ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஹர்மிலன் பெய்ன்ஸுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில், பிரதமர் கூறியிருப்பதாவது;
மகளிர் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்கு @HarmilanBains-க்கு வாழ்த்துகள். விளையாட்டின் மீதான ஈடு இணையற்ற ஆர்வம், அன்பால் ஒரு அற்புதமான செயல்திறன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Congratulations @HarmilanBains on bringing home the Silver Medal in Women's 1500m event. A spectacular performance marked by unmatched zeal, passion and love for the sport. pic.twitter.com/l565q5dVva
— Narendra Modi (@narendramodi) October 1, 2023


