பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், கனடா பிரதமர் திரு மார்க் கார்னி, நாளை (2026 பிப்ரவரி 27) முதல் 2026 மார்ச் 2 வரை இந்தியாவில் அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். இது கனடா பிரதமர் திரு மார்க் கார்னியின் இந்தியாவுக்கான முதல் அரசு முறைப் பயணமாகும். பிப்ரவரி 27 அன்று, கனடா பிரதமர் திரு மார்க் கார்னி மும்பை வந்தடைகிறார். அங்கு இரண்டு நாட்கள் அவர் பல்வேறு, வர்த்தக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார். இந்திய – கனடா தலைமைச் செயல் அதிகாரிகள், தொழில் வல்லுநர்கள், புதுமை கண்டுப்பிடிப்பாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோருடன் அவர் அங்கு கலந்துரையாடவுள்ளார்.

மார்ச் 1-ம் தேதி கனடா பிரதமர் திரு மார்க் கார்னி புதுதில்லிக்கு செல்லவுள்ளார். மார்ச் 2-ம் தேதி புதுதில்லியில் உள்ள ஹைதராபாத் மாளிகையில் பிரதமர் திரு நரேந்திர மோடியும், கனடா பிரதமரும் பிரதிநிதிகள் நிலையிலான பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளனர். இந்தியா - கனடா உத்திசார் ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்களில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இரு தலைவர்களும் ஆய்வு செய்யவுள்ளனர். வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, முக்கிய கனிமங்கள், விவசாயம், கல்வி, ஆராய்ச்சி உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தவுள்ளனர். இரு தலைவர்களும் பிராந்திய, உலகளாவிய விவகாரங்கள் குறித்தும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள்.

பின்னர் பிரதமர் திரு நரேந்திர மோடியும், கனடா பிரதமர் திரு மார்க் கார்னியும் இந்தியா-கனடா தலைமை செயல் அதிகாரிகள் கூட்டத்திலும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்தியா - கனடா இருதரப்பு உறவுகளை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதில் கனடா பிரதமரின் இந்தப் பயணம் முக்கிய பங்கு வகிக்கும். ஆக்கபூர்வமான, சமநிலையான ஒத்துழைப்பைத் தொடர இரு பிரதமர்களும் முன்னதாக ஒப்புக் கொண்டுள்ளனர். தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு, எதிர்கால ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Auckland's Sky Tower lights up in India's tricolour as PM Modi begins historic New Zealand visit

Media Coverage

Auckland's Sky Tower lights up in India's tricolour as PM Modi begins historic New Zealand visit
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூலை 11, 2026
July 11, 2026

Record Exports, Record Investments, Record Pride: India’s Rise Under PM Modi is Multi-Dimensional