உத்தரப்பிரதேச மாநிலம் கவுசம்பியில் மருத்துவ ஊர்திகளைப் பயன்படுத்தி பொது சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
பல்வேறு அரசு திட்டங்களின் பயனாளிகளாக 25,000க்கும் மேற்பட்ட மக்கள் பதிவு செய்துள்ள மருத்துவ ஊர்தியின் உதவியுடன் 2,47,500 மக்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது பற்றிய உத்தரப்பிரதேச மாநிலம் கவுசம்பி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு வினோத் சோன்கரின் ட்விட்டர் பதிவைப் பகிர்ந்து பிரதமர் கூறியதாவது:
“அற்புதமான முயற்சி! இது போன்ற பொது சேவை முன்முயற்சிகள், வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை அளிக்கவிருக்கின்றன.”
अद्भुत प्रयास! जन सेवा के ऐसे अभियान विकास को नई गति देने वाले हैं। https://t.co/4iupUQQHk4
— Narendra Modi (@narendramodi) March 23, 2023


