நாடு முழுவதும் உள்ள மக்கள் 'தூய்மையே சேவை' இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இது கூட்டுப் பொறுப்புணர்வையும், தேசியப் பெருமிதத்தையும் பிரதிபலிக்கும் ஒரு உத்வேகமூட்டும் முன்னெடுப்பு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியதாவது:
"தூய்மை தொடர்பான இந்த முன்னெடுப்பு மிகுந்த உற்சாகம் அளிக்கிறது. இந்த இயக்கத்தில் அதிக எண்ணிக்கையில் மக்கள் இணைந்து இதனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.
swachhatahiseva.gov.in”
स्वच्छता से जुड़ी यह पहल बहुत उत्साहित करने वाली है। मेरा आह्वान है कि अधिक से अधिक लोग इस अभियान से जुड़ें और इसे सफल बनाएं।https://t.co/3dRWSUiDjy pic.twitter.com/xfCzdepe2C
— Narendra Modi (@narendramodi) September 23, 2025


