மேன்மைதங்கிய அதிபர் குரேல்சுக்,

இருநாடுகளின் பிரதிநிதிகள்,

ஊடக நண்பர்கள் ஆகியோருக்கு

வணக்கம்!

அதிபர் குரேல்சுக் மற்றும் அவரின் தூதுக்குழுவினரை இந்தியாவுக்கு வரவேற்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

ஆறு ஆண்டுகளுக்குப் பின் மங்கோலிய அதிபர் இந்தியாவுக்கு வருகை தருவது மிகச் சிறப்பான தருணத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்தியா-மங்கோலியா தூதரக உறவுகளின் எழுபது ஆண்டுகளையும், பாதுகாப்பு கூட்டாண்மையின் பத்து ஆண்டுகளையும் கொண்டாடும் தருணத்தில் இந்தப் பயணம் அமைந்துள்ளது. இதனைக் குறிக்கும் வகையில் எங்களின் பகிரப்பட்ட பாரம்பரிய, பன்முகத்தன்மை கொண்ட, வலுவான நாகரீக உறவுகளை எடுத்துரைக்கும் வகையில் கூட்டாக அஞ்சல் தலையை நாங்கள் வெளியிட்டுள்ளோம்.

நண்பர்களே,

“தாயின் பெயரால் ஒரு மரக்கன்று” இயக்கத்தின் கீழ் மரக்கன்று நடும் நிகழ்ச்சியுடன் எங்களின் சந்திப்பு இன்று தொடங்கியது. அதிபர் குரேல்சுக் அவரது மறைந்த தாயாரை கௌரவிக்கும் விதமாக ஒரு ஆலமரக்கன்றினை நட்டார். இது எங்களின் ஆழமான நட்புணர்வு மற்றும் வரவிருக்கும் தலைமுறைகளுக்கான எங்களின் பகிரப்பட்ட சுற்றுச்சூழல் உறுதிப்பாட்டின் அடையாளமாக இருக்கும்.

நண்பர்களே,

பத்தாண்டுகளுக்கு முன் எனது மங்கோலியா பயணத்தின் போது எங்களின் கூட்டாண்மையை பாதுகாப்பு கூட்டாண்மையாக நாங்கள் உயர்த்தினோம். கடந்த பத்து ஆண்டுகளில் இந்தக் கூட்டாண்மை அனைத்து நிலைகளிலும் வலுவாகவும், ஆழமாகவும் வளர்ந்துள்ளது.

எங்களின் பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்து ஒத்துழைப்பும் சீராக வலுவடைந்து வருகிறது. பயிற்சித் திட்டங்கள் முதல், தூதரகத்தில் பாதுகாப்பு இணைப்புக்கான நியமனம் வரை பல புதிய முன் முயற்சிகளை நாங்கள் தொடங்கியுள்ளோம். மங்கோலியாவின் எல்லைப்பாதுகாப்பு படைகளுக்கு புதிய திறன் கட்டமைப்பு  திட்டத்தையும் இந்தியா தொடங்கவுள்ளது.

நண்பர்களே,

உலகளாவிய பிரச்சனைகளுக்கான எங்களின் அணுகுமுறை பகிரப்பட்ட மாண்புகள் அடிப்படையிலானவை. சர்வதேச அரங்குகளில் நாங்கள் நெருக்கமான கூட்டாளிகளாக இருக்கிறோம். சுதந்திரமான, வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய, சட்டங்களின் அடிப்படையிலான இந்திய பசிபிக் பிராந்தியத்திற்கு எங்களின் ஆதரவு உள்ளது. நாங்கள் ஒன்றிணைந்து உலகளாவிய தெற்கின் குரலை உயர்த்தவும் பாடுபடுகிறோம்.

நண்பர்களே,

இந்தியா-மங்கோலியா இடையேயான உறவு ராஜீய உறவை விடவும் மேலானது. அது ஆழமான, ஆத்மார்த்தமான, ஆன்மீக ரீதியிலான உறவாகும். எங்கள் கூட்டாண்மையின் ஆழமும், பரப்பும் மக்களிடையேயான உறவுகளில் பிரதிபலிக்கிறது.

எங்களின் நாடுகள் தொன்மையான புத்தமத பிணைப்பை பகிர்ந்துகொள்கின்றன. இதனால்தான் நாங்கள் ஆன்மீக உடன்பிறப்புகள் என்றும் அழைக்கப்படுகிறோம். இந்த பாரம்பரியத்தையும், எங்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க உறவுகளையும் மேலும் வலுப்படுத்த பல முக்கிய முடிவுகளை நாங்கள் இன்று மேற்கொண்டுள்ளோம். பகவான் புத்தரின் இரண்டு மகா சீடர்களான சாரிபுத்ரா, முட்கல்யாயனா ஆகியோரின் புனித நினைவு சின்னங்கள் அடுத்த ஆண்டு இந்தியாவில் இருந்து மங்கோலியாவுக்கு அனுப்பப்படும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.

புத்தமத நூல்களை ஆழமாக ஆய்வதற்கு உதவியாகவும், தொன்மையான, பாரம்பரிய ஞானத்தைத் தொடரவும் கண்டன் மடாலயத்திற்கு சமஸ்கிருத ஆசிரியர் ஒருவரையும் நாங்கள் அனுப்பவிருக்கிறோம்.  பத்து லட்சம் தொன்மையான ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தை விரைவில் தொடங்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். மங்கோலியாவில் புத்தமதத்தின் பங்களிப்புக்கு நாளந்தா பல்கலைக்கழகம் முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இணைப்பை வலுப்படுத்த நாளந்தாவுடன் கண்டன் மடாலயத்தை இணைக்க இன்று நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம்.

மத்திய அரசுகளுக்கு அப்பால் எங்களின் உறவு செல்கிறது. லடாக் தன்னாட்சி மலைப் பிரதேச மேம்பாட்டு கவுன்சில், மங்கோலியாவின் அர்க்கங்கை மாகாணம் இடையே இன்று கையெழுத்தாகியுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் எங்களின் கலாச்சார பிணைப்புகளுக்கு புதிய ஊக்கம் அளிக்கும்.

நண்பர்களே,

நாங்கள் எல்லை ஒன்றை பகிர்ந்துகொள்ளவில்லை என்றபோதும், மங்கோலியாவை இந்தியா எப்போதும் நெருக்கமான அண்டை நாடாகவே கருதுகிறது. மக்களுக்கு இடையேயான உறவுகளை நாங்கள் தொடர்ந்து வலுப்படுத்துவோம். மங்கோலிய குடிமக்களுக்கு கட்டணமின்றி இ-விசாக்கள் வழங்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.  மங்கோலியாவிலிருந்து இந்தியாவுக்கு இளம் கலாச்சார தூதர்கள் ஆண்டுதோறும் பயணம் செய்ய நாங்கள் நிதியுதவி செய்வோம்.

நண்பர்களே,

மங்கோலியாவின் வளர்ச்சிக்கு வலுவான, நம்பகமான கூட்டாளியாக இந்தியா உள்ளது.

இந்தியாவின் 1.7 பில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவியுடனான எண்ணெய் சுத்திகரிப்பு திட்டம் மங்கோலியாவின் எரிசக்தி துறையை வலுப்படுத்தும். இது இந்தியாவின் உலகளாவிய மிகப்பெரிய கூட்டாண்மை திட்டமாகும். இந்தத் திட்டத்தை நிறைவேற்ற மங்கோலிய தொழிலாளர்களுடன் சேர்ந்து 2500-க்கும் இந்திய தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள்.

திறன் மேம்பாட்டிலும் எங்கள் ஒத்துழைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய தொழில்நுட்பத்திற்கான அடல் பிகாரி வாஜ்பாய் சிறப்பு மையத்தின் மூலமும், இந்தியா- மங்கோலியா நட்புறவு பள்ளி மூலமும், மங்கோலியாவின் முன்னேற விரும்பும் இளைஞர்கள் புதிய உச்சங்களை எட்டியுள்ளனர். எங்கள் நட்புறவின் ஆழத்திற்கு இந்தத் திட்டங்கள் சான்றுகளாகும்.

சாமான்ய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்ட பல திட்டங்களையும் இன்று நாங்கள் அறிவித்துள்ளோம். மங்கோலிய மக்களின் தேவைகளை மனதில் கொண்டு இந்த முயற்சிகளை நாங்கள்  தொடர்வோம்.

எரிசக்தி, முக்கிய கனிமங்கள், அரியவகை கனிமங்கள், டிஜிட்டல், சுரங்கம், வேளாண்மை, பால்வளம், கூட்டுறவு போன்ற துறைகளில் ஒத்துழைக்க புதிய வாய்ப்புகளை எங்களின் தனியார் துறையும் கண்டறியும் என்பது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.

மேன்மை தங்கிய அதிபர் அவர்களே,

இரண்டு தொன்மையான நாகரீகங்களுக்கிடையே நம்பிக்கை மற்றும் நட்புறவின் வலுவான அடித்தளத்தின் மீது நமது உறவுகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.  இவை பகிரப்பட்ட கலாச்சார பாரம்பரியம், ஜனநாயக மாண்புகள், வளர்ச்சிக்கான பகிரப்பட்ட உறுதிப்பாடு ஆகியவற்றால் வளர்க்கப்படுகின்றன. உத்திசார்ந்த இந்தக் கூட்டாண்மையை புதிய உச்சங்களுக்கு ஒன்றிணைந்து நாம் கொண்டுசெல்ல முடியும் என்று நான் நம்புகிறேன்.

தங்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த பயணத்திற்காகவும் இந்தியா மீது உங்களின் உறுதியான நட்புறவு மற்றும் உறுதிப்பாட்டுக்கும் மீண்டும் ஒருமுறை நான் நன்றி தெரிவிக்கிறேன்.

உங்களுக்கு மிக்க நன்றி.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Cabinet clears ₹18,100-cr credit guarantee scheme for aviation, MSMEs

Media Coverage

Cabinet clears ₹18,100-cr credit guarantee scheme for aviation, MSMEs
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
India and Vietnam are emerging as the fastest-growing economies in the world: PM Modi at the India-Vietnam Joint Press Meet
May 06, 2026

Your Excellency,
जनरल सेक्रेटरी एण्ड प्रेसीडेंट तो लम,
दोनों देशों के delegates,
मीडिया के साथियों,

नमस्कार!

सिन चाओ!

President तो लम का भारत में हार्दिक स्वागत करते हुए मुझे अत्यंत खुशी हो रही है। वियतनाम के President बनने के बाद, एक महीने के भीतर ही उनका भारत आना, और एक high-level delegation समेत कई business leaders के साथ आना, यह स्पष्ट करता है कि वे भारत-वियतनाम संबंधों को कितनी प्राथमिकता देते हैं।

इतना ही नहीं, उन्होंने भारत यात्रा की शुरुआत, बोध गया से की है। यह हमारे दोनों देशों की साझा सभ्यतागत और आध्यात्मिक परंपरा को दर्शाता है। उनकी इस यात्रा और हमारी सार्थक चर्चाओं से, हम अपनेआपसी good-will को कई ठोस परिणामों में बदल रहे हैं।

Friends,

भारत और वियतनाम की साझेदारी में, विरासत और विकास - दोनों का महत्व है। पिछले वर्ष, जब भारत से बौद्ध अवशेष वियतनाम गए, तो उनके दर्शन, डेढ़ करोड़ से अधिक, यानि पूरे वियतनाम की पाप्युलैशन के 15 पर्सेन्ट लोगों ने किया था। हमारी साझा विरासत को जीवंत रखने के लिए, हम वियतनाम के प्राचीन चम्पा सभ्यता के मी सॉन और न्हान टवर मंदिरों का रेस्टोरैशन कर रहे हैं। अब हम चम्पा सभ्यता की manuscripts को digitalize करेंगे, और इस अमूल्य धरोहर को आने वाली पीढ़ियों के लिए संरक्षित करेंगे।

Friends,

एक दशक पहले, मेरी वियतनाम यात्रा के दौरान, वियतनाम आसियान में, भारत का पहला Comprehensive Strategic Partner बना था। तब से, हमारे संबंधों ने तेज़ और व्यापक प्रगति की है। Civilizational ties के साथ-साथ, हमारे Trade, technology और tourism संबंध भी और मजबूत हुए हैं।

इस मजबूत नींव पर आगे बढ़ते हुए, आज हम अपने संबंधों को Enhanced Comprehensive Strategic Partnership के स्तर पर ले जा रहे हैं। अब हम अपनी साझेदारी को और ऊँचे लक्ष्यों की ओर अग्रसर करेंगे। Culture, connectivity और capacity building के साथ-साथ, security, sustainability और supply chain resilience - हर क्षेत्र में हमारा सहयोग नए स्तर पर पहुँचेगा।

Friends,

भारत और वियतनाम का बाइलैटरल ट्रेड, पिछले एक दशक में डबल होकर 16 बिलियन डॉलर तक पहुँच चुका है। 2030 तक इसे 25 बिलियन डॉलर तक पहुंचाने के लिए हमने आज कई महत्वपूर्ण निर्णय लिए हैं। हमारी ड्रग अथॉरिटीज़ के बीच MOU से अब भारत की दवाइयों का वियतनाम में एक्सेस बढ़ेगा। भारत के एग्रीकल्चर, फिशरीज़ और एनिमल प्रोडक्ट्स का भी, वियतनाम तक एक्सपोर्ट और सुगम होने जा रहा है। बहुत जल्द, वियतनाम भारत के अंगूर और अनार का स्वाद लेगा, और हम वियतनाम के डूरियन और पोमेलो का।

इतना ही नहीं, हमने भारत-आसियान ट्रेड एग्रीमेंट "आईटिगा” को वर्ष के अंत तक अपडेट करने पर भी सहमति बनाई है। इससे भारत और आसियान के सभी देशों के बीच, ट्रेड और इनवेस्टमेंट को नई ऊर्जा मिलेगी। क्रिटिकल मिनरल्स, रेअर अर्थ और एनर्जी सहयोग में नई पहलों से, हम दोनों देशों की इकोनॉमिक सिक्योरिटी और सप्लाई चैन रिज़िल्यन्स सुनिश्चित करेंगे।

Friends,

कनेक्टिविटी और कपैसिटी बिल्डिंग, हमारी पार्ट्नर्शिप के अहम स्तंभ हैं। हमें बहुत खुशी है कि दोनों देशों के बीच एयर कनेक्टिविटी लगातार बढ़ रही है।

फाइनेंशियल कनेक्टिविटी को भी बूस्ट करने के लिए, आज हमने अपने सेंट्रल banks के बीच सहयोग बढ़ाने का निर्णय किया है। भारत के UPI और वियतनाम के फास्ट पेमेंट सिस्टम भी जल्द ही लिंक होने जा रहे हैं। साथ ही, अब हम दोनों देशों के बीच स्टेट to स्टेट और सिटी to सिटी को-ऑपरेशन को भी मजबूत करने जा रहे हैं।

Friends,

वियतनाम भारत की ऐक्ट-ईस्ट पॉलिसी और विज़न महासागर का एक मुख्य स्तंभ है। इंडो-पैसिफिक क्षेत्र में भी हमारा common outlook है। हम अपनी सुदृढ़ होती हुई रक्षा और सुरक्षा सहयोग से, rule-of-law, शांति, स्थिरता और समृद्धि के प्रति योगदान देते रहेंगे। वियतनाम के सहयोग से भारत, आसियान के साथ अपने संबंधों को भी और व्यापक बनाएगा।

Your Excellency,

पहलगाम आतंकी हमले की कड़ी निंदा करने, और आतंकवाद के विरुद्ध हमारे संघर्ष में साथ खड़े रहने के लिए हम वियतनाम के आभारी हैं।

वैश्विक उथल-पुथल और आर्थिक चुनौतियों के इस दौर में,अपने talent, good governance और economic reforms के बल पर, भारत और वियतनाम दुनिया की सबसे तेज़ी से बढ़ती economies के रूप में उभर रहे हैं। अब हमारी enhanced strategic partnership के माध्यम से, हम एक-दूसरे की rapid growth के सहायक बनेंगे।

जैसा कि बुद्ध की शिक्षाओं की भावना है कि "यदि आप किसी और के लिए दीप जलाते हैं, तो वह आपके अपने मार्ग को भी प्रकाशमान करता है।”

इसी भावना के साथ, हम एक-दूसरे के vision और goals को support करते हुए, विकसित राष्ट्र बनने की अपनी आकांक्षाओं को मिलकर साकार करेंगे।

हम साथ चलेंगे, साथ बढ़ेंगे, और साथ जीतेंगे।

बहुत बहुत धन्यवाद।