பிரான்ஸ் அதிபர்  இம்மானுவேல் மக்ரோனுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அன்பான வரவேற்பு அளித்துள்ளார், இந்தப் பயணம் இந்தியா-பிரான்ஸ் உறவுகளை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும்  என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தப் பயணத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ள பிரதமர் மோடி, மும்பையிலும் பின்னர் தில்லியிலும் நடைபெறும் சந்திப்புகள்  இரு நாடுகளுக்கும் இடையிலான உத்திசார் கூட்டாண்மைக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளின்  ஒத்துழைப்பு இரு நாடுகளுக்கும் மட்டுமின்றி, உலகளாவிய சமூகத்திற்கும் தொடர்ந்து பயனளிக்கும் என்பதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள  தனித்தனி பதிவுகளில், திரு  மோடி கூறியிருப்பதாவது:

“இந்தியாவுக்கு வருக!

உங்கள் வருகையையும், நமது இருதரப்பு உறவுகளை புதிய உயரத்திற்கு முன்னேற்றுவதையும் இந்தியா எதிர்நோக்குகிறது. நமது  விவாதங்கள் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதுடன்,  உலகளாவிய முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் என்று நான் நம்புகிறேன்.

மும்பையிலும் பின்னர் தில்லியிலும் சந்திப்போம், என் அன்பு நண்பர் இமானுவேல் மக்ரோன் அவர்களே.”

 

 

  “Bienvenue en Inde !

L’Inde se félicite de votre visite et entend donner un nouvel élan à notre partenariat stratégique. Je suis convaincu que nos discussions renforceront davantage la coopération dans divers secteurs et contribueront au progrès mondial.

À très bientôt à Mumbai, puis à Delhi, mon cher ami @EmmanuelMacron.”

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Parliament passes Jan Vishwas Bill 2026, decriminalising 717 offences, fines up to Rs 1 crore

Media Coverage

Parliament passes Jan Vishwas Bill 2026, decriminalising 717 offences, fines up to Rs 1 crore
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஏப்ரல் 3, 2026
April 03, 2026

India’s Sweet, Fast & High-Tech Revolution: FY26 Milestones That Signal Viksit Bharat Has Arrived