It is a celebration of India's incredible sporting talent and showcases the spirit of athletes from across the country: PM
We consider sports as a key driver for India's holistic development: PM
We are creating more and more opportunities for our athletes so they can enhance their potential to the fullest: PM
India is making a strong push to host the 2036 Olympics: PM
The National Games is more than just a sporting event, It is a great platform to showcase the spirit of 'Ek Bharat, Shreshtha Bharat,’ It is a celebration of India's rich diversity and unity: PM

உத்தராகண்ட் ஆளுநர் திரு குர்மீத் சிங் அவர்களே, முதல்வர் திரு புஷ்கர் தாமி அவர்களே, எனது அமைச்சரவை நண்பர்கள் திரு அஜய் தம்தா அவர்களே, திருமிகு ரக்ஷா கட்சே அவர்களே, உத்தராகண்ட் சட்டமன்ற சபாநாயகர் திருமிகு ரிது கந்தூரி அவர்களே, மாநில விளையாட்டுத்துறை  அமைச்சர் திருமிகு ரேகா ஆர்யா அவர்களே, காமன்வெல்த் விளையாட்டுகள் தலைவர் திரு கிறிஸ் ஜென்கின்ஸ் அவர்களே. ஐ.ஓ.ஏ தலைவர் திருமிகு  பி.டி. உஷா அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் திரு  மகேந்திர பட் அவர்களே, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க நாடு முழுவதிலுமிருந்து வந்துள்ள வீரர்களே, ஏனைய விருந்தினர்களே!

இந்த வருடம் உத்தராகண்ட் உருவானதன் 25-வது ஆண்டாகும். இந்த இளம் மாநிலத்தில், நாட்டின் மூலை முடுக்கிலிருந்து வந்துள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தப் போகிறார்கள்.ஒரே பாரதம் உன்னத  பாரதத்தின் மிக அழகான தோற்றம் இங்கே தெரியும். இம்முறையும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பல உள்நாட்டு பாரம்பரிய விளையாட்டுக்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஆண்டு தேசிய விளையாட்டுகளும் ஒரு வகையில் பசுமை விளையாட்டுகள்தான். சுற்றுச்சூழலுக்கு உகந்த விஷயங்கள் இதில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பெற்ற பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் அனைத்தும் மின்னணு கழிவுகளால் ஆனவை. இங்கு பதக்கம் வெல்லும் வீரர்களின் பெயரில் மரக்கன்றும் நடப்படும். இது மிகவும் நல்ல முயற்சி. அனைத்து வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வாழ்த்துகிறேன்.

நண்பர்களே,

இன்று, ஆண்டு முழுவதும் பல போட்டிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. கேலோ இந்தியா தொடரில் பல புதிய போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. கேலோ இந்தியா யூத் கேம்ஸ் காரணமாக, இளம் வீரர்கள் முன்னேற வாய்ப்பு கிடைத்துள்ளது. பல்கலைக்கழக விளையாட்டுக்கள், பல்கலைக்கழக மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்குகின்றன. கேலோ இந்தியா பாரா கேம்ஸ் மூலம் பாரா விளையாட்டு வீரர்களின் செயல்திறன் புதிய விஷயங்களை சாதித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு, கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுகளின் ஐந்தாவது பதிப்பு லடாக்கில் தொடங்கியது.

நண்பர்களே,

இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் விளையாட்டை ஒரு முக்கிய ஊடகமாக நாங்கள் கருதுகிறோம். ஒரு நாடு விளையாட்டில் முன்னேறும்போது, ​​நாட்டின் நம்பகத்தன்மையும் அதிகரிக்கிறது, நாட்டின் தன்விவரமும் மேம்படுகிறது. எனவே, இன்று விளையாட்டானது இந்தியாவின் வளர்ச்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதை இந்திய இளைஞர்களின் தன்னம்பிக்கையுடன் இணைக்கிறோம். இன்று, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக முன்னேறிக் கொண்டிருக்கிறது

நண்பர்களே,

நமது வீரர்கள் எப்போதுமே பெரிய இலக்குகளுடன் முன்னேறுவது போல், நமது நாடும் பெரிய தீர்மானங்களுடன் முன்னேறி வருகிறது. 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் போது, ​​அது இந்திய விளையாட்டுகளை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும். ஒலிம்பிக் என்பது ஒரு விளையாட்டின் நிகழ்வு மட்டுமல்ல, உலகின் எந்த நாட்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டாலும், பல துறைகள் ஊக்கம் பெறுகின்றன. ஒலிம்பிக்கிற்காக கட்டப்பட்ட விளையாட்டு உள்கட்டமைப்புகள் வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன. எதிர்காலத்தில் வீரர்களுக்கு சிறந்த வசதிகள் உருவாக்கித் தரப்படும். ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் நகரத்தில் புதிய இணைப்பு உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

உத்தராகண்டில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. நாட்டின் பிற பகுதிகளில் இருந்து இங்கு வரும் பார்வையாளர்கள் உத்தராகண்ட் மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் செல்வர். இந்த மாநிலத்தில்  முதன்முறையாக, இதுபோன்ற ஒரு தேசிய நிகழ்வு இவ்வளவு பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. இதன் மூலம் இங்கு அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும்.

இந்த தேசிய விளையாட்டுப் போட்டிகள் ஒரு விளையாட்டுப் போட்டியாக மட்டுமல்ல,ஒரே பாரதம், உன்னத  பாரதத்திற்கான வலுவான தளமாகவும் இருக்கிறது. இந்தியாவின் பன்முகத்தன்மையைக் கொண்டாடும் நிகழ்வாக இது உள்ளது. உங்கள் பதக்கங்கள் இந்தியாவின் ஒற்றுமை மற்றும் மேன்மையின் பிரகாசத்தை பிரதிபலிக்கின்றன என்பதை உறுதிப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

நண்பர்களே,

நமது நாட்டில் உடல் பருமன் பிரச்சனை வேகமாக அதிகரித்து வருவதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இது கவலைக்குரிய விஷயம், ஏனெனில் உடல் பருமன் பிரச்சினை  நீரிழிவு, இதய நோய் போன்ற நோய்களின் அபாயக் காரணிகளை அதிகரிக்கிறது. ஃபிட் இந்தியா இயக்கத்தின் மூலம் இன்று நாடு உடற்தகுதி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை குறித்து விழிப்புணர்வு பெற்று வருகிறது என்பதில் நான் திருப்தி அடைகிறேன். உடல் செயல்பாடு, ஒழுக்கம் மற்றும் சீரான வாழ்க்கை எவ்வளவு முக்கியம் என்பதை இந்த தேசிய விளையாட்டுகள் நமக்குக் கற்பிக்கின்றன.

தேசிய விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்குவது எனது பொறுப்பு என்றாலும், இன்று உங்கள் அனைவரையும் இணைத்து அதைச் செய்ய விரும்புகிறேன். எனவே இந்த விளையாட்டுகளின் தொடக்க விழாவிற்கு, நீங்கள் அனைவரும் உங்கள் செல்பேசிகளின் ஃபிளாஷ் விளக்குகளை இயக்குங்கள். 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்குவதை உங்கள் அனைவரோடும் சேர்ந்து அறிவிக்கிறேன். மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

நன்றி !

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India's telecom sector surges in 2025! 5G rollout reaches 85% of population; rural connectivity, digital adoption soar

Media Coverage

India's telecom sector surges in 2025! 5G rollout reaches 85% of population; rural connectivity, digital adoption soar
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 20, 2025
December 20, 2025

Empowering Roots, Elevating Horizons: PM Modi's Leadership in Diplomacy, Economy, and Ecology