இன்று கட்ச் ஒரு பெரிய வர்த்தக மற்றும் சுற்றுலா மையமாக உள்ளது, வரும் காலங்களில், கட்ச்சின் இந்தப் பங்கு இன்னும் பெரிதாக மாறப்போகிறது: பிரதமர்
கடல் உணவு முதல் சுற்றுலா மற்றும் வர்த்தகம் வரை, கடலோரப் பகுதிகளில் இந்தியா ஒரு புதிய சூழலியலை உருவாக்கி வருகிறது: பிரதமர்
பயங்கரவாதத்திற்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொண்ட கொள்கை, எங்கள் கொள்கை: பிரதமர்
ஆபரேஷன் சிந்தூர் என்பது மனிதகுலத்தைப் பாதுகாப்பதற்கும் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்குமான ஓர் இயக்கம்: பிரதமர்
பயங்கரவாதத்தின் தலைமையகங்கள் இந்தியாவின் ரேடாரில் இருந்தன, நாம் அவர்களை துல்லியமாக தாக்கினோம், இது நமது ஆயுதப் படைகளின் வலிமையையும் ஒழுக்கத்தையும் காட்டுகிறது: பிரதமர்
இந்தியாவின் போராட்டம் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரானது: பிரதமர்

பாரத் மாதா கி ஜே!

நமது மூவண்ணக்கொடி ஒருபோதும் தாழாது.

பாரத் மாதா கி ஜே!

பாரத் மாதா கி ஜே!

குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகா திரு மனோகர் லால் அவர்களே, அமைச்சரவையின் இதர உறுப்பினர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டப்பேரவை உறுப்பினர்களே, இதர மதிப்பிற்குரிய பிரமுகர்களே, கட்ச் பகுதியின் எனதருமை சகோதர, சகோதரிகளே!

ஷரதின் நிலமான கட்ச் பூமிக்கும், வீரமிக்க கச்சி மக்களிடையேயும் நான் ஏன் வந்திருக்கிறேன்? கட்ச் பூமியின் மகத்தான புதல்வரும், புரட்சிகர நாயகருமான ஷியாமாஜி கிருஷ்ணவர்மாவுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கங்களை செலுத்துகிறேன். எனது அடிமனதில் இருந்து ராம்ராம் என்ற முழக்கத்துடன் கட்ச் சகோதர, சகோதரிகளுக்கும் அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நண்பர்களே,

கட்ச் பகுதியுடனான எனது உறவு மிகவும் பழமையானது. என் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பும் அத்தகையதுதான். இதனால் இங்கு வருவதை என்னால் ஒருபோதும் தவிர்க்க இயலாது. நான் அரசியலில்  இல்லை என்றாலும், அதிகாரத்தில் இல்லை என்றாலும், கட்ச் பகுதிக்கு எனது வருகை தொடர்ந்து இருந்திருக்கும். எனது வாழ்க்கை மற்றும் பணியின் பகுதியாக இயற்கையாகவே இது அமைந்துள்ளது. இந்தப் பகுதியின் மூலை முடுக்கெல்லாம் பயணம் செய்யும் வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன். கட்ச் பகுதி மக்களாகிய உங்களின் தன்னம்பிக்கையும், அனைத்து சிரமங்களையும் கடந்த உங்களின் அர்ப்பணிப்பும் எனது வாழ்க்கையில் எப்போதும் வழிகாட்டியாக இருந்துள்ளன.

 

நண்பர்களே,

நமது கட்ச் பகுதியின் வளர்ச்சிக்காக இன்று 50,000 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் தொடங்கப்படுகின்றன. அல்லது பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்படுகின்றன. ஒட்டுமொத்த குஜராத் மாநிலத்திற்கும் கூட 50,000 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் என்பது கேள்விப்படாததாக இருந்த காலம் ஒன்று இருந்தது.  ஆனால் இப்போது ஒரு மாவட்டத்திற்கு மட்டும் இவ்வளவு மதிப்புள்ள திட்டம் கிடைத்துள்ளது.

நண்பர்களே!

நாட்டின் இளைஞர்களுக்கு அதிகபட்ச வேலைவாய்ப்புகளை வழங்குவது பிஜேபி அரசின் உயர் முன்னுரிமையாக உள்ளது. அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகளை வழங்கும் துறைகளில் ஒன்றாக சுற்றுலா உள்ளது. கட்ச் பகுதி வரலாறு, கலாச்சாரம், இயற்கை வளம் என மூன்று அம்சங்களையும் கொண்டுள்ளது. இங்கு நடைபெறும் ரான் உத்சவ் ஒவ்வொரு நாளும் புதிய உச்சங்களைத் தொடுவது கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். சுற்றுலாத் துறையில் இந்தப் பகுதி  வரும்காலங்களில் மேலும் விரிவடையும். தோர்டோ கிராமம் உலகின் மிகச்சிறந்த சுற்றுலா கிராமங்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது. மாண்ட்வி கடற்கரையும், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் மையங்களில் ஒன்றாக மாறிவருகிறது.  ரான் உத்சவ் நடைபெறும் அதேகாலத்தில் கடற்கரை விளையாட்டுப் போட்டிகளையும் நடத்த வேண்டும் என்று பூபேந்திரபாய் மற்றும் கட்ச் பகுதியின் தலைவர்களை நான் கேட்டுக்கொள்கிறேன். அண்மையில், டையூவில் நடைபெற்ற தேசிய அளவிலான கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.  இந்தவகையில் கட்ச் சுற்றுலா  தொடர்ந்து புதிய உச்சங்களைத் தொடும். இதற்காக உங்களுக்குத் தேவைப்படும் ஆதரவை வழங்க நான் எப்போதும் தயாராக இருக்கிறேன்.

நண்பர்களே,

2014, மே 26 அன்று குஜராத்தின் சகோதர, சகோதரிகள் முழுமையான கொண்டாட்டத்துடன் என்னை தில்லிக்கு அனுப்பிவைத்தார்கள். 2014-ம் ஆண்டு இதே நாள், இதே நேரத்தில் முதல் முறையாக நான் நாட்டின் பிரதமராக, முதன்மை சேவகராக பொறுப்பேற்றேன்.  உங்களின் ஆசியுடன் இந்தப் பயணம் குஜராத்துக்கான சேவையிலிருந்து, நாட்டுக்கான சேவைக்கு சென்று   தற்போது 11 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது.  நான் பதவியேற்ற போது நாட்டின் பொருளாதாரம் உலகின் 11-வது இடத்தை பெற்றிருந்தது. இப்போது அது 4-வது இடத்தை அடைந்துள்ளது.

 

நண்பர்களே,

பாரதத்தின் திசைவழி மிகவும் தெளிவானது. பாரதம் வளர்ச்சியின் பாதையை, அமைதி மற்றும் வளத்தின் பாதையைத் தெரிவு செய்துள்ளது. வளர்ச்சியடைந்த தேசமாக மாறுவதற்கு கட்ச் பகுதியின் உணர்வு பாரதத்தை ஊக்கப்படுத்தும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

 

ஒரு சில நாட்களில் கட்ச் புத்தாண்டான ஆஷாதி பிஜ் விழா கொண்டப்படவுள்ளது.  இந்த விழா கொண்டாடப்படுவதற்கு முன்பாகவே இங்கு வந்துள்ள நான், கச்சி சகோதர, சகோதரிகளுக்கு  இன்றே எனது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

 

கடுமையான வெயிலிலும், விமான நிலையத்திலிருந்து இந்தப் பகுதிவரை மக்கள் கூட்டம் திரண்டிருந்தது. எனது நண்பர்களுக்கு வணக்கங்கள். இப்போது மூவண்ணக்கொடிகளை உயர்த்தி என்னுடன் இணைந்து முழக்கமிடுங்கள்.

 

கடுமையான வெயிலிலும், விமான நிலையத்திலிருந்து இந்தப் பகுதிவரை மக்கள் கூட்டம் திரண்டிருந்தது. எனது நண்பர்களுக்கு வணக்கங்கள். இப்போது மூவண்ணக்கொடிகளை உயர்த்தி என்னுடன் இணைந்து முழக்கமிடுங்கள்.

 

 

கடுமையான வெயிலிலும், விமான நிலையத்திலிருந்து இந்தப் பகுதிவரை மக்கள் கூட்டம் திரண்டிருந்தது. எனது நண்பர்களுக்கு வணக்கங்கள். இப்போது மூவண்ணக்கொடிகளை உயர்த்தி என்னுடன் இணைந்து முழக்கமிடுங்கள்.

பாரத் மாதா கி ஜே!

பாரத் மாதா கி ஜே!

பாரத் மாதா கி ஜே!

பாரத் மாதா கி ஜே!

வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

உங்களுக்கு மிக்க நன்றி!

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Why industry loves the India–EU free trade deal

Media Coverage

Why industry loves the India–EU free trade deal
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Shri HD Deve Gowda Ji meets the Prime Minister
January 29, 2026

Shri HD Deve Gowda Ji met with the Prime Minister, Shri Narendra Modi, today. Shri Modi stated that Shri HD Deve Gowda Ji’s insights on key issues are noteworthy and his passion for India’s development is equally admirable.

The Prime Minister posted on X;

“Had an excellent meeting with Shri HD Deve Gowda Ji. His insights on key issues are noteworthy. Equally admirable is his passion for India’s development.” 

@H_D_Devegowda