"பல நூற்றாண்டுகளின் பொறுமை, எண்ணற்ற தியாகங்கள், துறவு, தவத்திற்குப் பிறகு, நமது ஸ்ரீ ராமர் இங்கே இருக்கிறார்"
"2024, ஜனவரி 22 என்பது நாட்காட்டியில் ஒரு தேதி மட்டுமல்ல, இது ஒரு புதிய 'காலச் சக்கரத்தின்’ தோற்றம்"
"நீதியின் கண்ணியத்தைப் பாதுகாத்ததற்காக இந்திய நீதித்துறைக்கு நான் நன்றி கூறுகிறேன். நீதியின் சின்னமான ராமர் கோயில் நியாயமான முறையில் கட்டப்பட்டது"
"எனது 11 நாள் விரதம், சடங்கில், ஸ்ரீ ராம் நடந்து சென்ற இடங்களை அடைய முயற்சித்தேன்"
"கடல் முதல் சரயு நதி வரை, ராமர் பெயரின் அதே பண்டிகை உணர்வு எல்லா இடங்களிலும் உள்ளது"
"ராமரின் கதை எல்லையற்றது, ராமாயணமும் முடிவற்றது. ராமரின் கொள்கைகள், மதிப்புகள், போதனைகள் எல்லா இடங்களிலும் ஒன்றாகும்”
"இது ராமர் வடிவில் உள்ள தேசிய உணர்வின் கோயில். ராமர் இந்தியாவின் நம்பிக்கை, அடித்தளம், யோசனை, சட்டம், உணர்வு, சிந்தனை, கௌரவம், மகிமை"
“காலச் சக்கரம் மாறிக் கொண்டிருப்பதைத் தூய மனதுடன் உணர்கிறேன். இந்த முக்கியமான பாதையின் சிற்பியாக நமது தலைமுறை தேர்ந்தெடுக்கப்பட்டி
ஸ்ரீ ராம் ஜன்மபூமி கோயில் கட்டுவதற்குப் பங்களித்தத் தொழிலாளர்களுடன் திரு மோடி கலந்துரையாடினார்.
நீதியின் உருவகமாக, ஸ்ரீ ராமரின் கோயில் நியாயமான வழிகளில் கட்டப்பட்டது" என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
துறவிகள், கரசேவகர்கள், ராம பக்தர்கள் ஆகியோருக்கு அவர் மரியாதை செலுத்தினார்.
குழந்தை ராமரின் பெருமை 'வசுதைவ குடும்பகம்' என்ற சிந்தனையாகும் என்றும் தெரிவித்தார்.

ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும்

ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும்

 

வணக்கத்திற்குரிய சபையோர்களேஅனைத்து துறவிகள்முனிவர்கள்இங்கு கூடியுள்ள அனைத்து ராம பக்தர்கள்உலகின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் நம் அனைவருடனும் இணைந்துள்ளவர்கள்உங்கள் அனைவருக்கும் வணக்கம்அனைவருக்கும் ராம நாம வாழ்த்துக்கள்

 

இன்று நமது ராமர் மீண்டும் நம்மிடையே விஸ்வரூபமெடுத்து நிற்கிறார். பல நூற்றாண்டு காத்திருப்புக்குப் பிறகு நமது ராமபிரான் நமக்கு அருள்பாலிக்க வந்திருக்கிறார். பல நூற்றாண்டுகளாக முன்னெப்போதும் இல்லாத பொறுமைஎண்ணற்ற தியாகங்கள் மற்றும் நீண்டநெடிய தவத்திற்குப் பிறகுநமது ராமபிரான் இங்கு காட்சியளிக்க வந்துள்ளார். இந்த நன்னாளில் உங்களுக்கும்நாட்டுமக்கள் அனைவருக்கும் ஏராளமான நல்வாழ்த்துக்கள். 

 

தெய்வீக உணர்வின் சாட்சியாக நான் கருவறையில் உங்கள் சார்பாக நின்றிருந்தேன். எடுத்துரைக்க எவ்வளவோ இருந்த போதிலும் வார்த்தைகள் வசப்படவில்லை. எனது சரீரம்  இன்னும் துடித்தபடி உள்ளது. என் மனம் இன்னும் அந்தத் தருணத்தை விட்டு விலக மறுக்கிறது.  எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங்களில் வசிக்க மாட்டார். எங்கள் குழந்தை ராமர் இனி இந்த தெய்வீக கோவிலில் வாசம் புரிவார். உலகின் ஒவ்வொரு பகுதியிலும்நமது நாட்டிலும் உள்ள ராம பக்தர்கள் இன்று நடந்த நிகழ்வை நெஞ்சம் நிறைய அனுபவித்திருப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்அதில் அளப்பரிய நம்பிக்கையும் கொண்டுள்ளேன். இந்தத் தருணம் மெய்சிலிர்க்க வைப்பது. இந்தக் கணம்தான் தெய்வீகம் நிறைந்தது,  இந்தச் சூழல்இந்தத் தருணம்இந்த ஆற்றல்இந்த நேரம்.. அதுதான் ஸ்ரீ ராமபிரான் நம் அனைவருக்கும் அருள்பாலித்துள்ள தருணம். ஜனவரி 222024 அன்று உதித்த கதிரவன் ஆசிர்வதிக்கப்பட்ட ஒளியைக் கொண்டு வந்துள்ளது. ஜனவரி 222024வெறுமனே நாட்காட்டியில் காட்டப்படும்  தேதி அல்ல. இது புதிய காலச் சக்கரத்தின் துவக்கம். ராமர் கோயில் பூமி பூஜை தொடங்கியதிலிருந்துநாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் உற்சாகமும் ஆர்வமும் தொடர்ந்து அதிகரித்து வந்தன. கட்டுமானப் பணிகளைப் பார்க்கும் போதுநாட்டுமக்கள் மனதில் ஒரு புதிய நம்பிக்கையும் எழுச்சியும் ஒவ்வொரு நாளும் ஏற்பட்டு வந்தது. பல நூற்றாண்டுகளாக நாம் காத்துவந்த  பொறுமையின் விளைவாக நமது கலாச்சாரத்தின் வேரை இன்று திரும்பப் பெற்றுள்ளோம்இன்று நமக்கு ஸ்ரீ ராம பிரானின் கோயில் வாய்க்கப் பெற்றுள்ளது. அடிமைத்தன மனநிலையை உடைத்து எழுந்த ஒரு தேசம்கடந்த காலத்தின் ஒவ்வொரு அடியிலிருந்தும் உத்வேகம் பெற்ற ஒரு தேசம்இந்த வழியில் ஒரு புதிய வரலாற்றைப் படைக்கிறது. இனி ஆயிரம் ஆண்டுகள் கடந்தும்மக்கள் இந்த  நாளைப் பற்றிஇந்த அற்புதமான தருணத்தைப் பற்றிப் பேசுவார்கள். அதைவிட  இந்த நொடியில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பதும்நடப்பதைக் காண்பதற்குக் கிடைத்துள்ள அரிய வாய்ப்பு நமக்கெல்லாம்  எவ்வளவு பெரிய கருணை என்பதை வார்த்தைகளில் விவரிக்க இயலாது. இன்றைய தினம்இந்த சமயம்இந்த இடம் அனைத்தும் தெய்வீகம் நிறைந்தவை. இவை சாதாரண காலங்கள் அல்ல. காலச் சக்கரத்தில் கரையாத மை கொண்டு காலம் வரைந்த  அழியாத நினைவுக் கோடுகள். 

 

நண்பர்களே,

 

ராமரின் தடம் எங்கு பதிகிறதோஅங்கே காற்றின் புதல்வரான  ஹனுமன் நிச்சயமாக வந்திருப்பார்  என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனவேராம்பக்த ஹனுமானுக்கும்அயோத்தியில் இருக்கும் ஹனுமன்கரி ஆலயத்திற்கும் நான் தலைவணங்குகிறேன். சீதாதேவிலக்ஷ்மணர்பரதன் மற்றும் சத்ருகன் ஆகியோருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். புனித அயோத்தி நகரம் மற்றும் புனித சரயு நதி ஆகியவற்றுக்கும்  நான் தலைவணங்குகிறேன். யாருடைய ஆசீர்வாதத்துடன் இந்த மகத்தான பணி நிறைவேறியது என்பதை இந்தத் தருணத்தில் நான் தெய்வீகமாக உணர்கிறேன்... இந்த நேரத்தில் அந்த தெய்வீக ஆத்மாக்கள்அந்த தெய்வீக ஆளுமைகள் நம்மைச் சுற்றி நிறைந்துள்ளன. இந்த திவ்யமான உணர்வுகள் அனைத்திற்கும் நான் நன்றியுடன் தலைவணங்குகிறேன். ஸ்ரீராம பிரானிடம் நான் இன்று மன்னிப்பு கேட்டுக் கொள்ள வேண்டிய சூழலில் இருக்கிறேன். இத்தனை நூற்றாண்டுகளாக இந்தப் பணியை நம்மால் நிறைவேற்றி முடிக்க முடியவில்லையே என்பதோடு நமது கடின உழைப்புதியாகம்தவம் ஆகியவற்றில் ஏதோ குறை இருந்திருக்க வேண்டும் என்பதை உணர்வதாலும் இந்த மன்னிப்பை நான் அவரிடம் கோருகிறேன். இன்று அந்தக் குறை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. ராம பிரான் இன்று நம்மை மன்னிப்பார் என்று நம்புகிறேன். 

 

எனதருமை நாட்டு மக்களே,

 

திரேதாவுக்கு ராமர் வருகையை முன்னிட்டு துளசிதாசர் அவர்கள் பிரபு பிலோகி ஹர்ஷே புர்பாசி” என்று எழுதியிருக்கிறார். ஜனித் வியோக பிபதி சப் நாசி”. அதாவதுஇறைவனின் வருகையைக் கண்டதும்அயோத்தி மக்களும்நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியால் நிறைந்தனர் என்பது அதன் பொருளாகும். நீண்ட காலமாக பிரிந்திருந்ததால் ஏற்பட்டிருந்த ஆதங்கம் முடிவுக்கு வந்தது. அந்தக் காலகட்டத்தில்அந்தப் பிரிவு 14 ஆண்டுகள் மட்டுமேஅப்போதும் கூட அது தாங்க முடியாததாக இருந்தது. இந்த சகாப்தத்தில்அயோத்தியும் நாட்டு மக்களும் பல நூறு ஆண்டுகள் ஸ்ரீராம பிரானை  விட்டுப் பிரிந்திருக்கும் பிரிவை அனுபவித்துள்ளனர். பல தலைமுறைகள் இந்தப் பிரிவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. அதேநேரத்தில் இந்திய அரசியல சாசனத்தின் முதல் பிரதியில் ஸ்ரீராம பிரானுக்கு இடம் அளிக்கப்பட்டு இருக்கிறது. அரசியல் சாசனம் நடைமுறைக்கு   வந்த பிறகும்ஸ்ரீ ராம பிரானின் தங்குமிடம் குறித்து பல தசாப்தங்களாக சட்டப் போர் நடந்தது. நீதிக்கு ஏற்பட்ட அவமானத்தை துடைத்தெறிந்த  இந்திய நீதித்துறைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். நீதிக்கு சாட்சியாக நிற்கும் ராமர் கோயிலும் நியாயமான முறையில் கட்டப்பட்டுள்ளது. 

 

நண்பர்களே,

 

இன்றுஒவ்வொரு கிராமத்திலும் ஒரே நேரத்தில் கீர்த்தனைகளும் சங்கீர்த்தனங்களும் நடத்தப்படுகின்றன. இன்று கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறுகின்றனதூய்மை இயக்கங்கள் நடத்தப்படுகின்றன. நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இன்று மாலை வீடு வீடாக ராம ஜோதியை ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நேற்றுஸ்ரீராம பிரானின் ஆசியுடன்தனுஷ்கோடியில் ராமர் சேது தொடங்கும் இடமான அரிச்சல் முனையில் இருந்தேன். ராமர் கடலைக் கடக்கச் சென்ற தருணம் காலச் சக்கரத்தை மாற்றிய தருணம். அந்த உணர்ச்சிகரமான தருணத்தை உணர நான் எடுத்த தாழ்மையான முயற்சியாக அங்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன். அப்போது காலச்சக்கரம் எப்படி மாறியதோஅதேபோல் இப்போது காலச்சக்கரம் மீண்டும் மாறி மங்களகரமான திசையில் சுழலும் என்ற நம்பிக்கை எனக்குள் உதித்தது. எனது 11 நாள் உண்ணாவிரத சம்பிரதாயத்தின் போதுராமரின் கால்கள் தடம்பதித்த இடங்களில் எல்லாம் அவரது காலடிச்சுவடுகளை தொட்டு வணங்க முயற்சித்தேன். நாசிக்கில் உள்ள பஞ்சவடி தாம்கேரளாவின் புனித திரிப்பிரயார் கோயில்ஆந்திராவில் உள்ள லெபாக்ஷிஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீரங்கநாத சுவாமி கோயில்ராமேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீ ராமநாதசுவாமி கோயில்தனுஷ்கோடி என இந்த புனிதப் பயணம் தொடர்ந்தது… இந்த யாத்திரையில் கிடைத்த புண்ணியத்தின் மூலம்சாகரிலிருந்து சரயு வரை பயணம் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது எனது அதிர்ஷ்டம். சாகர் முதல் சரயு வரைராமரின் பெயரால் ஏற்படும் கொண்டாட்ட உணர்வு எங்கும் நிறைந்திருந்தது. இந்திய ஆன்மாவின் ஒவ்வொரு துகளிலும் ஸ்ரீராம பிரான் இணைந்து ஒளிர்கிறார். பாரத தேசத்து மக்களின் இதயத்தில் ராமர் சிம்மாசனமிட்டு வீற்றிருக்கிறார். இந்தியாவில் நாம் எங்காவது ஒருவரது மனசாட்சியை உணர இயன்றால்இந்த ஒற்றுமையை நம்மால் கண்டுணர இயலும்இந்த உணர்வு அங்கிங்கெனாதபடிஅனைத்து இடங்களிலும் காணப்படும். ஒரு நாட்டை வரையறுக்க இந்த மந்திரத்தை விட சிறந்தது என்ன இருக்க முடியும்?

 

எனதருமை நாட்டு மக்களே!

 

நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் பல்வேறு மொழிகளில் ராமாயணத்தைக் கேட்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததுஆனால்  குறிப்பாக கடந்த 11 நாட்களில்பல்வேறு மொழிகளில்பல்வேறு மாநிலங்களில் இருந்து ராமாயணத்தைக் கேட்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. ராமரை வரையறுக்கும் போதுமுனிவர்கள் கூறியுள்ளனர் - ரமந்தே யஸ்மின் இதி ராம: அதாவதுஒருவருக்குள் ஒருவராக யார் ஆழப் பதிந்து விடுகிறாரோ அவரே ராமர். பண்டிகைகள் முதல் பாரம்பரியங்கள் வரை உலகின் நினைவுகளிலும் ராமர் எங்கும் நிறைந்துள்ளார். ஒவ்வொரு யுகத்திலும் மக்கள் ராமருடன் இயைந்து  வாழ்ந்திருக்கிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும்மக்கள் தங்கள் சொந்த வார்த்தைகளில்தங்கள் சொந்த வழிகளில் ராமரை வெளிப்படுத்தியுள்ளனர். ராமபிரான் மீதான இந்த நேசம் ஜீவநதியாக ஓயாமல் ஓடிக்கொண்டே இருக்கிறது. பண்டைய காலங்களிலிருந்துஇந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் மக்கள் ராமரை ஜெபித்து வருகின்றனர். ராமனின் கதை எல்லையற்றதுஇராமாயணமும் எல்லையற்றது. ராமரின் கொள்கைகள்ராமரின் மதிப்பீடுகள்ராமரின் போதனைகள் என எல்லாமும் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறது.

 

எனதருமை நாட்டு மக்களே,

 

இன்றுஇந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நேரத்தில்இதற்காக உழைத்த  அந்த ஆளுமைகளை நாடு நினைவு கூர்கிறதுயாருடைய பணி மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக இந்த புனிதமான நாளை நாம் இன்று காண்கிறோமோஅந்த ஆளுமைகள் காரணமாக  ராம பிரானின் இந்த ஆலய நிர்மாணத்தில்  தியாகம் மற்றும் தவத்தின் உச்சத்தைப் பலர் எடுத்துக் காட்டியுள்ளனர். எண்ணற்ற ராம பக்தர்கள்எண்ணற்ற கரசேவகர்கள்எண்ணற்ற துறவிகளுக்கு நாம் கடன்பட்டிருக்கிறோம். 

 

நண்பர்களே,

 

இன்றுஉலகம் முழுவதும் இந்த ராமர் கோயில் பிரதிஷ்டை நிகழ்வுடன் இணைக்கப்பட்டுள்ள விதத்தில்எங்கும் நிறைந்திருக்கும் ராமரின் தன்மை எல்லோராலும் உணரப்படுகிறது. இந்தியாவில் இருப்பது போலவே பல நாடுகளிலும் இதே மகிழ்ச்சிஇதே கொண்டாட்டம்தான். இன்றுஇந்த அயோத்தி பண்டிகை, உலகளாவிய ராமாயண பாரம்பரியத்தின் கொண்டாட்டமாகவும் மாறியுள்ளது. குழந்தை ராமரின் இந்த கவுரவம் 'வசுதைவ குடும்பகம்என்ற கொள்கைக்கு கிடைத்த கௌரவமாகும்.

 

நண்பர்களே,

 

இன்றுஅயோத்தியில்ஸ்ரீ ராமரின் விக்ரஹ வடிவத்தின் கும்பாபிஷேகம் மட்டுமே நடக்கவில்லை. ஸ்ரீ ராமரின் வடிவத்தில் இந்திய கலாச்சாரத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கைக்கு இது  கவுரவத்தை ஏற்படுத்துகிறது. இது மனித விழுமியங்கள் மற்றும் மிக உயர்ந்த லட்சியங்களின் பிரதிஷ்டை ஆகும். இந்த விழுமியங்கள்இந்த லட்சியங்கள் இன்று உலகம் முழுவதற்கும் தேவைப்படுகின்றன. சர்வே பவந்து சுகினா: பல நூற்றாண்டுகளாக இந்தத் கருத்துகளை நாம் மீண்டும் மீண்டும் கூறி வருகிறோம். இன்றுஅதே கருத்து ராமர் கோவில் வடிவில் ஓர் உறுதியான வடிவத்தைப் பெற்றுள்ளது. இந்த ஆலயம் கடவுளின் கோவில் மட்டுமல்ல. இது இந்தியாவின் தோற்றம்இந்தியாவின் தத்துவம் மற்றும் இந்தியாவின் பாதையை உணர்த்தும் கோயில். இது ராமர் வடிவில் தேசிய உணர்வை வெளிப்படுத்தும் கோயில்.  ராமர் இந்தியாவின் நம்பிக்கைராமர் இந்தியாவின் அடித்தளம். ராமர் இந்தியாவின் நீதிராமர் இந்தியாவின் சட்டம்ராமர் இந்தியாவின் உணர்வுராமர் இந்தியாவின் சிந்தனை, ராமர் இந்தியாவின் கௌரவம்ராமர் இந்தியாவின் கம்பீரம். ராமர் ஒரு நீரோட்டம்ராமர் ஒரு விளைவு. ராமருக்கான கொள்கையும் உண்டு. ராம நீதியும் உண்டு. ராமரோ நித்தியமானவர். ராமர் முடிவில்லாத தொடர்ச்சியாக நீண்டு நிலைத்திருக்கிறார். ராமர் திறன்மிக்கவர்தெளிவானவர். ராமர் இந்தப் பிரபஞ்சத்தில் எங்கும் வியாபித்திருக்கிறார். எனவேராமருக்குப் புகழ் உண்டாகும்போதுஅவரது செல்வாக்கு பல ஆண்டுகள் அல்லது நூற்றாண்டுகளுக்கு மட்டுமே நீடிப்பதில்லை. அதன் விளைவு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு இருக்கும். மகரிஷி வால்மீகி இப்படித்தான் எழுதியிருக்கிறார் - ராஜ்யம் தாஸ ஸஹஸ்ராணி ப்ரப்ய வர்ஷாணி ராகவ: அதாவதுராமர் பத்தாயிரம் ஆண்டுகள் ராஜ்யத்தில் சிறந்து விளங்கினார். அதாவதுராமராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டு ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆகின்றன. த்ரேதாயுகத்தில் ராமர் வந்தபோதுராம ராஜ்யம் பல்லாயிரம் ஆண்டுகளாக ஸ்தாபனை செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகராமர் உலகிற்கு வழிகாட்டி வந்தார்.

 

எனதருமை நாட்டு மக்களே,

 

இன்று அயோத்தி நிலம் நம் அனைவரிடமும்ஒவ்வொரு ராம பக்தரிடமும்ஒவ்வொரு இந்தியரிடமும் சில கேள்விகளைக் கேட்கிறது. ஸ்ரீராமருக்கு பிரம்மாண்டமான கோயில் கட்டப்பட்டது. அடுத்து என்னநூற்றாண்டு கால காத்திருப்பு முடிந்துவிட்டது... அடுத்து என்னஇன்றைய இந்த சந்தர்ப்பத்தில்நம்மை ஆசீர்வதிக்க வந்தநம்மைக் கண்காணிக்கும் தெய்வீக ஆத்மாக்களைத் திருப்பி அனுப்பிவிடுவோமாஇல்லைஇல்லவே இல்லை. காலச் சக்கரம் மாறிக் கொண்டேயிருக்கிறது என்பதை இன்று நான் முழுமையான இதயசுத்தியுடன் உணர்கிறேன். காலத்தால் அழியாத பாதையின் சிற்பிகளாக நமது தலைமுறை தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஒரு மகிழ்ச்சியான தற்செயல் நிகழ்வு. ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தலைமுறை தேச நிர்மாணம் என்ற நமது இன்றைய பணியை நினைவில் கொள்ளும். அதனால்தான் சொல்கிறேன் – இதுதான் சரியான நேரம்மிகச்சரியான நேரம். இந்தப் புனித காலத்திலிருந்து அதாவது இன்றிலிருந்து அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கான அடித்தளத்தை நாம் அமைக்க வேண்டும். ஆலய கட்டுமானத்தையும் தாண்டிஇப்போது நாட்டுமக்களாகிய நாம் அனைவரும்இந்தக் கணம் முதல்ஒரு திறன்மிக்கதிறமையானமகத்தானதெய்வீக பாரதத்தை நிர்மாணிக்கும் கடமையை ஏற்றுக் கொள்கிறோம்.  ராமரின் சிந்தனைகள் 'நமது மனதிலும் பொதுக் கருத்தாகவும்இருக்க வேண்டும்இது தேச நிர்மாணத்தின் ஏணி.

 

நண்பர்களே,

 

இன்றைய யுகம் நம் மனசாட்சியை விரிவுபடுத்த வேண்டும். நம் பிரக்ஞையை விரிவுபடுத்தி... கடவுளிடமிருந்து நாட்டிற்குராமரிடமிருந்து தேசத்திற்கு என்ற வகையில்,  ஹனுமான் மீதான பக்திஹனுமானுக்கான சேவைஹனுமானுக்கான அர்ப்பணிப்புஇவை நாம் வெளியில் தேட வேண்டிய அவசியமில்லாத குணங்கள். ஒவ்வொரு இந்தியரிடமும் உள்ள இந்த பக்திசேவை மற்றும் அர்ப்பணிப்பு வெளிப்பாடுகள் ஒரு திறமையானமகத்தான மற்றும் தெய்வீக இந்தியாவின் அடிப்படையாக மாறும். கடவுளிடமிருந்து நாட்டு உணர்வும்ராமனிடமிருந்து தேசத்தின் உணர்வும் விரிவடைவது ஏற்பட வேண்டும்! தொலைதூரக் காட்டில் ஒரு குடிசையில் வசிக்கும் என் பழங்குடித் தாய் சபரியின் நினைவில்இணையற்ற நம்பிக்கை விழித்தெழுகிறது. அன்னை சபரி நீண்ட காலமாகக் கூறுவதுண்டு – ராமர் வருவார். ஒவ்வொரு இந்தியனிடமும் பிறக்கும் இந்த நம்பிக்கைஆற்றல்மிக்கமகத்தானதெய்வீகமான பாரதத்திற்கு அடிப்படையாக அமையும்.  கடவுளிடமிருந்து நாட்டிற்கும்ராமனிடமிருந்து தேசத்திற்கும் தேசத்தின் உணர்வு விரிவடைவதே இதன் பொருளாகும். நிஷாத்ராஜின் நட்பு அனைத்து பந்தங்களையும் கடந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ராமர் மீது நிஷாத்ராஜுக்கு இருந்த ஈர்ப்புநிஷாத்ராஜ் மீது ராமருக்கு இருந்த ஈர்ப்பு அத்தனை அசலானது. அனைவரும் சமம் என்பதே அந்த கோட்பாடு.

 

ஒவ்வொரு இந்தியனுக்கும் இருக்கும் இந்த சொந்தம் மற்றும் சகோதரத்துவ உணர்வுஒரு திறமையானமகத்தானதெய்வீக இந்தியாவின் அடிப்படையாக மாறும். கடவுளிடமிருந்து நாட்டிற்கும்ராமனிலிருந்து தேசத்திற்கும் தேசத்தின் உணர்வு விரிவடைவதே இதன் பொருளாகும்.

 

நண்பர்களே,

 

இன்று நாட்டில் விரக்திக்கு இம்மியளவு கூட இடமில்லை. நான் மிகவும் சாதாரணமானவனாக இருக்கிறேன் என்றோநான் மிகவும் சிறியவன் என்றோயாராவது நினைத்தால்அவர் அணிலின் பங்களிப்பை நினைவில் கொள்ள வேண்டும். அணிலின் நினைவு நம் தயக்கத்தை நீக்கும்ஒவ்வொரு முயற்சியும்அது சிறியதோ பெரியதோஅதன் சொந்த பலம்அதன் சொந்த பங்களிப்பு ஆகியவையின் அடிப்படையிலானது என்பதை நமக்குக் கற்பிக்கும். ஒவ்வொருவரின் முயற்சிகளின் இந்த உணர்வுஆற்றல்மிக்கமகத்தானதெய்வீகமான பாரதத்தின் அடிப்படையாக அமையும். கடவுளிடமிருந்து நாட்டிற்கும்ராமரிலிருந்து தேசத்திற்கும் தேசத்தின் உணர்வு விரிவடைவதே இதன் பொருளாகும்.

 

நண்பர்களே,

 

இலங்கை அரசர் ராவணன் மிகவும் அறிவாளியாகவும்அபரிமிதமான சக்தி படைத்தவராகவும் இருந்தார். ஆனால் ஜடாயுவின் விசுவாசத்தைக் கண்டால்அவர் மகாபலி ராவணனுடனேயே மோதினார். தன்னால் ராவணனை வெல்ல முடியாது என்பது அவருக்குத் தெரிந்திருந்தும் ராவணனுக்கு சவால் விட்டார். கடமையின் இந்த உயரம்தான் ஆற்றல்மிக்கவலுவானமகத்தானதெய்வீகமான பாரதத்தின் அடிப்படையாகும். கடவுளிடமிருந்து நாட்டிற்கும்ராமரிலிருந்து தேசத்திற்கும் தேசத்தின் உணர்வு விரிவடைதல் என்பது  இதுதான். நமது வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் தேச நிர்மாணத்திற்காக அர்ப்பணிப்போம் என்று நாம் உறுதியேற்போம். ராமரின் பணியுடன் தேசத்திற்கான பணியும் இணைந்து  ஒவ்வொரு கணமும்உடலின் ஒவ்வொரு துகளும்ராமருக்காக அர்ப்பணிப்பது தேசத்திற்கு அர்ப்பணிப்பு என்ற இலக்குடன் இணைக்கப்படும். 

 

எனதருமை நாட்டு மக்களே,

 

ஸ்ரீராமரை வழிபடுவது விசேஷமாக இருக்க வேண்டும். இந்த வழிபாடு ஆத்மாவுக்கு அப்பாற்பட்டு முழுமையானதாக இருக்க வேண்டும். செருக்கின் பொருட்டன்றி சுயத்திற்காக இந்த பூஜையை செய்ய வேண்டும். இறைவனுக்கு அர்ப்பணிக்கப்படும் காணிக்கைவளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான நமது கடின உழைப்பின் உச்சமாகவும் இருக்கும். தினசரி வீரம்ஆண்மை, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் காணிக்கைகளை நாம் ராமருக்கு வழங்க வேண்டும். அவர்கள் ஒவ்வொரு நாளும் ராமரை வழிபட வேண்டும்அப்போதுதான் இந்தியாவை புகழ்பெற்றதாகவும்வளர்ச்சியடைந்ததாகவும் மாற்ற முடியும். 

 

எனதருமை நாட்டு மக்களே,

 

இதுதான் இந்தியாவின் வளர்ச்சியின் 'அமிர்த காலம்'. இன்று இந்தியா இளைஞர் சக்தியும் ஆற்றலும் நிறைந்த நாடாக உள்ளது. இதுபோன்ற நேர்மறையான சூழ்நிலைகள் உருவாக எவ்வளவு காலம் எடுக்கும் என்பதை யாரறிவார். எனவேநாம் இப்போது தவறவிடக்கூடாது. நாம் இனி ஓய்வெடுக்க அவகாசம் இல்லை. நமது நாட்டின் இளைஞர்களுக்கு நான் கூற விரும்புவது. ஆயிரக்கணக்கான ஆண்டுகால பாரம்பரியத்தின் உத்வேகம் உங்கள் முன் உள்ளது. இந்தியாவின் அந்த தலைமுறையின் பிரதிநிதி நீங்கள்தான்... அந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர் நிலவின் மீது மூவர்ணக் கொடியை ஏற்றுகிறார்15 லட்சம் கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்கிறார்சூரியனுக்கு அருகில் செல்கிறார்மிஷன் ஆதித்யாவை வெற்றிகரமாக்குகிறார்அதாவது வானத்தில் தேஜஸ், கடலில் விக்ராந்த்... கொடி உயர பறக்கிறது. உங்கள் பாரம்பரியத்தின் மீது பெருமிதம் கொண்டுநீங்கள் 'இந்தியாவின் புதிய உதயம்என்று உங்களை நிரூபிக்க வேண்டும். பாரம்பரியத்தின் தூய்மை மற்றும் நவீனத்தின் எல்லையற்ற பாதை ஆகிய இரண்டையும் பின்பற்றுவதன் மூலம் இந்தியா வளம் என்ற இலக்கை எட்டும்.

 

எனதருமை நாட்டு மக்களே,

 

வரவிருப்பது வெற்றிக்கான நேரம். வரவிருப்பது சாதனைக்கான நேரம். இந்த பிரம்மாண்டமான ராமர் கோவில் இந்தியாவின் எழுச்சிக்கும்இந்தியாவின் உத்வேகத்திற்கும் சாட்சியாக நிற்கும்இந்த பிரம்மாண்டமான ராமர் கோவில் ஒரு பிரம்மாண்டமான தேசமாக இந்தியா உருப்பெற்று நிற்பதற்கு சாட்சியாக இருக்கும்வளர்ச்சியடைந்த இந்தியாவின் உயர்வுக்கு சாட்சியாக இருக்கும்! நோக்கத்தில் உண்மையிருந்தால்முயற்சியில் கூட்டு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட சக்தி இருந்தால்எண்ணியிருந்த இலக்கை எட்டுவது சாத்தியமற்றதல்ல என்று இந்த ஆலயம் கற்பிக்கிறது. இது இந்தியாவின் பொற்காலம்இந்தியா முன்னேற விழைகிறது. பல நூற்றாண்டு காத்திருப்புக்குப் பிறகு நாம் இந்த இலக்கை எட்டியுள்ளோம். இந்த சகாப்தம்இந்தக் காலகட்டத்திற்காக நாம் அனைவரும் நீண்ட நெடுங்காலமாக காத்திருந்தோம். நாங்கள் இனி ஓய்வெடுப்பது என்பது இல்லை. வளர்ச்சியின் உச்சத்தைத் தொடர்ந்து எட்டுவோம். இந்த உணர்வுடன்நான் குழந்தை ராமரின் தளிர்ப்பாதங்களில் தலைவணங்குகிறேன்உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். அனைத்து மகான்களின் பாதங்களுக்கும் என் வணக்கம்.

 

ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும்

ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும்

ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும்

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
PM gifts Putin Russian version of Tamil text 'Thirukkural'

Media Coverage

PM gifts Putin Russian version of Tamil text 'Thirukkural'
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
We must strive to transform the Global South from rule-takers into rule-shapers: PM Modi at BRICS Summit Session – 1
September 12, 2026

Your Highness,
Excellencies,
नमस्कार!

भारत में आप सभी का स्वागत और अभिनंदन करते हुए मुझे अत्यंत खुशी हो रही है।

भारत की ब्रिक्स अध्यक्षता people-centric और humanity first approach पर आधारित है। Resilience, Innovation, Cooperation और Sustainability हमारी प्राथमिकताएं रही हैं। इन प्राथमिकताओं के साथ, हमने BRICS सहयोग को सामान्य जन से जोड़ने पर विशेष बल दिया है।

इसी सोच के साथ साढ़े तीन सौ से अधिक बैठकों का आयोजन किया गया। लगभग तीस शहरों में आपकी टीम्स का स्वागत करने का हमें अवसर मिला। भारत की ब्रिक्स अध्यक्षता को सफल बनाने में सक्रिय योगदान और समर्थन के लिए मैं आप सभी का हार्दिक आभार व्यक्त करता हूँ।

Friends,

इस वर्ष की ब्रिक्स Summit एक ऐतिहासिक पड़ाव है। हम ब्रिक्स की बीसवीं वर्षगांठ मना रहे हैं। मानव जीवन में बीस वर्ष की आयु, maturity और responsibility के नए चरण का आरंभ होती है। यह वह अवस्था होती है, जब सपनों के साथ जिम्मेदारियाँ जुड़ती हैं, सामर्थ्य को नई दिशा मिलती है।

आज ब्रिक्स भी अपने ‘coming of age’ के क्षण में है। पिछले बीस वर्षों में ब्रिक्स ने वैश्विक मंच पर अपनी विशिष्ट पहचान बनाई है। हम एक-दूसरे के दृष्टिकोण का सम्मान करते हैं और consensus से आगे बढ़ते हैं। हम किसी के विरुद्ध नहीं, बल्कि सबको साथ लेकर चलने की सोच के साथ आगे बढ़ने का प्रयास करते हैं।

अब समय है, कि हम ब्रिक्स में हमारी एकता और सहमति को वैश्विक मंच पर ठोस परिणामों में बदलें। अगले बीस वर्षों के लिए हमें एक नए और ambitious agenda पर काम करना होगा। इसकी शुरुआत हमें अपने खुद के वर्किंग सिस्टम से करनी होगी।

ब्रिक्स की अध्यक्षता हर वर्ष बदलती है, किन्तु इसकी वजह से हमारा institutional momentum नहीं रुकना चाहिए। मैं BRICS Continuity and Implementation Mechanism का प्रस्ताव रखता हूँ। इसके तहत Troika के माध्यम से सभी initiatives और outcomes का follow up हो सकेगा।

हम एक secure digital repository बना सकते हैं। इसमें हर निर्णय के साथ nodal point, समय-सीमा और implementation status दर्ज किया जा सकता है।

Friends,

ब्रिक्स को मजबूत करते हुए, हमें global reform की दिशा भी तय करनी होगी। Global Governance का वर्तमान structure, एक pyramid जैसा दिखाई देता है। इसके ऊपरी भाग में power और decision making केंद्रित हैं, और निचले भाग में वे देश हैं जो इन decisions से प्रभावित तो होते हैं, लेकिन उन्हें आकार नहीं दे पाते।

Global South आज वैश्विक संकटों की front row में है, लेकिन decision-making की back row में। हमें इस “pyramid of privilege” को “platform of partnership” में बदलना है, जहां हर देश की आवाज़ हो, हर सदस्य का stake हो और हर प्रयास के केंद्र में मानवता का विकास हो।

इस उद्देश्य से मैं प्रस्ताव रखता हूँ कि हम मिलकर global governance reform के दस proposals तैयार करें, जिसे हम अगली Summit तक एक BRICS Reform Roadmap का रूप देने का प्रयास कर सकते हैं।

इस roadmap को बनाने में हमें तीन मुख्य पहलुओं- Representation, Responsiveness and Rule-making का ध्यान रखना होगा।

पहला, Representation के संबंध में मैं कहना चाहूंगा, UN Security Council में reform अब और टाला नहीं जा सकता। इस विषय पर text-based negotiations को निश्चित समय-सीमा और स्पष्ट परिणाम से जोड़ना होगा।

उसी तरह, financial institutions में voting power, leadership positions और policy priorities आज की इकोनॉमिक रियेलिटीज़ के अनुसार होनी चाहिए। जो देश global economic growth को गति देते हैं, उन्हें global economic governance को दिशा देने में भी उचित भूमिका मिलनी चाहिए।

दूसरा, Responsiveness। वैश्विक संस्थानों में मानवता का विश्वास तभी बनेगा जब वे समस्याओं का प्रभावी समाधान करने में सक्षम होंगे। हमें collective response के speed, scale और last mile impact पर ध्यान देना होगा।

Seafarers का वैश्विक व्यापार में बहुत बड़ा योगदान है, किन्तु अक्सर मुश्किल समय में उन्हें सहारे की कमी महसूस होती है। मेरा प्रस्ताव है कि क्या हम Seafarers Emergency Support Network बना सकते हैं? इसके माध्यम से संबंधित देशों की Maritime authorities और missions को जोड़ा जाएगा। इससे distress alerts, medical assistance, परिवारों को सूचना तथा evacuation में सहयोग दिया जा सकता है।

और तीसरी मैं कहना चाहता हूँ Rule Making के संबंध में। भविष्य के global rules तय करने में समान भागीदारी सुनिश्चित करना अत्यंत महत्वपूर्ण है।

AI, cyberspace, outer space, biotechnology और critical technologies, भविष्य के अवसरों के साथ भविष्य के नियम भी तय कर रहे हैं।

हमें ग्लोबल साउथ को rule-taker से rule-shaper बनाने के लिए प्रयास करने होंगे। ब्रिक्स के माध्यम से हम ग्लोबल साउथ के देशों के युवा diplomats और policymakers को negotiations skills, practical training और legal expertise प्रदान कर सकते हैं।

सुखद संयोग से आज United Nations Day for South-South Cooperation है। Global South को समर्पित इस दिन पर ऐसा निर्णय लिया जाना विशेष महत्व रखता है। भारत इस विषय में lead लेने के लिए तैयार है।

Friends,

भारत में आयोजित इस ब्रिक्स समिट का संदेश स्पष्ट होना चाहिए: यदि हमारा भविष्य साझा है, तो उसके निर्माण का अधिकार भी साझा होना चाहिए।

From voice to impact. From privilege to partnership.

यही ब्रिक्स at 20 का संकल्प हो।

बहुत-बहुत धन्यवाद।