பிரதமர் திரு நரேந்திர மோடி, தமது 75-வது பிறந்த தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்த குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். 140 கோடி குடிமக்களின் அன்பு மற்றும் ஒத்துழைப்புடன் வலிமையான, திறன்மிக்க, தற்சார்பு இந்தியாவை கட்டமைக்க நாம் என்றும் அர்ப்பணிப்புடன் இருப்போம். அந்த வகையில், உங்களுடைய தொலைநோக்குப் பார்வைகளும் சிந்தனைகளும் எங்களுக்கு மிகவும் ஊக்கமளிப்பதாக திரு மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"மதிப்புக்குரிய குடியரசுத்தலைவர் அவர்களே, உங்கள் நல்வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. 140 கோடி நாட்டு மக்களின் அன்பு மற்றும் ஒத்துழைப்புடன், வலிமையான, திறன்மிக்க, தற்சார்பு இந்தியாவை கட்டமைக்க நாம் என்றும் அர்ப்பணிப்புடன் இருப்போம். அந்த வகையில், உங்களுடைய தொலைநோக்குப் பார்வைகளும் சிந்தனைகளும் எங்களுக்கு மிகவும் ஊக்கமளிக்கின்றன."
आपकी शुभकामनाओं के लिए बहुत-बहुत धन्यवाद और आभार माननीय @rashtrapatibhvn जी। 140 करोड़ देशवासियों के स्नेह और सहयोग से हम सशक्त, समर्थ और स्वावलंबी भारतवर्ष के निर्माण के लिए सदैव समर्पित रहेंगे। इस दिशा में आपके विजन और विचार हमारे लिए बहुत प्रेरणादायी हैं। https://t.co/xggt5teUg0
— Narendra Modi (@narendramodi) September 17, 2025


