மேன்மை தங்கியோரே,

இந்தியாவிற்கு உங்களையும் உங்கள் குழுவினரையும் நாங்கள் மிகவும் அன்புடன் வரவேற்கிறோம். தென் அமெரிக்காவில் பராகுவே ஒரு முக்கியமான கூட்டாளியாகும். நமது புவியியல் வேறுபட்டிருக்கலாம், ஆனால் நாம் ஒரே மாதிரியான ஜனநாயக விழுமியங்களைப் பகிர்ந்து கொள்கிறோம். மேலும் மக்களின் நல்வாழ்வில் அக்கறை கொள்கிறோம்.

மேன்மை தங்கியோரே,

உங்கள் வருகை உண்மையிலேயே வரலாற்று சிறப்புமிக்கது; பராகுவே அதிபர் ஒருவர் இந்தியாவுக்கு இரண்டாவது முறையாக வருகை தந்துள்ளார்.

மேன்மை தங்கியோரே,

உங்களுடன் மூத்த அமைச்சர்கள் மற்றும் ஒரு வலுவான பிரதிநிதிகள் குழு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் தில்லிக்கு மட்டுமல்ல, மும்பைக்கும் வருகை தருகிறீர்கள். இது இரு நாடுகளுக்கும் இடையே வலுவான உறவுகளை உருவாக்குவதற்கான உங்கள் உறுதிப்பாட்டைக் காட்டுகிறது. ஒருங்கிணைந்து பணியாற்றுவதன் மூலம், பகிரப்பட்ட வளர்ச்சி மற்றும் செழுமைக்கான பாதையை உருவாக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.

மேன்மை தங்கியோரே,

மின்னணு தொழில்நுட்பம், முக்கியமான கனிமங்கள், எரிசக்தி, வேளாண்மை, சுகாதாரம், பாதுகாப்பு, ரயில்வே, விண்வெளி மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார கூட்டாண்மை போன்ற துறைகளில் ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளை நாம் காண்கிறோம்.

தென்னமெரிக்காவின் வர்த்தக தொகுப்பு நாடுகளுடன்(மெர்கோசர்) எங்களுக்கு முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தம் உள்ளது. அதை மேலும் விரிவுபடுத்த நாம் இணைந்து பணியாற்றலாம்.

மேன்மை தங்கியோரே,

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவும் பராகுவேயும் ஒன்றுபட்டுள்ளன. சைபர் குற்றம், திட்டமிடப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற பகிரப்பட்ட சவால்களுக்கு எதிராகப் போராடுவதற்கு ஒத்துழைப்புக்கான மகத்தான சாத்தியக்கூறு உள்ளது.

மேன்மை தங்கியோரே,

இந்தியாவும் பராகுவேயும் உலகளாவிய தெற்கின் ஒருங்கிணைந்த பகுதிகள். நமது நம்பிக்கைகள், விருப்பங்கள் மற்றும் சவால்கள் ஒரே மாதிரியானவை. அதனால்தான் இந்த சவால்களை திறம்பட எதிர்கொள்ள ஒருவருக்கொருவர் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ள முடியும்.

கோவிட் பெருந்தொற்றின் போது இந்தியா தனது தடுப்பூசிகளைப் பகிர்ந்து கொண்டதன் மூலம் பராகுவேக்கு ஆதரவை வழங்கியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் திறன்களை மேலும் பகிர்ந்து கொள்வதன் மூலம் இந்த ஒத்துழைப்பு உணர்வைத் தொடர நாங்கள் எதிர்நோக்குகிறோம்.

மேன்மை தங்கியோரே,

உங்கள் வருகை எங்கள் உறவுகளில் நம்பிக்கை, வர்த்தகம் மற்றும் நெருக்கமான ஒத்துழைப்பின் தூண்களுக்கு புதிய பலத்தை சேர்க்கும் என்று நான் நம்புகிறேன். இது இந்தியா-லத்தீன் அமெரிக்க உறவுகளுக்கு புதிய பரிமாணங்களைச் சேர்க்கும்.

கடந்த ஆண்டு நான் கயானாவில் நடந்த கேரிகோம் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டேன். பல அம்சங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து நாம் விவாதித்தோம். இந்த அனைத்துத் துறைகளிலும் பராகுவே மற்றும் அனைத்து லத்தீன் அமெரிக்க நாடுகளுடனும் நாம் இணைந்து பணியாற்ற முடியும் என்று நான் நினைக்கிறேன்.

 மீண்டும் இந்தியாவுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
How GST 2.0 changed India’s car market and boosted small car sales

Media Coverage

How GST 2.0 changed India’s car market and boosted small car sales
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மே 19, 2026
May 19, 2026

Exports Up, Economy Strong, World Collaborating: PM Modi's Reforms Delivering Jobs, Growth & Green Future