மீண்டும் பயன்படுத்தக்கூடிய தன்னியக்க ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்ட இஸ்ரோவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ மற்றும் இந்திய விமானப் படையுடன் இணைந்து கர்நாடக மாநிலம் சித்திரதுர்காவில் உள்ள ஏரோநாட்டிக்கல் சோதனை மையத்தில் மறுபயன்பாட்டு ஏவுகணையை தன்னியக்கமாக தரையிறங்கச் செய்யும் பணியை ஏப்ரல் 2, 2023 அன்று அதிகாலை இஸ்ரோ வெற்றிகரமாக நடத்தியது.
இஸ்ரோவின் தொடர் ட்விட்டர் பதிவுகளுக்கு பதில் அளித்து பிரதமர் கூறியதாவது:
“அற்புதமான கூட்டு முயற்சி. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மறுபயன்பாட்டு ஏவுகணை என்ற இலக்கை எட்டுவதன் முதல் படியாக இந்த சாதனை அமைந்துள்ளது.”
A great team effort. This achievement takes us one step closer to realising an Indian Reusable Launch Vehicle. https://t.co/GvBs2THWwK
— Narendra Modi (@narendramodi) April 2, 2023


