ஹாங்சோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2022 ஆண்கள் குத்துச்சண்டை +92 கிலோகிராம் எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற நரேந்தர் பெர்வாலுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;
"குத்துச்சண்டை +92 கிலோகிராம் எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற நரேந்தர் பெர்வாலுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். அவரின் அடுத்தடுத்த முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்கள். அவர் இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கட்டும்!”
Heartiest congratulations to @berwal_narender for the well-deserved Bronze Medal in Boxing +92kg event. My best wishes to him for his endeavours ahead. May he keep making India proud! pic.twitter.com/LucjginfXi
— Narendra Modi (@narendramodi) October 3, 2023


