சுற்றுச்சூழல் பொறுப்பை நோக்கி மக்களை ஊக்குவிக்கும் விதமாக , வனப் பெருவிழா கொண்டாட்டங்களில் மதிப்புமிக்க நீதிபதிகள் உற்சாகமாகப் பங்கேற்றதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பாராட்டு தெரிவித்தார்.
தங்கள் தாய்மார்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மரங்களை நடுவதை தனிநபர்கள் ஊக்குவிக்கும் நோக்கில், நாடு தழுவிய முயற்சியான தாயின் பெயரால் ஒரு மரக்கன்று நடும் இயக்கத்தில், அவர்களின் ஈடுபாடு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
தில்லி அமைச்சர் திரு மஞ்சிந்தர் சிங் சிர்சாவின் சமூக ஊடகப்பதிவுக்கு பதிலளித்து,திரு மோடி கூறியிருப்பதாவது:
"வன மஹோத்சவத்தில் மதிப்புமிகு நீதிபதிகள் பங்கேற்பது அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும். இது 'தாயின் பெயரால் ஒரு மரக்கன்று' பிரச்சாரத்திற்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று நான் நம்புகிறேன்."
सर्वोच्च न्यायालय के माननीय न्यायाधीशों की गरिमामयी उपस्थित में आज वन महोत्सव का कार्यक्रम संपन्न हुआ।
— Manjinder Singh Sirsa (@mssirsa) July 19, 2025
कार्यक्रम में चीफ जस्टिस ऑफ इंडिया, माननीय जस्टिस भूषण रामकृष्ण गंवई जी, जस्टिस सूर्यकांत शर्मा जी, जस्टिस विक्रमनाथ जी, जस्टिस एम.एम. सुंदरेश जी, जस्टिस पी. श्री. नरसिम्हा… pic.twitter.com/uRCXVoHxxR


