பகிர்ந்து
 
Comments
296கி.மீ நான்குவழி விரைவுச்சாலை, ரூ.14,850 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது
இந்த விரைவுச்சாலை, இப்பகுதியின் போக்குவரத்து இணைப்பு வசதி மற்றும் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும்
“உத்தரப்பிரதேச விரைவுசசாலை திட்டங்கள், மாநிலத்தில் புறக்கணிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை இணைக்கிறது“
“உத்தரப்பிரதேசத்தின் அனைத்துப் பகுதிகளும், புதிய கணவுகள் மற்றும் புதிய உறுதிப்பாட்டுடன் முன்னேற்றத்தை நோக்கிச் செல்ல ஆயத்தம்“
“முன்னேறிய மாநிலங்களைவிட சிறப்பாக செயல்படுவதால், நாட்டில் உத்தரப்பிரதேசத்தின் அடையாளம் மாறி வருகிறது“
“குறித்த காலத்திற்கு முன்பாகவே திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது, மக்கள் தீர்ப்பு மற்றும் நம்பிக்கையை மதிக்கிறோம்“
“நமது சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுகூர்வதோடு, அடுத்த மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வதன் மலம் புதிய உறுதிப்பாட்டிற்கான சூழலை உருவாக்குவோம்“
“நாட்டிற்கு ஊறு விளைவிக்கும் அம்சங்கள், நாட்டின் வளர்ச்சிப் பயணத்தைப் பாதிக்கும் அனைத்து அம்சங்களையும் புறந்தள்ளுவோம்“
“இரட்டை-எஞ்சின் அரசுகள் இலவசம் என்ற குறுக்குவழியை பின்பற்றாமல், ‘ரெவ்ரி‘ கலாச்ச
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மாநில அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நாட்டின் பெயரை எப்போதும் ஒளிமயமாக்கி வருகிறது“ என்றும் அவர் கூறினார்.

பிரதமர் திரு.நரேந்திரமோடி, உத்தரப்பிரதேசத்தின் ஜலோன் தாலுகாவிற்குட்பட்ட ஒராய் கிராமத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், புண்டேல்கண்ட் விரைவுச்சாலையை, திறந்துவைத்தார்.  உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மாநில அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர்,  புண்டேல்கண்ட் பகுதி, கடின உழைப்பு, வீரம் மற்றும் கலாச்சார புகழ்பெற்ற பகுதி என்றார்.  “எண்ணற்ற போர் வீரர்களை உருவாக்கிய இந்த பூமி, இந்தியாவுக்கான அர்ப்பணிப்பு ரத்தமாக ஓடுவதுடன், அவர்களது வீரம் மற்றும் உள்ளூர் புதல்வர்கள் மற்றும் புதல்விகளின் கடின உழைப்பு ஆகியவை , நாட்டின் பெயரை எப்போதும் ஒளிமயமாக்கி வருகிறது“ என்றும் அவர் கூறினார். 

புதிய விரைவுச்சாலையால் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பற்றிக் குறிப்பிட்ட பிரதமர்,  “புண்டேல்கண்ட் விரைவுச்சாலையால், சித்ரகூட் பகுதியிலிருந்து தில்லி செல்வதற்கான பயண நேரம் 3-4 மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது, அதைவிட இந்த சாலையால் அதிக பலன் ஏற்படும்.  இந்த விரைவுச்சாலை, வாகனங்கள் அதிக வேகத்தில் செல்ல வகை செய்வதோடு மட்டுமின்றி, புண்டேல்கண்ட் முழுவதும் தொழில் வளர்ச்சியை விரைவுபடுத்தும்“ என்றும் தெரிவித்தார்.  

இதற்கு முன்பு, நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகள் மற்றும் நகரப் பகுதிகளில் மட்டுமே பெரிய அளவிலான கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற உணர்வுடன், தொலைதூர மற்றும் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளில் கூட இதுவரை கண்டிராத இணைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.   இந்த விரைவுச்சாலை காரணமாக, இப்பகுதியில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் சுய-வேலைவாய்ப்புக்கான  வாய்ப்புகள் உருவாகும் என்றார்.   உத்தரப்பிரதேசத்தின் இணைப்புத் திட்டங்கள், கடந்த காலங்களில் புறக்கணிக்கப்பட்ட பகுதிகள் என்றும் அவர் கூறினார்.  உதாரணமாக,  புண்டேல்கண்ட்,  சித்ரகூட், பாண்டா, மஹோபா, ஹமீர்பூர், ஜலோன், அரையா மற்றும் எடாவா ஆகிய ஏழு மாவட்டங்கள் வழியாக, விரைவுச்சாலை கடந்து செல்கிறது.  அதேபோன்று, பிற விரைவுச்சாலைகளும், மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளையும் இணைப்பதோடு,   “உத்தரப்பிரதேசத்தின் மூலை முடுக்குகள் அனைத்தும் புதிய கனவுகள் மற்றும் புதிய உறுதிப்பாட்டுடன், முன்னேற்றத்தை நோக்கிச் செல் தயாராக உள்ளன“.  இரட்டை-எஞ்சின் அரசு, இந்த திசையை நோக்கி புத்தெழுச்சியுடன் பணியாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.  

மாநிலத்தின் விமானப் போக்குவரத்து இணைப்பு வசதி பற்றிக் குறிப்பிட்ட பிரதமர்,   பிரயாக்ராஜில் புதிய விமான முனையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.  குஷிநகரில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டிருப்பதுடன் நொய்டாவின் ஜேவாரிலும் புதிய விமான நிலையப் பணிகள் நடைபெற்று வருவதுடன், மேலும் பல நகரங்கலும் விமானப் போக்குவரத்து மூலம் இணைக்கப்படு உள்ளதாகக் கூறினார்.   இது, சுற்றுலா மற்றும் பிற வளர்ச்சி வாய்ப்புகளுக்கு உத்வேகம் அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.  

இப்பகுதியில் உள்ள பல்வேறு கோட்டைகளை(அரண்மனைகள்)ச் சுற்றி வரக்கூடிய, சுற்றுலா திட்டத்தை உருவாக்குமாறு, மாநில முதலமைச்சரை பிரதமர் கேட்டுக் கொண்டார்.  மேலும், கோட்டை சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யுமாறும் முதலமைச்சரை பிரதமர் கேட்டுக் கொண்டார்.  

உத்தரப்பிரதேசத்தில் சரயு கால்வாய் திட்டத்தை நிறைவேற்றி முடிக்க 40 ஆண்டுகள் ஆனதுடன், கோரக்பூர் உரத் தொழிற்சாலை 30 ஆண்டுகளாக மூடிக் கிடந்ததைதையும்,  அர்ஜுன் அணைக்கட்டு திட்டத்தை முடிக்க 12ஆண்டுகளும் ஆன நிலையில், அமேதி துப்பாக்கித் தொழிற்சாலைக்கு, பெயர்ப் பலகை மட்டுமே வைக்கப்பட்டிருந்தது, ரேபரேலி ரயில் பெட்டித் தொழிற்சாலையில், ரயில்பெட்டிகளுக்கு பெயின்ட் மட்டுமே அடிக்கப்பட்டு வந்தது;  தற்போது கட்டமைப்புத் திட்டப் பணிகள் மிக  கவனத்துடன் நடைபெறுவதுடன்,  சிறந்த மாநிலங்களைவிட  சிறப்பான முறையில் மேற்கொள்ளப்படுகிறது.  நாட்டில் உத்தரப்பிரதேசத்தின் அடையாளம் மாறி வருகிறது.  

பணிகளின் வேகம் மாறி வருவது பற்றிக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, இரட்டை ரயில்பாதை பணிகள், ஆண்டுக்கு 50 கிலோமீட்டரிலிருந்து 200கிலோமீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.  அதேபோன்று,  உத்தரப்பிரதேசத்தில் உள்ள பொது சேவை மையங்களின் எண்ணிக்கை 2014-ல் 11ஆயிரமாக இருந்த நிலையில்,  தற்போது 1லட்சத்து 30ஆயிரம் பொது சேவை மையங்கள் உள்ளதாகவும் கூறினார்.  12 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்த உத்தரப்பிரதேசத்தில் தற்போது 35 மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருவதுடன்,  மேலும் 14கல்லூரிகளுக்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.  

நாட்டின் வளர்ச்சித் திட்டப் பணிகளின் வேகம் தற்போது, இரண்டு முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு நடைபெறுவதாக பிரதமர் தெரிவித்தார்.  ஒன்று நோக்கம், மற்றொன்று ஒழுக்கம்.   நாட்டின் தற்போதைய தேவைகளுக்கேற்ப மட்டுமின்றி, எதிர்காலத்திற்கு ஏற்பவும் புதிய வசதிகளை உருவாக்கி வருகிறோம்.   உத்தரப்பிரதேசத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள், நிர்ணயிக்கப்பட்ட கால வரம்புக்குள்  முடிக்கப்பட்டிருக்கின்றன என்றும் தெரிவித்தார்.   பாபா விஸ்வநாத் கோவில் வளாகம் புதுப்பிப்பு, கோரக்பூர் எய்ம்ஸ்,  தில்லி-மீரட் விரைவுச்சாலை மற்றும் புண்டேல்கண்ட் விரைவுச்சாலை ஆகியவை இதற்கு உதாரணம் என்பதோடு,  தற்போதைய ஆட்சிக் காலத்திலேயே அடிக்கல் நாட்டப்பட்டு, நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.   திட்டப்பணிகளை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பாகவே முடிப்பதன் மூலம்,  மக்கள் தீர்ப்பு மற்றும் அவர்களது நம்பிக்கையை மதித்து செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.   வரவிருக்கும் சுதந்திர தினத்தையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளதற்காக மக்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.   நமது சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுகூர்வதோடு, அடுத்த ஒரு மாதத்தில் புதிய உறுதிப்பாட்டுக்கான சூழலை உருவாக்கும் என்றும் அவர் கூறினார். 

ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பாக, பெருமளவு சிந்தித்து, கொள்கைகளை உருவாக்குவது,  நாட்டின் வளர்ச்சியை மேலும் விரைவுபடுத்தும்.  நாட்டிற்கு ஊறு விளைவிக்கக்கூடிய, நாட்டின் வளர்ச்சியை பாதிக்கக்கூடிய அனைத்து அம்சங்களையும் புறக்கணிப்போம்.   ‘அமிர்த காலம்‘  ஒரு அரிய வாய்ப்பு என்பதால், நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்வதற்கான இந்த வாய்ப்பை நாம் தவறவிட்டுவிடக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.  

நாட்டில் இலவசங்களை வழங்கி வாக்குக் கோரும் கலாச்சாரம் பற்றியும் பிரதமர் குறிப்பிட்டார்.   இதுபோன்ற இலவச கலாச்சாரம், நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார்.  இதுபோன்ற இலவச கலாச்சாரம் குறித்து மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.  இதுபோன்ற இலவச கலாச்சாரம், புதிய விரைவுச் சாலைகளையோ, புதிய விமான நிலையங்களையோ, பாதுகாப்பு தொழில் வழித்தடங்களையோ உங்களுக்கு(மக்களுக்கு) ஏற்படுத்தாது.  சாமான்ய மக்களுக்கு இலவசங்களைக் கொடுத்து, வாக்குகளைப் பெறலாம் என நினைக்கிறன்றனர் என்றும் அவர் குறை கூறினார்.  இத்தகைய முயற்சிகளை அனைவரும் ஒன்றினைந்து முறியடிப்பதோடு, நாட்டின் அரசியலில் இருந்து இலவச கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.  தற்போதைய ஆட்சியில், மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட வீடுகள், ரயில் பாதைகள், சாலைகள் மற்றும் கட்டமைப்பு வசதிகள், பாசனம், மின்சாரத் திட்டங்களை உருவாக்கி, இலவசங்களை ஒழிக்க கவனம் செலுத்தப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.  ‘‘இரட்டை-எஞ்சின் அரசுகள், இலவசம் என்ற குறுக்குவழியை பின்பற்றாமல், கடும் உழைப்பு மூலம் சேவையாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.  

சமச்சீரான வளர்ச்சி பற்றிக் குறிப்பிட்ட பிரதமர்,  இதற்கு முன்பு புறக்கணிக்கப்பட்ட மற்றும் சிறு நகரங்களையும் வளர்ச்சித் திட்டங்கள் சென்றடைந்துள்ளதன் மூலம்,  சமூக நீதி நனவாகியிருப்பதாக பிரதமர் கூறினார்.   இதற்கு முன் உதாசீனப்படுத்தப்பட்ட இந்தியாவின் கிழக்குப் பகுதிகள் மற்றும் புண்டேல்கண்ட் பகுதிகளில் நவீன கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது தான் சமூக நீதி.   பின்தங்கிய மாவட்டங்கள், இதற்கு முன்பு கைவிடப்பட்ட நிலையில், தற்போது வளர்ச்சியைக் கண்டு வருகின்றன.  ஏழைகளுக்கு நவீன கழிவறை வசதி,  கிராமங்களுக்கு இணைப்புச் சாலை மற்றும் குடிநீர் குழாய் இணைப்பு வசதிகளை உருவாக்குவது தான் சமூக நீதி என்றும் அவர் தெரிவித்தார்.   புண்டேல்கண்ட் பகுதியின் மற்றோரு சவாலை எதிர்கொள்ளவும் அரசு பணியாற்றி வருகிறது.  அனைத்து வீடுகளுக்கும் குழாய் வழி குடிநீர் வழங்குவதற்கான ஜல்ஜீவன் இயக்கம்  பற்றியும் அவர் விவரித்தார்.   

ரதோலி அணை, பவானி அணை, மஜ்கவுன்-சில்லி தெளிப்புநீர் பாசனத் திட்டம்  போன்றவை, புண்டேல்கண்ட் பகுதியில் ஓடும் ஆறுகளின் தண்ணீரை, உள்ளூர் மக்களுக்கு அதிகளவில் கொண்டு செல்லும் முயற்சி என்றும் பிரதமர் பட்டியலிட்டார்.   கென்-பெட்வா இணைப்புத் திட்டம்,  இப்பகுதி மக்களின் வாழ்க்கையை மாற்றும் என்றும் அவர் கூறினார்.  

ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 75 அமிர்தகால நீர்நிலைகளை உருவாக்க, புண்டேல்கண்ட் மக்கள் பங்களிப்பு வழங்குமாறும் பிரதமர் வலியுறுத்தினார். 

சிறு மற்றும் குடிசைத் தொழில்களை வலுப்படுத்துவதற்கான இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் பங்களிப்பு பற்றிக் குறிப்பிட்ட பிரதமர்,  பொம்மைத் தொழிலின் வெற்றியை சுட்டிக்காட்டினார்.   அரசு மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக,  பொம்மைகள் இறக்குமதி வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.  இது, ஏழைகள், நலிந்த பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், தலித்துகள் மற்றும் பெண்களுக்கு பெரிதும் பலனளிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.  

விளையாடுடுத் துறையில் புண்டேல்கண்ட் பகுதியின் பங்களிப்பு பற்றியும் பிரதமர் குறிப்பிட்டார்.   இப்பகுதியைச் சேர்ந்த மண்ணின் மைந்தன் மேஜர் தியான்சந்த்-தின் பெயரில் மிகப்பெரிய விளையாட்டு கவுரவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.   இப்பகுதியைச் சேர்ந்த சர்வதேச  தடகள வீரர் சாய்லி சிங்,  20 வயதிற்குட்பட்டோருக்கான தடகள சாம்பியன் போட்டியில், நாட்டிற்கு பெருமை சேர்த்திருப்பதாகவும் அவர் கூறினார்.  

புண்டேல்கண்ட் விரைவுச்சாலை

சாலைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான முக்கிய அம்சமாக, நாடு முழுவதும் இணைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு உறுதி பூண்டுள்ளது.  அதன் ஒரு முயற்சியாக, புண்டேல்கண்ட் விரைவுச்சாலைக்கு, 29 பிப்ரவரி 2020 அன்று பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டது.  இந்த விரைவுச் சாலை பணிகள், 28 மாதங்களுக்குள்ளாக முடிக்கப்பட்டிருப்பது,  குறிப்பிட்ட காலத்திற்குள் திட்டங்களை நிறைவேற்றுவதென்ற புதிய இந்தியாவின்  வேலை கலாச்சாரத்தின் அடையாளம் ஆகும். 

உத்தரப்பிரதேச விரைவுச்சாலைகள் தொழில் வளர்ச்சி ஆணையத்தால், ரூ.14,850கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த 296கி.மீ தூரமுள்ள இந்த நான்குவழி விரைவுச்சாலை, வருங்காலங்களில் ஆறுவழிச்சாலையாக விரிவுபடுத்தப்படும்.  சித்ரகூட் மாவட்டத்தின் பரத்கூப் அருகிலுள்ள கோண்டா கிராமத்தில், தேசிய நெடுஞ்சாலை 35-ல் தொடங்கும் இந்த விரைவுச்சாலை, எடாவா மாவட்டத்தில் உள்ள குத்ரயில் கிராமம் அருகே, ஆக்ரா-லக்னோ விரைவுச்சாலையுடன் இணைகிறது.  இது, சித்ரகூட், பாண்டா, மஹோபா, ஹமீர்பூர், ஜலோன், அரையா மற்றும் எடாவா ஆகிய ஏழு மாவட்டங்கள் வழியாகச் செல்கிறது. 

புண்டேல்கண்ட் நெடுஞ்சாலை, இப்பகுதியில் போக்குவரத்து இணைப்பு வசதிகளை மேம்படுத்துவதோடு, பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் உத்வேகம் அளிப்பதன் வாயிலாக, உள்ளூர் மக்களுக்கு ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்.  விரைவுச்சாலையையொட்டி, பாண்டா மற்றும் ஜலோன் மாவட்டங்களில் தொழில் வழித்தடம் அமைப்பதற்கான பணிகளும் ஏற்கனவே தொடங்கிவிட்டது.  

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை

பிரபலமான பேச்சுகள்

76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை
ASI sites lit up as India assumes G20 presidency

Media Coverage

ASI sites lit up as India assumes G20 presidency
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 2, 2022
December 02, 2022
பகிர்ந்து
 
Comments

Citizens Show Gratitude For PM Modi’s Policies That Have Led to Exponential Growth Across Diverse Sectors