சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் மகளிர் பாரா பவர் லிஃப்டிங் 61 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ராஜ் குமாரிக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
“மகளிருக்கான பாரா பவர் லிஃப்டிங் 61 கிலோ எடைப்பிரிவில் ராஜ் குமாரி வெண்கலப் பதக்கம் வென்றார். இந்தியா மகிழ்ச்சியில் உள்ளது. அவரது வெற்றி வளர்ந்து வரும் பல விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும்.”
A fantastic Bronze by Raj Kumari in Women's Para Powerlifting 61 kgs event. India is elated. Her success will inspire several upcoming athletes. pic.twitter.com/j4ee2ffSAz
— Narendra Modi (@narendramodi) October 25, 2023


