மத்திய பிரதேச மாநிலம் சித்தியில் பேருந்து விபத்து காரணமாக உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 நிவாரணத் தொகையையும் அவர் அறிவித்துள்ளார்
ட்விட்டரில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:
“மத்திய பிரதேச மாநிலம் சித்தியில் ஏற்பட்ட பேருந்து விபத்து வேதனை அளிக்கிறது. இந்த சோகமான நேரத்தில், என் எண்ணங்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மத்திய பிரதேச அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.”
“மத்திய பிரதேச விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000மும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிவாரணத் தொகையாக வழங்கப்படும்.”
The bus accident in Sidhi, MP is anguishing. In this sad hour, my thoughts are with those who have lost their loved ones. I wish the injured a quick recovery. The MP Government is providing all possible assistance to all those affected: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 25, 2023


