பெண்களுக்கு மரியாதை அளிக்கவும், அதிகாரம் அளிக்கவும் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இந்திய அஞ்சலகம் தொடங்கியுள்ள மகளிர் சம்மான் சேமிப்பு சான்றிதழ் இதற்கு சிறந்த உதாரணம் என்று திரு மோடி தெரிவித்துள்ளார்.
மகளிர் சம்மான் சேமிப்பு சான்றிதழ்கள் 2023 குறித்த அரசிதழ் அறிவிக்கையை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 1.59 லட்சம் அஞ்சல் அலுவலகங்களில் உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் மத்திய நிதி அமைச்சரின் பட்ஜெட் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. விடுதலையின் அமிர்தப் பெருவிழாவையொட்டி, பெண் குழந்தைகள் உள்பட மகளிருக்கு அதிகாரமளித்தல் மற்றும் நிதிச் சேர்க்கையை நோக்கிய குறிப்பிடத்தக்க நடவடிக்கை என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வருமாறு:
"எங்கள் அரசு பெண்களுக்கு மரியாதை மற்றும் அதிகாரமளிக்க உறுதிபூண்டுள்ளது. "மகளிர் சம்மான் சேமிப்பு சான்றிதழ்" இதற்கு சிறந்த உதாரணம்.
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1912742”
महिलाओं के सम्मान और सशक्तिकरण के लिए हमारी सरकार प्रतिबद्ध है और ‘‘महिला सम्मान बचत पत्र’’ इसका बेहतरीन उदाहरण है। https://t.co/ixzvvBIkfi https://t.co/xTbrNQdv6P
— Narendra Modi (@narendramodi) April 3, 2023


