டெக்சாசின் ஹூஸ்டனில் சீக்கிய சமூக உறுப்பினர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (22.9.19) கலந்துரையாடினார். இந்த சமூக உறுப்பினர்கள் பிரதமருக்கு அன்பான வரவேற்பு அளித்தனர். இந்த உரையாடலின் போது இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், சீக்கிய சமூகத்தினருக்கும் மத்திய அரசு மேற்கொள்ளும் சிறப்பான நடவடிக்கைகளுக்காக சமூக உறுப்பினர்கள் பிரதமருக்கு நன்றித் தெரிவித்தனர்.

”ஹூஸ்டனில் சீக்கிய சமூகத்தினருடன் மிகச் சிறப்பான கலந்துரையாடலை நான் நடத்தினேன். இந்தியாவின் வளர்ச்சி குறித்த அவர்களின் ஆர்வத்தைக் கண்டு நான் பெருமகிழ்ச்சி அடைந்தேன்” என்று பிரதமர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

டெக்சாசின் ஹூஸ்டனில் தாவூதி போரா சமூக உறுப்பினர்களைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (22.09.2019) சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்த சமூகத்தின் உறுப்பினர்கள் ஹூஸ்டனில் பிரதமரைப் பாராட்டினர். இந்தக் கலந்துரையாடலின் போது சைத்னா சாஹிபுடன் பிரதமரின் தொடர்பை தாவூதி போரா உறுப்பினர்கள் எடுத்துரைத்தனர். கடந்த ஆண்டு தங்களின் சமூக நிகழ்வில் பங்கேற்க நரேந்திர மோடி இந்தூருக்குப் பயணம் செய்ததையும் அவர்கள் நினைவு கூர்ந்தனர்.

இந்தக் கலந்துரையாடலுக்குப் பின் டிவிட்டரில் செய்தி வெளியிட்ட பிரதமர், “தாவூதி போரா சமூகம் உலகம் முழுவதும் தனிச் சிறப்புடன் நிலைபெற்றுள்ளது. ஹூஸ்டனில் அவர்களுடன் நேரத்தை செலவிட்டதோடு பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாடும் வாய்ப்பையும் நான் பெற்றேன்” என்று கூறியுள்ளார்.

டெக்சாசின் ஹூஸ்டனில் காஷ்மீரி பண்டிட்களின் தூதுக்குழுவினரைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (22.09.19) சந்தித்தார்.

இந்தியாவின் வளர்ச்சிக்கும், இந்தியர்களின் அதிகாரமளித்தலுக்கும் பிரதமரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு இந்த சமூகத்தின் உறுப்பினர்கள் முழுமையான ஆதரவை இந்த சந்திப்பின் போது தெரிவித்தனர்.

இந்தக் கலந்துரையாடலுக்குப் பின் டிவிட்டரில் செய்தி வெளியிட்ட பிரதமர், “ஹூஸ்டனில் காஷ்மீரி பண்டிட்களுடன் சிறப்பான கலந்துரையாடலை நான் நடத்தினேன்” என்று கூறியுள்ளார்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Tractor sales cross 10 lakh mark in FY26 on strong rural demand, GST cut

Media Coverage

Tractor sales cross 10 lakh mark in FY26 on strong rural demand, GST cut
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஏப்ரல் 12, 2026
April 12, 2026

Trust, Technology & Transformation: How India is Building a Viksit Bharat Under PM Modi