP यानी प्रोडक्शन लिंक्ड पनिशमेंट। ऐसा करने के पीछे एक विशेष तरह की विकृत मानसिकता काम करती थी। ऐसी मानसिकता वाले लोग हमेशा चाहते थे कि जरूरी चीजों की किल्लत बनी रहे। देश के नागरिकों को अभाव में रखना उनकी पॉलिसी थी। वो चाहते थे कि जनता उनके सामने हाथ जोड़े, हाथ फैलाए, आप समझ गए मैं किन लोगों की बात कर रहा हूं। लोगों से हाथ जुड़वाने के बाद उपकार करना, उन सरकारों का तरीका था, इसलिए वो प्रोडक्शन लिंक्ड पनिशमेंट मॉडल पर चलते थे। आप कल्पना कर सकते हैं, ऐसे करके उन लोगों ने Employment Generation के बेसिक principal का गला घोंट दिया था। और हैरानी ये, इन लोगों के दरबारियों ने again I repeat, इन लोगों के दरबारियों ने, कभी इसके खिलाफ कोई आवाज नहीं उठाई।

साथियों,

हर reform की शुरुआत सबसे पहले, आपके सोचने के तरीके, आपके मानसिक, किस रेंज में आप काम कर रहे हैं, इस सोच के reform से ही होती है। जहां पहले production बढ़ाने पर पनिशमेंट मिलता था, वहीं आज हमारी सरकार production बढ़ाने पर incentive दे रही है। और आज PLI स्कीम की सक्सेस दुनिया देख रही है। सिर्फ इस एक योजना की वजह से, मैं सारी योजनाओं की बात नहीं करता हूं, एक की बात करता हूं, करीब ढाई लाख करोड़ रुपए का actual investment हुआ है। 22 लाख करोड़ रुपए से ज्यादा का production और sales हुई है। 15 लाख करोड़ रुपए से ज्यादा का exports हुआ है, और 14 लाख से ज्यादा direct और indirect jobs बनी हैं। और मैं फिर याद दिलाउंगा, ये आंकड़े सिर्फ एक स्कीम के हैं। आप सोचिए, पहले का लाइसेंस राज वाली सरकार का पनिशमेंट मॉडल जहां बेरोजगारी बढ़ाता था, वहीं आज का हमारा incentive मॉडल लाखों नई जॉब्स क्रिएट कर रहा है।

साथियों,

आज भारत में ये तेज विकास, ये तेज रिफॉर्म इसलिए हो रहे हैं, क्योंकि भारत में और जिसका अभी सत्य ने उल्लेख किया, political stability है, हमारी policy में continuity है। पहले देश में रिफॉर्म्स की बात करने वाले घोषणा तो कर देते थे, बाद में भूल जाते थे। लेकिन हमने रिफॉर्म्स को लेकर एक क्लियर रोडमैप बनाया। इस रोडमैप की प्रमुख दिशा रही है- गवर्नेंस लेवेल के रिफॉर्म्स हों! इसके लिए, आज 21वीं सदी के भारत में, हम सिर्फ regulations नहीं बदल रहे हैं, हम regulation की पूरी philosophy बदल रहे हैं। पहले regulations की अप्रोच थी- “Prohibited unless permitted.” यानी जब तक सरकार इजाजत ना दे, तब तक आप वो काम नहीं कर सकते। हम इस approach को बदलकर, “Permitted unless prohibited” की तरफ ले जा रहे हैं। यानी, जो काम कानून ने स्पष्ट रूप से मना नहीं किया है, उसके लिए हर कदम पर permission की कोई जरूरत नहीं होनी चाहिए। और इसके पीछे सोच बहुत सीधी है, सरकार और नागरिक के रिश्ते का आधार, Suspicion नहीं, trust होना चाहिए।

साथियों,

यही सोच आपको Jan Vishwas बिल में भी दिखाई देती है। मैं मानता हूं, हर procedural गलती को criminal offence मान लेना ठीक नहीं है। इसीलिए अनेक offences को decriminalise किया गया है। कई मामलों में जेल की जगह केवल आर्थिक penalty का प्रावधान किया गया है। Government और enterprise के रिश्ते में, हम इसी reform mindset को आगे बढ़ा रहे हैं। बीते वर्षों में 40 हजार से ज्यादा compliances हटाए गए हैं, 40 thousand. डेढ़ हजार से ज्यादा, 15 hundred, डेढ़ हजार से ज्यादा, पुराने और बेकार हो चुके कानून हमने खत्म किए, और जब इन सारे reforms को एक साथ देखते हैं, तो अंदाजा होता है, हमारी industries और businesses के कंधों से कितना बड़ा बोझ कम हुआ है।

साथियों,

गवर्नेंस रिफॉर्म्स की इस प्रक्रिया, उस पर हम निरंतर काम कर रहे है। अभी संसद के मॉनसून सत्र में हमने ‘बैंकर्स बुक एविडेंस बिल’ पारित किया है। और वो भी तब जब विपक्ष ने संसद में लगातार गतिरोध बनाया हुआ था। हमने देश की सेवा करने का काम रूकने नहीं दिया। अब इस कानून ने 19वीं सदी के अंग्रेजी कानून को रिप्लेस किया है। अब बैंकों के डिजिटल रिकॉर्ड्स की स्वीकार्यता को कानूनी मान्यता दी गई है। इससे कानूनी उलझनें कम होंगी, सिस्टम में पारदर्शिता होगी, Ease of Doing Business बढ़ेगा।

साथियों,

गवर्नेंस में रिफॉर्म का एक मतलब ये भी है कि सिस्टम ऐसे बनें, जिसमें एक-एक मानव जीवन और उसके समय के प्रति संवेदनशीलता हो। मैं रेलवे का उदाहरण देता हूं। हमारी रेलवेज में भी इसी अप्रोच के साथ काम हुआ है। आज साढ़े 6 हजार से ज्यादा रेलवे स्टेशनों पर इलेक्ट्रॉनिक इंटरलॉकिंग की व्यवस्था है। 10 हजार से ज्यादा लेवल क्रॉसिंग गेट्स को भी इंटरलॉकिंग से जोड़ा जा चुका है। इससे ह्यूमन एरर से होने वाले हादसों की आशंका बहुत कम हुई है।

साथियों,

जब 2014 में हमारी सरकार आई, तो करीब 9 हजार फाटक ऐसे थे जो Un-Manned थे। इन्हें हटाना कोई रॉकेट साइंस नहीं था। Un-Manned क्रॉसिंग्स की वजह से हजारों लोगों को अपनी जान गंवानी पड़ी, लेकिन पहले की सरकारों को इससे बहुत फर्क नहीं पड़ता था। हमने मिशन मोड में, गत दस वर्ष में, इन Un-Manned क्रॉसिंग्स को समाप्त कर दिया। हमने रोड ओवर ब्रिज और रोड अंडर ब्रिज बनाने की गति भी कई गुना बढ़ा दी। और इसी का नतीजा है कि 2014 के पहले के मुकाबले ट्रेन दुर्घटनाओं की संख्या में Ninety Percent तक की कमी आई है, 90, Ninety Percent. 12 साल पहले जहां एक साल में करीब डेढ़ सौ रेल दुर्घटनाएं होती थीं, वहीं अब इनकी संख्या घटकर 15-20 रह गई है। और हम इसे और कम से कम करने का प्रयास लगातार कर रहे हैं।

साथियों,

Railways में स्वच्छता भी गवर्नेंस रिफॉर्म का एक बड़ा उदाहरण है। एक समय था, जब रेल पटरियों पर गंदगी और human waste एक बड़ी समस्या हुआ करती थी। आज स्थिति पूरी तरह बदल गई है। 2014 से पहले हमारी ट्रेनों में जहां लगभग 12 हजार बायो-टॉयलेट्स लगाए गए थे, वहीं 2014 के बाद ट्रेनों में 3 लाख 60 हजार से ज्यादा बायो-टॉयलेट्स लगाए गए हैं। यानी, 97 प्रतिशत से ज्यादा बायो-टॉयलेट्स पिछले 12 वर्षों में लगे हैं। ये बदलाव सिर्फ सफाई का नहीं, यात्रियों की गरिमा, स्वच्छता और आधुनिक भारत के निर्माण की दिशा में गवर्नेंस का एक नया मॉडल है। ये करोड़ों यात्रियों को बेहतर अनुभव देने का अभियान भी है।

साथियों,

गवर्नेंस की क्वालिटी का एक और पैमाना, और वो पैमाना है - समय। जो प्रोजेक्ट शुरू हो, वो समय पर पूरा हो। और जो सर्विस लोगों को मिले, वो भी समय की कसौटी पर खरी उतरे। दिल्ली-मेरठ नमो भारत रैपिड रेल सिस्टम इसका बहुत अच्छा उदाहरण है। इस कॉरिडोर पर 160 किलोमीटर प्रति घंटे की रफ्तार से ट्रेनें चल रही हैं। ये हमारे देश में पहले कभी सोचा नहीं जा सकता था। अब तक 4 करोड़ से ज्यादा यात्री इसमें ट्रैवल कर चुके हैं। और इसका एक और अहम फैक्टर है, जिसकी चर्चा नहीं होती है। दिल्ली मेरठ नमो भारत रैपिड रेल की पंक्चुअलिटी 99.9 परसेंट है। वरना हम तो हर चीज में कहते हैं, लेट हो तो कहते थे, ये तो इंडियन टाइम है। वक्त बदला है, ये मैं छोटी-छोटी चीजें इसलिए बताता हूं, कि हमें अंदाज आए कि कितने बड़े व्यापक स्तर पर काम हो रहा है। इसी तरह, Delhi Metro की पंक्चुअलिटी। Delhi Metro की पंक्चुअलिटी 99.9 परसेंट है। और ये punctuality, New York, Hong Kong और Paris जैसे शहरों की Metro से करीब-करीब बराबर हो चुकी है। ये सिर्फ समय पर चलती हुई Metro और नमो रेपिड रेल की कहानी नहीं है, ये समय के साथ बदलते हुए भारत की पहचान है। मैं जानता हूं कि अभी भी, और र्मैं कोई इतने से संतोष मानकर बैठने वाला व्यक्ति नहीं हूं, अभी भी इस दिशा में हमें बहुत कुछ करना है, बहुत कुछ बाकी है, लेकिन हम लगातार कर रहे हैं। लेकिन एक शुरूआत तो हुई है और ये शुरुआत सराहनीय है।

साथियों,

हमारे रिफॉर्म्स रोडमैप का एक और बड़ा आयाम है- पॉलिसी लेवल पर होने वाले रिफॉर्म्स! आज हम ऐसी policies बना रहे हैं, जो pro-people हों, Pro-growth हों, pro development हों! पॉलिसीज़ देश और देश के लोगों की जरूरत के हिसाब से होनी चाहिए न कि पॉलिसीज़ बनाकर देश को उनके हिसाब से चलने को मजबूर होना पड़े! मैं आपको एक और Interesting उदाहरण देना चाहता हूं। कुछ साल पहले तक हमारे यहाँ देश का नक्शा बनाना भी गैर-कानूनी था, मैप बनाए तो गैर कानूनी था, आप जेल चले जाएंगे। बिना परमिशन के आप देश में मैपिंग का काम भी नहीं कर सकते थे। आप सोचिए, विदेशी सैटेलाइट टेक्नोलॉजी के जरिए भारत के किसी भी कोने को मैप कर सकती थी, लेकिन भारत में भारतीयों पर भारत का मैप बनाने पर पाबंदी लगी हुई थी।

साथियों,

आज टेक्नोलॉजी के इस दौर में, इस एक पाबंदी से कितने स्टार्टअप्स की हत्या हो सकती थी! कितने ideas implement होने से वंचित रह सकते थे! हमने इस व्यवस्था को भी बदला। हमने Geospatial डेटा का Deregulation किया और आज Geospatial डेटा कितने ही स्टार्टअप्स का आधार बन रहा है।

साथियों,

आज आप लगातार ड्रोन्स की उपयोगिता बढ़ते हुए देख रहे हैं। एग्रीकल्चर में, डिफेंस में, डिलिवरी में, शूटिंग में, कंटेंट क्रिएशन में, ये सब संभव ही नहीं होता, अगर सरकार ने इससे जुड़े नियमों में Reform नहीं किए होते। पहले देश में ड्रोन फ्लाइंग पूरी तरह नियमों में, बंधनों में जकड़ी हुई थी। हमने उसे बंधनों से आजाद किया, और आज भारत की ड्रोन इंडस्ट्री, एक अभूतपूर्व उड़ान के साथ आगे बढ़ रही है।

साथियों,

पहले border areas को लेकर सरकारों की सोच थी कि बॉर्डर पर roads और infrastructure बढ़ेगा, तो उसका फायदा दुश्मन भी उठा सकता है। हमने इस सोच को बदला। हमने कहा, Border infrastructure कमजोरी नहीं, देश की ताकत है। और इसीलिए आज border areas में roads, bridges और tunnels का network तेजी से बढ़ रहा है। सिर्फ 2024 और 2025 में ही, BRO के 250 infrastructure projects देश को समर्पित किए गए हैं। सोच बदली, तो border infrastructure की तस्वीर भी बदल गई।

साथियों,

एक उदाहरण न्यूक्लियर रिफॉर्म्स का भी है। एक ऐसे समय में, जब विकास पूरी तरह से energy dependent है, बंदिशों और प्रतिबंधों के कारण, देश अपने न्यूक्लियर potential का इस्तेमाल नहीं कर पा रहा था। हमने शांति बिल के जरिए इसमें भी बड़ा रिफॉर्म किया है। आज भारत में न्यूक्लियर एनर्जी में प्राइवेट सेक्टर के लिए रास्ता खुल चुका है। इसी तरह, हमने एक बड़ा पॉलिसी रिफॉर्म डिफेंस सेक्टर में भी किया। 200 साल के पहले जो व्यवस्था चली आ रही थी, उसे बदलकर हमने 40 से ज्यादा ordnance फैक्ट्रीज़ को मर्ज करके 7 फैक्ट्रीज़ बना दी। और उसका परिणाम हमें देखने को मिल रहा है। आज भारत अपनी रक्षा जरूरतों के लिए भी आत्मनिर्भर बन रहा है, और 2014 की तुलना में, हमारा डिफेंस एक्सपोर्ट 55 गुना बढ़ा है। और इसलिए, कई बार रिफॉर्म्स हमारे जीवन में इस तरह घुल-मिल जाते हैं कि हमारा उनकी तरफ ध्यान ही नहीं जाता। आप सोचिए, आपका कोई सामान्य दिन आज कैसे बीतता है। आप सुबह उठते हैं, फोन पर घर का सामान ऑर्डर कर देते हैं, और जब तक ऑफिस के लिए रेडी होते हैं, वो सारा सामान आपके घर आकर के पहुंच जाता है। आपकी गली के स्ट्रीट वेंडर से लेकर, आपकी गाड़ी के शो रूम तक, आपकी सारी पेमेंट्स, सिर्फ एक क्यूआर कोड स्कैन करके हो जाती है। अगर आपकी बेटी, किसी दूसरे शहर में पढ़ती है, तो आप फोन से उसे पैसे भेज सकते हैं, और वो पैसा, कुछ सेकंड्स में उसके पास भी पहुंच जाता है। कई बार तो बिटिया क्यूआर ही शेयर कर देती है कि ‘पापा-मां मैंने ये ड्रेस ले ली है, इसकी पेमेंट कर दीजिए, और आप उसकी शॉपिंग अपने घर बैठे-बैठे करवा देते हैं। ये चीजें Remarkable हैं, लेकिन अब ये कोई भारत के लोगों को कम से कम हैरानी नहीं होती, बाहर के लोग आते हैं, उनको आश्चर्य होता है, अच्छा ऐसे होता है। भारत के लोगों का रूटीन हो गया है। ये भारत के सामान्य मानवी के जीवन का हिस्सा बन चुका है। आप सोचिए, 2014 से पहले ऐसी कितनी ही बातें क्या पॉसिबल थीं?

साथियों,

भारत ने बीते 10-12 सालों में Ease of Living से जुड़े जो रिफॉर्म्स किए हैं, उसकी वजह से लोगों का, खासतौर पर हमारे मिडिल क्लास का जो जीवन बदला है, वो दुनिया के कई विकसित देशों में आज भी एक सपना ही है।

साथियों,

आज दुनिया का सबसे सस्ता डेटा भारत में है, हम सस्ते और अच्छे स्मार्टफोन्स बना रहे हैं। अभी सत्या ने उसका वर्णन किया। भारत दुनिया के fastest 5G rollouts करने वाले देशों में से एक है। हमने आधार को बैंकिंग, मोबाइल कनेक्टिविटी और सर्विसेज से जोड़कर, ई-के.वाई.सी और Digital Authentication जैसी सर्विसेज को पॉसिबल किया है। आज आपको अगर बैंक अकाउंट खोलना है, तो उसके लिए बैंक जाने तक की जरूरत नहीं है। सरकार ने बैंक को ही, आपके पास पहुंचा दिया है। आज चाहे कोई बिल जमा करना हो, कोई टिकट करानी हो, किसी सरकारी दफ्तर में जाने की जरूरत नहीं पड़ती, ये सारा काम ऑनलाइन हो जाता है। इनकम टैक्स की फाइलिंग का काम आसान हुआ है। ऐसी व्यवस्था बनी है कि फॉर्म में मैक्सिमम जानकारियां पहले से भरी होती हैं। आप ये इन्फॉर्मेशन वेरिफाई करते हैं, कुछ जोड़ना है तो जोड़ देते हैं, और सबमिट करते हैं, आपका काम पूरा हो जाता है। पहले जो रिफंड आने में महीनों लगते थे, अब वो भी कुछ ही दिनों में आ जाता है।

साथियों,

आज ई-संजीवनी की मदद से, शायद इसकी चर्चा अभी बहुत कम होती है, ई-संजीवनी की मदद से, गांव के दूर दराज के लोग भी, कहीं से भी डॉक्टर्स के साथ सीधी अपनी चर्चा करके अपने उपचार का रास्ता लेते हैं। और इससे जिन लोगों को अस्पताल जाने के लिए कई किलोमीटर का सफर करना पड़ता था, आज डॉक्टर उनके घर पर, उनकी स्क्रीन पर उपलब्ध है। अब तक ये आंकड़ा भी आपको जरूर आश्चर्य करेगा। यानी भारत ने टेक्नोलॉजी को किस प्रकार से अडाप्ट किया है, सामान्य मानवीय के जीवन को कैसे सरल किया है। अब तक ईं-संजीवनी के तहत करीब-करीब 50 करोड़ टेली-कंसल्टेशंस हो चुकी हैं।

साथियों,

आज भारत में Travel Experience बदल रहा है, भारत के नागरिकों की यात्राएं पूरी तरह बदल गई हैं। यहां इस हॉल में ऐसा व्यक्ति खोजना मुश्किल होगा, जिसने एयरपोर्ट पर डिजी यात्रा का इस्तेमाल ना किया हो। ऐसे ही आजकल बहुत सारा काम Seamless तरीके से हो रहा है। हाइवे पर फास्ट टैग चल रहे हैं, ताकि आप बिना रुके टोल देकर आगे बढ़ सकें। Ease of Living का सही अर्थ यही है। समय की बचत हो रही है, जीवन आसान हो रहा है, और करोड़ों लोग अपनी प्रगति पर फोकस कर पा रहे हैं।

साथियों,

Politics में अक्सर वही फैसले headlines बनते हैं, जिनका असर आज दिखाई दे, यानी उसकी उमर 24 घंटे हो। पहले की सरकारों ने इलेक्शन सामने देख कर भी घोषणाएं करने का फॉर्मूला अपनाया। लेकिन ऐसी घोषणाओं से देश नहीं बदला। देश बदलने वाले फैसले वो होते हैं, जिनका प्रभाव जमीन पर दिखे, जो वर्तमान और भविष्य, दोनों को ध्यान में रखकर के लिए गए होने चाहिए।

साथियों,

पीएम कुसुम योजना और पीएम सूर्यघर मुफ्त बिजली योजना इसका बहुत बड़ा यूनीक Example है। कुसुम योजना से किसानों को बिजली की चिंता से मुक्ति मिली है। और सूर्यघर योजना से मिडिल क्लास को बहुत फायदा हुआ है।

साथियों,

मैं ये जानता हूं कि अगर मैंने ये अनाउंस कर दिया होता कि आज से लाखों-लाख परिवारों के लिए बिजली मुफ्त है, तो सारा मीडिया, सारी स्क्रीन्स, सारे न्यूजपेपर्स, बड़ी-बड़ी हेडलाइन बनाकर के खबर दे देते कि मोदी जी ने आज अनाउंस कर दिया है। लेकिन हमने कुछ दूसरे अप्रोच से काम शुरू किया। हमने हर घर की छत पर एक सूरज उगाने की ठान ली, और आज देश के 50 लाख से ज्यादा परिवार, पीएम सूर्यघर मुफ्त बिजली योजना से जुड़े हैं। सरकार ने 22 हजार करोड़ रुपए से ज्यादा इन परिवारों को दिए हैं, ये सोलर सिस्टम लगाने के लिए, ताकि उनकी छत पर सोलर प्लांट लगाकर सोलर पावर पैदा की जा सके। अब ये परिवार, एक्स्ट्रा बिजली को, बिजली ग्रिड में बेचकर, पैसे भी कमा रहे हैं। खुद का बिल तो जीरो हुआ, कमाई भी होने लगी। इस योजना से लोगों के सपनों को भी विस्तार मिल रहा है। बिजली बिल कम हुआ है, तो अब घर में फ्रिज, कूलर, वाशिंग मशीन, टीवी जैसी चीजें लोग खरीदकर रखने लगे हैं। अब ये डर नहीं होता कि बिजली कटौती की वजह से दूध फट जाएगा, अब चिंता नहीं रहती है। अब स्कूल जाने वाले बच्चे रातभर चैन से सो पाते हैं। मैं फिर कहता हूं- इलेक्शन हो या ना हो, लेकिन ये सूर्यघर और उसकी रोशनी बनी रहेगी, इस प्लांट का फायदा, सालों तक देश के परिवारों को होता रहेगा।

साथियों,

आने वाले समय में Ease of Living और Ease of Doing Business का और विस्तार होगा। देश के Youth के लिए, नारीशक्ति के लिए, Farmers के लिए, गरीब और Middle Class के लिए, हमारी सरकार लगातार काम करती रहेगी, हमारी Reform Express और अधिक गति से आगे बढ़ने वाली है। विकसित भारत का लक्ष्य पूरा करने के लिए, हम पूरी प्रतिबद्धता के साथ काम करते रहेंगे। और मैं, मेरे लिए भारत का future अगर सुनिश्चित हो गया ना, तो दुनिया के future में भी स्थिरता लाने का बहुत बड़ा काम इसी धरती से होने वाला है। इस आत्मविश्वास के साथ भारत जितना स्टेबल होगा, भारत का future जितना सुरक्षित होगा, विश्व को सुरक्षत्व का एहसास देने की ताकत यहीं से पैदा होने वाली है। इस सामर्थ्य के साथ, इसी संकल्प के साथ, मैं एक बार फिर, आज के इस कार्यक्रम में मुझे आमंत्रित करने के लिए, Economic Times की पूरी टीम का हृदय से बहुत-बहुत धन्यवाद करता हूं। वन्दे मातरम् !