நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு இன்று முதல் முறையாகத் தலைமை தாங்கிய குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணனைப் பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றார். மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவருக்கும் இந்த நாள் பெருமை சேர்க்கும் நாள் என்று பிரதமர் குறிப்பிட்டார். "அவையின் சார்பாகவும், என் சார்பாகவும், உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளை, நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் " என்று திரு மோடி கூறினார்.
ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்த திரு ராதாகிருஷ்ணன் தனது வாழ்நாள் முழுவதையும் சமூக சேவைக்காக அர்ப்பணித்துள்ளார் என்று பிரதமர் குறிப்பிட்டார். "சமூக சேவையே அவரது நிலையான அடையாளமாக இருந்து வருகிறது. அரசியல் என்பது அவரது வாழ்க்கையின் ஒரு அம்சம் மட்டுமே, சேவை மனப்பான்மை அவரது வாழ்க்கையின் மையமாக உள்ளது," என்று திரு மோடி கூறினார். பொது நலனுக்கான அவரது நீண்டகால அர்ப்பணிப்பு, சமூக சேவையை மதிக்கும் அனைவருக்கும் உத்வேகமாக இருக்கும் என்று பிரதமர் மேலும் கூறினார்.
ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரியில் ஆளுநராகவும், துணைநிலை ஆளுநராகவும் அவர் ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க சேவையையும் அவர் பாராட்டினார். ஜார்க்கண்டில் உள்ள பழங்குடி சமூகங்களுடனான அவரது ஆழ்ந்த ஈடுபாட்டைப் பிரதமர் குறிப்பாகப் பாராட்டினார். மக்களின் தேவைகளைப் புரிந்துகொள்ள பெரும்பாலும் தொலைதூர கிராமங்களுக்குச் சென்று சிறிய குடியிருப்புகளில் தங்கினார். திரு ராதாகிருஷ்ணன் தனக்கென ஒரு வலுவான அடையாளத்தைக் கொண்ட "டாலர் சிட்டி"யில் பிறந்தாலும், அதன் ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை அல்லது பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த மக்களின் நலனில் கவனம் செலுத்துவதையே அவர் தேர்ந்தெடுத்ததாகப் பிரதமர் குறிப்பிட்டார்.
திரு சி பி ராதாகிருஷ்ணன் குழந்தையாக இருந்தபோது, அவிநாசி கோவிலில் உள்ள குளத்தில் மூழ்கிய போது மரணத்தை நெருங்கும் அனுபவம் ஏற்பட்டதாக பிரதமர் பகிர்ந்து கொண்டார். அவரும் அவரது குடும்பத்தினரும் தான் உயிர் பிழைத்ததை தெய்வீக அருள் என்று அடிக்கடி விவரிப்பதாக அவர் குறிப்பிட்டார். உயிருக்கு ஆபத்தான மற்றொரு சம்பவத்தைக் குறிப்பிட்டு, திரு எல் கே அத்வானி யாத்திரைக்கு சற்று முன் கோயம்புத்தூரில் நடந்த குண்டுவெடிப்பை நினைவுகூர்ந்த பிரதமர், இந்தக் குண்டுவெடிப்பில் சுமார் 60 முதல் 70 பேர் உயிரிழந்தனர், திரு ராதாகிருஷ்ணன் நூலிழையில் உயிர் தப்பினார் என்றார்
அவசரநிலையின் போது திரு ராதாகிருஷ்ணனின் துணிச்சலான நிலைப்பாட்டை நினைவுகூர்ந்த திரு மோடி, "ஜனநாயகத்திற்கான உங்கள் போராட்டத்தில் பல்வேறு பொது விழிப்புணர்வு திட்டங்களை செயல்படுத்தியதும் அடங்கும். மக்களை நீங்கள் ஊக்கப்படுத்திய விதம் அனைத்து ஜனநாயக ஆர்வலர்களுக்கும் உத்வேகத்தின் ஆதாரமாக இருந்து வருகிறது, தொடர்ந்து நீடிக்கும்" என்று கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினராகவும், மாநிலங்களவைத் தலைவராகவும், தற்போது குடியரசு துணைத்தலைவராகவும் ராதாகிருஷ்ணனின் பரந்த அனுபவம், அவைக்கும், நாட்டிற்கும் வழிகாட்டும் உத்வேகமாக இருக்கும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
Thiru CP Radhakrishnan Ji comes from a humble farming background and has devoted his entire life to public service: PM @narendramodi
— PMO India (@PMOIndia) December 1, 2025
Seva, Samarpan and Sanyam have been integral to the personality of Thiru CP Radhakrishnan Ji: PM @narendramodi
— PMO India (@PMOIndia) December 1, 2025


