மணிப்பூர் மாநில முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள திரு யும்நம் கேம்சந்த் சிங்கிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
மாநிலத்தின் துணை முதலமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள திருமதி நெம்சா கிப்ஜென் மற்றும் திரு லோசி திக்கோ ஆகியோருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். மணிப்பூர் அரசின் அமைச்சர்களாகப் பதவியேற்ற திரு கோந்தௌஜம் கோவிந்தாஸ் சிங் மற்றும் திரு குரைஜாம் லோகேன் சிங்கிற்கும் திரு மோடி வாழ்த்து தெரிவித்தார்.
புதிய தலைமையின் மீதான தனது நம்பிக்கையை வெளிப்படுத்திய பிரதமர், மணிப்பூர் மாநில சகோதர, சகோதரிகளின் வளம் மற்றும் வளர்ச்சியை மேலும் மேம்படுத்துவதில் அவர்கள் தீவிரமாகப் பணியாற்றுவார்கள் என்று கூறினார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:
“மணிப்பூர் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள திரு யும்நம் கேம்சந்த் சிங்கிற்கு நல்வாழ்த்துகள்.
மாநிலத்தின் துணை முதலமைச்சர்களாகப் பதவியேற்றிருக்கும் திருமதி நெம்சா கிப்ஜென் மற்றும் திரு லோசி திக்கோ ஆகியோருக்கும், அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள திரு கோந்தௌஜம் கோவிந்தாஸ் சிங் மற்றும் திரு குரைஜாம் லோகேன் சிங்கிற்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மணிப்பூரைச் சேர்ந்த எனது சகோதர, சகோதரிகளின் வளம் மற்றும் முன்னேற்றத்தை மேலும் மேம்படுத்துவதற்கு அவர்கள் கடினமாகப் பணியாற்றுவார்கள் என்று நான் நம்புகிறேன்.”
Congratulations to Shri Yumnam Khemchand Singh Ji on taking oath as the Chief Minister of Manipur.
— Narendra Modi (@narendramodi) February 4, 2026
I would like to congratulate Smt. Nemcha Kipgen Ji and Shri Losii Dikho Ji on taking oath as the Deputy Chief Ministers of the state and Shri Konthoujam Govindas Singh Ji as well…


