நாடு முழுவதும் சத் புனிதப் பண்டிகையைக் கொண்டாடத் தயாராகி வரும் நிலையில், சத்தி மையாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பாடல்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் பக்தி மற்றும் கலாச்சார ஒற்றுமையின் உணர்வில் மக்கள் இணைய வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இயற்கை மற்றும் கலாச்சாரத்துடன் சத்-ன் ஆழமான தொடர்பையும், பீகார் மற்றும் நாடு முழுவதும் நடைபெற்று வரும் தீவிர முன்னேற்பாடுகளையும் பிரதமர் விளக்கியுள்ளார்.
சத் பண்டிகையின் உணர்வைப் பிரதிபலிக்கும் பாடல்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு மக்களை திரு மோடி ஊக்குவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் திரு மோடி கூறியிருப்பதாவது:
"இயற்கை மற்றும் கலாச்சாரத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பிரமாண்டமான திருவிழாவான சத் நெருங்கி வருகிறது. பீகார் உட்பட நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் ஏற்கனவே பக்தியுடன் அதற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். சத்தி மையாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பாடல்கள் இந்தப் புனித நிகழ்வின் மகத்துவத்தையும் தெய்வீகத்தையும் மேலும் மேம்படுத்துகின்றன. சத் பூஜை தொடர்பான பாடல்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். அடுத்த சில நாட்களில் நாட்டு மக்கள் அனைவருடனும் அவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்."
प्रकृति और संस्कृति को समर्पित महापर्व छठ आने वाला है। बिहार सहित देशभर में इसकी तैयारियों में श्रद्धालु पूरे भक्ति-भाव से जुट चुके हैं। छठी मइया के गीत इस पावन अवसर की भव्यता और दिव्यता को और बढ़ाने वाले होते हैं। आपसे आग्रह है कि आप भी छठ पूजा से जुड़े गीत मेरे साथ शेयर करें।…
— Narendra Modi (@narendramodi) October 24, 2025


