ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் 1500 மீட்டர்-டி11 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற லலிதா கில்லாகாவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது அசாதாரண சாதனையையும் உறுதியையும் பிரதமர் பாராட்டியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
“மகளிர் 1500 மீட்டர் டி11 போட்டியில் லலிதா கில்லாகா வெள்ளிப்பதக்கம் வென்றது இந்தியாவுக்குப் பெருமை அளிக்கிறது. அவரது அசாதாரணமான செயல்திறனும், உறுதியான அர்ப்பணிப்பும் உண்மையிலேயே பாராட்டத்தக்கது. அவர் தொடர்ந்து புதிய உயரங்களை எட்டி மேலும் சாதிக்கட்டும்!”
A moment of pride for India as Lalitha Killaka secures the Silver Medal in the Women's 1500m-T11. Her exceptional performance and steadfast determination are truly commendable. May she keep scaling new heights and achieving more! pic.twitter.com/4YVNH20mRI
— Narendra Modi (@narendramodi) October 25, 2023


