பிரதமர் திரு நரேந்திர மோடி பீகார் மாநில வாழ்வாதார கடன் கூட்டுறவு கூட்டமைப்பை நாளை (2 செப்டம்பர்) பிற்பகல் 12.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் தொடங்கிவைக்கிறார். இந்நிகழ்ச்சியில் இந்த கூட்டமைப்பின் வங்கி கணக்குக்கு 105 கோடி ரூபாயை பிரதமர் பரிமாற்றம் செய்கிறார்.
இந்த வாழ்வாதார நிதி கூட்டமைப்பு வாயிலாக இதில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு குறைந்த வட்டியில் கடனுதவி வழங்குவதை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது. தொகுதி நிலையிலான அமைப்புகள் மூலம் இந்த கடன் சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்வதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்தக் கடன் சங்கத்தில் செயல்பாடுகளுக்காக பீகார் மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து நிதியுதவி அளிக்கிறது.
வாழ்வாதாரத்திற்கான மகளிர் சுயஉதவிக் குழுக்களுடன் பெண் தொழில்முனைவோர்களை உருவாக்கும் வகையில் இது செயல்படுத்தப்படவுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஏராளமான சிறிய நிறுவனங்களுக்கும் இந்த கடன் சங்கம் கடனுதவி வழங்குகிறது. எனினும் பெண் தொழில்முனைவோர் குறு கடனுதவி வழங்கும் நிறுவனங்களையே சார்ந்துள்ளதால் அவை 18 முதல் 24 சதவீதம் வரை அதிக வட்டியை வசூலித்து வருகின்றன. இதற்கு மாற்று முறையாக இந்த ஜீவிகா வாழ்வாதார கடன் சங்கம் குறைந்த வட்டியில் ஏராளமான கடனுதவிகளை குறித்த நேரத்தில் வழங்குகிறது.
இந்த கடன் சங்கத்தின் செயல்பாடுகள் முழுவதும் டிஜிட்டல் தளத்தில் மேற்கொள்ளப்படவுள்ளதால் விரைவு மற்றும் வெளிப்படைதன்மை உறுதிசெய்வதுடன் இச்சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் நேரடி பணப்பரிமாற்றத்தை மேற்கொள்கிறது. இந்த கடன் சங்கத்தின் செயல்பாடுகளுக்காக 12,000 பேருக்கு தொடுதிரை கணினி வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த முன் முயற்சி கிராமப்புற மகளிரிடையே தொழில்முனைவுக்கான சிந்தனையை வலுப்படுத்துவதுடன் சமுதாய தலைமை அடிப்படையிலான நிறுவனங்களின் வளர்ச்சியை விரைவுபடுத்த உதவுகிறது. பீகார் மாநிலத்திலிருந்து 20 லட்சம் பெண்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர்.


