செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்பு ஆகியவற்றில் முன்னிலை வகிக்கும் உலக பங்குதாரர்களை ஓரிடத்தில் கொண்டு வந்த ஏஐ தாக்க உச்சிமாநாட்டின் தலைமை நிர்வாக அதிகாரிகள் வட்டமேசை கூட்டத்தின் விளைவுகளை பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றார்.

ஏஐ பொறுப்புணர்வு மீதான கவனம், உலகளாவிய ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், வளர்ச்சிக்கான வாய்ப்புகளை அதிகரித்தல் என இந்த விவாதங்கள், கருத்தாழம் மிகுந்தவையாகவும் தொலைநோக்குப் பார்வை கொண்டதாகவும் இருந்தன.
மனிதகுல முன்னேற்றம் மற்றும் நீடித்த வளர்ச்சிக்கு ஏஐ பயன்பாட்டுக்கு பகிரப்பட்ட உறுதியைக் காண்பது மனநிறைவாக இருந்தது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியிருப்பதாவது:
“ஏஐ தாக்க உச்சிமாநாட்டின் தலைமை நிர்வாக அதிகாரிகள் வட்டமேசை கூட்டம் செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்பு ஆகியவற்றில் முன்னிலை வகிக்கும் உலக பங்குதாரர்களை ஓரிடத்தில் கொண்டு வந்தது. ஏஐ பொறுப்புணர்வு மீதான கவனம், உலகளாவிய ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், வளர்ச்சிக்கான வாய்ப்புகளை அதிகரித்தல் என இந்த விவாதங்கள், கருத்தாழம் மிகுந்தவையாகவும் தொலைநோக்குப் பார்வை கொண்டதாகவும் இருந்தன.

மனிதகுல முன்னேற்றம் மற்றும் நீடித்த வளர்ச்சிக்கு ஏஐ பயன்பாட்டுக்கு பகிரப்பட்ட உறுதியைக் காண்பது மனநிறைவாக இருந்தது.”
The CEO Roundtable at the AI Impact Summit brought together various stakeholders from the world of AI, technology and innovation. The discussions were insightful and forward-looking, focused on scaling AI responsibly, strengthening global collaboration and unlocking opportunities… pic.twitter.com/ZFbrfksL86
— Narendra Modi (@narendramodi) February 19, 2026


