பகிர்ந்து
 
Comments
வங்கியில் பணம் போடுபவர் மற்றும் முதலீட்டாளர் ஆகிய இருவருக்கும் நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதே எங்களது முன்னுரிமை: பிரதமர்
வெளிப்படைத்தன்மையற்ற கடன் கலாச்சாரத்திலிருந்து நாட்டை விடுவிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன: பிரதமர்
நிதி உட்புகுத்தலுக்குப்பின், நிதி மேம்பாட்டை நோக்கி நாடு வேகமாக செல்கிறது: பிரதமர்

நிதி சேவைகள் தொடர்பான பட்ஜெட் விதிகளை திறம்பட அமல்படுத்துவது குறித்த இணைய கருத்தரங்கில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், தனியார் பங்களிப்பை எவ்வாறு விரிவுபடுத்துவது, பொதுத்துறை நிறுவனங்களை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது பற்றி மத்திய நிதிநிலை அறிக்கையில், தெளிவான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என கூறினார். நாட்டின் நிதித்துறை குறித்து அரசின் தொலைநோக்கு மிக தெளிவாக உள்ளதாக அவர் கூறினார்.

வங்கியில் பணம் போடுபவர்கள், முதலீட்டாளர்களிடம் நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கு நாங்கள் அதிக முன்னுரிமை அளிக்கிறோம். வங்கி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் பழைய நடைமுறைகள் எல்லாம் மாற்றப்படுகின்றன.

10-12 ஆண்டுகளுக்கு முன்பு, தீவிர கடன் அளிப்பு என்ற பெயரில், நாட்டின் வங்கி மற்றும் நிதி துறைகள் கடுமையாக பாதித்தன. வெளிப்படைத் தன்மையற்ற கடன் கலாச்சாரத்திலிருந்து நாட்டை விடுவிக்கும் நடவடிக்கைகள் ஒவ்வொன்றாக எடுக்கப்படுகின்றன. வாராக் கடன்கள் எல்லாம் ஒழிக்கப்படுவதற்கு பதில், ஒரு நாள் வாராக் கடனை கூட தற்போது தெரிவிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

தொழில்களின் நிலையற்ற தன்மையை அரசு புரிந்து கொண்டுள்ளதாகவும், தீய நோக்கத்துடன் வர்த்தக முடிவுகள் எடுக்கப்படுவதில்லை என்பதை அரசு உணர்ந்து கொள்வதாக பிரதமர் கூறினார். இது போன்ற சூழலில், மனசாட்சியுடன் எடுக்கப்படும் தொழில் முடிவுகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டியது அரசின் பொறுப்பு என்றும், இதை நாங்கள் தொடர்ந்து செய்வோம் என அவர் உறுதி அளித்தார்.

திவால் நிலை மற்றும் நொடிப்பு நிலை விதிமுறைகள் எல்லாம் கடன் அளிப்பவருக்கும், கடன் பெறுவோருக்கும் உறுதியை அளிக்கின்றன என அவர் கூறினார்.

 

நாட்டின் மேம்பாட்டுக்காக மக்களின் வருவாய் பாதுகாப்பு, ஏழைகளுக்கு, அரசின் பயன்கள் முழுவதுமாக கிடைக்கச் செய்வது, உள்கட்டமைப்பு தொடர்பான முதலீடுகளை ஊக்குவிப்பது போன்றவற்றுக்கு அரசு முன்னுரிமை அளிப்பதாக பிரதமர் கூறினார். கடந்த சில ஆண்டுகளாக, அறிமுகம் செய்யப்பட்ட அனைத்து நிதி சீர்திருத்தங்களும், இந்த முன்னுரிமைகளை பிரதிபலிக்கின்றன.

இந்தியாவின் நிதித்துறையை வலுப்படுத்தும் தொலைநோக்கை, மத்திய நிதி நிலை அறிக்கை செயல்படுத்துகிறது. நிதித்துறை உள்ளடக்கிய புதிய பொதுத் துறை கொள்கை சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என அவர் கூறினார். நமது பொருளாதாரத்தில், வங்கி மற்றும் காப்பீட்டுக்கு நிறைய சாத்தியங்கள் உள்ளன. இந்த சாத்தியங்களை கருத்தில் கொண்டு, இந்த நிதிநிலை அறிக்கையில், 2 பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது, காப்பீடு துறையில் 74 சதவீதம் வரை நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதிப்பது, எல்ஐசியின் பங்குகளை விற்பது உட்பட பல நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தனியார் நிறுவனங்கள் முடிந்தவரை ஊக்குவிக்கப்படுகின்றன. ஆனாலும், அதனுடன், வங்கி மற்றும் காப்பீடு பொதுத்துறை நிறுவனங்களின் தீவிர பங்களிப்பு நாட்டுக்கு இன்னும் தேவைப்படுகிறது.

பொதுத் துறையை வலுப்படுத்த, பங்கு மூலதன உட்செலுத்துதல் வலியுறுத்தப்படுகிறது. அதே நேரத்தில், வங்கிகளின் வாராக் கடன்களை கண்காணிக்க சொத்து மறுசீரமைப்பு முறை உருவாக்கப்படுகிறது. இது வங்கிகளின் வாராக் கடன்களை கண்காணித்து, கடன்கள் மீது தீவிர கவனம் செலுத்தும். இது பொதுத்துறை வங்கிகளை வலுப்படுத்தும்.

உள்கட்டமைப்பு மற்றும் தொழில் திட்டங்களுக்கு நீண்ட கால நிதி தேவைகளை நிறைவேற்ற உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான புதிய நிதி மேம்பாட்டு நிறுவனங்களை உருவாக்குவது பற்றியும் அவர் பேசினார்.

உள்கட்டமைப்பில் முதலீடு செய்ய அரசு நிதி, ஓய்வூதிய நிதி மற்றும் காப்பீடு நிறுவனங்களின் நிதியை ஊக்குவிப்பது பற்றியும் திரு மோடி பேசினார்.

தற்சார்பு இந்தியா, பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் பெரிய நகரங்களால் மட்டும் உருவாக்கப்படாது. சிறிய தொழில் முனைவோர் மற்றும் மக்களின் கடின உழைப்பால் கிராமங்களிலும் தற்சார்பு இந்தியா உருவாக்கப்படும்.

சிறந்த வேளாண் தயாரிப்புகளை உருவாக்கும் விவசாயிகளாலும், விவசாய குழுக்களாலும் தற்சார்பு இந்தியா உருவாக்கப்படும். நமது குறு,சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் தொடக்க நிறுவனங்களாலும் தற்சார்பு இந்தியா உருவாக்கப்படும். அதனால் கொரோனா காலத்தில், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

இந்த நடவடிக்கைகளால் 90 லட்சம் நிறுவனங்கள் ரூ.2.4 டிரில்லியன் அளவுக்கு கடன் பெற்றன. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்காக, வேளாண், நிலக்கரி மற்றும் விண்வெளித்துறையில் பல சீர்த்திருத்தங்களை அரசு மேற்கொண்டது என அவர் கூறினார்.

நமது பொருளாதாரம் விரிவடைந்து வருவதால், விரைவான வளர்ச்சிக்கு, கடன் வழங்குதலும் முக்கியம் என பிரதமர் கூறினார். புதிய தொடக்க நிறுவனங்கள் ஆய்வு மேற்கொள்ள, புதிய நிதி திட்டங்களை உருவாக்கியதற்காக நமது நிதி தொழில்நுட்ப தொடக்க நிறுவனங்களை அவர் பாராட்டினார்.

கொரோனா தொற்று காலத்தில், தொடக்க நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தில் நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம் பங்கேற்றதாக அவர் கூறினார்.

இந்த ஆண்டிலும், நிதித்துறையில் மிகச் சிறந்த உந்துதல் இருக்கும் என நிபுணர்களிடம் அவர் தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்தியது மற்றும் புதிய முறைகளை உருவாக்கியது ஆகியவை நாட்டின் நிதி உட்புகுத்தலில் மிகப் பெரியளவில் பங்காற்றின என பிரதமர் கூறினார்.

நாட்டில் 130 கோடி பேர் ஆதார் அட்டை வைத்திருப்பதாகவும், 41 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் ஜன் தன் வங்கி கணக்கு வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இவற்றில் 55 சதவீதம் கணக்குகளை பெண்கள் வைத்துள்ளனர். இவற்றில் ஒன்றரை கோடி ரூபாய் போடப்பட்டுள்ளது. முத்ரா திட்டம் மூலம், சிறு தொழில் முனைவோர்களுக்கு ரூ.15 லட்சம் கோடி கடன் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். இவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள், 50 சதவீதத்துக்கும் அதிகமானோர், பட்டியல் இனத்தவர்கள் மற்றும் பின்தங்கியவர்கள், பழங்குடியினர் மற்றும் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த தொழில் முனைவோர்கள்.

பிரதமரின் கிசான் ஸ்வாநிதி திட்டத்தின் கீழ் 11 கோடி விவசாய குடும்பங்கள் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் கோடியை, தங்கள் வங்கி கணக்கில் நேரடியாக பெற்றுள்ளனர் என பிரதமர் தெரிவித்தார். சாலையோர வியாபாரிகளுக்கான பிரதமரின் ஸ்வாநிதி திட்டம், இந்தப் பிரிவில், முதல் நிதி உட்புகுத்தல் நடவடிக்கை என பிரதமர் குறிப்பிட்டார்.

சுமார் 15 லட்சம் வியாபாரிகளுக்கு, ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான கடன் வழங்கப்பட்டுள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு எளிதில் கடன் பெற ட்ரட்ஸ் (TREDS), பிஎஸ்பி டிஜிட்டல் ( PSB Digital) போன்ற தளங்கள் உள்ளன. கிசான் கடன் அட்டைகள், சிறு விவசாயிகள், கால்நடை விவசாயிகள் மற்றும் மீனவர்களை போன்றோரை முறைசாரா கடனிலிருந்து விடுவித்துள்ளன.

இப்பிரிவினருக்காக புதுமையான நிதி திட்டங்களை உருவாக்கும்படி நிதி நிறுவனங்களை பிரதமர் கேட்டுக்கொண்டார். சுய உதவிக் குழுக்களின் திறன்களை சேவைகளில் இருந்து உற்பத்திக்கு மாற்ற வேண்டும் எனவும், அவர்களுக்கு நிதி வழங்குவது, ஊரக கட்டமைப்பு மேம்பாட்டுக்கு சிறந்த வழியாக இருக்கும் என அவர் ஆலோசனை கூறினார். இது நலத்திட்டம் மட்டும் அல்ல சிறந்த வர்த்தக மாதிரி என பிரதமர் கூறினார்.

நிதி உட்புகுத்தலுக்குப்பின், நிதி மேம்பாட்டை நோக்கி நாடு வேகமாக சென்று கொண்டிருக்கிறது என பிரதமர் கூறினார்.

உலகத்தரத்திலான நிதி மையம் ஐஎப்எஸ்சி கிப்ட் நகரில் உருவாக்கப்படுகிறது. இந்தியாவில் நவீன கட்டமைப்பை உருவாக்குவது நமது ஆசை மட்டும் அல்ல, தற்சார்பு இந்தியாவின் தேவை என பிரதமர் கூறினார்.

ஆகையால், இந்த நிதிநிலை அறிக்கையில், உள்கட்டமைப்புக்கு தைரியமான இலக்குகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த இலக்குகளை நிறைவேற்ற முதலீடுகளை கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என அவர் வலியுறுத்தினார். ஒட்டு மொத்த நிதித்துறையின் தீவிர ஆதரவுடன்தான், இந்த இலக்குகளை சாதிக்க முடியும் என அவர் கூறினார். நிதி அமைப்புகளை வலுப்படுத்த, தனது வங்கித்துறைகளை வலுப்படுத்த அரசு உறுதியுடன் உள்ளது.

வங்கி சீர்திருத்தங்கள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளன மற்றும் இது தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

 

 

 

 

 

 

 

 

 

 

Click here to read full text speech

'மன் கி பாத்' -ற்கான உங்கள் யோசனைகளையும் பரிந்துரைகளையும் உடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!
20 ஆண்டுகள் சேவை மற்றும் அர்ப்பணிப்பை வரையறுக்கும் 20 படங்கள்
Explore More
’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி
Indian startups raise $10 billion in a quarter for the first time, report says

Media Coverage

Indian startups raise $10 billion in a quarter for the first time, report says
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை அக்டோபர் 19, 2021
October 19, 2021
பகிர்ந்து
 
Comments

Citizens commended Indian Startups as they have emerged as new wealth creators under the strong leadership of Modi Govt.

India praised the impact of Modi Govt’s efforts towards delivering Good Governance