PM expands the mantra of SMART policing and calls upon police to become strategic, meticulous, adaptable, reliable and transparent
PM calls upon police to convert the challenge posed due to digital frauds, cyber crimes and AI into an opportunity by harnessing India’s double AI power of Artificial Intelligence and ‘Aspirational India’
PM calls for the use of technology to reduce the workload of the constabulary
PM urges Police to modernize and realign itself with the vision of ‘Viksit Bharat’
Discussing the success of hackathons in solving some key problems, PM suggests to deliberate about holding National Police Hackathons
Conference witnesses in depth discussions on existing and emerging challenges to national security, including counter terrorism, LWE, cyber-crime, economic security, immigration, coastal security and narco-trafficking

பிரதமர் திரு நரேந்திர மோடி 2024 நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1, 2024 ஆகிய தேதிகளில் புவனேஸ்வரில் நடைபெற்ற காவல்துறை தலைமை இயக்குநர்கள் / காவல்துறை தலைவர்களின் 59-வது அகில இந்திய மாநாட்டில் கலந்து கொண்டார்.

நிறைவு விழாவில், சிறப்பான சேவைக்கான குடியரசுத் தலைவரின் காவல் பதக்கங்களை புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு பிரதமர் வழங்கினார். தமது நிறைவுரையில், பாதுகாப்பு சவால்களின் தேசிய மற்றும் சர்வதேச பரிமாணங்கள் குறித்து மாநாட்டின் போது விரிவான விவாதங்கள் நடத்தப்பட்டதாக குறிப்பிட்ட பிரதமர், விவாதங்களிலிருந்து வெளிப்பட்ட எதிர் உத்திகள் குறித்து திருப்தி தெரிவித்தார்.

 

டிஜிட்டல் மோசடிகள், சைபர் குற்றங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆகியவற்றால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள், குறிப்பாக சமூக மற்றும் குடும்ப உறவுகளை சீர்குலைக்கும் ஆழமான போலிகளின் சாத்தியக்கூறுகள் குறித்து பிரதமர் தமது உரையின் போது கவலை தெரிவித்தார். ஒரு எதிர் நடவடிக்கையாக, செயற்கை நுண்ணறிவு மற்றும் 'அபிலாஷை இந்தியா' என்ற இந்தியாவின் இரட்டை செயற்கை நுண்ணறிவு சக்தியைப் பயன்படுத்துவதன் மூலம் இந்தச் சவாலை ஒரு வாய்ப்பாக மாற்றுமாறு காவல்துறை தலைமைக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

 

ஸ்மார்ட் காவல் முறையின் மந்திரத்தை விரிவுபடுத்திய அவர், உத்தி மிக்கதாகவும், கவனமாகவும், தகவமைத்துக் கொள்ளக் கூடியதாகவும், நம்பகமானதாகவும், வெளிப்படையாகவும் காவல்துறை திகழ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நகர்ப்புறக் காவல் பணியில் எடுக்கப்பட்ட முன்முயற்சிகளைப் பாராட்டிய அவர், ஒவ்வொரு முன்முயற்சியையும் ஒருங்கிணைத்து, நாட்டின் 100 நகரங்களில் முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் என்று ஆலோசனை கூறினார். காவலர்களின் பணிச்சுமையைக் குறைக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்த அவர், மூவளங்கள் ஒதுக்கீடட்டின் மையப் புள்ளியாக காவல் நிலையத்தை மாற்ற வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

 

சில முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் ஹேக்கத்தான்களின் வெற்றி குறித்து விவாதித்த பிரதமர், தேசிய காவல்துறை ஹேக்கத்தான் கூட்டம் நடத்துவது குறித்தும் விவாதிக்க வேண்டும் என்று ஆலோசனை கூறினார். துறைமுக பாதுகாப்பில் கவனம் செலுத்துவதை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும், அதற்கான எதிர்காலச் செயல் திட்டத்தைத் தயாரிக்க வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.

 

உள்துறை அமைச்சகத்திற்கு சர்தார் வல்லபாய் பட்டேல் அளித்த இணையற்ற பங்களிப்பை நினைவுகூர்ந்த பிரதமர், உள்துறை அமைச்சகம் முதல் காவல் நிலையம் வரை உள்ள பாதுகாப்பு அமைப்புகள் அனைத்தும் அடுத்த ஆண்டு அவரது 150-வது பிறந்த நாளன்று அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். காவல்துறையின் நற்பெயர், தொழில்முறை மற்றும் திறன்களை மேம்படுத்தும் எந்த அம்சத்திலும் ஒரு இலக்கை நிர்ணயித்து அதை அடைய உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். 'வளர்ச்சியடைந்த பாரதம்' தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப காவல்துறை தன்னை நவீனப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

பயங்கரவாத எதிர்ப்பு, இடதுசாரி தீவிரவாதம், சைபர் குற்றங்கள், பொருளாதார பாதுகாப்பு, குடியேற்றம், கடலோரப் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட தேசியப் பாதுகாப்புக்குத் தற்போதுள்ள மற்றும் வளர்ந்து வரும் சவால்கள் குறித்து இந்த மாநாட்டின் போது ஆழமான விவாதங்கள் நடத்தப்பட்டன. பங்களாதேஷ் மற்றும் மியான்மர் எல்லையில் வளர்ந்து வரும் பாதுகாப்பு கவலைகள், நகர்ப்புற காவல்துறையின் போக்குகள் மற்றும் தீங்கிழைக்கும் சவால்களை எதிர்கொள்வதற்கான உத்திகள் குறித்தும் விவாதங்கள் நடத்தப்பட்டன. மேலும், புதிதாக இயற்றப்பட்ட பெரிய குற்றவியல் சட்டங்கள், முன்முயற்சிகள் மற்றும் காவல்துறையில் சிறந்த நடைமுறைகள் மற்றும் அருகிலுள்ள பாதுகாப்பு நிலைமை ஆகியவற்றைச் செயல்படுத்துவது குறித்து மறுஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியின் போது மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்கிய பிரதமர், எதிர்காலத்திற்கான செயல் திட்டத்தை விளக்கினார்.

 

இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர், பிரதமரின் முதன்மைச் செயலாளர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உள்துறை இணை அமைச்சர்கள், மத்திய உள்துறை செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். மெய்நிகர் வடிவத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில், அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் காவல்துறை தலைமை இயக்குநர்கள்/ காவல்துறை தலைவர்கள் மற்றும் சி.ஏ.பி.எஃப் / சி.பி.ஓக்களின் தலைவர்கள் மற்றும் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த பல்வேறு பதவிகளில் உள்ள 750-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மெய்நிகர் முறையில் கலந்து கொண்டனர்.

 

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Union cabinet extends National Health Mission for another 5 years

Media Coverage

Union cabinet extends National Health Mission for another 5 years
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister pays homage to Balasaheb Thackeray ji on his birth anniversary
January 23, 2025

The Prime Minister Shri Narendra Modi today paid homage to Balasaheb Thackeray ji on his birth anniversary. Shri Modi remarked that Shri Thackeray is widely respected and remembered for his commitment to public welfare and towards Maharashtra’s development.

In a post on X, he wrote:

“I pay homage to Balasaheb Thackeray Ji on his birth anniversary. He is widely respected and remembered for his commitment to public welfare and towards Maharashtra’s development. He was uncompromising when it came to his core beliefs and always contributed towards enhancing the pride of Indian culture.”