பகிர்ந்து
 
Comments
Himachal Pradesh, as a land of spirituality and bravery: PM Modi
Government is focusing on next-generation infrastructure in Himachal Pradesh. Projects related to highways, railways, power, solar energy and petroleum sector, are underway in the state: PM Modi
Those in habit of looting money now afraid of 'Chowkidar': PM Modi

இமாச்சலப் பிரதேசம் தரம்சாலாவில் ஜன் ஆபார் பேரணியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். மாநில அரசின் ஓராண்டு நிறைவை குறிக்கும் வகையில் இந்தப் பேரணி நடைபெற்றது.

மேடைக்கு வரும்முன் பிரதமர் அரசுத் திட்டங்கள் தொடர்பான கண்காட்சியை பார்வையிட்டார். பல்வேறு நலத்திட்ட பயனாளிகளுடன் அவர் கலந்துரையாடினார்.
பின்னர் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய அவர், இமாச்சலப் பிரதேசம் ஆன்மீக பூமி என்றும், வீர பூமி என்றும் புகழாரம் சூட்டினார்.

இந்த மாநிலத்துடன் முன்னாள் பிரதமர் திரு. அடல் பிஹாரி வாஜ்பேயிக்கு தனிப்பட்ட அன்பு உண்டு என்று பிரதமர் குறிப்பிட்டார். மக்களை சென்றடைவதில் குறிப்பாக கிராமப்புற மக்களை சென்றடைவதில் கடந்த ஓராண்டில் மாநில அரசு செய்த சாதனைகளை பிரதமர் பாராட்டினார்.

இமாச்சல மாநில அரசு அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பில் கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் கூறினார். நெடுஞ்சாலைகள், ரெயில்வேக்கள், மின்சாரம், சூரிய சக்தி பெட்ரோலியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் திட்டப் பணிகள் இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

மாநிலத்தின் சுற்றுலா வாய்ப்புகள் பற்றி பிரதமர் விரிவாக எடுத்துரைத்தார். இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை 2013-ல் 70 லட்சமாக இருந்தது 2017-ல் ஒரு கோடியாக உயர்ந்தது என்று பிரதமர் தெரிவித்தார். அதே போல 2013-ல் இந்தியாவில் இருந்த அங்கீகாரம் பெற்ற ஹோட்டல்கள் எண்ணிக்கை 1200-லிருந்து தற்போது 1800 ஆக உயர்ந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

கடந்த 40 ஆண்டுகளாக நமது முன்னாள் படை வீரர்கள் ஒரு பதவிக்கு ஒரு ஓய்வூதியம் என்ற கோரிக்கையை விடுத்து வந்தனர் என்பதை பிரதமர் நினைவு கூர்ந்தார். தமது அரசு பதவியேற்றவுடன் இந்த பிரச்சனையின் முழு அம்சங்களையும், அதற்கு தேவையான ஆதாரங்களையும் புரிந்து கொண்டது என்றும் அதனையடுத்து இந்தக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு, நமது முன்னாள் படை வீரர்கள் நலன் கருதி அமல்படுத்தப்பட்டது என்றும் அவர் கூறினார்.

தூய்மை குறித்து இமாச்சலப் பிரதேச மக்களின் உறுதிப்பாட்டை பிரதமர் பாராட்டினார். தூய்மையை ஒரு பண்பாடாகவே அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றார். இந்த நிலைமை மாநிலத்தின் சுற்றுலா துறைக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.

 

 

ஊழலை ஒழிக்க மத்திய அரசு எவ்விதம் செயல்பட்டது என்பதை பிரதமர் விளக்கினார். அரசுப் பயன்களை நேரடியாக பயனாளிகள் வங்கிக் கணக்குகளில் செலுத்துவது ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது என்றும், இதனையடுத்து சுமார் ரூ.90,000 கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது என்றும் பிரதமர் கூறினார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

'மன் கி பாத்' -ற்கான உங்கள் யோசனைகளையும் பரிந்துரைகளையும் உடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!
20 ஆண்டுகள் சேவை மற்றும் அர்ப்பணிப்பை வரையறுக்கும் 20 படங்கள்
Explore More
’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி
Why Narendra Modi is a radical departure in Indian thinking about the world

Media Coverage

Why Narendra Modi is a radical departure in Indian thinking about the world
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை அக்டோபர் 17, 2021
October 17, 2021
பகிர்ந்து
 
Comments

Citizens congratulate the Indian Army as they won Gold Medal at the prestigious Cambrian Patrol Exercise.

Indians express gratitude and recognize the initiatives of the Modi government towards Healthcare and Economy.