பிரபல இலக்கியவாதியும், கல்வியாளருமான ராம்தராஷ் மிஸ்ராவின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
ராம்தராஷ் மிஸ்ராவின் மறைவு இந்தி மற்றும் போஜ்புரி மொழி இலக்கியத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார். அவரது சிறந்த படைப்புகளுக்காக என்றென்றும் நினைவுகூரப்படுவார் என்று பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:
"புகழ்பெற்ற இலக்கியவாதியும், கல்வியாளருமான ராம்தர்ஷ் மிஷ்ராவின் மறைவால் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன். அவரது மறைவு இந்தி மற்றும் போஜ்புரி மொழி இலக்கியங்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவரது சிறந்த படைப்புகளுக்காக என்றென்றும் அவர் நினைவுகூரப்படுவார். இந்த துயரரமான தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி!"
जाने-माने साहित्यकार और शिक्षाविद रामदरश मिश्र जी के निधन से अत्यंत दुख हुआ है। उनका जाना हिंदी और भोजपुरी साहित्य के लिए अपूरणीय क्षति है। अपनी लोकप्रिय रचनाओं के लिए वे सदैव याद किए जाएंगे। शोक की इस घड़ी में उनके परिजनों और प्रशंसकों के प्रति मेरी गहरी संवेदनाएं। ओम शांति!
— Narendra Modi (@narendramodi) November 1, 2025


