"தேசியப் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை கொண்ட இந்த மண்ணில் உங்களுடன் இருப்பதில் நான் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்"
"உத்தராகண்டின் முன்னேற்றம் மற்றும் அதன் குடிமக்களின் நல்வாழ்வு எங்கள் அரசின் முன்னுரிமையாகும்"
"இந்த தசாப்தம் உத்தராகண்ட் மாநிலத்தின் தசாப்தமாக இருக்கப்போகிறது."
"உத்தராகண்டின் ஒவ்வொரு கிராமத்திலும் நாட்டின் பாதுகாவலர்கள் உள்ளனர்"
"இந்தக் கிராமங்களை விட்டு வெளியேறிய மக்களை மீண்டும் அழைத்து வருவதே எங்கள் முயற்சி. இந்த கிராமங்களில் சுற்றுலாவை அதிகரிக்க விரும்புகிறோம்.
"தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் ஒவ்வொரு சிரமத்தையும் ஒவ்வொரு அசௌகரியத்தையும் களைவதற்கு எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது"
"உத்தராகண்டில் சுற்றுலா மற்றும் யாத்திரையை மேம்படுத்துவதற்கான இரட்டை எஞ்சின் அரசின் முயற்சிகள் இப்போது பலனைத் தருகின்றன"
"உத்தராகண்ட் மாநிலத்தின் போக்குவரத்தை விரிவுபடுத்துவது மாநிலத்தின் வளர்ச்சியை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும்"
"அமிர்த காலம் என்பது நாட்டின் ஒவ்வொரு பிராந்தியத்தையும் ஒவ

உத்தராகண்ட் மாநிலம் பித்தோராகரில் ஊரக வளர்ச்சி, சாலை, மின்சாரம், நீர்ப்பாசனம், குடிநீர், தோட்டக்கலை, கல்வி, சுகாதாரம் மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் சுமார் ரூ.4200 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

 

அப்போது உரையாற்றிய பிரதமர், தமது பயணத்தின் போது உத்தராகண்ட் மக்களின் முன்னெப்போதும் இல்லாத அன்பு மற்றும் பாசம் மற்றும் எண்ணற்ற ஆசீர்வாதங்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, "இது கங்கை மீதான  பாசத்தைப் போல் இருந்தது” என்று கூறினார். ஆன்மீகம் மற்றும் வீரத்தின் பூமிக்கு, குறிப்பாக துணிச்சலான தாய்மார்களுக்கு தலைவணங்குவதாக திரு மோடி கூறினார். பைத்யநாத் தாமில் ஜெய் பத்ரி விஷாலின் பிரகடனம் மற்றும் கங்கோலிஹாட்டில் உள்ள காளி கோவிலில் மணிகள் ஒலிப்பது ஆகியவை குமாவுன் படைப்பிரிவின் வீரர்களுக்கு புதிய துணிச்சலை ஊட்டுவதாகத் தெரிவித்தார். மானஸ்கண்டில், பைத்யநாத், நந்தாதேவி, பூராங்கிரி, காசர்தேவி, கைஞ்சிதம், கதிர்மால், நானக்மாட்டா, ரீதா சாஹிப் மற்றும் நாட்டின் பெருமையையும் பாரம்பரியத்தையும் பறைசாற்றும் எண்ணற்ற கோயில்களை பிரதமர் குறிப்பிட்டார். "உங்களிடையே நான் உத்தராகண்டில் இருக்கும்போது நான் எப்போதும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்" என்று பிரதமர் குறிப்பிட்டார்.

 

முன்னதாக, பார்வதி குண்டில் பிரதமர் பூஜை மற்றும் தரிசனம் செய்தார். "ஒவ்வொரு இந்தியரும் நல்ல ஆரோக்கியத்திற்காகவும், வளர்ந்த இந்தியா தீர்மானம் வலுப்பெறவும் தாம் பிரார்த்தனை செய்த்தாகக் கூறினார். உத்தராகண்ட் மக்களின் அனைத்து விருப்பங்களும் நிறைவேற ஆசீர்வதிக்குமாறு தாம் பிரார்த்தித்தாகத்  தெரிவித்தார். 

 

ராணுவ வீரர்கள், கலைஞர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களுடனான சந்திப்புகளையும் குறிப்பிட்ட பிரதமர், பாதுகாப்பு, செழிப்பு மற்றும் கலாச்சாரத்தின் தூண்களை சந்திப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த தசாப்தம் உத்தராகண்ட் மாநிலத்தின் ஒரு தசாப்தமாக இருக்கப்போகிறது என்று பிரதமர் மீண்டும் கூறினார். "உத்தராகண்ட் மக்களின் முன்னேற்றம் மற்றும் எளிதான வாழ்க்கைக்காக பணியாற்ற தங்கள் அரசு முழு அர்ப்பணிப்பு மற்றும் நேர்மையுடன் செயல்படுகிறது", என்று அவர் கூறினார். உத்தராகண்ட் உடனான தனது நீண்டகால தொடர்பு மற்றும் நெருக்கத்தை பிரதமர் நினைவு கூர்ந்தார். மகளிர் இடஒதுக்கீடு மசோதா பற்றி பேசிய பிரதமர், மாநிலத்திலிருந்து தனக்கு கிடைத்த ஆதரவைக் குறிப்பிட்டார். 

 

நாடு மேற்கொண்டுள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்து பிரதமர் எடுத்துரைத்தார். "இந்தியாவையும் இந்தியர்களின் பங்களிப்பையும் உலகம் அங்கீகரிக்கிறது", என்று அவர் கூறினார். கடந்த காலத்தின் விரக்தியை நினைவுகூர்ந்த பிரதமர் திரு மோடி, சவால்களால் சூழப்பட்டுள்ள உலக அரங்கில் இந்தியாவின் வலுவான குரலைக் குறிப்பிட்டார். ஜி20 தலைமைத்துவம் மற்றும் உச்சிமாநாட்டை  ஏற்பாடு செய்வதற்காக உலக நாடுகள் இந்தியாவை பாராட்டியதாக அவர் குறிப்பிட்டார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மத்தியில் ஒரு நிலையான மற்றும் வலுவான அரசைத் தேர்ந்தெடுத்ததற்காக நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார். 140 கோடி இந்தியர்களின் நம்பிக்கையையும் தாம் பெற்றிருப்பதாக அவர் கூறினார். 

 

கடந்த  5 ஆண்டுகளில் 13.5 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர் என்று தெரிவித்த பிரதமர், தொலைதூரத்தில் உள்ளவர்களும் அரசின் சலுகைகளைப் பெறும் அரசின் அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையை பாராட்டினார். "உலகம் வியக்கிறது" என்று குறிப்பிட்ட திரு. மோடி, 13.5 கோடி மக்களில் தொலைதூர மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் வசிப்பவர்கள் உள்ளனர் என்று விளக்கினார். இந்த 13.5 கோடி மக்கள், நாட்டின் வறுமையை இந்தியா தாமாகவே அகற்ற முடியும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு என்று அவர் குறிப்பிட்டார். 

 

முந்தைய அரசுகள் 'வறுமையை ஒழித்தல்' என்ற கோஷங்களை அறிமுகப்படுத்திய போதிலும், உரிமையையும் பொறுப்பையும் எடுத்துக்கொள்வதன் மூலம் வறுமையை களைய முடியும் என்று 'மோடி' தான்  கூறினார் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். "நாம் ஒன்றிணைந்து வறுமையை ஒழிக்க முடியும்", என்று அவர் வலியுறுத்தினார். நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி, இதுவரை எந்த நாடும் செய்ய முடியாத சாதனையை இந்தியாவின் சந்திரயான் நிகழ்த்தியதாக அவர் குறிப்பிட்டார். "சந்திரயான் தரையிறங்கிய இடத்திற்கு சிவ சக்தி என்று பெயரிடப்பட்டுள்ளது, உத்தராகண்ட் அடையாளம் இப்போது சந்திரனில் உள்ளது" என்று பிரதமர் கூறினார். உத்தராகண்டில் ஒவ்வொரு படியிலும் சிவ சக்தி யோகத்தை காண முடியும் என்று அவர் கூறினார்.

 

இந்தியாவின் விளையாட்டுத் திறனைச் சுட்டிக்காட்டிய பிரதமர், நாடு வரலாறு காணாத அளவில் பதக்கங்களைப் பெற்றதற்கான மகிழ்ச்சி குறித்துப் பேசினார். உத்தராகண்ட் அணியில் 8 வீரர்கள் அனுப்பப்பட்டனர், லக்சயா சென் மற்றும் வந்தனா கட்டாரியா ஆகியோரின் அணிகள் பதக்கங்களை வென்றன. பிரதமரின் அழைப்பை ஏற்று, பார்வையாளர்கள் தங்கள் மொபைல் போன்களின் டார்ச் லைட்டுகளை உயர்த்தி இந்த சாதனையைக் கொண்டாடினர். விளையாட்டு வீரர்களின் பயிற்சி மற்றும் உள்கட்டமைப்புக்கு அரசு முழு ஆதரவையும் வழங்கி வருவதாக பிரதமர் கூறினார். இன்று ஹல்த்வானியில் ஹாக்கி மைதானம் மற்றும் ருத்ராபூரில் உள்ள வெலோட்ரோம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. தேசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு முழு மனதுடன் தயாராகுமாறு மாநில அரசுக்கும், முதலமைச்சருக்கும் பிரதமர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். 

 

"இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாப்பவர்களை உத்தராகண்டில் உள்ள ஒவ்வொரு கிராமமும் உருவாக்கியுள்ளது" என்று கூறிய பிரதமர், ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் என்ற அவர்களின் தசாப்த காலக் கோரிக்கையை தற்போதைய அரசு நிறைவேற்றியுள்ளது என்று குறிப்பிட்டார். ஒரே பதவி ஒரே ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ரூ.70,000 கோடிக்கு மேல் ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 75,000-க்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பங்கள் பெரிதும் பயனடைந்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். "அரசின் முன்னுரிமைகளில் ஒன்றாக எல்லைப் பகுதிகளை மேம்படுத்துவதில் அக்கறை உள்ளது", என்று அவர் கூறினார், புதிய சேவைகளின் வளர்ச்சி இங்கு விரைவாக நடைபெற்று வருகிறது என்று அவர் கூறினார். கடந்த அரசின் போது எல்லைப் பகுதிகளில் மேம்பாடு இல்லாததை சுட்டிக்காட்டிய பிரதமர், நிலங்கள் அபகரிக்கப்படலாம் என்ற அச்சம் குறித்து பேசினார். "புதிய இந்தியா எதற்கும் அஞ்சாது, அது மற்றவர்களிடையே பயத்தைத் தூண்டாது" என்று எல்லைப் பகுதிகளில் நடைபெறும் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் குறித்துப் பேசிய பிரதமர் குறிப்பிட்டார். கடந்த 9 ஆண்டுகளில் எல்லைப் பகுதிகளில் 4,200 கி.மீ சாலைகள், 250 பாலங்கள் மற்றும் 22 சுரங்கங்கள் கட்டப்பட்டுள்ளன. இன்றைய திட்டங்களைக் குறிப்பிட்ட பிரதமர், எல்லைப் பகுதிகளுக்கு ரயில் சேவையைக் கொண்டு வருவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாகக் கூறினார்.

 

துடிப்பான கிராமத் திட்டம் கடைசி கிராமங்களை நாட்டின் முதல் கிராமங்களாக மாற்றியுள்ளது என்று பிரதமர் கூறினார். "இந்த கிராமங்களை விட்டு வெளியேறிய மக்களை மீண்டும் அழைத்து வருவதே எங்கள் முயற்சி. இந்த கிராமங்களில் சுற்றுலாவை அதிகரிக்க விரும்புகிறோம்" என்று பிரதமர் கூறினார். தண்ணீர், மருத்துவம், சாலைகள், கல்வி மற்றும் மருத்துவ வசதிகள் தொடர்பாக கடந்த காலத்தின் தவறான கொள்கைகள் காரணமாக, மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. இந்தப் பகுதிகளில் உத்தராகண்ட் மாநிலத்தில் புதிய வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகள் உருவாகி வருவதாக அவர் கூறினார். இன்று தொடங்கப்பட்ட சாலைகள் மற்றும் நீர்ப்பாசன வசதிகள் மற்றும் பாலிஹவுஸ் திட்டம் ஆகியவற்றால் ஆப்பிள் பண்ணை பயனடையும் என்று அவர் கூறினார். இந்த திட்டங்களுக்கு ரூ.1100 கோடி செலவிடப்படும். உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள சிறு விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்த இவ்வளவு பணம் செலவிடப்படுகிறது. பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு திட்டத்தின் கீழ், உத்தராகண்ட் விவசாயிகள் இதுவரை ரூ.2200 கோடிக்கு மேல் பெற்றுள்ளனர்" என்று அவர் கூறினார். 

 

உத்தராகண்ட் மாநிலத்தில் பல தலைமுறைகளாக உற்பத்தி செய்யப்பட்டு வரும் சிறுதானிய வகைகளைக் குறிப்பிட்ட பிரதமர், அதை உலகம் முழுவதும் கொண்டு செல்வதற்கான அரசின் முயற்சிகளை எடுத்துரைத்தார். நாடு முழுவதும் ஒரு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. உத்தராகண்டில் உள்ள சிறு விவசாயிகளுக்கு பெரிதும் பயனளிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

 

மகளிர் தலைமையிலான வளர்ச்சியை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து பேசிய பிரதமர், "தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் அனைத்து சிரமத்தையும் அகற்ற தங்களுடைய  அரசு உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவித்தார். அதனால்தான் தங்களுடைய  அரசு ஏழை சகோதரிகளுக்கு நிரந்தர வீடுகளை வழங்கியது என்றும் தங்கள் சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு கழிவறைகளைக் கட்டிக்கொடுத்தோம் என்றும் அவர்களுக்கு சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்கினோம் என்றும், வங்கிக் கணக்குகளைத் தொடங்கினோம் என்றும் குறிப்பிட்டார். இலவச சிகிச்சை மற்றும் இலவச ரேஷன் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.. அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்புத் திட்டத்தின் கீழ், உத்தராகண்டில் உள்ள 11 லட்சம் குடும்பங்களின் சகோதரிகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வசதி கிடைத்துள்ளதாக  அவர் தெரிவித்தார். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ட்ரோன் விமானங்கள் வழங்கும் திட்டத்தையும் அவர் குறிப்பிட்டார். இந்த ட்ரோன்கள் வேளாண்மைக்கும், விளைபொருட்களைக் கொண்டு செல்வதற்கும் உதவும் என்று கூறினார். "மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் ட்ரோன்கள் உத்தராகண்ட் மாநிலத்தை நவீனத்தின் புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்லும்" என்று பிரதமர் கூறினார்.  

 

 

உத்தராகண்ட் மாநிலத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் கங்கையும், கங்கோத்ரியும் உள்ளன. இங்குள்ள பனிச் சிகரங்களில் சிவபெருமானும் நந்தரும் வசிக்கின்றனர்" என்று பிரதமர் குறிப்பிட்டார். உத்தராகண்ட் மாநிலத்தின் திருவிழாக்கள், கௌதிக், தௌல், பாடல்கள், இசை மற்றும் உணவு ஆகியவை அவற்றின் தனித்துவமான அடையாளத்தைக் கொண்டுள்ளன என்றும், பாண்டவ் நடனம், சோலியா நடனம், மங்கள் கீத், புல்தேய், ஹரேலா, பக்வால் மற்றும் ராம்மான் போன்ற கலாச்சார நிகழ்வுகளால் இந்த நிலம் வளப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். அவர் நாட்டின் பல்வேறு சுவையான உணவுகள் குறித்தும் குறிப்பிட்டார். மேலும் ஆர்சே, ஜாங்கோர் கி கீர், கஃபுலி, பக்கோடாக்கள், ரைதா, அல்மோராவின் பால் மிட்டாய் மற்றும் சிங்கோரி ஆகியவற்றைக் குறிப்பிட்டார். காளி கங்கை பூமியுடனும் சம்பாவத்தில் அமைந்துள்ள அத்வைத ஆசிரமத்துடனும் தமது வாழ்நாள் தொடர்புகளை பிரதமர்  நினைவு கூர்ந்தார். விரைவில் சம்பாவத்தில் உள்ள அத்வைத ஆசிரமத்தில் நேரத்தை செலவிட விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

உத்தராகண்டில் சுற்றுலா மற்றும் புனித யாத்திரை மேம்பாடு தொடர்பான இரட்டை எஞ்சின் அரசின் முயற்சிகள் இப்போது பலனளித்து வருவதாக பிரதமர் கூறினார். இந்த ஆண்டு உத்தராகண்டில் சார்தாம் யாத்திரைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை சுமார் 50 லட்சத்தை எட்டியுள்ளது. பாபா கேதாரின் ஆசீர்வாதத்துடன், கேதார்நாத் தாமின் புனரமைப்பு தொடர்பான முதல் கட்டம் நிறைவடைந்துள்ளது. ஸ்ரீ பத்ரிநாத் தாமில் பல நூறு கோடி ரூபாய் செலவில் பல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார். கேதார்நாத் தாம் மற்றும் ஹேம்குந்த் சாஹிப் ஆகிய இடங்களில் ரோப்வேகள் கட்டி முடிக்கப்பட்ட பிறகு ஏற்படும் வசதியையும் அவர் குறிப்பிட்டார்.  கேதார்நாத் மற்றும் மானஸ்கண்ட் இடையேயான போக்குவரத்தில் கவனம் செலுத்துவதை சுட்டிக்காட்டிய பிரதமர், இன்று தொடங்கப்பட்ட மானஸ்கண்ட் மந்திர் மாலா மிஷன் குமாவுன் பிராந்தியத்தில் உள்ள பல கோயில்களுக்கு செல்வதை எளிதாக்கும் என்றும், இந்த கோயில்களுக்கு வர பக்தர்களை ஊக்குவிக்கும் என்றும் கூறினார். 

 

உத்தராகண்ட் மாநிலத்தின் விரிவாக்கப்பட்ட போக்குவரத்து வசதி  மாநிலத்தின் வளர்ச்சியை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்று பிரதமர் கூறினார். சார்தாம் மெகா திட்டம் மற்றும் அனைத்து காலநிலை சாலை மற்றும் ரிஷிகேஷ் - கர்ன்பிரயாக் ரயில் திட்டம் ஆகியவற்றை அவர் குறிப்பிட்டார். உடான் திட்டம் குறித்து பேசிய பிரதமர், இந்த முழு பிராந்தியத்திலும் குறைவானக் கட்டண விமானச் சேவைகளும் விரிவுபடுத்தப்பட்டு வருவதாகக் கூறினார். பாகேஷ்வரில் இருந்து கனலிச்சினா வரை, கங்கோலிஹாட்டில் இருந்து அல்மோரா வரை மற்றும் தனக்பூர் படித்துறை முதல் பித்தோராகர் வரையிலான சாலைகள் உள்ளிட்ட இன்றைய திட்டங்களையும் அவர் சுட்டிக்காட்டிப் பேசினார். மேலும் இது சாதாரண மக்களுக்கு வசதியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், சுற்றுலாவிலிருந்து வருவாய் ஈட்டும் வாய்ப்புகளையும் அதிகரிக்கும் என்று கூறினார். சுற்றுலாத் துறையை அதிக வேலைவாய்ப்பு அளிக்கும் துறை என்று குறிப்பிட்ட திரு மோடி, சுற்றுலா விடுதிகளை அரசு ஊக்குவிப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். வரும் காலங்களில் சுற்றுலாத் துறை மிகவும் விரிவடையும். ஏனெனில் உலகமே இன்று இந்தியாவுக்கு வர விரும்புகிறது. இந்தியாவைப் பார்க்க விரும்பும் எவரும் நிச்சயமாக உத்தராகண்ட் வர விரும்புவார்கள்", என்று அவர் மேலும் கூறினார். 

 

உத்தராகண்ட் மாநிலத்தின் பேரழிவு ஏற்படக்கூடிய தன்மைக் குறித்துப் பேசிய பிரதமர், வரும் 4 - 5 ஆண்டுகளில் இயற்கை பேரழிவுகளை எதிர்கொள்ள தயாராகும் திட்டங்களுக்காக 4000 கோடி ரூபாய் செலவிடப்படும் என்றார். "இதுபோன்ற வசதிகள் உத்தராகண்டில் கட்டப்படும், இதனால் பேரழிவு ஏற்பட்டால், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை விரைவாக செய்ய முடியும்", என்று அவர் கூறினார். 

 

தமது உரையின் நிறைவாகப் பேசிய பிரதமர், இது இந்தியாவின் அமிர்த காலம் என்று கூறினார். "ஒவ்வொரு பிராந்தியத்தையும் நாட்டின் ஒவ்வொரு பிரிவையும் வசதிகள், கண்ணியம் மற்றும் செழிப்புடன் இணைக்க வேண்டிய தருணம் இது என்று தெரிவித்தார்.  பாபா கேதார் மற்றும் பத்ரி விஷால் ஆகியோரின் ஆசீர்வாதத்துடன், நாடு அதன் தீர்மானங்களை விரைவாக அடைய முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

 

இந்த நிகழ்ச்சியில் உத்தராகண்ட் மாநில முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி மற்றும் உத்தராகண்ட் மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

 

பின்னணி வண்ணம்

 

பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட திட்டங்களில் பிரதமரின் கிராமப்புறச் சாலைகள் திட்டத்தின் கீழ் 76 கிராமப்புற சாலைகள் மற்றும் கிராமப்புறங்களில் கட்டப்பட்ட 25 பாலங்கள் அடங்கும். 9 மாவட்டங்களில் 15 வட்டார வளர்ச்சி அலுவலக கட்டடங்கள்; கௌசானி பாகேஸ்வர் சாலை, தாரி-தௌபா-கிரிசீனா சாலை மற்றும்  நாகாலா-கிச்சா சாலை ஆகிய மத்திய சாலை நிதியின் கீழ் கட்டப்பட்ட மூன்று சாலைகளை மேம்படுத்துதல்;   தேசிய நெடுஞ்சாலைகளில் அல்மோரா பெட்ஷால்

 

- பானுவானௌலா - தான்யா (என்.எச் 309 பி) மற்றும் தனக்பூர் - சால்தி (என்.எச் 125) ஆகிய இரண்டு சாலைகளை மேம்படுத்துதல்; குடிநீர் தொடர்பான மூன்று திட்டங்கள் அதாவது 38 நீரேற்று குடிநீர் திட்டங்கள்,  419 புவியீர்ப்பு அடிப்படையிலான குடிநீர் திட்டங்கள் மற்றும் மூன்று ஆழ்குழாய் கிணறுகள் அடிப்படையிலான குடிநீர் வழங்கல் திட்டங்கள்;   பித்தோராகரில் உள்ள தார்கோட் செயற்கை ஏரி; 132 கே.வி பித்தோராகர்-லோஹாகாட் (சம்பாவத்) மின் பரிமாற்ற பாதை; டேராடூனில் உள்ள உத்தராகண்ட் மற்றும் உத்தராகண்ட் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (யு.எஸ்.டி.எம்.ஏ) 39 பாலங்கள் உலக வங்கி நிதியுதவியுடன் உத்தராகண்ட் பேரிடர் மீட்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளன.

 

அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களில் பூக்கள் மற்றும் காய்கறிகளின் உற்பத்தியை அதிகரிக்கவும், அவற்றின் தரத்தை மேம்படுத்தவும் உதவும் 21,398 பாலிஹவுஸ் கட்டும் திட்டமும் அடங்கும்; அதிக அடர்த்தி கொண்ட ஆப்பிள் தோட்டங்களை பயிரிடுவதற்கான திட்டம்; தேசிய நெடுஞ்சாலை சாலை மேம்பாட்டிற்கான ஐந்து திட்டங்கள்; பாலங்கள் கட்டுதல், டேராடூனில் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தை மேம்படுத்துதல், பாலியானாலா, நைனிதாலில்  நிலச்சரிவைத்  தடுப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் தீ, சுகாதாரம் மற்றும் வனம் தொடர்பான பிற உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் போன்ற மாநிலத்தில் பேரழிவு தயார்நிலை மற்றும் மீள்திறனுக்கான பல நடவடிக்கைகள்; மாநிலம் முழுவதும் 20 மாதிரி பட்டப்படிப்பு கல்லூரிகளில் விடுதிகள் மற்றும் கணினி ஆய்வகங்களை மேம்படுத்துதல்;   சோமேஷ்வர், அல்மோராவில் 100 படுக்கைகள் கொண்ட துணை மாவட்ட மருத்துவமனை; சம்பாவத்தில் 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை தொகுதி;   நைனிதாலில் உள்ள ஹல்த்வானி ஸ்டேடியத்தில் ஆஸ்ட்ரோடர்ஃப் ஹாக்கி மைதானம்; ருத்ராபூரில் உள்ள வெலோட்ரோம் விளையாட்டு மைதானம், ஜகேஷ்வர் தாம் (அல்மோரா), ஹாட் காளிகா (பித்தோராகர்) மற்றும் நைனா தேவி (நைனிதால்) கோயில்கள் உள்ளிட்ட கோயில்களில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான  மானஸ்கண்ட் மந்திர் மாலா மிஷன் திட்டம்.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
iPhone exports from India nearly double to $12.1 billion in FY24: Report

Media Coverage

iPhone exports from India nearly double to $12.1 billion in FY24: Report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஏப்ரல் 17, 2024
April 17, 2024

Holistic Development under the Leadership of PM Modi