ஐக்கிய நாடுகள் பொது சபையில் செப்டம்பர் 2014-ல் உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, உலக நாடுகள் ஒருங்கிணைந்து சர்வதேச யோகா தினத்தை அனுசரிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இதுவே, இந்தியாவில் உருவான பாரம்பரியமான யோகாவுக்கு நாம் செலுத்தும் உரிய மரியாதையாக இருக்கும் என்று பிரதமர் தெரிவித்தார்.


இந்தப் பரிந்துரையை 177 நாடுகளின் ஆதரவுடன் டிசம்பர் 2014-ல் ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொண்டது. ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவிக்க 177 நாடுகளும் ஆதரவு தெரிவித்தன. இந்த 177 நாடுகள் என்பது, உலகம் முழுமைக்கும் பரவியுள்ளவை. அனைத்து கண்டங்களிலும் உள்ளவை.


ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்ததையடுத்து, உலக அளவில் யோகாவை மிகவும் பிரபலமாக்குவதற்கு நீண்டகாலம் பயணிக்க வேண்டியுள்ளது. யோகா செய்வதில் மிகுந்த ஆர்வம்கொண்ட பிரதமர் திரு.நரேந்திர மோடி கூறும்போது, “அறிவு, செயல், பக்தி ஆகியவை இணைந்த அற்புதமான பயிற்சி யோகா. இதன்மூலம், நோய்களிலிருந்து விடுபடுவதுடன், பேராசைகளிலிருந்தும் விடுபட முடியும்.” என்று தெரிவித்தார். உண்மையில், குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, இளைஞர்கள் மத்தியில் யோகாவை பிரபலப்படுத்துவதற்காக யோகாவுக்கு என்றே தனியாக யோகா பல்கலைக் கழகத்தை நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
PM Modi to visit Rajasthan on Dec 9 to inaugurate Rising Rajasthan Summit

Media Coverage

PM Modi to visit Rajasthan on Dec 9 to inaugurate Rising Rajasthan Summit
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...

செளத் ஏசியன் கோப்பரேஷன் வலுவான தாக்கத்தை பெற்ற தினமான 5 மே 2017 அன்று வரலாற்றில் பதிவானது. அன்றைய தினம் தான், இந்தியா இரண்டு வருடங்களுக்கு முன்பு உறுதி செய்த அர்ப்பணிப்பை, செளத் ஏசியா சாட்டிலைட் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

செளத் ஏசியா சாட்டிலைட் உடன், செளத் ஏசியன் தேசங்கள் தங்கள் ஒத்துழைப்பை விண்வெளியிலும் நீட்டித்தன!

வரலாற்றின் உருவாக்கத்தை காண, இந்தியா, அஃப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூடான், மாலத்தீவு, நேபாள் மற்றும் ஸ்ரீ லங்கா நாடுகளை சேர்ந்த தலைவர்கள், வீடியோ கான்ஃபரன்ஸிங் வழியாக நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசும் போது, பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி செளத் ஆசியன் சாட்டிலைட் ஆற்றலின் முழு செயல்திறனை அடையமுடியும் என்றார்.

சாட்டிலைட் உடைய மேலான ஆளுமை, கிராமப்புறங்களில், திறனுள்ள தகவல் தொடர்பு, மேலான வங்கி சேவை மற்றும் கல்வியை வழங்குவதை உறுதி செய்யும். மேலான சிகிச்சைக்கு, துல்லியமான பருவ நிலை கணிப்பு மற்றும் மக்களை தொலைதூர மருத்துவத்துடன் இணைப்பது போன்றவற்றிற்கு உதவும்.

நாம் கைகளை இணைத்து, பரஸ்பரம் அறிவு, தொழில்நுட்பம் மற்றும் வளர்ச்சியை, பகிர்ந்து கொண்டால், நாம் மேம்பாடு மற்றும் செழிப்பை வேகமெடுக்க வைக்க முடியும்,’ என்று ஸ்ரீ மோடி குறிப்பிட்டார்