வீடுகள் தோறும் மூவண்ணக்கொடி என்ற கூட்டான இயக்கத்தின் ஒரு பகுதியாக குடிமக்கள் தங்களின் சமூக ஊடக காட்சிப்படத்தை மூவண்ணக்கொடியாக மாற்றுமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;
“ஆகஸ்ட் 2-ம் நாளான இன்று சிறப்புமிக்கது! சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப்பெருவிழாவை நாம் கொண்டாடும் தருணத்தில் நமது மூவண்ணக்கொடியைக் கூட்டு இயக்கமாக கொண்டாடுவதற்கு #வீடுகள்தோறும்மூவண்ணக்கொடி என்பதற்கு நமது நாடு தயாராகியுள்ளது. எனது சமூக ஊடக பக்கங்களின் காட்சிப்படத்தை நான் மாற்றியிருக்கிறேன். இதையே நீங்கள் அனைவரும் செய்யுமாறு வலியுறுத்துகிறேன்.”
It is a special 2nd August today! At a time when we are marking Azadi Ka Amrit Mahotsav, our nation is all set for #HarGharTiranga, a collective movement to celebrate our Tricolour. I have changed the DP on my social media pages and urge you all to do the same. pic.twitter.com/y9ljGmtZMk
— Narendra Modi (@narendramodi) August 2, 2022


