செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, பிப்ரவரி 19, 2026 அன்று, ஹெலனிக் குடியரசின் (கிரேக்கம்) பிரதமர் திரு கைரியாகோஸ் மிட்சோடாகிஸை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். புதுதில்லியில் நடைபெறும் இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாடு 2026-இல் பங்கேற்பதற்காக, கிரேக்க பிரதமர், பிப்ரவரி 18 முதல் 19 வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பிரதமர் திரு மிட்சோடாகிஸ் உடன் டிஜிட்டல் ஆளுமை அமைச்சர் திரு டிமிட்ரியோஸ் பாப்பாஸ்டர்கியோ மற்றும் மூத்த அதிகாரிகள் குழுவும் வந்திருந்தது.

 

இருதரப்பு உத்திசார் கூட்டாண்மையின் முழு வரம்பையும் இரு தலைவர்களும் ஆய்வு செய்ததுடன், பல்வேறு துறைகளில் கூட்டாண்மை நிலையான வேகத்தில் வளர்ந்து வருவதைக் குறிப்பிட்டனர். பிராந்திய மற்றும் உலகளாவிய ஆர்வமுள்ள பிரச்சினைகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதுடன், புதிய ஆர்வமுள்ள துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான முன்னோக்கிச் செல்லும் வழிகள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர். இந்திய-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தின் (IMEC) கீழ் சமீபத்திய இணைப்பு முயற்சிகள் மற்றும் அவற்றை மேலும் விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை இருவரும் பாராட்டினர்.

 

அண்மையில் நடைபெற்ற உயர்மட்ட தலைவர்களின் வருகைகள், உத்தி சார்ந்த கூட்டு முயற்சிக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளதாகவும், சமீபத்தில் முடிவடைந்த இந்திய- ஐரோப்பிய ஒன்றிய தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர்கள் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.

 

பிரதமர் திரு மிட்சோடாகிஸ், இந்தியா வருவது, இது இரண்டாவது முறையாகும்.  இதற்கு முன்னர், பிப்ரவரி 2024 இல் அவர் இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டது, 15 ஆண்டுகளுக்குப் பிறகு கிரேக்க பிரதமர் ஒருவர் இந்தியாவிற்கு மேற்கொண்ட முதல் வருகையாகும். இருதரப்பு உறவுகள், உத்திசார்ந்த கூட்டு முயற்சியாக உயர்த்தப்பட்டபோது, பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆகஸ்ட் 25, 2023 அன்று ஏதென்ஸுக்குப் பயணம் செய்திருந்தது, குறிப்பிடத்தக்கது.

 

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
The Nari Shakti Decade: How 12 years of policy reforms under Modi govt transformed lives of women in Bharat

Media Coverage

The Nari Shakti Decade: How 12 years of policy reforms under Modi govt transformed lives of women in Bharat
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூன் 7, 2026
June 07, 2026

India on the Rise: Celebrating Milestones from Grassroots to the Global Stage Under the Leadership of PM Modi