பிரதமர் திரு நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் திரு இமானுவேல் மேக்ரான் உடன் இன்று தொலைபேசி வாயிலாக உரையாடினார்.
பிரான்ஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி மற்றும் காட்டுத்தீக்கு பிரதமர் தமது அனுதாபங்களைத் தெரிவித்தார்.
பாதுகாப்பு ஒத்துழைப்பு திட்டங்கள் மற்றும் சிவில் அணு எரிசக்தி ஒத்துழைப்பு உள்ளிட்ட இரு தரப்பு முன்முயற்சிகள் பற்றி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
உலகளாவிய உணவு பாதுகாப்பு உள்ளிட்ட முக்கியமான புவிசார் அரசியல் சவால்கள் பற்றியும் அவர்கள் விவாதித்தனர்.
அண்மை ஆண்டுகளில் இந்திய- பிரான்ஸ் கேந்திர கூட்டு முயற்சிக்கு கிடைத்துள்ள வலிமைக்கு இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்ததோடு, புதிய துறைகளிலும் உறவை மேம்படுத்த தொடர்ந்து நெருக்கமாக பணியாற்ற இசைவு தெரிவித்தனர்.


