பகிர்ந்து
 
Comments
நினைவுத் தபால்தலை மற்றும் நினைவு நாணயத்தையும் வெளியிட்டார்
டிஜிட்டல் முறையில் இந்திய சிறுதானியங்கள் (ஸ்ரீ அன்னா) ஸ்டார்ட் அப்களின் தொகுப்பு மற்றும் சிறுதானியங்கள் புத்தகம் (ஸ்ரீ அன்னா) தரநிலைகளை அறிமுகப் படுத்தினார்
ஐ.சி.ஏ.ஆரின் இந்திய சிறுதானியங்கள் ஆராய்ச்சி நிறுவனம் உலகளாவிய சிறந்த மையமாக அறிவிக்கப்பட்டது
"உலகளாவிய சிறுதானியங்கள் மாநாடு உலகளாவிய நன்மைக்கான இந்தியாவின் பொறுப்புகளின் அடையாளமாகும்"
"ஸ்ரீ அன்னா இந்தியாவில் முழுமையான வளர்ச்சிக்கான ஊடகமாக மாறி வருகிறது. இது கிராமம் மற்றும் ஏழைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது"
"ஒரு நபருக்கு மாதந்தோறும் சிறுதானியங்கள் நுகர்வு 3 கிலோகிராமில் இருந்து 14 கிலோகிராமாக அதிகரித்துள்ளது"
"இந்தியாவின் சிறுதானியங்கள் திட்டம் நாட்டின் 2.5 கோடி சிறுதானியங்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும்"
"உலகின் மீதான பொறுப்புக்கும், மனித குலத்திற்கு சேவை செய்வதற்கான உறுதிக்கும் இந்தியா எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறது"
"நம்மிடம் உணவுப் பாதுகாப்பு மற்றும் உணவு
கண்காட்சி மற்றும் வாங்குபவர் விற்பனையாளர் சந்திப்பு அரங்கையும் பிரதமர் திறந்து வைத்து பார்வையிட்டார்
"இது சிறுதான்யங்களுக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டின் அறிகுறியாகும்" என்று அவர் கூறினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று  புது தில்லியில் பி யு எஸ் ஏ IARI வளாகத்தில் உள்ள NASC வின் சுப்ரமணியம் அரங்கில்  உலகளாவிய சிறுதானியங்கள் (ஸ்ரீ அன்னா) மாநாட்டைத் தொடங்கி வைத்தார். இந்த இரண்டு நாள் உலகளாவிய மாநாட்டில் உற்பத்தியாளர்கள், நுகர்வோர் மற்றும் பிற பங்குதாரர்களிடையே சிறுதானியங்கள் பற்றிய விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு போன்ற சிறுதானியங்கள் (ஸ்ரீ அன்னா) தொடர்பான அனைத்து முக்கியப் பிரச்சினைகள் குறித்த அமர்வுகள் நடைபெறும். சிறுதானியங்களின் மதிப்பு சங்கிலி வளர்ச்சி  தினைகளின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து அம்சங்கள் சந்தை இணைப்புகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்றவை இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.

கண்காட்சி மற்றும் வாங்குபவர் விற்பனையாளர் சந்திப்பு அரங்கையும் பிரதமர் திறந்து வைத்து பார்வையிட்டார். நினைவுத் தபால் தலை மற்றும் நினைவு நாணயத்தையும் அவர் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, டிஜிட்டல் முறையிலான இந்திய சிறுதானியங்கள் (ஸ்ரீ அன்னா) ஸ்டார்ட்அப்களின் தொகுப்பு மற்றும் சிறுதானியங்களின் (ஸ்ரீ அன்னா) தரங்கள் புத்தகத்தை  பிரதமர் தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில் சர்வதேசத் தலைவர்கள் தங்கள் செய்திகளை தெரிவித்தனர். எத்தியோப்பியாவின் அதிபர், எச்.இ. சாஹ்லே-வொர்க் ஜூடே இந்த நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக இந்திய அரசை வாழ்த்தினார். இந்த நேரத்தில் மக்களுக்கு உணவளிக்க சிறுதானியங்கள் விலைகுறைவானது என்பதோடு  சத்தான விருப்ப உணவாகிறது என்று அவர் கூறினார். எத்தியோப்பியா, துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் ஒரு முக்கியமான சிறுதானியம் உற்பத்தி செய்யும் நாடு. சிறுதானியங்களைப் பெருக்குவதற்குத் தேவையான கொள்கைக் கவனத்தை எடுத்துரைக்கவும், அவற்றின் சுற்றுச்சூழல் அமைப்பின்படி பயிர்களின் பொருத்தத்தைப் படிப்பதற்காகவும் நிகழ்வின் பயன்பாட்டை அவர் சுட்டிக் காட்டினார்.

கயானாவின் தலைவர் டாக்டர் முகமது இர்ஃபான் அலி, தினைக்கான காரணத்தை ஊக்குவிப்பதில் இந்தியா உலகளாவிய தலைமையை ஏற்றுள்ளது என்றும், அவ்வாறு செய்வதன் மூலம் அதன் நிபுணத்துவத்தை உலகின் பிற பயன்பாட்டிற்கு வழங்குவதாகவும் கூறினார். சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டின் வெற்றி SDG களை அடைவதற்கு நீண்ட தூரம் செல்லும் என்று அவர் கூறினார். உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் கயானா ஒரு முக்கிய காரணியாக சிறுதானியங்கள் அங்கீகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார். கயானா, இந்தியாவுடன் இணைந்து சிறுதானியங்கள் உற்பத்திக்காக 200 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது. அதில் உற்பத்திக்கான தொழில்நுட்ப வழிகாட்டல் மற்றும் தொழில்நுட்ப ஆதரவை இந்தியா வழங்கும்.

பிரதமர் உரையாற்றுகையில், உலகளாவிய சிறுதானிய மாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும் இதுபோன்ற நிகழ்வுகள் உலகளாவிய நன்மைக்கான தேவை மட்டுமல்ல, உலகளாவிய நன்மைக்கான இந்தியாவின் பொறுப்புகளின் அடையாளமாகும் என்றார். தீர்மானத்தை விரும்பத்தக்க முடிவாக மாற்றுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், இந்தியாவின் தொடர்ச்சியான முயற்சிகளுக்குப் பிறகு ஐக்கிய நாடுகள் சபையால் 2023 ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவிக்கப்பட்டது என்பதை மீண்டும் வலியுறுத்தினார். சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டை உலகம் கொண்டாடும் வேளையில் இந்தியாவின் பிரச்சாரம் இந்த திசையில் ஒரு குறிப்பிடத்தக்க முனேற்றப் படியாகும் என்று அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

பல வெளிநாடுகள் மற்றும் இந்தியத் தூதரகங்களுடன் கிராம பஞ்சாயத்து, கிருஷி கேந்திரங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வேளாண் பல்கலைகழகங்களின் தீவிர பங்கேற்புடன் சிறுதானியங்கள் விவசாயம், தினை பொருளாதாரம், சுகாதார நலன்கள் மற்றும் விவசாயிகளின் வருமானம் போன்ற தலைப்புகளில் அமர்வுகள் நடத்தப்படும். ஏறத்தாழ இன்று 75 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் இந்தத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். சிறுதானியங்கள் தரநிலைகள் குறித்த புத்தக வெளியீட்டு விழா மற்றும் ICAR இன் இந்திய சிறுதானியங்கள் ஆராய்ச்சி கழகத்தை உலகளாவிய சிறப்பு மையமாகப் பிரகடனம் செய்ததோடு நினைவு நாணயம் மற்றும் தபால்தலையை வெளியிட்டார்.

கண்காட்சியைப் பார்வையிட்டு, ஒரே இடத்தில் சிறுதானியங்கள் விவசாயம் தொடர்பான அனைத்து பரிமாணங்களையும் புரிந்து கொள்ளுமாறு பிரதிநிதிகளைப் பிரதமர் கேட்டுக் கொண்டார். சிறுதானியங்கள் சார்ந்த தொழில்கள் மற்றும் விவசாயத்திற்காக ஸ்டார்ட்அப்களைக் கொண்டு வரும் இளைஞர்களின் முயற்சிக்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார். "இது சிறுதான்யங்களுக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டின் அறிகுறியாகும்" என்று அவர் கூறினார்.

இந்தியா இப்போது சிறுதான்யங்களை ஸ்ரீ அன்னா என்று அழைப்பதால், சிறுதானியங்கள் இந்தியாவின் அடையாளத்திற்கான முயற்சிகள் குறித்து பிரதமர் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்குத் தெரிவித்தார். ஸ்ரீ அன்னா வெறும் உணவு அல்லது விவசாயம் மட்டும் அல்ல என்பதை அவர் விரிவாகக் கூறினார். இந்தியப் பாரம்பரியத்தை அறிந்தவர்கள் எதற்கும் முன் ஸ்ரீ என்ற முன்னொட்டை வைப்பதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வார்கள். "ஸ்ரீ அன்னா இந்தியாவில் முழுமையான வளர்ச்சிக்கான ஊடகமாக மாறி வருகிறது. அது கிராமம் மற்றும் ஏழைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது". ஸ்ரீ அன்னா - நாட்டின் சிறு விவசாயிகளின் செழிப்புக்கான வாய்ப்புகளைத் திறந்துள்ளது. ஸ்ரீ  அன்னா - கோடிக்கணக்கான நாட்டு மக்களுக்கு ஊட்டச்சத்தின் மூலாதாரம், ஸ்ரீ அன்னா - பழங்குடியின சமூகத்தின் பாராட்டு, ஸ்ரீ அன்னா - குறைந்த தண்ணீரில் அதிகப் பயிர்களைப் பெறுதல், ஸ்ரீ அன்னா - பெரியவர். ரசாயனமற்ற விவசாயத்திற்கான அடித்தளம். ஸ்ரீ அன்னா - பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் பெரும் உதவி" என்று அவர் மேலும் கூறினார்.

'ஸ்ரீ அன்னா'  ஒரு உலகளாவிய இயக்கமாக மாற்றுவதற்கான அரசின் தொடர்ச்சியான முயற்சிகளைக் குறிப்பிட்ட பிரதமர், 2018 ஆம் ஆண்டில் சிறுதானியங்கள் ஊட்டச்சத்து தானியங்களாக அறிவிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். விவசாயிகளுக்கு அதன் நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது முதல் ஆர்வத்தை உருவாக்குவது வரை அனைத்து நிலைகளிலும் சந்தைக்கான பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இந்தியாவில் 12-13  வெவ்வேறு மாநிலங்களில் சிறுதானியங்கள் முதன்மைப் பயிராகப் பயிரிடப்படுவதாகவும் தெரிவித்தார். முன்னர் ஒரு நபர் ஒரு மாதத்திற்கு எடுத்துக் கொண்ட சிறுதானியங்கள் 3 கிலோகிராமுக்கு மிகாமல் இருந்ததாகவும், அதேசமயம் நுகர்வு இன்று 14 கிலோவாக அதிகரித்துள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். சிறுதானியங்கள் உணவுப் பொருட்களின் விற்பனையும் ஏறக்குறைய 30% அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சிறுதானியங்கள் பற்றிய சமையல்  குறிப்புகளுக்காகவே இயங்கும் சமூக ஊடக சேனல்களைத் தவிர சிறுதானியங்கள் கஃபேக்களின் தொடக்கத்தையும் அவர் குறிப்பிட்டார். “ஒரு மாவட்டம், ஒரு விளைபொருள்” திட்டத்தின் கீழ் நாட்டின் 19 மாவட்டங்களில் சிறுதானியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன” என்று திரு மோடி மேலும் கூறினார்.

இந்தியாவில் சிறுதானியங்கள் உற்பத்தியில் சுமார் 2.5 கோடி சிறு விவசாயிகள் நேரடியாக ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்த பிரதமர், அவர்கள் மிகக் குறைந்த நிலத்தையே வைத்திருந்தாலும் பருவநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொண்டதாகக் குறிப்பிட்டார். "இந்தியாவின் சிறுதானியங்கள் இயக்கம் ஸ்ரீ அன்னாவுக்கான பிரச்சாரம் - நாட்டின் 2.5 கோடி விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்" என்று பிரதமர் கூறினார். சுதந்திரத்திற்குப் பிறகு 2.5 கோடி சிறு விவசாயிகள் சிறுதானியங்கள் பயிரிடுவதில் அரசு அக்கறை செலுத்துவது இதுவே முதல்முறை என்று அவர் சுட்டிக்காட்டினார். பதப்படுத்தப்பட்ட மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் மூலம் சிறுதானியங்கள் தற்போது கடைகளுக்கும் சந்தைகளுக்கும் சென்றடைவதைக் குறிப்பிட்ட பிரதமர், ஸ்ரீ அன்னா சந்தைக்கு ஏற்றம் கிடைக்கும்போது இந்த 2.5 கோடி சிறு விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும் என்றும் அதன் மூலம் கிராமப்புறப் பொருளாதாரம் வலுவடையும் என்றும் எடுத்துரைத்தார். ஸ்ரீ அன்னாவில் பணிபுரியும் 500க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்கள் வந்துள்ளதாகவும் கடந்த சில ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான எஃப்பிஓக்கள் முன்வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். சிறு கிராமங்களில் உள்ள சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் முதல் வணிக வளாகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளுக்குள் நுழையும் சிறுதானியப் பொருட்களைத் தயாரிக்கும் ஒரு முழுமையான விநியோகச் சங்கிலி நாட்டில் உருவாகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜி-20 தலைமைப் பொறுப்புக்கு "ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்" என்ற இந்தியாவின் முழக்கத்தை எடுத்துரைத்த பிரதமர், உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாகக் கருதுவது சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டிலும் பிரதிபலிக்கிறது என்பதை விளக்கினார். "உலகின் மீதான கடமை உணர்வு மற்றும் மனித குலத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற உறுதிக்கு இந்தியா எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறது" என்று பிரதமர் கூறினார். யோகாவை உதாரணமாகக் கூறிய பிரதமர், சர்வதேச யோகா தினத்தின் மூலம் யோகாவின் பலன்கள் உலகம் முழுவதும் சென்றடைவதை இந்தியா உறுதி செய்துள்ளது என்றார். இன்று உலகின் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் யோகா ஊக்குவிக்கப்பட்டு வருவதாகவும் உலகில் 30-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆயுர்வேதத்திற்கும் அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். சர்வதேச சோலார் கூட்டணி குறித்தும் அவர் விளக்கமளித்தார். மேலும் 100 க்கும் மேற்பட்ட நாடுகள் இயக்கத்தில் இணைந்த ஒரு நிலையான உலகை உருவாக்குவதற்கான சிறந்த தளமாக இது செயல்படுகிறது என்று கூறினார். "LIFE பணியை முன்னெடுத்துச் சென்றாலும் அல்லது காலநிலை மாற்ற இலக்குகளை முன்னெடுத்துச் சென்றாலும் இந்தியா தனது பாரம்பரியத்திலிருந்து உத்வேகம் பெறுகிறது. சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதோடு உலகளாவிய நல்வாழ்வை முன்னுக்குக் கொண்டுவருகிறது" என்று பிரதமர் குறிப்பிட்டார். இன்று இந்தியாவின் 'சிறுதானியங்கள் இயக்கத்தில்' இதேபோன்ற தாக்கத்தை காணலாம். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் விளையும் சோளம், கம்பு, ராகி, சாமை, கங்கினி, சீனா, கோடோன், குட்கி, குட்டு போன்ற ஸ்ரீ அன்னாவின்  உதாரணங்களைத் தந்த பிரதமர், சிறுதானியங்கள் இந்தியாவின் வாழ்க்கை முறையின் ஒரு அங்கமாக இருந்ததாகக் கூறினார். இந்தியா தனது விவசாய நடைமுறைகள் மற்றும் ஸ்ரீ அன்னா தொடர்பான நூற்றாண்டு அனுபவங்களை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறது என்று பிரதமர் வலியுறுத்தினார். இந்த திசையில் ஒரு நிலையான நடைமுறையை உருவாக்க இங்குள்ள நட்பு நாடுகளின் விவசாய அமைச்சர்களை அவர் கேட்டுக் கொண்டார். மேலும் ஒரு புதிய விநியோகச் சங்கிலியை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சிறுதானியங்களின் காலநிலையை எதிர்க்கும் தன்மையை எடுத்துரைத்த பிரதமர், பாதகமான காலநிலைகளிலும் அவற்றை எளிதாக உற்பத்தி செய்ய முடியும் என்றும் தெரிவித்தார். உற்பத்தி செய்வதற்கு ஒப்பீட்டளவில் குறைந்த நீரே தேவைப்படுவதால் நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு இது சிறந்த பயிர் என்று அவர் தெரிவித்தார். இரசாயனங்கள் இன்றி இயற்கை முறையில் சிறுதானியங்களைப் பயிரிடலாம் என்றும் அதன் மூலம் மனிதர்கள் மற்றும் மண்ணின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இன்றைய உலகம் எதிர்கொள்ளும் உணவுப் பாதுகாப்பு சவால்களை எடுத்துரைத்த பிரதமர், உலகளாவிய தெற்கில் உள்ள ஏழைகளுக்கான உணவுப் பாதுகாப்பின் சவாலையும் உலகளாவிய வடக்கில் உணவுப் பழக்கவழக்கங்களுடன் தொடர்புடைய நோய்களையும் பிரதமர் எடுத்துரைத்தார். "ஒருபுறம் உணவுப் பாதுகாப்புப் பிரச்னையும், மறுபுறம் உணவுப் பழக்கவழக்கப் பிரச்னையும் உள்ளது" என்று எடுத்துரைத்தார். விளைபொருட்களில் அதிக அளவில் இரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதைப் பற்றிய கவலைகளை சுட்டிக்காட்டினார். ஸ்ரீ அன்னா எளிதில் வளரக்கூடியது அதன் செலவும் குறைவு மற்ற பயிர்களை விட வேகமாக சாகுபடிக்குத் தயாராகிறது என ஸ்ரீ அன்னா ஒவ்வொரு பிரச்சனைக்கும் தீர்வுகளை வழங்குகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். ஸ்ரீ அன்னாவின் நன்மைகளைப் பட்டியலிட்ட பிரதமர், இது ஊட்டச்சத்து நிறைந்தது, சுவையில் சிறப்பு, நார்ச்சத்து அதிகம், உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும், வாழ்க்கைமுறை தொடர்பான நோய்களைத் தடுக்க உதவுகிறது என்று கூறினார்.

சிறுதானியங்கள் முடிவற்ற சாத்தியங்களைக் கொண்டுவருகின்றன என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவின் தேசிய உணவுக் கூடைக்கு ஸ்ரீ அன்னாவின் பங்களிப்பு 5-6 சதவிகிதம் மட்டுமே என்று தெரிவித்த பிரதமர் இந்த பங்களிப்பை அதிகரிக்க விஞ்ஞானிகள் மற்றும் வேளாண் துறை வல்லுநர்கள் உழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நாடு உணவு பதப்படுத்தும் துறைக்கு ஊக்கமளிக்கும் வகையில் பிஎல்ஐ திட்டத்தையும் தொடங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டார். சிறுதானியங்கள் துறைக்கு அதிகபட்ச பலன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். சிறுதானியப் பொருட்களைத் தயாரிப்பதற்கு  பல மாநிலங்கள் தங்கள் PDS அமைப்பில் ஸ்ரீ அன்னாவை சேர்த்துள்ளதோடு மற்ற மாநிலங்களும் இதனைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார். மேலும், குழந்தைகளுக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்கும் வகையில், உணவில் ஒரு புதிய சுவை மற்றும் வகையாக மதிய உணவில் ஸ்ரீ அன்னாவை  சேர்க்க அவர் பரிந்துரைத்தார்.

நிறைவாக, சிறுதானியங்கள் வகைகளுக்கான பிரச்சினைகள் அனைத்தும் விரிவாகப் பேசப்பட்டு, நடைமுறைப்படுத்துவதற்கான வரைபடமும் தயாரிக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். "விவசாயிகள் மற்றும் அனைத்து பங்கேற்பாளர்களின்  கூட்டு முயற்சியுடன் இந்தியா மற்றும் உலகத்தின் செழிப்புக்கு உணவு ஒரு புதிய பிரகாசத்தை சேர்க்கும்" என்று பிரதமர் தனது உரையை நிறைவு செய்தார்.

மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் சுப்ரமணியம் ஜெய்சங்கர், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் மற்றும் மத்திய அமைச்சர்கள். இந்நிகழ்ச்சியில் மாநில விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன், ஸ்ரீ கைலாஷ் சவுத்ரி மற்றும் திருமதி ஷோபா கரந்த்லாஜே ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னணி

இந்தியாவின் முன்மொழிவின் அடிப்படையில், 2023 ஆம் ஆண்டை ஐக்கிய நாடுகள் சபை (UNGA) சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக (IYM) அறிவித்தது. சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு 2023 இன் கொண்டாட்டங்களை ஒரு 'மக்கள் இயக்கமாக' மாற்றவும், இந்தியாவை 'சிறுதானியங்களுக்கான உலகளாவிய மையமாக' நிலைநிறுத்தவும் பிரதமரின் பார்வைக்கு இணங்க அனைத்து மத்திய அரசு அமைச்சகங்கள்/துறைகள், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள், விவசாயிகள், ஸ்டார்ட் அப்கள், ஏற்றுமதியாளர்கள், சில்லறை வணிகங்கள் மற்றும் பிற பங்குதாரர்கள், விவசாயிகள், நுகர்வோர் காலநிலைக்கு சிறுதானியங்களின் நன்மைகள் (ஸ்ரீ அன்னா) பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிக்கவும் பரப்பவும் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் குளோபல் மில்லட்ஸ் (ஸ்ரீ அன்னா) மாநாட்டின் அமைப்பு இந்த சூழலில் ஒரு முக்கியமான திட்டமாகும்.

இரண்டு நாள் உலகளாவிய மாநாட்டில், சிறுதானியங்கள் (ஸ்ரீ அன்னா) தொடர்பான அனைத்து முக்கியப் பிரச்சினைகள் பற்றிய அமர்வுகள், உற்பத்தியாளர்கள், நுகர்வோர் மற்றும் பிற பங்குதாரர்களிடையே சிறுதானியங்கள் பற்றிய விழிப்புணர்வு, சிறுதானியங்களின் மதிப்பு சங்கிலி வளர்ச்சி, சிறுதானியங்களின்  ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து அம்சங்கள், சந்தை இணைப்புகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்றவை பற்றி விவாதிக்கும். மாநாட்டில் பல்வேறு நாடுகளின் விவசாய அமைச்சர்கள், சர்வதேச விஞ்ஞானிகள், ஊட்டச்சத்து நிபுணர்கள், சுகாதார நிபுணர்கள், ஸ்டார்ட்-அப் தலைவர்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் கலந்துகொள்வார்கள்.

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Swachh Bharat Abhiyan: How India has written a success story in cleanliness

Media Coverage

Swachh Bharat Abhiyan: How India has written a success story in cleanliness
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister praised Gulveer Singh for winning Bronze Medal in 10,000m race event
September 30, 2023
பகிர்ந்து
 
Comments

The Prime Minister, Shri Narendra Modi has complimented Gulveer Singh for winning Bronze Medal in 10,000m race event at the Asian Games in Hangzhou.

The Prime Minister posted on X;

“Compliments to our exceptional athlete Gulveer Singh who has won the Bronze Medal in 10,000m at the Asian Games. Wishing him the very best for his future endeavours. His determination will surely inspire other athletes.”