ஹரியானாவின் நூஹ் பகுதியில் இன்று ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். "நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்கு மாநில அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது" என்று திரு மோடி கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
"ஹரியானாவின் நூஹ் பகுதியில் ஏற்பட்ட விபத்து மிகவும் வேதனையளிக்கிறது. துயரத்தில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். இந்தக் கடினமான நேரத்தில் கடவுள் அவர்களுக்கு வலிமை அளிக்கட்டும். இதனுடன், விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். நிவாரணம் மற்றும் மீட்புக்கு மாநில அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது: பிரதமர் @narendramodi"
हरियाणा के नूंह में हुआ हादसा अत्यंत हृदयविदारक है। मेरी संवेदनाएं शोक-संतप्त परिजनों के साथ हैं। ईश्वर उन्हें इस कठिन समय में संबल प्रदान करे। इसके साथ ही मैं हादसे में घायल लोगों के शीघ्र स्वस्थ होने की कामना करता हूं। राज्य सरकार राहत और बचाव के हरसंभव प्रयास में जुटी है: PM…
— PMO India (@PMOIndia) April 26, 2025


