ஜார்க்கண்ட் மாநிலம் பத்ராதுவில், தூய்மையான குடிநீர் அளிப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் பத்ராதுவில், 50 கோடி ரூபாய் செலவில் தண்ணீர் சுத்திகரிப்பு ஆலை மற்றும் நீர் தொட்டி அமைப்பதற்கானப் பணிகள் நிறைவடைந்தது பற்றி ஹசாரிபாக் மக்களவை உறுப்பினர் திரு ஜெயந்த் சின்ஹாவின் ட்விட்டர் பதிவை பகிர்ந்து பிரதமர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்:
"மிகவும் பாராட்டுக்குரிய முயற்சி! இந்தத் தூய்மையான தண்ணீர் வசதி ஜார்க்கண்டில் உள்ள பத்ராதுவில் உள்ள எங்கள் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் வாழ்க்கையை மிகவும் எளிதாக்கும்.”
बहुत ही सराहनीय प्रयास! स्वच्छ पानी की यह सुविधा झारखंड में पतरातू की हमारी माताओं और बहनों के जीवन को बहुत आसान बनाने वाली है। https://t.co/NKZw7Inymi
— Narendra Modi (@narendramodi) May 17, 2023


