பிரதமர் திரு நரேந்திர மோடி 16-வது ஒருங்கிணைந்த கமாண்டர்கள் மாநாட்டை கொல்கத்தாவில் இன்று தொடங்கிவைத்தார். இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மாநாடு, இந்தியாவில் ராணுவ தயார் நிலையின் எதிர்கால மேம்பாட்டிற்கான அடிப்படை பணிகள் மற்றும் கருத்துகளை நாட்டின் உயர் சிவில் மற்றும் ராணுவத் தலைவர்கள் ஒருங்கிணைந்து பரிமாறிக் கொள்வது குறித்த ஆயுதப்படையினரின் உயர்நிலை கூட்டமாக அமைகிறது. ஆயுதப்படையினரின் தற்போதைய நவீனமயமாக்கல் மற்றும் மாற்றத்தக்க நடவடிக்கைகளையொட்டி `சீர்திருத்தங்கள் ஆண்டு- எதிர்காலத்திற்கான மாற்றங்கள்’ என்ற தலைப்பில் மாநாடு நடைபெறுகிறது.

ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்காகவும், நாட்டை கட்டமைத்தல், கடத்தலுக்கு எதிரான நடவடிக்கை, மோதல் நடைபெறும் பகுதிகளிலிருந்து இந்திய குடிமக்களை பாதுகாப்பாக அழைத்து வருதல், நட்பு நாடுகளுக்கு மனிதநேய உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் போன்ற பணிகளுக்காக ஆயுதப்படையினருக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். 2025-ம் ஆண்டு பாதுகாப்புதுறை 'சீர்திருத்தங்களின் ஆண்டாக' இருப்பதையொட்டி, எதிர்கால சவால்களை எதிர்கொள்ளவும், எந்தவொரு நிகழ்வையும் எதிர்கொண்டு வெற்றிபெறவும், சிறந்த ஒருங்கிணைப்பு, தற்சார்பு மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளை அடைவதற்கான உறுதியான நடவடிக்கைகளை விரைவாக செயல்படுத்துமாறு பிரதமர் பாதுகாப்பு அமைச்சகத்தை அறிவுறுத்தினார்.

சிந்தூர் நடவடிக்கையால் ஏற்படுத்தப்பட்ட புதிய இயல்பு சூழல், வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மற்றும் திட்டமிடல்களின் பின்னணி, எதிர்காலப் போர்முறைக்கான பின்னணியில் படைகளின் செயல்பாட்டுத் தயார்நிலை குறித்து பிரதமருக்கு எடுத்துரைக்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அமல்படுத்தப்பட்ட சீர்திருத்தங்கள் குறித்தும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான திட்டங்கள் குறித்தும் பிரதமர் ஆய்வு செய்தார்.

அடுத்த இரண்டு நாட்களில், பல்வேறு படைகளிடமிருந்து பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில் பல்வேறு கட்டமைப்பு, நிர்வாக மற்றும் செயல்பாட்டு அம்சங்கள், அதிகரித்து வரும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொள்ள ஆயுதப் படைகளின் தயார்நிலை மற்றும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்துவதற்கான செயல்திட்டத்தை உருவாக்குவதற்கான விவாதங்கள் குறித்து இம்மாநாடு முழுமையாக ஆய்வு செய்யும்.
Addressed the Combined Commanders’ Conference in Kolkata. In line with this year’s theme ‘Year of Reforms – Transformation for the Future’, discussed the steps being taken to further self-reliance in the sector and encourage modernisation. Appreciated the role of the armed forces… pic.twitter.com/6EFEg7f643
— Narendra Modi (@narendramodi) September 15, 2025




