Government committed to ensuring a house to the homeless by 2022: PM Modi
Perpetrators of Pulwama attack will be made to pay heavy price: PM Modi
Projects launched in Yavatmal will help generate new jobs as well as empower the poor: PM

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மகாராஷ்டிராவின் யவத்மால் சென்றார். அம்மாநிலத்தில் பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கிவைத்தார். மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி, மகாராஷ்டிர முதலமைச்சர் திரு தேவேந்திர பட்நாவிஸ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின்கீழ், தேர்வு செய்யப்பட்ட சில பயனாளிகளுக்கு, வீடுகளுக்கான சாவிகளை பிரதமர் வழங்கினார். அப்போது பேசிய அவர், “பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின்கீழ், யவத்மாலில் சுமார் 14,500 புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அனைவருக்கும் வீடு வழங்குவது என்ற நமது இலக்கு 2022 ஆம் ஆண்டுக்குள் எட்டப்படும். இந்த கான்கிரீட் வீடுகள், அதில் வசிக்கும் மக்களிடம் உறுதியான சிந்தனையை ஏற்படுத்தும்” என்று தெரிவித்தார்.

மகாராஷ்டிரா மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ், மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கான சான்றிதழ்கள் / காசோலைகளையும் அவர் வழங்கினார்.

குழந்தைகளுக்கு கல்வி, இளைஞர்களுக்கு வாழ்வாதாரம், மூத்த குடிமக்களுக்கு மருத்துவ வசதி, விவசாயிகளுக்கு பாசன வசதி மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு போன்ற வளர்ச்சித் திட்டங்களின் பலன் அனைத்து மக்களையும் சென்றடையச் செய்யும் முயற்சியின் விரிவாக்கமாகவே யவத்மால் நிகழ்ச்சி நடத்தப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

ரூ.500 கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். அஜ்னி (நாக்பூர்) – புனே இடையிலான ஹம்சஃபார் ரயில் சேவையையும் அவர் காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தார். நாட்டின் வளர்ச்சிக்கு இணைப்பு வசதிகள் அவசியம் என்று வலியுறுத்திய அவர், யவத்மாலில் தொடங்கப்பட்ட சாலை மற்றும் ரயில்வே திட்டங்கள் அந்த சுற்று வட்டாரத்தில் உள்ள பகுதிகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும் என்றார்.

அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர், “புல்வாமா தாக்குதல் காரணமாக நாம் அனைவரும் மிகுந்த துயரமும், கோபமும் அடைந்துள்ளோம். மகாராஷ்டிராவைச் சேர்ந்த இரண்டு வீரப்புதல்வர்களும் நாட்டிற்காக தங்களது இன்னுயிரை ஈந்துள்ளனர். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு நமது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். வீரர்களின் தியாகங்கள் ஒருபோதும் வீண்போகாது, எத்தகைய பதிலடி நடவடிக்கையை எந்த நேரத்தில், எந்த இடத்தில், எந்த விதத்தில் மேற்கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்வதற்கு நமது பாதுகாப்பு படையினருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தேசவளர்ச்சி தொடர்பாக நாம் காணும் கனவுகளை நிறைவேற்ற முடிகிறது என்றால், அதற்கு நமது துணிச்சல் மிக்க வீரர்களின் தியாகமே காரணம்” என்று தெரிவித்துள்ளார்.

ரத்த சிவப்பு அணு குறைபாடு தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ஏதுவாக சந்திராபூரில் ஆராய்ச்சி மையம் ஒன்று அமைக்கப்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார்.

 

சஹஸ்த்ராகுண்ட் ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளியையும், இந்த நிகழ்ச்சியில் பிரதமர் தொடங்கிவைத்தார். இந்தப் பள்ளி வளாகம், சுமார் 15 ஏக்கர் பரப்பளவில், அனைத்து நவீன வசதிகளும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளி பழங்குடியின குழந்தைகளின் விருப்பங்களை பூர்த்தி செய்வதாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். பழங்குடியினர் பகுதிகளில் 1000 ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளை அமைப்பது என்ற தமது திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் பள்ளி அமைக்கப்பட்டுள்ளது என பிரதமர் குறிப்பிட்டார்.

 

“பழங்குடியின மக்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக, அனைவருக்கும் வங்கி சேவை முதல், வனப்பகுதி மூலம் வருவாய் ஈட்டுவதற்கான திட்டத்தையும் செயல்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். அனைவருக்கும் வங்கிசேவை திட்டம், ஏழை மக்களுக்கு உள்ளார்ந்த நிதி சேவைகளைப் பெற உதவியதைப் போல, சிறிய அளவிலான வனபொருட்கள் உற்பத்தி மூலம் ஏழைகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்க வன்தன் திட்டம் உதவிகரமாக உள்ளது. பழங்குடியின மக்களின் உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க ஏதுவாக வன உற்பத்திப் பொருட்களை மதிப்பு கூட்டுவதற்கான வன்தன் மையங்களையும் அமைத்து வருகிறோம். மூங்கில் மற்றும் அதிலிருந்து உற்பத்தி செய்யும் பொருட்கள் மூலம் பழங்குடியின மக்களுக்கு வருவாய் கிடைக்கச் செய்யும் நோக்கில், மர வகைகளின் பட்டியலில் இருந்து மூங்கிலை ஏற்கனவே நீக்கியிருக்கிறோம்” என்றும் பிரதமர் தெரிவித்தார்.

 

சுதந்திரப் போராட்டத்தின் போது பழங்குடியின தலைவர்கள் செய்த தியாகத்தை நினைவு கூர்ந்த பிரதமர், நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் மூலம் அவர்களது நினைவைப் போற்றி வருவதாகவும் தெரிவித்தார்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
The $67-Billion Vote Of Confidence: Why World’s Big Tech Is Betting Its Future On India

Media Coverage

The $67-Billion Vote Of Confidence: Why World’s Big Tech Is Betting Its Future On India
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister commends the outstanding speech delivered by Home Minister in Lok Sabha
December 10, 2025

Prime Minister Shri Narendra Modi commended the outstanding speech delivered by Home Minister Shri Amit Shah in Lok Sabha today.

In his address, the Home Minister presented concrete facts that underscored the diverse aspects of India’s electoral process and the enduring strength of the nation’s democracy.

In a post on X, Shri Modi wrote:

“An outstanding speech by Home Minister Shri Amit Shah Ji. With concrete facts, he has highlighted diverse aspects of our electoral process, the strength of our democracy and also exposed the lies of the Opposition.”