இந்தி தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (14.09.2025) நாட்டு மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். இந்தியாவின் அடையாளம் மற்றும் மதிப்புகளின் பாரம்பரியமாக இந்தி மொழியின் கலாச்சார முக்கியத்துவம் உள்ளது என அவர் கூறியுள்ளார். அனைத்து இந்திய மொழிகளையும் வளப்படுத்தவும், அவற்றை எதிர்கால சந்ததியினருக்கு பெருமையுடன் கொண்டு செல்லவும் மக்கள் கூட்டாக இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பி்ரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"இந்தி தினத்தில் மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்தி மொழி வெறும் தொடர்பு ஊடகம் மட்டுமல்ல. அது நமது அடையாளம் மற்றும் கலாச்சாரத்தின் பாரம்பரியமாகும். இந்தத் தருணத்தில், இந்தி உட்பட அனைத்து இந்திய மொழிகளையும் வளப்படுத்தவும், அவற்றை வரும் தலைமுறையினருக்கு பெருமையுடன் கொண்டு செல்லவும் நாம் அனைவரும் உறுதிமொழி எடுப்போம். உலக அரங்கில் இந்தி மீதான மரியாதை அதிகரித்து வருவது நம் அனைவருக்கும் பெருமையையும் உத்வேகத்தையும் அளிக்கிறது."
आप सभी को हिंदी दिवस की अनंत शुभकामनाएँ। हिंदी केवल संवाद का माध्यम नहीं, बल्कि हमारी पहचान और संस्कारों की जीवंत धरोहर है। इस अवसर पर आइए, हम सब मिलकर हिंदी सहित सभी भारतीय भाषाओं को समृद्ध बनाने और उन्हें आने वाली पीढ़ियों तक गर्व के साथ पहुँचाने का संकल्प लें। विश्व पटल पर…
— Narendra Modi (@narendramodi) September 14, 2025


